Saturday, December 09, 2023

கருதினாலின் இந்திய வெறுப்பு முகம்

 [28/08/23] சச்சிதானந்தன் மறவன்புலவு: ஆவணி 11, திங்கள்


இயேசுவின் வழி நடக்காதவரே கருதினால் மல்கம் இரஞ்சித்தர்.


வத்திக்கானில் வானூர்தி நிலையம் இல்லை.


போப் ஆண்டவர் வெளிநாடு போக வேண்டும் என்றால் உரோமாபுரிக்குப் போய் வானூர்தியில் ஏற வேண்டும்.


அயலானை நேசி என இத்தாலிய அரசுக்கு சொல்லி அவர்களின் அனுமதியுடன் பாப்பாண்டவர் வாழ்கிறார்.


ஈழச் சைவத் தமிழர்களுக்குத் தொப்புள் கொடி உறவு தமிழ்நாடு.


அயலானை நேசிப்பதற்குப் பதிலாக அயலான் மீது வெறுப்புக் காட்டு. இயேசுவின் பெயரால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற கருதினால் இன்று 


உண்ட அப்பத்துக்கும் உப்புக்கு குடித்த மதுவுக்கும் துரோகம் செய்து இயேசுவின் கொள்கைக்கு மாறாக இந்தியாவுக்குப் பாலம் வேண்டாம் என்கிறார்.


இலங்கைக்கு அயல் இந்தியா.

இந்தியாவை இலங்கையர்கள் வெறுக்க வேண்டுமெனப் போதிக்கிறார் மல்கம் இரஞ்சித்தர். 


இவர் கருதினாலா? இயேசுவின் சீடரா? சாத்தானின் சீடரா?


இங்கிலாந்துக்கும் பிரான்சிக்கும் இடையே கடலுக்கு அடியே பாலம் வேண்டும். இருநாட்டுக் கிறித்தவர்களும் உறவாட வேண்டும்


ஹொங்கொங்குக்கும் சீனாவுக்கும் இடையே கடலுக்கு அடியே பாலம் வேண்டும். இருநாட்டுக் கிறித்தவர்களும் உறவாட வேண்டும்.


கத்தோலிக்கர்களுக்கு இந்தியாவுக்கு செல்ல  இந்தியர்களை மதம் மாற்றச் சுருக்க வழி வேண்டும் என்றால் சூயசுக் கால்வாயை வெட்ட வேண்டும்.


ஈழச் சைவத் தமிழர்களும் தமிழகச் சைவத் தமிழர்களும் உறவாடக்கூடிய இணைப்பு பாலம் வேண்டாம்.


இணைப்பு பாலம் வந்தால் சைவர்கள் சைவர்கள் ஆகவே தொடர்வார்கள். கிறித்தவராக மதம் மாற மாட்டார்கள். எனவே பாலத்தை அமைக்காதீர்கள் என்கிறார் மல்கம் இரஞ்சித்தர்.


அன்பையும் அருளையும் போதிக்க வேண்டியவர். வெறுப்பையும் எதிர்ப்பையும் நெருப்பாகக் கக்குகிறார்.


விவிலியத்தைப் படிக்காமலே கருதினால் பதவிக்கு உயர்ந்ததினாலேயே வெறுப்பைக் கக்குகிறார்.


தூத்துக்குடிக் கரையிலிருந்து முத்துக்குளிக்க வந்த பச்சைத் தமிழன் வழிவந்தவர் சீதுவை மல்கம் இரஞ்சித்தர். தானும் கத்தோலிக்கனாகி கூட இருந்தவர்களையும் கத்தோலிக்கர் ஆக்கிய பச்சைத் தமிழன் வழி வந்தவர் மல்கம் இரஞ்சித்தர்.


வாய்க்கால் ஆற்றுக்கு வடக்கே முசலியின் முகத்துவாரம் ஆறு வரைக்கும் உள்ள நீண்ட நெடிய மேற்கு கரையோரமெங்கும் முத்துக்குளிக்க வந்த தூத்துக்குடி கீழக்கரை திருச்செந்தூர் நாகர்கோயில் வரையான சைவத் தமிழர்கள் அனைவரையும் கத்தோலிக்கராக மாற்றிப் பின் அவர்களைச் சிங்களவர்கள் ஆகிய மாற்றிய கொடூரரே கருதினால் மல்கம் இரஞ்சித்தின் முன்னோர்.


இராஜபக்சேக்களின் நம்பிக்கையாளரான  ஜான்சரன் பர்னந்தோ வீட்டிலும் இரணில் விக்கிரமசிங்காவின் நம்பிக்கையாளராக மாறி இருக்கும் நிமல் லன்சா வீட்டிலும் மல்கம் இரஞ்சித்தர் வீட்டிலும் தமிழே பேசுகிறார்கள்.


தமிழ்நாட்டில் இருந்து குடி பெயர்ந்த பச்சைத் தமிழர்கள் பணத்துக்காகக் கத்தோலிக்கராகி இன்று பதவிகளுக்காகச் சிங்களவராக நாடகமாடுகிறார்கள்.


சிவத் துரோகிகளாகி, தமிழ்த் துரோகிகளாகி, இயேசுத் துரோகிகளாகி இன்று கத்தோலிக்க துரோகிகளாகவும் ஆயினர்.


வத்திக்கான் இலங்கை உறவை வலிமையாக்குவதற்காக 


இந்திய இலங்கை உறவை முறிக்காதே. 


வாயை மூடிக்கொண்டு இரு சாத்தானின் முகவரான மல்கம் இரஞ்சித்தே. விவிலியத்தை நன்றாக புரிந்து படித்த பின் வாயைத் திற முட்டாளே.

[29/08, 6:36 pm] சச்சிதானந்தன் மறவன்புலவு: August 30th 2023

Press release


From 

P. Jayamaram 

Siva senai


Love thy neighbour, Jesus said.

Hate thy neighbour, Satan said.


India is Sri Lanka's neighbour.

Hate India Malcum Ranjit says.

Is he a cardinal in the order of Jesus or in the order of Satan?


Malcum comes from a Tamil Heritage family at Seeduva. Even now many of them speak Tamil at home.


A few 100 years ago they (Hindu Tamils) were economic migrants from the southeast coastline of Tamilnadu stretching from Tuticorin to Kanyakumari. They came as pearl fishery divers cum fishermen.


The fell prey to the magic charm of gun, money and power of the invading Portugese catholics. They betrayed their ancestral Hindu faith. They became catholic converts.


Under the guidance of the recently created bishop's house of Chilaw, led by bishop Edmund Peries, they betrayed their sacred Tamil ancestry to be Singhalised.


Hundreds and thousands of such betrayers form the bulk of the Sinhala speaking Tamil community along the North Western sea board stretching from Kochikadai's Waikkal Aru to Musali's Modharagam Aru.


Confidant of Rajapaksas, Johnston Fernando, recent fence crosser to Ranil's bosom, Nimal Vansa are generic Tamils like Malcum. All members of their family even now speak Tamil at home.


Power position money and fame lured them to camouflage as Sinhalese.


Shame on you Malcum, you betrayed Hindu faith. You betrayed Tamil culture. You betrayed Jesus by saying hate India. You betrayed Vatican by speaking against building bridges.


Building bridges of love connect families and society.


Building bridges of grace connects faith and Godliness.


Building bridges of concrete connects lands countries and hopes. Connectivity is the basis of progress and development.


As harbinger of hate, Malcum you are betraying your own country.  You are betraying the salt of your food. You are betraying the bread and wine you consume from the pulpit of the platform of catholicity.


You don't condemn undersea connectivity between Dover and Calais. 


You don't condemn under sea connectivity between Hong Kong and the mainland.


For you the Suez canal provided the shortcut to evangelize the East. You don't condemn it's excavation.


You condemn connectivity to your fore father's land, because Hindus will benefit through rejuvenation of their faith by visiting holy places in India.


You want to isolate the Sri Lankan Hindus, stagnate them, degenerate them, decipher them and wherever possible convert them to Christianity.


We Hindus in Sri Lanka ask you to re-read the bible,  we ask you re-read the sermon on the mount, reevaluate your credibility to be a cardinal, and reassess your accreditation to Vatican which wholy and completely depend on its only neighbour Italy, for global connectivity. 


Vatican says the biblical - love thy neighbour; and its accredited agent you Malcum use Satanic verses,  Hate thy neighbour. Please use your mind to generate love grace interfaith peace and harmony, if not please keep your mouth shut.

குருந்தூர் மலையில் கிறித்தவமா

 Scroll down for English version

ஆவணி 13 புதன் (30.08.2023)


ஊடகத்தாருக்கு


ஸ்ரீ வெங்கடேசன் சிவ சேனை


1 செல்வம் அடைக்கலநாதன் 

2 சார்ஸ் நிர்மலநாதன் 

3 ஞானஸ்நானம் பெற்ற வினோதரதலிங்கம் 

4 அன்டன் புனித நாயகம் 

5 அருட்தந்தை ஆர்ம்ஸ்டோங்கர் 

6 பீட்டர் இளஞ்செழியன் 

7 ஆபிரகாம் சுமந்திரனின் அரசியல் எடுபிடி

என முல்லத்தீவில் மிக மிகச் சிறுபான்மையினரான கிறித்தவம் சார்ந்தோர்.


குருந்தூர் மலை சார்ந்த வேளாண் நிலங்களை அரசுப் பிடியிலிருந்து விடுவிக்கப் போராடுகிறார்கள்.


கரைதுறைப் பற்றுப் பிரதேசத்தில் (Maritime pattru) மதமாற்றிகள் கோலோச்சுகிறார்கள்.


 கொக்கிளாயில் புதிய கிறித்தவத் தேவாலயங்கள். கொக்குத் தொடுவாயில் புதிய கிறித்தவத் தேவாலயங்கள். நாயாறில் புதிய கிறித்தவத் தேவாலயங்கள். மணலாற்றில் புதிய கிறித்தவத் தேவாலயங்கள்.

அலம்பிலில் புதிய கிறித்தவத் தேவாலயங்கள்.

தண்ணிமுறிப்பில் குமிழமுனையில் முள்ளியவளையில்

வெட்டுவாய்க்காலில் முள்ளிவாய்க்காலில் சுண்டிக்குளத்தில்

புத்தம் புதிய கிறித்தவத் தேவாலயங்கள்.


முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் நிலை கொண்டிருக்கும் மதமாற்ற சபைகளின் எண்ணிக்கை 40 அல்லது 50.


திருமதி ரூபிணி கேதீசுவரன் மாவட்டச் செயலாளராக இருந்த காலத்தில் அவரது கணவர் கேதீசுவரன் முல்லைத்தீவு மாவட்ட மதமாற்றச் சபைகளுக்குத் தலைமை தாங்கினார். மதமாற்றத்தைக் கடுமையாக ஊக்குவித்தார்.


பள்ளிக்கல்வியை இடைநிறுத்திய படிப்பு வராத காளைகளையும் குமரிகளையும் சம்பளத்துக்கு அமர்த்தினார். ஞானஸ்னாம் செய்தார். போதகர் ஆக்கினார். ஊர்களுக்குள் ஊடுருவ அனுப்பினார்.


தனக்கு மனைவியான மாவட்டச் செயலாளர் உதவியுடன் அரசு காணிகளில் தேவாலயங்கள் அமைக்க முயன்றார்.


பிரதேசச் செயலர்களின் எதிர்ப்பையும் மீறி அரச காணிகளைச் சபைகளுக்குக் குத்தகைக்கோ அறுதியாகவோ கேதீசுவரன் கொடுப்பார்.


சைவர்களான கேதீசுவரனும் உரூபிணியும் ஞானஸ்நானம் பெற்றுக் கிறித்தவர் ஆனோர். இயல்பான கிருத்தவர்களை விடத் தீவிரமானோர். (more royal than the king).


முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினராக இருந்த சிவனேசன், கிறித்தவ மேலாதிக்கக் கொடுமைகள், அரசியல் தலையீடுகள், தேவாலய எழுச்சிகள் யாவற்றையும் சிவ சேனையின் கவனத்திற்கு 2016 அக்டோபர் 9 ஆம் நாள் முதல் கூட்டத்திலேயே கொண்டு வந்தார்.


12 - 15 ஊர்களின் வாழும் வேளாண் மக்களே குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள வேளாண் நிலங்களின் சொந்தக்காரர். 


அப்பகுதிக் கமக்கார அமைப்பின் தலைவர் சசிகுமார்.  அவரே தொடர்ச்சியாக குருந்தூர் மலை மீது உள்ள ஆதிசிவன் கோயிலுக்குப் பொங்கல் நேர்த்திக்கடனாக வழிபட்டு வந்தவர்.


முதலில் கூறிய ஏழு கிறித்தவர்களும் பெரும்பான்மைச் சைவர்களின் தலைவரான சசிகுமாரைத் துரோகி என்கிறார்கள். அரசு காணிகளைக் கைப்பற்ற முயல்பவர் எனப் பொய்க் குற்றம் சாற்றுகிறார்கள்.


இந்தக் கிறித்தவர்களின் வழிகாட்டலில் இயங்கும் மேனாள் திருட்டுக் குற்றவாளிகள், சசிகுமார் மீது அபாண்டப் பழிக் கணை தொடுக்கிறார்கள்.


குருந்தூர் மலையின் தொடக்க கோயில் சிவன் கோயில். அதற்குப் பின் வந்ததே புத்த கோயில். ஏற்றுக்கொண்ட புத்த சமயத்தவர் குருந்தூர் மலையில் சிவன் கோயில் அமைக்க ஒப்புகிறார்கள்.


மலைக்குக் கீழேயும் சிவன் கோயிலை அமைக்கலாம் என்கிறார்கள்.


காணிகளை விடுவிக்க அரசு ஆயத்தமாக உள்ளது.


இருந்தாலும் மிக மிகச் சிறுபான்மையான கிறித்தவரும் மதமாற்றிகளும் அரசு விடுவித்த காணிகளில் ஏனைய ஊர்களில் அமைத்தது போல் கிறித்தவ தேவாலயங்களை அமைப்பார்கள். அங்கு வருகின்ற மக்களை மதமாற்றுவார்கள் என்ற அச்சம் கரைதுறைப் பற்று வாழ் சைவ மக்களுக்கு உண்டு.


அதே அச்சம் குறுந்தூர் மலைக்கு வழிபட வருகின்ற புத்த சமயத்தவருக்கும் உண்டு.


முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்குகின்ற அனைத்து மதமாற்றச் சபைகளையும் அகற்றிய பின்னரே, சைவ சமயத்தவர் மீதான கிறித்தவ மேலாதிக்கம் நீங்கிய பின்னரே, குருந்தூர் மலையிலும் சார்ந்த வேளாண் நிலங்களிலும் அமைதி திரும்பும்.


மேலுள்ள ஏழு கிறித்தவர்களு moக்கும் குருந்தூர் மலைக்கும் எந்தவித தொடர்பும் இருக்கக் கூடாது.


August 30th 2023 Wednesday


Press release


From 

Sri Venkatesan 

Siva Senai, 


HANDS OFF - ABRAHAMISTS AT KURUNTHUR 


Siva temple at Kurundur pre dates Buddhist places of worship.


Buddhists in Sri Lanka accept the presence of Siva temple at Kurundur.  They want it's restoration.


Kurundur paddy lands are owned by Hindu farmers from the adjoining 12 to 15 villages.


Marritime pattu division extends from Kokkilai in the south to Chundikulam in the north.  The sea coast extends into rivers, lagoons, hills, forests, and paddy fields to its west.


1 Selvam Adaikalnathan

2 Charles Nirmala Nathan

3 recent convert to Christianity Vinotharalingam

4 Anton Punithanayagam

5 Father Armstrong

6 Peter Ilanchezhiyan

7 Abraham Sumantran

are Christians who are articulating issues which are preserves of Buddhists and Hindus at Kurunthur.


Tamil Hindus and Tamil Buddhists were in possesion of all places of worship at Kurundur.


Christians had no role to play at any time at Kurundur.


Then why are these seven Christians interfering into the issues related to Hindus and Buddhists at Kurundur?


There are 40 - 50 evangelist groups operating in the Maritime pattru of Mullaitivu district.


Hectic evangelistic activity in almost all villages of this district is attempting to change its religious demography in favour of Christianity.


In many villages new churches have been built.


Mr. Ketheswaran and Mrs Rubini Ketheswaran were Saivites by birth. They converted themselves to Christianity.


Mrs Rubini Ketheswaran was district secretary for Mullaitivu. Her husband Mr. Ketheswaran chaired the evangelist grouping in the district. (More royal than the King)


Despite objections from divisional secretaries, state lands were leased of granted to evangelist groups to construct new churches. Planting churches is the new methodology adopted by evangelist promoters funding from Western countries.


Kokkilai, Kokkuthoduvai,  Manal Aru, Nayaru, Alambil, Kumuzhamunai, Thanniyootru, Mulliyavalai, Vedduvaaikkal, Mullivaaikkal, Chundikulam are villages in Maritime pattru division chosen for the novel evangelist operation of planting churches.


The above mentioned seven Christians are followers of the Bible which instructs them to evangelize.


“All authority in heaven and on earth has been given to me. Go, therefore, and make disciples of all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit, and teaching them to obey everything that I have commanded you. And remember, I am with you always, to the end of the age.” (Mathew 28,16-20)


With this biblical mandate, the above 7 Christians are wanting to plant churches in Kurunthur area. They are demanding the vacation of state authority.


Even a fool will not fail to see the deception behind their interference into the affairs of Kurundur.


We Hindus seek the evacuation of all evangelistic societies at Mullaitivu. We Hindus seek the removal of all new Christian churches built under the planting churches projects.


We Hindus want a commission appointed to investigate the irregularities of the former district secretary Mrs Rubini Ketheswaran in handing over state lands to evangelistic groups.


Let Kurunthur be a place for peaceful worship for spiritual progress of Hindus first and Buddhists next.

தென் இலங்கையில் சைவக் கோயில்கள்

 ஆவணி 17 ஞாயிறு (3 9 2023)


வரலாறு தெரியாது விளாசுகிறார் அமைச்சர் விதுரர்


தெற்கிலங்கையில் சைவக் கோயில்கள் இருக்கின்றன. எனவே வடக்குக் கிழக்கு இலங்கையில் புத்த விகாரைகளை அமைத்தால் என்ன? அறிவை அடகு வைத்த பின்பு வினவுகிறார் மாண்புமிகு அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கர்.


புத்தர் இலங்கைக்கு வந்த நாளில் முருகனுக்குத் தைப்பூச விழா. இலங்கை மக்கள் அனைவரும் கூடி எடுத்த விழா. மாணிக்கக் கங்கையில் விழா. இலங்கையின் ஆதிகுடிகள் சைவர்களே புத்தரை வரவேற்றார்கள். தைப்பூச நாளில் வரவேற்றார்கள்.


கதிர்காமத்தில் இருந்து காங்கேயன்துறை வரை நீண்ட, சிலாவத்தில் இருந்து மட்டக்களப்பு வரை அகன்ற, 66,000 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இலங்கைத் தீவு முழுவதிலும் பல்லாயிரம் சைவக் கோயில்களே இருந்தன. இலங்கை சிவபூமி.


புத்தர் வரும் பொழுது இருந்தன சைவக் கோயில்கள்.


படிப்படியாக புத்தர்கள் விகாரர்களைக் கட்டத் தொடங்கினீர்கள்.


அப்பொழுது இருந்த கோயில்களே இன்று வரை தொடர்கின்றன. புதிதாக யாரும் தென்னிலங்கையில் சைவக் கோயில்களைக் கட்டவில்லை. பழைய சைவக் கோயில்களையே திருப்பணி செய்து புதுப்பிக்கின்றார்கள். 


மதவாச்சிக்கு வடக்கே ஈரற்பெரிய குளத்தில் பிள்ளையாருக்கு அருமையான கருங்கல் கோயிலை இக்காலத்தில் எழுப்பியவர் சைவத்தமிழர் அல்ல. புத்தராகிய சிங்களவர். நீங்கள் போய்ப் பாருங்கள். மூஷிக வாகன... எனத் தொடங்கும் கணபதித் தெய்யோ மந்திரத்தைத் தன் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்காத புத்த சிங்களத் தாய் ஒருவர் இருந்தால் எனக்குச் சொல்லுங்கள்.


புத்தர் வரும் முன்பும் வந்த பின்பும் பல நூற்றாண்டுகளுக்கு இலங்கையில் விகாரைகள் இல்லவே இல்லை.


ஏதோ போகட்டும் என்று சைவர் ஆகிய நாங்கள் விகாரைகளைக் கட்ட உரிமம் தந்தோம்.


விசயன் வந்த பின்பும் அநுராதபுரம் சைவ சமயப் பிரதேசம். ஆண்ட அரசர்களின் பெயர்கள்: சிவன், மூத்த சிவன், மகாநாகன். முற்று முழுதாகச் சைவத் தமிழ்ப் பெயர்கள்.


சைவர்களின் தயவில் கட்டியவையே இப்பொழுது தென்னிலங்கையின் புத்த விகாரைகள்.


புத்த விகாரைகளைக் கட்டினாலும் அங்கே சிவலிங்கம் வேண்டும். திருமால் வேண்டும் இலட்சுமி, சரசுவதி, துர்க்கை, காளி வழிபட வேண்டும் வைரவர் வழிபட வேண்டும். தமிழ்ப் பெண்ணாகிய பத்தினியை வழிபட வேண்டும்.


எனவே நீங்கள் விகாரைக்குள்ளே சைவக் கோயில்களைக் கட்டி வைத்திருக்கிறீர்கள்.


ஏனென்றால் உங்களுக்குத் தெரியும் இலங்கை சிவ பூமி. இச் சிவ பூமியில் சைவக் கோயில் இல்லாத இடம் இருக்க விடக்கூடாது எனப் புத்தராகிய நீங்களே நினைக்கிறீர்கள்

சைவத்தமிழ் பெண்ணான பத்தினியைப் புத்த விகாரைகளுள் அமைத்தவன் முதலாம் கயவாகு.


இலங்கையில் நீங்கள் கணபதி தெய்யோ என்று நாளும் மனதாலும் உடலாலும் நெக்குருகி வழிபடுகின்ற போற்றுகின்ற பிள்ளையார் வழிபாட்டைப் புத்தரிடையே பரவலாக்கியவன் நரசிம்ம பல்லவனின் யானைப்படைத் தளபதி மாறவர்மன். வாதாபி சென்று வெற்றியோடும் பிள்ளையார் சிலைகளோடும் இலங்கை வந்தவன்.


அதே நரசிம்மம் பல்லவன் தெற்கே தேவேந்திர முனையில் தென்னாவரம் சிவன் கோயிலைப் பல்லவ பாணியில் கட்டு வித்தான் என்பதை நான் சொல்லவில்லை. மேலைநாட்டு வணிகப் பயணி Cosmas Indicopleustuas சொல்கிறார். அறிவை அடகு வைத்து விளாசுகின்ற உங்களுக்கு இந்தச் செய்தி தெரிய வாய்ப்பில்லை


முதலாம் பராக்கிரமபாகு, மகன் விக்கிரமபாகு, மகன் இரண்டாம் கயவாகு யாவரும் சைவத்தைப் பேணிய அரசர். சைவத்தமிழ்ப் பாண்டிய சந்திரகுல வம்சத்தினர் எனக் குல வமிசமே பூசா வழியே கூறுவதைப் படித்தது உங்களுக்கு நினைவில்லையா?


கந்தளாயில் சதுர் வேதி மங்கலத்தில் அடைக்கலமாகிய இரண்டாம் கயவாகுவை நீங்கள் மறந்துவிட முடியுமா?


அதற்குப் பின், இரண்டாம் நான்காம் ஆறாம் பராக்கிரமபாகு காலங்களில் இலங்கையின் தென்முனையில் தென்னாவர நாயனார் கோயிலையும் அங்கு சதுர்வேதி மங்கலங்களையும் அம்மன்னர்கள் ஆதரித்ததைச் செப்பேடுகளாகக் கல்வெட்டுகளாகக் காணலாமே. நீங்கள் படிக்கவில்லையா?

வழிபாட்டிடங்களைப் பாதுகாக்கும் மூச்சிங்கள தம்பதெனியா, கம்பளை, கோட்டை மன்னர்களின் கல்வெட்டுகளில் முதலில் புத்த விகாரை, பின் சதுர்வேதி மங்கலம், பின் சைவத் தேவாலயம் யாவையும் முறையாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என எழுதியதை நீங்கள் படிக்கவில்லையா


சீனப் பயணி செங்கோ வழிபட்டுத் தமிழில் போற்றிக் கல்வெட்டு எழுதிய கோயிலே தென்னவரம். அந்தக் கல்வெட்டு இன்றும் கொழும்பு அருங்காட்சியகத்தில் இருக்கிறதே நீங்கள் பார்க்கவில்லையா?


மொரொக்கோ நாட்டுப் பயணி முகமதியரான இபன் பட்டுட்டா கண்டு ஆரவாரித்த கோயிலன்றோ தென்னவரம். பயணக் குறிப்புகளைப் படிக்கவில்லையா?


இலங்கையில் தமிழ்ச் சைவர்கள் எவராவது புத்த விகாரையை இடித்த வரலாறை நீங்கள் சொல்ல முடியுமா? 


ஆனால் கோட்டை அரசன் மாயாதுன்னையின் மகன் முதலாம் இராசசிம்மன் எத்தனை புத்த விகாரைகளை இடித்தான்? தலதா மாளிகையை இடிக்க முயன்றான் - என அங்கே இன்றும் ஓவியம் இருக்கின்றமை உங்களுக்குத் தெரியாதா?


தென்னிலங்கையில் உள்ள சைவக் கோயில்கள் ஆதியான கோயில்கள். அவற்றை இப்பொழுது யாரும் கட்டவில்லை.


அங்கு சைவர்கள் இருப்பதால் அக் கோயில்கள் தொடர்கின்றன.


வடக்கு கிழக்கில் புத்தர்கள் 1948 வரை 4%. அவர்களுக்கான புத்த விகாரைகள் இருந்தன.


சைவத்தமிழ்த் தாயகத்தில் அத்துமீறிய அரச குடியேற்றங்களின் பின்பு அங்கும் விகாரைகளைப் புதிதாக அமைத்தீர்களே!


புத்தர்கள் இல்லாத இடத்தில் புத்த விகாரைகளைக் கட்ட வேண்டாம். சைவத் தமிழர்களின் மனத்தை நோகடிக்க வேண்டாம். இவ்வாறு வட மாகாணப் புத்த பீடத் தலைவரும் நாக விகாரைப் புத்த பிக்குவும் உங்களுக்கு எடுத்துக் கூறிய செய்தி வந்த அச்சு மை காயவில்லையே. அதற்குள் அவசரப்பட்டு உங்கள் அறியாமையை விளாசுகிறீர்களே.


தென்னிலங்கையில் சைவக் கோயில்கள் இருப்பதால் தமிழர் பகுதிகளில் புத்த விகாரைகளைக் கட்ட வேண்டும் என்று சொல்லுகின்ற உங்களுக்கும் அறிவை அடகு வைத்த புத்தர்களுக்கும் சொல்கிறேன் -- தென் இலங்கையில் சைவக் கோயில்கள் அநாதியானவை. அவற்றை இன்றைய தமிழர் தாயகச் சைவர்கள் அமைக்கவில்லை.


தவறான வரலாற்றைத் திணிக்காதீர்கள். போரில் வென்ற வீறாப்பில் புத்த மேலாதிக்கத்தைத் திணிக்காதீர்கள். 


கத்தோலிக்கரும் கிறித்தவரும் கடந்த சில நூற்றாண்டுகளில் போரில் வென்ற பின்பு சைவக் கோயில்களை உடைத்தார்கள். கிறித்தவத் தேவாலயங்களைக் கட்டி எழுப்பினார்கள்.


கத்தோலிக்கரும் கிறித்தவரும் சைவத்தமிழ்த் தாயகத்தில் சைவர்களை அழிக்க முயன்றது போல், இப்பொழுது போரில் வென்ற புத்தர்களாகிய நீங்களும் சைவத்தமிழ் தாயகத்தில் சைவர்களை அழிக்க முயல்கிறீர்கள்.


சைவர்களை அடக்க ஒடுக்க  அழிக்க நினைக்காதீர்கள். வெற்றி பெற மாட்டீர்கள்.


Awani 17 Sunday (3 9 2023)


For the media


Minister Vidurar flaunts ignorance of history


Maravanpulavu K. Sachithananthan

Siva senai


There are Saiva temples in South Sri Lanka. So what is wrong about setting up Buddhist monasteries in North East Sri Lanka? Honorable Minister Vidura Wickramanayakar inquires after mortgaging his knowledge.


Thaipoosa festival for Murugan on the day Buddha came to Sri Lanka. A ceremony where all the people of Sri Lanka gathered. Festival in Manik Ganga. The original inhabitants of Sri Lanka were the Saivas who welcomed the Buddha. They welcomed him on Saiva holy day, the Thaipoosa day.


There were tens of thousands of Saiva temples all over the 66,000 square kilometer island of Sri Lanka, stretching from Kathirgamam to Kankeyanthurai, and from Silawam to Batticaloa. Sri Lanka is Shivabumi.


Saiva temples were there when Buddha came.


Gradually the Buddhas started building viharas.


The Saiva temples that existed then, continue to this day. No one has built new Saiva temples in South Lanka. They are renovating the old Saiva temples.


It was not Saivattamizhar who built the magnificent black stone temple for Pillaiyar in the Iratperiyakulam north of Madavachi during postwar period. A Sinhalese who became a Buddha. You go and see. 


Tell me if there is one Buddhist Sinhalese mother who has not taught her child the Ganapathi Deyo mantra that begins with Mushika Vahana.


There were no viharas in Sri Lanka for many centuries before and after the arrival of the Buddha.


We Saivers gave permission to build viharas on compassion.


Anuradhapuram was a Saivite region even after the arrival of Vijaya. Names of kings who ruled: Shiva, Mootha Shiva, Mahanagan. Complete Saiva Tamil Names.


The Buddhist temples of South Lanka are now built with the help of Saivas.


Even if Buddhist temples are built, there should be Shiva Lingam there. Vishnu should be worshiped Lakshmi, Saraswati, Durga, Kali should be worshiped Vairavar should be worshipped. Pathini, a Tamil woman, should be worshipped.


So you have built Saiva temples inside Viharas.


Because you know Sri Lanka is Siva boomi. You, the Buddha, also consent that there should not be a place on this Shiva boomi without a Saiva temple


Gajabahu I was the first to place the Saiva Tamil woman Pathini in Buddhist temples.


Narasimha Pallava's elephant brigade commander Maravarman spread the worship of Pillayar to Buddha in Sri Lanka, where people bow their heads and worship with body and mind every day. He went to Vatabi and came to Sri Lanka with victory and Pilliyar idols.


I did not mention that the same Narasimham Pallava built the Thennavaram Shiva temple in the Pallava style at Devendra node to the south. Cosmas Indicopleustuas, an Greek merchant traveler says so. Those of you who are pawning your knowledge are not likely to know this news.


Parakramabhaku I, son Vikramabhaku, son Gajavaku II were all kings who maintained Saivism. Don't you remember reading that Kula Vamism and Pusa Vazhi that these kings were of Saiva Tamil Pandyas belonginh to the Chandrakula Sathriya dynasty?


Can you forget Gajavaku II who took refuge in Chatur Vedi Mangalam at Kanthalai?


After that, during the second, fourth, and sixth Parakramabaku eras, it can be seen in stone inscriptions that the emperors supported the Tennavara Nayanar temple and the Chaturvedi Mangalams at the southern tip of Sri Lanka. Don't you read?

-

Did you not read that in the stone inscriptions of the TriShingala Dambathenia, Gampola and Kotte kings, first the Buddhist Vihara, then the Chaturvedi Mangalam, then the Saivite Devalaya should be properly maintained?


The Chinese traveler Chengo worshiped and wrote an epitaph in Tamil at Koil of Thannavaram. Didn't you see that inscription is still in the Colombo museum?


Tennavaram is the temple that Ibn Battuta, a Mohammedan traveler from Morocco, was delighted to see. Not reading travelogues?


Can you tell us the history of any Tamil shaivaite demolishing  a Buddhist temple in Sri lanka?


But how many Buddhist temples did Rajasimha I, the son of the Kotte king Mayatunnai, demolish? Don't you know that there is still a painting of Dalada Maligawa of this king trying to demolish the Dalada Maligawa?


Saiva temples in South Lanka are primitive temples. No one builds them now.


Those temples continue because there are Saivas there.


In North East Buddhists were 4% till 1948. There were Buddhist temples for them.


After the excessive state settlements in the Saiva Tamil homeland, you have built new vihara temples there too!


Do not build Buddhist temples where there are no Buddhas. Don't hurt the minds of Saiva Tamils. Thus the ink has not dried on the news that the head of the Northern Provincial Buddhist College and the Buddha Bhikkhu of Naga Vihara brought to you. You rush into it and flaunt your ignorance.


I say to you and the Buddhas who have pawned their knowledge that because there are Saiva temples in South Sri Lanka, Buddhist temples should be built in Tamil areas -- Saiva temples in South Sri Lanka are eternal. They were not set up by today's Tamil homeland Saivas.


Don't impose false history. Do not impose Buddhist supremacy as a warrior who has won a battle.


Catholics and Christians over the last few centuries destroyed Saiva temples after winning wars. They built Christian churches.


Just as the Catholics and Christians tried to destroy the Saivas in the Saiva Tamil homeland, now you, the victorious Buddhas, are trying to destroy the Saivas in the Saiva Tamil homeland.


Don't try to suppress and destroy the Saivas. You will not win.

குச்சவெளி புத்தம்

 ஊடகத்தாருக்கு


ஆவணி 18 திங்கள் (04.09.2023)


தவறான தகவல் தந்தார்? அமைச்சர் விதுரர்.


குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவு. அங்கு 10 நிலதாரிப் பிரிவில் 238 சிங்களவர். 10 சிங்களவருக்கு ஒரு புத்த விகாரை. மொத்தம் 23 புத்த விகாரைகள். கட்டுவதற்கு அரசு ஒப்புதல்.


மாண்புமிகு அமைச்சர் விதுரர் விக்கிரமநாயக்கர் ஊடகத்தாருக்குக் கொடுத்த கணக்கு. சாட்சியாக 03.09.23 செய்தி வெட்டு இணைப்பில்.


குச்சவெளிப் பிரதேச செயலகப் பிரிவுக்கான 2019ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணிப்பு விவரங்களைத் தருகிறேன்.


குச்சவெளியில் 24 நிலதாரிப் பிரிவுகள்.


இவற்றுள், 

கோபாலபுரம் 

கும்புறுப்பிட்டி வடக்கு 

வீரஞ்சோலை 

காசீம் நகர் 

கல்லம்பற்றை 

புல்மோட்டை 03 

ஆகிய ஆறு நிலதாரிப் பிரிவுகளில் புத்தரோ சிங்களவரோ இல்லை.


வேலூர் 

நிலாவெளி 

இறக்கண்டி 

குச்சவெளி 

கட்டுக்குளம்

இரணைக்கேணி

கும்புறுப்பிட்டி தெற்கு 

பெரியகுளம்

தென்னமரவடி

ஆகிய 9 நிலதாரிப் பிரிவுகளிலும் 18 புத்தர், 17 புத்தர் அல்லாதோர், ஆக 35 சிங்களவர்.


வாழையூற்று 

இக்பால்நகர் 

புல்மோட்டை 02

திரியாய் 

செந்தூர் 

புல்மோட்டை 01 

செயாநகர் 

கும்புறுப்பிட்டி கிழக்கு

புல்மோட்டை 04

ஆகிய 9 நிலதாரிப் பிரிவுகளிலும் 926 சிங்களவருள் 437 புத்தர்.


961 சிங்களவருள் 455 புத்தர் குச்சவெளிப் பிரதேச செயலகப் பிரிவில்.


மொத்த மக்கள் தொகையில் 

1% புத்தர்.  

2.3% சிங்களவர்.


குச்சவெளியில் 

41,821 மக்களுள்

27,553 முகமதியர் 66%

11,743 சைவர் 28%

2,070 கிறித்தவர் 5%

455 புத்தர் 1%


விதுரர் விக்கிரமநாயக்கர் கணக்கைத் திருத்துவாரா?


66% முகமதியருக்கு 

38 மசூதிகள் 

27 மதராசாக்கள் 

2 அகதியாக்கள் 

1 அரசு சார்பற்ற நிறுவனம்


28% சைவர்களுக்கு 

42 சைவக் கோயில்கள் 

12 அறநெறிப் பாடசாலைகள்


5% கிறித்தவர்களுக்கு 

18 கிறித்தவ தேவாலயங்கள்


1% புத்தர்களுக்கு 

18 பதிவான விகாரைகள்

1 பதிவற்ற விகாரை


19 விகாரைகள் 

5 புல்மோட்டை 01 

3 புல்மோட்டை 04

3 கும்புறுப்பிட்டி கிழக்கு

2 குச்சவெளி

1 கசீம் நகர்

1 கட்டுக்குளம்

1 புல்மோட்டை 02

1 தென்னமரவாடி

1 செயாநகர்

1 திரியாய்


புத்தர்களே இல்லாத பிரதேசத்தில் புத்த விகாரைகளை யாருக்காகப் புதிதாக கட்டுகிறது அரசு? 23 புத்த விகாரைகள் கட்டுவதற்கு 230 கோடி ரூபாய் தோராய மதிப்பீடு. 455 புத்த வழிபாட்டாளர்களுக்கு 230 கோடி ரூபாய் செலவு. 


குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் வாழும் ஒவ்வொரு புத்தருக்கும் 50 லட்சம் ரூபாய் செலவு. வழிபாட்டு உரிமைக்கான செலவு. போரில் வெற்றி பெற்ற புளங்காகிதத்தில் வீராப்பில் புத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் இலங்கை அரசின் செலவு.


அடுத்து வரும் மாதங்கள் உணவுத் தட்டுப்பாடு. கட்டாய தேவைப் பொருள்களின் விலையேற்றம். ஏலவே அதல பாதாளத்தில் பொருளாதாரம். 


அற வழி தவறிய புத்தர். மனநோயாளி மத வெறியர். பொருளாதார முன்னேற்றமா, சிங்கள புத்த மேலாதிக்கமா என்ற வினாவுக்கு, சிங்கள புத்த மேலாதிக்கமே என அடித்துக் கூறும் அறிவை அடகு வைத்த அரசியல்வாதிகள்.


விதுரர் விக்கிரமநாயக்கருக்குச் சொல்கிறேன். தம்பதெனியா கம்பளை கோட்டை முச்சிங்கள அரசுகள் மகா சாமிகளை நியமித்தன. வழிகாட்டலைப் பெற்றன. "கட்டிக்காவத" எழுதின. 


அறத்தை மீறிய தருமத்தை மீறிய வினையை மீறிய அபிதருமத்தை மீறிய புத்த பிக்குகளை அடக்கின. அங்குலிமாலாவைப் படித்த பின்பும் தலையைக் கொய்வேன் என்கின்ற புத்தரைத் தண்டித்தன. தம்ம பதத்தை வாழ்வியல் ஆக்கின.


மூன்றாம் விசயபாகு தொடக்கம் ஏழாம் புவநேகபாகு வரை ஒவ்வொரு அரசரும் அறத்தை மீறும் புத்த பிக்குகளுக்காகக் "கட்டிக்காவத" எழுதினர். அரசாணை ஆக்கினர். 


காசியப்பர் வழியில் அசாதசத்துரு வழியில் அசோகர் - முல்கிரிப்புத்தர் வழியில் வட்டகாமினி வழியில் விதுரர் விக்கிரமநாயக்கரே ஏழாவது புத்த சங்கத்தை கூட்டுக. அறத்தை மீறும் வினையை மீறும் அபிதருமத்தை மீறும் புத்தர்கள் அனைவரையும் புத்த சமயத்துக்குள் மீட்டு வருக.


புத்த விகாரைகள் மன ஒடுக்கத்தின் திருக்கோயில்கள். மன இருள் போக்கும் அருட் கோயில்கள். புத்த விகாரைகளைக் கட்ட முன்பு புத்தர்களை மீள உருவாக்குங்கள். 


யாம் இரப்பவை நின்பால் அன்பும் அருளும் அறனும். (சங்கத் தமிழ்ப் பாடல் வரி). பொய்யும் புரட்டும் ஏமாற்றும் களவும் வெறுப்பும் விதைக்கின்ற நிலையை மாற்றுக. அன்பையும் அறத்தையும் அருளையும் பெருக்குக, விதுரர் விக்கிரமநாயக்கர் அவர்களே. புத்த தேசத்தின் புனிதத் தந்தையாக உங்களை வரலாறு போற்றும்.

கண்ணகி செபத்தியான்

 ஆவணி 20 புதன்கிழமை (06.09.2023)


பிரதேச சபைச் செயலாளரை கைது செய்க


ஊர்காவற்துறைப் பிரதேச சபைச் செயலாளரைக் கைது செய்யுமாறு நூற்றுக்குக்கும் கூடுதலான அப் பிரதேச சபை வாக்காளர் கையெழுத்திட்டு ஊர்காவற்துறைக் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.


தமிழிலும் சிங்களத்திலும் கொடுத்த முறையீட்டில், தமிழருக்கும் புனிதமானவள், சிங்களவருக்கும் புனிதமானவள், கண்ணகி என்ற பத்தினி.


பிரான்சில் பிறந்த செபத்தியானுக்கும் கண்ணகிக்கும் என்ன தொடர்பு?


1 கண்ணகிக்குக் களங்கம் தருகின்ற செபத்தியான் கண்ணகி தெரு என்ற பெயர்ப்பலகையை உடனே அகற்றுக. 


2 இன மத முரண்களை மோதல்களை உருவாக்கிய பிரதேச சபைச் செயலாளரைக் கைது செய்க எனச் சட்டங்களை மேற்கோள்காட்டி வாக்காளர் முறையிட்டுள்ளனர்.


தாம் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் பிரதேச சபைச் செயலாளர் நேற்றைய 5.9.23 விசாரணைக்குக் காவல் நிலையம் வரவில்லை.


வாக்காளரின் முறையீட்டுப் படிகள் இணைப்பில்.

நீதிபதி சரவணராசா முல்லைதீவு

 Press release


Scroll down for Sinhala and English versions. Tamil version authentic.


புரட்டாதி 11, வியாழக்கிழமை (28 09 2023)


சங்கு சுட்டாலும் வெண்மை தரும். கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே.


மாவட்ட நீதிபதி சரவணராசா மேல்மகன். பொருளை ஒறுத்தார். பதவியை ஒறுத்தார். வசதிகளை ஒறுத்தார். வாழும் சூழலை ஒறுத்தார். கொள்கை வழி நிற்கிறார்.


தீர்ப்பை மாற்றி எழுதச் சொல்லி யாரைக் கேட்கிறாய்?  


அநீதிக்குத் தலை வணங்குவேன் என நினைத்தாயோ?


அரசியல் அழுத்தங்களுக்காகச் சட்டத்தைப் புரட்டுவேன் என நினைத்தாயோ?


அடிமை வாழ்க்கை என்றாலும் ஆணித்தரமான கொள்கை வாழ்க்கை வாழ்கின்றேனடா.


போ.. போ.. நீயும் நீ தந்த பதவியும் நீ தந்த வாழ்க்கையும்.


உதறித் தள்ளிய ஆண்மகன் நீதிபதி சரவணராசா. மனிதத்தின் மறுபிம்பம் நீதிபதி சரவணராசா.


போர்த்துக்கேய ஆட்சியில் பசுவைக் கொன்று இறைச்சியைத் தரேன், கிறித்தவனாக மதம் மாறேன் என்ற ஆண் மகன் அன்றைய ஞானப்பிரகாசரின் வழிவந்தவர் இன்றைய நீதிபதி சரவணராசா.


அன்று கத்தோலிக்கரிடம் அடிமையாக இருந்தோம் 

இன்று புத்தர்களிடம் அடிமையாக இருக்கிறோம்.


நீறுபூத்த நெருப்பாக, ஊதினால் தீயாகும் தணலாக, விடுதலை வேட்கை உள்ளத்தில் கரந்துறைவதன் அடையாளங்களே அன்றைய ஞானப்பிரகாசரும் இன்றைய சரவணராசரும். 


போரின் வெற்றி வீறாப்பில் ஆயுதக் குவிப்பின் எக்காளத்தில் நீதியை உடைக்கலாம், செங்கோலை வளைக்கலாம் என்போருக்குச் சாட்டையடி கொடுத்திருக்கிறார் நீதிபதி சரவணராசா.


வாழ்க அவர் துணிச்சல்.

வாழ்க அவர் பெற்றி.


ஞானப்பிரகாசர்களையும் சரவணராசாக்களையும் இடையீடின்றி உருவாக்கும் இலங்கைச் சைவத் தமிழ்ச் சமூகம்.


පුරටති 11, බ්‍රහස්පතින්දා (28 09 2023)


මරවන්පුලවු කේ.සචිතානන්දන්

ශිව සේනායි

ලියයි


හක්ක රත් කළද එහි සුදු පැහැය දිගටම පවතී. යහපත් මිනිසුන් විපතකදී වුවද යහපත් මිනිසුන්ය.


දිසා විනිසුරු සරවනරාසා මනුෂ්‍ය ආභරණයක්. ඔහුට සුඛෝපභෝගී දේ ප්‍රතික්ෂේප කරන්න. ඔහුට තනතුර සහ වෘත්තීය අවස්ථා ප්‍රතික්ෂේප කරන්න. ඔහුට රජයේ පහසුකම් එපා. ඔහුගේ පාරිසරික ස්ථානය, ඔහුගේ පාරම්පරික පරිසරය ඔහුට ප්‍රතික්ෂේප කරන්න. ඔහු ප්‍රතිපත්ති වෙනුවෙන් පෙනී සිටිනවා.


තීන්දුව වෙනස් කරන්න කියන්නේ කාටද?


කෙනෙක් අසාධාරණයට හිස නැමෙයි කියලා ඔබ හිතනවාද?


දේශපාලන බලපෑම් මත යමෙකු නීතියේ ආධිපත්‍ය ක්‍රියාවලිය වෙනස් කරනු ඇතැයි ඔබ සිතනවාද?


වහල් ජීවිතයක් වුවද උතුම් ප්‍රතිපත්ති ගරුක ජීවිතයක් ගත කරයි.


යන්න.. යන්න.. ඔබ, ඔබ දුන් අධිකරණ තනතුර, ඒ ආශ්‍රිත ගාම්භීර ජීවිතය ඔබ දෙන්න බලාපොරොත්තු වුණා.


විනිසුරු සරවනරාසා උදාර පුතෙකු ලෙස නැගී සිටියි. විනිසුරු සරවනරාසා යනු පරමාදර්ශී මිනිසකුගේ පුනරුත්පත්තියයි.


අද විනිසුරු සරවනරාසා යනු ගවයෙකු මරා මස් නොදෙන බව හෝ කිතුනුවකු නොවන බව කියූ පෘතුගීසි යටත් විජිත යුගයේ සෛව දෙමළ පුත්‍රයා වූ ඥානප්‍රකාශර්ගේ පරම්පරාවෙන් පැවත එන්නෙකි.


අපි එදා කතෝලිකයන්ගේ වහල්ලු.

අද අපි බෞද්ධයන්ගේ වහල්ලු.


එදා ඤාණප්‍රකාශර් සහ අද සරවනරාසා ඔවුන්ගේ ආත්මයන් තුළ ගිනි නොදැමූ ගින්නක් ලෙසත්, පිඹින විට දැල්වෙන ගින්නක් ලෙසත් දැවෙන විමුක්ති ආශාවේ සංකේතය.


යුධ ජයග‍්‍රහණයේ ප‍්‍රතිඵලයක් ලෙස යුක්තිය බිඳීමට සහ යෂ්ටිය නැමීමට කැමති අයට විනිසුරු සරවනරාසා කස පහර දුන්නේය.


එතුමාගේ නිර්භීතකම දීර්ඝායු වේවා.

උන්වහන්සේගේ ශෛව දෙමළ උරුමයට දීර්ඝායුෂ ලැබේවා.


ශ්‍රී ලාංකේය සෛව දෙමළ ප්‍රජාව බාධාවකින් තොරව ඥානප්‍රකාශර්වරුන් සහ සරවනාරසර්වරුන් බිහි කිරීම දිගටම කරගෙන යනු ඇත.


Puratathi 11, Thursday (28 09 2023)


Maravanpulau K. Sachithanandan

Shiv Senai

Writes


Even if the conch is heated , it continues its whiteness. Good people are good people even in distress.


District Judge Saravanarasa is a jewel of a human. Deny him the luxuries.  Deny him position and career opportunities. Deny him government facilities. Deny him his ecological niche, his ancestral environment. He stands for principles.


Whom are you asking to change the verdict?


Do you think one would bow down to injustice?


Do you think one will change the process of the rule of the law under political pressure?


Even though it is a life of slavery, he lives a life of noble principles.


Go.. Go.. You, the judicial position you gave, the associated solemn life you were expected to give.


Judge Saravanarasa stands as a noble son. Justice Saravanarasa is the re-incarnation of an ideal human.


Today's Judge Saravanarasa is the descendant of Gnanaprakasar, the Saiva Tamil son of the Portuguese colonial era,   who said that he would not kill a cow and give the meat or become a Christian.


We were slaves to the Catholics then.

Today we are slaves to the Buddhists.


Gnanaprakasar of that day and Saravanarasa of today are the symbols of the desire for liberation burning in their souls as flameless fire, and as fire that flames when blown.


Judge Saravanarasa whipped those who want to break the justice and bend the scepter as the consequence of the victory in the war.


Long live his bravery.

Long live his Saiva Tamil heritage.


The Sri Lankan Saivite Tamil Community shall continue to produce Gnanaprakasars and Saravanarasars without interruption.

கப்பல் கனவுகளும் நனவாகும்

புரட்டாதி 19 வெள்ளிக்கிழமை (6 10 2023)


கனவுகளும் நனவாகும்


2009 முதலாக காங்கேயன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கப்பல் சேவை வேண்டுமென முயன்று வந்தேன். 2010இல் யாழ்ப்பாணத்தில் நுணாவிலில் என்னைச் சந்திக்க வந்த மாண்புமிகு அமைச்சர் தேவானந்தாவுக்கு இத்திட்ட அறிக்கையைக் கொடுத்தேன். அன்றைய பாதுகாப்புச் சூழலை அவர் நோக்கினார்.


2017ஆம் ஆண்டில் இலங்கை அரசின் ஒப்புதலை மிக எளிமையாகப் பெற்றுத் தந்தவர் வட மாகாணத்தின் மேனாள் ஆளுநர் இரெஜினால்ட் கூரே அவர்கள். சந்தடி இல்லாமல் சலசலப்பு இல்லாமல் அரசு அலுவலர் மட்டத்திலேயே ஆணைகளையும் ஒப்புதலையும் பெற்றவர் கூரே அவர்கள். அவர்களுக்கு இந்த நாள் மிக மகிழ்ச்சியான நாள். ஆனாலும் அதைக் காண்பதற்கு அவர் எம்மோடு இல்லை.


இந்திய அரசின் ஒப்புதலுக்காகத் தில்லி சென்றேன். சென்னை சென்றேன். தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு சுஷ்மா சுவராஜ், சென்னையில் தமிழகத் துணை முதல்வர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் இருவரும் தடங்கலின்றி அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தந்தனர். 


இவர்களுக்கு விதந்துரைத்த இந்நாள் நாகலாந்து ஆளுநர் மேதகு இல. கணேசன் அவர்களுக்கு நன்றி. அந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் மைத்திரேயன் அவர்களுக்கு நன்றி. அக்காலத்தில் கப்பல் துறை அமைச்சரான மாண்புமிகு நித்தின் கட்காரி அவர்களைச் சந்தித்தேன். இணை அமைச்சரான மாண்புமிகு பொன் இராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தேன். பெரிதும் உதவினார்கள்.


இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதலைப் பெற்று தந்தவர் திரு எஸ் குருமூர்த்தி அவர்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.


கப்பல் இல்லையே எனத் தேடினேன். தேடலில் உதவிய ஈழநாடு ஆசிரியர் திரு குகநாதன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தர், இந்துப் போராளிகள் குழுத் தலைவர் திரு அருண் உபாத்தியாயர், இலங்கைக் குடியரசுத் தலைவரின் மேனாள் செயலர் ஆஸ்டின் பெர்ணாந்தோ, தில்லி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் இராம் சங்கர் இராஜா, தில்லி ஆட்சிப் பணியர் விஜய இராம்மோகன், கொல்கத்தா திரு தேவ்தத்தாமாஜி, சென்னை கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன், இவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.


இந்திய அரசு கடல் மாலைத் (சாகர் மாலா) திட்டத்தை உருவாக்கிய பொழுது காரைக்கால் - காங்கேயன்துறைப் பயணக் கப்பல் இணைப்பையும் அதற்குள் ஒன்றாக்கியமையே இந்தத் திட்டத்தின் பாரிய முன்னேற்றம். என் கனவுக்கு நிலையான நனவாக அந்த அறிவித்தல் அமைந்தது. 


மார்கழித் திருவாதிரைக்கு சிதம்பரத்திற்கு இலங்கை வழிபடு பயணிகளுக்குக் கப்பல் தேவை எனவே நான் கேட்டிருந்தேன்.


அந்த ஒற்றைப் புள்ளி விரிந்து விரிந்து இன்று நிலையான காங்கேயன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவையாக மலர்ந்து முகிழ்த்துப் பயன் தர உள்ளது.


சிவபெருமானின் திருவருளை நெஞ்சார வழுத்துகிறேன்.


நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு 10.10.2023 முதலாகப் பயணிகள் கப்பல்  போக்குவரத்து. 


வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக்கான வாடைக்காற்றும் வலசை நீரோட்டமும் கொந்தளிக்கும் கடலும் இடையிடையே புயலுமாய்க் கால நிலை. எனவே கார்த்திகை மார்கழி மாதங்களில் இக்கப்பல் பயணிக்குமா? 


01.11.2023 இக்குப்பின் 31 12 2023 வரை அமையும் காலநிலைக்கேற்பக் கப்பல் பயணமும் அமையும். எனினும் மார்கழி 10 செவ்வாய்க்கிழமை (26 12 2023) மார்கழித் திருவாதிரை அல்லவா? இலங்கைச் சிவனடியார்கள் சிதம்பரத்துக்கு வழிவழியாகச் சென்ற பயணம் அல்லவா? எனவே 20 12 2023 தொடக்கம் கப்பல் சேவையை மீளத் தொடங்குமாறு வலியுறுத்த உள்ளேன்.


இலட்சத்தீவுக்கும் கொச்சினுக்கும் இடையே பயணிக்கும் இந்தியக் கப்பல் கழகத்தின் செரியபாணிக் கப்பல். காங்கேயன்துறை நாலு மீட்டர் ஆழத் துறை. இக்கப்பலோ 150 பயணிகளை ஏற்றிய பின்பும் ஒன்றை மீட்டர் தாழ்வே. எனவே காங்கேயன் துறையிலும் நாகப்பட்டினத்திலும் பயணிகள் நேரே கப்பலில் ஏறலாம் இறங்கலாம். (இக்காலத்தில் காங்கேயன்துறைக்கு வரும் சொகுசுச் சுற்றுலாப் பயணிகள் கப்பல் தொலைவில் நிற்கும், நங்கூரமிடும், படகுகளிலேயே பயணிகள் துறைக்கு வருவர்.)


150 பயணிகள். குளிரூட்டிய அறைக்குள். 50 கிலோ பொதி ஒவ்வொரு பயணிக்கும்.

 

காலை நாகப்பட்டினத்தில் புறப்பாடு. 60 கடல் மைல் (100 கிமீ.) பயணம்.  3 மணி நேரப் பயணம். நண்பகல் காங்கேயன்துறை.


பிற்பகல் காங்கேயன்துறையில் புறப்பாடு. மாலை நாகப்பட்டினம்.


நாகப்பட்டினத்தில் இருந்து பேருந்து மற்றும் தொடர்வண்டிப் பயணமாக இந்தியா முழுக்கப் பயணிக்கலாம்.


ஒரு வழிப் பயணச்சீட்டு ஒருவருக்கு இந்திய ரூபாய் 6500 (இலங்கை ரூபாய் 25,000). 


இக் கப்பல் நாளை சனிக்கிழமை (7 10 2023) நாகப்பட்டினத்தில்.  


வெள்ளோட்டம் (8.10.2023) ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேயன்துறைக்கு. வெள்ளோட்டப் பயணத்தில் கப்பலில் பணியாற்றும் 14 ஊழியர்களே பயணிப்பர்.


10 10 2023 அன்று தொடங்கும்  கப்பலில் பயணிக்கச் சீட்டுகளுக்கு இந்தியாவில்: KPV Shaik Mohammed Rowther, 41 இலிங்கிச் செட்டித் தெரு, சென்னை +91 44 25244353. இலங்கையில்: ஆஷா கப்பல் Asha Agencies, 72C பௌத்தலோக மாவத்தை பம்பலப்பிட்டிச் சந்தி +94 11 2503313.


கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவுகள் நனவாகும் உங்கள் வாழ்நாளிலேயே என்பதற்கு, சிவபெருமான் சிவனடியார்களுக்குத் துணை நிற்கிறார் என்பதற்கு, வேறு என்ன சான்று?

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்

 புரட்டாதி 23, செவ்வாய்க்கிழமை (10 10 2023)


நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம்.


பங்கு பற்றினேன்.


நாகப்பட்டினத்தில் வந்து இறங்கும் இலங்கைப் பயணிகளுக்கு 11 வசதிகளைக் கோரினேன்.


மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியரைத் தனியே சந்தித்தேன். வசதிகள் தேவை எனச் சொன்னேன்.


எழுதிக் கொண்டு வாருங்கள். மாலை 0630 மணிக்கு உங்களுக்காகவே அனைத்துத் துறை மூத்தவர்களையும் கூப்பிடுகிறேன் என்றார்.


மாலை 0630 மணிக்குத் துறைத் தலைவர்கள் 30 பேர் கூடினர். ஒரு சிலர் காணொளி மூலம் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கோரிக்கையாக எடுத்து நோக்கினர். ஒவ்வொன்றிலும் சரியான முடிவை எடுத்தனர்.


மாவட்ட ஆட்சியருக்கு நன்றி சொல்லி விடை பெற்றேன்.

நாகப்பட்டினம் துறைமுகம் சென்றேன்

 புரட்டாதி 23, செவ்வாய்க்கிழமை (10 10 2023)


இன்று நாகப்பட்டினம் துறைமுகம் சென்றேன். 


சென்னையிலிருந்து வந்த தமிழ்நாடு கடல் சார் வாரியத்தின் மூத்த ஆட்சியர் கப்பித்தான் ம. அன்பரசன் தலைமையில் துறைமுகத்தார் என்னை வரவேற்றனர். பொன்னாடை போர்த்தினர்.


கப்பலின் உள்ளும் புறமும் காட்டினர். பயணிகளுக்கான வசதிகளை விளக்கினர். இதைவிட வசதியாக ஒருவர் பயணிக்க முடியுமா? சிவபெருமானின் கொடை அந்தக் கப்பல். எனவே நெஞ்சம் நெகிழ்ந்து அடியவனாக நிலத்தில் வீழ்ந்து வணங்கினேன்.


பயணிகளுக்கு இந்தியாவின் முகமான குடிவரவு, குடியகவல்வு, சுங்கம், பாதுகாப்பு, தொடர்பான ஏற்பாடுகள் கட்டமைப்புகள் ஒழுங்குகள் யாவையும் ஒவ்வொன்றாகத் காட்டினர்.


தொடக்க விழா நிகழ்ச்சிக்கான மேடை, பந்தல், தட்டிகள் பணிகள் நடைபெறுகின்றன.


பயணத் தொடக்க நாள், ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு காரணத்துக்காகவே தள்ளிப் போகிறது.


காரணங்கள் வலுவானவை. எனவே அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வளவு செய்கிறார்களே எனச் சார்ந்த அனைவரையும் பாராட்ட வேண்டும். கடந்த 20 நாள்களாக இந்தப் பயணச் சேவையின் வெற்றிக்காகத் துறைமுகத்தார் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.


தொடக்க விழாவில் இலங்கை அமைச்சர் மாண்புமிகு தேவானந்தா காணொளி மூலம் பேசுவார் என்றார்கள்.


விழாவில் நான் முன்வரிசையில் இருப்பேன். கப்பலை வழியனுப்பிய பின் சென்னை திரும்புவேன்.


தலைப் பிரசவம் போல, நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேயன்துறைக்குப் பயணிகள் கப்பல் புறப்படும் நிகழ்வு. 


தாயும் சேயும் நலமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துவதே சைவத் தமிழரின் வரலாற்று மரபு. கப்பலும் பயணங்களும் நலமாக வளமாகத் தளராது இடையூறின்றிப் பாதுகாப்பாகத் தொடர வேண்டுமென நெஞ்சார வாழ்த்துவோம்.


குறைகளைத் தூக்கிப் பிடிக்காமல் நெஞ்சார வாழ்த்துவோம்.

நாகப்பட்டினம் - காங்கேயன்துறை சரக்குக் கப்பல்

 புரட்டாதி 25 வியாழக்கிழமை (12 10 2023)


நாகப்பட்டினம் - காங்கேயன்துறை சரக்குக் கப்பல்


நாகப்பட்டினம் இந்திய வர்த்தகத் தொழில் குழுமத் தலைவர் (2011-2013), இப்பொழுது இந்திய வர்த்தக தொழில் குழுமத்தின் நாகப்பட்டினம் துறைமுக வளர்ச்சி குழுத் தலைவர். திரு ந. சந்திரசேகரம்.


திரு சந்திரசேகரம் தலைமையில் நால்வர் கொண்ட ஏற்றுமதியாளர் குழுவினர், நாகப்பட்டினம் காங்கேயன்துறை முதலாவது கப்பலில் யாழ்ப்பாணம் வருகின்றனர். 


நாகப்பட்டினத்தின் செல்வந்தர்களும் செல்வாக்கு மிக்கவர்களுமானோர் இந்நால்வர்.


புரட்டாதி 23, செவ்வாய்க்கிழமை (10 10 2023) அன்று மறவன்புலவு க. சச்சிதானந்தன் இவர்களைச் சந்தித்தார். இலங்கையிலிருந்து உற்பத்திப் பொருள்களை இறக்குமதி செய்யுமாறும் இந்தியாவிலிருந்து உணவு சார் நுகர்ச்சிப் பொருள்களை ஏற்றுமதி செய்யுமாறும் இவர்களிடம் கேட்டார்.


நாட்டுப் படகு, வத்தை, சிறிய கப்பல் என யாவும் எம்மிடம் உள. எதையும் கடலில் விடுவோம். நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேயன்துறைக்கு விடுவோம். 


அங்கிருந்து புகையிலை, பாக்கு முதலியன கொண்டு வருவோம். இங்கிருந்து யாழ்ப்பாண வணிகர்கள் கேட்பதைக் காங்கேயன்துறைக்கு அனுப்புவோம் என்றனர் நால்வரும்.


மறவன்புலவு க. சச்சிதானந்தன் உடனேயே இலங்கை அமைச்சர் மாண்புமிகு தேவானந்தாவைத் தொடர்புகொண்டார். நாகப்பட்டினத்தில் இருந்து உடனே சரக்கு கப்பல் காங்கேயன்துறைக்கு விட வேண்டும் எனக் கேட்டார். இஃது உங்களின் கனவுத் திட்டம். உங்களுக்காக நான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன் என அமைச்சரிடம் கூறினார் மறவன்புலவு க. சச்சிதானந்தன்.


பேசிய விவரங்களைக் கடிதமாகவும் அமைச்சருக்கு அனுப்பினார். இந்தியத் துணைத் தூதரகத்துக்கும் படி அனுப்பினார்.


மாண்புமிகு அமைச்சரும் நாகப்பட்டினம் சந்திரசேகரும் ஒருவரோடு ஒருவர் தொலைப்பேசியில் பேசினர்.


அஃதை அடுத்து நாகப்பட்டினம் இந்திய வர்த்தகத் தொழில் குழுமத் துறைமுக வளர்ச்சிக் குழுத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நால்வர் குழு யாழ்ப்பாணம் வருகிறது.


யாழ்ப்பாணத்துக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே இறக்குமதி / ஏற்றுமதி வாய்ப்பு. பயணிகள் கப்பல் போன்றே சரக்குக் கப்பலும் பயணிக்கும் வாய்ப்பு.


யாழ்ப்பாண வணிகர் இறக்குமதியாளராக ஏற்றுமதியாளராக மாறுவதற்கு வாய்ப்பு.


நாகப்பட்டினத்தில் இருந்து வரும் நால்வர்களும் நான்கு நாள்களுக்கு யாழ்ப்பாணத்தில் தங்குவார்கள். திரு சந்திரசேகரன் அவர்களின் தொலைபேசி வாட்ஸ்அப் எண் +91 98424 43365. 


ஏற்றுமதி இறக்குமதி மற்றும் பயணிகள் சுற்றுலா தொடர்பில் ஆர்வம் உள்ளவர்கள் திரு சந்திரசேகரனை முன்கூட்டியே தொடர்பு கொண்டு நியமனம் பெற்று அமைச்சர் வழியாகவோ இந்தியத் துணைத் தூதர் அலுவலகம் வழியாகவோ நேரேயோ சந்திக்கலாம். வணிக வாய்ப்புகளைப் பெருக்கலாம்

பொது முடக்க அறிவிப்பை மீளப் பெறுக

 සිංහල, ඉංග්‍රීසි අනුවාද පහතින්


Sinhala, English versions below


புரட்டாதி 26, வெள்ளிக்கிழமை (13 10 2023)


20.10.23 பொது முடக்க அறிவிப்பை மீளப் பெறுங்கள்


குபேரர்களுக்குக் குடிசை மக்களின் துன்பம் தெரியாது. 


பொது முடக்கத்துக்கு அழைத்த அரசியல்வாதிகளுட் பலர் குபேரர்கள். வசதிகளின் மடியில் வாழ்பவர்கள். சொகுசுகளின் சொப்பனத்தில் மகிழ்பவர்கள். உதவியாளர்களின் ஒத்துழைப்பில் திளைப்பவர்கள் பலர். மக்களின் வரிப்பணத்தை உறிஞ்சுவோர் சிலர்.


இன்று உழைத்தால் நாளைய கஞ்சி. இன்றைய சம்பளம் நாளைய தீபாவளிக்கு. ஈழத் தமிழர் தாயகத்தின் உழைக்கும் தொழிலாளர் 3 இலட்சம் தமிழரின் நிலை.


ரூ 10,000 தொடக்கம் 20,000 வரை நாளாந்தம் பணம் புரள உழைப்போர் சிறு வணிகர்கள். அப் புரளலில் தேறும் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய்க்காக நாள் முழுதும் வாடிக்கையாளருக்காகக் காத்திருக்கிறார்கள். இத்தகைய சிறு வணிகர்களின் தொகை 3 இலட்சம் ஈழத் தமிழர் தாயகத்தில்.


பொது முடக்கத்தால் மகிழ்ச்சியடையக் கூடியவர்கள் நாளாந்தம் உழைக்காமல் மாதம்தோறும் வங்கியில் சம்பளத்தைக் குறைவின்றிப் பெறுகின்ற அரச ஊழியர்கள், பொது நிறுவன ஊழியர்கள். அவர்களுள்ளும் கடமை உணர்வாளர் முடங்க விரும்பார். ஈழத் தமிழர் தாயகத்தில் அவர்களின் தொகை 3 இலட்சமே.


ஈழத் தமிழர் தாயகத்தில் பெருவணிகர் தொகை 25,000 - 30,000. பொது முடக்கத்தால் இவர்களுக்கு இழப்புக் கணிசமாகும். எனினும் அந்த இழப்பை தாங்கும் வலிமை அவர்களுக்குப் பெருமளவு உண்டு.


சரக்குந்துகள்  பேருந்துகள் ஓடா. தொடர்வண்டிகள் இடை நிற்கும் விமானங்கள் ஓடா. கப்பலும் ஓடாது. பயண முன்பதிவுடன் காத்திருக்கும் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள வாய்ப்புகளை எதிர்நோக்கும் இளைஞர் யாவரையும் பொது முடக்கம் கடுமையான உளைச்சலுக்கு உள்ளாக்கும். 


பொதுமுடக்கத்துக்கு அழைத்த குபேரர்களான அரசியல்வாதிகளே, போராட்டங்களால் தொடர்ச்சியாகப் பொருள் இழந்து, ஊக்கம் இழந்து, மெது மெதுவாக மீண்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தாயகத்தின் ஏழைகளான 8 லட்சம் குடும்பத் தலைவர்கள் மீது, சார்ந்த பொதுமக்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றாதீர்கள். 


மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு அழைத்தீர்கள். மக்கள் வரவில்லை என்ற குறை உங்களுக்கு. உங்கள் போராட்டம் ஈழத் தமிழர் தாயகம் முழுவதுமாக அமையவில்லை. 


மருதனாமடத்தில் போராடினால் முசலியில் உணர்வு ஏறுமா? கொக்குவிலில் போராடினால் கல்முனையில் உணர்வு பீறிடுமா?  குளப்பிட்டிச் சந்தியில் மண்டியிட்டால் கொக்கட்டிச்சோலையில் உணர்வு குமுறுமா?


25,000 சதுர கிலோமீட்டர் நீண்டு அகன்ற தமிழர் தாயகத்தை 5, 6 சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் முடக்க முயலாதீர்கள். பிரதேச வாதத்தைத் தூண்டாதீர்கள். யாழ்ப்பாணிகள் ஆட்சி எங்களுக்கு வேண்டாம் என ஏனைய பிரதேசத்தவர் கூறும் நிலைக்குத் தள்ளாதீர்கள்


போராட்டத்துக்கு உரிய காரணங்கள் உள. மனித நாகரீக வரலாறே போராட்டத்தின் பெறுபேறு. போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. 


இன்றைய மறுவாழ்வுச் சூழ்நிலையில்,  தோல்வியால் முடங்கிய விடுதலை உணர்வுகளையும் தோல்வியால் இழந்த தற்சார்புப் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கும் நிலையில், பொது முடக்கம் போராட்டமாகாது. இயல்பு வாழ்க்கையைக் குழப்புவது போராட்டமாகாது. பொருளாதாரத்தை வீழ்த்துவது போராட்டமாகாது.


பொது முடக்கத்தைக் கோராமல் போராட்ட உத்திகளை மாற்றுங்கள். இயல்பு வாழ்க்கையைக் குழப்பாமல், மீள் வளர்ச்சியை வீழ்த்தாமல் போராட்ட உத்திகளைத் தீர்மானியுங்கள்.


ஈழத் தமிழர் தாயகத்தின் மரபுகளை மீட்டெடுக்கும் போராட்டத்தைக் கடந்த ஆறு ஆண்டுகளாகச் சிவ சேனையினர் நிகழ்த்தி வருகிறோம். ஈழத் தமிழர் தாயகம் எங்கும் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.


ஒவ்வொரு போராட்டத்திலும் சிவ சேனையினர் வெற்றி அடைந்திருக்கிறோம். எந்த ஒரு போராட்டத்திலும் மக்களின் இயல்பு வாழ்க்கை குழம்பவில்லை. எந்த ஒரு போராட்டத்திலும் எவரும் கைதாகவில்லை. அவ்வாறே நாங்கள் போராட்ட உத்திகளை வகுத்தோம், வெற்றியடைந்து வருகிறோம்.


தோல்வியடைந்த சமூகம் நாங்கள். அடிமைகளாக வாழும் சமூகம் நாங்கள். இழப்புகளைக் கடுமையாகச் சந்தித்த சமூகம் நாங்கள். குபேரர்களான அரசியல்வாதிகளே, கஞ்சி குடிக்கும் மக்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். அரசியல் அடிமைகளாக உள்ள அவர்கள், பொருளாதார அடிமைகளாகத் தொடர முடியாது. 


பொது முடக்க அறிவிப்பை மீளப் பெறுங்கள்.


පුරතති 26, සිකුරාදා (13 10 2023)


මාධ්ය නිකුතුව


සිට

මරවන්පුලවු කේ.සචිතානන්දන්

ශිව සේනායි


20.10.23 මහජන වසා දැමීමේ හර්තාලය සිහිපත් කරන්න


පැල්පත්වාසීන්ගේ දුක කුබෙරයෝ නොදනිති.


සාමාන්‍ය වැසීමට කතා කළ බොහෝ දේශපාලකයෝ කුබේරයෝ වෙති. ඔවුන් ජීවත් වන්නේ පහසුවෙහි උකුලේය. ඔවුන් සුඛෝපබෝගී සිහින භුක්ති විඳිනවා. බොහෝ දෙනෙක් උදව් සහ උපකාර පොඟවා ඇත. පුරවැසියන්ගේ බදු මුදල් ගසාකන සමහරු ඉන්නවා.


අද වැඩ හෙට කැඳ. අද පඩිය හෙට දීපවාලි. ඊළාම් දෙමළ නිජබිමේ කම්කරුවන් ලෙස වැඩ කරන ලක්ෂ 3ක් වූ දෙමළ ජනයාගේ තත්ත්වය මෙයයි.


කුඩා ව්‍යාපාරිකයන් යනු දිනකට රුපියල් 10,000 සිට 20,000 දක්වා මුදල් උපයන අයයි.: මෙම දෛනික හැරීමෙන් ඔවුන් එකතු කරන රුපියල් දහසක් හෝ දෙදහසක් සඳහා ඔවුන් දවස පුරා පාරිභෝගිකයෙකු එනතුරු බලා සිටී. ඊළාම් දෙමළ නිජභූමියේ එවැනි සුළු වෙළෙඳුන් සංඛ්‍යාව ලක්ෂ 3කි.


සාමාන්‍ය වසා දැමීමෙන් සතුටු විය හැක්කේ සෑම මසකම බැංකුවෙන් වැටුප් ලබන රාජ්‍ය සේවකයින් සහ රාජ්‍ය සමාගම් සේවකයින් ය. ඔවුන්ගෙන් සමහරෙකුගේ යුතුකම පිළිබඳ හැඟීම හර්තාල් පිළිකුල් කරයි. ඊළාම් ද්‍රවිඩයන්ගේ නිජබිමේ ඔවුන්ගේ සංඛ්‍යාව ලක්‍ෂ තුනකි.


ඊළාම් දෙමළ නිජබිමේ 25,000 - 30,000 මහා වෙළෙඳුන් ය. සාමාන්ය වසා දැමීම හේතුවෙන්, ඔවුන්ගේ පාඩු සැලකිය යුතු වනු ඇත. කෙසේ වෙතත්, ඔවුන්ට බොහෝ දේ ඇත. එම පාඩුව දරා ගැනීමට මුල්‍ය ශක්තිය


බඩු ලොරි නෑ, බස් නෑ. බාධා කළ දුම්රිය. අවලංගු කරන ලද ගුවන් ගමන්. නැව් යාත්‍රා කරන්නේ නැත. මෙම වසා දැමීම මධ්‍යම පන්තියේ සහ දරිද්‍රතා රේඛාවෙන් පහළ අංශයේ සියලුම තරුණ තරුණියන්ට වර්ධනය වීමේ අවස්ථා අපේක්ෂාවෙන් සිටින සංචාරක වෙන්කිරීම් සමඟ බලා සිටින අයට දැඩි ආතතියක් ඇති කරනු ඇත.


සාමාන්‍ය වසා දැමීමක් ඉල්ලා සිටින දේශපාලකයින්, දිගුකාලීන යුද්ධය හේතුවෙන් දිරිගැන්වීම් අහිමි වූ ඊළාම් දෙමළ මව්බිමේ දුප්පත් පවුල් ප්‍රධානීන් 8 ලක්ෂයක් මත ආර්ථික බර පටවන්න එපා. ඔවුන් ටිකෙන් ටික යථා තත්ත්වයට පත්වෙමින් සාමාන්‍ය ජීවිතයට පැමිණේ.


ඔබ මිනිස් දම්වැල උද්ඝෝෂණයක් ඉල්ලා සිටියා. ඔබ දුර්වල ප්‍රතිඵල ගැන පැමිණිලි කළා. ඔබේ අරගලය සමස්ත ඊළාම් දෙමළ නිජබිම ආවරණය කර නොගනී.


මරුදානමඩම් වල ගහගත්තොත් මුසලි සනීප වෙයිද? කොකුවිල්වල ගහගත්තොත් කල්මුණේ ආසාව ඇවිස්සෙයිද? කුලප්පිඩි යාඥා කරන්න දන ගත්තොත් කොක්කඩිචෝලේ එවුන් ඇවිලෙයිද?


වර්ග කිලෝමීටර් 25,000ක් පළල දෙමළ නිජබිම වර්ග කිලෝමීටර් 5, 6කට සීමා කරන්න හදන්න එපා. භෞමික ආධිපත්‍යය අවුස්සන්න එපා. යාපනේ අය අණ කරනවට අපි කැමති නෑ කියලා වෙන ප්‍රදේශ වල අය කියන තත්ත්වයට ඔබ පත් වෙන්න එපා.


මානව ශිෂ්ටාචාරයේ ඉතිහාසය යනු පැවැත්ම සඳහා අඛණ්ඩ අරගලයක නර්තන රචනයයි. අරගලයෙන් තොර ජීවිතයක් නැත.


අද පවතින පුනරුත්ථාපන වාතාවරණය තුළ, පරාජයෙන් අබලන් වූ විමුක්ති හැඟීම් සහ පරාජයෙන් විනාශ වූ ස්වයංපෝෂිත ආර්ථිකය සෙමෙන් යථා තත්ත්වයට පත්වෙමින් පවතින අතර, සාමාන්‍ය වසා දැමීම ප්‍රතිවිරෝධකයකි. සාමාන්‍ය ජීවිතය අවුල් කිරීම අරගලයක් නොවේ. ආර්ථිකය බිඳ දැමීම අරගලයක් නොවේ.


සාමාන්‍ය වසා දැමීමක් සඳහා කැඳවීමකින් තොරව උපක්‍රම වෙනස් කරන්න. සාමාන්‍ය ජීවිතයට බාධා නොකර සහ ප්‍රකෘතිමත් වීම යටපත් නොකර උපාය මාර්ග තීරණය කරන්න.


පසුගිය වසර හය පුරාවටම, ඊළාම් දෙමළ නිජබිමේ ඓතිහාසික සම්ප්‍රදායන් ප්‍රතිෂ්ඨාපනය කිරීමට සිව්සේනා සටන් වැදුණි. අපි ඊළාම් දෙමළ නිජබිමේ හැමතැනම උද්ඝෝෂණ කරනවා.


ශිව සේනායි සෑම අරගලයක්ම ජයගෙන ඇත. කිසිම අරගලයකින් සාමාන්‍ය ජන ජීවිතය අඩාල වුණේ නැහැ. කිසිදු උද්ඝෝෂණයකදී කිසිවකු අත්අඩංගුවට ගෙන නැත. එහෙම තමයි අපි උපක්‍රම යොදලා සාර්ථක වෙන්නේ.


අපි පරාජිත සමාජයක්. අපි වහල් සමාජයක්. අපි පාඩු ලැබූ සමාජයක්. දේශපාලකයිනි, කැඳ බොන අයගේ ගෙල වැළලාගත් හඬට අවධානය යොමු කරන්න. දේශපාලන වහලුන් වූ ඔවුන්ට තවදුරටත් ආර්ථික වහලුන් ලෙස සිටිය නොහැක.


සාමාන්‍ය කැටි කිරීමේ දැනුම්දීම සිහිපත් කරන්න.


Puratati 26, Friday (13 10 2023)


Press release 


From

Maravanpulau K. Sachithanandan

Siva Senai


Recall Public Shutdown Hartal of 20.10.23


The Kuberas do not know the sufferings of the slum dwellers. 


Many of the politicians who called for a general shutdown are Kuberas. They live in the lap of convenience. They enjoy the dream of luxuries. Many are soaked with assistance by assistants. There are some, who siphon off tax money of citizens.


Today's work is tomorrow's porridge. Today's salary is tomorrow's Diwali. This is the status of 3 Lakh Tamils working as labor in Eelam Tamil homeland.


Small traders are those who make money from Rs 10,000 to Rs 20,000 daily.: They wait for a customer all day long for the thousand or two thousand rupees they collect from this daily turn over. The number of such petty traders is 3 lakh in the Eelam Tamil homeland.


The people who can be happy with the general shutdown are the government employees and public company employees who get their salary in the bank every month. The sense of duty in some of them make hartals repulsive. In the homeland of Eelam Tamils their number is only 3 lakhs.


25,000 - 30,000 in the Eelam Tamil homeland are the big traders. Due to the general shutdown, their losses will be significant. However, they have a lot of financial strength to bear that loss.,


No freight lorries, no buses.  Intercepted trains. Cancelled flights. The ships do not sail. The shutdown will cause severe stress to all the youth of the middle class and below poverty line sector waiting with travel reservations who are looking forward to opportunities of growth. 


Politicians who have called for a general shutdown, don't put the economic burden on the poor 8 lakh family heads of the Eelam Tamil motherland who have lost their means, lost their motivation due to the prolonged war. They are slowly recovering and returning to normal life.


You called for a human chain protest. You complained of poor turn out. Your struggle does not encompass the entire Eelam Tamil homeland.


If you fight in Marudanamadam, will Musali feel better? If you fight in Kokuvil, will the passion in Kalmunai be aroused? If you kneel to pray Kulappiddy, will those at Kokkaddicholai be kindled?


Don't try to confine the 25,000 square kilometer wide Tamil homeland to a 5, 6 square kilometers. Don't stir up territorial domination. Don't put yourself in a situation where people from other regions say that we don't want Jaffanis to dictate.


The history of human civilization is the choreography of a continuous struggle for existance. There is no life without struggle.


In today's rehabilitative climate, in which defeat crippled liberation sentiments and defeat-destroyed self-reliance economy are slowly being restored, a general shutdown is an antidote. Disturbing normal life is not struggle. Breaking the economy is not struggle.


Change tactics without calling for a general shutdown. Determine strategies without disrupting normal life and suppressing recuperation.


For the past six years, Siva Senai has been fighting to restore the historical traditions of the Eelam Tamil homeland. We are conducting protests everywhere in the Eelam Tamil homeland.


The Siva Senai has won every struggle. The normal life of the people was not disrupted in any struggle. No one was arrested in any of the protests. That's how we strategize and we are succeeding.


We are a war-defeated society. We are a society of slaves. We are a society that has suffered losses. Politicians, please pay heed to the strangled voice of the porridge drinkers. Being political slaves, they cannot continue to be economic slaves.


Recall the general freeze notification of 20.10.23.

நிர்மலா சீதாராமன் அவர்களே

ஐப்பசி 16 வியாழக்கிழமை (02 11 2023)


அனுப்புநர்:

இலங்கையில் வாழ்கின்ற 35 இலட்சம் சைவத் தமிழ்ச் சார்பாளர் சிவ சேனை


பெறுநர்:

மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள்

இந்திய நிதி அமைச்சர்.


அன்புடையீர்

வணக்கம்


காவிரிக் கரையில் பிறந்து, யமுனைக் கரையில் கோலோச்சும் தமிழ்த்தாயின் தவ மகளே, தில்லிக்கு அரசி ஆனாலும் எனக்கு மகளே எனத் ஈழத் தமிழ்ச் சைவரின் தாயுமான தமிழ்த் தாய் இறும்பூது எய்துகிறாள். 


சைவத் தமிழ்த் தாயகமான திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் வருகை தருகிற உங்களை நெஞ்சார வரவேற்கிறோம்.


1. 1964, 1974, 1976, 1987 ஆகிய நான்கு இலங்கை இந்திய உடன்பாடுகள்.


இவற்றுள் முதல் மூன்றும் முழுமையாக நிறைவேறிய உடன்பாடுகள். இலங்கைப் பெரும்பான்மைப் புத்த சிங்கள மக்களுக்கு நன்மை என்பதால் இவை மூன்றையும் நிறைவேற்ற இலங்கை முழுமையாக ஒத்துழைத்தது. 


இலங்கைப் பெரும்பான்மைச் சிங்கள புத்த மக்களுக்குத் தீமை என்றும் இலங்கைச் சைவத் தமிழ் மக்களுக்கு நன்மை என்றும் தவறாகக் கருதிய இலங்கை அரசாங்கம் 1987 உடன்பாட்டை நிறைவேற்றவில்லை. 

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணம்.

இலங்கைச் சைவத் தமிழ் மக்களின் மரபு வழித் தாயத்தைத் தனி மாகாணம் ஆக்கி, உடன்பாட்டில் உள்ளவற்றை நிறைவேற்றினால் இலங்கையானது பொருளாதார நெருக்கடியில் இருந்து படிப்படியாக விலகும். இலங்கைப் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க நீங்கள் பொருளாதார உதவி, கடன், நன்கொடை, வழங்குவதை விட்டு, இலங்கை இந்திய 1987 உடன்பாட்டை முழுமையாக நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுத்தால், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இலங்கையை மீட்டெடுக்கலாம்.


2. இந்தியாவில் இருந்து மத மாற்றிகள் இலங்கைக்குப் படையெடுக்கிறார்கள். சிவசேனையினராகிய நாங்கள் அவர்களை வழிமறித்துத் திருப்பி அனுப்புவதற்கு இலங்கை அரசின் உதவிகளைப் பெற்றுள்ளோம். இந்திய மத மாற்றிகளை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். 

அவ்வாறே இந்தியாவில் மதமாற்றும் முயற்சிகளுக்கு இலங்கையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் திருமதி சாவித்திரி சுமந்திரன் இந்தியாவில் 30,000 மதமாற்றும் தொண்டர்களுக்கு நிதி, பயிற்சி ஆதரவு அளித்து வருகிறார். அண்மையில் (Last week of August 2023) மெதடித்த திருச்சபையைச் சேர்ந்த

Mr. Anketell Arulanada  என்ற மதமாற்றி இலங்கையில் இருந்து தில்லிக்கு வந்த பொழுது இந்திய அரசு அவரைத் திருப்பி அனுப்பியது.

மதமாற்றிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பாதீர்கள். இந்தியாவிற்கு வருகின்ற இலங்கை மதமாற்றிகளைத் திருப்பி அனுப்புங்கள்.


3. யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேயன்துறையில் இருந்து சென்னைக்கு வானூர்தியும் நாகப்பட்டினத்துக்குக் கப்பலும் இந்திய அரசின் பெரு முயற்சியால் தமிழ்ச் சைவ மக்களுக்குக் கிடைத்த பெரிய பேறு. இந்திய அரசுக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். இலங்கையில் இருந்து வருகின்ற சைவத்தமிழ் வழிபாட்டுப் பயணிகள், இலங்கை ரூபாயை இந்திய ரூபாயாக மாற்றுவதற்கு (அமெரிக்க டாலருக்குப் போகாமல்) இறங்கு துறைகளில் வங்கி வசதிகள் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.


4. யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் கலாச்சார மண்டபம் பெரிய பேறு. இந்திய அரசுக்குச் சைவத் தமிழ் மக்களின் நெஞ்சார்ந்த நன்றி. அந்த மண்டபம் முறையாகப் பயனற்று இருக்கின்றதே. இந்தியாவின் பாரதீய வித்தியா பவன் அமைப்பு அந்த மண்டபத்தைப் பொறுப்பேற்று கலாச்சாரப் பண்பாட்டுப் பயிற்சி வகுப்புகளை (இலண்டனில் நடத்துவது போல்) யாழ்ப்பாணத்திலும் நடத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தங்களது சைவத்தமிழ்த் தாயக வரவு மகிழ்ச்சியானதாக இனிமையானதாக அமைய வாழ்த்தி அமைகிறோம். 


நன்றி 


அன்புடன் 


இலங்கைச் சைவத் தமிழர்கள் சார்பில் 

சிவ சேனை

நந்திக் கொடி குடியரசுத் தலைவர்

 සිංහල, හින්දි, ඉංග්‍රීසි පරිවර්තනය (google) පහතින්


सिंहली, हिंदी, अंग्रेजी अनुवाद (गूगल) नीचे


ஐப்பசி 25 சனிக்கிழமை (11.11.2023)


நாளை தீபாவளி நாள். இந்துக்களின் விழா நாள். 


இந்துக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் ஒளி சேரும் நாள்.


இந்துக்களின் கொடி நந்திக்கொடி. 


விடுதலை பெற்ற இலங்கையின் வரலாற்று நாள்.


கடந்த ஆண்டு இதே தீபாவளி நாள். குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நந்திக் கொடிகள்  பறந்தன.


குடியரசுத் தலைவர் மேதகு இரணில் அவர்களுக்கு இந்துக்கள் நன்றி சொன்னார்கள்.


நல்லூரில் அரசு வளாகத்தில் நந்திக்கொடி 400 ஆண்டுகளுக்கு முன்பு பறந்தது.


அதே நந்திக்கொடி கடந்த ஆண்டு தீபாவளி விழா நாளிலும் இந்த ஆண்டு விழா தீபாவளி நாளிலும் கொழும்பில் இலங்கை குடியரசுத் தலைவர் வளாகத்தில், அரசின் ஆட்சி வளாகத்தில் பறக்கிறது.


இந்துக்களுக்கு இலங்கை அரசமைப்பில் முன்னுரிமை கொடுக்க, சிவ சேனை கோருகிறோம். 


அக் கோரிக்கையை ஏற்பதற்கான கட்டியம் கூறுகிறார் குடியரசுத் தலைவர். 


தன் அலுவலகத்தில் நந்திக்கொடியை ஏற்றினார்.


இலங்கையில் ஏறத்தாழ 30 லட்சம் இந்துக்கள் வாழ்கிறோம். 


இலங்கை அரசுக்கும் குடியரசுத் தலைவர் மேதகு இரணில் விக்ரமசிங்கர் அவர்களுக்கும் நன்றி சொல்கிறோம். 


இலங்கை இந்துக்கள் நன்றி சொல்கிறோம்.


අයිප්පසි 25, සෙනසුරාදා (2023.11.11)


සිට

මරවන්පුලවු කේ.සචිතානන්දන්

ශිව සේනායි


මාධ්‍ය වෙනුවෙන්


හෙට ඉරිදා දීපවාලි දිනයයි. හින්දු උත්සව දිනය.


සියලුම හින්දු බැතිමතුන්ගේ හදවත් හා නිවෙස්වලට ආලෝකය ඇතුළු වන දිනයක්.


නන්දි හින්දුන්ගේ කොඩිය.


පශ්චාත් නිදහස් ශ්‍රී ලංකාවේ ඓතිහාසික දිනය.


එය පසුගිය වසරේ දීපවාලි දිනයේම විය. ජනාධිපති කාර්යාලයේ නන්දි කොඩි ලෙළදුනි.


හින්දු බැතිමතුන් අතිගරු රනිල් වික්‍රමසිංහ ජනාධිපතිතුමාට ස්තුතිය පුද කළහ


වසර 400 කට පෙර නල්ලූර්හි රජයේ ආසනය වූ රාජකීය මණ්ඩපයේ නන්දි ධජය ලෙළදුණි.


එම නන්දි කොඩිය පසුගිය වසරේ දීපවාලි උත්සවයේ දිනයේත් මෙවර දීපවාලි දිනයේ දීත් කොළඹ රජයේ ආසනය වන ශ්‍රී ලංකා ජනාධිපති මන්දිරයේ ලෙළදුණි.


ශ්‍රී ලංකා ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ හින්දු භක්තිකයන්ට ප්‍රමුඛත්වය දෙන්න, ශිව සේනායි හි අපි සෑම විටම ශ්‍රී ලංකාවේ හින්දු ජනතාව වෙනුවෙන් ඉල්ලා සිටිමු.


අපේ ඉල්ලීමට සවන් දෙන බවට ජනාධිපතිතුමා පොරොන්දු වෙනවා. පෙරගමන්කරුවෙකු ලෙස ඔහු සිය කාර්යාලයේ නන්දි කොඩිය ලෙළදෙයි.


ශ්‍රී ලංකාවේ හින්දු ජාතිකයන් ලක්ෂ 30ක් පමණ ජීවත් වෙති.


අපි ශ්‍රී ලංකා රජයටත්, අතිගරු රනිල් වික්‍රමසිංහ ජනාධිපතිතුමාටත් ස්තුතිවන්ත වෙනවා.


ශ්‍රී ලාංකීය හින්දු භක්තිකයෝ ස්තුති කරති.


अप्पसी 25, शनिवार (11.11.2023)


से

मरवनपुलौ के. सचितानन्दन

शिव सेनाई


मीडिया के लिए


कल रविवार को दिवाली का दिन है. हिंदू त्यौहार का दिन.


एक ऐसा दिन जब सभी हिंदुओं के दिलों और घरों में रोशनी प्रवेश करती है।


नंदी हिंदुओं का ध्वज है।


स्वतंत्र श्रीलंका में ऐतिहासिक दिन।


पिछले साल भी यही दिवाली का दिन था। राष्ट्रपति कार्यालय पर नंदी झंडे फहराए गए।


हिंदुओं ने राष्ट्रपति महामहिम रानिल विक्रमसिंघे को धन्यवाद दिया


नल्लूर में सरकार की सीट, रॉयल परिसर में 400 साल पहले नंदी ध्वज फहराया गया था।


वही नंदी ध्वज पिछले साल के दिवाली उत्सव के दिन और इस साल की दिवाली के दिन कोलंबो में सरकार की सीट, श्रीलंकाई राष्ट्रपति के परिसर में फहराया गया।


श्रीलंकाई संविधान में हिंदुओं को प्राथमिकता दें, हम शिव सेनाई हमेशा श्रीलंका में हिंदुओं की ओर से पूछते हैं।


राष्ट्रपति ने हमारा अनुरोध सुनने का वादा किया है। एक अग्रदूत के रूप में वह अपने कार्यालय में नंदी ध्वज फहराते हैं।


श्रीलंका में करीब 30 लाख हिंदू रहते हैं.


हम श्रीलंका सरकार और राष्ट्रपति महामहिम रानिल विक्रमसिंघे को धन्यवाद देते हैं।


श्रीलंकाई हिंदू धन्यवाद कहते हैं।


Aipasi 25 Saturday (11 11 2023)


From

Maravanpulau K. Sachithanandan


For the media


Tomorrow Sunday is Diwali day. Hindu festival day.


A day when light enters the hearts and homes of all Hindus.


Nandi is the flag of Hindus.


The historic day in post independent Sri Lanka.


It was the same Diwali day last year. Nandi flags flew at the President's office.


Hindus thanked President His Excellency Ranil Wickremasinghe 


Nandi flag flew 400 years ago at the Royal campus, the seat of government in Nallur.


The same Nandi flag flew on the day of last year's Diwali festival and on this year's Diwali day at the Sri Lankan President's compound, the seat of government  in Colombo.


Place priority to Hindus in the Sri Lankan constitution, we in Siva Senai always ask on behalf the Hindus in Sri Lanka.


The President promises to listen to our request. As a forerunner he flies the Nandhi flag in his office.


About 30 lakh Hindus live in Sri Lanka.


We thank the Government of Sri Lanka and the President His Excellency Ranil Wickramasinge.


Sri Lankan Hindus say thank you.

புத்த முகமதிய கிருத்துவ தாக்குதல்கள்

 கார்த்திகை 01 வெள்ளிக்கிழமை (17 11 2023)


இலங்கையில் சட்டம் ஒழுங்கு சைவ சமயத்தவருக்கு எதிரானதா?


புத்த முகமதிய கிருத்துவ தாக்குதல்கள் சைவர்கள் மீது அடாவடியாகத் தொடர்கின்றன. சட்டம் காக்கத் தவறியதே!


மயிலத்தமடுவில் சைவத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டம். புத்த பிக்கு ஒருவர் சைவத் தமிழர்களை வெட்டுவோம் என்கிறார். 


அவ்வாறு சொல்பவரைக் காவல்துறையினர் வேடிக்கை பார்க்கும் காணொளிக் காட்சிகள் சைவர்களின் நெஞ்சைப் புண்ணாக்கின. சட்டம் செத்து விட்டதா? எனச் சைவர்கள் கேட்கிறார்கள்.


அக்கரைப்பற்றில் முகமதிய மௌலவி ஒருவர் அருள்மிகு நடராசப் பெருமானின் நடனத்தைக் கொச்சையாக்கிப் பேசுகிறார். சைவ மக்கள் குமுறுகிறார்கள். காவல்துறை கைகட்டி வாய் பொத்தி நிற்கிறது.


சைவக் கடவுள்களில் தோற்றத்தைக் கொச்சையாகப் பேசிய கிறித்தவப் போதகர் செரோம் பர்ணாந்து நாட்டுக்குள் வந்தால் தளையிடாதீர்கள் என முறையீட்டு நீதிமன்றமே கூறியுள்ளது.


புத்தபிக்குவும் முகமதிய மௌலவியும் கிறித்தவப் பாதிரியாரும் சைவர்களை இகழ்கிறார்கள். சைவ வாழ்வியலைப் பழிக்கிறார்கள். வாழ்வுரிமை பறிக்கிறார்கள். மிரட்டுகிறார்கள்.


2007இன் ICCPR சட்டம் மூன்றாவது பிரிவின் முதலாவது இரண்டாவது மூன்றாவது விதிகள் முறையீட்டு நீதிமன்றத்துக்கோ காவல்துறைக்கோ தெரியாதா?


பிணையில் வெளிவர முடியாத பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனைக்குரிய சட்டங்கள் அவை.


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 2(1)h பிரிவின் விதிகளைக் குற்றவியல் நீதிமன்றமோ காவல்துறையோ படிக்கவில்லையா?


குற்றவியல் சட்டம் penal code sections 290, 291, 292 விதிகளைக் காவல்துறையோ நீதிமன்றமோ படிக்கவில்லையா?


இலங்கையில் சைவ சமயத்தவரை அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என்ற கண்ணோட்டம் அரசின் கொள்கையா? எனவே காவல்துறையும் நீதிமன்றமும் கண்மூடிக் கொண்டிருக்கிறார்களா?


புத்த பிக்குவின் கொச்சைப் பேச்சு 

முகமது மௌலவியின் கொச்சைப் பேச்சு 

கிறித்தவப் போதகரின் கொச்சைப் பேச்சு

மூன்றும் இலங்கையின் நான்காவது சமயமாகிய சைவ சமயத்தை நோக்கியன அல்லவா.


ஆங்கிலேயர் விட்டகன்றபோது மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினராகச் சைவ சமயத்தனர் இலங்கையில் இருந்தோம்.


இலங்கை நிலப்பரப்பில் மூன்று ஒரு பங்கு நிலம் சைவர்களிடம் இருந்தது.


சைவ மக்கள் தொகை 30% ஆக இருந்தது 13% ஆகக் குறைந்தது. சைவ மக்களின் மரபு வழி நிலப்பரப்பு 30% ஆக இருந்தது 15% ஆகக் குறைந்துள்ளது.


எஞ்சிய சைவர்களையும் அழித்து ஒழித்து அவர்கள் நிலங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற மேலாதிக்க உணர்வுடன் புத்தரும் முகமதியரும் கிறித்தவர்களும் கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடந்து வருகிறார்கள். 


சைவர்களே விழித்துக் கொள்ளுங்கள்.

குஷ்பு விடுதலைப்புலிகள்

 19.11.2023

திருமதி குஷ்புவும் விடுதலைப் புலிகளும்


சட்டைப் பையில் மருந்துத் துண்டை வைத்திருந்தாலே கைது செய்கின்ற கொடுமையான அரசு என்றார் திரு. பழ. கருப்பையா அவர்கள்.


மருந்துப் பட்டியலை வைத்திருந்தோம். 

விடுதலைப் புலிகளுக்காக அனுப்ப முயன்றோம்.

என்ற குற்றச்சாட்டில் சிறையில் என்னை இட்டபொழுது திரு பழ கருப்பையா அந்த அறிக்கையை வெளியிட்டார். 


அப்பொழுது கலைஞர் கருணாநிதி முதலமைச்சர்.  என்னோடு மிக அன்பாகப் பழகியவர். எனினும் என்னைச் சிறையிட்டார்.


இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் பலரை மனத்தளவில் பாதித்தது. 


மனம் குமுறிய திரைப்பட இயக்குனர் புகழேந்தி இந்த நிகழ்ச்சியைத் தளமாகக் கொண்டு காற்றுக்கென்ன வேலி திரைப்படத்தை இயக்கித் தயாரித்தார்.


அந்தப் படத்தைத் தணிக்கைக் குழு தடுத்தது. திருத்தம் செய்து மீண்டும் வெளியிட அரசுத் தடை. 


தெருவில் பல போராட்டங்கள். நடுவர் மன்றத்தில் பல வழக்குகள். விடுதலைப் புலிகள் சார்பானது என்பதால் இயக்குனர் புகழேந்தி இத்தகைய இன்னல்களைத் தொடர்ந்து சந்தித்தார்.


ஒருவாறு படத்தை வெளியிட்டார். ஆனாலும் அவருக்குப் பொருட் பேரிழப்பு.


அப் படத்தில் குஷ்புவே கதாநாயகி.

விடுதலைப்புலிகள் சார்பான படம் எனத் தெரிந்திருந்தும் அதில் நடித்தார். 


இயக்குனர் புகழேந்தியைப் பேட்டிகண்ட திரு ஐங்கரநேசன்  (பின்னர் வடமாகாண அமைச்சர்) இதை முழுப் பக்கக் கட்டுரையாக அன்றைய இலங்கை நாளிதழ் ஒன்றில் வெளியிட்டிருந்தார். 


"சச்சிதானந்தனின் கைது மனத்தளவில் என்னைப் பாதித்தது. அதற்கேற்ற திரைக்கதையை எழுதினேன் குஷ்புவை அணுகினேன் அவரிடம் திரைக்கதையைச் சொன்னேன் எவ்வித தயக்கம் இன்றி உடனே ஒப்புக் கொண்டார்" இயக்குனர் புகழேந்தி சொன்னதாக இந்தச் செய்தியை ஐங்கரநேசன் இலங்கை நாழிதளில் எழுதி இருந்தார்.


அதன்பின்னர் காற்றுக்கென்ன வேலி திரைப்படத்தைக் கிளிநொச்சியார் காட்டாத இடமேயில்லை. இயக்குனர் புகழேந்தியையும் கிளிநொச்சிக்கு வரவழைத்துப் பாராட்டினார்கள்


இதற்காகக் குஷ்புவைப் பாராட்ட வேண்டாமா? நன்றிக் கடன் இல்லாதவர்களா?

தென்னக்கோன் கருதினால்

 සිංහල, ඉංග්‍රීසි අනුවාද සඳහා පහළට අනුචලනය කරන්න

Scroll down for Sinhala, English versions


கார்த்திகை 14 வியாழக்கிழமை (30 11 2023)

கருதினால் மல்கம் இரஞ்சித் அரசியல் தலைவரா? ஆன்மீகத் தலைவரா?


2023 தை மாதம். நிலாந்தா செயவர்தனா காவல்துறையின் உச்சப் பதவிக்குப் பொருத்தமானவர் அல்லர். கூறியவர் கருதினால் மல்கம் இரஞ்சித்தர்.


பத்து மாதங்களின் பின் அதே கருதினால் அறிக்கை.  தேசபந்து தென்னக்கோன் காவல்துறையின் உச்சப் பதவிக்கு பொருத்தம் அற்றவர்.


கோயிலுக்குள் குருக்கள். தேவாலயத்துக்குள் போதகர். மசூதிக்குள் மௌலவி. பன்சலைக்குள் பிக்கு.


ஆன்ம ஈடேற்ற நோக்கம் இவர்களுக்கு.


அரசியல் நோக்கம் அறவே இவர்களுக்கு இல்லை.


யாரை எந்தப் பதவிக்கு அமர்த்தலாம்? அரசியலாளின் ஆட்சியாளர்கள் பணி. ஆன்மீகக் குருவின் பணி அன்று.


இனப்படு கொலை என்றனர். அனைத்து உலக நீதி கோரினர். தமிழரிடையே வாழ்ந்த வாழ்கின்ற கத்தோலிக்க போதகர் குருமார் ஆயர் யாவரும்.


வாயை மூடிக் கொண்டு இருந்தவர். இனப் படுகொலையாளருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர். எனவே தமிழருக்கு தனிக் கத்தோலிக்க மாவட்டம் வேண்டும். தனிக் கருதினால் வேண்டும். தமிழ் ஆயர் இணைந்து கேட்கிறார்கள்.


தென்னக்கோன் அழகான தமிழ்ப் பெயர். சமஸ்கிருதம், பாளி, பிராகிருதம், ஆங்கிலம் என எதுவும் கலக்காத தனித் தமிழ்ப் பெயர்.


காவல்துறைப் பதவிகளில் ஒவ்வொரு ஏணிப்படியாக ஏறியவர் தென்னக்கோன்.


உச்ச பதவிக்கு தகுதியானவர் என்பதே அரசு முடிவு. ஆட்சியரின் தெளிவு. குடியரசுத் தலைவரின் முடிந்த முடிவு.


சைவக் குருக்களோ கிறித்தவப் போதகரோ முகமதிய மௌலவியோ புத்தபிக்குவோ ஆன்மீக வழிகாட்டிகள். அரசியல் முடிவு எடுப்பவர் அல்ல.


அரசியலில் தலையிடாமல் வாயை மூடிக் கொண்டிருப்பாயாக கருதினால் மல்கம் இரஞ்சித்தே. போர்த்துக்கேயக் கத்தோலிக்க மேலதிக்கத்தை மீண்டும் நுழைக்காதே



කාර්තිගා 14 බ්‍රහස්පතින්දා (30 11 2023)


මාධ්‍ය වෙනුවෙන්


මරවන්පුලවු කේ.සචිතානන්දන්

ශිව සේනායි


කාදිනල්තුමනි, කට වහගෙන ඉන්න.


මැල්කම් රංජිත් දේශපාලන නායකයෙක්ද? අධ්‍යාත්මික නායකයෙක්ද?


2023 ජනවාරි. නිලන්ත ජයවර්ධන පොලිසියේ ඉහළ තනතුරට සුදුසු නැත. මැල්කම් කාදිනල්තුමා එසේ පැවසීය.


දැන් මාස දහයකට පසු. දේශබන්ධු තෙන්නක්කෝන් ඉහළ පොලිස් තනතුරට නුසුදුසු බව කාදිනල්තුමා නිර්ලජ්ජිත ලෙස පුනරුච්චාරණය කරයි.


ගුරු ඉන්නේ පන්සල ඇතුලේ. පාස්ටර් ඉන්නේ පල්ලිය ඇතුලේ. මවුලවි ඉන්නේ පල්ලිය ඇතුලේ. හාමුදුරුවෝ බන්සලේ ඇතුලේ.


ඔවුන් සඳහා, ආගමික නමස්කාර ස්ථාන තුළ ඔවුන්ගේ පැමිණීමේ අරමුණ ආත්මය මිදීමයි.


ඔවුන්ට දේශපාලන අරමුණු නැහැ.


කුමන තනතුර සඳහා පත් කළ හැකිද? එය පාලනය පිළිබඳ කාරණයකි. අධ්‍යාත්මික ගුරුවරුන්ගේ වැඩ නොවේ.


දෙමළ ජනතාව අතර ජීවත් වූ කතෝලික පූජකවරයා එය හැඳින්වූයේ ජන සංහාරය ලෙසිනි. සියල්ලෝම ජාත්‍යන්තර යුක්තිය ඉල්ලා සිටියහ.


මැල්කොම් කාදිනල්තුමා කට පියාගෙන සිටියේය. ඔහු, දෙමළ කතෝලිකයන් පැවසුවේ ජන සංහාරයට සහාය දුන් බවයි. එබැවින් දෙමළ සිනොඩ් කාදිනල්වරයෙකුගේ ප්‍රධානත්වයෙන් දෙමළ ජනයාට වෙනම කතෝලික දිස්ත්‍රික්කයක් අවශ්‍ය විය.


තෙන්නකෝන් යනු ලස්සන දෙමළ නමකි. සංස්කෘත, පාලි, ප්‍රාකෘත හෝ ඉංග්‍රීසි මිශ්‍රණයක් නොමැති අද්විතීය දෙමළ නමකි.


තෙන්නකෝන් පොලිස් නිලයේ සෑම පියවරක්ම තරණය කර ඇත.


ඔහු ඉහළ තනතුරට සුදුසු බව රජය තීරණය කර ඇත. තීරණ ගන්නන්ට පැහැදිලි බවක් තිබුණා. අන්තිමට තීන්දුව දුන්නේ ජනාධිපතිතුමා.


සෛව ගුරුවරුන් හෝ කිතුනු දේශකයන් හෝ මොහොමඩ් මවුලවිවරු හෝ බුද්ධ භික්ෂුන් වහන්සේලා ආධ්‍යාත්මික මාර්ගෝපදේශකයෝ වෙති. දේශපාලන තීරණ ගන්නන් නොවේ.


කාදිනල්තුමනි, ඔබ අධ්‍යාත්මික මඟ පෙන්වීමට සීමා වන්න. දේශපාලනයට මැදිහත් නොවී කට වහගෙන ඉන්න. පෘතුගීසීන් බොහෝ කලකට පෙර වෙරළ හැර ගියහ. ලන්දේසීන් ඔබේ ස්ථානය තැබුවා. පෘතුගීසි යටත්විජිතවාදය නැවත පැටවීමට උත්සාහ නොකරන්න


Kartiga 14 Thursday (30 11 2023)


For the media


Maravanpulau K. Sachithanandan

Siva senai


Cardinal, keep your mouth shut.


Is Malcolm Ranjit a political leader? A spiritual leader?


2023 January. Nilantha Jayawardhana is not fit for the top post in police. Cardinal Malcolm said so.


Now after ten months. Deshabandhu Tennakkon is unfit for the top police post, Cardinal shamelessly repeats.


Guru is inside the temple. Pastor is inside the church. Maulavi is inside the mosque. Bhikkhu is inside Bansala.


For them, the purpose of their presence inside places religious worship is soul redemption.


They have no political motives.


Who can be appointed for which position? It is a matter of governance. Not the work of the spiritual masters.


Catholic priest who lived among the Tamils called it genocide. All demanded international justice.


Cardinal Malcom kept his mouth shut. He, the Tamil Catholics said supported genocide. So Tamils needed a separate Catholic district headed by a Tamil Synod Cardinal. 


Tennakon is a beautiful Tamil name. A unique Tamil name with no mixture of Sanskrit, Pali, Prakrit or English.


Tennakon has climbed every step of the police ranks.


The government has decided that he is fit for the top post. Decision makers had clarity. Finally the decision was by the President.


Saiva Gurus or Christian preachers or Mohammedan Maulavis or Buddha Bikkus are spiritual guides. Not political decision makers.


Cardinal, confine yourself to spiritual guidance. Keep your mouth shut without meddling in politics. Portuguese left the shores very long ago. Dutch put your place. Don't try to re-impose Portuguese colonialism.