16.12.2012
சச்சிதானந்தம் அய்யா அவர்களுக்கு
அன்பு வணக்கங்கள் .
களப்பிரர் காலம் பற்றிய எனது கருத்தை வழிமொழிந்து தாங்கள் அனுப்பியிருந்த கடிதம் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி .
என்னை பொறுத்தவரை தினமணி ஆசிரியர் பதவி என்பது இதுபோன்ற நிஜங்களை பதிவு செய்யவும் , சரித்திர தவறுகளை வெளிச்சம்போட்டு காட்டவும் கிடைத்த வாய்ப்பு என்றுதான் கருதுகிறேன் . தங்களைப்போன்ற அறிஞர்களும், அனுபவசாலிகளும், சமுதாய சிந்தனையாளர்களும் எனது பேச்சையும் எழுத்தையும் வழிமொழியும்போது நான் சரியான பாதையில்தான் பயணிக்கிறேன் என்கிற துணிவு ஏற்படுகிறது.
நலம்தானே ? சந்தித்து நீண்ட நாள்களாகிவிட்டன . ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்த கச்சதீவு பற்றிய தங்கள் விளக்கங்கள் பசுமரத்தணியாக என் நினைவில் இருக்கிறது .
தமிழ்மணிக்கு சைவம் சார்ந்த கட்டுரைகளையும் இலங்கை படைப்பிலக்கியவாதிகள் பற்றிய கட்டுரைகளையும் அனுப்பித்தாருங்களேன்.
வணக்கத்துடன் அன்பன் வைத்தியநாதன் .

No comments:
Post a Comment