மறவன்புலவில் நான் 04-11-2012
வீசு மென்காற்றும்
காலை இளவெயிலும்
இரவுத் தூறலும்
மின்னலும் இடியும்
மழைபெய்து வயல்களில்
கிளம்பிய வண்டல் வாசமும்
மழைபெய்து ஓய்ந்த நிலத்தில்
புதிதாய் அமைத்த
ஒற்றையடிப் பாதையும்
பசுக்கள் மனிதருடன்
பேசும் மொழியும்
என்னை அன்று பள்ளிக்கு
அழைத்துச் சென்ற
விரல்கள் இன்று சுருங்கியதையும்
என்னை அன்று தோளில் தூக்கியவர்
கால்கள் வீங்கியவாறையும்
வரலாற்றின் பதிவாக முதன்முதலாக
ஊருக்குள் வந்த மின்சாரத்தையும்
1941இல் ஆங்லேயக் காப்பிலிப் படை
அமைத்த நெடுந்தெருவுக்குத்
2010இல் முதன்முதல் அமைத்த
தார்க் கம்பள விரிப்பையும்
பார்த்தவாறும் கேட்டவாறும்
முகர்ந்தவாறும் சுவைத்தவாறும்
உணர்ந்தவாறும்
ஐம்பொறிகளும் ஐம்புலனுக்குத் தெரிவிக்கும்
செய்திகளால் உள்ளம் பூரிக்க
அருள்மிகு வள்ளக்குளப் பிள்ளையாருக்கு
நாளை முழுநிலா நாள் பொங்கலிட
மறவன்புலவில் உள்ளேன் ஐயா!!
வீசு மென்காற்றும்
காலை இளவெயிலும்
இரவுத் தூறலும்
மின்னலும் இடியும்
மழைபெய்து வயல்களில்
கிளம்பிய வண்டல் வாசமும்
மழைபெய்து ஓய்ந்த நிலத்தில்
புதிதாய் அமைத்த
ஒற்றையடிப் பாதையும்
பசுக்கள் மனிதருடன்
பேசும் மொழியும்
என்னை அன்று பள்ளிக்கு
அழைத்துச் சென்ற
விரல்கள் இன்று சுருங்கியதையும்
என்னை அன்று தோளில் தூக்கியவர்
கால்கள் வீங்கியவாறையும்
வரலாற்றின் பதிவாக முதன்முதலாக
ஊருக்குள் வந்த மின்சாரத்தையும்
1941இல் ஆங்லேயக் காப்பிலிப் படை
அமைத்த நெடுந்தெருவுக்குத்
2010இல் முதன்முதல் அமைத்த
தார்க் கம்பள விரிப்பையும்
பார்த்தவாறும் கேட்டவாறும்
முகர்ந்தவாறும் சுவைத்தவாறும்
உணர்ந்தவாறும்
ஐம்பொறிகளும் ஐம்புலனுக்குத் தெரிவிக்கும்
செய்திகளால் உள்ளம் பூரிக்க
அருள்மிகு வள்ளக்குளப் பிள்ளையாருக்கு
நாளை முழுநிலா நாள் பொங்கலிட
மறவன்புலவில் உள்ளேன் ஐயா!!
No comments:
Post a Comment