Wednesday, February 24, 2016

பெயரர்

 02.03.2013

பெயரன் அரன்
கொண்டஇக் கோலமென்ன கோஃப் துறைமுகம்
கண்டஇக் காட்சியென்ன காளையே அரனே
நண்டுலா நெடுவயல் மறவன்புலவு வாராய்
வண்டெனப் பறந்து வானில் வட்டமிடலாமே.

பெயர்த்தி அபிநயா
கெண்டைக் கண்களாலே கேள்விக் கணைகளாலே
வெண்டை விரல்களாலே விரியும் வியப்பினாலே
கொண்டைக் குழல்களாலே குவியும் இதழ்களாலே
சண்டைக் குணமில்லாத சாந்தமாம் அபிநயாவே!!

28-04-2014
பெயரத்தி மைனா
இடந்தான் இருளேபகலாகி நடுங்கும் வடதுருவக் குளிரில்
நடந்தாள் மைனாவே நல்வாழ்வின் முதலடியாம் நடந்துவந்தால்
மடம்தான் மறவன்புலவில் இருக்கிறதே மைனாவுக்கு மணல்பரப்பாய்க்
கடந்தேழு கடல்கடந்து நெடுநடையாய் என்னிடம் வருகவருகவே.
மைனாவின்  கவிதை  அருமையிலும்  அருமை ......
படிக்கும் போது  என் மேனி சிலிர்த்த்தது. 
உங்களைப் போன்ற அம்மப்பா  கிடைத்தமைக்கு  பெருமைப் பட  வேண்டும்.
ஊர்மிளா 28-04-2014
பெயர்த்தி அபிநயா 06-11-2014
மயக்கும் மல்லிகை இதுவோ இதுவோ என்னை
இயக்கும் இனிமை இதுவோ இதுவோ நான்
வியக்கும் வியப்பு இதுவோ இதுவோ நன்மை
பயக்கும் பெயர்த்தி அபிநயாவோ அறியேன் அறியேன்

Not long ago if you count from the big bang
Very long ago if you count from when Kuyil sang
From a tiny mitochondrial formation in primordial twilight
To evolve through mutant duplications courtsey energised sunlight
Tirelessly carrying these VINAI or DNA few active many dumped in heaps
Fleshly from protozoa to humans living and dying in leaps
All VINAI I inherited to add more in this blessed bliss birth
Abinaya carries to pass this genetic bond shared by both

"......வினையின் வந்தது வினைக்கு விளைவாயது
மூபுவிளி உடையது தீப்பிணி இருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
புற்றிடம் அரவின் செற்றச் சேர்க்கை
அவலம் கவலை கையறு அலங்கல்

மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து...... "
(200CE யில் சாத்தனாரின் மணிமேகலை 4:113-120)
பெயர்த்தி அபிநயா 27.11.2014 நண்பகல் 

அபிநயா வந்தார்.
அருள்மிகு வள்ளக்குளப் பிள்ளையார் திருக்கோயில் 
திருப்பணிக்கு நன்கொடை தந்தார்.
என் தந்தையார் நினைவில் கலந்தார்.
என் தந்தையாரின் நினைவுகளை நான் மீட்க 
ஆர்வத்துடன் கேட்டார்.
கண்களில் ஆர்வம் மீநிற்க, 
காதுகளைக் கூர்மையாக்கிய 
காட்சிகளைக் காண்கிறீர்கள்.
இடை இடை வினவி விளக்கம் கேட்டார்.
என் தந்தையார் தொடர்பான 
என் உறவின் மேன்மையே மேன்மை என 
இயல்பூக்கமாய் உவந்தேற்றினார்.
வியந்த பிஞ்ஞகன் படமாக்கினார்.

No comments: