28-09-2012
வீட்டுக்கு ஒரு திருமுறைப் பாடல் வல்லவர் என்ற நோக்குடன் மலேசிய இந்து சங்கத் தலைவர் திரு. மோகன் சண் அவர்கள் என்னிடம் கூற, அத்திட்டத்தை முன்னெடுக்க சரவாக்கு மாநிலம் + சபா மாநிலம் வந்துள்ளேன். தேவாரம் தளத்தைப் பரப்ப வந்துள்ளேன். இரு வாரங்கள் தங்குகிறேன்.
74,000 சகிமீ. பரப்பளவு கொண்ட சபா மாநிலத்தில் 32 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
கிழக்கே சுவாலிசிக் கடல். வடக்கே தென்சீனக் கடல். மேற்கே புருணை நாடு. தெற்கே சரவாக்கு மாநிலமும் சுவாலிசிக் கடலும் இந்தோனீசியாவும். கோட்டை கோனபாலு தலைநகர்.
125,000 சகிமீ. பரப்பளவு கொண்ட சரவாக்கு மாநிலத்தில் 25 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
கிழக்கே புருணை நாடு. வடக்கே தென்சீனக் கடல். மேற்கே தாய்லாந்துக் குடா. தெற்கே இந்தோனீசியா. குச்சிங்கு தலைநகர்.
தமிழர்கள் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். தோராயக் கணக்காகச் சரவாக்கு மாநிலத்தில் 5,000 தமிழர். சபா மாநிலத்தில் 16,000 தமிழர்.
இரு மாநிலங்களிலும் திருக்கோயில்கள் உள. அவற்றைச் சார்ந்து மக்கள் வழிபாடுசெய்வர்.
திருமுறைகளைப் பயில்வோர் குறைவு. தேவாரப் பாடசாலைகள் உள. அவையே தமிழ்ப் பள்ளிகள். தமிழ்க் குழந்தைகளுக்காகத் தமிழ்ப் பாடசாலைகள் தனியாக இல்லை.
சீன முகங்கள், தமிழ் உள்ளங்கள், இபான் முகங்கள், தமிழ் வழமைகள். தமிழர் தத்தெடுத்து வளர்த்த குழந்தைகள், தமிழரைத் திருமணம் செய்து பிறந்த குழந்தைகள் தமிழராகவே வளர்கின்றன.
தொடர்ந்து செய்திகள் தருவேன்.
நன்றி
என் பயணங்கள் பற்றிப்
காரைக்குடி, கம்பன் கழகம், பழ பழநியப்பன் அனுப்பிய குறிப்பு
ஐயா உங்களிடம் அந்த ஆண்டவன் கொடுத்துள்ள உடலும் உள்ளமும் மிக மிக உயர்ந்தவையாயிருக்க வேண்டும்.
கொடுத்து வைத்தவர் நீங்கள் மட்டுமன்று; நாங்களும் தான்; தமிழுக்கு ஏதய்யா வயதும் ஓய்வும் ?
என்னை இவள் காலம் என யாரும் கணிக்க ஒண்னா அன்னையாம் கன்னித் தமிழுக்கு நீங்கள் நீள நினைந்து நித்தலுமே அமுதூட்டும் பிஞ்ஞகப் பிதாவன்றோ?
உங்கள் தமிழ்த் திருமுறைத் தொண்டிற்குமுன் தொழுது நிற்கக்கூட உந்துதல் அற்ற உண்டைக்குலத்தோர் நாங்கள் வேறென் செய்ய வல்லோம்?
உங்களை உள்ளத்தூமலர் கொண்டு தூவித் தொழும் உண்டைக் குலத்தோன்
கம்பன் அடிசூடி. 14-8-2012
என் பயணங்கள் பற்றி
Natarajan Balasubramaniam குறிப்பு
ஆனால் தமிழ்ப் பதாகை யுயர்த்தி
உலக வலம் புரியும் தங்கள் திருவினை வாய்ப்பு கண்டு,
திடவுடலுடன் பயணிக்கும் வாய்ப்பு அருகி நிற்கும் என் நெஞ்சில் ஒரு ...
ஒரு பொறாமையே துளிர்க்கிறதே!
28-09-2012 07:34 PM

No comments:
Post a Comment