1.0 அறிமுகம்:
1.1 ஒலி அணுக்களின் திரட்சியே மொழி. மொழியின் முதல் தொழில் தொடர்பு. சொல்லும் எழுத்தும் மொழியின் தொடர்புக் கருவிகள். மொழிதலின் வரிவடிவம் எழுத்து. தமிழ் மொழியின் வரிவடிவத் தொகுப்பே தமிழ் நெடுங்கணக்கு (படம் 1). உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18, உயிர்மெய் எழுத்துகள் 216, ஆய்த எழுத்து 1, எல்லாமாகத் தமிழ் எழுத்துகள் 247.
படம்1: 247 எழுத்துகளைக் கொண்ட தமிழ் நெடுங்கணக்கு.
1.2 பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துகள், பானை ஓடுகளில், மட்பாண்டங்களில், பனை ஓலை ஏடுகளில் எழுத்தாணியால் எழுதப்பட்டு வந்துள்ளன. செப்புத் தகடுகளிலும் கல்லிலும் பொறிக்கப்பட்டதும் உண்டு. காலங்கட்கூடாகத் தமிழ் வரி வடிவங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. (படம் 2) 200 ஆண்டுகட்கு முன்புவரை ஏடும் எழுத்தாணியும் தான் தமிழை எழுதப் பயன்பட்டன. கடதாசியும், பேனாவும், பென்சிலும், அச்சும், எந்திரமும், மையும் புழக்கத்துக்கு வர, ஏடும் எழுத்தாணியும் படிப்படியாகப் புழக்கத்தில் இருந்து மறைந்துள்ளன.
2.0 புதிய சூழ்நிலை:
2.1 தமிழ் எழுத்துக்களை எழுதுவோர் படிப்போர் தொகையும் கடந்த 50 ஆண்டுகளில் தீடீரென அதிகரித்து உள்ளது. 2,000 ஆண்டுகட்கு முன்பு ஆகக்கூடியது 10% தமிழரே தமது மொழியை எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தனர். 200 ஆண்டுகட்கு முன்புவரை இந்த நிலை நீடித்தது. இந்த நூற்றாண்டின் இறுதியிலே 95% தமிழர்கள், தமிழை எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்களாக இருப்பர். (படம் 3, 4, வாய்ப்பாடு 1). 2000 ஆண்டுகட்கு முன்பு ஏறத்தாழ 500,000 தமிழர்கள் தமிழை எழுதிப்படித்தனர். இந்த நூற்றாண்டின் இறுதியில் ஏறத்தாழ 95,000,000 தமிழர்கள் தமிழை எழுதுவர், படிப்பர்.
தமிழ் எழுத்துக்கள் கையால் மட்டும் எழுதப்பட்ட நிலைமாறி, அச்சு, எந்திரம், தட்டச்சுப்பொறி ஆகியவற்றின் துணையுடன் எழுதப்படுகின்றன. தட்டச்சுப் பொறியின் துணையுடன் ஒரு மணி நேரத்தில் 2500 சொற்களை எழுத முடியும். அச்சகங்களில் அச்சுக் கோர்ப்பதற்கும், தொலைத் தொடர்புத் தந்திச் செய்திகள் அனுப்புவதிலும், கம்பியூட்டர் இயக்குவதிலும் வானொலித் தொடபுக்கும் தட்டச்சு முறைமை விரவிப் பயன்படுத்தப்படுகின்றது. முன்னெப்பொழுதும் எழுதப்படா வேகத்தில் தமிழ்ச் சொற்கள் பதிவாகி வருகின்றது. அச்சு எந்திரங்கள் ஒரு மணி நேரத்தில் 20,000 30,000 படிகளை அச்சிடுகின்றன. கையெழுத்தால் எழுதப்பட்ட தொடர்புச் செய்திகளைவிட அழகாக அச்சிடப்பட்ட தொடர்புச் செய்திகளையே பெரும்பாலான தமிழர்கள் விரும்புகின்றனர்.
வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் எழுத்து இன்றியமை யாததாகி விட்டது. கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், சட்ட அவைகள், நீதிமன்றங்கள், ஆட்சிக் குழுக்கள், அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள், வங்கிகள் அனைத்திலும் மொழியப்படும் சொற்கள் கையால் எழுத்துக்களாக எழுதப்படாமல் சுருக்கெழுத்தாகப் படி செய்யப் படுகின்றன. அச்சு எந்திரங்களிலும் படி செய்யப்படுகின்றன. இன்றைய கூட்ட நிகழ்ச்சிகள் நாளைய செய்தியாகப் பல்லாயிரம் மைல்கட்கப்பால் படிக்கப்படுவதற்குத் தட்டச்சுத் தந்திமுறை தானே காரணம். எழுத்தை அடிப்படையாகக் கொண்டு தொடர்பு வேகமாகின்றது.
எந்த மொழிக் குழுவுக்குரிய குழந்தையாயினும், தனது தாய்மொழியின் எழுத்துக்களைக் கற்றுக்கொள்கின்றது. தமிழ் எழுதத் தொடங்கும் குழந்தைகள் 247 எழுத்துக்களைப் படித்துத் தெரிந்து கொள்கின்றன. ஆங்கிலத்தை எழுதத் தொடங்கும் தமிழ்க் குழந்தை, 26 எழுத்துக்களையே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டி உள்ளது. மேலைநாட்டுக் குழந்தைகளுடன் ஒப்பிடும் பொழுது தமிழ்க் குழந்தை, தமிழ் எழுத்துக்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பெரிய பாரத்தைத் தலைக்குள் வைத்திருக்கின்றது. இன்றைய தலைமுறையின் 40% தமிழர் 18 வயதுக்குட்பட்டவராக உளர்.
இந்த நூற்றாண்டில் முன்னெப்பொழுது மில்லாதவாறு அறிவியல் வளர்ச்சி வேகமடைந்துள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் இருந்து இன்றுவரை தோன்றிய விஞ்ஞானிகளுள், 90% இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மனிதன் மேற்கொண்ட அறிவியல் தொழிநுட்பக் கண்டுபிடிப்புக்களில் 90% கடந்த 100 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டன. இத்தகைய விரைந்த அறிவியல் வளர்ச்சிக்கு மனிதனுக்கு எழுத்துத் துணையாக உள்ளது. கவனித்த எதையும் எழுதிவைத்து, அறிக்கை தயாரித்து, மற்றவர் கட்குத் தொடர்பு படுத்தியமையால் தான் அளப்பரிய அறிவியல் வளர்ச்சியை அடைய முடிந்தது. உலக மொழிகளில் உள்ள அறிவியற் கருவூலங்களைத் தமிழாக்கம் செய்யத் தமிழ் எழுத்தின் துணை அவசியம்.
இடர்ப்பாடு:
தமிழர் தொகை அதிகரிப்பு, தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தோர் தொகை அதிகரிப்பு, கடதாசி, அச்சுப்பொறி, எழுத்து வேகம், எழுத்து அளவு, தமிழ்க் குழந்தைகளின் இடர்ப்பாடு, அறிவியல் வளர்ச்சிக்கு எழுத்தின் துணை, என்பனவும் பிறவும் தமிழர் வளர்ச்சிக்குத் தமிழ் எழுத்துக்களின் அடிப்படை முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன: 247 எழுத்துக்களைக் கொண்ட, பல்வேறுபட்ட வரிவடிவங் களுடைய, ஏட்டில் எழுதுவதற்கென இசைவாக்கம் பெற்ற தமிழ் எழுத்துத் தொகுப்பு, வளர்ச்சிக்குரிய தமிழரின் தொடர்பு கருவியாகத் தொடர்ந்தும் இயங்க முடியுமா?
247 வரி வடிவங்களையும் நினைவில் வைத்து, உரிய நேரத்தில் உரிய இடத்தில் பொருத்தவேண்டிய பணி தமிழர் மூளைக்கு உரியது. குறைந்த எண்ணிக்கை உடைய எழுத்துத் தொகுப்பைப் பயன் படுத்தும்போது ஏற்படும் தவறுகள் மேலதிகமாக எழுதல் இயல்பு. தவறுகளைத் தவிர்ப்பதிலும் திருத்துவதிலும் கழியும் காலம் வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளுகின்றது. முன்னேற்ற முயற்சி களைத் தடுக்கின்றது.
தமிழ் எழுத்து ஒன்றின் உயரத்தை ஓர் அலகாகக் (படம் 5) கொண்டு, எழுத்துக்களின் எழுதுவரி நீளத்தை அளக்கலாம். 247 தமிழ் எழுத்துக்களின் மொத்த எழுதுவரி நீளம் 2009.9 அலகுகள்; உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் என்பன வற்றின் சராசரி எழுதுவரி நீளம் முறையே 6.2, 4.7, 8.1 அலகுகள் ஆகும். 26 ஆங்கில எழுத்துக்களின் மொத்த எழுதுவரி நீளம் 62; ஆங்கில எழுத்து ஒன்றின் சராசரி எழுதுவரி நீளம் 2.4 அலகுகள். ஒப்பு நோக்குகையில் தமிழ் எழுத்துக்கள் மிகையான எழுதுவரி நீளம் உடையன; எழுதுவோர்க்கும் அச்சிடுவோர்க்கும் வேகத்தை விரும்புவோர்க்கும் துன்பத்தைத் தருவன.
ஏடுகளில் எழுதுவதற்காக, எழுதவாசிக்கத் தெரிந்த 5% 10% தமிழரால், எழுத்துத் தெளிவு நோக்கி இசைவாக்கம் பெற்ற வரிவடிவத் தொகுப்பில் ஒழுங்கின்மை விரவியுள்ளது. திரு. ஈ. வே. ராமசாமி அவர்களின் கருத்தை ஏற்றுத் தமிழக அரசு கி. பி. 1979 இல் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவித்தது. ண், ற், ன், ஆகிய 3 மெய்யெழுத்துக்களின் அகரம் நீட்டு, ஒகரம், ஒகரம் நீட்டு ஆகிய ஒலி அசைகளும், ண், ல், ள், ன் ஆகிய 5 மெய் எழுத்துக்களின் ஐகார ஒலி அசையும் வரிவடிவத் திருத்தத்துக்கு உள்ளாயின. அதே ஒலி அசைகட்குரிய ஏனைய மெய் எழுத்தைச் சார்ந்த உயிர் மெய்களின் வரி வடிவங்களைப் பெற்றன.
உயிர் மெய் எழுத்து ர, கால்வரி அற்று, 18 மெய் எழுத்துக்களின் அகரம் நீட்டு, ஒகரம், ஒகரம் நீட்டு உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய ஒலிக்குறியாகவோ, ஒலிக்குறிகளுள் ஒன்றாகவோ அரவு எனப் பெயர் பெற்று, அமைகின்றது. உயிர் மெய் எழுத்து ள, உகரம் நீட்டு ஒலி அசையைக் குறிக்க உயிர் எழுத்து 2 உடன் சேர்ந்து கொள்கின்றது. அதே உயிர்மெய் எழுத்து ள, ஒளகார ஒலி அசைக்காக, உயிர் எழுத்து ஒ உடன் சேர்ந்தும், 18 மெய் எழுத்துக்களின் உயிர் மெய் எழுத்துக்களின் ஒலிக்குறிகளுள் ஒன்றாகவும் அமைகின்றது. ர, ள என்பன, தத்தம் ஒலியுடன், வேறு ஒலிகட்கும் ஒலிக்குறிகளாகப் பயன்படுவது எழுதுவோர்க்கும் வாசிப்போர்க்கும் மயக்கத்தையே தருகின்றன.
உயிர்மெய் எழுத்துக்களில் ஒலிக்குறிகள், எழுத்துக்கு முன்னே (கை, கெ, கே) பின்னே (கா), சேர்ந்து (கி, கீ, கு, கூ) முன் பின்னாக (கொ, கோ, கௌ) மேலே (க், ஊ) எனப் பல்வேறு இடுநிலைகளில் வருகின்றன. ஒலிக்குறியின் இடுநிலைகள் சீரற்ற முறையில் இருப்பதால் தெரிந்து கொள்ள, பயில, பழகிக்கொள்ள, நினைவில் வைத்திருக்க இடையூறு உண்டு. தட்டச்சுப் பொறிமுறைக்கும், அச்சுப் பொறிமுறைக்கும் இடர்ப்பாடு உண்டு. வேகத்துக்குத் தடையாகவும், தவறுகள் மலியவும் உதவுகின்றது.
உயிர்மெய் எழுத்துக்களில் உகரம், உகரம் நீட்டு ஆகிய ஒலி அசைகட்குரிய ஒலிக்குறிகளும் ஒவ்வொரு வரிசைக்கும் ஒவ்வொரு வடிவத்தைப் பெறுகின்றன: (கு, கூ, டு, டூ, து, தூ, பு, பூ, மு, மூ) சீரற்ற இந்த முறைமை, தெரிந்து நினைவில் வைத்துக் கொள்ளவும், அச்சு, தட்டச்சுப் பொறி முறைக்கும் இடர்ப்பாடாக உளது.
தமிழ் நெடுங்கணக்கின் குத்து வரிசையமைப்பானது, இடப்பிறப்பு முயற்சிப்பிறப்பு முதலிய பல காரணங்கட்காக அவ்வாறு வைக்கப்பட்டுள்ளதாக, (சிறப்பினும் இனத்தினும் எனத் தொடங்கும் நன்னூல் சூத்திரம் பவணந்தி முனிவர்) இலக்கணகாரர் கூறுவர். ஒலி அடர்த்தியின் அடிப்படையில் நோக்கினால் இந்த வைப்புமுறை சீரற்றதாக உள்ளது. நினைவுக்கு இடர்ப்பாடு உடையதாக உள்ளது.
மாற்று நோக்கு:
எண்ணிக்கை, எழுதுவரிநீளம், ஒலிக்குறி வேறுபாடுகள், ஒலிக்குறி இடு நிலைகள், வரிசைச்சீர் போன்ற தமிழ் வரிவடிவங்களின் தன்மைகள், புதிய சூழ் நிலையில் (பந்தி 20) வளர்ச்சிக்கும் வேகத்திற்கும், பயிற்சிக்கும் பயன்பாட்டிற்கும் தொடர்புக் கருவியாகத் தமிழ்மொழி பயன்படுவதற்குரிய திறனுக்கும் இடுக்கணாக உள. தமிழ் மொழியின் இலக்கண வரம்புகளில் அடிப்படை உடைப்புகளை ஏற்படுத்தாமல் மொழி வளத்துக்கு இடையூறில்லாமல், சொல்லாட்சி நலம் குன்றாமல், இருக்கக் கூடியதாகத் தமிழ் வரிவடிவமைப்பு மாற்றியமைக்கப் பட்டால் தான், முற்றிலும் புதியதான வளர்ச்சிக்கும் வேகத்துக்கும் உரிய இன்றைய சூழ்நிலையில் தமிழரும் ஏனைய மக்களைப்போல் விரைந்து முன்னேறிப் பரந்து பயனுறுத்த முடியும்.
உயிர் எழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ, ஐந்தும் குறுகிய ஒலிஅசை உடையன, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள ஏழும் நெடிய ஒலி அசை உடையன. பிந்திய ஏழில், ஐகார ஒளகாரங்கள் குறிய எழுத்தின் நெடியனவாதற்குக் குற்றெழுத்தாகிய இனம் தமக்கின்றேனும் மாத்திரை ஒப்புமையான் நெட்டெழுத்தென்றார் என்பர் தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர். முந்திய ஐந்தும், பிந்திய ஏழில் ஐ, ஒள, இரண்டும், தனித்து ஒலிக்கும் உயிர் எழுத்துக்களாம். 18, மெய் எழுத்துக்கள், 1 ஆய்த எழுத்து என்பனவும் தனித்து ஒலிக்கக்கூடியன. நெடிய ஒலி அசை உடைய 5 உயிரெழுத்துக்களும் 216 உயிர்மெய் எழுத்துக்களும் தனித்து ஒலிக்கக்கூடியன. நெடிய ஒலி அசை உடைய 5 உயிரெழுத்துக்களும் 216 உயிர்மெய் எழுத்துக்களும் தனித்து ஒலிக்கக்கூடிய (7+18+1=) 26 எழுத்துக்களைத் தழுவியோ, சார்ந்தோ ஒலிப்பன. அ, இ, உ, எ, ஐ, ஒ, ஒள, க், ச், ட், த், ப், ற், ய், ர், ல், வ், ள், ழ், ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய 26 எழுத்துக்களும் தனித்து ஒலிக்கக் கூடியன; இவற்றுள் ஐ, ஒள இரண்டும், 2 மாத்திரை அளவு ஒலிக்கும் காலமும், அ, இ, உ, எ, ஒ ஐந்தும் 1 மாத்திரை அளவு ஒலிக்கும் காலமும், க் முதல் ன் ஈறான பதினெட்டும் 1/2 மாத்திரை ஒலிக்கும் காலமும் கொண்டன.
தனித்து ஒலிக்கக்கூடிய 7 உயிர் எழுத்துக்களும் தாமே நேரடியாகவோ, தம்முள் ஐந்தைச் சார்ந்து ஒலிக்கும் நெடிய ஒலி அசை உயிர் எழுத்துக்கள் ஐந்தின் மூலமாகவோ, 18 மெய் எழுத்துக்களுடன் புணர்தலால் 216 உயிர்மெய் எழுத்துக்கள் எழுகின்றன.
தமிழ்ச் செய்யுள், வசன நடைகளில் தமிழ் உயிர் ஒலிகளும், மெய் ஓலிகளும் வருகின்ற வேகம் வாய்ப்பாடு 3 இல் தரப் பட்டுள்ளது. எழுந்தமானமாகச் சில நூல்களில் சில பகுதிகளில் முதல் நூறு சொற்களில் உள்ள ஒலி அசைகள், மெய் ஒலிகள் வருகைவேகம் கணிக்கப்பட்டது. 1,000 ஒலிகட்கு 300 மெய் ஒலிகள் (30%) 222 அகர ஒலிகள் (22%), 157 உகர ஒலிகள் (15%), 120 இகர ஒலிகள் (12%), 73 அகரம் நீட்டு ஓலிகள் (7%), என்பனவாகவும் ஏனையவை 50 இக்குக் குறைவாகவும் (5%) வருகின்றன. ஆய்தம் ஒருமுறை (1.0%) வந்தது. ஒளகாரம் 1,000 இக்கு ஒருமுறையேனும் வரவில்லை,
தனித்து ஒலிக்கும் 26 எழுத்துக்களுள், (பந்தி 42) ஒளகாரத்துக்குரிய வரிவடிவம் தவிர்ந்த ஏனைய 25 வரி வடிவங்களும் ஒன்றையொன்று சாராது தனித்த வடிவமைப்பு உடையன. தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ஏனைய 222 வரிவடிவங்களுள் உயிர் எழுத்து ஈ தவிர்ந்த 221 வரிவடிவங்களும் முற்கூறிய தனித்த வரிவடிவமைப்பு உடைய 25 இல் ஏதாவது ஒன்றைத் தழுவிய வடிவமைப்புப் பெற்றுள. இத்தகைய தழுவிய வரிவடிவமைப்புப்பெற ஒலிக்குறிகள் துணை நிற்கின்றன.
அகரத்தின் கால் கொப்பும் சுழியும் அகரம் நீட்டு
உகரத்தில் ள ஏற உகரம் நீட்டு
எகரத்தில் கால் நீள எகரம் நீட்டு
ஒகரத்தில் சுழி சேர ஒகரம் நீட்டு
ஒகரத்துடன் ள சேர்ந்து ஒளகாரம்
மெய்யின் புள்ளி நீங்க அகர உயிர்மெய்
அரவு சேர அகரம் நீட்டு உயிர்மெய்
தொடுத்த குத்துக் கோடு இகர உயிர்மெய்
தொடுத்த குத்துக் கோட்டுச் சுழி இகரம் நீட்டு உயிர் மெய்
பல்வேறுபட்ட தொடுப்புகள், உகர, உகரம் நீட்டு உயிர் மெய்கள்
ஒற்றைக் கொம்பு முன்னே எகர உயிர்மெய்
இரட்டைக் கொம்பு முன்னே எகரம் நீட்டு உயிர்மெய்
சங்கிலிக் கொம்பு முன்னே ஐகார உயிர்மெய்
ஒற்றைக்கொம்பு முன்னே, அரவு பின்னே ஒகர உயிர்மெய்
இரட்டைக்கொம்பு முன்னே அரவு பின்னே ஒகர நீட்டு உயிர்மெய்
ஒற்றைக்கொம்பு முன்னே, ள பின்னே ஒளகார உயிர்மெய்
சீரான, தெளிவான, எழுதுவரி நீளம் குறைந்த, இடு நிலைச் சீர்விரியுடன் கூடிய, பழைமைக்குப் பாதிப்பற்ற, புதிய ஒலிக்குறி வரிவடிவங்கள் இயற்றப்படவேண்டும். அகர உயிர்மெய் தவிர்ந்த ஏனைய 11 உயிர் ஒலி அசைகட்டும், மெய் ஒலிக்கும் உரிய 12 ஒலிக்குறி வரிவடிவ முன்னோடிகள் விவாதத்துக் கெனப், படம் 6 இல் தரப்பட்டுள்ளன.
புள்ளி, மெய்யெழுத்து
அரவு (புதிய வடிவம்), அகரம் நீட்டு
குத்துக்கோடு இகரம்
குத்துக்கோடு சுழியுடன், இகரம் நீட்டு
பக்கக்கோடு, உகரம்
பக்கக்கோடு சுழியுடன், உகரம் நீட்டு
ஒற்றைக்கொம்பு, எகரம்
இரட்டைக்கொம்பு, எகரம் நீட்டு
கூம்பு, ஐகாரம்
கெவர்க்காம்பு ஒகரம்
கெவர்க்காம்புச் சுழி ஒகரம் நீட்டு
வளையம் ஒளகாரம்
தனித்து ஒலிக்கக்கூடிய 26 தமிழ் எழுத்துக்களுள் ஒளகாரம் தவிர்ந்த 25 எழுத்துக்களையும், 12 ஒலிக்குறி வரி வடிவங்களையும் தெரிந்து கொண்டால் தமிழைத் தெளிவாக விரைவாக எழுதலாம். ஒளகாரம் உட்பட 26 எழுத்துக்கள், 12 ஒலிக்குறிகள் எல்லாமாக 38 வரிவடிவங்கள்; இவற்றைத் தெரிந்து சேர்த்தல் மூலம் எல்லாத் தமிழ்ச் சொற்களையும் எழுதலாம்.
எழுத்துக்களுடன் ஒலிக்குறிகளைத் தெரிந்து சேர்க்கும் பொழுது ஒலிக்குறியின் இடுநிலை, எந்த எழுத்திலும் ஒரே சீரானதாக (பந்தி 3.6) இருக்க வேண்டும். எழுத்துக்குப் பின்னதாக (படம் 8) எப்பொழுதும் ஒலிக்குறி சேர்க்கப்படவேண்டும் என விதியாதல் வேண்டும்.
நடைமுறையில் உள்ள 247 வரிவடிவங்களில் உள்ள ஒலிக்குறிகளின் எழுதுவரி நீளம் 839.6 அலகுகள். இந்தக் கட்டுரையில் அறிமுகப்படுத்தியுள்ள ஒலிக்குறிகளைப் பயன்படுத்தி 247 வரிவடிவங்களையும் எழுதினால், ஒலிக்குறிகட்கு மட்டும் 395 அலகுகள் எழுதுவரி நீளமாக அமையும். ஒலிக்குறிகளின் எழுதுவரி நீளத்தைப் புதிய முறை குறைத்தாலும், எழுத்துக்களின் எழுதுவரி நீளம் குறைக்கப்படவில்லை. இ, ஐ, த, ற, ஞ, ண, ன, ஆகிய எழுத்துக்களின் எழுதுவரி நீளம் 6 அலகுகட்கு மேற்பட்டது. வரியைச் சுருக்கியோ, அல்லது இந்த வடிவங்கட்குப் பதிலாக, புதிய முறையைப் புகுத்துவதால் புழக்கத்தில் இருந்து மறையக் கூடிய, 5 அலகுகள் நீளத்துக்கு உட்பட்ட, ஈ, சு, டி போன்ற எழுத்துக்களை இடமாற்றலாம்.
மெய் எழுத்துக்களின் வரிசையமைப்பு ஒலி அடர்த்தியின் அடிப்படையில் அமைதல் வேண்டும். வல்லின எழுத்துக்கள் ஆறும் முதலாக, இடையின எழுத்துக்கள் ஆறும் இரண்டாவதாக, மெல்லின எழுத்துக்கள் ஆறும் மூன்றாவதாக, வரிசைச் சீர் அமைதல்வேண்டும். குற்றெழுத்தினம் தமக்கு அற்ற, ஐகார, ஒளகார ஒலிஅசைகள், அவற்றுக்கு இடைப்பட்ட ஒகரம், ஒகரம் நீட்டு ஒலி அசைகட்குப் பின்னதாக வரிசைப்படுத்துதல் மயக்கத்தைத் தவிர்க்கும்.
மனித நாகரிக வளர்ச்சிக்குக் காரணிகளான அறிவுக் கருவூலங்கள் உலக மொழிகள் பலவற்றில் நிறைந்துள்ளன. அவற்றைத் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலை தமிழருக்கு உண்டு. தமிழருக்கு மட்டுமல்ல; வளர்ச்சியை விழை கின்ற மக்கள் அனைவரும் அத்தகைய அறிவுக் கருவூலங்களைத் தத்தம் மொழிகளில் எழுதிக்கொள்ள வேண்டும். தமிழாக்கம் செய்கையில் தமிழில் இல்லாத ஒலிகளான, வ்ப்(ஊஅ) க்க் (எஅ)போன்ற தெரிந்தெடுத்த மிகத் தேவையான ஒலிகட்கு வரிவடிவம் கொடுத்து இசைவாக்க வேண்டி உளது. வடமொழி ஒலிகள் முன்னர் இவ்வாறு இசைவாக்கம் பெற்றமை நோக்குக.
சுருக்கம்:
ஏடும் எழுத்தாணியும் பயன்படுத்திய காலங்களில் இசைவாக்கம் பெற்ற 247 எழுத்துக்கள் தமிழில் உள. கடந்த 200 ஆண்டுகட்கு முன்புவரை அவ்வக் காலங்களில் வாழ்ந்த தமிழர் தொகையில் 5% 10% தமிழர் மட்டுமே தமிழை எழுதினர்; வாசித்தனர். கி. பி. 2000 ஆண்டில் 10 கோடி தமிழர் உலகில் வாழ்வர் என்பதும் இவர்களுள் 95% ஆனோர் தமிழை எழுதுவர், வாசிப்பர் என்பதும் மதிப்பிடப்பட்டுள்ளன. கையால் எழுதித் தொடர்பு ஏற்படுத்தும் வழமை அருகித் தட்டச்சுப் பொறி முறையால் அச்சிட்டுத் தொலைத் தொடர்பு ஏற்படுத்தும் வழமை பெருகி உள்ளது. அறிவியல் வளர்ச்சி முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முன்னேறியுள்ளது. இத்தகைய புதிய சூழ்நிலையில், எண்ணிக்கை யில் பெருகிய, எழுதுவரி மிகநீண்ட, ஒலிக்குறிகளும் ஒலிக்குறி இடுநிலைகளும் தெளிவற்ற, வரிசைச் சீர் கலங்கிய, தமிழ் நெடுங் கணக்கு மாற்றியமைக்கப்படல் வேண்டும். தெரிந்து புணர்த்தல் மூலம் தமிழ் ஓசைகள் அனைத்தையும் பெறக்கூடிய, எழுத்துக்கள் சொற்களைக் கட்டமைக்கக் கூடிய 26 எழுத்துக் களையும் 12 ஒலிக்குறி வரிவடிவங்களையும் கொண்ட, விவாதத்திற் குரிய தமிழ் வரிவடிவமைப்பு முன்மொழியப் படுகின்றது. அத்துடன் ஒலிக்குறி இடுநிலை எழுது வரி நீளக் குறைப்பு, மெய்யெழுத்து வரிசைச்சீர் புதிய ஒலிகட்கான வரிவடி வமைப்புத் தேவை என்பனபற்றியும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. மனித நாகரிக வளர்ச்சியில் தமிழர் பங்குபற்றவும், பங்களிப்புச் செய்யவும் இன்றைய, எதிர்காலத் தமிழர்க்கு தமிழ் வரிவடி வமைப்பில் மாற்று நோக்கு உதவும்.
குக்MMஅகீஙு: கூச்ட்டிடூ குஞிணூடிணீt: அண அடூtஞுணூணச்tஞு அணீணீணூணிச்ஞிட;
கூடஞு ச்ஞீச்ணீtச்tடிணிணண் ச்ஞிஞ்தடிணூஞுஞீ tடணூணிதஞ்ட ட்ச்ணதூ tடணிதண்ச்ணஞீண் ணிஞூ தூஞுச்ணூண் டிண தீணூடிtடிணஞ் ணிஞூ கூச்ட்டிடூ குஞிணூடிணீtண் டிண Oடூச் டூஞுச்திஞுண் ஞதூ 5% 10% ணிஞூ tடஞு கூச்ட்டிடூ ணீணிணீதடூச்tடிணிண தீடணி தீஞுணூஞு டூடிtஞுணூச்tஞு, டச்ண் ணூஞுண்தடூtஞுஞீ டிண tடஞு 247 டூஞுttஞுணூ ண்tணூணிணஞ் கூச்ட்டிடூ குஞிணூடிணீt, 2000 அ.ஈ, தீடிடூடூ டச்திஞு ச்ண ஞுண்tடிட்ச்tஞுஞீ 100 ட்டிடூடூடிணிண கூச்ட்டிடூண் டிண tடஞு தீணிணூடூஞீ தீடிtட 95% டூடிtஞுணூச்ஞிதூ.
கூடஞு டூச்ண்t ணிணஞு டதணஞீணூஞுஞீ தூஞுச்ணூண் டச்திஞு ண்ஞுஞுண tடஞு தணணீணூஞுஞிஞுஞீஞுணtஞுஞீ ணீணூணிஞ்ணூஞுண்ண் டிண ண்ஞிடிஞுணஞிஞு, ணூஞுண்தடூtடிணஞ் டிண ணூச்ணீடிஞீ டதட்ச்ண ச்ஞீதிச்ணஞிஞுட்ஞுணt. கணூடிணtஞுஞீ தீணிணூஞீ டச்திஞு ணிதிஞுணூtச்டுஞுண டச்ணஞீ தீணூடிttஞுண ஞிணிட்ட்தணடிஞிச்tடிணிண, ச்ணஞீ tடஞு tதூணீஞுதீணூடிtஞுணூ டுஞுதூஞணிச்ணூஞீ டிண் டிண திணிஞ்தஞு ஞூணிணூ tதூணீடிணஞ், ணீணூடிணtடிணஞ், tஞுடூஞுஞிணிட்ட்தணடிஞிச்tடிணிண, ஞிணிட்ணீதtஞுணூடிண்டிணஞ் ச்ணஞீ ண்ணீச்ஞிஞு ஞிணிட்ட்தணடிஞிச்tடிணிண.
கூடஞு தணஞீஞுணூ 18 ஞ்ணூணிதணீ ஞூணிணூட்டிணஞ் 40% ணிஞூ ச் கூச்ட்டிடூ ணீணிணீதடூச்tடிணிண, தீடடிஞிட டிண் ஞீணிதஞடூடிணஞ் ஞுதிஞுணூதூ 30 தூஞுச்ணூண் டிண் டூணிச்ஞீஞுஞீ தீடிtட 247 ஞிணிஞீஞு கூச்ட்டிடூ ண்ஞிணூடிணீt ச்ஞ்ச்டிணண்t tடஞுடிணூ ஞிணிதணtஞுணூணீச்ணூtண் டிண tடஞு ஞீஞுதிஞுடூணிணீஞுஞீ தீஞுண்tஞுணூண தீணிணூடூஞீ தீடிtட 26/30 ஞிணிஞீஞு ண்ஞிணூடிணீtண் ணிஞூ tடஞுடிணூ ணிதீண, tடதண் ணீடூச்ஞிடிணஞ் tடஞு கூச்ட்டிடூ டீததிஞுணடிடூஞுண் ச்t ச் tஞுணூணூடிஞடூஞு ஞீடிண்ச்ஞீதிச்ணtச்ஞ்ஞு.
கூடடிண் ணீச்ணீஞுணூ ணீணூணிணீணிண்ஞுண் ஞூணிணூ ஞீடிண்ஞிதண்ண்டிணிண ச்ண ச்டூtஞுணூணச்tஞு ச்ணீணீணூணிச்ஞிட தீடிtட 26 டூஞுttஞுணூண் ச்ணஞீ 12 ணீடணிணஞுtடிஞி ண்தூட்ஞணிடூண், tடஞு ண்ஞுடூஞுஞிtடிதிஞு ஞிணிட்ஞடிணச்tடிணிண ணிஞூ tடஞுண்ஞு ஞ்டிதிடிணஞ் ஞுதுச்ஞிtடூதூ tடஞு ண்ச்ட்ஞு ணீடணிணஞுtடிஞி ணீஞுணூண்ஞுணtச்tடிணிண ணிஞூ tடஞு ண்ணீணிடுஞுண கூச்ட்டிடூ டூச்ணஞ்தச்ஞ்ஞு, டிண டிtண் ணீணூடிட்ஞு, ச்ஞ்ஞு ணிடூஞீ ணீஞுணூஞூஞுஞிtடிணிண. கூடடிண் ச்டூண்ணி தீடிடூடூ ஞுணச்ஞடூஞு tடஞு ணீணூஞுண்ஞுணt ச்ணஞீ ஞூதtதணூஞு கூச்ட்டிடூண் tணி ணீச்ணூtடிஞிடிணீச்tஞு டிண ச்ணஞீ ஞிணிணtணூடிஞதtஞு tணி tடஞு ணீணூணிஞ்ணூஞுண்ண் ணிஞூ டதட்ச்ணடிtதூ.
நன்றி
இக்கட்டுரையில் இலக்கணகாரர் கருத்துக்கள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கிய வட்டுக்கோட்டையூர் பண்டிதர் க. மயில்வாகனன் அவர்கட்குக் கட்டுரை ஆசிரியரின் உளமுவந்த நன்றி.
உசாத்துணை
தொல்காப்பியர்: தொல்காப்பியம், எழுத்ததிகாரமூலமும், நச்சினார்க்கினியர் உரையும்; சுன்னாகம், திருமகள் அழுத்தகம், 1937
நச்சினார்க்கினியர்: தொல்காப்பியம், எழுத்ததிகாரம் உரை; வித்துவசிரோமணி சி. கணேசையர் சுன்னாகம்,
திருமகள் அழுத்தகம், 1937
பவணந்தி முனிவர்: நன்னூல்; ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்
சென்னபட்டணம், வித்தியாநுபாலன அச்சியந்திரசாலை 15 ஆம் பதிப்பு
1979 மயில்வாகனன். க ; தனிப்பட்ட கடிதத் தொடர்புகள்.
1979 மகாதேவன். ச கொ ; எழுத்தும் கருத்தும்; சேகர் பதிப்பகம்,சென்னை, தமிழ்நாடு
1966 சிவராமமூர்த்தி. சி; ஐணஞீடிச்ண உணீடிஞ்ணூச்ணீடதூ ச்ணஞீ குணிதtட ஐணஞீடிச்ண குஞிணூடிணீtண்;
ஆதடூடூ. Mச்ஞீணூஞுண் எணிதிt. Mச்ண் ஐஐஐ(4);
எணிதிt. ணிஞூ Mச்ஞீணூஞுண், கூச்ட்டிடூ Nச்ஞீத.
1979 க்Nஊகஅ; கணிணீதடூச்tடிணிண ஊச்ஞிtண் ச்t ஏச்ணஞீ; க்ணடிtஞுஞீ Nச்tடிணிணண் ஊதணஞீ ஞூணிணூ ணீணிணீதடூச்tடிணிண அஞிtடிதிடிtடிஞுண், 485, ஃஞுதுடிணஞ்tணிண அதிஞுணதஞு, Nஞுதீ ஙுணிணூடு 10163 க்குஅ.
No comments:
Post a Comment