Sunday, October 30, 2022

குருந்தூர் இராதாகிருட்டிணன்

இலங்கை முழுவதும் சிவ பூமி

சிவன் கோயில்களின் பூமி

குருந்தூர்க் குன்று சிவன் கோயில் குன்று.

தொல்பொருள் திணைக்களத்தினர் அண்மையில் அங்கு கண்டு எடுத்த தாரா இலிங்கத்தில் தமிழ் எழுத்தில் மணி நாகன் என உள்ளது. பேராசிரியர் பத்மநாதன் செய்தி சொல்லியுள்ளார்.

சிவனுக்கும் தமிழுக்கும் உள்ள குன்று குருந்தூர்க் குன்று.

புத்தர் வரும்பொழுது அங்கு சிவன் கோயில் இருந்தது.

அக்காலத்தில் அங்கு வாழ்ந்த தமிழர், புத்தரின் உரைகளை அடுத்து அவரையும் பின்பற்றத் தொடங்கினார்கள்.

புத்தருக்கும் கோயிலை அருகிலே அமைத்தார்கள்.

சிவ பூமியான இலங்கையில் புத்தர் வருகைக்குப் பின் அமைத்த புத்தர் கோயில்களில் 90% சைவக் கோயில்களுக்கு அருகே அமைத்த கோயில்களே. 

தோராயமான 10% சைவக் கோயில்களை இடித்துப் புத்தர் கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள்.

குருந்தூர்க் குன்றைச் சுற்றியுள்ள நிலம் முழுவதும் சைவத்தமிழ் பூமி. சிவ பூமி. 

குருந்தூர் குன்றின் அருகே குருந்தூர்க் குளம். குன்றைச் சுற்றி வயல்வெளி.

2000 ஆண்டுகளுக்கு முன் தமிழி எழுத்துப் புளங்கிய காலத்தில் தமிழ்ப் புத்தரும் அங்கு வாழ்ந்தனர். பின்னர் காலப்போக்கில் புத்த சமயத்தினர் அந்தப் பகுதியில் வாழவே இல்லை.

குருந்தூர்க் குன்றின் புத்த அடையாளங்களைப் பேண இக்காலப் புத்தர் நெடுங்காலமாகவே விரும்பி வருகிறார்கள். புத்த சமயத்தவர் குருந்தூர்க் குன்றைச் சுற்றி வாழாததால் அவர்களின் முயற்சி கைகூடவில்லை.

1981இல் குருந்தூர்க் குன்று அடிவாரத்தில் புத்தரின் மடம் இருந்தது. அங்கே புத்தபிக்கு ஒருவர் இருந்தார்.

அவரைக் கொன்றனர். குன்றின் மேலே ஏறி சிவனின் சூலம் ஒன்றை நாட்டினர். அந்நிகழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் இன்றும் அதே மாவட்டத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் அல்லர்.

1981க்குப் பின் முழுநிலா நாளில் குன்றைச் சுற்றி உள்ள வயல்வெளியில் அறுவடை முடிந்த பின்பு மேலே நாட்டிய சூலத்திற்குப் பொங்கல் பொங்கிப் படைக்கத் தொடங்கினர். குருந்தூர்க் குன்றின் வட எல்லையில் குமிழமுனை. அங்கு வாழும் மக்களே இத்திருப்பணியில் திருவிழாவில் ஈடுபட்டனர்.

போர் முடியும் வரை இந்த நிகழ்ச்சி இடைவிடாது தொடர்ந்தது. போர் முடிந்த பின்னரும் இந்த நிகழ்ச்சியை அங்குள்ள மக்கள் தொடர்ந்து விழாவாக்குகிறார்கள்.

போர் தொடங்க முன்பு அறுவடைக் காலத்தில் தொழிலுக்காக மணலாற்றுக்குத் தெற்கே அநுராதபுரம் மாவட்டத்தின் சிங்கள மக்கள் வேலை தேடி வருவார்கள் அறுவடை முடித்துக் கொண்டு தத்தம் ஊர்களுக்குப் போய்விடுவார்கள்.

1981இல் அங்கு வைத்த சூலத்தைப் போருக்குப் பின் படைவீரர்கள் அகற்றினார்கள். குமுழமுனை மக்கள் மீண்டும் சூலத்தை நிறுவினார்கள். படைவீரர்கள் அகற்றினார்கள். நாட்டுவதும் அகற்றுவதுமாக இரண்டு மூன்று முறை நடந்ததாகச் சொல்கிறார்கள்.

போர் முடிந்த பின்பு கொக்கிளாயில் நாயாறில் குருந்தூர்க் குன்றில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புத்தர்களே வாழாத இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவித் திருமடங்களை அமைத்து வந்த வருகிறார்கள்.

போரில் தோல்வியடைந்த சைவத்தமிழ் மக்களைக் கத்தோலிக்கர் 400 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு விரட்டினார்களோ அவ்வாறே இன்று புத்தரும் விரட்டுகிறார்கள்.

கொக்கிளாயில் அருள்மிகு பிள்ளையார் கோயில் வளவில் புத்தர் சிலை அமைத்தனர். எதிர்த்து அருள்மிகு பிள்ளையார் கோயிலார் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். வழக்கு முடியவில்லை.

நாயாறு நீராவியடியில், அருள்மிகு பிள்ளையார் கோயில் வளவுக்குள் புத்தர் சிலை புதிதாக. வழக்குகள் என அங்கும் சிக்கல் தொடர்கிறது.

கொக்கிளாயிலோ நாயாறிலோ குருந்தூர்க் குன்றிலோ புத்தர் வாழ்வதில்லை. ஆனாலும் புத்தர் சிலைகளும் சுற்றி மடங்களும். அங்கே வாழ்வதற்குப் புத்த பிக்கு.

கொக்கிளாயில் நானும் தமிழகத்தைச் சேர்ந்த இராம ரவிக்குமாரும் அருள்மிகு பிள்ளையார் கோயில் அறங்காவலரைச் சந்தித்தோம். அருள்மிகு பிள்ளையார் கோயில் வளவிலிருந்து புத்தர் கட்டிடங்களை அகற்ற இந்தியா உதவ வேண்டுமென இராம ரவிக்குமாரிடம் அறங்காவலர் கேட்டுக் கொண்டார்.

நாயாறு நீராவியில் அருள்மிகு பிள்ளையார் கோயிலுக்கு அருகே புதிதாகப் புத்த வளாகம் அமைந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

குருந்தூர்கா குன்றில் மரம் செடி வேர் பாம்பு புற்று யாவையும் ஏறிக் கடந்தேன். குன்றின் மேலே உள்ள தொல்பொருள் சிதைவுகளைப் பார்த்திருக்கிறேன்.

நான் ஏறிய பொழுது சூலம் இருந்த இடத்தைப் பார்த்தேன். சூலம் அங்கு இருக்க வில்லை. இன்று வரை சூலம் அங்கு இல்லை.

கடந்த 10 ஆண்டுகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புத்த சமயத்தவரின் எண்ணிக்கை சில நூறாக உயர்ந்திருந்தாலும் எண்ணிக்கையின் உயர்வு விகிதாசாரம் ஏறத்தாழ 400%..

முல்லைத்தீவு நகரில் அரசு சாரா நிறுவனம். பொறுப்பாய் உள்ளவர் ஆம்ஸ்ட்ராங் அடிகளார்.

முல்லைத்தீவு மாவட்டம் சார்ந்த மாகாண சபை உறுப்பினராக இருந்தவர் இரவிகரன். விடுதலைப்புலிகளின் மேலாட்சிக் காலத்தில் குமிழமுனையை ஒட்டியுள்ள கூட்டுறவுச் சங்கத்தில் பொறுப்பாய் இருந்தவர். அச்சங்கத்தின் நிதியை, ஏறத்தாழ முக்கால் கோடி ரூபாய் நிதியை, கையாடினார் என்ற குற்றச்சாட்டில் விடுதலைப் புலிகள் இரவிகரனைச் (நான்கு ஆண்டுகள் என்கிறார்கள்) சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

இன்றைய காலத்தில் ஆர்ம்ஸ்டோங் அடிகளாரும் இரவிகரனும் கத்தோலிக்க மத போதகர்களும் கொக்கிளாய் நாயாறு குருந்தூர் புத்தர் சிலை விவகாரங்களைக் கையில் எடுக்கிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள். அறிக்கைகள் எழுதுகிறார்கள். அன்டன் புள்ளை நாயகம் என்று கத்தோலிக்கரே இவை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்தில் வாதாடுகிறார்.

குருந்தூருக்குத் தொல்லியல் துறையினர் அமைச்சர்கள் வருகின்றார்கள். மேலே ஏறுகிறார்கள் வழிபாடு செய்கிறார்கள். மீள்கிறார்கள்.

குருந்தூரில் ஆதிசிவன் கோவிலை இடித்துவிட்டுப் புத்தர் கோயிலைக் கட்டியிருக்கிறார்கள் என ஆர்ம்ஸ்ட்ராங் அடிகளாரும் இரவிகரனும் ஊடகங்களுக்குச் செய்தி வெளியிடுகிறார்கள்.

இந்தச் செய்தியில் உண்மை இல்லை என நான் மறுத்து அறிக்கை விட்டேன். ஏனெனில் அங்கே சைவக் கோயில் இருக்கவில்லை. சூலமும் இருக்கவில்லை. புத்த கோயிலையும் கட்டவில்லை. என் மீது அவர்கள் கடும் கோபமாக இருக்கிறார்கள். பொய்யன் எனத் திட்டி அறிக்கை விட்டிருக்கிறார்கள்

தொல்லியல் திணைக்களத்தினரும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கரும் புத்த சமயத்தவர். எனினும் சைவக் கோயில் அங்கே இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளமையைக் குறிப்பிடுகிறார்கள். சைவர்கள் குருந்தூரில் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்ள அரசு தடையாக இருக்காது எனச் சொல்கிறார்கள்.

Dated 28th September 2022

From 

Maravanpulavu K Sachithananthan

Siva Senai

Professor Anura Manatunga

Director of Archaeology

Dear professor,

Congratulations on your most recent remarks as appearing in

 https://dailyceylon.lk/38872.

You have kept the past amicability and the future  welfare of the two eternally bound people of Sri Lanka, Hindus and Buddhists.

I have been saying this since I visited Kurunthoor in 2019.

When Indian media reported that the Hindu temple in Kurunthoor was destroyed, and consequently few Indian Hindu organisations were agitated, I issued a denial. I told them that neither the Hindu temple was destroyed nor the Buddhist temple built.

Thereafter I consulted my friend Prof Dr Pathmanathan. He told me what I read as your remark today.

All places of worship of/by Buddhists in Sri Lanka are blessed with the Hindu Pantheon. Also Sri Lankan Buddhists are the only people, other than Saiva Tamils, in the Globe to venerate, worship and pray continuously for 1800 years, a Saiva Tamil women - Kannaki as Paththini.

To fan the flames of hatred between Hindus (living in this island since time immemorial) and Buddhists (living in this island since the arrival of Buddha about 2600 years ago) is the worst any one do.

Unfortunately for Hindus and Buddhists, a powerful lobby with foreign funding are instigating local Hindus at Mullathivu to fan the flames of hatred.

Because of my stand on Kurundoor, few local Hindus at the behest of foreign funded lobbies, throw abuses at me using foul language to demean me.

Your scholarly statement or remark today, as appearing in the dailyceylon, will be an eyeopener for those misguided extreme elements among the Hindus Buddhists.

Archaeology is a helpful area to further amicability peace and harmony, making one proud of his/her ancestry and history. 

Please continue the good work. Sri Lanka is a paradise for Hindus and Buddhists.

Thanking you

குருந்தூர் அடிவாரத்தில் தொல்லியல் துறையினர் தமக்குச் சிறிய அலுவலகத்தைக் கட்ட முயன்ற பொழுது அன்டன் புள்ளைநாயகம் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றிருந்தார்.

நீதிமன்றத் தடையை மீறித் தொல்லியல் துறையினர் படையினர் உதவியுடன் மாடிக் கட்டிடம் ஒன்றை அமைக்க முயல்வதை நான் சென்றபோது கண்டேன்.

இப்பொழுது அதே இடத்தில் கட்டடத்தையும் புத்த விகாரையும் அமைத்து வருகிறார்கள். நீதிமன்றத் தடையை மீறாமல் தடைக்குத் தடை வாங்கி உள்ளோம் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குருந்தூரைச் சுற்றிய நிலங்களைக் கைப்பற்றி அங்கே சிங்கள புத்த மக்களை குடியேற்ற முனைகிறார்கள்.

மேலே ஏறி நான் பார்த்த பொழுது அங்கே சைவக் கோயில்களுக்கான தடயங்களைக் கண்டேன். புத்தர் கோயில்களுக்கான தடயங்களைக் கண்டேன்.

குருந்தூர் குன்றில் தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்துவதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தையும் அழைக்க வேண்டும்.

தமிழரின் தொல்லியல் தடயங்களே குருந்தூரில் உள்ளன. சிங்களவருக்கும் குருந்தூருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

புத்த எச்சங்களும் சைவ எச்சங்களும் தமிழர் விட்டுச் சென்ற எச்சங்கள்.

இக்காலப் போருக்கு பின்னரான சிங்கள புத்த வெற்றியின் மேலாதிக்க உணர்வுடன் சிங்கள ஆய்வாளர்களை மட்டும் தொல்லியல் துறை ஆய விடக்கூடாது.

இலங்கை இந்திய 1987 உடன்பாடு, குருந்தூர் மரபு வழி தமிழர் தாயகத்தில் உள்ளதை ஏற்கிறது.

முறையாகப் பார்த்தால் தொல்லியல், மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் வரவேண்டிய துறை.

குருந்தூர் குன்றில் புதிதாக எந்த கட்டிடத்தையும் அமைக்கக் கூடாது.  தமிழர்கள் புத்தர்களாக இருந்து கட்டியவற்றின் இடிபாடுகளில் சிங்கள புத்தர் மேலாதிக்கத்திற்கு இடமில்லை. 

புத்த சமயத்தவரே வாழாத பகுதியில் புத்த மேலாதிக்கத்திற்கு இடமில்லை.

சைவ புத்த முரண்பாடுகளை ஊதிப் பெருக்கின்ற கத்தோலிக்க கிறித்தவ அமைப்புகளுக்குத் தெரிந்து கொண்டே சைவரும் புத்தரும் இடம் கொடுக்கக் கூடாது.

No comments: