மறவன்புலவு க. சச்சிதானந்தன் அழைக்கிறேன்
மட்டிகளான மதமாற்றிகளைச்
செட்டிகுளத்தில் இருந்து விரட்ட
முட்டி மோதுமாறு
கட்டியம் கூறி அழைக்கிறேன்
வவுனியா மாவட்டம்
செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவு
மாணிக்கம் தோட்டத்துக்கு எதிரே உள்ள மீடியா தோட்டம்.
போராட்டத்தில் உடல் செயலிழந்த நிலையில் குடும்பத்துடன் வாழ்கின்ற அன்பர் எனக்கு அனுப்பிய குரல் பதிவு.
இந்தக் குரல் பதிவைக் கேட்ட பின்பும்
சைவ உலகம் கைகட்டி வாய் பொத்துகிறது.
சைவ உலகத்துக்கு முதுகெலும்பு இல்லையா?
சைவக் கழகங்கள் சைவ மன்றங்கள் சைவத் துடிப்புள்ள இளைஞர்கள் சைவச் சேனைகள் ஒன்று கூட வேண்டுமா வேண்டாமா?
2017 2018 ஆம் ஆண்டுகளில் செட்டிகுளப் பிரதேச செயலகத்தில் உள்ள 18 நிலதாரிப் பிரிவுகளுக்கும் சென்று
இத்தகைய கொடூரர்களின் மதவாதிகளின் மதமாற்றிகளின் செயல்பாடுகளைக் குறைத்து நிறுத்தினேன்.
அக் காலத்தில் மீடியா தோட்டத்துக்கும் சென்று அங்கு மதமாற்றிகள் வராது உழைத்த செட்டிகுளத்து இளைஞர்களை நான் எப்பொழுதும் பாராட்டுகிறேன்.
ஒவ்வொரு வீட்டிலும் நந்திக்கொடி நாட்டினோம்
தெருவெங்கும் நந்திக்கொடி நாட்டினோம்
குதிக்கால் பிடரியில் ஒட்ட மதமாற்றிகள் ஓடினார்கள்.
மதமாற்றிகள் புற்றுநோய் போன்றவர்கள்
விரட்டினாலும் விடமாட்டார்கள்
மீண்டும் வருவார்கள்
இப்பொழுது அங்கே வந்துள்ளார்கள்
சைவ உலகமே விழித்தெழு
முன்னாள் போராளிக்கு உதவி செய்.
செட்டிகுளம் செல்க
மீடியா தோட்டம் செல்க
வேண்டா விருந்தாளி
அழையாத அட்டுழியக்காரன்
ஏழைகளை அறிவு குறைந்தவர்களை
ஏமாற்றி
மதமாற்றும் அநியாயக் கும்பல்களை
அந்நியப் பணத்து அடாவாடியை விரட்டுவதற்குச்
சைவ உலகம் திரண்டு எழ வேண்டும்.
செட்டிகுளம் செல்க
மட்டிகளான மதமாற்றிகளை விரட்டுக
சைவ சமய நெறியாளர்களைக் காக்க கோயில்களைக் காக்க
அழைக்கிறேன்.
செட்டிகுளம் செயலகப் பகுதி
மீடியா தோட்டத்திற்கு
இந்த ஞாயிற்றுக்கிழமை
மதமாற்றி யாக்கோபு வருவாரா?
செபக் கூட்டம் நடத்துவாரா?
ஒலிபெருக்கி அமைப்பாரா?
காது கிழிக்க
நெஞ்சம் வலிக்க
காளி கோயில் அமைதியைக் கெடுப்பாரா?
ஊடகத்தாருக்கு
ஞாயிற்றுக்கிழமை புரட்டாதி 15 (02.10.2022)
சைவ சமயத்தவருக்கு மகிழ்ச்சியான செய்தி.
வவுனியா மாவட்டம்
செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவு
மதவாச்சி மன்னார் சாலை
தெற்கே மீடியா தோட்டம்
வடக்கே மாணிக்கம் தோட்டம்.
சிவசேனை வவுனியா மாவட்டத் துணைத் தலைவர் சிவசிந்தையர் அ. மாதவன்.
சிவ சேனை யாழ்ப்பாணம் மாவட்டம் சுண்டுக்குழிச் சிவசேனைச் சிவதொண்டர் செயமாறன்.
இருவரும் மீடியா தோட்டம் சென்றனர்.
அங்கே காளி கோயில்
எதிரே ஒரு வீடு
சைவப்பெண்
யாக்கோபு என்ற மதமாற்றி
சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வந்து அப்பெண்ணை மதம் மாற்றினார்.
மீடியா தோட்டத்திலுள்ள மற்றவர்களையும் மத மாற்ற முயற்சித்த காலத்தில்
2017இல் என்னை அங்கு அழைத்தார்கள்.
நான் சென்ற பின்பு
மீடியா தோட்டத்தில் ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் நந்திக்கொடி பறந்தது.
செட்டிகுளம் நகரத்திலிருந்து வந்த நான்கு ஐந்து இளைஞர்கள் என்னோடு சேர்ந்து கொண்டனர்.
வீறு கொண்டு எழுந்த இச்சைவ இளைஞர் முயற்சியால் யாக்கோபு மீடியா தோட்டம் வருவதை நிறுத்தினார். அங்கு வர முடியாதவாறு அவர் கால் முறிந்து மருத்துவமனையிலும் தங்கி இருந்தார்.
ஒரு பக்கத்தில் மாறினால் மறுபக்கத்தில் முளைக்கும் புற்று நோய்க் கூறே மதமாற்றி.
கடந்த வாரம் சிவா ஒலிப்பதிவை அனுப்பி இருந்தார்.
காளி கோயில் வாயிலில் ஒலிபெருக்கி. ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் செபச் செய்தி காதுகளைத் துளைக்கிறதே என்றார்.
யாக்கோபு மீண்டும் வந்து விட்டார் என்றார் முன்னாள் போராளி சிவா.
இன்று காலை
சிவசிந்தையர் மாதவன்
சிவ தொண்டர் செயமாறன்
இருவரும் மீடியா தோட்டத்திற்குச் சென்றனர்.
மதமாற்றிகள் நுழையாதீர்
செட்டிகுளம் சிவ பூமி
எனச் சுவரொட்டிகளை எங்கும் ஒட்டினர்.
ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் மீண்டும் நந்திக் கொடி பறந்தது.
சிவசிந்தையர் மாதவனின் நந்திக் கொடிகளைக் கண்டதுமே
சிவதொண்டர் செயமாறனின் சுவரொட்டிகளைக் கண்டதுமே
மாணிக்கம் தோட்டத்தில் இருந்து வந்த சைவத் தொண்டர்களைக் கண்டதுமே
குதிக்கால் பிடரியில் முட்ட யாக்கோபு மீடியா தோட்டத்திலிருந்து விரைந்து தப்பி ஓடினார்.
2017 யாக்கோபுவை விரட்டினோம்.
2022 இல் மீண்டும் யாக்கோபுவை விரட்டியுள்ளோம்.
யாக்கோபு அடாது வருவார்
சிவசேனையினர் விடாது விரட்டுவர்.
ஏறத்தாழ சிவசேனையினர்
இதுவரை 68 இடங்களில்
செபச் செய்திச் சபையினரை
விரட்டி மதமாற்றத்தைத் தடுத்துள்ளனர்.
கடந்த வாரம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி வளாகச்க செபச்செய்திக் கூட்டத்திற்கு தடை
இந்த வாரம் வவுனியா செட்டிகுளம் மீடியா தோட்டத்துச் செபச்செய்தி கூட்டத்திற்குத் தடை.
சிவ சேனையினர் சிவ பூமியைச் சிவ பூமியாகவே காப்போம்
சிவ சேனையினர் சைவ நெறிகளைக் கைக்கொள்வோருக்கு வலுவூட்டுவோம்.
No comments:
Post a Comment