Monday, October 24, 2022

கரு செயசூரியா 15.10.22







https://www.facebook.com/100082825707739/posts/pfbid0m65WB6MQpZsEbwrMqQ6UGsJtWgHFL3Atpnn6KAFU2wrjmvhrnZ1zuchbg92j5728l/?sfnsn=mo


 புரட்டாதி 28 சனிக்கிழமை (15 10 2022)


அனுப்புனர் 

இலங்கை வாழ் சைவ சமயிகள் சார்பில் 

சிவ சேனை 

மறவன்புலவு 

சாவகச்சேரி.


பெறுநர் 

இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பு

74 கிருலப்பனை நிழற்சாலை 

கொழும்பு 5.



தலைவர்

தேசபந்து கரு ஜெயசூரியா அவர்களே

களுத்துறை ஈன்ற மனிதத்தின் விழுமியமே..


இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பின் தகை சால் உறுப்பினர்களே


சிவ பூமியின் தலைநகருக்கு வந்துள்ளீர்கள்.


சைவர் ஆகிய 

இந்த மண்ணின் பூர்வீக மக்களாகிய 

நாங்கள் 

விருந்தினர்களாகிய ஆகிய 

உங்களை அன்போடும் மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் நல் விழைவுகளோடும் வரவேற்கிறோம்.


உங்கள் முயற்சிகளைப் பாராட்டுகிறோம். போற்றுகிறோம்.


மனிதநேயமும் நல்லிணக்கமும்

இராவணன் காலத்திலிருந்தே சிவ பூமியான இலங்கையில் தொடர்ந்தும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.


இலங்கையில் முருகனுக்கு விழா.

தைப்பூச நாள் அன்று பெருவிழா.

இலங்கை வாழ் இயக்கர் அனைவரும் கூடியிருக்கிறார்கள்.

சிவ பூமியில் சைவப் பெருவிழா.


விழாவையொட்டிய பகுதிக்கு, மகியங்கனைக்குப் புத்தரான சித்தார்த்தர் சைவப் பெரு விழா நாளன்று வருகிறார்.


சிவ பூமித் தலைநகரான யாழ்ப்பாணத்தாரின் கற்பனைக் கதையன்று நாங்கள் கூறுவது.


1600 ஆண்டுகளுக்கு முன்பு 

தாதுசேன மன்னரின் அவையில் வாழ்ந்த மகாநாமர் எழுதிய 

மகா வமிசத்தின் முதல் கதையில் 

புத்தர் வருகையில் 

35 36 37ஆவது வரிகளை நீங்கள் படித்தால்


புத்தர் முதல் முதலாக இலங்கைக்கு வரும்பொழுதே

இலங்கை சிவபூமியாகவே இருந்ததைக் கூறுவதைத் தெரிந்து கொள்வீர்கள்.


சிவ பூமிக்குச் சமணர் வந்தார்கள். 

அமராவதிக் கரையில் இருந்த தேரவாதர் வந்தார்கள்.

சிவ பூமியைச் சிவபூமியாகவே விட்டுச் சென்றார்கள். மாற்ற முடியவில்லை.


450 ஆண்டுகளுக்கு முன் வந்த சீனப் பயணி செங்கோ 

அதற்குச் சற்றுமுன் வந்த மொரோக்கோப் பயணி இபன் பட்டுட்டா 


யாவரும் தெற்கே தொண்டீச்சரம் தொடக்கம் வடக்கு நகுலேச்சரம் வரைக்கும் 

இலங்கை சிவ பூமியே எனக்  கல்வெட்டிலும் பயணக் குறிப்பிலும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.


இலங்கைச் சிவபூமி, இராவணன் காலத்திலிருந்தே சைவர்களின் தாயகம்.


வந்தேறி மதங்களே புத்தம் கத்தோலிக்கம் கிறித்தவம் முகமதியம்.


ஆனாலும் இலங்கை அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு இடமில்லை. புத்த சமயத்துக்கு முன்னுரிமை இடம் உண்டு.


என்ன கொடுமை? இக்கொடுமையை நிகழ்த்திய பின்பு, எவ்வாறு இந்தத் தீவில் சிவ பூமியில் மத நல்லிணக்கத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?


விகாரைகளைக் கட்டாதீர்கள்.

அன்பு உள்ளங்களைகா கட்டி எழுப்புங்கள். புத்தர் சொன்னார்.


அதை முற்றிலும் மறுதலித்து 

அன்பு உள்ளங்களைச் சிதைத்து 

அன்பு நெறியை விரட்டி 

அன்பைப் போதித்த புத்தரையே அவமதிக்கும் வகையில்

சிவ பூமி எங்கும் அண்மைக் காலமாக விகாரங்களை கட்டி வருகிறீர்கள்.


புத்த சமயத்துக்கு முன்னுரிமை அரசியலமைப்பில் என்ற படைக்கருவியைக் கையில் வைத்துக்கொண்டு.


அரசியலமைப்பில் புத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்ற நீங்கள் 

நல்லிணக்கம் பேசிச் சிவ பூமியின் தலைநகருக்கு வருகின்றீர்கள் எனில்,


அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்க முயல்கிறீர்கள் என்று நாம் கருதலாமா?


அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் நாளே இலங்கையில் இன மத நல்லிணக்கத்தின் தொடக்க நாள்.


கத்தோலிக்க கிறித்தவ காதல் போர் முகமதிய மத வெறியர்களை அடக்குவதற்கு மதமாற்றத் தடைச் சட்டத்தை அரசியலமைப்பில் உள்ளடக்குங்கள்


அரசியலமைப்பில் மதமாற்றத் தடைச் சட்டத்தைச் சேர்த்து, இலங்கையில் இன மத நல்லிணக்கத்தை உருவாக்குங்கள்.


குடியுரிமைச் சட்டங்கள் குற்றவியல் சட்டங்களின் கோவைகள், இன மத நல்லிணக்கத்தைக் கெடுக்கின்ற நச்சு விதைகளான விதிகளைக் கொண்டிருக்கின்றன.


நாங்கள் எந்த இனத்தவராயினும் எந்த மதத்தவராயினும் எந்தப் பிரதேசத்தவராயினும் எந்தப் பண்பாட்டவராயினும் எந்த வாழ்வியல் முறைகளைக் கொண்டவராயினும் 


குடியியல் குற்றவியல் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக அமைய வேண்டும். 


ஒரே மனிதம் ஒரே சட்டங்கள். 

இவற்றை இலங்கைச் சைவ சமயிகள் கோருகிறார்கள். 


இலங்கையில் 

இன நல்லிணக்கம் 

மத நல்லிணக்கம் 

அன்பு நெறியின் செழிப்பு 

அற வாழ்வின் முகிழ்ப்பு 

அருள் வேட்டலில் திளைப்பு 

யாவற்றிற்குமாக 

ஒரே நாட்டில் ஒரே சட்டம் அமைய வேண்டும் என இலங்கையில் உள்ள சைவ மக்கள் விரும்புகிறார்கள்.


இலங்கையில் இருந்து ஆங்கிலேயர் சென்ற பின்பு இன மத மேலாதிக்க உணர்வுடன் நடந்து கொண்டவர்கள் அனைவரும் கொடூரர்கள். கொடுமைகளிலிருந்து படிப்படியாக விலக்கிக் கொண்டு வந்தீர்கள். போர்க்காலக் கொடுமைகள் சொல்லில் அடங்கா.


இன மத நல்லிணக்கம் வேண்டுவோர் இவற்றை மறப்பர். கொடூரம் செய்தவர்களாக உணர்ந்தோர் மன்னிப்புக் கேட்பர்.


நடந்தவை நடந்தவை ஆகட்டும் 

நடப்பவை நல்லவையாகட்டும் 

என நீங்கள் 

மனதார நெஞ்சார உளமார விரும்பினால் 

கடந்த காலக் கொடுமைகளுக்குப் 

பூர்விகக் குடிகளான சைவத் தமிழரிடம் மன்னிப்பு கோருகிறோம் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்றுங்கள்.


1 இலங்கை அரசியலமைப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.


2. இலங்கை அமைப்பில் மதமாற்றத் தடைச் சட்டத்தை உள்ளடக்குங்கள்.


3. ஒரே மனிதம், ஒரே நாடு, ஒரே சட்டம், அனைவருக்கும் பொதுவான சட்டம், அனைவரையும் அரவணைக்கும் சட்டம், இதற்கு அமைவாகக் குடியியல் குற்றவியல் விதிக் கோவைகளை மாற்றுங்கள்.


4 ஆங்கிலேயர் சென்ற பின்பு சைவத் தமிழருக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்காக நிகழ்த்திய அட்டூழியங்களுக்காக இந்த நாடு வருந்துகிறது, அவர்களிடம் மன்னிப்பு கோருகிறது என நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்றுங்கள்.


சிவ பூமியின் தலைநகர் 

சைவ மக்களின் தலைநகர் 

யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளீர்கள்.


உங்களை வரவேற்கிறோம்.

இன மத நல்லிணக்கமே மனிதத்தின் இன்றைய தேவை.

அந்த முயற்சியில் நீங்கள் எடுத்துச் செல்லும் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் நாங்கள் நிற்போம்.

உங்களோடு உள்ளோம்.


எங்களை அழைத்தீர்கள். 

எங்கள் கருத்துக்களைக் கேட்டீர்கள்.

நன்றி.

இங்ஙனம்

இலங்கைச் சைவர்கள் சார்பில் 

சிவ சேனை

அ. மாதவன்

சிறீந்திரன்

செயமாறன்


ஊடகத்தாருக்கு 

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவசேனை

இன்று சனிக்கிழமை 15.10.2022

முன்னாள் நாடாளுமன்ற அவைத் தலைவர் களுத்துறை ஈந்த மனித விழுமியம்
கறை படாத கைவிரல்கள்
கரு செயசூரியா யாழ்ப்பாணத்தில்

தொடர்வண்டி நிலையத்துக்கு அருகே 
வடக்கு வாயில் விடுதியில் North Gate 
யாழ்ப்பாணம் மாவட்டத்துக் குடிசார் சமூகத்தைச் சந்திக்கிறார்.

சிவ சேனை அமைப்பினரே வருக 
இலங்கையின் 
தவ வாழ்வு நல்லிணக்கக் கருத்துகளைத் தருக
என அழைத்துள்ளார்.
(கடிதப் படி இணைப்பில்)

சிவ சேனை சார்பில் 
நான்கு அடிப்படைக் கருத்துகளை 
இன மத நல்லிணகத்துத்துக்காக 
முன் வைக்கிறோம்

எட்டுப் பக்கக் கடிதத்தை வாசித்துக் கையளிக்கிறோம். சிங்களத்திலும் மொழிபெயர்த்துச் சொல்கிறோம்.

ஊடகத்தாரே வருக வருக
தாடகைக் கொடூரர்களை அடக்கி
வாடகைச் சட்டங்களை விலக்கி
ஆடகச்சீர் இன மத நல்லிணக்கத்தைப் பெருக்கும் 
அரும் கருத்துக்களை முன்வைக்கிறோம் 
தேடகத்தாரான மக்களுக்கு எடுத்துச் செல்ல
வருக வருக

No comments: