Sunday, October 23, 2022

சரசோதிமாலை


இலங்கையின் இன்றைய Dondra head, அன்றைய தென்னாவரம். சிவன் கோயில் தென்னாவர நாயனார் கோயில். திருமால் கோயில் ஓராயிரம் நடன மணியர் ஆடும் அரங்கு கொண்டது.

பல்லவ மன்னர் சிம்ம விட்டுனுவும் நரசிம்ம பல்லவனும் திருப்பணி சேவித்த திருக்கோயில்கள்.

6th century Greek merchant - Cosmas Indicopleustas பயணக் குறிப்புகளில் யாழ்ப்பாண அரசின் மேல் ஆட்சியில் இக்கோயில்களில் இருந்தன என்கிறார்.


திருமால் கோயிலுக்காக சந்தனச் சிலை வடிவம் மாணிக்கவாசகர் கால முதலாம் சேனன் கொடுத்ததை Harry Charles Purvis Bell கேகாலை மாவட்டத்து ஓலை ஏடுகளில் படித்ததாக எழுதியுள்ளார்.


தென்னாவரத்தைச் சேர்ந்த போசராசர் நான்காம் பராக்கிரமபாகு அரசவைப் புலவர். அரசர் கேட்டுச் சரசோதி மாலையை இயற்றியவர்.


இரண்டாம் பராக்கிரமபாகு தொடக்கம் ஏழாம் விசயபாகு வரை (1271-1502) மன்னர்கள் தென்னாவரம் கோயில்களுக்கு நிவந்தங்களை அளித்ததை எழுதி வைத்துள்ளார். கல்வெட்டாக விட்டுச் சென்றுள்ளனர். அங்கு சதுர்வேதி மங்கலங்களை அமைத்து ஆதரித்துப் போற்றி வந்தனர்.


மொரொக்கோ நாட்டுப் பயணி இப்பன் பற்றுற்றா (1344) தென்னாவாரத்தில் திருமால் கோயிலில் ஓராயிரம் நடனமணிகள் ஆடிய விழாவைக் கண்டதாக எழுதி வைத்துள்ளார்.


சீனத் தளபதி செங்கோ (1414) பொன் மணி முத்து பட்டு என விளைவு வந்த சீன பொருள்களைத் தென்னாவர நாயனார் கோயிலுக்குக் காணிக்கையாக்கினார். தென்னவர நாயனார் வாழ்த்துடன்... எனத் தொடங்கும் தமிழ்க் கல்வெட்டை கோயிலருகே விட்டுச் சென்றுள்ளார்.


3000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நாக மன்னர்கள் இயக்க மன்னர்கள் தமிழக மன்னர்கள் சிங்கள மன்னர்கள் பாரசீக கிரேக்க மொரோக்கோ சீனப் பயணிகள் என அனைவரும் போற்றி வழிபட்டுப் பாதுகாத்துத் திருப்பணி செய்து வந்த தென்னாவரம் கோயில்களைக் கொடூரன் கத்தோலிக்கன் தோசை சொயிசா (1588) இடித்துத் தரைமட்டமாக்கினான்.


புத்தர் கண்ணீர் வடித்தனர் 

சைவர் கண்ணீர் வடித்தனர். 


தென்னவர நாயனார் அமைந்திருந்த கோயில் நிலத்தில் உலூசியா தேவாலயத்தை கத்தோலிக்க கட்டினர்.


நாக இயக்க பல்லவ சோழ கிரேக்க பாரசீக மொரோக்கோ சீன சிங்கள மக்கள் யாவர் மனதிலும் நிறைந்திருந்து அருளாட்சி செய்த தென்னவர நாயனார் திருக்கோயிலை மீளமைக்க வேண்டும்.


புலமைக் களங்கள் மீண்டும் அமைய வேண்டும். அங்கே போசராசர்கள் புலமை முற்றியோர் வாழ்ந்து மனித மேம்பாட்டிற்குப் பங்களிக்க வேண்டும். 


சரசோதி மாலைகளைப் போன்ற புலமைக் குவைகள் கற்றல் களஞ்சியங்கள் தென்னாவர நாயனாருக்கும் திருமாலுக்கும் படையலாக வேண்டும். 


வேண்டத் தக்கது அறிவோய் நீ 

வேண்ட முழுதும் தருவோய் நீ

No comments: