ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் தனது ஜனாதிபதி செயலகத்தில் நந்தி கொடி ஏற்றி தீபாவளி கொண்டாடியதை சாதனை என செய்தியாக்குபவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டியவை
கடந்த 13 ஆண்டுகளில்,
திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீ மலை நீலியம்மன் சைவ கோயிலை அழித்து பாசன பப்பாத ராஜமஹா விகாரை என்கிற பௌத்த விகாரையை கட்டி இருக்கின்றார்கள்
திருகோணமலையில் குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் முழுமையாக அழிக்கப்பட்டு அதே கோவில் இடத்தில "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில் விகாரை நிர்மாணித்து இருக்கின்றார்கள்
இராவணன் காலத்துக்குரிய கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் தொல்லியல் திணைக்களத்துக்கு கீழ் கொண்டு வர பட்டு பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்கள்
தென்னமரவடி கந்தசாமி ஆலயத்தை பௌத்த மத பூமி என அறிவித்து இருக்கின்றார்கள்
முல்லைத்தீவு மாவட்டத்திள்ள செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக புத்தர் சிலை ஒன்றை நிறுவி இருக்கின்றார்கள்
திருக்கோணேஸ்வரம் ஆலய புனரமைப்பு பணிகளை தடுத்து கோகர்ண விகாரை மீது தான் குறித்த ஆலயம் கட்டப்பட்டு இருப்பதாக சொல்லுகின்றார்கள் .
காங்கேசன்துறையில் உள்ள சைவ ஆலயம் இடிக்கப்பட்டு ஆலய சூழலில் கெமுனு விகாரை என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றை நிறுவி இருக்கின்றார்கள்
மட்டக்களப்பின் தொப்பிகல (குடும்பிமலை) சூழல் பௌத்த மத பகுதியாக அடையாளம் காட்ட தொல்லியல் திணைக்களம் ஊடக கடுமையாக முயற்சிக்கின்றார்கள்
தையிட்டி பாடசாலைக்கு சூழலின் கலைவாணி வீதிக்கு அருகில் தனியார் காணியை ஆக்கிரமித்து திஸ்ஸ விகாரை கட்டி இருக்கின்றார்கள்
நாவற்குழியில் சமித்தி சுமண விகாரை என்கிற பௌத்த ஆலயத்தை அரச காணியில் கட்டி திறந்து வைத்து இருக்கின்றார்கள்
தையிட்டியில் உள்ள தனியார் காணியில் இப்போது 100 அடியில் கட்டப்பட்டு வரும் பௌத்த விகாரைக்கு சில மாதங்களுக்கு முன்னர் கலசம் வைத்து இருக்கின்றார்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள சுழிபுரம் பறாளை முருகன் கோவில் சூழலில் பௌத்த மத அடையாளங்களை நிறுவ முயற்சி செய்து வருகின்றார்கள்
இப்போது கூட திருகோணமலை மூதூர் கிளிவெட்டி முத்துமாரி அம்மன் சைவ ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க முயற்சிக்கின்றார்கள்
இதற்கு மேலதிகமாக 2013 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் (1823/73 இலக்கம் ) கீழ் வடக்கு கிழக்கில் உள்ள 32 ஆலயங்களில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்கள்
உருத்திரபுரம் சிவன் கோவில், மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயம், வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம்
மட்டக்களப்பு, சித்தாண்டி முருகன் ஆலயம் போன்ற பாரம்பரியமான சைவ ஆலயங்களில் கூட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக மேற்குறித்த வர்த்தமானி மூலம் அறிவித்தல் வெளியிட்டு இருக்கின்றார்கள்
கோட்டாபய ராஜபக்சே நியமித்த தனி சிங்கள ஜனாதிபதி செயலணி ஊடக கிழக்கு மாகாணத்தில் மட்டும் 2,000 இற்கு மேற்பட்ட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்கள்
இது போதாதென்று சகல மாவட்டங்களிலும் தனியார் மற்றும் அரச காணிகளில் எண்ணிலடங்காத பௌத்த மட அடையாளங்கள் தொடர்ச்சியாக நிறுவப்பட்டு வருகின்றது
குறிப்பாக நிலமட்டத்தில் இருந்து உயரமாக இருக்கும் சகல இடங்களிலும் பௌத்த அடையாளங்களை நிறுவி இருக்கின்றார்கள்
இதனால் தான் தமிழ்சமூகம் அரசியலமைப்பின் கபௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கும் உறுப்புரிமை 9 ஐ நீக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரி வருகின்றது
அதே போன்று வடக்கு கிழக்கில் உள்ள சைவ ஆலயங்கள், நில மட்டத்திலிருந்து உயரமாக இருக்கும் பகுதி எங்கும் நிறுவப்பட்டுள்ள பௌத்த மத அடையாளங்களை நீக்க வேண்டும் எவ்வித என்பதே தமிழ் சமூகத்தின் மற்றுமொரு கோரிக்கையாக இருக்கின்றது
இதற்கு பதிலளிக்கோவோ தீர்வு தராத திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் தன்னை 'லிபரல்' ஆக அடையாளம் காட்ட நந்தி கொடி கட்டல் போன்று நடத்தும் நாடகங்கள் குறித்து அக்கறை கொள்ள வேண்டியதில்லை
இவ்வாறான நாடகங்கள் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களுக்கு புதிது அல்ல
No comments:
Post a Comment