**கடந்த ஆண்டு அந்தமான் சென்று வந்தோம், பயணத்தில் பல வரலாற்று முக்கியத்துவம் அறிந்தோம் அதை எல்லாம் விட இலங்கை சிவசேனா கட்சி தலைவர் மதிப்பிற்குரிய ஐயா சச்சிதானந்தம் அவர்கள் என்னை பாராட்டி எழுதிய இந்த கவிதை 👇👇👇👇👌👌👌👌 வார்தைகள் இல்லை எனக்கு ஐயா என்னாளும் உங்களை என் தந்தையாக எண்ணி வணங்குகிறேன்*** 🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
*ஆனந்தர் வாழ்க
மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை இலங்கை
புலனம் +94
772754864*
ஆனந்தச் சுற்றுலா அந்தமான் சுற்றுலா
ஆனந்தத் தமிழரின் நக்கா வரத்திலே
ஆனந்த உணர்வான அந்திவான் கடலிலே
ஆனந்த மயமான கடலிலே கரையிலே
ஏனிந்தக் கொடுமை ஏற்றனர் சிறையிலே
ஆனந்த சுதந்திரம் அடைந்திட வேண்டியே
ஆனந்த வாழ்வினர் அடர்ந்த காட்டுளோர்
ஆனந்தம் கொண்டனம் அவர்தமிழர் என்பதால்
ஆனந்தம் ஊட்டினர் நம்தமிழ்ச் சங்கத்தார்
ஆனந்தம் அந்தநாள் நாடாளுமன்றார் வீட்டிலே
ஆனந்தம் பாரதமக்கள் கட்சியார் நடுவிலே
ஆனந்தம் சேவகர் பாரதி புகழிலே
ஆனந்தம் அருச்சுனர் சம்பத்தர் வழியிலே
ஆனந்தம் இந்துமகா சபையார் குரலிலே
ஆனந்தம் அளித்தவர் பிரான்மலை மரபினர்
ஆனந்தம் செந்திலார் கண்ணனார் அணைப்பிலே
ஆனந்தம் கண்டனன் பதினெண்மர் கண்களில்
ஆனந்தம் அனைத்தையும் தந்தவர் ஆனந்தர்
ஆதலால்
ஆனந்தருக்கு நான் நன்றி உடையனன்
ஆனந்தர் இல்லமும் சுற்றமும் வாழ்க வாழ்க
*மிக்க நன்றி ஐயா* 🥰🙏
*என்ன தவம் செய்தேனோ தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கிடைக்க*🙏🙏🙏
*நா.ஆனந்த்*
*மாநில அமைப்பு குழு*
*பொதுச்செயலாளர்*
*இந்து மக்கள் கட்சி -தமிழகம்*
No comments:
Post a Comment