23 தை 2048 (05.02.2017) ஞாயிறு, ஆத்திரேலியா, தவுண்சுவில்
அவ்வையார் நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். அதியமான் அவரது அருமை நண்பர்.
சுந்தரர் நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர், சிவபெருமான் அவரது தோழர்.
முதல் நாள் பார்த்த உடனேயே நட்பு முகிழ்க்கும்.
இடையீடின்றித் தொடரும்.
எத்தனை நாள்கள் கழிந்தாலும்
முதல் நாளில் கொண்ட
அன்பு, மதிப்பு, ஆர்வம், இனிமை, அரவணைப்பு
என்பன கொஞ்சமும் குறையாது தொடரும்.
அவ்வையாரும் சுந்தரரும் சொல்கிறார்கள்.
ஒருநாட் செல்லலம்
இருநாட் செல்லலம்
பலநாட் பயின்று
பலரொடு செல்லினும்
தலைநாட் போன்ற
விருப்பினன் மாதோ ` (புறம் 101)
சங்கை யொன்று மின்றியே
தலைநாள் கடைநா ளொக்கவே. (தி07077002)
1960 ஆனி தொடக்கம் இன்றைய இந்த மணித்துளி வரை, 56 ஆண்டுகள், எனக்கும் கவிஞர் காசி ஆனந்தனுக்கும் இடையே நட்பு அவ்வையாருக்கும் அதியமானுக்கும் போல, சுந்தரரருக்கும் சிவபெருமானுக்கும் போல ஆழமானது இனிமையானது, காலத்துள் கறை கொளாதது.
கவிஞர் காசி ஆனந்தனின் மூத்த மகள் அமுதநிலா மருத்துவராக தவுண்சுவில் நகரில் உளார்.
மருகர் மருத்துவர் இரகு,
இருவரும் ஈன்ற இரு பெண் குட்டிகள்,
தவுண்சுவில் நகரின் மூத்த தமிழர் மருத்துவர் நற்குணம் இணையர்,
தவுண்சுவில் தமிழச் சங்கம் சார்ந்த மருத்துவர் அகிலன்
யாவரையும் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தேன்.
தை 30, 2048 (12.02.2017) ஞாயிறு, மாலை 1500 மணி
ஆத்திரேலியா சிட்னி, துங்கபே சமூக மன்றம்.
தமிழர் நல்லுறவுகள் Tamil Consortium ஓன்று கூடல். ஈழத்து அரசியல் நிலை பற்றிய கருத்துக் களம்.
மாசி 2, 2048 (14.02.2017) செவ்வாய், ஆத்திரேலியா, கன்பெரா, நாடாளுமன்ற வளாகம்
இரு முக்கிய நிகழ்வுகள் பக்கத்துப் பக்கமாக அறைகளில்.
1. தமிழர் நடாத்திய பொங்கல் விழா.
2. இலங்கைத் தலைமை அமைச்சர் இரணில் விக்கிரமசிங்காவுக்கு வரவேற்பு.
பொங்கல் விழாவில் கலந்துகொண்டேன். குத்துவிளக்கேற்றித் தொடக்கினேன்.
ஆத்திரேலிய தமிழக் கலை மட்டும் பண்பாட்டுக் கழகத்தினரும் புலம்பெயர்ந்தார் வளநிலையும் இணைந்து நடத்திய விழா.
சிட்னி, கன்பெரா, மெல்போர்ண், அடலாயிடு. பேர்த்து. மக்கே என ஆத்திரேலியாவின் பல்முனைகளில் இருந்தும் தமிழர் வந்திருந்தனர்.
நாடாளுமன்ற மேலவை, கீழவை உறுப்பினர் பலர், இணை அமைசசர், எதிர்க் கட்சித் துணைத் தலைவர், பச்சையக் கட்சித் தலைவர் எனத் திரண்டு வந்திருந்தனர்.
பொங்கல் விழா அறிமுகம், இசை, நடனம் என முத்தமிழும் இளையோருடைய பங்களிப்பு.
கவிதை, உரை வீச்சு, வயது வந்த தமிழரும் தமிழரல்லாத ஆத்திரேலியரும் பங்கேற்ற நிகழ்வுகள்.
நினைவு அஞ்சல் தலையும் வெளியிட்டனர்.
வந்திருந்தவர்களுள் பெரும்பாலோர் எனக்கு அன்பர்கள்.
14.02.2017 செவ்வாய், ஆத்திரேலியா, கன்பெரா, நாடாளுமன்ற வளாகம், பொங்கல் விழா, தமிழ்ப் பெண்களாகப் புடைவை கட்டி வந்து கலந்து கொண்டவர் நாடாளுமன்ற உறுப்பினர் சூலி ஒவென்சு அம்மையாரும், அவர்தம் உதவியாளரான பெண்மணிகள் இருவரும்.
பொங்கல் விழா நிகழ்ச்சி நடந்ததை நாடாளுமன்ற உரையிலும் அம்மையார் தெரிவிக்கிறார்.
அந்த நிகழ்வில் நானும் விருந்தினராகக் கலந்து கொள்ளும் பேறுற்றேன்.
https://www.facebook.com/JulieOwensMP/videos/1248959265181138/?pnref=story
மாசி 4, 2048 (16.2.2017) வியாழக்கிழமை காலை 1100 மணி
ஆத்திரேலியா, சிட்னி பள்ளவயல் Strathfield,இல்லப்புதர் Homebush மூத்த குடிமக்கள் ஒன்று கூடல்.
பாலைக் காய்ச்சி, உறையிட்டுத் தயிராக்கி, தயிரைக் கடைந்து, நெய் எடுத்தால் போன்று யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தைக் கடைந்ததால் தெளிந்த புலமையும் ஞானமும் சார்ந்த மூத்த சான்றோர் வந்திருந்தனர்.
அவர்களின் அறிவு ஆற்றல் திறமை யாவும் வியத்தகு சிறப்பின. யானையை அண்ணாந்து பார்த்த சிற்றெறும்பாய் நான் அங்கு நின்றேன்,
ஆத்திரேலியத் தொல்குடிகள் என்ற தலைப்பில் செய்திகள் சொன்னேன். நான் சொன்னவை முன்னரே என் வலைப்பூவில் சொன்னவையே.
http://sachithananthan.blogspot.com.au/…/aboriginals-and-ta…
மாசி 4, 2048 (16.2.2017) வியாழக்கிழமை மாலை 1500 மணி
ஆத்திரேலியாவில், தலைநகரப் புலம் தவிர்ந்து 7 மாநிலங்கள் (படம் பார்க்க). ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நாடாளுமன்றம். தலைநகர் கன்பெராவில் கூட்டரசு நாடாளுமன்றம்.
அனங்கன் பாபு சனார்த்தனன் மதுரையர். அவருடன் கண்ணன் சிதம்பர பாரதியும் மதுரையர்.
ஆத்திரேலியாவில் வாழும் 100,000 தமிழருள் (40,000 தமிழ் நாட்டவர், 60,000 ஈழத்தவர்) அனங்கன் பாபு சனார்த்தனன் சார்ந்த ஆத்திரேலியத் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தினர் எடுத்த விழாக்கள் தமிழர் திருநாள் விழாக்கள்.
வீட்டில் விழா, மன்றத்தில் விழா என்ற நிலை மாறி ஆத்திரேலிய நாட்டின் நாடாளுமன்றங்களில் தமிழத் திருநாள் விழா என எடுத்தவர்கள் இவர்கள்.
14.2.2017 அன்று தலைநகர் கன்பெராவில் கூட்டரசு நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்து விழாவாக்கினர்.
16.2.2017 அன்று தென் வேல்சுப் புதூர் நாடாளுமன்றத்தில் மாநிலச் சட்ட அவை உறுப்பினர்களை அழைத்து விழாவாக்கினர். மாநில அமைச்சர் ஒருவர், சேலை கட்டியவராய் எதிர்க் கட்சியின் நிழல் அமைச்சர் ஒருவர், இந்தியத் துணைத் தூதர் உள்ளிட்டோருடன் தமிழர் தம் மரபுடையில் திரண்டு கலந்து மகிழ்ந்து பொலிந்த விழா.
நாகசுரம், தவில் இசை இழையோட, மாவிலைகள், தோரணங்கள், வாழைகள், கரும்புகள், கோலங்கள், நிறைகுடம், குத்துவிளக்கு, மலர்மாலை, பொன்னாடை, உரைவீச்சுகள், இயல் இசை நடனக் கலை நிகழ்ச்சிகள், பொங்கல் பொதிகள் எனத் தமிழலல்லவா மாநில நாடாளுமன்ற வளாகத்துள் விரிந்தது, மிகுந்தது, நிறைந்தது, பொலிந்தது, மிளிர்ந்தது, ஒளிர்ந்தது.
தேமதுரத் தமிழ்விழா உலகெங்கும் பரவ வழிசெய்த அனங்கன் பாபு குழாமுக்கு வாழ்த்துகள்
மாசி 7, 2048 (19.02.2017) ஞாயிறு 1000 மணி
இல்லப்புதர் Homebush பாடசாலை, சிட்னி, ஆத்திரேலியா.
கொசு ஒன்று உங்கள் மேனியில் அமர்கிறது. கொசுவைக் கண்டிருக்கலாம். தொடுதலால் உணர்ந்திருக்லாம். கண், மெய் இரண்டும் காட்சி + தொடு தகவல்களை அனுப்புகின்றன.
மனம் அத்தகவலைப் பெறுகிறது.
ஏற்கனவே பதிவாகிய தகவல்களுடன் ஒப்பு நோக்குகிறது.
பதிவாகிய தகவல்கள் இருக்குமிடம் சித்தம். ஒப்பு நோக்குவது சித்தம். கொசு என்பதைத் தெரிவிப்பதும் சித்தம்.
கொசுவை, அப்படியே விடு, கடிக்கட்டும் என்றோ, விடாதே விரட்டு என்றோ, விடாதே கொல் என்றோ மூன்று வழிகளைத் தருவது புத்தி.
இந்த வழிகளுள் ஒன்றைச் செயலாக்குவதே முனைப்பு (அகங்காரம்).
திரு நெறிகள் 14. அவை சைவ சித்தாந்த சாத்திரங்கள் என்பர். அவற்றுள் மனம் தொடர்பான இச் செய்திகள் மலிந்து கிடக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிறு அறிவுத் தேடலில் கூடும் அன்பர்களைக் கண்டேன். மேற்கண்ட செய்திகளையும் பிற கணிதவியல், அளவையியல், உளவியல், வாழ்வியல், உயிரியல் சார்ந்த செய்திகளையும் இறை உணர்வு சாரப் பயிலக் கூடுவர். நானும் அன்று அவர்களுடன் சேர்ந்துகொண்டேன்.
ஆத்திரேலியா வந்தபின்னும் பல்வேறு பணிகளுக்கிடையேயும் வயதால் முதிர்ந்தாலும் உள்ளத்தால் மாணவராய் வந்திருந்தோருடன் தேடலில் மகிழ்ந்தேன்.
மாசி 7, 2048 (19.02.2017) ஞாயிறு பிற்பகல் 1500 மணி
ஆத்திரேலியா, சிட்னி, ஓபேர்ண் தமிழ்ச் சங்கம்.
சுண்ணம் Calcium உடலில் குறைந்தால் எலும்பின் அடர்த்தி குறையும். எளிதில் எலும்பு உடையும். வயது ஏற ஏற எலும்பு அடர்த்தி குறையக் குறைய எலும்பு முறிவு எளிதாகும். ஆண்களை விடப் பெண்களுக்கே இந்த நிலை கூடுதலாக உளது.
இந்த நோயை விரட்டுவதற்கான வழிகளை அழகு தமிழில், இனிய குரலில், பொறுமையாக விளக்கியவர் மருத்துவர் பீட்டர் குருசுமுத்து. தமிழ் பொலிந்த நிகழ்விடம் தமிழ்நாடல்ல, ஈழமல்ல, ஆத்திரேலியா.
சூரிய மண்டலம், வானத்தின் 360 பாகை வட்டத்தில் 30 பாகைக்கு ஒன்றாக 12 வீடுகள், வியாழன், சனி ஆகிய கோள்கள் இந்தப் 12 வீடுகளுக்கு நேராக வருதல், நிலை மாறுதல், அவற்றால் பூமியில் விளையும் ஈர்ப்பு மாற்றம், அம்மாற்றம் ஒவ்வொருவர் வாழ்வில் தரும் நல்லன அல்லன.
எடுத்துக் கூறியவர் திரு. பஞ்சாட்சரம் அவர்கள்.
100க்கும் கூடுதலான தமிழர் அங்கிருந்தனர். 12 வயது மாணவனின் தமிழத் தாய் வாழ்த்துப் பாடலில் தொடங்கி, திரு. நவரத்தினவேல் அவர்களின் நன்றியுரையுடன் யாவும் தமிழில் நிறைந்த நிகழ்ச்சியில் நான் இடைச் செருகல். குத்துவிளக்கேற்றித் தொடக்கினேன், சில மணித்துளிகள் பேசினேன்.
மாசி 2048 (04.03.2017) சனிக்கிழமை
ஆத்திரேலியா, சிட்னி நகரில் வாழும் பல்லின மக்களுடன் கலந்து, அவர்களின் பண்பாட்டு முறைகளைக் கண்டு, கேட்டு மகிழ்ந்தேன்.
வங்காளியர், பொசினியர், பிலிப்பினோயர், சீனர், சிந்தியர், ஆங்கிலேயர், தமிழர் பண்பாட்டுக் கோலங்கள் கண்டேன்.
மாசி 25, 2048 (09.03.2017) வியாழன்,
தன்னம்பிக்கை ஊட்டும் தமிழ்ப் பாடல் இன்று படித்தேன். அனுப்பியவர் சிங்கப்பூர் திரு. சிவசுப்பிரமணியம் இராசசுந்தரம். பாடலுக்குப் பொருள் என்னது. தவறுகள் திருத்துவேன். நன்றி
வானம் இருண்டது.
புயல் பொங்கியது.
சூறைக் காற்றுச் சுழன்றது.
எரிமலை கக்கியது.
நிலம் நடுங்கியது.
பூமி அச்சில் வேகமாகச் சுழன்றது.
மலைகள் இடிந்தன.
தலை கீழாகின.
நிலை தடுமாறின.
இடம் பெயர்ந்தன.
கடல் கொதித்தது.
கடல் வாழ்வன அழிந்தன.
சூரியன் பெயர்ந்தது.
சந்திரனைக் காணவில்லை.
ஊழிக்கு ஊழியானது.
கவலை எனக்கேது?
என்னால் முடியும்.
இந்த நிலையிலும் பணி தொடரும்.
தொண்டு தொடரும்.
ஏனெனில் நான் சிவனின் தொண்டன்.
இன்பமே என்நாளும் துன்பமில்லை.
வாலிதாம் இன்பமாம் இந்தப் பிறவி.
மனித்தப் பிறவியும் வேண்டுவதே.
திருமுறைப் பாடல் பார்க்க
வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா வொருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே.
தமிழ்ப் போராளி சிவ வீரர் அப்பர் தி04112008
மாசி 26, 2048 (10.03.2017) வெள்ளி
ஆங்கிலேயர் தொழிநுட்பக் கண்டுபிடிப்புகளைத் தொடர்ச்சியாகச் செய்து புதுப் பெயர்களைச் சூட்டி வர,
தமிழர் அப்பெயர்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதிலேயே காலம் கடத்துவர், புதிதாகத் தொழிநுட்பத்தைத் தாமே உருவாக்கார் என்ற கருத்து,
முகநூலில் திரு. வீரகத்தி தனபாலசிங்கம் அவர்களின் பக்கத்தில் அன்பர் ஒருவரின் துணைக் கருத்தாகப் பதிவாயிற்று.
என் கருத்தையும் அங்கு பதிவு செய்தேன். உங்களுடன் பகிர்கிறேன்.
தமிழர் 0 கண்டு பயனாக்கிய காலங்களில் 0 மற்றும் தசம் தெரியத மக்கள்.
உலகம் உருண்டை எனத் தமிழர் கண்ட காலங்களில் உலகம் தட்டை என்றும் பின்னர் உலகம் உருண்டை என்று சொன்னவரைக் கொடுஞ் சிறையில் அடைத்தவர்கள்.
குறுந்தொகையில் மலர்களின் பட்டியலைத் தமிழர் அடுக்கிய காலத்தில் தாவரங்கள் பற்றிய அறிவே இல்லாதவர்கள்.
அறிவியலிலும் தொழிநுட்பத்திலும் துலங்கிய தமிழரை அடிமை கொண்டு, அவர்களுள் ஒரு பகுதியைக் கட்டாயமாகவும் சோறு கொடுத்தும் மதம் மாற்றி, அவர்களைத் தங்களுக்காப் பேச வைத்துக்கொண்டிருப்பவர்கள்.
தமிழரின் அறிவியல் வளர்ச்சியைத் தடுத்து, செல்வங்களைக் கொள்ளையடித்துத் தம் நாடுகளைக் கட்டி எழுப்பினர்.
கடலில் கப்பல் கட்டும் கலையிலாயிலென், நிலத்தில் கட்டடம் கட்டும் கலையிலாயிலென், வானத்தில் விண் மீன்களைக் கணக்கிடும் கலையிலாயிலென், சூரியனே உணவு உற்பத்தியின் கரு ன்பதால் பொங்கல் பொங்கிச் சூரியனுக்கு நன்றி கூறுவதிலாயிலென், அறிவியல் சார் தொழிநுட்பத்தில் தமிழரின் வளர்ச்சி முயற்சி பற்றிய நூல்கள் பல உள.
உலகமயமாக்கல் என்பது ஐரோப்பிய மயமாக்கலே அன்றி வேறல்ல. 21ஆம் நூற்றாண்டு ஆசியரைக் கிறித்துவ மயமாக்கும் நூற்றாண்டு என ஐரோப்பிய தத்துவத் தலைவரான போப்பாண்டவர் கூறியதைத் தமிழர் சவாலாகவே எதிர்கொள்வர்.
கடந்த 60 ஆண்டுகளில் தமிழர் உருவாக்கிய தொழிநுட்ப வல்லுநர்கள், திருநெல்வேலி மற்றும் மதுரைச் சிறுமிகள் முதலாகச் சிதம்பரத்துச் சுந்தர் பிச்சை வரை இலட்சக் கணக்கான தமிழரின் தொழிநுட்ப அறிவு, மேனாட்டுத் தொழிநுட்ப வளர்ச்சிக்குத் தமிழர் இட்ட பிச்சை.
சிலிக்கன் பள்ளத்தாக்கில் பணியாற்ற உலகெங்கும் உள்ள மூளை வளத்தைக் கொண்டு செல்ல, கீழைத் தேயத்தில் கொள்ளை கொண்ட செல்வமும் ஆபிரிக்க நாட்டுக் கறுப்பரின் உடல் உழைப்பும் அடித்தளங்கள்.
தமிழர் தொழிநுட்பத்தில் வளர்வோம். அதைத் தடுக்க மேனாட்டாரும் அவர்கள் தமிழரிடையே விட்டுச் சென்ற மேனாட்டு ஒட்டிகளும் கொள்ளும் முயற்சி முழுமை பெறாது. காலம் விடை தரும்.
மாசி 27, 2048 (11.03.2017) சனி.
ஆங்கிலத் தொழிநுட்பச் சொற்களுக்குத் தமிழாக்கம் தேவையா? அப்படியே எழுத்துருப் பெயர்ப்போ transliteration ஒலிபெயர்ப்போ transcription போதுமே என்ற கருத்தை முகநூலில் கண்டதும் என் கருத்தைப் பதிந்தேன். விரிவாக்கி உங்களுடன் பகிர்கிறேன்.
பார்க்க
http://sachithananthan.blogspot.com.au/2017/03/blog-post.htm
பங்குனி 2, 2048 (15.03.2017).
முகநூலும் மின்னஞ்சலும் வலைப்பூவும் தமிழ் வளர்க்கும் கருவிகள்.
போராளி, பேராசிரியர் சிங்காரவேலர் இலக்குவனார் (1909-1973). தமிழாசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். பேராசிரியராய், பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக உயர்ந்தார். கற்றுத் துறை போகிய தமிழறிஞர் அவர்.
இந்தி எதிர்ப்புப் போர், தமிழ்வழிக் கல்விப் போர் எனப் போராடிச் சிறை சென்றவர். தொல்காப்பியம் முழுவதையும் ஆங்கிலத்துக்குத் தந்தவர்.
இவரது 11 மக்களுள் இரண்டாமவர் பேராசிரியர் மறைமலை. நான்காமவர் பேராசிரியர் திருவள்ளுவன். இவர்கள் இருவருடன் நெருங்கிப் பழகுவேன். தமிழ் வளரச்சி தொடர்பான அனைத்துக் கருத்தியலிலும் நாங்கள் ஒரே கோட்டில் பயணிப்போர். தொடர்பான தெருவலங்கள், முழக்கங்கள், கூட்டங்கள், சங்கங்கள் யாவிலும் அவர்களோடு.
http://sachithananthan.blogspot.com.au/2017/…/blog-post.html
என வலைப்பூவிலும் முகநூலிலும் மின்னஞ்சல் வழியும் 10.03.2017 அன்று ஆத்திரேலியா சிட்னி நகரில் இருந்து தமிழாக்கம் தொடர்பாக நான் பகிர்ந்தேன். எங்கேயோ இக்கருத்துகளைப் படித்த பேராசிரியர் திருவள்ளுவனார் எனக்கு நேற்று அனுப்பிய குறிப்பு.
ஐயா,
பிறமொழிச் சொற்களும் தமிழாக்கமும் - கட்டுரையை அகரமுதல இதழில் வெளியிட விரும்புகின்றேன். கட்டுரையின் அட்டவணைப் படங்கள்தெளிவாக இல்லை. அவற்றை மட்டும் தெளிவாக எனக்கு அனுப்பி வைக்க வேண்டுகின்றேன்.
தங்களை எப்பொழுது அலைபேசியில் அழைத்தாலும் அணைத்து வைத்துள்ளதாகவே தகவல் வருகின்றது. வேறு எண் உண்டா?
அயற் சொற்களையும் அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in
இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652
பங்குனி 7, 2048 (20.03.2017) திங்கள்
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசர் என் உழுவலன்பர். சென்னையில், அவரில்லத்தில், அலுவலகத்தில், எனதில்லத்தில், திண்டிவனம் தயிலாபுரம் தோட்டத்தில் அவரைச் சந்தித்துப் பழகினேன். என் மீது வற்றாத அன்பு கொண்டவர்.
ஈழத் தமிழருக்காகக் குரல் கொடுப்பதற்காக அவரிடம் நான என்ன கேட்டாலும் தயங்காது தளராது முனைப்புடன் செய்து தருபவர். நான் கேட்டுத் தமிழகத்தில் கலைஞர் மற்றும் செயலலிதா தொடக்கம் தில்லியில் வாசுபாய், மன்மோகன் சிங்கர் வரை சென்றவர்.
நான் கைதாகிச் சிறையில் இருந்த காலத்தில் அவரது வலக்கையான அன்பர் முத்துக்குமார் என்னைப் பார்க்கச் சிறைக்கு அடிக்கடி வருவார். பிணையில் வெளியே வந்ததும் என்னைத் தேடி ஆறுதல் கூற என் வீட்டுக்கு வந்தவர் மருத்துவர் இராமதாசர்.
2000 பிப்புருவரி. இந்தியாவில் தங்க அருகதையற்றவன் persona non grata எனக்கூறி என்னை நாடுகடத்தும் இந்திய ஆணை வந்தது. ஆணையை நீக்கக் கோரிப் பிரதமர் வாச்பாயி, உள்துறை அமைச்சர் அதுவானி ஆகியோரிடம் பேசிய தமிழகத் தலைவர்களுள் மருத்துவர் இராமதாசரும் ஒருவர். அந்த ஆணை இன்னமும் உயிருடன் உள்ளது. ஆனால் கிடப்பில் போட்டனர்.
மக்கள் தொலைக் காட்சிக்காக ஈழத்தமிழர் தொடர்பான ஆவணப் படத் தொடர் தயாரிக்க விழைந்தார். திறமையான தம்பி ஒருவரை அறிமுகம் செய்தேன். முற்பணமாக ஒரு தொகை கொடுத்தார்.
அந்த ஆவணப் படமும் தயாராகவில்லை, அந்தத் தம்பி நாணயமாக அந்தத் தொகையையும் திருப்பிக் கொடுக்கவில்லை. நாணி நின்றேன். நமக்கு ஆதரவானவர்களுக்கே நாம் "தண்ணி" காட்டியதே இன்றைய பின்னடைவின் காரணம்.
தமிழ் வளர்ச்சிக்காகத் திட்டமிடுபவர். தமிழ் ஆர்வலர், தமிழ் அறிஞர் பலரை அழைத்துக் கலந்துரையாடல்களை நடத்துபவர். அக்கலந்துரையாடல்களுக்குத் தவறாமல் என்னை அழைப்பார். என் கருத்துகளுக்கு ஆழ்ந்து செவிமடுப்பார்.
நேற்று எனக்கு அவரிடம் இருந்து வந்த கடிதப் படியை இணைத்துள்ளேன்.
19.03.2017
With Maravanpulavu K. மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Auburn Tamil Society Forumon 19th March 2017
Dr Bala Indrajit MBBS (Hon), MS, MRCS (Eng), FRACS (Urologist), Diseases of Continence. in Men and Women, Lecture and Discussion.
Dr Maravan pulavu Sachithananthan BSc, MSc, MA, DSc (Honoris Causa )
சிறப்பு சொற்பொழிவு காரைக்கால் அம்மையாரின் மகிமை
பங்குனி 6, 2048 (19.03.2017) ஞாயிறு, ஆத்திரேலியா, சிட்னி, ஓபேர்ண் தமிழ்ச் சங்கம் 1500 மணி.
வீடு திரும்புவீர்கள், உறங்கப் போவீர்கள், கலைந்த தூக்கத்தால், குழப்பும் கனவுகளால் பதறுவீர்கள். துவள்வீர்கள், உள்ள நலம் கெட்டால் உடல் நலம் கெடும்.
வீடு திரும்புவீர்கள், உற்சாகமாக இருப்பீர்கள், பெயரர்களை அழைத்துப் பெருமிதச் செய்திகள் பகிர்வீர்கள். தளர்வறியா மனப் பக்குவமாகும், நன்றாகத் தூங்குவீர்கள். களிக்கும் கனவுகளில் மிதப்பீர்கள். உள்ளம் மகிழ்வானால் உற்சாகமானால் உடலில் நோய் குறையும்.
இந்துக்களின் இன்றைய நிலை சொன்னால் முன்னையது உங்களைத் தொடரும். இந்துக்களின் பண்டைய நிலைசில சொன்னால் பின்னையது உங்களதாகும். எதைச் சொல்ல? எனக் கேட்டேன்.
வந்திருந்த 60உக்கும் கூடுதலானவருள் பலர் மூத்தோர். அவர்களுட் பெண்களே கூடுதலாக. உற்சாகமான உள்ளத்துடன் உடல் நலத்துடன் வாழக்கூடிய செய்திகளைச் சொல்க என்றனர்.
தமிழ்ப் பெண்கள் மூவர். 1900 ஆண்டுகளுக்கு முன்னர் இருவர், 1800 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர். மூவரும் கடல் கடந்த நாடுகளிலும் ஏனைய இனத்தவரிடையேயும் புகழ் பெற்றவர்கள். அவர்களுள் சமணத்தவரான கண்ணகி முதலாமவர், புத்தரான மணிமேகலை இரண்டாமவர், சைவரான காரைக்காலம்மை மூன்றாமவர்.
http://sachithananthan.blogspot.com.au/…/kaaraikkaal-ammaiy…
கம்போடியாவில் சிலை வடிவினரான காரைக்காலம்மையைக் கூறுகிறேன் என்றேன். மகிழ்ந்தனர். சொன்ன செய்திகளால் இறும்பூதெய்தினர்.
https://youtu.be/97p2zCfp89k
https://youtu.be/kX3pqH88Vv8
https://youtu.be/icFCDMjsBmA
https://youtu.be/Bh4LSZGDmno
https://youtu.be/MBgBco9pI2c
பங்குனி 10, 2048 (23.03.2017) வியாழன்.
சென்னையில் இருந்து வந்த செய்தியால் கலங்கினேன்.
பண்பட்ட உள்ளம், எளிமையின் இருப்பிடம், புலமையின் கொள் கலன். தமிழின் சொத்து.
சாகித்திய அகதமி விருது பெற்ற எழுத்தாளர், எனக்கு அன்பர், திரு. அசோகமித்திரன் (தியாகராசன் 1931-2017) காலமானார் என்ற செய்தி படித்துக் கலங்கினேன்.
பங்குனி 11. 2048 (24.03.2017) வெள்ளி.
தில்லிக்கு அழைத்தேன். இராசாவுடன் பேசினேன். நன்றி கூறினேன்.
ஈழத் தமிழர் நலம் பேண அவருடன் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர் கேட்கும் தகவல்களைக் கொடுத்திருக்கிறேன். ஆதரவு கோரியிருக்கிறேன்.
இந்திய பொதுவுடைமைக் கட்சியாளருடன் எனக்கு நெடிய தொடர்பு. திரு. தா. பாண்டியன், திரு. சி. மகேந்திரன், திரு. தி. இராசா, தில்லியில் திரு. பரதன் என யாவரும் எனக்கு அன்பர்கள்.
தீக்குள் விரலை வைத்தேன் என்ற தன் நூலை எனக்குத் தந்த திரு. சி. மகேந்திரன், என்னைப் பற்றியும் அதில் எழுதியதாகக் கூறித் தந்தார்.
இந்திய பொதுவுடைமைக் கட்சியினரும் (மார்க்சியர்) எனக்கு அன்பர்கள். 2008இல் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் என்னைக் கேட்டு அவர்களிடம் (இபொக (மா)) அழைத்துச் சென்றேன்.
நேற்று (23.03.2017) தில்லி நாடாளுமன்றத்தில் திரு. இராசா தொடுத்த வினா, கொடுத்த குரல், அவரின் நெஞ்சார்ந்த வினா. சுசுமா சுவராசர் அம்மையார் அளித்த பதில் (by either doing it forcefully or through persuasion) என் நெஞ்சில் நம்பிக்கையைத் தந்தது.
எனவே திரு. இராசா அவர்களை அழைத்துப் பாராட்டினேன்.
“The war in Sri Lanka was over in 2009, but the government of Sri Lanka has not done anything to punish those accused of war crimes against unarmed Tamils. There have been similar violence in other parts of the world, but reconciliation and accountability have been practised following the war. But in the case of Sri Lanka, the government has shown total disrespect to international concerns,” said Mr. Raja. He urged the government to work with Sri Lanka for greater human rights accountability.
But Mr. Raja said India should not appear like a party which was also helping Sri Lanka in skirting accountability in human rights violations. “India helped Sri Lanka fight the Tamil Tigers. Is there a guilt conscience that India is trying to hide by not exposing Sri Lanka’s inaction,” he asked.
“Our aim is to protect the interests of Tamils in Sri Lanka. You can achieve this through two means: by either doing it forcefully or through persuasion with the friendly country,” she said answering a question from D. Raja of the Communist Party of India (CPI).
http://www.thehindu.com/…/sushma-backs-…/article17620413.ece
27.03.2017
உ
சிவமயம்
உயர்திரு 'சைவத் திருமுறைக் காவலன்" மறவன்புலவு
கலாநிதி கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் அவர்களின்;
75ஆவது பிறந்த தின
வாழ்த்துப்பா
ஈழவள நாட்டிற்பி றந்து யர்ந்தாய்!
இணையிலாதோர் அச்சகமாம் காந்த ளகமதைத்
தோழமைமிகு தமிழ்நாட்டினில் விருத்தி செய்தாய்!
தொடுகின்ற செயலிலெலாம் வெற்றி கெண்டாய்!
ஆழுமைமிகு கலாநிதியாய்த் தேசு பெற்றாய்!
அன்பனேயுன் சிவபணியால் அவனி போற்ற
வேழமுகத் தானருளால் எழுபத் தைந்தாம்
வெற்றிபூத்த பிறந்தநாளில் வாழ்த்து கின்றேன்!
உதித்திட்ட குலப்பெருமை துலங்கக் காத்த
உன்னரிய தீரத்தை உன்சேவை உகுக்கும்;!
பதிப்பித்த நூல்கள்பல் லாயிர முமுனது
பன்முகத்துத் திறன்றன்னைப் பகரா நிற்கும்!
மதிப்போடு மின்றளத்திற் சரித்திரம் படைத்ததை
மன்னுதிரு முறைகளெலாம் மகிழ்ந்தே பேசும்;!
துதித்திட்டு நாமுமுன்றன் நற்சுகம் வேண்டித்
துங்கமுகன் செஞ்சரணம் வழுத்த வாழி!.
தெருள்விரித்துச் சிவம்வளர்க்கும் திருமுறை களையெலாம்
செயற்கரிய செயலெனவே மின்னம்ப லத்தில்
பொருள்விரித்துப் பண்ணிசையைப் பொருந்தக் கூட்டிப்
புதுப்பொங்க லெனப்படையல் செயவல் லோரால்
கருத்திருத்தித் தினமுழைத்துப் பல்லின மொழிகளில்
காதலொடு திருப்பணியாய் ஏற்றி வைத்தீர்!
அருள்விரிக்கும் அந்திவண்ணன் சச்சியே உனக்கு
அனுதினமும்; பெருநிதியம் அருள வாழி!
மறவன்புல வீரனாயக்; கிளர்த் தெழுந்து
மாற்றுச்சம யத்துக்கிறித் தவர்கள் தொடர்ந்தும்
அறமழித்து மதம்மாற்றும் ஈனச் செயலை
அஞ்சாது கண்டித்துச் சைவ சமயத்தின்
திறங்கூறி ஏழைச்சைவர் மனம் மாறாத்
திடஞ்சேர்க்கச் சிவசேனைப் படை திரட்டி
உறங்காது ஈழமதிற்; சைவம் வளர்க்கும்
உத்தமனே சச்சிஐயா வாழி! வாழி!!.
'வாழ்க வளமுடன்"
என்றும் அன்புடன்
; பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி
(சமாதான நீதவான் - அவுஸ்திரேலியா)
திருமதி சிறீரங்கேஸ்வரி பாரதி
25/2 Station Street. Homebush NSW 2140
.2.4.2017
பங்குனி 20, 2048 (02.04.2017) ஞாயிறு,
சிங்கப்பூர் அருள்மிகு உருத்திரகாளி அம்மன் திருக்கோயில் மண்டபம்.
சிங்கப்பூர் திருமுறை மாநாட்டுக் குழு அன்பர்களுடன் சந்திப்பு.
திருமுறைப் பாடல்களைச் சீன மொழிக்கு மொழிபெயர்க்கலாமா? தொடர்பான கருத்துப் பரிமாறல், கலந்துரையாடல்.
தேவாரம் மின்னம்பல தளத்தை வளர்க்க அவர்கள் நிதி வழங்கத் தொடங்கிய நாள் 10.01.2009.
நேற்று வரை அவர்கள் வழங்கிய தொகை மொத்தம் 90 வரவுகளாக பதினெட்டு இலட்சத்து எண்பத்தையாயிரத்து எழுநூற்றி முப்பத்தெட்டு இந்திய ரூபாய்கள். (1,885,738)
23 பங்குனி 2048 (05.04.2017) புதன்கிழமை காலை 1100 மணி. பன்னிரு திருமுறை மலாய் மொழிபெயர்ப்புப் பணி.
மலேசியா, கோலாலம்பூர், திருமுருகன் திருவாக்குத் திருபீடம், தவத்திரு சுவாமி பாலயோகியார் தலைமை.
1. மேனாள் அமைச்சர் தான்சிறீ குமரன்,
2. மலேசிய இந்து சங்கம் மேனாள் தலைவர் திரு. வயித்திலிங்கம் அம்பலவாணர்,
3. பேராசிரியர் முனைவர் திலகவதி,
4. அவரது மாணாக்கர்
மலேசிய இந்து தருமச் சங்கத் தலைவர், பேராசிரியர் சோ. சுப்பிரமணி,
5. இடத்தோ, மருத்துவர் கதிரேசன்
6. பன்னிரு திருமுறை மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு க. சச்சிதானந்தன்
ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம். 2009 தையில் தொடங்கிய முயற்சி. பலமுறை மலேசியா சென்றேன், பல வழிகளில் முயன்றேன். எனினும் முகிழ்க்காத முயற்சி. 5.4.2017இல் முகிழ்த்துள்ளமை சைவத் தமிழ்,
மற்றும் சைவ மலாய் அடியவர்களின் நெஞ்சைக் குளிர்விக்கும். மலாய் மொழியில் அறிவுக் களஞ்சியம் பெருகும்.
திருவாசகம் மொழிபெயர்ப்பு 2.7.2017 முடித்துக் கொடுக்கப் பேராசிரியர்கள் திலகவதி, சுப்பிரமணி இருவரும் ஒப்பினர். செலவு விவரங்கள் பேசினோம்.
அக்கூட்டத்தின் விளைவாக 15 மொழிபெயர்ப்பாளர் திருவாசக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
1. முனைவர் க.திலகவதி தலைவர், அருள்நெறித் திருக்கூட்டம்
2. சோ.சுப்பிரமணி மொழி & மொழியியல் புலம்,
3. முனைவர் இரா கிருஷ்ணன்மொழி & மொழியியல் புலம் UM
4. முனைவர் சி.மலர்விழி மொழி & மொழியியல் புலம், UM
5. முனைவர் பெ.தனலெட்சுமி மொழி & மொழியியல் புலம், UM
6. திரு. செல்வஜோதி (ஆசிரியர்) (முனைவர் பட்டப்படிப்பு மாணவர்)
7. திருமதி பொன்னி (ஆசிரியர்) (முனைவர் பட்டப்படிப்பு மாணவர்)
8. திருமதி முனியம்மாள் (விரிவுரையாளர் IPG)
9. முனைவர். சு துறைமுத்து (விரிவுரையாளர் IPG )
10. முனைவர் அண்ணாதுரை (பாட நூல் பிரிவு, கல்வி அமைச்சு)
11. திருமதி ந.பார்வதி (ஆசிரியர்) (முனைவர் பட்டப்படிப்பு மாணவர்)
12. திரு. இரா சேதுபதி (விரிவுரையாளர்) IPG
13. முனைவர் புஸ்பவள்ளி IPG
14. முனைவர் இளங்குமரன் (விரிவுரையாளர் UPSI, )
22.4.2017
09.04.2048 (22.04.2017) சனிக்கிழமை, வவுனியா.
என் அருமைத் தம்பி மன்னார் வி. சு. சிவகரன் அழைத்து, வவுனியா சென்றேன். தடுமாறுகிறதா தமிழ்த் தலைமை? அடுத்து என்ன? என்ற வினாக்களைத் தலைப்பாக்கிய கலந்துரையாடல். என் கருத்துகளையும் சொன்னேன்.
படங்கள் நன்றி தமிழ்வின், வன்னிச்செய்தி.
26.4.2017
26.04.2017
I want to bring to your notice of the destruction of a Pillayaar temple at Vellaankulam, in Mannar district of Sri Lanka. Catholic priest in charge of the parish Devanpiddy, a village to the west of Vellankulam towards the coastline led the vandals at midnight on 23rd/ 24th April to destroy the Pillayar temple and attack the Hindu residents causing extensive damage to Hindus and their properties.
A police case has been registered. Government officials including the Provincial Police Director, Hindu Cultural Officer had visited the site of vandalization but no action has been taken to arrest or register a case against the perpetrators of violence in the name of religion.
Both villages, Catholic Christians only (about 200 families) populated Devanpiddy and Saiva Hindu Tamils only (about 250 families) populated Vellankulam are neighboring villages living in absolute harmony and co-operation until the Catholic parish priest of Devanpiddy illegally planted a 2 meter tall cross inside the Hindu village of Vellankulam in close proximity to the Pillaiyaar temple on the Pongal day 14th January 2017. Since there was no permission for this erection from any authority in Mannar District, Hindus lodged protest on 15th January with the Divisional Prathesay Sabai and Divisional Secretary, (the relevant authorities) to have the Christian Cross removed from the Hindus only village. It was not removed. I went personally to the offices of Divisional Secretary, Admanpan, and Pradeiya Secretary Aadkaadiveli to present written memorandums on this illegal construction and asked them to have it removed.
Hindus removed the illegal erection of the Cross Hindus on 23rd April as it was a source of irritation to the Hindu only environment. Also, it was a corrupt influence on the school children. Hindus also felt that it was a prelude to convert the Hindus to Christianity. So, they removed it.
On the next day, 25th night the Catholic Parish priest of Devanpiddy led a party of drunken men from his village to attack another temple, the Munnaiswaran temple at Vellankulam. As Hindus became aware of this, they assembled to chase the vandels led by the Catholic priest.
The entire Mannar district is under the grip of Christianization targeting Hindus. Even though Hindus form 40% of the District population there are no elected representatives to represent their plight. All elected representatives are Christians. Also, the District administrative and Judicial officials are Christians. Police force is Buddhist.
Hindus are at the mercy of these alien religionists in their land of more than 5,000 years of cultural heritage to whom the entire District was Hindu until the advent of the invading Portugese who forcibly converted Hindus to Catholic Christianity. Post 2009 May, after the war is over, missionary groups like Pentecostal Mission, Jehovah’s witness, Sound of Trumpets, and such mushrooming outfits funded by Christian Churches from the western countries are very active attempting to convert the Hindus to Christianity. Removing the illegally constructed cross at Vellankulam is an indication of the resolute resistance by Hindus to these ‘coercive’ conversions.
We urge you to ask the Sri Lankan government to take adequate steps to protect the Hindus, their lives, their property, their places of worship in Vellankulam as an urgent measure.
28.4.2017
சித்திரை 16, 2048 (28.04.2017) வெள்ளிக்கிழமை மாலை
1. சென்னை, சூளைமேடு இந்து மக்கள் கட்சியின் தென் சென்னைச் செயல் வீரர் கூட்டம். தலைவர் திரு அருச்சுனர் சம்பத்தர், செயலாளர் திரு. இராம இரவிக்குமார், வங்காளத்திலிருந்து இந்து சமிதி நிறுவனர் திரு. தப்பன் கோசர், கவிஞர் காசி ஆனந்தன், தஞ்சை, கோவை, குடந்தை எனப் பல மாவட்டங்களின் பொறுப்பாளர் என அன்பர்களுடன், இலங்கை இந்துக்களின் நிலையைப் பகிர்ந்து கொண்டேன்.
2. கொருக்குப்பேட்டையில் இந்து மக்கள் கட்சியின் பரப்புரைக் கூட்டம். தலைவர் திரு. சங்கரன். இந்து மக்கள் கட்சித் தலைவர் திரு அருச்சுனர் சம்பத்தர், செயலாளர் திரு. இராம இரவிக்குமார், வங்காளத்திலிருந்து இந்து சமிதி நிறுவனர் திரு. தப்பன் கோசர், கவிஞர் காசி ஆனந்தன், திரு. செயம் பாண்டியன், திரு.சுபாசர் சுவாமிநாதன், திருமதி. நிர்மலா, திரு. குருமூர்த்தி, எனப் பல அன்பர்களுடன் நானும் உரையாற்றினேன். அவர்கள் அனைவரையும் இலங்கைக்கு அழைத்தேன்.
06.05.2017
சித்திரை 23, 2048 (06.05.2017) சனிக்கிழமை. திருஎவ்வுளூர் = திருவள்ளூர். சென்னையிலிருந்து 50 கிமீ. மேற்காக.
சித்திரைத் திருவாதிரை தமிழர் வாழ்வில் சிறப்பு நாள்.
ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம்.
பிறப்பால் எவரும் உயர்வல்ல.
மந்திரங்கள் மக்கள் உய்விற்கே.
ஆகியனவும் பிறவுமான அறிவுசார் கருத்துகளைத் தந்து தமிழர் வாழ்வில் ஒளியூட்டிய பெருமகனார் இராமானுசர் பிறந்த நாள்.
இற்றைக்கு ஓராயிரம் ஆண்டுகளுக்குமுன் சரியாகச் சித்திரைத் திருவாதிரையில் (04.05.1017) இராமானுசர் பிறந்தார்.
இராமானுசர் பிறந்து ஓராயிரம் ஆண்டு விழா உலகெங்கும் அறிவுப் புரட்சி நாளாகக் கொண்டாடுவர். இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளார்.
அகோபில மடத்தின் பராமரிப்பில் உள்ள திருஎவ்வுளூர் = திருவள்ளூர் அருள்மிகு பிராட்டியார் உடனுறை ஆதிவீரராகவப் பெருமாள் கோயில் ஐந்து நாள்கள் நடத்தும் இராமானுசர் நூற்றாண்டு விழாவுக்கு நேற்றுப் போயிருந்தேன்.
திருமதி பிரியா முரளியும் மாணவர்களும் 75 மணித்துளிகளுக்கு நவவித பக்தி நாட்டிய நாடகத்தை வழங்கினர். பிரியா, சசிரேகா, சிறீதேவி, இலக்சனா, வித்தியா, அபரிசதா ஆகிய ஐவரும் அரங்கினரின் தொடர்ந்த கரவொலிகளுக்கு நடுவே, அருமையாக நடனமாடினர்.
07.05.2017
சித்திரை 24, 2048 (07.05.2017) ஞாயிறு காலை, சென்னை, போரூர் கணபதி நகர் இராசலட்சுமி மகால். சிந்து பார்கவி செந்தில்குமார் திருமணம். காந்தளகத்திலிருந்து சசிரேகா, சசிகுமார் நான் மூவரும் சென்று வாழ்த்தினோம். சிந்து பார்கவியின் தந்தையார் எம் அன்புக்குரிய நாணா சாம்.
இந்தியா இன்று (India Today) தமிழ்ப் பதிப்பு. வார இதழ். எழுத்துகள் யாவும் ஆசிரியர் குழு. ஓவியம், வரை கலை, பக்கமாக்கல் யாவும் கலை இயக்குநர் நாராயணன் என்கின்ற நாணா சாம் பொறுப்பில்.
சென்னையில் பதிப்புத் தொழிலில் உள்ள எவருக்கும் நாணா சாம் என்ற பெயர் தெரியாமல் இருக்காது. தமிழில் வெளிவரும் நூல்களுள் அழகான அட்டையா, வடிவமைப்பா, பக்கமாக்கலா? நாணா சாம் கை வண்ணம் அங்கிருக்கும்.
கண்ணதாசன் பதிப்பகத்தின் அனைத்து நூல்களுக்கும் நாணா சாம் ஓவியர். ஆத்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, தென் ஆபிரிக்கா, அமெரிக்கா, கனடா, சுவிற்சர்லாந்து என உலகெங்கும் அவர் கைவண்ணம் காணாத பதிப்புகள் குறைவு.
காந்தளகத்துக்கு நாணா சாம் ஆற்றும் பங்களிப்பு கொஞ்ச நஞ்சமல்ல. காந்தளகத்தின் வளரச்சிக்கு அவர் நல்கும் ஆதரவு சொல்லிலடங்கா.
கவிஞர் இரவி, காந்தி கண்ணதாசன், இந்தியா இன்று இராமசெயம், சீர்காழி இராமதாசர், நான், நாணாவுடன் படத்தில்
09.05.2017
சித்திரை 27, 2048 (09.05.2017)
இலங்கைக்கு வருகிறார் உமையாள்புரத்தார்.
பாரத இரத்தினா விருது. இந்தியாவின் ஆக உச்சமான அரச விருது. அதற்கு அடுத்த விருது பத்ம விபூசணர் விருது. மிகச் சிறந்த விற்பன்னர்களான இந்தியர்கள் மட்டுமே பத்ம விபூசணராவர். நூற்றிருபது கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், விடுதலைக்குப்பின்னரான 70 ஆண்டுகளில் சில நூறு பெயர்களே பத்ம விபூசணர்கள். அவர்களுள் ஒருவர், 80 வயதான உமையாள்புரம் சிவராமனார்.
அவர் 2010இல் பத்ம விபூசணர். மிருதங்க விற்பன்னராதலால் அவருக்கு விருது. அவருடைய மிருதங்க வாசிப்பு உலகப் புகழ் பெற்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உலகின் பலநாடுகளிலும் அவருக்குச் சுவைஞர் உளர்.
தில்லியின் சங்கீத நாடக அகதமிப் புலமைப் பரிசாளர் (2011). கேரளப் பல்கலைக் கழக மதிப்பார்ந்த முதுமுனைவர் (2010). பத்ம விபூசணுக்கு முந்தைய பத்ம பூசணர் (இந்திய அரசு 2003), அதற்கும் முந்தைய பத்ம சிறீயினர் (இந்திய அரசு,1988). தமிழக அரசின் கலைமாமணியினர் (1992). தென்னாட்டின் தலைநகரங்களில் உள்ள புகழ்பூத்த இசை, நடன, நாடகச் சபைகளின் விருகளின் பட்டியலை இங்கு இணைக்கின் இப்பக்கமே கொள்ளாது.
விருதுகள், பாராட்டுகள், போற்றுதல்கள், வாழ்த்துகள் என வாழ்வாங்கு வாழ்பவர் என்னிடம் சொன்னார், எனக்குக் கணிணி தெரியாது, கைப்பேசி தெரியாது, ஆனால் கொஞ்சமூண்டு மிருதங்கம் தெரியும் என. அத்தைகய தன்னடக்கத்தின் சொந்தக்காரர். இயல்பில் இனியவர். பழகுவதற்கு எளியவர்.
2015 ஆனியில் ஒருநாள். சென்னை, தியாகராய நகர், கிருட்டின கான சபையில் உமையாள்புரத்தார் தயாரித்த நாட்டிய நிகழ்ச்சி. முன் வரிசையில் இருந்து பார்த்துக் கேட்டுச் சுவைத்தேன். பல் வகைக் கலைஞர்கள் உமையாள்புரத்தாரின் மிருதங்கத்துக்கு இசைந்த நிகழ்ச்சி. வீட்டுக்கு வந்ததும் என் உள்ளம் மிதந்திருந்தது. என் மனத்தின் இனிமையை அப்பொழுதே சொற்களாக்கினேன். ஆங்கிலத்தில் எழுதினேன். முகநூலில் குறித்தேன்.
படித்த பலருள் மயிலாப்பூர் இரைம்சு இதழ் ஆசிரியர் என்னை அழைத்துப் பாராட்டினார். தன் இதழில் வெளியிட விரும்பினார். தொடர்ந்து இசை நடன நிகழ்ச்சிகளை ஆங்கிலத்தில் விமர்சிக்கக் கேட்டார். தன் இதழுக்கு எழுதமுடியுமா என வினவினார். என் குறிப்பை எடுத்துச் சென்று உமையாள்புரத்தாரிடம் கொடுத்துக் காலில் வீழ்ந்து வணங்கினேன். என்னை வாழ்த்தினார்.
ஈழத்தின் புகழ்பூத்த தவில் கலைஞர் கணேசபிள்ளை. அவருக்கு மானசீகக் குரு உமையாள்புரம் சிவராமனார். கணேசபிள்ளையின் மகனின் பெயர் சிவராமன். உமையாள்புரத்தாரை நேரில் சந்தித்துப் பழகாமல் அவரின் மிருதங்க இலயத்தில் மூழ்கிய கலைஞர் கணேசபிள்ளை, தன் மகனுக்குச் சிவராமன் எனப் பெயரிட்டவர். பிற்காலத்தில் சிவராமனரிடம் மகனை அழைத்து வந்து வாழ்த்துப் பெற்றவர்.
உமையாள்புரத்தாருக்கு இலங்கையில் நேரடி மாணவர் பலர். கடந்த 30 ஆண்டுப் போர்ச் சூழலால் அம் மாணவர்களுட் பலருடன் தொடர்புகள் அற்றன. எனினும் கணேச சர்மாவின் மகன் சுவாமிநாதன் இப்பொழுதும் கொழும்பில் உள்ளார். அவ்வாறே மேனாள் தேர்தல் துறை மூத்தவர் இரட்டினதுரையின் மகன் பிரகலாதன் மேற்கு நாடு ஒன்றில் உள்ளார். 80 வயதான உமையாள்புரத்தாருக்கு நினைவுகளில் இவர்களே தெரிகின்றனர்.
மகாராசபுரம் சந்தானத்தார் குரலிசை. உமையாள்புரம் சிவராமனார் மிருதங்கம். இளம் கலைஞனாகத் தம்புரா வாசித்துப் பிற்பாட்டாளராக இருந்தவர், இன்றைய மூத்த கலைஞர் கருணாகரனார். உமையாளபுரத்தாருடன் மேடையைப் பகிர்ந்த நினைவுகளுடன் வாழ்பவர் கொழும்புக் கலைஞர் கருணாகரனார்.
மகாராசபுரம் சந்தானத்தார் யாழ்ப்பாணத்திற்குச் சு. நடேசபிள்ளையார் அழைப்பை ஏற்று வந்தவர். சுண்ணாகம் இராமநாதன் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் இசை கற்பித்தவர். உமையாள்புரத்தார் இந்தச் செய்தியை என்னிடம் பகிர்வார். யாழ்ப்பாணம் வரவேண்டும், தங்கவேண்டும், கலைஞர்களுக்குப் பயிற்சி கொடுக்கவேண்டும் என என்னிடம் அடிக்கடி கூறுவார். ஈழத் தமிழருக்குக் கோயில் என்றாலே சிதம்பரம் என என்னிடம் தெரிவிப்பார். ஈழத் தமிழர் மீது அத்துணை ஈடுபாடும் அன்பும் பாசமும் உமையாள்புரத்தாருக்கு.
கடந்த ஓராண்டு காலமாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தாருடன் உமையாள்புரத்தாரின் கலை ஈகை / நல்கை வாய்ப்புப் பற்றிப் பேசி வருகிறேன். இந்தியத் துணைத் தூதரக்த்துடனும் பேசி வருகிறேன்.
உமையாள்புரத்தாருக்கு ஆண்மக்கள் இருவர். திருமணமாகிச் சிறந்த பணியாற்றுவோர். இளைய மகன், மருமகள், பெயர்த்தி, உமையாளபுரத்தார், இல்லக் கிழத்தியார் ஐவரும் ஆறு நாள்கள் இலங்கைக்குச் சுற்றுலா வருகின்றனர்.
சென்னைக் கோடையின் வெம்மையைத் தணிக்க இலங்கையின் மலையகத்தை நாடும் தன் மக்களிடம் யாழ்ப்பாணம் போகவேண்டும், இராமநாதன் கல்லூரியைப் பார்க்கவேண்டும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைப் பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டார்.
கண்டி, நுவரெலியா, வெந்தோட்டை எனச் சுற்றுலா மையங்களைக் கூறிய பயண முகவர், யாழ்ப்பாணமா? நெடுந்தொலைவில் உள்ள ஊர், அனல் காற்று வீசும் ஊர், குண்டும் குழியுமான சாலையில் நெடும் பயணம், பாதுகாப்புக் குறைவு என்றெல்லாம் கூறியதால் உமையாள்புரத்தார் சோர்வடைந்தார்.
என்னைத் தொலைப்பேசியில் அழைத்தார். உங்கள் ஊருக்கு நான் போகவேண்டும். யாழ்ப்பாணத்தில் மிகச் சிறந்த கலைஞர் உளர், அறிஞர் உளர், புலமையாளர் உளர், அவர்களைச் சந்திக்காமல் என்ன இலங்கைக்குப் பயணம்? என்றார். இந்தப் பயண முகவர் அச்சுறுத்துகிறாரே, நிலைமை அப்படியா? எனக் கேட்டார்.
வெயில் எறித்தாலும் கலைஞர், புலமையாளர் உங்களைக் குளிர்விப்பர் என்றேன். பல்கலைக்கழகமும் இராமாநாதன் இசைப் புலமும் உங்களை மகிழ்விக்கும் என்றேன்.
கொழும்பில் மூத்த மேனாள் ஆட்சியர் தயாபரன் நீலா இணையர், கலைஞர் கருணாகரனார், ஊடகத்தின் தனபாலசிங்கத்தார் என அன்பர்களின் உமையாள்புரத்தாரின் கொழும்பு வருகை (15.5, 16.5) ஒழுங்கு, யாழ்ப்பாண மாவட்டச் செயலர் வேதநாயகன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. விக்கினேசுவரன், நீர்வேலி மயூரகிரிசர்மா ஆகியோரின் யாழ்ப்பாண வருகை (13.5, 14.5) ஒழுங்கு.
கொழும்பில் கலைஞர் வரவேற்பு, யாழ்ப்பாணத்தில் கலைஞர் வரவேற்பு இவை கண்டி, நுவரெலியாக் குளிர்மையை விடக் கூடுதலான இதமான இனிமையான குளிரூட்டலை உமையாள்புரத்தாருக்கும் துணைவியாருக்கும் தரும். வெந்தோட்டையின் நெய்தல் மென்மையைவிடக் கூடுதலான மென்மையையும் இனிமையையும் உமையாள்புரத்தாருக்குத் தரும்.
10.5 புதன்கிழமை நண்பகல் கொழும்பை வந்தடைகிறார். 11.5, 12.5 கண்டியிலும் நுவரெலியாவிலும் மக்களுடன் தங்குகிறார். 13.5, 14.5 யாழ்ப்பாணத்தில் இருப்பார். அவரது மக்கள் வெந்தோட்டை செல்வர். 80 வயதானாலும் யாழ்ப்பாணத்தின் ஈர்ப்புக்கு முன் மற்றவை தூசு எனத் துணைவியாருடன் யாழ்ப்பாணம் செல்கிறார். 15.5, 16.5 இரு நாள்களும் கொழும்பில். 16.5 பிற்பகல் சென்னைக்குப் புறப்படுகிறார்.
இசைக் கருவி எதையும் கொண்டு வராததால் இசை நிகழ்ச்சி எதிலும் பங்கேற்கமாட்டார். இசை நிகழ்ச்சிக்காக, கலைஞர்களைப் பயிற்றுவிக்க விரைவில் இலங்கைக்கு மீண்டும் வருவேன், யாழ்ப்பாணத்தில் தங்குவேன் என்கிறார், 80 வயதிலும் இளமை துள்ளும் இனிய உள்ளத்தார் உமையாள்புரத்தார்.
இலங்கையில் இசை, நடன, நாடகக் கலைஞர்கள் வரவேற்பு நிகழ்வுகளில் பங்கேற்கவேண்டும். கொழும்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர் கலைஞர் கருணாகரனார் + 94 779548039. யாழ்ப்பாண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா. முனைவர் விக்கினேசுவரன் +94 21 2222294, யாழ்ப்பாண மாவட்டப் பிரதேசச் செயலர் / அரசாங்க அதிபர் திரு. வேதநாயகன். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஒளி, ஒலி, அச்சு ஊடகங்களார் வரவேற்பு நிகழ்ச்சிகளைத் தத்தம் ஊடகங்களில் பதிவார்களாக, கலைஞர்களையும் சுவைஞர்களான மக்களையும் ஊக்குவிப்பார்களாக.
10.05.2017
சித்திரை 27, 2048 (10.05.2017) புதன்கிழமை.
தமிழருக்குச் சித்திரை முழுநிலா நாள், புத்தருக்கு விசாகத் திருநாள்.
மனித வரலாற்றிலேயே அறப் படையைத் தோற்றுவித்த பெருமகன் ஞானம் பெற்ற நாள், வைகாசி விசாகத் திருநாள்.
இலங்கையில் அடுத்துவரும் முழுநிலா நாள் போசன் திருநாள். மதிந்தர் புத்த சமயத்தை அநுராதபுர ஆட்சியாளருக்கு அறிமுகம் செய்த நாள்.
இலங்கைக்குப் புத்த சமயத்தை அறிமுகம் செய்தவரே மகிந்தர் என்ற வரியைச் செய்தி இதழ் ஒன்றில் வாசித்தேன். முன்பு பலமுறை நான் சொன்ன செய்தியை மீண்டும் அந்த ஆங்கில இணைய இதழுக்கு எழுதி அனுப்பினேன். உங்களுடனும் பகிர்கிறேன்.
It was said: Buddhism was brought to Sri Lanka in the 3rd.Century BC by Prince Mahinda, the son of Emperor Ashoka, who ruled large parts of India from Magadha in Bihar.
Please read the first chapter of Mahavamsa, the choronicle from where the above also has been taken. Buddha himself visited Sri Lanka thrice in his life time. First to Mahiyangana, second visit to Jaffna and the third visit was to Kelaniya. On all these visits, many Saivaite Tamils embraced the doctrine.
At Mahiyangana the entire Yakkas from all over Sri Lanka were worshipping Lord Muruga on the Thai Poosam day. Buddha visited Mahiyangan on the Thai poosam day. Yakka or more phonetically Iyakka were Tamils. There were Iyakka's in Tamil Nadu as well. Even today there are Isakki Amman temples, names of persons like Isakkimutthu (Isakki = Iyakki, ya becomming sa as in Neyam = Nesam). First converts to Buddhism was during Buddha's time. The converts were Saivaite Tamils. 2017 January Thursday 12th Duruthu Full Moon Poya marks the first of Buddha's three visits to Sri Lanka, on the first full moon after his enlightenment
Second visit was to Jaffna, then known as Naakanaadu, to resolve a dispute between the King uncle (Mahotharan) and the prince nephew (Kulotharan) on the owenership of a bejeweled throne (Ratna Simmaasanam). Saivaite Tamil Nagas became converts to Buddhism. Not only Mahavamsa (6th century), but the preceding Tamil epic MANIMEKALAI (3rd century) mentions this visit. Even today the day of this visit is celebrated by all Buddhists in Sri Lanka. 2017 April Monday 10th Bak Full Moon Poya celebrates Buddha's second visit to Sri Lanka to make peace between two warring local chiefs, who were also uncle and nephew
Maniyakkihan is the cousin of the Naga King of Jaffna, Mahotharan, Maniyakkihan was the ruler of Kelaniya in the SW coast. He came to Jaffna with his army to support his cousin Mahotharan in his dispute with Kulotharan. He met Buddha in Jaffna and was converted to Buddhism. He invited Buddha to visit Kelaniya. Buddha's third visit was to Kelaniya. There also he converted Saivaite Tamils to Buddhism.
To say that, Buddhism was brought to Sri Lanka in the 3rd.Century BC by Prince Mahinda, the son of Emperor Ashoka, who ruled large parts of India from Magadha in Bihar in Mahavamsically incorrect.
The monk Xuan Zang (Hiuen Tsang), who came to India from China during approximately 600-650 AD was at Kanchi during Pallava rule. He in his travel notes mentions the visit of Buddha to Tamil Nadu. He mentions the visit of Buddha to Sri Lanka. Also he mentions that King Asoka built stupas near Kanchi wherever Buddha stayed. The largest stupa in Kanchi, says monk Xuan Zang (Hiuen Tsang), being the one in a place where Buddha was able to win over through his preaching, large number of Jains.
Asoka's emissary converted only the Hindu Kingdom of Anurathapura, who had some remote genealogical connection to a Hindu ruler from Bengal - Odisa region. 2017 June Thursday 8th Poson Full Moon Poya commemorates the introduction of Buddhism to Sri Lanka by Mahinda.
It was Buddha himself who traveled south to preach his doctrine. All other Kings, 1. Nakanadu Naga Tamil King, 2. Kalyani Naga Tamil King and 3. Rohana Yakka Tamil King were already Buddhists at the time of Mahinda's visit.
12.05.2017
பிரதமர் மோடிக்கு இலங்கைச் சிவசேனைத்
தலைவர்: மறவன்புலவு க. சச்சிதானந்தன் பாராட்டு
இலங்கையின் இந்துக்கள் தங்கள் வழிபாட்டுக் கடமையைச் செய்வதற்குக் காசிக்குச் (வாரணாசி) செல்வதற்குக் கொழும்பில் இருந்து வானூர்திச் சேவையை இந்தியப் பிரதமர் ஒழுங்கு செய்துள்ளார் என்பதைச் சிவசேனை பாராட்டி வரவேற்கிறது.
இலங்கை இந்துக்களுக்கும் காசிக்கும் நெருங்கிய தொடர்பு. நல்லூரில் சங்கிலியன் தோப்பில் இருக்கும் யமுனை ஏரி ஒரு சான்று. யமுனையில் இருந்து ஆரியச் சக்கரவர்த்திகள் கொணர்ந்த நீரால் அமைந்த ஏரியே யமுனை ஏரி.
யாழ்ப்பாணம் குரும்பசிட்டியில் பிறந்து காசிக்குச் சென்று வாழ்ந்து வடமொழி தமிழ் இரண்டிலும் புலமைபெற்ற பெருமகனாரின் பெயரே காசிவாசி செந்திநாதய்யர்.
அண்மைக் காலமாக இலங்கையருக்குச் சொந்தமான திருமடத்தைக் காசியில் நிறுவி, இலங்கையில் இருந்து போவோர் வருவோருக்கு வசதி செய்துள்ளனர் ஐரோப்பா வாழ் தமிழர்.
ஒருவர் இறக்கும் நேரத்தில் காசித் தீர்த்தம் பருக்கும் வழமை ஈழத் தமிழர் மரபு. அவர் இறந்தபின் உடலை எரித்து, சாம்பலை பிரயாகையில் யமுனை, கங்கை, சரசுவதி கலக்கும் இடத்தில் கரைப்பதும் நீத்தார் கடன் ஆற்றுவதும் பின்னர் காசிக்கு வந்து கங்கையில் மூழ்கி நீத்தார் கடன் செய்வதும் ஈழத் தமிழர் மரபு.
காசிக்கு வழிபாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈழம் திரும்பியதும் அடியவர்களை அழைத்து, திருநீறு கொடுத்து, காசிக் கயிறு கட்டி, திருமுறைகள் ஓதி, அன்னம் பாலித்து விழாக்கணலும் ஈழத் தமிழரின் பண்டைய மரபு.
இக்காலத்தில் பலர் திருக்கயிலாயப் பயணம் மேற்கொள்வர். காசியிலே குளிராடைகள், போர்வைகள், காலணிகள் வாங்கும் கடைகள் உள. அவற்றை வாங்கிக்கொண்டு, அங்கிருந்து காத்மண்டு நகர் செல்லலாம், வானூர்தியிலும் செல்லலாம், பேருந்திலும் செல்லலாம். காத்மண்டில் இருந்து தரைவழி திருக்கயிலாயம் சென்று மீளலாம். காசிக்கான வானூர்தித் தொடர்பால் இலங்கை இந்துக்களுக்குத் திருக்கயிலாய வழிபாட்டுப் பயணம் எளிதாகும்.
எதிர்பார்க்காத பெரும் கொடையாகப் பிரதமர் மோடி காசிக்கு வானூர்தி வசதயை அறிவித்துள்ளார். இலங்கை இந்துக்களாகிய நாம் வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம், போற்றுகிறோம்.
காங்கேயன்துறையில் இருந்து காரைக்காலுக்கு சிதம்பரம் திருக்கோயில் வழிபாட்டுப் பயணத்துக்கு இலங்கை அரசு அனைத்து உரிமங்களையும் வழங்கி உள்ளது. இந்திய அரசின் ஒத்துழைப்புக் கேட்டு எழுதியுள்ளது.
பிரதமர் மோடி அவர்கள் இந்திய அரசின் அனுமதியை வழங்குவதுடன் வழிபாட்டுப் பயணத்துக்காக அந்தமான் தீவுப்பகுதியில் உள்ள பயணக் கப்பல் ஒன்றையும் தந்துவுமாறு சிவசேனை சார்பில் விண்ணப்பிக்கிறோம்.
13.05.2017
கத்தோலிக்க ஆயரின் காலனித்துவக் கண்ணோட்டத்தைச் சிவசேனை வன்மையாகக் கண்டிக்கிறது.
இணுவில் கந்தசாமி கோயில் அறங்காவலர் என்பதால் பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவில்லை.
சைவ சமயத்தவர் என்பதால் பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவில்லை.
புலமையாளர் மூவரின் பெயரைக் குடியரசுத் தலைவருக்கு விதந்துரைப்பது பல்கலைக்கழக அவையின் மரபு, உரிமை. யாழ் பல்கலைக் கழகம் இவ்வழியைப் பின்பற்றியது. மூவருள் முதலாமவர், இரண்டாமவர், மூன்றாமவர் என்ற வரிசையையும் கூறியிருந்தது. மூன்று பேரைப் பரிந்துரைக்காமல் முதலாமவரை மட்டுமே பரிந்துரைத்திருந்தால் பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகார்.
யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதைப் பல்கலைக்கழக அவையினர் அறிந்திருந்தனர், பட்டியலில் உள்ள மூவரும் தெரிந்திருந்தனர்.
இத மூவருக்கும் அப்பால் வேறொருவரைத் துணைவேந்தராக்கினால் கூக்குரலிடலாம். அவ்வாறு பதவியிலமர்த்தவும் குடியரசுத் தலைவருக்குத் துணிபு உண்டு. அவ்வாறு நடைபெறவில்லை.
பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராவதைக் கேட்ட கத்தோலிக்க ஆயர் கூக்குரலிடுகிறார். சைவ சமயத்தவர் மட்டுமன்று, இணுவில் கநதேசாமி கோயில் அறங்காவலருமல்லவா?
கத்தோலிக்க ஆயருக்குப் பொறுக்கவில்லை. 400 ஆண்டுகளாகக் கிறித்தவ மேலாதிக்கம் ஓங்கியிருந்த நிலையை ஆயர் மறக்கவில்லை. தகுதிகளுக்கு அப்பால், கிறித்தவரோ, கிறித்தவ அடிவருடிகளோ, மேலாதிக்கம் பெறுவதைப் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய காலத்தில் அநுபவித்தவர்கள், ஆழ்ந்த ஈடுபாடுடைய சைவ சமயத்தவர் துணைவேந்தராவதை விரும்பாமை வியப்பல்ல.
செல்லத்துரையின் பெயர் நெவின்சு செல்லத்துரை என்பதால் கல்வி கற்க ஏற்றவர்கள், வில்லியம் விக்கினேசுவரன் எனப் பெயர் மாற்றியிருந்தால் மனமுவந்து துணைவேந்தரே வருக என வரவேற்றிருப்பர்.
பேரா. விக்கினேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர். தகுதி வாய்ந்தவர் என்பதால் பல்கலைக்கழக அவை விதந்துரைத்தது. புலமையாளர் நடுவே அவரைப் போற்றுவர், பாராட்டுவர், புகழ்வர், வாழ்த்துவர்.
கத்தோலிக்க ஆயரே, அரசியலமைப்பில் புத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுப்பதே முறை எனக் கருதினால் மல்க்காம் இரஞ்சித்தார் கருதியுள்ளார், கூறியுள்ளார், நீங்கள் ஏற்றுக் கொண்டு அவரின் கீழ் ஆயராக உள்ளீர்கள். தமிழ் மக்கள் ஒருபொழுதும் அரசியல் அமைப்பில் புத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை ஏற்கமாட்டார்கள். அரசியல் அரங்கில் இது தெளிந்த நிலை. கத்தோலிக்கர் புத்த முன்னுரிமை கொண்ட அரசியலமைப்பை ஏற்கிறார்கள் எனில் நீங்கள் தமிழரா இல்லையா என்பதைத் தீர்மானியுங்கள்.
விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்களுக்கு அடிவருடிய கத்தோலிக்க ஆயர் மற்றும் பாதிரியார்கள், இராசபக்சா வென்றதும் அவருக்கும் சார்ந்தவருக்கும் அடிவருடிய கத்தோலிக்க ஆயர் மற்றும் பாதிரியார்கள், தாம் செய்வதையே மற்றவரும் செய்வார் என்ற அதீத கற்பனையில் அரசியல்வாதிகள் காலில் வீழ்ந்து துணைவேந்தர் பதவி பெற்றதாகக் கூக்குரலிடுகின்றனர்.
மன்னாரில் ஆயராக வரவேண்டிய மூத்த கத்தோலிக்கரான நெடுந்தீவுப் பெருமகனாரைப் புறந்தள்ளிய கத்தோலிக்க திருச்சபை, துணைவேந்தர் வரிசையையும் தேர்வையும் பேசுவது வெட்கக்கேடானது. கண்ணாடி வீட்டிலிருந்து கல்வீட்டிற்குக் கல்லெறியாதீர் கத்தோலிக்க ஆயரே.
ஆயிரம் முறைகேடுகள் கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நடைபெறுவதற்குத் தலைமை தாங்கும் கத்தோலிக்க ஆயர், முறையான பதவி வழங்கல்வழி ஆழ்ந்த சைவ சமயத்தவர் பெற்றதால் மனம் புழுங்கி, வேதனை விறுவிறுக்க, நெஞ்சம் பதைக்க, பொறாமை பெருக்கெடுக்கக் காலனித்துவக் கண்ணோட்டத்துடன் கூக்குரலிடுவதைச் சிவ சேனை வன்மையாகக் கண்டிக்கிறது.
விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டுகருத்துபகிர்
வைகாசி 1, 2048 (15.5.2017) திங்கள்.
சென்னை, விவ்விவாக்கம், இசை அறிஞர் ஐதரபாத்துச் சிவா இல்லம்.
வில்விவாக்கத்தில் 200 மாணவர்கள் திருமுறைகளைப் பண்ணோடு பாடப் பயில்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் முதல் நாள், திருமுறை விழா. அனைவரும் இணைந்து திருமுறை ஓதும் விழா.
ஆசிரியர் ஐதரபாத்துச் சிவா. அவருக்கு ஒத்துழைப்பாக அவர் துணைவியாரும் இரு மக்களும். இசைத் தமிழுக்கு இவர்கள் ஆற்றும் பணியைப் பார்த்துக் கேட்டு வியந்தேன்.
வைகாசி மாத முதல் நாள் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். திருமுறை ஓதலைக் கேட்டு மெய்ம்மறந்தேன். நிகழ்ச்சியில் கலந்தமை என் பேறு.
அண்மையில் நடைபெற்ற 12ஆம் வகுப்புத் தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நூல்கள் பரிசாக வழங்கினேன்.
வைகாசி 2, 2048 (16.05.2017) செவ்வாய்.
கும்பகோணத்தில் இருந்து பேரா. சி. அ. சங்கரநாராயணன் எனக்கு அனுப்பிய செய்தி.
The verse from Tiruvaachakam that remains within the innards of my heart SAS
No kin I seek, no native to credit my birth, no name to pen me;
nor no learned ones to refer to or consult, nor all learning, hence,begging description;
O, Dancer abiding 'neath the cute Kallaal tree in Kutralam! Unto your tinkling anklet,
as calf to mother cow, with heart in Passion melt,would I pray for all my want!
அதே செய்தியை, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், இந்தி, வடமொழி,
சேக்கிழார் அடிப்பொடியின் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் படிக்கலாம். அந்த வரிவடிவங்களிலும் படிக்கலாம். ஈற்றில் தமிழ் தந்தேன். www.thevaaram.org பார்க்க. திருவாசகம் முழுவதும் 658 பாடல்களும் இதே மொழிகளில்.
இந்தி, ஆங்கிலம் தவிர, ஏனைய ஐந்து மொழிபெயர்ப்புகளையும் 27 வரிவடிவங்களில் ஒலிபெயர்ப்புகளையும் ஒருங்கிணைக்கும் பேறு எனதாயிற்று.
தெலுங்கு
ఉట్రారై యాన్వేండేన్
ఊర్వేండేన్ పేర్వేండేన్
కట్రారై యాన్వేండేన్
కఱ్పనవుం ఇనియమైయుం
కుట్రాలత్ తమర్ందుఱైయుఙ్
కూత్తాఉన్ కురైహళఱ్కే
కట్రావిన్ మనంబోలక్
కసిందురుహ వేండువనే
బంధువులను నేను కోరను ఊరు కోరను పేరు కోరను
చదువుకున్నవాళ్ళను కోరను చతువవలసినవీ తియ్యనివీ
కుట్ఱాలంలో నివసించే నృత్యం చేయువాడా నీ శబ్దించే పాదాలకే
తూడగల అవు మనసులా కరుగి కోరుకుంటానే
అనువాదండా.పరిమళరంబై,హైదరాబాదు,2013
கன்னடம்
ಉಟ್ರಾರೈ ಯಾನ್ವೇಂಡೇನ್
ಊರ್ವೇಂಡೇನ್ ಪೇರ್ವೇಂಡೇನ್
ಕಟ್ರಾರೈ ಯಾನ್ವೇಂಡೇನ್
ಕಱ್ಪನವುಂ ಇನಿಯಮೈಯುಂ
ಕುಟ್ರಾಲತ್ ತಮರ್ಂದುಱೈಯುಙ್
ಕೂತ್ತಾಉನ್ ಕುರೈಹೞಱ್ಕೇ
ಕಟ್ರಾವಿನ್ ಮನಂಬೋಲಕ್
ಕಸಿಂದುರುಹ ವೇಂಡುವನೇ
ತಿರುಕುಟ್ರಾಲಂನಲ್ಲಿ ಬಯಸಿ ನೆಲೆಸಿರುವ ನಟರಾಜನೇ ! ನಾನು ಬಂಧು ಬಾಂಧವರನ್ನು ಬಯಸೆನು. ಬಾಳುವುದಕ್ಕೆ ಊರನ್ನು ಬಯಸೆನು. ಹೆಸರನ್ನೂ ಬಯಸೆನು. ವಿದ್ಯೆಯನ್ನು ವಿದ್ಯಾವಂತರನ್ನು ಬಯಸೆನು. ಕಲಿಯಬೇಕಾದ ವಿದ್ಯೆಗಳು ನನಗಿನ್ನು ಸಾಕು. ನಿನದಿಸುವ ಕಾಲ್ಗಡಗವುಳ್ಳ ನಿನ್ನ ಪವಿತ್ರ ಪಾದಗಳಲ್ಲಿ ಕರುವುಳ್ಳ ಹಸುವಿನ ಮನದಂತೆ ವಾತ್ಸಲ್ಯದಿಂದ ಕರಗುವುದನ್ನು ನಿನ್ನಿಂದ ನಾ ಬಯಸುವೆ.
ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014
மலையாளம்
ഉറ്റാരൈ യാന്വേണ്ടേന്
ഊര്വേണ്ടേന് പേര്വേണ്ടേന്
കറ്റാരൈ യാന്വേണ്ടേന്
കറ്പനവും ഇനിയമൈയും
കുറ്റാലത് തമര്ന്തുറൈയുങ്
കൂത്താഉന് കുരൈകഴറ്കേ
കറ്റാവിന് മനംപോലക്
കചിന്തുരുക വേണ്ടുവനേ
ഉറ്റവര് ആരും വോ
ഊരും വോ പേരും വോ
കറ്റവരും വോ
കറ്റതെല്ലാം മതി എനിക്കേ
കുറ്റാലത്തിലമര്രുളും
കൂത്താ നിന് കുര കഴലതില്
കറ്റാവുപോല് എന് മനം
കനിഞ്ഞുരുകിട വേുന്േ
കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2011)
சிங்களம்
උට්රාරෛ යාන්වේණ්ඩේන්
ඌර්වේණ්ඩේන් පේර්වේණ්ඩේන්
කට්රාරෛ යාන්වේණ්ඩේන්
කර්පනවුම් ඉනියමෛයුම්
කුට්රාලත් තමර්න්දුරෛයුඞ්
කූත්තාඋන් කුරෛහළර්කේ
කට්රාවින් මනම්බෝලක්
කසින්දුරුහ වේණ්ඩුවනේ
නෑ බන්ධූන් නො යදිමි,
ගම් ද නො යදිමි, කිත් පැසසම් නො පතමි
වියතුනගෙන් ද නො යදිමි,
හදාරන්න මතුවට ලැබේවි
කුට්ටාලයේ වැඩ සිටින
නටන්නාණනි, ඔබේ දිමුතු සිරි පා
වසු පැටවකු කෙරේ එළදෙන මෙන්
මුදුව උණු වන්නාණනි
පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
தேவநாகரி
उट्रारै याऩ्वेण्डेऩ्
ऊर्वेण्डेऩ् पेर्वेण्डेऩ्
कट्रारै याऩ्वेण्डेऩ्
कऱ्पऩवुम् इऩियमैयुम्
कुट्रालत् तमर्न्दुऱैयुङ्
कूत्ताउऩ् कुरैहऴऱ्के
कट्राविऩ् मऩम्बोलक्
कसिन्दुरुह वेण्डुवऩे
இந்தி
कुट्र्ालम में प्रतिश्ठित षोभायमान नटराज प्रभु! नूपुरधारी श्रीचरण!
चाह नहीं बन्धु बांधवों की, चाह नहीं जीने के लिए किसी बस्ती की।
चाह नहीं यषोभिलाशा की, चाह नहीं प्रबुद्ध विद्वानों के संपर्क की।
ज्ञानार्जन आपकी कृपा से अब होगा।
गाय जिस प्रकार बछड़े के लिए रंभाती है उसी प्रकार
हे प्रभु! मेरा मन भी द्रवीभूत होकर आपको पुकारना चाहता है।
- रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 1996
வடமொழி
न बन्धूनिच्छामि, न वासस्थानं च, कीर्तिं नेच्छामि,
नेच्छामि विदुषः च। अलं पठनेन मह्यम्।
कुट्रालक्षेत्रवासिन् नटराज, तव क्वणन्नूपुरपादप्राप्त्यर्थं
वत्साय धेनुरिव मनोद्रवीभवितुं एव इच्छामि।
भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
உரோம வரிவடிவம்
u'r'raarai yaanvae'ndaen
oorvae'ndaen paervae'ndaen
ka'r'raarai yaanvae'ndaen
ka'rpanavum iniyamaiyum
ku'r'raalath thamar:nthu'raiyung
kooththaaun kuraikazha'rkae
ka'r'raavin manampoalak
kasi:nthuruka vae'nduvanae
ஆங்கிலம்
I seek not kith and kin;
I seek not a dwelling place;
I seek neither name nor fame;
I seek not The erudite;
all that is to be learnt is sufficient Unto me.
O Dancer abiding at Kutraalam !
I seek Your beckoning and ankleted feet and to gain Them,
I must melt and thaw like a newly-calved cow.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995
உற்றாரை யான்வேண்டேன்
ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங்
கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக்
கசிந்துருக வேண்டுவனே
18.05.2017
இலங்கை இந்து தமிழர்கள் படும் துயர் பற்றி எனக்கு எப்போதும் விளக்கி - வழிகாட்டி -மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் - வாழ்க்கைக்கும் - வார்த்தைக்கும் சம்பந்தம் உடையவர்களாய் திகழும் அய்யா மறவன்புலவு க. சச்சிதானந்தன் -
இந்து ஈழ கவிஞர் அய்யா
காசி ஆனந்தன் - ஆகியோருடன்
மயிலை குளக்கரையில்.........
வைகாசி, தேய்பிறை, எட்டாம், ஒன்பதாம் பத்தாம் நாள்கள், அவிட்டம், சதயம், பூரட்டாதி விண்மீன் கூடிய நாள்கள்.
திருவள்ளுவர் ஆண்டு 2040 வைகாசி மேற்காணும் நாள்களே (17, 18, 19.05.2009)
முள்ளிவாய்க்கால் போர்க்களத்தில் பல இலட்சம் தமிழர் உயிர் நீத்த நாள்கள்.
நீத்தார் வழிபாடு, வீரர் நடுகல் என்பன 5,000 ஆண்டுகாலத் தொன்மையான, இடையீடின்றித் தொடர்கின்ற, அடுத்து எழுகின்ற தலைமுறைகளால் தொடரவுள்ள தமிழர் வழமை.
இலங்கைச் சிவசேனைத் தலைவர், மறவன்புலவு க. சச்சிதானந்தன், தமிழ்நாடு இந்து மக்கள் கட்சிச் செயலாளர் இராம இரவிக்குமார் மயிலாப்பூரில் அருள்மிகு கபாலீச்சரர் கோயிலில் வைகாசி, தேய்பிறை, எட்டாம் நாளில் (18.05.2017) போர்க்களத்தில் உயிர் நீத்த பல இலட்சம் தமிழருக்காக நீத்தார் வழிபாடு செய்தனர்.
நூற்றுக்கணக்கான சிவ அடியார்களும் தொண்டர்களும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அருச்சுனர் சம்பத்தர் தலைமையில் கூடினர். வழிபாட்டில் பங்கேற்றனர். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் வழிபட்டார்.
அதே காலத்தில் இந்து மக்கள் கட்சித் தொண்டர்கள் வடக்கே காசியில் கங்கைக் கரையிலும் தமிழ்நாட்டில் இராமேச்சரத்திலும் சீர்காழியிலும் மதுரையிலும் தஞ்சாவூரிலும் கும்பகோணத்திலும் கோயம்புத்தூரிலும் முள்ளிவாயக்கால் நீத்தார் வழிபாடு செய்தனர்
ஏவிளம்பி வைகாசி 4ம் தேதி
18-5-2017 வியாழக்கிழமை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளக்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நீத்தார் வழிபாடு - பூசைகள் நடைபெற்றது. இழந்த உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்தபட்டது.
இந்த நிகழ்வில் மாநில தலைவர் தமிழ்திருஅர்ஜூன் சம்பத் -
இலங்கை சிவசேனை தலைவர்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இந்திய இலங்கை நட்புறவு கழக தலைவர்
சிவத்திரு அய்யா கவிஞர்
காசி.ஆனந்தன்
இந்து மக்கள் கட்சி மாநில பொது செயலாளர்
இராம. இரவிக்குமார்
உள்ளிட்ட மாநில - மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
திருவள்ளுவர் ஆண்டு 2048, வைகாசி 09 (23.05.2017)
வவுனியா தம்பா விடுதியில் நடைபெற்ற கூட்டம்.
கூட்ட அழைப்பாளர், வவுனியா தம்பா விடுதி உரிமையாளர் த. பிரேமேந்திரராசா
வருகை தந்தோர்
1. புத்தளம் மாவட்டம் - புத்தளம் இந்துக் கல்லூரி சார்பில் சுரேந்திரன்
2. வவுனியா மாவட்டம் - முதல்வர் புளியங்குளம் இந்துக் கல்லூரி
3. முல்லைத்தீவு மாவட்டம் - முதல்வர் வித்தியானந்தா கல்லூரி
4. கிளிநொச்சி மாவட்டம் - கிளிநொச்சித் தமிழ்ச் சங்கம்
5. மன்னார் மாவட்டம் - முதல்வர் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி
6. யாழ்ப்பாணம் மாவட்டம் - தென்மராட்சிக் கலா மன்றம் சார்பில் தொழிலதிபர் சிவா
திருவள்ளுவர் ஆண்டு 2048, வைகாசி 05 (19.05.2017)
சென்னை, சைதாப்பேட்டை, விஜிபி சதுக்கம், சந்தோசம் அண்ணாச்சி அழைப்பில், பீட்டர் உதவியுடன் நடைபெற்ற கூட்டம்
வருகை தந்தோர்
1. மறவன்புலவு க.சச்சிதானந்தன்
2. கவிஞர் இரவிபாரதி
3. முனைவர் விசயலட்சுமி
4. முனைவர் வாசுகி
5, 6. மற்றும் பேராசிரியர் இருவர்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன் இச்சிலைகளை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கவேண்டும் என 2015 ஆவணியில் வி. ஜி. சந்தோஷம் அண்ணாச்சியிடம் விண்ணப்பித்திருந்தார். அவ் வேண்டுகோளை ஏற்று அவரும் 16 சிலைகளை 16 மாவட்டங்களுக்கு வழங்கினார்.
மலையக மாவட்டங்களைத் தேர்ந்தவர் இராசாங்கக் கல்வி அமைச்சர் மாண்புமிகு வி. இராதாகிருட்டிணன் அவர்கள். ஏனைய மாவட்டங்களைத் தேர்ந்ததும் பயனாளிகளை அடையாளம் கண்டதும் மறவன்புலவு க. சச்சிதானந்தன் பணியாயிற்று.
இரக்குவானை, தெகியோவிற்றை, நாவலப்பிட்டி, அட்டன், தம்பிலுவில் ஆகிய 5 இடங்களில் திருவள்ளுவர் சிலைகளைத் திறந்தனர். படங்கள் பார்க்க.இவை மாண்புமிகு இராசாங்கக் கல்வி அமைச்சர் இராதாகிருட்டிணன் அவர்கள் கடும் முயற்சியால்.
15.6.2017 புத்தளம், 19.6.2017 புளியங்குளம், 16.6.2017 மன்னார், 16.6.2017 முள்ளியவளை, 17.7.2017 கிளிநொச்சி, 18.6..2017 சாவகச்சேரி ஆகிய 6 இடங்களில் திறப்புவிழா ஏற்பாடுகளை மேற்கொள்ள இலங்கை வவுனியாவிலும் சென்னை சைதாப்பேட்டையிலும் கலந்தாலோசனைகள் நடைபெற்றன.
இன்னமும் கட்டபறிச்சான், மட்டக்களப்பு, கொழும்பு, மாத்தளை, பண்டாரவளை ஆகிய 5 இடங்களில் சிலைகள் திறக்க வேண்டும். 25.07.2016இல் பயனாளிகளுக்குக் கொடுத்த 16 சிலைகள்.
20 வைகாசி 2048 (03.06.2017) சனிக்கிழமை
சிறந்த நண்பர்கள், அன்பர்கள் இறைவன் எனக்குத் தந்த செல்வம்.
1959 தொடக்கம் என்னைப் போற்றி வளர்க்கும் திருநகரம் சென்னை. எவரையுமே தெரியாத நகரத்துக்கு வந்தேன். அனைவருமே என்னை நன்றாகத் தெரிந்தவர் போலக் கருதி வளர்த்தனர்.
அவர்கள் காட்டும் அன்புக்கு இணையில்லை, ஈடுமில்லை. 26.04.2017 சென்னை வந்தேன். அந்நாள் தொடக்கம் நேற்று வரை நான் சந்தித்து அன்பு பரிமாறிய அன்பர்கள்,
27.04.2017 உலகம் போற்றும் ஓவியர், சுவரில் எழுதத் தொடங்கியவர், இந்தியா ருடேயின் கலை இயக்குநராக உயர்ந்தவர்.
நானா சாம் எனக்கு இனிய நண்பர்.
11.05.2017 இந்தியாவின் முன்னணிப் புத்தகசாலை. தொடர்வண்டி நிலையங்கள் தோறும் புத்தகக் கடைகள். ஊர்கள் தோறும் புத்தகக் கடைகள். நான் எழுதிய நூல்கள் பல விற்பனையான கடைகள். இக்கின்பாதம்சு புத்தகக் கடை. 100 ஆண்டுகளுக்கும் கூடுதலாகச் சென்னையைத் தலைமையகமான புத்தக விற்பனை நிறுவனம். பதிப்புலகில் இக்கின்பாதம்சு சந்திரசேகர் எனில் தெரியதவர் இலர். இக்கின்பாதம்சு மேலாண் இயக்குநரான சந்திரசேகர் அவர்கள் எனக்கு இனிய நண்பர்.
27.05.2017 இரவி சுப்பிரமணியன், கும்பகோணம் ஈந்த இசைஞர், கவிஞர், திரைப்படஇயக்குநர், எழுத்தாளர். செயகாந்தன், சேக்கிழார் அடிப்பொடியார், திருலோக சீத்தாராமனார் என வாழ்வாங்கு வாழ்வோரின் வாழ்க்கையைக் குறும்படங்களாக்கியவர். எண்ணிலடங்கா இலக்கிய நண்பர்களுக்கு நண்பர். அவர்களுள் நானும் ஒருவன் என்பதே எனக்கு மகிழ்ச்சி. விதானத்துச் சித்திரம் என அவர் எழுதிய கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா. சென்றிருந்தேன்.
02.06.2017 தமிழ்நாட்டின் இரண்டாவது நிலை நாளிதழ் தினமலர். கோடிக்கணக்கான வாசகரின் நாளிதழ். அந் நாளிதழின் ஆசிரியர் இரா. கிருட்டிணமூர்த்தி. நாணயவியல் அறிஞர். சங்க கால நாணயங்களை உலகுக்கு அடையாளம் காட்டியவர். நான் மதித்துப் போற்றும் பெருமகனார். அவரின் அன்புக்குரியவனானேன் என்பதே பேறு.
02.06.2017 கவிஞர் முனைவர் அண்ணாகண்ணன் மொழியியலாளர். கூகுள் நிறுவனத்தில் மூத்த மொழியியலாளர் பொறுப்பில் உள்ளார். முன்பு யாகூ நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அன்னாருக்கு நான் அன்பன்.
04.06.17அன்று திறக்கப்பட்ட என் தொழிற்சங்க அலுவலகத்திற்கு வருகைதந்த மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுடன் நான் (இராம முத்துக்குமார் பாமக)
வைசாசி 20, 2048 (05.06.2017) திங்கள்
ஈழத் தமிழர் வாழ்வில் 400 ஆண்டுகளாக, யூன் 5, துயரம் நிறைந்த நாள்.
1619 யூன் 5ஆம் நாள் நல்லூரில் பிலிப்பு இடி ஒலிவேரா (Phillippe de Oliveira) தலைமையில் வந்த போர்த்துக்கேயப் படைகள், யாழ்ப்பாண அரசைப் போரில் தோற்கடித்து மன்னன் சங்கிலியனைக் கைது செய்த நாள்.
1956 யூன் 5ஆம் நாள், இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்களமே ஆட்சிமொழிச் சட்டம் முன்மொழிந்த நாள். அன்று காலிமுகத் திடலில் சிங்களமே ஆட்சிமொழிச் சட்ட முன்மொழிவை நீக்கக் கோரி, சா. யே. வே. செல்வநாயகம், க. கா.பொன்னம்பலம், செ. சுந்தரலிங்கம், சௌ.தொண்டமான், என இலங்கைத் தமிழர் தலைவர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான தமிழ்த் தொண்டர்களும் அறப்போரில் ஈடுபட, அவர்களை அரசு ஆதரவு பெற்ற குண்டர்கள் தாக்கிய நாள்.
1974 யூன் 5ஆம் நாள் என் அருமைத் தம்பி சிவகுமாரன் பலியான நாள். 1974 சனவரி 02 - 09 நாள்கள் நடைபெற்ற நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் பணிக்காக 150 தொண்டர்களை நான் தேர்ந்த காலத்தில் சிவகுமாரன் அணியில் சேர்ந்தார். வீரசிங்க மண்டப ஒழுங்குகள் பொறுப்பை அவர் சார்ந்த 10 பேர் கொண்ட அணியிடம் ஒப்படைத்தேன். ஒருநாள் என்னிடம் வந்தார். காவலர்களையும் தொண்டர்களாகச் சேர்த்தீர்களா என முறுகினார். அவர்கள் புலனாய்வாளர் என்றேன். ஒருவாறு அமைதியானார். நாள்தோறும் பணி முடிந்து இரவு 10 மணியளவில் இராசராசேசுவரன் தங்கராசாவின் காரில் முதலில் உரும்பராயில் சிவகுமாரன், பின் வண்ணார்பண்ணையில் நான் என இறங்கிக் கொள்வோம். இறுதிநாள் துயர நிகழ்ச்சிக்குக் காரணமான காவல்மேலாளர் சந்திரசேகரா மீது கடும் சினம் கொண்டிருந்தார். ஒருமுறை அவரைத் தாக்கியுமுள்ளார். பின்னர் யூன் 5 1974இல் நஞ்சருந்தி இறந்தார். அவரது இறுதிநாள் நிகழ்வுக்கு நானும் என் மனைவியும் சென்றோம், நேரில் அஞ்சலித்தோம்.
வைகாசி 21, 2048 (06.06.2017) செவ்வாய்
இறைச்சி உண்பதற்குத் தடை. கிறித்தவ, இசுலாமியரின் உணவுப் பழக்கத்தில் தலையீடு. தாழ்த்தப்பட்டோரின் வாழ்வுமுறை சீரழிவு என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.
https://www.youtube.com/watch?v=ojKxaih6T6k.
இச் செய்திகளால் உலகெங்கும் உள்ள மக்களின் சினம் ஊடகங்களில் சமூகவலைவெளியில் போராட்டங்களில் வெளியாகின்றன. மக்களின் காலம், பொருள், சிந்தனை, செயல் செலவாகின்றன. தேவைதானா?
கள நிலை அதுவல்ல. இந்து சமயத்தில் சிலரிடை உள்ள மூடநம்பிக்கைக்கு ஆப்பு வைக்கும் சட்டமே அச்சட்டமோ? தேடினேன், திரண்டதைத் தருகிறேன்.
நேபாளத் தலைநகர் காத்மண்டு. தெற்கே பரா மாவட்டத்தின் பறையர்ப்பூர். சனகரின் மிதிலைக்கு மேற்கே, இந்திய நேபாள எல்லைக் கோட்டுக்கு அண்மித்த ஊர். இந்திய எல்லையில் கோரக்பூர், முசராப்பூர், பாடலிபுரம் யாவும் பறையர்ப்பூரின் அருகே.
பறையர்ப்பூரில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்து சமயத் திருவிழா. காதுமை அம்மன் திருவிழா. 2009இல் நடந்த விழா. 2014இல் அடுத்த விழா. நடக்கப்போவது 2019இல்.
தீமை அகலும். நன்மை பெருகும். ஆற்றலின் அணங்கு காதுமை. அவளே அருள் பெருக்குபவள். விழாவின் நோக்கமே தீமை அகற்றலும் ஆற்றல் பெருக்கலும்.
இதற்காகக் காதுமைக்குக் கொடுப்பது உயிர்ப் பலி.
மூன்று தொடக்கம் ஐந்து இலட்சம் வரை எண்ணிக்கையான எருமைகளை உயிர்ப் பலியாகக் கொடுப்பர் நேபாள இந்துக்கள்.
இந்திய எல்லைக் கோட்டுக்கு அண்மித்த ஊர். எனவே விகாரை மாநில இந்துக்கள் விழாவுக்குப் படையெடுப்பர். கடவுச் சீட்டும் நுழைவுரிமமும் இல்லாமலே இந்திய நேபாள எல்லையை இரு நாட்டாரும் கடக்கலாம்.
நேபாளம் குறிஞ்சி நிலம். மலைகள், குன்றுகள் பள்ளத் தாக்குகள் பரவிய நாடு. அங்கு எருமைகள் அருமை தெற்குச் சமவெளியில் சில ஆயிரம் எருமைகளே உள.
இந்திய விகாரை மாநிலம் ஆற்றுப் படுகையான சமவெளி, மருத நிலம். நெல் வயல்கள், கால் நடைகள் நிறைந்த மாநிலம். எருமைகளின் வாழ்விடம். நீர்நிலைகளும சேற்று நிலமும் எருமைகளுக்கு உவந்த சூழல். கோடிக்கணக்கான எண்ணிக்கையில் எருமைகள் இந்திய விகாரை மாநிலத்தில் உள.
நேபாளத்தின் பறையர்ப்பூர் காதுமை அம்மன் விழாவில் உயிர்ப் பலியாகும் எருமைகளுள், மூன்று தொடக்கம் ஐந்து இலட்சம் வரை எண்ணிக்கையான எருமைகளுள் சில ஆயிரங்களே நேபாள எருமைகள் எஞ்சியன இந்திய விகாரை மாநில எருமைகள்.
உரிமம் இன்றி நேபாளத்துள் கடத்தும் எருமைகள்.
2014இல் கவிரி மவுலேக்கி இந்திய அரசின் மீது வழக்குத் (வழக்கு எண் 881 / 2014) தொடர்ந்தார். (Gauri Maulekhi Versus Union Of India P. (C) No. 881 / 2014) நேபாளத்துக்குக் கடத்தும் எருமைகளால் இந்தியக் கால்நடைச் செல்வம் அழிவதைத் தடுக்கக் கோரினார்.
2015 யூலை 13இல் இந்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியது. இந்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியது. உயிர்ப் பலிக்காக நேபாளத்துக்கு எருமைகள் கடத்துவதைத் தடுக்க இந்திய அரசு விதிமுறைகளை உருவாக்குமாறு ஆணையாகப் பரிந்துரைத்தது. இந்திய விலங்கு வதைத் தடைச் சட்டம் 38(1)க்குள் அமையுமாறு விதிகளை உருவாக்குமாறு இந்திய அரசுக்கு ஆணையாகப் பரிந்துரைத்தது. (Hon’ble Supreme Court had directed on 13/07/2015 to frame guidelines to prevent animals from beings smuggled out of India to Nepal where large scale animal sacrifice took place. Hon’ble Supreme Court had also directed the Central Government to draft and notify Rules regarding to live stock market and direction was given to frame such rules under Section 38 (1) of the Prevention of Cruelty to Animals Act 1960.)
இந்திய உச்சமன்ற ஆணைக்கமைய, 2017 சனவரி 16இல் இந்திய அரசு மாதிரி வரைவை எடுத்துக் கூறுயது. பொதுமக்களின் கருத்துக் கேட்புக்கு 30 நாள்கள் கால எல்லை கொடுத்து முன்வைத்தது. இந்திய மக்களின்
2017இன் கால்நடைச் சந்தையை ஒழுங்காக்கல் விதியின் பின்னணி இதுவே. அந்த விதிகளையும் தெரிந்து கொள்வது பொருத்தமானதால் கீழே தருகிறேன்.
2017இன் விலங்கு வதைத் தடை (கால்நடைச் சந்தையை ஒழுங்காக்கல்) விதிகள். 1960இல் விலங்கு வதைத் தடைச் சட்டத்தின் பிரிவு 38(1)க்குள் அமையும் விதிகள். i. The rules are called “Prevention of Cruelty to Animals (Regulation of Livestock Markets) Rules, 2017 which are made under Section 38(1) of the Prevention of Cruelty to Animals Act 1960.
இறைச்சிக்காகவோ, உயிர்ப்பலிக்காகவோ கால்நடைகளைச் (பசு, எருமை, எருது, ஒட்டகம்) சந்தைக்குக் கொண்டுவரலாகாது. அந்த மாநிலத்துக்கு சேராத ஒருவருக்கு முன்உரிமமின்றிக் கால்நடைகளை விற்கக் கூடாது. விற்றதற்கான சான்று விற்றவர், வாங்கியவர், வட்ட ஆட்சியர், கால்நடை முதன்மை அலுவலர், விலங்குச் சந்தைக் குழு ஆகியோரிடம் கொடுக்கவேண்டும். ,ii. Cattle (Cow, Buffalo, Bull, Camel) cannot be brought to Animal Market for sale for slaughter or sacrifice. Cattle cannot be sold to a person outside the state without permission as per the state cattle prevention laws. When the cattle is sold proof of sale shall be given to purchaser, seller, Tehsil Office, Chief Veterinary Officer and to the Animal Market Committee.
கால்நடைச் சந்தைகள் அனைத்தும் மாவட்ட விலங்குச் சந்தைக் குழுவிடம் அடுத்த மூன்று மாதத்துள் பதிக. போதுமான ஒளி, நீர், தீவனப் பரப்பு, மருத்துவ வசதி, கழிப்பறைகள், இறந்த கால்நடைகளை முறையாகப் புதைக்குமிடம் இருப்பதை விலங்குச் சந்தைக் குழு உறுதிசெய்க. iii. All existing Animal Markets will have to be registered within 3 months with the District Animal Monitoring Committee. The Committee shall ensure that Animal Market has adequate lighting, water, feeding area, Veterinary facility, toilets, provisions for disposal of dead animals etc.
கொம்புகளுக்கு வண்ணம் பூசுதல், எருமைகளின் காது வெட்டல், கற்றரையில் கால்நடைகளைப் படுக்கவிடல், உடலில் வேதிப் பொருள்களை விடல், இயல்புக்கு மாறான செயல்களைக் கால்நடைகள் செய வலிதல், மூக்கு வெட்டல் துளைத்தல், காது துளைத்தல், கத்தியால் அல்லது சூடான இரும்பால் குறியிடச் சுடல் யாவுக்கும் தடை. iv. Cruel and harmful practices on animals including painting of horns, ear cutting in Buffaloes, making animals lay on hard ground, use of chemicals on body of animals, forcing animals to perform unnatural acts, nose cutting, ear slitting or cutting by knife or hot iron marking on animals for identification purposes etc. are prohibited.
வாங்கிய எவரும் இறைச்சிக்கோ உயிர்ப் பலிக்கோ விற்கத் தடை. v. Purchaser of cattle cannot sell animal for slaughter or sacrifice.
கால்நடைகளின் நலம் சோதிக்கக் கால்நடைமருத்துவர் ஒருவரைப் பதவியமர்த்தல். vi. Appointment of a Veterinary Officer to check the health of the animals.
தகுதியற்ற நோயான கன்றுத்தாச்சியான கால்நடைகளை விற்கத் தடை. vii. Prohibition of sale of unfit, ill and pregnant animals.
வைகாசி 22, 2048 (07.06.2017) புதன்
அடுத்தடுத்து மூன்று வீடுகள். வடக்கு வீடு. நடு வீடு. தெற்கு வீடு. மூன்று வீட்டிலும் மூன்று வெவ்வேறு இன மக்கள்.
வடக்கு வீட்டான் எப்பொழும் நடு வீட்டானைத் தாக்குவான். நடு வீட்டானின் கிழங்களும் சிறுசுகளும் அச்சத்தில் ஓடி ஒளிவது தெற்கு வீட்டில்.
தாக்குதல், தப்புதல் எனத் தொடர்கதை.
நடு வீ்ட்டுப் பிள்ளையள் ஒன்றோ இரண்டோ தெற்கு வீட்டிலேயே தங்கின. தெற்கு வீட்டான் தங்கச் சொன்னதால் தங்கின.
ஒருநாள், தெற்கு வீட்டான் நடு வீட்டுக்கு வந்தான். என் வளவுக்குள் எவரும் வராதீர்கள் என எழுதிய தட்டியை நடு வீட்டுச் சுவரில் மாட்டினான். திரும்பிப் போனான்.
தாக்கினால் தப்பி ஓட இடம்? தெற்கு வீட்டானும் வரவேண்டாமென்கிறான். தாக்கவேண்டாம் என எழுதிய தட்டியை வடக்கு வீட்டுச் சுவரில் மாட்டினால் அறம்.
அப்படிச் செய்யாது, உயிர் தப்புவோரை வரவேண்டாம் என்பது அறமா?
ஏதோ அடுகிடை படுகிடையாய்த் தெற்கு வீட்டுள் நடுவீட்டார் எல்லாரும் போவர் என்ற மாயையுடன் தெற்கு வீட்டார் எழுதிய தட்டி நடு வீட்டில் தொங்கியது.
நடு வீட்டார் அனைவரும் தெற்கு வீட்டுக்குள் போவார் என்ற மாயையைத் தட்டி சுட்டியது. நடு வீட்டார் ஒப்பவில்லை.
தாக்கியது உண்மை, தப்பியது உண்மை, ஒன்றோ இரண்டோ தெற்கு வீட்டுள் தங்கியதும் உண்மை. அதற்காக நடு வீட்டில் தட்டி தொங்குவது அறமா? நடு வீட்டார் அனைவருமே தெற்கு வீட்டுக்கு இடம் பெயர்வர் எனலாமா?
சிட்னி நகரில் 2048 மாசியில் திரு. நவரத்தினவேல் சங்கரப்பிள்ளையுடன் சென்றேன். யோடி மக்கே அம்மையாரைச் சந்தித்தேன். அவர் நியூ சவுத்வேல்சு மாநில நாடாளுமன்ற உறுப்பினர்.
சிட்னி நகரில் 2048 மாசியில் மருத்துவர் மனமோகனுடன் சென்றேன். இளைஞர் கிறெயிக் லோண்டியைச் சந்தித்தேன். அவர் இசுராத்பீல்டு தொகுதியின் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்.
இருவரையும் இலங்கைக்கு அழைத்தேன். ஒரு வாரமாவது தமிழ் மக்களிடையே தங்கக் கேட்டேன்.
தமிழ்ப் பகுதிகளில் ஆத்திரேலிய அரசு வைத்திருக்கும் தட்டி விளம்பரங்கள் தமிழரின் மானத்தைப் போக்குவன. ஏதோ ஈழத் தமிழர் யாவரும் ஆத்திரேலியாவுக்குக் குடிபெயரத் தொடர்ச்சியாக முயல்வதான மாயைத் தோற்றமே அந்த விளம்பரம் என்றேன். ஈழத் தமிழரைப் பார்க்க வரும் எவருக்கும், ஈழத்தமிழர் நாட்டுப் பற்றற்றவர் என்ற மாயையாகுமே என்றேன்.
ஆத்திரேலியாவில் 2013இல் மிக உச்சமான படகுவழி அகதி வருகை இருந்ததையும் படிப்படியாகக் குறைந்து 2015இல் மிகச் சொற்ப எண்ணிக்கையான ஈழத் தமிழரே படகுகளில் வந்ததையும் சுட்டினேன். புள்ளி விவரங்களைக் கொடுத்தேன்.
25 இலட்சம் வரை எண்ணிக்கையில் தமிழர் இலங்கையில் வாழ்கிறார்கள். அவர்களுள் 300-400 பேர் ஆத்திரேலியாவை நாடக் கூடும். அவர்களுக்காக 25 இலட்சம் தமிழருமே பெயர்வார்களா? தமிழரின் மானத்தை வினாக்குறியாக்கும் அந்த விளம்பரங்களை
உடனடியாக அகற்றுங்கள் என்றேன்.
வடக்கு வீடு, நடு வீடு, தெற்கு வீடு கதையையும் சொன்னேன். திரு. நவரத்தினவேல் சங்கரப்பிள்ளை, மருத்துவர் மனமோகன் இருவரும் என்னுடன் இருந்தவர்கள்.
09.06.2017
நாளை ஆரம்பமாகவுள்ள இந்து சமய வாரம் நிகழ்விற்க்கு இலங்கை சிவசேனை தலைவர் மறவன்புலவு மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்கள் வாழ்த்து
இந்துச் சிறார் இந்து சமயத்திலேயே தொடர இத்தகைய பணிகள் அரிய பெரிய வரலாற்றுச் சிறப்புடைய பணிகளாம். வாழ்க வளர்க
வைகாசி 26, 2048 (09.06.2017) வெள்ளிக்கிழமை
இரண்டாவது அயலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு மாலை 2000 மணி.
சிங்கப்பூர் பேரா. முனைவர் சுப. திண்ணப்பன்,
சென்னை மகேசு பாபா பத்மநாபன்
ஆகியோருடன்
வைகாசி 28, 2048 (11.06.2017) ஞாயிறு, மாலை 1900 மணி.
இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு, சென்னை, அடையாறு, ஆற்றுக் கரை ஓரத்தில் முத்தமிழ்ப் பேரவையின் திருவாவடுதுறை தியென் இராசரத்தினம்பிள்ளை அரங்கு.
வைகாசி 29, 2048 (12.06.2017) திங்கள் காலை.
சென்னை,மயிலாப்பூர், இராதாகிருட்டிணன் சாலை, கிளாரியன் பிரெசிடென்ரு விடுதி. ஊடகத்தார் சந்திப்பு.
என் வேண்டுகோளை ஏற்று, இலங்கைக்கு ஒவ்வொன்றும் 8 அடி உயரமான 16 திருவள்ளுவர் சிலைகளைச் சென்னையில் வடித்து, அன்போடு நன்கொடுத்தவர் செவாலியர் டாக்டர் வி. ஜி. சந்தோசம் அண்ணாச்சி.
என் வேண்டுகோளை ஏற்று இலங்கைகு வந்த திருவள்ளுவர் சிலைகளைப் பொறுப்பேற்று, 16 மாவட்டங்களுக்கும் அனுப்பியவர், இலங்கை அரசின் மாண்புமிகு இராசாங்கக் கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன்.
16 சிலைகளுள் 8 சிலைகளுக்கான திறப்புவிழாக்கள், இலங்கையில் 15.6 புத்தளம், 16.6 மன்னார், முள்ளியவளை, 17.6 கிளிநொச்சி, 18.6 சாவகச்சேரி, 19.6 புளியங்குளம், 20.6 மட்டக்களப்பு, 22.6 கொழும்பு என நடைபெற உள.
செவாலியர் வி.ஜி.சந்தோசம்அண்ணாச்சி தலைமையில், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், தமிழிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என 33 பேர் இலங்கைக்குப் பயணிக்கிறார்கள். திற்ப்புவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான அறிவிப்பு ஊடகத்தாருக்கு இன்று வழங்கினோம்.
01.06.2048 (15.06.2017) வியாழன், கொழும்பு கட்டுநாயக்கா வானூர்தி நிலையம்.
தொழிலதிபர் கவிச்சக்கரவர்த்தி, வி. ஜி. சந்தோஷம் தலைமையில் தமிழகத்தில் இருந்து தமிழ் அறிஞர் 29 பேர் இலங்கை சென்றனர்.எட்டுத் திருவள்ளுவர் சிலைகளைத் திறக்க.
இராசாங்கக் கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் வானூர்தி நிலையத்துக்கு நேரில் வந்தார், அறிஞர் குழாமை வரவேற்றார்.
02 நீதியரசர் டி. என். வள்ளிநாயகம், சென்னை உயர் நீதி மன்றம்
03 பேரா. முனைவர் உலகநாயகி பழனி, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி
04 முனைவர் வாசுகி கண்ணப்பன், தலைவர், கண்ணப்பன் வாசுகி அறக்கட்டளை
05 கவிஞர் முனைவர் இரவிபாரதி, புகழ் பூத்த கவிஞர்
06 கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன், நடன, இசை, உரை ஆற்றலர், மேலாளர், காந்தளகம், சென்னை
07 திருமதி ம. பொ. சி. மாதவி பாஸ்கரன் (திரு. ம. பொ. சி.யின் மகள்), தலைவர், ம. பொ. சி. அறக்கட்டளை, சென்னை
08 பேரா. முனைவர் க. திலகவதி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
09 கவிஞர் முனைவர் மரியதெரசா, கே. எஸ். அரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல்
10 முனைவர் அல்போன்சா, தமிழ் அறிஞர், உரை வீச்சர்
11 முனைவர் எழிலரசி பாலசுப்பிரமணியன், இணைப்பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை
12 செல்வி சக்தி வடிவு, எத்திராஜ் கல்லூரி தமிழ்த் துறை (பேரா. எழிலரசியின் மாணவி), பேச்சாளர்
13 செல்வன் சிவபாலகுமாரன், தமிழ்த் துறை, கல்லூரி மாணவன்
14 முனைவர் பெரியண்ணன், தலைவர், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
15 முனைவர் இதயகீதம் இராமானுஜம், செயலர், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
16 புலவர் வெ. சேகர், அரசு மேல்நிலைப் பள்ளி, சென்னை
17 திருமதி இந்திரா சேகர், எழுத்தாளர், (புலவர் வெ. சேகரின் துணைவியார்)
18 பேரா. முனைவர் க. செங்கோட்டையன், கே. எஸ். அரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல்
19 முனைவர் த. க. கருணாநிதி, முதல்வர், வாணி கல்வியியல் கல்லூரி, வாணியம்பாடி
20 திருமதி அம்சவேணி, எழுத்தாளர்
21 திரு. சக்திசேதுபதி, தமிழ் வளர்ச்சித் துறை
22 திரு. இரமேஷ், தமிழ் வளர்ச்சித் துறை
23 திரு. சௌந்தரராசன், மயிலாப்பூர்த் தமிழ்ச் சங்கம்
24 திருமதி சுமதி சௌந்தரராசன், மயிலாப்பூர்த் தமிழ்ச் சங்கம்
25 திரு. ஏ. அப்துல்கனி, மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்
26 திரு. தங்கவேலு, தொழிலதிபர், சென்னை
27 திருமதி கீதா தங்கவேலு, தொழிலதிபர், சென்னை
28 திரு. கணேஷ், விஜிபி குழுமம் நிழற்பட மேலாளர்
29 திரு. பீட்டர் மைக்கேல் ராஜ், டாக்டர் வி. ஜி. சந்தோஷத்தின் தனிச் செயலாளர், உதவியாளர்
30 திருமதி செல்வி பீட்டர் மைக்கல் ராஜ்
31 திரு. மணவை அசோகன், இலங்கையில் பயண ஒருங்கிணைப்பாளர்
32 திரு. பிரசன்னா, தமிழறிஞர்
33 திரு. சாத்தப்பன், படப்பிடிப்பாளர்
02.06.2048 (16.06.2017) வெள்ளி காலை, மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா. தமிழகத் தொழிலதிபர் வி. ஜி. சந்தோசம் அண்ணாச்சி தலைமையில் 32 தமிழக அறிஞர் கலந்து கொண்டநிகழ்ச்சி.
02.06.2048 (16.06.2017) வெள்ளி பிற்பகல்
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி
திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
02.06.2048 (16.06.2017) வெள்ளி மாலை, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா. தமிழகத் தொழிலதிபர் வி. ஜி. சந்தோசம் அண்ணாச்சி தலைமையில் 32 தமிழக அறிஞர் கலந்து கொண்டனர்.
03.06.2048 (17.06.2017) சனிக்கிழமை
கிளிநொச்சித் தமிழச் சங்கம்
04.06.2048 (18.06.2017) ஞாயிறு காலை 1100 மணி
யாழ்ப்பாணம் இணுவில் பொது நூலகத்தில்
தமிழகத் தமிழ் அறிஞர் குழாம்
04.06.2048 (18.06.2017) ஞாயிறு காலை 1100 மணி
யாழ்ப்பாணம் இணுவில் பொது நூலகம்
04.06.2048 (18.06.2017) ஞாயிறு பிற்பகல்
தென்மராட்சிக் கலாமன்றம் சாவகச்சேரி,
யாழ்ப்பாணம் மாவட்டம்
திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
05.06.2048 (19.06.2048) திங்கள்
யாரை விலகுமாறு யார் கேட்பது?
இவர்தான் முதலமைச்சர்,
இவரே ஏற்றவர்,
இவரே பொருத்தமானவர்,
மற்றவர்கள் விட்டுக்கொடுங்கள்
எனக் கேட்டவர்களே,
உங்கள் புத்தியைச் செருப்பால் அடியுங்கள்
என மற்றவர்களிடம் சொல்வீர்களாக.
எம் தேர்வு தவறானது,
பொருத்தமற்றவரை முதலமைச்சராக்கினோம்,
ஈழத் தமிழர்களே எம்மை மன்னீப்பீர்களாக
எனக் கூறி அரசியலில் இருந்தே ஒதுங்குவீர்களாக.
முதலமைச்சரை நீக்குவோம் என மீண்டும் கேட்கிறார்கள்.
முன்பு தீர்மானத்தில் தவறியவர்கள்,
மீண்டும் தவறான தீர்மானத்தைத் தமிழர் மீது திணிக்கிறார்கள்.
ஒரு தவறை மறைக்க மற்றொரு தவறைத் தமிழர் மீது திணிக்கிறார்கள்.
அரசியலே தெரியாதவர்கள் அப்பொழுது மாவையைப் புறந்தள்ளினார்கள்.
இப்பொழுது மாவையைப் புறந்தள்ளாதீர் எனத் தாம் தேர்ந்தவரையே கேட்கிறார்கள்.
தமிழரை நட்டாற்றில் விடத் தீர்மானித்தவர்கள்
தமிழருக்காகத் தீர்மானிக்க முடியாது.
சம்பந்தரே சுமந்திரனே விலகுங்கள்
தமிழர் அரசியல் எதிர்காலம் தமிழருடையதாக அமைவதாக.
19.06.2017 Monday
Could not understand how TNA chose a judge over a politician. Could not understand why TNA is blaming a person whom they rightly chose. The choice was wrong. So choosers are to be blamed.
CM of a province should have been a seasoned politician like Maavai. Choosers discarded him. There were other aspirants as well, who could have performed as a politician. Choosers ignored them.
CVW cannot be blamed. In fact he was very hesitant to extent of refusing many times. TNA leaders climbed the stairs of his house umpteen times to convince him to rope him in. A Judge was sought after by those who could not make judgments for the Tamils themselves.
The day before CVW was chosen, TNA leader was with Mahinda; TNA leader was with the Indian Envoy; TNA leader was with envoys of the developed world. The selection process was buttressed by these stake holders.
TNA leader convinced his colleagues from fellow political parties. TNA side-lined Maavai in the process. He was pressurized to give up his claim. They indirectly told him that he didn't have qualifications to be in harness?
Maavai was very generous. It was to be the pinnacle. It could have been the peak point in his political career. Other aspirants were equally generous, in towing the decision of the TNA leader
Once you don the mantle, you respect the duties and responsibilities to the electorate which chose you. CVW slowly transformed himself to fit into his new portfolio. He assumed a role that had no precedence. Tamils had forgotten all their traditional skills in diplomacy and governance, since King Sankili was dethroned on 5th June 1619.
CVW was nursing for a new tradition in governance with duty, discipline and diligence based on love, morals and grace. He is the first among equals. He had a collective responsibility. Board of ministers or the cabinet was a new formula to the North.
“The meaning of freedom is lost if you don't have the freedom to make mistakes” Gandhi said on the assumption of a new government led by Nehru upon Indian independence. All the four ministers of NPC were sincere. All were young. All had the requisite background to handle their portfolios. There might have been errors, unintentional deviations, and occasionally like any other human, intentional mistakes.
Now TNA is talking about punishing? Now TNA is spearheading a no-confidence motion with support from Muslim, Christian and Buddhist representatives in the NPC. TNA is moving the governor to act.
TNA should reflect before reacting in this worst possible manner. This hitting-below-the-belt motion by TNA brought discredit to Tamils. Mature TNA leadership would have sorted these problems behind closed doors. If pettiness overtakes pride, if base elements overtake civilized values, honour suffers. Tamil honour was about to be mortgaged.
Is TNA the consenting pawn for those who took away Karuna from Pirabakaran to defeat Pirabakaran, Maithri from Mahinda to defeat Mahinda. To put Maavai and CVW at loggerheads towards a split is a political agenda to defeat Tamil solidarity and Tamil self-respect by those whose artistry in governance was hibernating only for a short period of 135 years after the Kandyan convention to be regained with aggressive compulsions with the departure of the British.
05.06.2048 (19.06.2048) திங்கள் காலை
வவுனியா புளியங்குளம் இந்துக் கல்லூரி
திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
06.06.2048 (20.06.2017) செவ்வாய் மாலை
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம்
திருவள்ளுவர் சிலை, திறப்பு விழா
திருமதி பிரியா செகதீசுவரன் எனக்கு அனுப்பிய செய்தி
ஐயா, மட்டக்களப்பு மண்ணிலே வள்ளுவப்பெருந்தகையின் திருவுருவச்சிலைதனை நிறுவ கால்கோளிட்ட தங்கள் அரும்பணியை வியந்து பாராட்டுவதுடன் எமது மண்ணின் சார்பில் பெரும் நன்றியினைத் தெரிவிக்கிறேன் இந்த இனிய வரலாற்றுநிகழ்வில் விபுலானந்தரின் தழிழ் வாழ்த்தினைப்பாடும் பாக்கியத்தைப் பெற்றேன். நன்றிகள்...
06.06.2048 (20.06.2017) செவ்வாய் காலை
திருகோணமலை, மூதூர், கட்டைபறிச்சான், விபுலானந்தா கல்லூரி
திருவள்ளுவர் சிலை, சந்சோசம் அண்ணாச்சியின் நன்கொடை, அவர் தலைமையில் தமிழக அறிஞர் குழு கட்டைபறிச்சானில்
21.06.2017
21.06.2017
07.06.2048 (21.06.2017) புதன்
1981 மே மாதம் 31ஆம் நாள்
யாழ்ப்பாணக் குடாநாட்டில்
அரச வன்முறை வெடித்த நாள்.
யாழ்ப்பாணம் நடுநகர்த் துயரங்களின் காணொலிப் பதிவு.
பார்க்க.
யாழ்ப்பாணக் குடாநாட்டில்
அரச வன்முறை வெடித்த நாள்.
யாழ்ப்பாணம் நடுநகர்த் துயரங்களின் காணொலிப் பதிவு.
பார்க்க.
23.06.2017
09.06.2048 (23.06.2017) வெள்ளி.
கிளிநொச்சியில் திருவள்ளுவர் சிலைக்கான பீடத்தில் ஈழம் என்ற சொல்லை நீக்குமாறு சொன்னார்களாமே?
1973 கார்த்திகையில் காவல் துறை என்னை விசாரிக்கத் தொடங்கியது. மருத்துவர் ஆனந்தராசா என் மீது சினம் கொண்டிருந்தார். நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தக்கூடாதெனச் சிறீமாவோ அரசு கூறியது. யாழ்ப்பாணத்தில் நடத்துவோம் என நான் சார்ந்தவர்கள் கூறினோம். மருத்துவர் ஆனந்தராசா சீறீமாவோ அரசின் பக்கம் இருந்தார். அரசுப் பணியில் (அறிவியல் ஆய்வாளர்) இருந்த என்னை நீக்க அப்போதைய அமைச்சர் பீலிக்சிடம் சொல்வதாகச் சென்றார். (படிக்க எனது யாழ்ப்பாணமே நூல்) அதைத் தொடர்ந்து காவல்துறை என்னை விசாரிக்க வந்தது. அப்பொழுது புகழ்பெற்ற நான்காம் மாடியினர் என்னிடம் வந்தார்கள்.
கொழும்பு அரசு தமிழருக்கு எதிராக எடுக்கும் காவல், புலனாய்வு நடவடிக்கைகளின் பின்னணியில் யாரோ நம்மவர் இருப்பார். 1973, 1977, 1979, 2010, 2012, 2014 எனத் தொடர்ச்சியாக, காவல்துறைப் புலனாய்வு, படையின் புலனாய்வு, தேசிய புலனாய்வு அமைப்பு, பயங்கரவாதப் புலனாய்வு அமைப்பு எனத் தொடரும் என்மீதான விசாரணைகள் யாரோ நம்மவரின் தூண்டுதலாலானவை. விசாரிக்க வருபவர் சிலர் என்னிடம் இதைச் சொல்வர். யார் உங்கள் எதிரிகள்? எனக் கேட்பர்.
ஈழம் என்ற சொல்லை நீக்கவேண்டும் எனக் கொழும்பு அரசின் ஆணைக்குப்பின் தமிழரோ இசுலாமியரோ உளரா? ஈழத்துக்கும் இலங்கைக்கும் வேறுபாடு இல்லை எனப் பல்முறை இலங்கை அரசும் சிங்கள அரசியல்வாதிகளும் சொன்ன பின்னரும் இந்த நடவடிக்கையைத் தூண்டியவர் யாராக இருக்கலாம்?
தேர்வதும் தெளிவதும் நம் கடன்.
நம் தோல்விகளுக்குக் காரணர் நம்மவரே.
நம் தோல்விகளுக்குக் காரணர் நம்மவரே.
25.06.2017
11.06.2048 (25.06.2017) நோர்வே நாட்டில் இருந்து பதிப்பாகும் தமிழ்வலை என்கிற tamilnet கூறும் செய்தி பார்க்க, படிக்க கேட்க
02.07.2017
19 ஆனி 2048 (2.07.2018)
இளையான்குடி மாற நாயனார் திருமடம் செல்லும் பேறுற்றேன்.
இளையான்குடி மாற நாயனார் திருமடம் செல்லும் பேறுற்றேன்.
இருண்ட முன்னிரவு. முளைத்தும் முளையாமலும் விதை நெல் சிதறிய வயல்.காலினால் தடவினார். முளைகளைக் கைகளினால் கோலினார். கூடையை நிரப்பினார். தலையில் சுமந்தார். இல்லாளிடம் கொடுத்தார்.
காலி னால்தட விச்சென்று கைகளால்
சாலி வெண்முளை நீர்வழிச் சார்ந்தன
கோலி வாரி யிடாநிறை யக்கொண்டு
மேலெ டுத்துச் சுமந்தொல்லை மீண்டனர் . 12040018
சாலி வெண்முளை நீர்வழிச் சார்ந்தன
கோலி வாரி யிடாநிறை யக்கொண்டு
மேலெ டுத்துச் சுமந்தொல்லை மீண்டனர் . 12040018
உலைமூட்ட முயன்ற புனிதவதியார் விறகு இல்லையே என்றார்.
வீட்டின் கூரை மரங்களை வெட்டி விறகாக்கினார். சமைத்ததைப், பசியில் களைத்திருக்கும் சிவனடியாருக்குக் கொடுக்க அழைத்தார்.
வழிவரும் இளைப்பி னோடும்
வருத்திய பசியி னாலே
அழிவுறும் ஐயன் என்னும்
அன்பினிற் பொலிந்து சென்று
குழிநிரம் பாத புன்செய்க்
குறும்பயிர் தடவிப் பாசப்
பழிமுதல் பறிப்பார் போலப்
பறித்தவை கறிக்கு நல்க. 12040021
வருத்திய பசியி னாலே
அழிவுறும் ஐயன் என்னும்
அன்பினிற் பொலிந்து சென்று
குழிநிரம் பாத புன்செய்க்
குறும்பயிர் தடவிப் பாசப்
பழிமுதல் பறிப்பார் போலப்
பறித்தவை கறிக்கு நல்க. 12040021
எல்லை இல்லாத செல்வத்தை உடையவர்.சிவனடியார்களுக்கு விருந்தோம்புதலே வாழ்வாகக் கொண்டவர். பின்னர் ஏழ்மையில் வாடும்காலத்தில் அரிசிக்கு முளைநெல், விறகுக்குக் கூரை மரம் எனக் கொண்டு விருந்தோம்பியவர்.
1350 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளையான்குடிமாற நாயனாரின் வழித்தோன்றல் மு. சு. முருகேசனார் (+91 9095540160) திருமடத்தில் உள்ளார். மாதந்தோறும் மக நாளில் சிவனடியார்களுக்கு உணவு வழங்கி வருகிறார். நாயனார் வாழ்ந்த வீடு, வழிபட்ட சிவன்கோயில், விதைத்த வயல்கள் இன்றும் அங்குள.
Ilayangudi Maranayanar Memorial Trust, City Union Bank, Ilayangudi, A/c 16400100077339 IFC code CIUB0000164
Ilayangudi Maranayanar Memorial Trust, City Union Bank, Ilayangudi, A/c 16400100077339 IFC code CIUB0000164
07.07.2017
ஆனி 22, 2048 (07.07.2017) வெள்ளிக்கிழமை
சென்னையில் இருந்து விழுப்புரம்.
விழுப்புரத்தில் இருந்து மேற்கே 15 கிமீ. கடாரம் எனும் கெடார். சிற்றூர்.
சென்னையில் இருந்து விழுப்புரம்.
விழுப்புரத்தில் இருந்து மேற்கே 15 கிமீ. கடாரம் எனும் கெடார். சிற்றூர்.
அரித்துவாரம் பாபா இராம தேவரின் மாணவர், அணுக்கத் தொண்டருடன் பகல் பொழுது.
யோகக் கலையில் விண்ணர். தவ வாழ்வினர். தவத்திரு. முருகவேள்.
38 வயது காணும் இராம இரவிக்குமார். இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலர். அவரும் தனியாகக் கடலூரில் இருந்து வந்திருந்தார்.
தொண்டை மண்டல இல்லங்களில் 1959இல் இருந்து உணவருந்தி வருகிறேன். நேற்றைய நண்பகல் உணவு தவத்திரு முருகவேளரின் தாயார், அன்பும் அறுசுவையும் கலந்து தந்தது.
09.07.2017
ஆனி 25, 2048 (09.07.2017) ஞாயிறு
சென்னை, வியாசர்பாடி, திருவாசக விழா ஊர்வலம், சில காட்சிகள்
10.07.2017
ஆனி 26, 2048 (10.07.2017) திங்கள்
சென்னை மயிலாப்பூர் பிரசிடெண்டுவிடுதி.
சென்னை மயிலாப்பூர் பிரசிடெண்டுவிடுதி.
இலங்கைக்குப் பதினாறு திருவள்ளுவர் சிலைகளைக் கொடுத்து, 8 சிலைகள் திறப்பு விழாக்கள் (15.6.2017 தொடக்கம் 22.06.2017 வரை) சென்று வந்த தமிழக அறிஞர் குழு ஒன்று கூடல்.
சந்தோசம் அண்ணாச்சிக்குப் பாராட்டு விழா. நீதியரசர் ஏ.ஆர். இலட்சுமணன் தலைமையில்.
அலை கடலுக்கு அப்பால் முப்பால் என 32 அறிஞர் எழுதிய இலங்கைப் பயணக் கட்டுரைத் திரட்டு வெளியீடு.
13.07.2017
13.07.2017
ஆனி 29, 2048 (13.07.2017) வியாழன்
சென்னை கோட்டைதலைமைச் செயலகம்.
சென்னை கோட்டைதலைமைச் செயலகம்.
சுமார் ஓரிலட்சம் நூல்களை 01.06.1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் எரித்தார்கள்.
தமிழகத்தில் இருந்து தரமான நூல்கள் ஓரிலட்சம் நூல்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பவேண்டும். அதுவும் 01.06.2018உக்கு முன் அனுப்ப வேண்டும். தமிழக அரசின் கொள்கை முடிவு.
தமிழகக் கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் 16.06.2017 அன்று சட்டசபையில் அறிவித்தார்கள், ஊடகங்கள் செய்தி பரப்பின.
ஈழத்தமிழர் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினேன். நேற்றுச் சென்னை,கோட்டை தலைமைச் செயலகம் சென்றேன். அமைச்சரையும் செயலாளரையும் சந்திக்க நியமனம் கேட்டேன்.
இன்று காலை ஆள்வார்ப்பேட்டையில் அமைச்சர் இல்லத்தில் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துப் பூங்கொத்துக் கொடுத்தேன்.
இன்று மாலை தலைமைச் செயலகத்தில் செயலாளர் உதயச்சந்திரனைச் சந்தித்தேன். வாழ்த்தினேன், பாராட்டினேன், நூல் அன்பளித்தேன். எவ்வாறு நடைமுறைக்கு வரும் எனக் கேட்டேன். விளக்கினார்.
14.07.2017
ஆனி 30, 2048 (14.07.2017) காலை
சென்னை தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலை. ஓவியர் சந்தானம் இல்லம்.
சென்னை தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலை. ஓவியர் சந்தானம் இல்லம்.
நான் அடிக்கடிபோய்வரும் இல்லம். 1986இல் இருந்து போய்வருகிறேன். பொது வெளியில் அவருக்கும் எனக்கும் நெருங்கிய பொதுமை.
இன்று காலை தேனாம்பேட்டையில் அவரது இல்ல வாயிலில் பந்தல். வழியெங்கும் தமிழ் உணர்வாளர்கள். நண்பர்கள். திரைத்துறை இயக்குநர் புகழேந்தி அழைத்துச் சென்றார்.
ஓ..வென்று அழுகை வந்தது. ஓவியர் சந்தானம் அமைதியாக உறங்குவது போல, படுக்கையில் அல்ல பெட்டிக்குள். பால்நினைந்தூட்டும்.... எனத் தொடங்கும் திருவாசக வரிகளை அங்கு இசைத்தேன்.கண்ணீர்ப் பெருக்குக்கு நடுவே.
கவிஞர் காசி ஆனந்தன் வந்திருந்தார். அவரும் விக்கி விக்கி அழுதார்.
கடந்த மாதம் சென்னை மந்தைவெளியில் நல்லி குப்புசாமி செட்டியாரின் திருமண நிகழ்வு. அங்கே ஓவியர் சந்தானம் வரவேற்றுக் கொண்டிருந்தார். இது எங்க வீட்டுத் திருமணம், உள்வீட்டுப் பிள்ளை நான், வாங்க சச்சி என வாஞ்சையோடு வரவேற்றார்.
அதற்குப் பின் இன்று இப்படிக் கண்டேன்.
15.07.2017
ஆனி 30, 2048 (15.07.2017) சனிக்கிழமை
சென்னையில் இருந்து கொழும்புக்கு, இலங்கை விமான சேவை வானூர்தியில்.
சென்னையில் இருந்து கொழும்புக்கு, இலங்கை விமான சேவை வானூர்தியில்.
எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தமிழ் உணர்வாளர்களின் அயராத கொள்கை முழக்கம். தமிழரின் உணர்வுத் தாகம்.
எதிலும் தமிழ்
தமிழ் உணர்வாளர்களின் அயராத கொள்கை முழக்கம். தமிழரின் உணர்வுத் தாகம்.
இலங்கை விமான சேவை Sri Lankan Airlines Airbus 320 வானுந்து 320 வகை வானூர்தி. போயிங்கு நிறுவனத் தயாரிப்பு. சென்னையில் இருந்து கொழும்புக்குப் பறந்தேன். ஒன்றேகால் மணி நேரப் பயணம்.
வானூர்தி புறப்படுகின்றது. அறிவிப்புகள் கேட்டன. முதலில் சிங்களத்தில், பின்னர் தமிழில், அடுத்து ஆங்கிலத்தில்.
தமிழ் அறிவிப்புத் தெளிவாக, சிங்களம் சார் உச்சரிப்பாக ஆனால் தவறற்றதாக அமைந்தது.
வானில் பறக்கத் தொடங்கியது வானூர்தி.
இருக்கை எதிரே சிறு திரை. தமிழ்த் திரைப்படங்கள் பார்க்கக் கூடிய திரை. என்னென்ன தமிழப் படங்கள், பாடல்கள் என்ற விவரம் முன் பைக்குள் உள்ள வழிகாட்டி நூலில் தமிழில்.
அறிவிப்புகளையும் தமிழில் பார்க்கலாம் என்றிருந்தது. தமிழைத் தொட்டேன். என்னவெல்லாம் தமிழில் தரமுடியுமோ தந்தனர் திரையில்.
எங்கும் தமிழ்
எதிலும் தமிழாக
வானூர்தியில்
எதிலும் தமிழாக
வானூர்தியில்
நான் சொல்வதைவிட இணைத்துள்ள படங்கள் விளக்கமாக உளவே!
23.07.2017
ஆடி 07, 2048 (23.07.2017) ஞாயிறு.
உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நேற்று மாலை தாக்குதல், அவரைக் காக்க முயன்ற காவலர் இருவருக்குக் கடும் காயங்கள், ஒருவர் நேற்றயை பின்னிரவில் காலமானர். இணையம் வழி செய்திகள்.
உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நேற்று மாலை தாக்குதல், அவரைக் காக்க முயன்ற காவலர் இருவருக்குக் கடும் காயங்கள், ஒருவர் நேற்றயை பின்னிரவில் காலமானர். இணையம் வழி செய்திகள்.
நீதிபதி இளஞ்செழியன் நல்லூர் சங்கிலியன் வீதியில் வசிப்பவர். அங்கு சென்றேன். அவரில்லை என்றனர் காவலர்.
யாழ்ப்பாண மருத்துவமனைக்குச் சென்றேன். உடல அறை வாயிலில் துணைவியாருடன் இருந்தார். பல்லாண்டு வாழவேண்டும் நீங்கள். நீதி செழிக்க உழைக்க வேண்டும் என அவரிடம் கூறினேன்.
உயிரிழந்த காவலர் ஏமச்சந்திராவின் உடலம் இருந்த ஈமமுன்னகம் சென்றேன. அஞ்சலித்தேன்.
கொடுமை கொடுமை.
24.07.2017
தமிழகப் பதிப்பகங்களிடம் இருந்து ஒவ்வொரு நூலிலும் ஏறத்தாழ 1000 படிகளை விலைக்கு வாங்கித் தமிழக நூலகங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்குகிறது. இதற்காககத் தமிழக மக்கள் வரி கொடுக்கிறார்கள்.
உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் உள்ள நூலகங்களுக்கும் 100 படிகள் சேர்த்து வாங்குக அவர்களுக்கு அனுப்புக என நான் தொடர்ச்சியாகத் தமிழக அரசைக் கேட்டுவந்துள்ளேன்.
என் அருமை நண்பர் தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருந்த காலத்தில் யேர்மன் நாட்டுத் தமிழ்க் கழகம் ஒன்றிற்கு இசைக் கருவிகள் நூல்கள் என்பன என் வேண்டுகோளை ஏற்றுக் கொடுத்தார்.
முதலமைச்சர் செயலலிதா அம்மையார் என் வேண்டுகோளை ஏற்று இணுவில் பொது நூலகத்துக்கு இலங்கை ரூபாய் 15 இலட்சம் பெறுமதியான நூல்களை நன்கொடையாகத் தந்தார். அத்துடன் பேரா. அ.ச. ஞானசம்பந்தன், பேரா. பனசை நக்கீரன், பேரா. அரங்க இராமலிங்கம், கவிஞர் ஏர்வாடி இராதாகிருட்டிணன், ஆகியோரும் பெருமளவு எண்ணிக்கையில் இணுவில் பொது நூலகத்துக்காக என்னிடம் தந்தனர். அவை யாவும் இப்பொழுது இணுவிலில்.
16.6.2017 சட்டசபையில் உலகத் தமிழர் நூல்கங்களுக்குத் தமிழக அரசு நூல்களை அனுப்பும் எனச் சட்டசபையில் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இக்கருத்தை வலியுறுத்தி வந்த நான், 14.7.17 காலை கல்வி அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சென்று வாழ்த்தினேன். பள்ளிக் கல்விச் செயலாளர் உதயச்சந்திரனையும் நேரில் சென்று வாழ்த்தினேன். படங்கள் பார்க்க.
தமிழகத்தில் 1981 தொடக்கம் இலங்கை நூலகங்களுக்காகத்தமிழகத்தில் நூல்களைச் சேர்த்தவர்கள் பலர். பாதுகாப்பு வந்ததும் நூல்களை அனுப்புவோம் எனச் சேகரித்த நூல்களை வைத்திருந்தனர். கிளிநொச்சிக்கும் அவர்களுட் சிலர் நூல்களை அனுப்பி இருந்தனர்.
இலங்கை நூலகங்களுக்கு நூல்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பத் தமிழக அரசுடன் இணைந்து திரு. விஜி சந்தோசம் அண்ணாச்சி செயற்படுகிறார்.கடந்த வாரம் அவர் தமிழக முதலமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாகப் பாராட்டி வாழ்த்தினார். படங்கள் பார்க்க.
24.07.2017
ஆடி 14, 15, 2048 (30, 31.07.2017) ஞாயிறு, திங்கள்.
மட்டக்களப்பில் விபுலானந்தர் விழா. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அரிய முயற்சி. அழைப்பிதழ் பார்க்க.
ஆடி 10, 2048 (26.07.2017) புதன். யாழ்ப்பாணம் நடு நகர்.
"ஐயா...." என்ற குரல், தொடர்ந்து, "எப்படி இருக்கிறீர்கள்........?" வினா
"சிறையில் ஒன்றாக இருந்தோமே நினைவிருக்கா...?" நானும் மறந்து, உலகமும் மறந்த நிகழ்வு.
1997 பிப்புருவரி 9ஆம் நாள் எனக்குச் சிறைவாசம் தொடக்கம். சென்னை நடுவண் சிறை வாழ்க்கை 30 நாள்கள். அரசியல் காரணமான சிறை வாழ்க்கை.
நான் போகமுன்பே சிறைக்குள் இருந்தவர் வசந்தகுமார். நான் வெளிவந்த பின்பும் சிறை வாசம் தொடர்ந்தவர்.
காலை 0600 மணியளவில் என் அறைக் கதவைத் திறக்கக் காவலர் வருவார். முன்பே எழுந்திருக்கும் நான் சிறைக் கதவுக் கம்பிகளில் கை பிடித்தவாறே, உரத்த குரலில் மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்களையும் பாடி முடித்துவிடுவேன். அருகில் இருந்த கட்டடங்கள் எங்கும் என் குரல் கேட்கும்.
என் குரலைக் கேட்டவர்களுள் ஒருவர் வசந்தகுமார். அடுத்த கட்டடத்துள் அவரது அறை. தொடக்கத்தில் அவைரைத் தெரிய வாய்ப்பில்லை. காலம் செல்லச் செல்ல அவர் பழக்கமானார்.
சிறைவாசம் முடிந்து பிணையில் வந்தேன். அவர் வரவில்லை. எனவே அவரும் அவரது சகபாடிகளும் படிக்க நூல்கள் அனுப்புவேன்.
இவற்றையெல்லாம் நினைவு கூர்ந்தார் நேற்று வசந்தகுமார். "பாடல்கள் உற்சாகித்தன..., நூல்கள் அறிவூட்டின. உங்களுக்கு நன்றி..." என நேற்றும் சொன்னார்.
யாழ்ப்பாணம் நடுநகரில் தனியார் நிறுவனக் காவல் ஊழியராக அவர்.
ஆடி 11, 2048 (26.07.2017) வியாழன்.
அப்பதுல் கலாம் நினைவு நாள்.
அப்பதுல் கலாம் நினைவு நாள்.
இந்தியா ஈந்த அறிவியல் ஞானி. இராமேச்சரத்தின் இனிய மகன். வரலாறு உள்ளவரை வாழ்வார் அப்துல் கலாம்.
இன்று இராமேச்சரம் பேயக்கரும்பு ஊரில் அவருக்கு நினைவகத்தைத் தமைமை அமைச்சர் மோடி உலகுக்காக்கினார்.
10.12.2010இல் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் என்னைப் பாராட்டி, அப்துல் கலாம் விருது வழங்கினார். படம் பார்க்க.
அவரது கணித ஆசிரியர் கனகசுந்தரம்பிள்ளை யாழ்ப்பாணத்தவர். படிக்க.
http://sachithananthan.blogspot.com/2016/…/blog-post_12.html
http://sachithananthan.blogspot.com/2016/…/blog-post_12.html
23.01.2012இல் யாழ்ப்பாணத்தில் அவர் பல்கலைக்கழகத்திலும் இந்துக் கல்லூரியிலும் உரையாற்றுகையில் அவருடனான என் இனிய தொடர்புகளை நினைவு கூர்ந்தார். பார்க்க காணொளி.
https://www.youtube.com/edit?o=U&video_id=xoKOZ2hTONs
https://www.youtube.com/edit?o=U&video_id=xoKOZ2hTONs
16.10.2016இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் அப்துல் கலாம் சிலை திறந்தபொழுது கலந்துகொண்டேன். படங்கள் பார்க்க.
30.07.2017
30.07.2017
ஆடி 14, 2048 (30.07.2018) ஞாயிறு சுவாதி நாள், சுந்தரர் குரு பூசை.
மக்கள் குடியிருப்புள் சுடுகாடு அமையலாமா?
புத்தூர் மேற்கு. ஒரு சதுர கிமீ. பரப்பளவில் நெருக்கமாகக் குடியிருப்பு. அரசு வழங்கிய நிலங்கள், விற்பனையானவற்றை வாங்கிய நிலங்கள்.
நடுவே ஒரு சுடுகாடு. 8 பரப்புக் காணியில் கிந்துசிட்டிச் சுடுகாடு. சுற்றிவர இருக்கும் மக்களுக்குரிய சுடுகாடு அன்று. தெற்கே 2 கிமீ. தொலைவில் வாழும் சிறுப்பிட்டி மக்களுக்குச் சுடுகாடு.
அவர்களுக்குக் காரையம்பலம் என்ற சுடுகாடு உண்டு. ஆனாலும் அவர்கள் கிந்துசிட்டிச் சுடுகாடு தமது என்கின்றனர். இருக்கலாம்.
மக்கள் நெருக்கமாக வாழும் மனைகளுக்கு நடுவே சுடுகாடு வேண்டாம் என்பது புத்தூர் மேற்கு மக்களின் கோரிக்கை. கலைமதி மக்கள் மன்றம் முன்பாகக் கடந்த 19 நாள்களாக அறப்போர். உண்ணா நோன்பு அறப்போர். நேரில் சென்றேன், விவரம் தெரிந்தேன். ஆறுதல் கூறினேன்.
இவர்களுள் பலர் சிறை சென்றனர், வன்முறையைத் தூண்டிய குற்றமெனச் சந்தேகத்தில். சிலர் பிணையில் வந்துளர். 23 பேர் இன்னமும் சிறைக்குள். படங்களாகப் பட்டியல்.
புத்தூர் மேற்கு மக்களின் கோரிக்கையில் அறம் உண்டு. கிந்துசிட்டி சுடுகாடாகாது பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை பிரதேச சபைக்கு உண்டு. அவர்கள் கட்டுப்பாட்டில் உளதால்.
30 ஆடி 2048 (15.08.2017) செவ்வாய் மாலை
என் காலத் தமிழ்ப் பதிப்புலகின் தந்தையாக இரா. முத்துக்குமராசாமியாரைப் பார்க்கிறேன்.
இன்று (15.8.2017) மாலை அவர் காலமாகிய செய்தி நஞ்சாகக் காதில் பாய்ந்தது.
அவரில்லாத சென்னை எனக்கு வெறுமை. அவரில்லாத தமிழ்ப் பதிப்புலகம் எனக்கு வெங்கானம்.
குழையும் தமிழால் சச்சி என என்னை அழைக்க அவரில்லையே என ஏங்குகிறேன்.
No comments:
Post a Comment