11.02.2012
சிட்னி, இல்லப்புதர், ஆண்கள் பாடசாலை, பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலத்திற்கு நிகழ்வு, திரு. கானா பிரபா பதிவுகள் பார்க்க, பகிர்க
http://www.tamilmurasuaustralia.com/
http://ulaathal.blogspot.com.au/2012/02/blog-post.html
11.02.2012
ஆத்திரேலியா, சிட்னி, உலக சைவப் பேரவை, 11.02.2012, இல்லப்புதர் (ஓம்புசு) ஆண்கள் பாடசாலை, மறவன்புலவு க. சச்சிதானந்தனுக்கு, யாழ்ப்பாணம், நவாலியூர், சோமசுந்தரப் புலவர் மகன் இளமுருகனார் மகன் மருத்துவர் சோமசுந்தர பாரதி வழங்கிய வாழ்த்துப்பா.
பார்க்க, பகிர்க
http://www.youtube.com/watch?v=5fcgdyK1GGA
வணக்கம்
தேவாரம் தளத்தை ஆத்திரேலியாவில் பன்மடங்கு பார்க்குமாறும் பயனுறுத்துமாறும் தொண்டாற்றிய உங்கள் அனைவருடனும் என் மகிழ்ச்சியைப் பகிர்கிறேன்.
30.11.2011 மாலை சிட்னி வந்தேன். 13.02.2012 மாலை சிட்னியில் இருந்து புறப்பட்டேன்.
75 நாள்கள் ஆத்திரேலியாவில்.
19.12.2011 தொடக்கம் 23.12.2011 வரை மெல்போண்
31.01.2011 தொடக்கம் 05.01.2012 வரை பேர்த்து
05.01.2012 தொடக்கம் 10.01.2012 வரை பிறிசுப்பேன்
19.01.2012 தொடக்கம் 22.01.2012 வரை அடிலாயிடு
எஞ்சிய அனைனத்து நாள்களும் சிடனி.
மொத்தம் 25 பரப்புரை நிகழ்வுகள்.
இடார்வின் செல்லவில்லை, மருத்துவர் மகேந்திரராசா, 0403085458, திரு. பிரதாபன் 08 89270837 ஆகியோருக்குத் துண்டு விளம்பரஙகள் அனுப்பினேன். அவ்வாறே இரவுண்சுவில்லு திருமதி இலீலா கோபாலன் 07 47286444, 0414065535 அவர்கடகுத் துண்டு விளம்பரங்கள் அனுப்பினேன். அவர்களுடன் தொடர்பாக இருந்து அங்கும் தேவாரம் தளம் பயனுறுத்துமாறு செய்வது உங்கள் பணி.
1. சமய நூல்கள் ebook reader ஆக, திரு. சிறீசுக்கந்தராசா, மொல்போண்
2. ஆங்கிலத்தில் 283 கோயில் வரலாறு, 27 அருளாளர் வரலாறு, திருமதி மங்களம் வாசன், மெல்போண்
3. திருமுறைப் போட்டி, செல்வி அபிராமி, திரு. சீவன், பேர்த்து
4. திருமுறைப் போட்டி திருமதி இராமாதவி, திருமதி காயத்திரி பிரிசுப்பேன்
5. Android OS, iPad, Iphone, போன்ற புதிய தொழில்நுட்பத்தில் திருமுறை, திரு. ஞானானந்தன் பிரிசுப்பேன்
6. தேவாரம் தளம் வழி திருமுறைப் போட்டி திரு. தனசேகர் பிரிசுப்பேன்,
7. தட்டச்சுத் தேடலில் உயிர்மெய்யாக்கத்துக்குத் தட்டச்சு விளக்கம்
ஆகிய 7 செயற்றிடங்கள் தொடங்க இப்பயணம் வழிவகுத்தது.
என் நலம் பேணி, என் பயணத்துக்கு உற்றுழி உதவிய உங்கள் அனைவருக்கும் என் நன்றி.
நலமாகக் கோலாலம்பூர் வந்து சேர்ந்தேன்.
14.02.2012 காலை பெத்தாலிங்கு செயா திருபீடத்தில்
1. இடாத்தோ ஏ. வைத்தியலிங்கம்
2. சுவாமி பாலயோகிகள்
3. பேரா. இராசேந்திரன்,
4. திரு. ஆதிமூலம்
5. திரு. தில்லாடி
ஆகியோருடன் மலாய் மொழிபெயர்ப்புப் பற்றிய ஆலோசனைக் கூட்டம்.
2010 ஆகத்துத் தொடக்கம் இந்த முயற்சி.
2011 நவம்பரில் மீண்டும் சந்திப்பு.
அடுத்த சில வாரங்களில் மலாயா பல்கலைக்கழகத்துக்குக் கடிதம் எழுதவும், நிதி திரட்டும் முயற்சி தொடங்கவும் ஒப்புக்கொண்டோம். நன்கொடையாளர் நிதியை நேராகப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்புவர். எட்டு இலட்சம் வௌளி, (A$266,660) தொகையைக் கோயில்கள் வழங்குவதே ஏற்பாடு. நான்கு ஆண்டுகளில் மலாய் மொழிபெயர்ப்புப் பணி முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்.
14.02.2012 மதியம் தொடர் வண்டியில் தஞ்சம் மாலிம் புறப்பட்டேன். கோலாலம்பூரில் இருந்து வடக்கே இருமணி நேரப் பயணம். இரவு தேவாரம் தளத்தை அடியவர்களுக்கு விளக்கினேன்.
15.02.2012 காலை காம்பார் புறப்படுகிறேன். மாலை அங்கு விளக்கக் கூட்டம்.
பின்வருமாறு தேவாரப் பரப்புரைக்காககப் பயணிக்கிறேன்.
1. 14 Feb Tg. Malim, Perak
2. 15 Feb Kampar Tengah, Perak
3. 16 Feb Ipoh, Perak
4. 17 Feb Tg. Rambutan, Perak
5. 18 Feb Manjung, Perak
6. 19 Feb Taiping, Perak
7. 20 Feb Butterworth, Penang
8. 21 Feb Sg.Petani, Kedah
9. 22 Feb Alor Setar, Kedah
நன்றி
11.03.2012

ஆப்கானிஸ்தானில் 2000 ஆண்டுகளுக்குமுன் எழுப்பிய புத்தரின் சிலைகளைச் சில ஆண்டுகளுக்குமுன் குண்டுவைத்துத் தகர்த்தனர். 2000 ஆண்டுப் பராம்பரீயம் ஒரே நாளில் தரைமட்டமாகியது.
இந்தச் செய்தி கல் மனத்தவரையும் கரைக்கும். போரைப் புறந்தள்ளியவரின் சிலைகள் போரை முன்னெடுத்தவரால் தகர்ந்தன.
செய்தி அறிந்த உலகம் கண்ணீர் சிந்தியது.
சிறுவர் தொடக்கம் முதியவர் வரை நெஞ்சு கனத்தனர், நினைந்து கசிந்தனர்.
இலங்கையில் குருணாக்கல் நகருக்கு அருகே, இரம்பொடைக்கல் என்ற சிற்றூர். அங்கே புத்த கோயில். அருகே அறநெறிப் பாடசாலை. அந்தப் பாடசாலையின் மாணவர் புத்த கோயிலில் வாழ்ந்த துறவி அமரமொழித் தேரரிடம் வந்தனர். அந்த இளம் பிஞ்சு உள்ளங்கள் அழுதன, ஆற்றாது அரற்றின.
உடைந்த சிலை போன்று சிலை எழுப்புங்கள், நிதி திரட்டுகிறோம் என அந்த மழலைகள் துறவி அமரமொழித் தேரரிடம் அழுது கேட்டனர். தொழுது இறைஞ்சினர்.
அந்தப் பிஞ்சு உள்ளங்களின் உணர்வலைகள் துறவியைத் தூண்டின.
புத்த கோயில் அருகே 80 அடி உயரமாக நிமிர்ந்து நின்ற கற்குன்றைத் துறவி பார்த்தார். அந்தக் கற்குன்றில் அழகான புத்தர் சிலையை அமைப்போம் எனச் சிறார்களைத் தேற்றி அனுப்பினார்.
அடுத்த 10 ஆண்டுகளில் வியத்தகு நிகழ்வுகள் தொடர்ந்தன. நிகழ்ந்தவற்றின் சுருக்கத்தைக் காணைச் சொடுக்குக,

22.03.2012
1. எழுத்தாளர் யாழூர் துரை காலமானார்.
1946இல் பிறந்து, இலக்கிய உலகில் தடம் பதித்த எழுத்தாளர் யாழூர் துரை, 21.3.2012 மாலை 1600 மணிக்குச் சென்னை மந்தை வெளியில் காலமானார்.
அவரைப் பற்றிய விளக்கமான செய்தியை, இணைப்பில் பார்க்க. ஆனந்த விகடன் பிரசுரமான ஈழத்து எழுத்தாளர்கள் என்ற நூலில் எழுத்தாளர் கொடிவழி அருணகிரி அவர்கள் தந்துள்ளார்கள், பார்க்க.
நேரில் சென்றேன், இல்லத்தவரிடம் ஆறுதல் கூறினேன். என்னாலான உதவிகளை நல்கினேன். திரு. அருணகிரி அவர்களும் என்னுடன் வந்தார்கள், தன்னாலான உதவிகளை வழங்கினார்கள். இல்லத்தவருக்கு உதவ விழைவோர் திரு. அருணகிரி அவர்களுடன் 0091 9444393903 பேசுக.புரட்சிப்புயல் வைகோ அவர்களின் செயலரே திரு. அருணகிரி அவர்கள்.
படங்களை இணைப்பில் பார்க்க.
அனைவருடனும் பகிர்க.
நன்றி
அனைவருடனும் பகிர்க.
நன்றி
2. தமிழர் பராம்பரீயம்
தமிழரின் அறிவியல் பராம்பரீயம், கட்டடக் கலைப் பராம்பரீயம், தமிழ் மொழிக் காப்புப் பராம்பரீயம், வாழ்வுக்குரிய ஒழுக்க நெறிப் பராம்பரீயம், இசை, நடனம், நாடகம், சிற்பம், ஓவியம் போன்ற நுண்கலைப் பராம்பரீயம் யாவும் தரைமட்டமாகும் முயற்சியே, நான்கு வழி நெடுஞ்சாலைப் பணிக்காக அருள்மிகு அமிர்தவல்லி உடனுறை பனங்காட்டுநாதர் கோயிலை உடைக்கும் முயற்சி. மேலும் பார்க்க.
24.03.2014
உலகில் எத்தனை நாடுகள் உள்ளன? = ஐநா வில் 193 நாடுகள் உறுப்பினர்கள். கொசொவோ தனி நாடு, ஐநாவில் உறுப்பினர் இல்லை. இப்படிப் பார்த்தால் 240 ஆள்புலங்கள் உள. அவற்றுள் 193 நாடுகள் ஐநா உறுப்பினர்.
எத்தனை நாடுகளில் தமிழர்கள் வாழுகின்றனர்? = 70 நாடுகளில் தமிழர் வாழ்கின்றனர். 30 அரசுகள் தமிழ் வளர்ச்சிக்கு மானியம் வழங்குகின்றன. விவரம் பார்க்க என் கட்டுரை sachi.blogspot.com.
தமிழ் ஆட்சிமொழியாக எத்தனை நாடுகளில் உள்ளன? =
ஒரே ஒரு நாட்டில், இலங்கையில்.
தேசிய மொழியாக அரசியலமைப்பு அட்டவணை மொழியாக இந்தியாவில்,
தேசிய மொழிகளுள் ஒன்றாகச் சிங்கப்பூரில்,
நாணயத்தில் தமிழையும் சேர்க்கும் நாடுகள் இலங்கை, இந்தியா, மொரிசியசு.
மழலை முதல் பட்டதாரி வகுப்புவரை தமிழில் வழிக் கல்வி, இலங்கையில் இந்தியாவில்,
தமிழ் மொழிப் பள்ளிகள் பல உள்ளன சிங்கப்பூரில்,
503 பள்ளிகளில் பாடமொழியாக மலேசியாவில்,
சில பள்ளிகளில் பாட மொழியாக மொரிசியசில்,
உயர் கல்வியில் தமிழையும் ஒரு பாடமாகத் தேர்வு எழுத மலேசியா, சிங்கப்பூர், ஆத்திரேலியா, பிரித்தானியா, பிரான்சு, யேர்மனி, உருசியா, அமெரிக்கா, போன்று சில நாடுகளில்,
பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பீடம் உள்ள நாடுகள் (பட்டியல் ஆசிவியல் நிறுவனத்தாரிடம்),
தமிழ் வளர்ச்சிக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்கும் மொழியாக 30 நாடுகளில்,
தன் ஆர்வலர் நிறுவனங்கள் தமிழ் அடையாளம் பேண வார இறுதியில் தமிழ் கற்பிக்கும் நாடுகள் 40.
தமிழர் அமைத்த கோயில்கள் உள்ள நாடுகள் 45
தமிழ்ச்சங்கங்கள் எத்தனை இருக்கின்றன?= சந்திரனுக்கு ஒரு தமிழன் போய்விட்டால் அங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் வந்துவிடும்! இருவர் போனால் இரு தமிழ்ச் சங்கங்கள் வந்துவிடும். அத்தனை தமிழ்ச் சங்கங்கள்.

உள்ளூராட்சி அவைகள், மாநில அவைகள், நாடாளுமன்றங்கள், ஆகியவற்றில் உறுப்பினராகத் தமிழர் = ஆத்திரேலியா, நியுசீலாந்து, இந்தோனீசியா (மேடான், சுமாத்திரா) கனடா, பிரித்தானியா, பிரான்சு, யேர்மனி, நோர்வே, சுவீடன், சுவிற்சர்லாந்து, தென் ஆபிரிக்கா, மொரிசியசு, சீசெல்சு, இறியூனியன் (பிரான்சு), இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிஜி.
அமைச்சர்களாக, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, சீசெல்சு, மியாம்மா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் தமிழர் இருந்தனர், இருக்கினறனர்.
08.12.2012 அன்று, மறவன்புலவு க.சச்சிதானந்தன் (Sachithananthan) அவர்களுடன் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று, எனது திருமண அழைப்பிதழைக் கலைஞர் அவர்களிடம் அளித்து, ஆசி பெற்றேன். எங்கே திருமணம் நடக்கிறது என விசாரித்தார். முன் அனுமதி இல்லாமல் சென்றபோதும், கனிவுடன் எங்களுடன் உரையாடினார். சந்திக்க உதவிய சச்சி ஐயாவுக்கு நன்றிகள்.
படம்: இராஜேஷ்.
29.03.2012
சிங்கள பௌத்த பேரினவாதம், இந்திய எதிர்ப்பு வாதத்தை "1948" இல் அரசியல் ரீதியாகவும் ,பின் "1971"இல் ஆயுத கிளர்ச்சியாகவும் பிரகடனப்படுத்திய காலங்கள்.
அந்த சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்து,தமிழ்ப் பன்னாடைகள், தமிழக நூல்களை,சஞ்சிகைகளை தடைப்படுத்திய காலம்.
பட்டம்,பதவி,அந்தஸ்து,வியாபாரம்,பந்தம் பிடித்தல் என்பவற்றிற்காக மட்டுமே, நூல்கள் வெளி வந்த காலம்
பெரிய கனவுகளுடன் நாம் பறவைகளாய்த் திரிந்த காலம்.
பறவைகளைப் பற்றி ஒர் ஈழத்தவனால்,
அதிசயிக்கத்தக்க முறையில்,"பறவைகளே" நூல் வெளிக் கொணரப்பட்டது.
முப்பது வருடக் கால மாற்றம்.
இப்போது பினிக்க்ஸ் பறவைகள் கூட,எம் கனவிலும் வருவதில்லை.
சாணியை எரித்து சாம்பலை நெற்றியில் தடவிக் கொண்டிருக்கிறோம்.
http://noolaham.net/project/19/1813/1813.pdf

16.04.2012
வரலாறு அறியாக் காலம் தொடக்கம் அகன்ற தமிழகத்தின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள குடா, மரக்கலங்களைத் தமிழர் செலுத்திய குடாக்கள்.
கிழக்கே உள்ள குடா சோழன் குடா, ஆங்கிலேயர் வருகையால் வங்காள விரிகுடா. மேற்குக் கடலோ அரபுக் கடல்.
மேலும் படிக்க...
19.04.2012
டேவிட் ஐயாவுக்கு 88 வயது, வாழ்த்துக
19.04.2012
உலகத் தமிழர் பேரமைப்பு அலுவலகம், கோட்டூர்புரம், மாவை சேனாதிராசாவின் மகன், கவிஞர் காசி ஆனந்தன், மாவை சேனாதிராசா, மறவன்புலவு க. சச்சிதானந்தன், சரோசினி காசி ஆநந்தன்
19.04.2012
1979 செல்வச் சந்நிதி முருகன் கோயில், கவிஞர் காசி ஆனந்தன் சரோசினி திருமணம், அழைப்பாளர் மறவன்புலவு க. சச்சிதானந்தன்
26.04.2012
திருக்கேதீஸ்வர ஆலயச் சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் செயற்பாடுகள்.
பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலயச்சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ ஆதரவால் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை கண்டிப்பதாக அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.
இந்து மாமன்றத்தின் தலைவர் வி. கயிலாசப்பிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கை யொன்றிலேயே இந்தக் கண்டனம் வெளியிடப்பபட்டுள்ளது.
இந்து மக்களின் சுதந்திரத்தைப் பாதிக்கின்ற எந்தவொரு முயற்சியையும் பொறுக்க முடியாது, மதத் துவேஷ நிகழ்வுகளுக்கு இந்து மாமன்றம் கண்டனம்| எனும் தலைப்பிலான அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்றைய தமிழ்த்; தினசரி ஒன்றில், பிள்ளையார் கோவிலை அகற்ற உத்தரவு - திருமலையில் தமிழர்கள் கொந்தளிப்பு| எனும் தலைப்பில் பிரசுரமான செய்தி கண்டு அதிர்ச்சியும் மன வேதனையும் அடைகின்றோம். 60 வருடகால பெருமைவாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை அகற்றுமாறு அரசாங்கமோ, எந்த ஓர் அதிகார சபையோ உத்தரவு பிறப்பிக்க இந்நாட்டின் சட்டமோ அல்லது எந்த நீதி நியாயமோ இடம் தரவில்லை.
தம்புள்ளையில் இருக்கும் இந்து ஆலயத்தை அகற்ற வேண்டும் என்ற கோஷம் சம்பந்தமான செய்தியறிந்ததும் வேதனை அடைகிறோம்.
பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலயச் சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ ஆதரவால் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை அறிந்தும் கவலையடைகின்றோம், கண்டிக்கிறோம்.
இந்த நாட்டில் சம உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழும் உரிமை இந்து மக்களுக்குண்டு. இந்தச் சுதந்திரத்தை பறிகொடுக்க இந்த நாட்டின் எந்தவோர் இந்துவும் தயாரில்லை. இந்து மக்களின் சுதந்திரத்தைப் பாதிக்கின்ற எந்தவொரு முயற்சியையும் பொறுக்க முடியாது.
இந்த நாட்டின் மக்கள் அனைவரது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்திருக்கின்ற ஜனாதிபதியோ அவரின் அமைச்சர்களோ, அமைச்சின் செயலாளர்களோ இப்படியான மதத் துவேஷ நடவடிக்கைகளுக்கு கட்டளை பிறப்பித்திருப்பார்களென்று எம்மால் நம்ப முடியாது.
உடனடியாக இந்தத் துவேஷ நடவடிக்கைகளை நிறுத்துமாறு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம். மேலும், இதில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சகல தமிழ் அரசியல் தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
___அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் வி. கயிலாசப்பிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன்
3.05.2012
1.12.11 முதலாக 12.2.12 வரையாக, ஆத்திரேலியாவில் பயணித்த காலம்.
பிரிசுப்பேனிலும் வரவேற்றார்கள். அங்கு, 06.01.2012 அன்று, தேவாரம் தளத்தில் தட்டச்சுத் தேடலில் உயிர்மெய் எழுத்துகளைத் தட்டச்சிடுவது எப்படி எனப் பேரா. இராமாதேவி அவர்கள் கேட்டார்கள். விளக்கம் கொடுத்தேன்.
பிரிசுப்பேனிலும் வரவேற்றார்கள். அங்கு, 06.01.2012 அன்று, தேவாரம் தளத்தில் தட்டச்சுத் தேடலில் உயிர்மெய் எழுத்துகளைத் தட்டச்சிடுவது எப்படி எனப் பேரா. இராமாதேவி அவர்கள் கேட்டார்கள். விளக்கம் கொடுத்தேன்.
சிட்னியில் 11.2.12 அன்று திரு. அருச்சுனமணி, திரு. இளங்கோ மற்றும் அவர்கள் சார்ந்த உலக சைவப் பேரவையினரின் அயரா உழைப்பாலும் பெருமுயற்சியாலும் இல்லப்புதர் ஆண்கள் பாடசாலையில் (Homebush Boy's School) நடைபெற்ற தேவாரம் தளம் அறிமுகவிழாவில், பெருங்கூட்டத்தின் நடுவே, தேவாரம் தளத்தில் தட்டச்சுத் தேடலில் உயிர்மெய் எழுத்துகளைத் தட்டச்சிடுவது சிக்கல் இருப்பதை அங்கு வந்து உரையாற்றிய தேவாரத் தள அன்பர்கள் சிலர் சுட்டிக் காட்டினார்கள்.
உயிர்மெய் எழுத்துகள் தமிழ்99 விசைப் பலகையில் தெரிவதில்லை. என்வே அவற்றைத் தட்டச்சிட, க சொடுக்குக பின் ஐ சொடுக்குக, கை என்ற உயிர்மெய் எழுத்து வரும். க+ஐ=கை போன்று அனைத்து உயிர் மெய் எழுத்துகளுக்குமான வழிமுறையைச் சொன்னேன்.
தட்டச்சுத் தேடல் பலகைக்கு அருகே உயிர்மெய் எழுத்துத் தட்டச்சிடும் வழிகாட்டி அமைத்துத் தருகிறேன் என அவர்களிடம் அன்று கூறியிருந்தேன்.
எனக்கு உதவும் நிகழியாரிடம் (programmer) அப்பொழுதே உதவக் கேட்டிருந்தேன். சென்னையில் இருந்தவர் சிங்கப்பூருக்கு மாற்றலானார். வேறு நிகழியார்களைத் தேடினேன்.
இதற்கிடையில் PHP வகுப்புக்குப் போகத் தொடங்கினேன். நிகழிமுறை கற்கத் தொடங்கினேன்.
ஒரே ஒரு வரி, ஒரு படம் இவை இரண்டும் இருந்தால் நீங்கள் கேட்ட மாற்றம் அந்தப் பலகையில் வரும் என்பதைக் கண்டறியக் கடந்த 2 நாள்களாகக் கணிணி முன் அமரந்து துளாவி, மாற்று வழிகளையெல்லாம் உசாவினேன்.
03.05.12இன்று காலை 0400 மணிக்கே கணிணி முன் வந்தேன். எனக்கு வாய்த்தது.
நிகழி நிரலில் ஒரே ஒரு வரி, இணைக்க ஒரு படம் இவை இரண்டும் உதவின. ஆத்திரேலியாவில் கேட்ட மாற்றம் தட்டச்சுத் தேடல் பலகையில்.
பார்க்க, பயன்படுத்துக. மேலும் மாற்றம் தேவை எனில் சொல்க.
உழைப்பின் வாரா உறுதிகள் உண்டோ?
முயற்சிதன் மெய்வருந்தக் கூலிதரும்.
4.5.2012
இன்றைய (04. 05. 2012) தினமணித் தலையங்கம் குறித்த என் கருத்துரை:
காவி உடை அடையாளமே. அந்த அடையாளத்துள் மறைந்து பற்றற்றோம் என்று படிற்றொழுக்கத்தைக் கைககொள்பவர் சைவ மடங்களில் இல்லை என்று சொல்லமுடியுமா?
சாதி அடிப்படையில், ஆண்கள் மட்டுமே துறவு, நிலை, தீக்கை, தம்பிரானதல், ஒடுக்கம் என்பதை வலியுறுத்தல் பொருத்தமானதா?
நித்தியானந்தருக்குத் தினமணி, சாதிச் சாயம் பூசியமை பொருத்தமல்ல.
தனிமனித ஒழுக்கம் நித்தியானந்தருக்கு மட்டும் உரியதா?
ஒடுக்த்தின் வாயில் யோகம். யோகத்தின் வாயில் கிரியை. கிரியையின் வாயில் சரியை.
நித்தியானந்தா ஒடுக்கம் பற்றியே பேசுகிறார்.
சைவ சமயத்தில் முழுமையை நோக்கிய உயிரின் பயணத்தில் ஒடுக்கமும் வழி, அதுவே யோக வழி எனத் திருமந்திரம் சொல்லவில்லையா?
வேட்கை விடு நெறி பற்றிய திருமந்திரப் பாடல்,
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்,
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச் சித் தாந்தத்து,
வேட்கை விடும்மிக்க வேதாந்தி பாதமே,
தாழ்க்கும் தலையினோன் சற்சீட னாமே.(106014013)
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச் சித் தாந்தத்து,
வேட்கை விடும்மிக்க வேதாந்தி பாதமே,
தாழ்க்கும் தலையினோன் சற்சீட னாமே.(106014013)
மதுரை ஆதீனத்தின் தீர்மானத்தை எதிர்ப்பவர்கள், ஆதீனமாவதற்குரிய வழிமுறைகளை விதிக்க வழிசெய்வதே மேல்.
வழியோ விதிகளோ இல்லை.
வாய்வழி மரபுகள் மடத்துக்கு மடம் வேறுபடும்.
அரசு ஊழியர்களுக்கு லோக்பால் போல ஆட்சித் துறவிகளுக்கும் ஒரு லோக்பால் வேண்டும்.
மக்களாட்சி முறை சார்ந்த ஆட்சித் துறவி மாற்றத்துக்குத் தீர்க்கமான வழிகாட்டல்கள் இன்றைய கட்டாயம்.
5.5.2012
தென்றல் என்னைத் தாங்கி அமெரிக்கா எங்கும் எடுத்துச் செல்கிறதாம், நண்பர் அரவிந்தன் எனக்கு அனுப்பிய செய்தி பின்வருமாறு.
வணக்கம்.
தங்களுடைய நேர்காணல் இம்மாதத் தென்றலில் வெளியாகியுள்ளது.
அதற்கான சுட்டி : http://www.tamilonline.com/thendral/morecontentnew.aspx…
இதழ் அமெரிக்காவிலிருந்து வந்ததும் தங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.
நன்றி
11.5.2012

மழவிடையாரும் பழவடியாரும்
No comments:
Post a Comment