Tuesday, March 14, 2017

2011

வணக்கம்
தேவாரம் தளத்தை ஆத்திரேலியாவில் பன்மடங்கு பார்க்குமாறும் பயனுறுத்துமாறும் தொண்டாற்றிய உங்கள் அனைவருடனும் என் மகிழ்ச்சியைப் பகிர்கிறேன்.
30.11.2011 மாலை சிட்னி வந்தேன். 13.02.2012 மாலை சிட்னியில் இருந்து புறப்பட்டேன்.
75 நாள்கள் ஆத்திரேலியாவில்.

19.12.2011 தொடக்கம் 23.12.2011 வரை மெல்போண்
31.01.2011 தொடக்கம் 05.01.2012 வரை பேர்த்து
05.01.2012 தொடக்கம் 10.01.2012 வரை பிறிசுப்பேன்
19.01.2012 தொடக்கம் 22.01.2012 வரை அடிலாயிடு
எஞ்சிய அனைனத்து நாள்களும் சிடனி.
மொத்தம் 25 பரப்புரை நிகழ்வுகள்.
இடார்வின் செல்லவில்லை, மருத்துவர் மகேந்திரராசா, 0403085458, திரு. பிரதாபன் 08 89270837 ஆகியோருக்குத் துண்டு விளம்பரஙகள் அனுப்பினேன். அவ்வாறே இரவுண்சுவில்லு திருமதி இலீலா கோபாலன் 07 47286444, 0414065535 அவர்கடகுத் துண்டு விளம்பரங்கள் அனுப்பினேன். அவர்களுடன் தொடர்பாக இருந்து அங்கும் தேவாரம் தளம் பயனுறுத்துமாறு செய்வது உங்கள் பணி.
1. சமய நூல்கள் ebook reader ஆக, திரு. சிறீசுக்கந்தராசா, மொல்போண்
2. ஆங்கிலத்தில் 283 கோயில் வரலாறு, 27 அருளாளர் வரலாறு, திருமதி மங்களம் வாசன், மெல்போண்
3. திருமுறைப் போட்டி, செல்வி அபிராமி, திரு. சீவன், பேர்த்து
4. திருமுறைப் போட்டி திருமதி இராமாதவி, திருமதி காயத்திரி பிரிசுப்பேன்
5. Android OS, iPad, Iphone, போன்ற புதிய தொழில்நுட்பத்தில் திருமுறை, திரு. ஞானானந்தன் பிரிசுப்பேன்
6. தேவாரம் தளம் வழி திருமுறைப் போட்டி திரு. தனசேகர் பிரிசுப்பேன்,
7. தட்டச்சுத் தேடலில் உயிர்மெய்யாக்கத்துக்குத் தட்டச்சு விளக்கம்
ஆகிய 7 செயற்றிடங்கள் தொடங்க இப்பயணம் வழிவகுத்தது.
என் நலம் பேணி, என் பயணத்துக்கு உற்றுழி உதவிய உங்கள் அனைவருக்கும் என் நன்றி.
நலமாகக் கோலாலம்பூர் வந்து சேர்ந்தேன்.
14.02.2012 காலை பெத்தாலிங்கு செயா திருபீடத்தில்
1. இடாத்தோ ஏ. வைத்தியலிங்கம்
2. சுவாமி பாலயோகிகள்
3. பேரா. இராசேந்திரன்,
4. திரு. ஆதிமூலம்
5. திரு. தில்லாடி
ஆகியோருடன் மலாய் மொழிபெயர்ப்புப் பற்றிய ஆலோசனைக் கூட்டம்.
2010 ஆகத்துத் தொடக்கம் இந்த முயற்சி.
2011 நவம்பரில் மீண்டும் சந்திப்பு.
அடுத்த சில வாரங்களில் மலாயா பல்கலைக்கழகத்துக்குக் கடிதம் எழுதவும், நிதி திரட்டும் முயற்சி தொடங்கவும் ஒப்புக்கொண்டோம். நன்கொடையாளர் நிதியை நேராகப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்புவர். எட்டு இலட்சம் வௌளி, (A$266,660) தொகையைக் கோயில்கள் வழங்குவதே ஏற்பாடு. நான்கு ஆண்டுகளில் மலாய் மொழிபெயர்ப்புப் பணி முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்.
14.02.2012 மதியம் தொடர் வண்டியில் தஞ்சம் மாலிம் புறப்பட்டேன். கோலாலம்பூரில் இருந்து வடக்கே இருமணி நேரப் பயணம். இரவு தேவாரம் தளத்தை அடியவர்களுக்கு விளக்கினேன்.
15.02.2012 காலை காம்பார் புறப்படுகிறேன். மாலை அங்கு விளக்கக் கூட்டம்.
பின்வருமாறு தேவாரப் பரப்புரைக்காககப் பயணிக்கிறேன்.
1. 14 Feb Tg. Malim, Perak
2. 15 Feb Kampar Tengah, Perak
3. 16 Feb Ipoh, Perak
4. 17 Feb Tg. Rambutan, Perak
5. 18 Feb Manjung, Perak
6. 19 Feb Taiping, Perak
7. 20 Feb Butterworth, Penang
8. 21 Feb Sg.Petani, Kedah
9. 22 Feb Alor Setar, Kedah
நன்றி

19.06.2011
வணக்கம்
முதல் திருமுறையில் திருஞானசம்பந்தர் பாடிக் கிடைப்பவை
136 பதிகங்கள், 1469 பாடல்கள்,

பதிகம் 005 (1) (2ஆவது)
பதிகம் 006 (1) (7ஆவது)
பதிகம் 009 (1) (7ஆவது)
பதிகம் 018 (1) (8ஆவது)
பதிகம் 053 (1) (7ஆவது)
பதிகம் 055 (1) (7ஆவது)
பதிகம் 066 (1) (7ஆவது)
பதிகம் 068 (1) (7ஆவது)
பதிகம் 081 (4) (4, 5, 6, 7ஆவது)
பதிகம் 089 (1) (6ஆவது)
பதிகம் 102 (1) (7ஆவது)
பதிகம் 103 (1) (7ஆவது)
பதிகம் 105 (1) (8ஆவது)
பதிகம் 106 (2) (6, 7ஆவது)
பதிகம் 113 (1) (7ஆவது)
பதிகம் 114 (1) (7ஆவது)
பதிகம் 116 (1) (7ஆவது)
பதிகம் 133 (1) (7ஆவது)
ஆகிய
18 பதிகங்களில் 22 பாடல்கள் கிடைக்கவில்லை.
எமக்குக் கிடைத்திருக்க வேண்டியன 1469+22=1491 பாடல்கள்

128ஆவது பதிகத்தில் ஒரு பாடல் மட்டுமே = 1
45, 63, 90, 117, 127 ஆகிய ஐந்து பதிகங்களிலும் ஒரு பதிகத்துக்கு 12
பாடல்கள் = 60
எஞ்சிய 130 பதிகங்களிலும் ஒரு பதிகத்துக்கு 11 பாடல்கள் = 1430 - 22 =
1408
1 + 60 + 1408 = 1469
ஆக
1469 பாடல்களின் குரலிசையை,
ஓதுவார் தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்களின் பண்ணிசையை
மின்னம்பலத்தில்
www.thevaaram.org
கட்டணமின்றிக் கேட்டு மகிழலாம்.



21.06.2011
காந்தளகம் பதிப்பு நூல்அமெரிக்காவில் வாழும் வண. பிதா. அழகரசன் எழுதிய வள்ளுவமும் விவிலியமும் நூலுக்கு மெய்யப்பன் பரிசு. எழுத்தாளருக்குப் பரிசு (சான்றிதழ், பொற்கிழி) எனவே காநதளகத்துக்கும் பரிசு (சான்றிதழ், பொற்கிழி). இன்று 21.6.11 மாலை பரிசளிப்பு விழா.

21.06.2011
இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தர் பாடிக் கிடைப்பவை
122 பதிகங்கள், 1331 பாடல்கள்,
15 பதிகங்களில் 15 பாடல்கள் பொன்னம்பலத்திலேயே கிடைக்கவில்லை.
எமக்குக் கிடைத்திருக்க வேண்டியன 1331+15=1346 பாடல்கள்

006, 070, 073, 074 ஆகிய நான்கு பதிகங்களிலும் ஒரு பதிகத்துக்கு 12
பாடல்கள் = 48
எஞ்சிய 118 பதிகங்களிலும் ஒரு பதிகத்துக்கு 11 பாடல்கள் = 1298 - 15 =
1283
48+ 1283 = 1331
ஆக
1331 பாடல்களின் குரலிசையை,
ஓதுவார் தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்களின் பண்ணிசையை
மின்னம்பலத்தில்
www.thevaaram.org
கட்டணமின்றிக் கேட்டு மகிழலாம்.
ஆதரவு சிங்கப்பூர்ச் சைவத் தமிழ் ஆர்வலரான அடியார்கள்.
நன்றி

22.06.2011


சிறந்த பதிப்பகத்திற்கான விருதினைக் காந்தளகம் பெறுவது, மிக மகிழ்ச்சியான செய்தி.
நிறுவனர் சச்சி ஐயா அவர்களுக்கும் காந்தளகம் குடும்ப உறுப்பினர்களான சசிரேகா, நித்தியா, நளினி, கணபதி நிகழக உரிமையாளர் ஆகிய ஒவ்வொருவருக்கும் தனித் தனியே என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உண்மையான உழைப்பிற்கும் உறுதியான தரத்திற்கும் என்றும் மதிப்புண்டு.
மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகள்.
அண்ணாகண்ணன்.


1. சிங்கப்பூர் கண்ணா கண்ணப்பன்
Really Happy Ayya. Vaazhtukkal..
Kanna Kannappan
Global Account Director
Business Group 
SingTel
2.
ஆத்திரேலியா Siva Sandrasegaran
Intru nigalichiyil Kanathalakathittku pari kidaipathu magilchi. valthukkal
3.
Good to Know Iyya ….
Regards,
Subramanian Nagarajan
சிங்கப்பூர் Senior Engineer Application Support
26.06.2011
பேரா. மு. வ. நூற்றாண்டுவிழா தொடங்கியது. சென்னையில் இன்று 26.6.11 காலை தமிழ் வளர்ச்சி மன்றம் நடத்திய விழாவில் பேரா. மு. வ. உடன் நெருங்கிய தொடர்புடையோரும் அன்பர்களும் கலந்துகொண்டனர். பேரா. க. ப. அறவாணன், பேரா. அரங்க இராமலிங்கம், பேரா. வளவன், பேரா. இளங்கோ, நல்லாசிரியர் திருநாவுக்கரசு, எனப் பலர் உரையாற்றினர். 1959 முதலாகப் பேரா. மு. வ. உடனான என் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டேன்.
26.06.2011
1. Do not argue with an idiot. He will drag you down to his level and beat you with experience. 
2. The last thing I want to do is hurt you. But it's still on my list. 
3. Light travels faster than sound. This is why some people appear bright until you hear them speak. 
4. If I agreed with you, we'd both be wrong. 
5. Money can't buy happiness, but it sure makes misery easier to live with.
26.06.2011
புதிய தலைமுறை இதழுக்குப் பொற்றாமரை விருது, ஆசிரியர் மாலன் பெற்றார், 25.6.11. மாலை, தினமணி, அமுதசுரபி, மங்கையர் மலர், விசயபாரதம், கவிதை உறவு, ஆகிய இதழ்களுக்கும் விருது. நணபர் இரவி சுப்பிரமணியம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

28.6.2011
கவிஞர் அண்ணா கண்ணனின் முனைவர் பட்ட ஆய்வு நேர்முகத்தேர்வு இன்று காலை 1100 மணிக்கு, நேரடிப் பயனை நோக்கிய ஆய்வு. தமிழில் மின் ஆளுகை என்ற தலைப்பில்.

29.06.2011
தினமணியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. தங்கபாலு
http://dinamani.com/edition/story.aspx…


30.6.2011
இராசராசனின் முன்னோர் சோழ மன்னன் கண்டராதித்தர், பல்லாண்டு பாடிய சேந்தனார், உள்ளிட்ட ஒன்பதின்மர் பாடிய 301 பாடல்கள் தருமபுரம் ப.சுவாமிநாதன் குரலிசையில் கட்டணமின்றிக் கேட்க, www.thevaaram.org

01.07.2011
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம், நீளம் 22 கிமீ மட்டுமே!

01.07.2011
பட்டாபிராம் இந்துக் கல்லூரி, சென்னை
மின்னம்பலத்தில் திருமுறை

08.07.2011
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் மதிப்புக்குரிய திரு. தி. வி. வேங்கடராமன் அவர்களைச் சந்தித்தேன். பன்னிரு திருமுறைகள் தெலுங்குக்கு மொழிபெயர்ப்பாகத் திருமலை திருப்பதி தேவத்தானம் 13.6 இலட்சம் ரூபாய் ஒதுக்க எனக்கு முன்பு வழிகாட்டியவர்.

10.07.2011
சுவிற்சர்லாந்து அன்பர் மூர்த்தி (தமிழ்க்கடைTamil Kadai info@tamilkadai.ch). உலகின் முதலாவது தமிழ்ப் பல்மொழி அகராதியை உருவாக்கினார். தமிழில் இருந்து பத்து மொழிகளுக்கு, உங்கள் கைப்பேசியில், பார்க்க. http://www.youtube.com/watch?v=BnrBiVtRN1o

12.07.2011
இலங்கையின் வடக்கு மாகாணத்தில்
பிரதேச சபைகளுக்காள தேர்தல் நாள் சூலை 23.
தென்மராட்சிப் பிரதேச சபை வேட்பாளர்
சங்கரன் தங்கராசா
வேட்பாளர் எண் 17



14.07.2011
பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலத்திற்கு.. 
பட்டாபிராம் இந்துக் கல்லூரிப் பொது அரங்கம்
மாணவர்களுக்குக் காட்சி உரை 
29.6.2042 (14.7.2011), மதியம் 1200 மணி
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இலண்டன் சைவ சபை திருமதி மீனா குகநாதன்
பங்கேற்பு


02.08.2011
போஜனமாயிற்றா, நாஷ்டா பண்ணியாச்சா, டிபன் பண்ணியாச்சா, மக்கான் தரவா? லஞ்ச் கொணர்ந்தியா, கானா இருக்கா, ஊணு கழிஞ்சா, இவை இனறைய உணவுப் பேச்சு, ஏன் எழுத்தும் எனலாம். வாய்க்குள் இடுவதற்கே தமிழில் இப்படிச் சொல்வது நயத்தக்க நாகரிகமாயின், உள்ளிடுவது, உண், உணவு என வேர்கொண்ட தமிழ்ச் சொற்கள் அரிதாகுமன்றோ?

18.08.2011
தமிழின் இனிமை, 
சீரான அமைப்பு, 
இனிமையாய் இசையாய், 
சொல் வளத்தோடு 
தாளமும் சேர்ந்தது, 
வீணையும் இணைந்தது,
முழவம் முழவியது,
மொந்தை சந்தம் தந்தது,
குரலிசை கொப்பளித்தது.
எங்கே?
என் வீட்டு வாயிலில்!!
நெடு நேரமாக அகலாமல்!!!
ஆகா? வியந்தேன்,
இசையில் மயங்கினேன்,
யார் அந்தப் பாடகர்?

தமிழ்ப் பாடகர்!
சிவனார், ஆமாம், சிவனாரேதான்.
அடியவர் வீடு தேடி வருவார்.
எனக்குத் தமிழில் இசைப்பார்,
மனம் ஒன்றுவேன்,
உள்ளம் உள்குவேன்,
புலன் ஒடுங்குவேன்,
இன்பத்தில் திளைப்பேன்.

தமிழினீர்மை பேசித்தாளம் வீணை பண்ணிநல்ல
முழவமொந்தை மல்குபாடல் செய்கை யிடமோவார்
குமிழின்மேனி தந்தகோல நீர்மை யதுகொண்டார்
கமழுஞ்சோலைக் கானூர்மேய பவள வண்ணரே.
திருமுறை 01073008

12.09.2011
பாரதியார் 90ஆவது நினைவு நாள்.
வழக்குரைஞர் காந்தி தலைமையில் பாரதியார் வாழ்ந்த திருவல்லிக்கேணி இல்லத்தில் விழா. அதிகாலை 0730 மணிக்குப் பாரதியார் சிலைக்குக் கடற்கரையில் மாலையிடல் தொடக்கம், பாரதியார் வாழ்ந்த திருவல்லிக்கேணி இல்லத்தில் மாலை 2000 மணிக்கு விழா முடியும் வரை தொடர்ச்சியான நிகழ்வுகள். 65 ஆண்டுகள் பழமையான பாரதியார் சங்கத்தினர் நடத்திய விழா.
அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்கள் அழைத்து, அவரில்லத்தில் மதிய உணவு.அவருக்கு 87 வயது. ஆனாலும் இளமையான சுறுசுறுப்பான உள்ளம். கூர்மையான சிந்தனை.

23.09.2011
Eelam Writer Noolthettam Selvaraja (London)/Arunagiri/Kanthalagam Sachithanandam, Chennai, 23.9.2011

03.10.2011
நேற்றுக் காலை சென்னை கடற்கரைக் காந்தி சிலை அருகே வழிபாடு, கலந்துகொண்டேன். சென்னை காந்தி மண்டபத்தில் மாலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். பின்னர் ஏவிஎம் அரங்கில் காந்தி வள்ளலார் விழா நிகழ்வில் கலந்துகொண்டேன்.

06.10.2011
1986 முதலாக மூத்த வழக்குரைஞர் காந்தியுடன் நெருங்கிய நட்பு. 1968 முதலாக அருட்செலவர் நா. மகாலிங்கனாருடன் பழகி வருகிறேன். 1959 முதல் 1962 வரை அறிஞர் மு. வரதராசனின் மாணவன். படங்கள் பார்க்க

10.10.2011
சென்னை காந்தி மண்டப நிகழ்ச்சி, 2.10.2011
http://www.youtube.com/watch?v=gjojmbuq3ds
பார்க்க, பகிர்க

No comments: