Tuesday, February 21, 2017

2015

10.02.2015
கொழும்பில் கிறீன் பாதை என ஆங்கிலேயர் தெருவொன்றுக்குப் பெயரிட்டனர். 1960க்குப்பின்னர் அந்தத் தெருவின் பெயர் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை. உலகம் போற்றும் தமிழ்ப் பெருமகனாரின் பெயர்.
Some years ago an important road in Colombo which the British had named Green Path was renamed Ananda Coomaraswamy Mawatha in honour of the great man.

ஈராண்டுகளுக்கு முன்னர், இராசபட்ச குடியரசுத் தலைவர் காலத்தில் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையை நெலும் பொக்குண மாவத்தை என்றாக்கினர்.About two years ago the previous Government changed the name to Nelum Pokuna Mawatha.
கடந்த 10.02.2015 அன்று இன்றைய அரசின் குடியரசுத் தலைவர் மற்றும் கொழும்பு மாநகர மேயர் முன்னிலையில் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை எனப் பெயரை மீட்டனர். On 10th Feb 2015 the President of Sri Lanka and the Mayor of Colombo will officially at a ceremony change the name back to Ananda Coomaraswamy Mawatha.
இந்த நிகழ்வை நினைவாக்க வந்த கட்டுரை இணைப்பில் பார்க்க.
To commemorate the event the Island Newspaper of Colombo has published Thiru Arumugam's article about Ananda Coomaraswamy in today's edition. See link below:

11.02.2015 மாலை 1900 மணி
சென்னை எழும்பூர் எனது இல்லம் + அசோகா உணவகம்
120 கோடி முகங்கள், 120 கோடி மனங்கள்.
இவர்களுள் நமக்குத் தேவையான ஒருவரைத் தேடிக் கண்டுபிடிப்பது எளிதல்ல. அதற்காகக் தேடாமலும் இருக்க முடியாது.
பன்னிரு திருமுறைகளின் 18,268 பாடல்கள்.
2,000 ஆண்டுகளுக்கும் கூடுதலான காலத்துப் படைப்புகளின் தொகுப்பு.
அவற்றை அப்படியே தெலுங்குக் கொண்டு போவேண்டும்.
தெலுங்கு மக்களுடன் திருமுறைகளுள் தேங்கிய அறிவைப் பகிரவேண்டும். மொழிபெயர்ப்பாளரைத் தேடினேன். 17ஆம் நூற்றண்டை ஒட்டி எழுந்த பசவ புராணம், பெரிய புராணத்தைத் தெலுங்கிற்குக் கொண்டு செல்லும் தழுவல் முயற்சி. மொழிபெயர்ப்பல்ல. பன்னிரு திருமுறைகளைத் தெலுங்குக்குக் கொண்டு செல்ல வேறு முயற்சிகள் நடைபெறவில்லைப் போலும்.
13ஆம் நூற்றாண்டின் நாதமுனிகள், 14ஆம் நூற்றாண்டின் மணவாளமாமுனி, 16ஆம் நூற்றாண்டின் மன்னர் கிருட்டிண தேவராயர், தமிழின் திருப்பாவையைத் தெலுங்குக்குக் கொண்டுசெல்ல முயன்றவர்கள். ஆனாலும் கடந்த நூற்றாண்டின் மகாமகோபாத்தியாய அப்பளாச்சாரியார் தன் மாணவர்கள் வழி திருப்பாவையைத் தெலுங்கு தேசத்தின் திருமால் கோயில்களில் மார்கழி முழுவதும் இசைக்கும் மரபை ஏற்படுத்தினார்.
இந்தியா முழுவதும் வாழும் 8 கோடித் தெலுங்கு மொழியாளரின் மார்கழியில் ஆண்டாளும் திருப்பாவையும் சேர்ந்து கொண்டன.
தேவார திருவாசகங்கள் திருவேங்கடத்தைத் தாண்டவே இல்லை. எனவே பன்னிரு திருறைகளைத் தெலுங்குக்குக் கொண்டு செல்ல முயன்று மொழிபெயர்ப்பாளரை நான் தேடிய காலங்களில் மின்தமிழ்க் குழுமத்தில் தமிழ்-தெலுங்கு வரலாற்றுச் செய்திகளைத் திவாகர் பகிர்ந்து கொண்டிருந்தார். திருமுறைகளைத் தெலுங்குக்குக் கொண்டுசெல்ல முயல்கிறேன், மொழிபெயர்ப்பாளரைத் தேடுகிறேன் என்ற செய்தியைக் குழுமம் வழி அவருடன் பகிர்ந்தேன்.
சீர்காழியைச் சேர்ந்தவன், விசாகப்பட்டினத்தில் இருக்கிறேன். என் மனைவி தலைமை ஆசிரியை. நானோ எழுத்தாளன், ஊடகத்தான் இந்த அறிமுகத்துடன் 2009 சூன் மாதத்தில் திவாகரது தொடர்பைப் பெற்றேன்.
திருஞானசம்பந்தரின் தேவாரங்களைத் தானும் தம் துணைவியார் திருமதி சசிகலா அவர்களும் மொழிபெயர்த்துத் தருவதாகக் கூறினார். மாதிரிக்குச் சில பதிகங்ககளை மொழிபெயர்த்து 2009 ஆகத்து 6ஆம் நாள் அனுப்பினார்.
முதல் திருமுறை 136 பதிகங்கள் 1469 பாடல்கள், இரண்டாம் திருமுறை 122 பதிகங்கள் 1331 பாடல்கள், மூன்றாம் திருமுறை 126 பதிகங்கள் 1358 பாடல்கள், ஆக 384 பதிகங்கள், 4158 பாடல்கள். யாவும் திருஞானசம்பந்தர் அருளியன.
வரலாற்றில் முதன்முறையாக இப்பாடல்கள் யாவையும் 2009இல் தொடங்கி 2013இல் தெலுங்குக்கு மொழிபெயர்த்து முடித்தவர் திருமதி சசிகலா திவாகர் அவர்கள். மொழிபெயர்த்து, ஒருங்குறியில் தட்டச்சுச் செய்து, தக்காரிடம் காட்டிக் கருத்துக்கேட்டு, திருத்தங்கள் செய்து, திருமலை திருப்பதி தேவத்தானத் தெலுங்குப் பண்டிதர்களின் கருத்துரையைக் கேட்டுத் திருத்தித் தந்துள்ளார்.
இதற்காகக் கூலி எதுவும் வேண்டாம் எனச் சொன்ன அன்னாருக்குத் திருமலை திருப்பதி தேவத்தானத்தார் என் வழியாகத் தொகை கொடுத்து வருகிறார்கள்.
விசாகப்பட்டினத்தில் இருந்து திவாகரும் சசிகாலவும் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளச் சென்னை வந்தவர்கள் 11.02.2105 மாலை எனதில்லம் வந்தனர். வரலாறு படைத்தவர்களைச் சந்திப்பதில் மகிழ்ந்தேன், உள்ளம் பூரித்தது.
பின்னர் அருகில் உள்ள அசோகா விடுதியில் உணவருந்தினோம். காந்தளகம் திருமதி சசிரேகாவும் திவாகரது நண்பரும் சேர்ந்து கொண்டனர்.
120 கோடி முகங்கள், 120 கோடி மனங்கள். இவர்களுள் நமக்குத் தேவையான ஒருவரைத் தேடிக் கண்டுபிடிப்பது எளிதல்ல. திவாகரும் சசிகலாவும் இணைந்த திறமையாளரை, பண்பாளரை, அறிவுச் செம்மல்களை, இசைந்து பணி புரியும் ஆர்வலர்களைச் சந்திக்க, இணைந்து பணிபுரிய இறையருளல்லது வேறென்ன துணை?


13.02.2015 மாலை 1800 மணி
சென்னை, அடையாறு,
திருவாவடுதுறை இராசரத்தினம் பிள்ளை அரங்கம்.
சங்கம் 4 தமிழ்த் திருவிழா. தமிழ் வணிகக் கூட்டமைப்பு, நாம், தமிழ் மையம் ஆகியன இணைந்து நடத்தும் விழா.
சென்னை சங்கமம் என்ற பெயரில் கடந்த 3 ஆண்டுகளாக இராயப்பேட்டையில் நடந்து வந்த விழாக்கள். நானும் ஒரு விழாவில் பேசியுள்ளேன்.
எனக்கு இனிய அன்பர், அருட் தந்தை செகதர் காசிபர் அச்சாணியாக இருந்து நடத்தும் விழாக்கள். இந்த ஆண்டின் விழா 13.02.15 தொடக்கம் 10 நாள்கள் நடைபெறும். என் இனிய நண்பர் மூத்த வழக்கறிஞர் இரா. காந்தி தலைவராக இருந்து விழாக் காலம் முழுவதும் நிகழ்ச்சிகளைக் கவனிக்கிறார்.
தொடக்கவிழாவுக்குச் சென்றிருந்தேன்.


14.02.2015 மாலை 1900 மணி
சென்னை கலைஞர் நகர், முதலாவது பிரிவு
3ஆவது தெரு. ஓவியர் புகழேந்தி கலைக்கூடம்.
ஓவியர் புகழேந்தி எழுதிய
'பிரபாகரன் - பன்முக ஆளுமை'
நூல் அறிமுகம், கலந்துரையாடல்.

நூலை வெளியிட்டவர் நடிகர் நாசர்.
திரைத்துறையின் பல்துறை நடிப்பால் ஒன்பான் சுவை தருபவர்.
நூலைப் பெற்றுக் கொள்ளும் பேறு என்னது.

15.02.2015 காலை 0900 மணி
ஆள்வார்ப்பேட்டை தகு நடுவம்
தமிழக எழுத்து வரலாற்றில் அழியா இடம் பெற்றவர் தமிழ்வாணன்.
எழுத்தாளர், செய்தியாளர், துணிச்சலர், திரைப்படத் தயாரிப்பாளர், பல்நாட்டுப் பயணர், சோதிடர், இல்லத் தலைவர், எனப் பன்முக ஆளுமையாளர்.
அவரைப் பற்றி அவரது மூத்த மகன் லேனா (இலட்சுமணன்) தமிழ்வாணன் ஆற்றி சுவையான உரை. கூடவே அவரது தம்பி இரவி, அக்கா, தங்கை யாவரும் வந்திருந்தனர்.
சென்னையின் புலமையாளர் நூற்றுக்குக் கூடதலானோர் கேட்பவர்களாக. நானும் இருந்தேன்.

15.02.2015 மாலை 1700 மணி
சென்னை கலைஞர் நகர், இடிசுக்கவரி புத்தக நிலைய அரங்கு.
ஆளுமைகள் தருணங்கள் என்ற அருமையான பதிவு.
பாலுமகேந்திரா, எம் வி வேங்கட்டராம், கரிச்சான் குஞ்சு போன்ற பலரின் இதுவரை அறியாச் செய்திகள்.
என் அருமை நண்பர் இரவி சுப்பிரமணியம் எழுதி,
காலச்சுவடு பதிப்பகம் பதிப்பித்த நூல்.
என் அருமை நண்பர் கி அ சச்சிதானந்தம் (ஆனந்த குமாரசாமி அவரது சிறப்பு ஆராய்ச்சி) உரையாற்றினார். அரவிந்தன் மற்றும் அறிஞர் வரிசையின் ஆய்வுரைகள்.


17.02.2015
2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துரு தரவிறக்க, http://www.virtualvinodh.com/down…/Adinatha-Tamil-Brahmi.zip
இன்றைய தமிழைத் தமிழி எழுத்துருவுக்கு மாற்ற
http://www.thevaaram.org/sirppi_transliteration.php
இசுக்கொத்துலாந்தில் மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் அவர்களின் அரிய முயற்சி தமிழி எழுத்துருவாக்கம்.
தமிழி எழுத்துரு தந்த எனதருமை அன்பர், நண்பர், மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் பாராட்டுக்குரியவர். அவரைச் சில ஆண்டுகளுக்கு முனனர் சென்னைப் பல்கலைக் கழக அரங்கில் பாராட்டும் பேறு என்னுடையதாயிற்று.
பாண்டியர் சோழர் பயன்படுத்திய வட்டெழுத்தை இப்பொழுது உங்கள் கணிணியில் நீங்களே எழுதலாம். அடுத்துள்ள இணைப்புக்குச் செல்க, எழுத்துருவைத் தரவிறக்குக. தமிழ் ஒருங்குறியில் தட்டச்சிடுக. ஒருங்குறி எழுத்துருவாக e-Vatteluttu OT தேர்க. 35 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துருவுக்கு e-Tamil 100 தேர்க.
Wonderful news for the lovers of all Tamil scripts.
A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
See: "http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".
Vaṭṭeḻuttu (வட்டெழுத்து) font newly available, thanks to Elmar Kniprath
Now everyone can write in வட்டெழுத்து என்கிறார் புதுவை வாழ் பேராசிரியர் இழாண் Jean-Luc Chevillard (Pondy) அவர்கள்.
என்னே... என்னே.... என்னே....
செய்தி தந்த புதுவைப் பேராசிரியர் இழான் அவர்களுக்கும்
அரிதின் முயன்று எழுத்துரு உருவாக்கிய ஆம்பேர்க்கு வாழ் பேராசிரியர் எல்மார் இணிப்பிராதருக்கும்
தமிழ் மக்கள் என்றென்றும கடமையுள்ளவர்கள்.



17.02.2015 மாலை 2000 மணி
சென்னை, தியாகராய நகர், அக்கோர்டு விடுதி.
5 நட்சத்திர விடுதி.
பேராசிரியர், முனைவர், உரைவீச்சாளர், தகவல் உரிமை மேனாள் ஆணையர், சாராதா நம்பி ஆரூரன் இல்லத் திருமணம்.
அன்னாரின் மகளின் மகனுக்கு மதுரையில் திருமணம்.
சென்னை, தியாகராய நகர், அக்கோர்டு 5 நட்சத்திர விடுதியில் வரவேற்பு.
சிவாசி கணேசன், இரசினி காந்தர், கமலகாசன் நடிக்க
120 படங்களுக்குக் கூடுதலாக இயக்கிய பெரியார்
என் அருமை நண்பர் காரைக்குடி சுப முத்துராமன் அவர்கள்
1997இல் நான் கைதாகிற பொழுது காவல்துறைத் தலைவராக இருந்து பின் எனக்கு அருமை நண்பரான திரு. அலெக்சாண்டர்
தொழிலதிபர் சிதம்பரம் செட்டியார்
ஆரெம்கேவீ புடவைக் கடையார்,
தமிழ் அறிஞர் கிஆபெ விசுவநாதத்தாரின் பெயரர், பெயர்த்தியர்,
என என் அருமை நண்பர் குழாமின் பலரைச் சந்தித்தேன்.



19.02.2015 நண்பகல், கீழ்ப்பாக்கம் புது ஆவடி சாலை.
இப்பொழுது தென் அமெரிக்காவில் கயான நாட்டில் இந்தியத் தூதர்.
முன்பு யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரான திரு மகாலிங்கம்.
திருப்பூரைச் சேர்ந்த இவரின் அருமைத் துணைவியார்
திருமதி மகாலிங்கம் இரு வாரங்களுக்கு முன் காலமானார்கள்.
யாழ்ப்பாணத்தின் துயரத்தை எடுத்துச் சொல்லச் சென்றோம்.
திரு மகாலிங்கம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த இரங்கல் சொல்லச் சென்றோம்.
யாழ்ப்பாணம் இணுவில் அண்ணா தொழிலகம் உரிமையாளர் திரு. எசு பி நடராசா, அவர் மகன் திரு. கண்ணன், அவர் உறவினர் திரு. தருமலிங்கம் நால்வரும் சென்றோம்.
திரு மகாலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய அரும்பணிகளை அவரது உறவினர்களிடம் எடுத்துச் சொல்லி விடைபெற்றோம். திருமதி மகாலிங்கம் அவர்களின் யாழ்ப்பாண வாழ்வை அவர்கள் எம்மிடம் பகிர்ந்தனர்.


19.02.2015 நண்பகல் 1200 மணி
சென்னை எழும்பூர் தமிழ் வளர்ச்சித் துறை.
இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களுடன் சந்திப்பு.
யாழ்ப்பாணம், இணுவில் பொது நூலகத்துக்கு நூல்கள் கேட்டுச் சென்றோம்.
இணுவில் அண்ணா தொழிலகம் உரிமையாளர் திரு. எசு பி நடராசா, அவர் மகன் திரு. கண்ணன், அவர் உறவினர் திரு. தருமலிங்கம்.
கம்பராமாயணம் முழுத்தொகுதியும் உடனே கொடுத்தார் இயக்குநர்.
மேலும் நூல்கள் தொடரும் என்றார்.
அண்ணா சாலை மதுரா ஊட்லண்சு உணவகத்தில் நால்வருக்குமாக நண்பகலுணவு.
17.02.2015 மாலை 2000 மணி
சென்னை, தியாகராய நகர், அக்கோர்டு விடுதி.
5 நட்சத்திர விடுதி.
பேராசிரியர், முனைவர், உரைவீச்சாளர், தகவல் உரிமை மேனாள் ஆணையர், சாராதா நம்பி ஆரூரன் இல்லத் திருமணம்.
அன்னாரின் மகளின் மகனுக்கு மதுரையில் திருமணம்.
சென்னை, தியாகராய நகர், அக்கோர்டு 5 நட்சத்திர விடுதியில் வரவேற்பு.
சிவாசி கணேசன், இரசினி காந்தர், கமலகாசன் நடிக்க
120 படங்களுக்குக் கூடுதலாக இயக்கிய பெரியார்
என் அருமை நண்பர் காரைக்குடி சுப முத்துராமன் அவர்கள்
1997இல் நான் கைதாகிற பொழுது காவல்துறைத் தலைவராக இருந்து பின் எனக்கு அருமை நண்பரான திரு. அலெக்சாண்டர்
தொழிலதிபர் சிதம்பரம் செட்டியார்
ஆரெம்கேவீ புடவைக் கடையார்,
தமிழ் அறிஞர் கிஆபெ விசுவநாதத்தாரின் பெயரர், பெயர்த்தியர்,
என என் அருமை நண்பர் குழாமின் பலரைச் சந்தித்தேன்.

19.02.2015 நண்பகல் 1200 மணி
சென்னை எழும்பூர் தமிழ் வளர்ச்சித் துறை.
இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களுடன் சந்திப்பு.
யாழ்ப்பாணம், இணுவில் பொது நூலகத்துக்கு நூல்கள் கேட்டுச் சென்றோம்.
இணுவில் அண்ணா தொழிலகம் உரிமையாளர் திரு. எசு பி நடராசா, அவர் மகன் திரு. கண்ணன், அவர் உறவினர் திரு. தருமலிங்கம்.
கம்பராமாயணம் முழுத்தொகுதியும் உடனே கொடுத்தார் இயக்குநர்.
மேலும் நூல்கள் தொடரும் என்றார்.
அண்ணா சாலை மதுரா ஊட்லண்சு உணவகத்தில் நால்வருக்குமாக நண்பகலுணவு.

21.02.2015 மியம்மா நாட்டில் நடந்த துயர நிகழ்ச்சியை மின்னஞ்சலில் அறிந்தேன்.
கைவிரல்கள் தலையில் அடித்துக் கொண்டன.
கண்களில் நீர்க்குளம் இமைகளை உடைத்து வழிந்தது.
சுக்கு நூறாய் உள்ளம் உடைந்து நொருங்கியது.
நெஞ்சம் கனத்து நினைவு வெள்ளத்தில் மூழ்கினேன்.
2011ஆம் ஆண்டு மியம்மா (பர்மா) நாடு சென்றேன்.
12.11.2011 தொடக்கம் 20.11.2011 வரை 9 நாள்கள் தங்கினேன். வடக்கே மண்டலே, தெற்கே தட்டோன் எனத் தமிழர் வாழும் ஊர்கள் யாவும் சென்றேன். ஒவ்வொரு நாளும் ஓர் உரை அல்லது ஈருரைகள் நிகழ்த்தினேன்.
இந்தப் பயணங்களை ஒருங்கிணைத்தவர் சோலை தியகராசன்.
இரங்கூன் விமான நிலையத்தில் சந்திக்க முன்பு அவருடன் மின்னஞ்சல் தொடர்புகள் மட்டுமே!
என் மியம்மாப் பயணம் முழுவதையும் ஒருங்கிணைத்தவர்.
நான் சென்னை வந்த பின்பு என் வேண்டுகோளை ஏற்று, திருவெம்பாவை மியம்மா மொழிபெயர்ப்பைச் செய்வித்து நூலாக்கியவர்.
மலேசியத் திருமுறை மாநாட்டுக்கு என் அழைப்பை ஏற்றுக் கோலாலம்பூர் வந்தவர்.
இன்று அவரது மறைவுச் செய்தியால்
ஏக்கம் நெஞ்சை நிறைக்க,
துயரம் மனதை நிறைக்க,
நினைவுகளை மீட்கும் என் பதிவுகளைப் பார்த்து
அழுதுகொண்டிருக்கிறேன்.
முகநூலில், மின்தமிழ் குழுமத்தில், மின்னஞ்சலில் இடைவிடாது தொடர்பாக இருப்பவர். 17.2.1015இல் அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் திருவாசகம் முழுவதையும் மியம்மா மொழிக்குக் கொண்டு செல்வது பற்றிக் கூறினார்.
என் அன்புச் சோலையார் நான்கு நாள்கள் முன்பு வரை எனக்குச் செயதிகள் அனுப்பிக் கொண்டேயிருந்தார். அவை, அன்னாரின் தமிழ்ப் பணி ஆர்வத்தைக் காட்டுவன. நீங்களும் அவற்றைப் பார்க்க
thiyagarajan solai
Feb 16 (5 days ago)
to me
அன்பு ஐயா, வணக்கம்.
கமாயுட் கோயில் தலைவர் திரு.VMV. சரவணன் தங்கள் செய்தி கொண்டு வந்தார். திருவாசகம் " நமசிவாய வாழ்க...* பாடல் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.மேற்கொண்டு என்ன செய்யலாம்.
என் மின்னஞ்சல்,தொலைபேசி தொடர்ந்து இயங்குகிறது. பேசுவோம்.
அன்புடன்,
சோலை.
Yangon, Myanmar
+95 943042105
thiyagarajan solai
Feb 17 (4 days ago)
to me
வணக்கம்.
நன்றி...நலமாகி வருகிறேன். வீட்டில் ஓய்வு..திருவெம்பாவை ஒருங்குறி மாதிரிப் பணியோடு நின்றுள்ளன. அதனை உரிய நபர் கண்டு முடிக்க வேண்டும்..இதனை விரைவில் முடிக்கலாம்...இப்பணி முடிந்ததும் திருவாசகம் ஒருங்குறி அச்சிடல் செய்யலாம்...சில நாட்களும் செலவினங்களும் தேவை. கருத்தறிய ஆவல்.
சோலை.
thiyagarajan solai
Feb 17 (4 days ago)
to me
ஒருங்குறி தட்டச்சாளரை இன்று கண்டு கொள்வேன்...அதன்பின்னரே என்றைக்கு இறுதியாக அனுப்ப முடியும் என்று சொல்வேன்...
தட்டச்சுக்கூலி, இணையச் செலவுக்கு US$50 டாலர் மட்டும் தேவை...அதற்கும் மேலாக என் உடல் நலன் ஒத்துழைக்க வேண்டும்...மற்றவர்களிடம் பணம் கேட்க விரும்பவில்லை...ஆர்வமில்லாத சூழல் உண்டு என்பது உண்மை...முடிந்தால் Western Union பணமாற்றம் செய்யுங்கள்...இல்லையென்றாலும் யானேமுயற்சி செய்கிறேன்..ஒருங்குறி தட்டச்சாளர் உதவி கிடைத்தால் பணி நிறைவாகும்...இது ஒன்றே பெருங்கவலை...
சோலை

20.02.2015 நண்பகல் 1100 மணி தொடக்கம் பிற்பகல் 1630 வரை.
புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரி வளாகம்.
புதுவை அரசின் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம்.
தமிழ்க் கணிணித் தொழில் நுட்பம்.
இருநாள் கருத்தரங்கின் இரண்டாவது நாள்.
ஆவணங்களை மின் ஆவணப்படுத்தல் தலைப்பில் பிரஞ்சு ஆய்வு நிறுவனக் கணிணி வல்லுநர்கள், கோ. இரமேசுக்குமார், பெ. சந்திரன் இருவரும் கொணர்ந்த கருவிகள், இயக்கிக் காட்டிய தொழில் நுட்பங்கள், ஆவணமாக்கலின் நுண்ணிய எணிணிக் கூறுகள் பற்றிய விளக்கங்கள், தமிழர் ஈட்டிய தொழில் நுட்பச் செல்வம்.
தமிழில் வலைப்பதிவு உருவாக்கும் சிறப்பான வழிகாட்டலைத் தந்தவர் திருவடானை அரசுக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் மு. பழனியப்பன் Palaniappan Muthappan
தருமை ஆதீனத்தின் பன்னிரு திருமுறைத் தளக் கட்டமைப்புப் பயன்பாடு விளக்குவது என் கடமையாயிற்று.
மலேசிய மின்னல் எஃப்பெம் வானொலியின் சுவையூட்டும் தமிழைத் தந்தவர், பொன் கோகிலம். Pon Kogilam Minnalfm
நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர் பேராசிரியர் மு. இளங்கோவன் M. Mu Elangovan இளங்கலை, முதுகலை, கலைமுதுவல், முனைவர் பட்டப்படிப்பு மாணவர் 100 மாணவ மாணவியர் கேட்போராக.

21.02.2015
திரு. இரா. சனார்த்தனம் காலமானார்.
1965 மாசி தொடக்கம் அவருடன் பழகினேன். இந்தி எதிரப்புப் போராட்ட நாள்களில் பச்சையப்பன் கல்லூரியில் விடுதியில் கோவையில் இருந்து வந்த அவர் தங்கியிருந்தார்.
பச்சையப்பன் விடுதிக்குள் காவல்துறை கண்ணீர்ப் புகை வீசியபொழுது மாணவர்களாகிய பலரும் அவரும் நானும் மூக்கையைம் வாயையும் துவாய்களால் கட்டியவாறு காவலர்களைச் சந்தித்தோம்.
பின்னர் அவர் சிறையில் படுத்துத் தூங்கினார். நான் எழும்பூர் காவல்துறை ஆணைணயர் அலவலக வாங்கு ஒன்றில் சில நாள்கள் படுத்துத் தூங்கினேன்.
1968 இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சந்தித்துக் கொண்டாம். புகைப்படம் இணைப்பில்.
1974 தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு யாழ்ப்பாணம் வந்தபொழும் சந்தித்தார். அவர் மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இறுதிநாள் வீரசிங்க மண்டப நிகழ்ச்சிக்கு வந்தார் பார்வையாளரகத் தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். மாநாடு நடந்த காலத்தில் கடைசி இரு நாள்களில் யாழ்ப்பாணத்தில் இருந்த அவர், தமிழ் இளைஞர்களைச் சந்தித்து வந்தார், பல ஊர்கள் சென்றார்.
எனக்கும் அவருக்கும் 1986க்குப்பின் தொடர்புகள் வலுவாயின. அக் காலங்களில் சென்னையில் என் வீட்டுக்கு அடிக்கடி அதிகாலையில் வருவார். தகவல்கள் கேட்பார். அறிக்கை எழுதுவார்.
அவர் நடத்தும் கூட்டங்களுக்கு அழைப்பார். எழும்பூரில் அவர் அலுவலகங்கள் இருந்த காலங்களில், மாண்டியத் சந்தில் இருந்த காலம் தொட்டு, அசோக ஓட்டல் பின்புறம் இருந்த காலம் வரை அவரிடம் செல்வேன். எழும்பூர் பிரசிடென்சி கிளப்பில் அவர் நண்பர்கள் பலரிருந்தனர்.
அவரைப் பேணிய நண்பர்களுள் என் நண்பரும் அச்சக உரிமையாளருமான திரு. சந்தர் சிறப்பிடம் பெறுகிறார்.

24.02.2015 மகிழ்ச்சியில் திளைத்தேன், நினைவுகளை மீட்டேன்.
MEMORIES and MOMENTUMS
Rangan came to Australia barely two months old with his family fleeing war in Sri Lanka.
"I wouldn't have been provided [this opportunity] in Sri Lanka.
To have met Kevin Rudd, Julia Gillard, raised $20 million, spent time with senior CEOs.
I feel an obligation and gratitude to Australia," Rangan says.
Rangan belongs to a lineage of illustrious courage.
It is my duty to record my memories of this lineage.
Rangan's father Janakan grew up at Jaffna.
He was one of those volunteers at my wedding in 1968 with Praba and Balakumar.
I had known his father Sri Kantha, (Government Agent, Jaffna) as a devotee of Yoga Swami.
My father was very close to Mr. Mailvaganam of Alaveddy, father of Janakan's father.
Mr. Mailvaganam was a very simple person cycling his way around, even though his son was virtually ruling the Northern Province as GA.
I used to visit Janakan's father as a student at the house of Proctor Kanagaratnams at KKS Raod, near Pirappankulam.
I never had the courage to sit in front of him unless asked to.
A photograph (1960) of Mr. Sri Kantha speaking at the Pillayar Temple (my father was the trustee) at Maravanpulavu, my village is attached. Mr. Ki Va Jaganathan, then Editor Kalaimagal monthly, from Chennai was the other speaker.
When Janakan's elder sister Malini and her Sinhalese lady friend came to Chennai, when I was a student there (1961 or 1962), Janakan's father thought it fit to ask me to help them which I did with care and attention. [Malini and I were jailed in Chennai during early 1997 is another story. Hospitality Yogan (Janakan's older brother) provided me in Brisbane is also another story]
During my years in Colombo, I joined Janakan's father in his prayer recital programs at Wellawathe Pillayar temple.
He was then Permanent Secretary, Ministry of Lands.
Janakan was in touch with me during those days.
He was a law student. He had probably joined the Army as a volunteer.
Once I took Janakan to the chamber of Mr. M. Tiruchelvam Q. C.
Later I used to meet Janakan at the KKS airport.
In July 1977, after the riots, we had asked for special trains to take the refugees to Jaffna and the Government had agreed.
Mr. K. C. Nithyananda, Mr. Kandasamy and myself negotiated with the then GA Colombo Mr. Wimal Amarasekara when he came to see us at the refugee camp at Bambalapiya Hindu College.
I was leading a batch of refugees to the Fort Railway station to be transported by the first special train to Jaffna.
It was early in the morning.
The refugees reached the Railway station in buses.
Along with Mr. Thanabalasingham (Senior officer in the Income Tax Department) I went to the platform.
We saw the train.
There were persons already inside the compartments.
Mr. Wimal Amarasekara and few police officers were at the platform. .
Both of us went to the GA.
We told him about the presence of passengers inside the special train, meant only for the refugees.
He did not take us seriously.
He asked us to get the refugees board the train.
We requested him to clear the train meant only for the refugees.
We told him that the refugees, already in a state of fear, will not be comfortable in the presence of persons of unknown background.
GA did not listen to us.
So we went to the buses and asked the refugees to stay inside the buses.
GA became furious.
He asked the police officers to take us away.
They came and pushed us towards a waiting police vehicle.
We protested.
While we were being pushed, I heard a voice, "Annai, what is the problem?".
It was Janakan. He had arrived there leading a contingent of army men to escort the train.
He came to us. We told him of the situation.
He told the police officials to release us.
We went along with Janakan to the train.
He asked his men to clear the train of the occupying persons.
Thereafter the refugees were offloaded from the buses to board the train.
Janakan took control of the situation, ignoring the GA and the police.
I do not miss meeting Janakan whenever I visit Sydney.
When I read about Rangan, I was pleased.
From Mr. Mailavaganam through Mr. Sri Kantha through Janakan, an inheritance of illustrious courage is Rangan.
Congratulations to the flag carrier of the lineage of futuristic innovators and administrators.
 Off springs of Rangan will perform better.
Tamils are proud of you Rangan. So am I.

27.02.2015 மாலை எழும்பூர் இக்சா மண்டபம்.
பேராசிரியர் இளவரசு நினைவேந்தல்.
1960களில் முதலமைச்சர் காமராசர் எங்களிடம் சொன்னவை, அந்த நாட்டுக்குப் போனீர்கள், அங்கேயுள்ளவர்களுடன் இணங்கி வாழ்வதுதானே.
1977 வரை தமிழகத்தில் பெரும்பாலோர் இதே கண்ணோட்டத்துடன் இருந்தனர்.
1977களில் பேராசிரியர் இளவரசு, இரா. சனார்த்தனன், அரணமுறுவல், மணவைத்தம்பி, மன்னர் மன்னன், புலமைப்பித்தன், வாமு சேதுராமன் போன்ற நூறுவருக்கு மேலான பலர் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தனித்தனியாகவும் இணைந்தும் இலங்கைத் தமிழருக்கு அநீதி விளைவிக்கிறார்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும், அவர்கள் தொப்புள் கொடி உறவுகள் எனக் குரல்கொடுக்கத் தொடங்கினர்.
1986இல் சென்னைக்கு வந்தேன், இவர்கள் அனைவருக்கும் நண்பரானேன், அக்காலத்தில் சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் இளவரசு. அவரும் நானும் ஒருவர்பால் மற்றொருவர் ஈர்க்கப்பெற்றோம். கருத்துருவாக்கத்தில் தெருவில் இறங்குவதில் அவருடன் நான் இணைந்தேன்.
அன்னாரது இறுதிக்காலம் வரை (22.01.2015) இணைந்து அவருடன் செயற்பட்டேன்.
முனைவர் ந. அரணமுறுவல், கவிஞர் வைகறை இருவரும் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

27.02.2015 நள்ளிரவு, தொலைப்பேசி அலறியது. செய்தியின் பின்னணியை முதலில் தருகிறேன். தொலைப்பேசியில் வந்த செய்தியைத் தொடர்ந்து தருகிறேன்.
நேற்றுத்தான் படியெடுக்கும் நிலையம் சென்றேன்.
இலங்கை ரூ. 2,500 கொடுத்துப் பழைய நூலின் படி ஒன்றைப் படி எடுத்தேன். இன்று புத்தகக் காட்சியில் ரூ. 500க்கு அழகான புதிய பதிப்புக் கிடைத்தது. ஒன்று வாங்கினேன். என் மாணவர்கள் 10 பேரைப் புத்தகக் காட்சிக்கு அனுப்பினேன். ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை வாங்கி வரச் சொன்னேன்.
மேலேயுள்ளது, யாழ்ப்பாணம், வடமராட்சி,
பருத்தித்துறை காட்லிக் கல்லூரிக் கணித ஆசானின் வாக்குமூலம்.
500 பக்கங்கள் கொண்ட நூல். 1962இல் முதற் பதிப்புக் கண்ட நூல்.
தொடர்ச்சியாக 9 பதிப்புகள் வெளிவந்த நூல்.நாற்பது ஆண்டுகள் போர்ச்சூழல் காரணமாகப் பதிப்புகள் வெளிவரவில்லை.
ஆனாலும் மாணவர்களும் ஆசிரியர்களும் படி எடுத்துப் பயன்படுத்தி வந்தார்கள்.
2012இல் மீள் பதிப்புக் கொணருமாறு நூலாசிரியர் என்னைக் கேட்டார். சென்னையில் கணிணி வரைகலை வல்லுநர் செல்வி சுவேதா பக்தவேல் படங்களைக் கணிணியில் வரைந்து தந்தார். சென்னையில் கணிணிப் பக்கமாக்கலில் வல்லுநர் திருமதி தேவி அரவிந்தன் அச்சுப் பிழை குறைந்த பக்கங்களைத் தந்தார். கணிதத்தில் அறிவியல் முதுவல் பட்டதாரி திருமதி சசிரேகா பாலசுப்பிரணியன் 500 பக்கங்களையும் கூர்மைக் கண்களால் துளாவித் தன் கணித அறிவின் துணையுடன் மெய்ப்புப் பார்த்துத் திருத்தித் தந்தார்.
2013 மார்கழியில் பத்தாவது பதிப்பு வந்தது. இலங்கை விலை ரூ. 500க்குக் கூடுதலாக இடவேண்டாம் என்றார் நூலாசிரியர். 500 பக்கங்களுக்கும் இலங்கை ரூ. 500 ஆ..!! கட்டுபடியாகாது என்றேன். வாங்கும் வலிவற்ற மாணவர்களைச் சென்றடைய வேண்டும், இழப்பை நான் ஏற்கிறேன் அச்சிடுங்கள் என்றார்.
யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை காட்லிக் கல்லூரியில் இதுவரை 150 படிகள் விற்பனையாயின. இலங்கையின் அனைத்து உயர்தர வகுப்புக் கணித ஆசிரியர்களும் மாணவர்களும் தேடித் தேடி வாங்கும் நூலாக அறிமுறைக் கேத்திர கணிதம் இப்பொழுது மீண்டும் அமைந்துள்ளது.
அந்த நூலின் ஆசிரியர், 80 வயதான, கணிதப் பேராசான் கார்த்திகேசு சந்திரசேகரம் அவர்கள். யாழ்ப்பாணம் தென்மராட்சி, கோயிலாக்கண்டியைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி, கொழும்பு கல்வித் திணைக்களம், சாம்பியா கல்விச் சேவை ஆகியவற்றில் பணியாற்றியவர். அவரது துணைவியாரும் கணிதப் பேராசாரான இராசேசுவரி. அவருக்கு மூன்று ஆண் மக்கள். மருத்துவர் குமரேசன் அமெரிக்காவில் உள்ளார். பொறியியலாளர் பேராசிரியர் கும்பேசன், சிட்னி ஆத்திரேலியிவில் உள்ளார். பட்டயக் கணக்காளர், வங்கியாளர் கேசவன் சிட்னி ஆத்திரேலியிவில் உள்ளார்.
தமிழக மாணவர், சிங்கப்பூர் மாணவர், கெனிய நாட்டு மாணவர், இலங்கை மாணவர் பயன்பெறும் வகையில் அந்தந்த நாட்டுப் பாடத்திட்டங்கைளக் கையில் வைத்துக் கொண்டு 400 பக்க ஏ4 அளவில் கேத்திர கணித ஆங்கில நூலை வரை படங்களுடன் தயாரித்துக் கொண்டிருந்தவர், அச்சிடத் தயார் நிலையில் உள்ளதாகக் கடந்த வாரம் தொலைப்பேசியில் என்னை அழைத்துச் சொன்னவர்.
நேற்று நள்ளிரவு தொலைப்பேசி அலறிக் கணிதப் பேராசான் கார்த்திகேசு சந்திரசேகரம் அவர்கள் காலமான செய்தியைச் சொன்னது.
அலமந்தேன், அயர்ந்தேன், என் மீது அவர் காட்டிய வற்றாத அன்பு, என் பயணங்களில் கொழும்பில் இடைத்தங்கலுக்கு அன்னார் காட்டிய அக்கறை, அளித்த விருந்தாம்பல், யாவும் என் உள்ளத்தை உருக்குவன.

27.02.2015 மாலை எழும்பூர் இக்சா மண்டபம்.
பேராசிரியர் இளவரசு நினைவேந்தல்.
1960களில் முதலமைச்சர் காமராசர் எங்களிடம் சொன்னவை, அந்த நாட்டுக்குப் போனீர்கள், அங்கேயுள்ளவர்களுடன் இணங்கி வாழ்வதுதானே.
1977 வரை தமிழகத்தில் பெரும்பாலோர் இதே கண்ணோட்டத்துடன் இருந்தனர்.
1977களில் பேராசிரியர் இளவரசு, இரா. சனார்த்தனன், அரணமுறுவல், மணவைத்தம்பி, மன்னர் மன்னன், புலமைப்பித்தன், வாமு சேதுராமன் போன்ற நூறுவருக்கு மேலான பலர் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தனித்தனியாகவும் இணைந்தும் இலங்கைத் தமிழருக்கு அநீதி விளைவிக்கிறார்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும், அவர்கள் தொப்புள் கொடி உறவுகள் எனக் குரல்கொடுக்கத் தொடங்கினர்.
1986இல் சென்னைக்கு வந்தேன், இவர்கள் அனைவருக்கும் நண்பரானேன், அக்காலத்தில் சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் இளவரசு. அவரும் நானும் ஒருவர்பால் மற்றொருவர் ஈர்க்கப்பெற்றோம். கருத்துருவாக்கத்தில் தெருவில் இறங்குவதில் அவருடன் நான் இணைந்தேன்.
அன்னாரது இறுதிக்காலம் வரை (22.01.2015) இணைந்து அவருடன் செயற்பட்டேன்.
முனைவர் ந. அரணமுறுவல், கவிஞர் வைகறை இருவரும் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

08.03.2015 நண்பகல்.
1973 கார்த்திகையில் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் பாடசாலையில் முதல் சந்திப்பு. நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்காக நான் அமைத்த தொண்டரணியில் சிவகுமாரனும் கிறிசுத்தோபர் பிரான்சிசும் தொண்டர்கள்.
1974 தை 11 வரை நீண்ட இத்தொடர்பு, 1975 தை 10இல், 1976 தை10இல் சுந்தர் என்ற பெயருடன் நினைவுச் சின்னம் அமைக்க, மீளமைக்க வந்த அருமைத் தொண்டர்.
1981இல் சென்னை எழும்பூரில் தற்செயலான சந்திப்பு. அதற்குப் பின்னர் அவரோடு தொடர்புகள் நீடித்தன, பிரான்சிலிருந்தும் இணையவழித் தொடர்பு.
2013இல் பாரிசு நகருக்கு நான் சென்றதன் முதல் நோக்கம் கிறிசுத்தோபர் பிரான்சிசு என்ற சுந்தர் என்ற கி பி அரவிந்தனைப் பார்க்க. நோயுற்றார் என்ற செய்தியால் வாட்டமுற்ற நான் அவருக்காகப் பாரிசில் ஒரு நாளை ஒதுக்கினேன்.
மென்மை மேன்மை இனிமை கொண்ட தொண்டர், போராளி, ஊடகத்தார், எழுத்தாளர், கருத்துருவாக்கி, ஆழ்ந்த தமிழ்த் தேசியவாதி.
அவர் மருத்துவ மனையில் காலமானார் என்ற செய்தியால் மலைத்தேன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் புற்றுநோய்க்கு ஆளாகினார்.

14, 15, 16.07.2015 செவ்வாய், புதன், வியாழன், மூன்று நாள்கள்.
சேலம், அரிசிப்பாளையம், திரு. முரளி அவர்களின் இல்லம்.
18,268 பாடல்கள், 20,000 பக்கங்கள் 16 பகுதிகள், 20 கிலோ எடை கொண்ட பன்னிரு திருமுறைத் தொகுதியை 1996 தைப்பூசம் தொடக்கம் பதிப்பிக்க இறைவன் எனக்கு அருளினார்.
உலகெங்கும் 40 நாடுகளில் பரந்து வாழும் ஒன்பது கோடி மக்களான சைவத் தமிழருக்கு இத்தகைய பாரிய தொகுதியை அவர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்வது என் கடமை எனக் கருதினேன். 20 கிலோ எடையுள்ள அச்சுப் பதிப்பை எடுத்துச் செல்வதன் சுமையை உணர்ந்தேன்.
பன்னிரு திருமுறையை உலகெங்கும் எடுத்துச் செல்ல மின்னம்பலத்தில் தரவுகளை ஏற்றுவோம் எனத் தருமபுரம் ஆதீனம் தவத்திரு 26ஆவது குருமகாசந்நிதானத்திடம் 2004ஆம் ஆண்டில் எடுத்துக் கூறினேன்.
இணையவெளி தூய்மையானதல்ல. அங்கு பற்பல செய்திகள் உண்டு, அவற்றுடன் தூய்மையான திருமுறைகளைக் கலக்கவேண்டாம் எனக் குருமகாசந்நிதானம் கருத்துரைத்தார்கள்.
நான் ஓயவில்லை. மீட்டும் மீட்டும் தவத்திரு 26ஆவது குருமகாசந்நிதானத்திடம் வலியுறுத்தி வந்தேன். 2005இல் எனக்கு ஆணை தந்தார்கள், செலவுக்காக ரூ. 50,000 காசோலை தந்தார்கள்.
2006 தைப்பொங்கலன்று தேவாரம் மின்னம்பல தளம் இயங்கத் தொடங்கியது. HTML செயலியாக இயங்கியது. சிறீலிப்பி எழுத்துருவைத் தரவிறக்கியே காணலாம். 2005இல் வேங்கடேசர் தளம் அமைக்க உதவ, 2006இல் விசயதீபன் தளத்திற்கு தட்டச்சுத் தேடல் உள்ளிட்ட வசதிகளால் மெருகூட்டினார்.
2007 ஆவணி தொடக்கம் php driven mysql தரவுச் செயலியாகத் தமிழ் ஒருங்குறி unicode எழுத்துருவில் இயங்கத் தொடங்கியது. கணியன் பூங்குன்றன் விருதுபெற்ற நாகராசன் இந்த மாற்றத்தைக் கருத்துரைத்துத் தன் மாணவரான முரளி ஆவன செய்வார் என 2006 மார்கழியில் முரளியை எனக்கு அறிமுகம் செய்தார். முதன் முதலாக மயிலாப்பூரில் அவரைச் சந்தித்த நாள் பசுமையாக என் நினைவில்.
முரளியின் ஈடுபாட்டுடனான தொடர்ச்சியான உழைப்பே, பயனாளர் நண்பனாகத் user friendly தேவாரம் தளம் அமையக் காரணம். வடிவமைப்பு, கட்டமைப்பு, தரவேற்றம் என அவரின் பங்களிப்பே உலகம் முழுவதும் பன்னிரு திருமுறை இத்தளம் வழி பரவக் காரணமாகும். நாகராசன், கார்த்திக்கு, கதிரவன், தினேசுபாபு, சீனிவாசன் என அவ்வப்போது உழைத்தவர்களும் உளர்.
119 நாடுகளில் 2215 நகரங்களில் தேவாரம் தளம் கணிணிகளில், கைப்பேசிகளில், கணிப்பலகைகளில் அண்மைய தொழிநுட்பக் கூறுகளுடன் android மற்றும் apple செயலிகளாகக் காண்கின்றனர்.
இந்த மூன்று நாள்களும் 14, 15, 16 சேலத்தில் முரளியுடன் இருந்து தளத்தின் சிறு குறைகளைப் போக்கி மேலும் மெருகூட்டினேன்.

08.03.2015 மாலை 1900 மணி
சென்னை, வடபழனி, திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க மண்டபம்.
மீண்டும் வருவோம்
குறும்படம் வெளியீட்டு விழா.

11.03.2015
10.03.2015 நண்பகல் தொடக்கம் முன்னிரவு வரை.
1. 1200 மணி: சென்னை மயிலாப்பூரில் தவத்திரு பரமேசுவரக் குருக்களுடன் (யேர்மனி, கம் நகர், அருள்மிகு காமாட்சி அம்மன் கோயிலார்) சந்திப்பு
2. 1630 மணி: சென்னை, திருநின்றவூர் (30 கிமீ.மேற்கே) வடமொழித் தட்டச்சாளர் இலட்சுமி நாராயணனுடன் 4,6 திருமுறைகள் வடமொழி மொழிபெயர்ப்புத் தட்டச்சுப் பணி தொடர்பான சந்திப்பு.
3. 1900 மணி: சென்னை அண்ணா நகர் மேற்கு, மேனாள் படைத் தளபதி கார்கில் சுப்பிரமணியம் திருமதி ரேவதி சுப்பிரமணியம் அவர்கள் விருந்தோம்பலாக இரவுணவு.
4. 2100 மணி: சென்னை, ஈக்காட்டுத்தாங்கல், புதிய தலைமுறைத் தொக்காவில் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் 2200 மணி வரை.

15.03.2015 மாலை
என் வழிகாட்டிகளுள் ஒருவாரன நாராயணன் தேசாய் இறந்த செய்தியை இந்து நாளிதழ் கண்டேன்.

1978 மார்கழியில் நாராயணன் தேசாயுடன் குசராத் மாநிலம் வெட்சி என்ற சிற்றூரில் (சூரத்துக்கு அருகில்) சில வாரங்கள் தங்கியிருந்தேன். காந்தி அமைதி நிறுவனம் அழைத்து அங்கு சென்று தங்கியிருந்தேன்.

1986 தையிலும் அங்கு சென்று அவருடன் தங்கினேன்.

காந்தி அமைதி நிறுவனத் தலைவர் ஆர் ஆர் திவாகர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். 1978 சித்திரையில் தந்தை செல்வா நினைவுரையை யாழப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்த்தினார். தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழு ஏற்பாடு செய்த நினைவுரை. தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுவுக்குப் பேராசிரியர் கு. நேசையா தலைவர். அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் இருவரும் துணைத் தலைவர்கள். நான் செயலாளர், கதிரவேற்பிள்ளை பொருளாளர்.

இந்தியா திரும்பியதும் ஆர் ஆர் திவாகர் ஓர் அழைப்பைத் தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுவுக்கு அனுப்பினார். 1978 மார்கழியில் ஒரு மாதகால ஆசிய நாடுகளுக்கான அறவழிப் பயிற்சிக்கு வெட்சிக்கு வருமாறு அழைப்பு. என்னைப் போகுமாறு குழு பணித்தது.

காந்தி அமைதி நிறுவனச் செயலாளர் இராதாகிருட்டிணன், நாராயணன் தேசாய் இருவரும் அறவழிப் பயிற்சி அமைப்பாளர். உலகின் பல நாடுகளில் இருந்து நூறுக்கும் கூடுதலானோர் பயிற்சிக்கு வந்திருந்தனர்.

அக்காலம் தொடக்கம் நாராயணன் தேசாயோடு தொடர்பிலிருந்தேன். வெட்சியில் அவர் இல்லத்தார் என்னை அன்போடு கவனித்தனர். தேவைக்கு ஏற்பக் கடிதத் தொடர்புகளை அவருடன் வைத்திருந்தேன்.

காந்தியடிகளோடு சபர்மதி ஆச்சிரமத்தில் வாழ்ந்தவர், அவரின் தந்தை மகாதேவ தேசாய் காந்தியடிகளின் தனிச் செயலாளர். அறவழி வாழ்ந்த பெரியார். அவரின் மறைவால் அறவழி உலகம் வழிகாட்டி ஒருவரை இழந்தது.
http://www.thehindu.com/news/national/other-states/veteran-gandhian-narayan-desai-passes-away/article6996047.ece

17.03.2015 காலை 1100 மணி
சென்னை நுங்கம்பாக்கம் தாய்லாந்து நாட்டுத் துணைத் தூதுவருடன் சந்திப்பு.
1. காஞ்சித் திருமட நிதி வழங்கலில் தாய்லாந்து, கிரந்தம், தமிழ் வரிவடிவங்களிலும் ஆங்கில மொழிபெயர்ப்புடனும் வெளியாக உள்ள திருவாசகம் - திருவெம்பாவை 20 பாடல்கள் கொண்ட கைந்நூலுக்கு அணித்துரை தருவதாகத் தாய்லாந்துத் துணைத் தூதர் ஒப்புக் கொண்டார்.

2. 01.05.2015இல் சிதம்பரத்தில் நடைபெற உள்ள திருக்குடமுழுக்கு விழாவை ஒட்டி, இந்தக் கைந்நூலை வெளியிடும் பொழுது, தாய்லாந்து அரச குரு தவத்திரு வாமதேவமுனிவர் அவர்களை அழைக்கலாமா என்ற ஆலோசனையை எடுத்து நோக்குவதாகத் துணைத்தூதர் ஒப்பினார்,
3. தாய்லாந்துக்கும் தமிழ் நாட்டவருக்கும் உள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலான வணிக, பண்பாட்டுத் தொடர்புகளைக் கேட்டறிந்தார். பத்தன் கல் எனத் தமிழி எழுத்தில் உள்ள 1800 ஆண்டுகள் பழமையான தமிழ் மொழிக் கல்வெட்டுத் தாய்லாந்து நாட்டின் குழொங்தோம் மாவட்டத்தில் குவாங்லுக்பத்தன் நகரின் அருங்காட்சியகத்தில் இருப்பதைக் கூறிப் படமும் காட்டினேன். வியந்து பார்த்தார்.
4. தாய்லாந்து அரசகுரு தவத்திரு வாமதேவமுனிவருக்குத் தமிழ் மொழி அறிவு உண்டென்பதையும் திருப்பாவை திருவெம்பாவைப் பாடல்களைத் தமிழில் மனப்பாடமாகச் சொல்லுவார்கள் என்பதைக் கூறி ஆதாரமாகக் காணொலியைக் காட்டினேன்.
நீங்களும் தட்டித் திறந்து பார்க்க.
https://youtu.be/ExGjxXY49Gg

20.03.2015, 30.03.2015 ஆந்திரா, குப்பம், திராவிட பல்கலைக்கழகம்.
கவிதைகளை மொழிபெயர்த்தல், பயிற்சிப் பட்டறை
50 மாணவர்களுக்குப் பயிற்சி.
மொழிபெயர்ப்புத் துறை வல்லுநர்கள் பயிற்சியளிப்பவர்.
20, 21 இரு நாள்களும் நானும் வகுப்பு எடுக்கிறேன்.
1. தெலுங்கு, 2. கன்னடம், 3. மலையாளம், 4. சிங்களம், 5, வடமொழி, 6. இந்தி, 7. மியன்மார், 8. யேர்மன், 9. பிரஞ்சு, 10. ஆங்கில மொழிகளுக்குப் பன்னிரு திருமுறையின் 18,268 கவிதைகளைச் சமகாலத்தில் மொழிபெயர்ப்பிக்கும் தருமை ஆதீனத்தின் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளராதலால் என்னையும் அழைத்தனர் போலும்!
பேரா. செயலலிதா (கன்னடத்துக்குத் திருவாசகம் முழுவதும்), பேரா. சத்தியவாணி (தெலுங்குக்கு 9ஆம் திருமுறை, அப்பர் தேவாரம்), பேரா. அரம்பை (தெலுங்குக்குத் திருவாசகம், திருக்கோவையார், 11ஆம் திருமுறையின் இறுதி 10 பதிகங்கள்) மூவரும் திராவிட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.
பேரா. அரம்பை அழைத்துப் போகிறேன்.
அழைப்பிதழ், நிழ்ச்சி நிரல் இணைப்பில்,
20, 21-03-2015, வெள்ளி, சனிக் கிழமைகள்.
வனத்தின் நடுவே புலமை வளம்.
சீனிவாச வனத்தின் நடுவே திராவிட பல்கலைக்கழகம்.
அந்த நிலப்பகுதி மக்கள் அனைவருமே தெலுங்கு கன்னடம் தமிழ் ஆகிய மும்மொழிகள் பயில்வோர். ஒரு வகையில் சமகால மொழிபெயர்ப்பாளர். தெலுங்கு கன்னடம் தமிழ் என எந்த மொழியில் கேட்டாலும் அந்த மொழியிலேயே உரையாடும் வல்லுநர்.
ஆந்திரம், கருநாடகம், தமிழகம் மூன்று மாநிலங்களும் சந்திக்கும் நிலப்பரப்பு. ஆந்திர மாநிலத்துக்குள் அடங்கும் குப்பம் நகரம். அந்நகருக்கு வடக்கே 8 கிமீ. தொலைவில் வனத்து நடுவே திராவிட பல்கலைக்கழகம்.
20.03 தொடக்கம் 30.03.2015 வரை திராவிட பல்கலைக்கழகத்தில் கவிதை மொழிபெயரப்புப் பட்டறை. மூன்று மாநிலங்களின் 7 பல்கலைக்கழகங்கள் அனுப்பிய 30 முனைவர் பட்டப் படிப்பு ஆராய்ச்சி மாணவர். மூன்று மாநிலங்களின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் யாவரும் புலமை வளங்களாய்.
இந்திய அரசின் செம்மொழித் தமிழ் நிறுவனம் வழங்கிய நிதி வளம்.
மொழிபெயர்ப்புகளின் ஆர்வலர், மொழிபெயர்ப்பாளருக்குப் புரவலர், மொழிபெயர்ப்புக்காக ஆண்டுதோறும் புலமையாளருக்கு விருதுகள் வழங்கும் திசை எட்டும் நிறுவனத்தின் தலைவர். பத்மசிறீ விருது பெற்ற பெரு வணிகர் நல்லி குப்புசாமி செட்டியாரை முதன்மை விருந்தினராக அழையுங்கள் என்ற என் விதப்புரையைப் பல்கலைக்கழகம் ஏற்று அவரை அழைத்தது.
1. தெலுங்கு, 2. கன்னடம் 3. மலையாளம் 4. சிங்களம் 5. இந்தி 6. வடமொழி 7. ஆங்கிலம் 8. யேர்மன் 9. பிரஞ்சு 10. மியன்மார் மொழிகளுக்குப் பன்னிரு திருமுறையை மொழிபெயர்க்கும் தருமை ஆதீனத் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்பதால் நான் அங்கு சிறப்பு விருந்தினர் போலும்!
1. பேரா. பூலோக அரம்பை, 2, பேரா. பரிமளம், 3. பேரா. செயலலிதா 4. பேரா. சத்தியவாணி 5, பேரா. மலர்விழி 6. பேரா. சரளா என அங்கு வந்திருந்த புலமை வளங்கள் பலவற்றுள் அறுவர் பன்னிரு திருமுறை மொழிபெயர்ப்பாளர்.
20.03.2015 பிற்பகல், 21.03.2015 முற்பகல் என இரு அரங்குகளை வழிநடத்தினேன். சென்னையில் இருந்து குப்பம் வழி பல்கலைக்கழகத்துக்கு 260 கிமீ. தொலைவு: 4 மணி நேர சிற்றுந்துப் பயணம். தார்க் கம்பள விரிப்பும் தடை தவிர்க்கும் தடுப்பும் நெடிதாய் இடைஇடையே நான்கு சுங்கச் சாவடிகள்.

22.03.2015 சென்னை எழும்பூர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இராம சுப்பிரமணியன்.
அவர் என் மீது கொண்ட அன்புக்கு நிகரில்லை.
கற்பகம் பல்கலைக்கழகம் எனக்கு மதிப்புறு முனைவர் பட்டம் (D. Sc. honoris causa) வழங்கிய பொழுது அப்பட்டத்தைப் பட்டமளிப்பு விழாவில் வழங்கியவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இராம சுப்பிரமணியன்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், 30 ஆண்டு காலத்துக்கும் கூடுதலாகத் தமிழ்ப் பதிப்புகளை வெளியிட்டமைக்காக விருதை எனக்கு வழங்கியபொழுதும் அவ்விருதை வழங்கியவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இராம சுப்பிரமணியன்.
என்னை எங்கு கண்டாலும் உடன் ஓடி வந்து நலம் விசாரித்து வாழ்த்துச் சொல்லும் பண்பாளர்.
அன்னாரது தமிழ் அறிவு, பேச்சாற்றல், மேலாக மனிதரை மனிதராக மதிக்கும் உயர்ந்த பண்பு யாவும் என்னைக் கவரந்தவை. அவரைப் பற்றிய செய்தி விகடன் வார இதழில் வெளி வந்தது படித்தேன், பகிர்கிறேன். பின்வரும் இணைப்பைச் சொடுக்குக.

24.03.2015 காலை 0630 மணி.
நலமாக இருக்கிரீர்களா? நீண்ட நாள்கள் உரையாடவில்லை.
இலண்டனில் இருந்து தத்துவத் தமிழறிஞர் யோ. பற்றிமாகரின் குரல்.
பல செய்திகள் சொன்னார்.
இடையே. ஒரு தவறு நடந்துவிட்டது போலத் தெரிகிறது என்றார்.
மாவிட்டபுரம் பண்டிதர் சச்சிதானந்தனைப் பற்றிய செய்தியில் உங்கள் படத்தை இணைத்தார்கள் என்றார்.
அவர் சொன்னவாறு செய்தி வருவது இதுவே முதன்முறை அன்று.
முன்பு கனடா இதழ் ஒன்றில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் இறந்தார் என்ற செய்தியில் என் படத்தை அச்சிட்டு வெளியிட்டனர் என்றேன்.
2000ஆம் ஆண்டில் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தன் சென்னை வந்தார். வரவேற்பு ஏற்பாடு செய்தேன். படம் இணைப்பில்.

பங்குனி 11, 2047 (24.03.2016) வியாழன்
சென்னையில் இருந்து வொளியாகும்
மாலைமலர் நாளிதழ் செய்தி.
தவறான படத்தைச் சேர்த்துக் குழப்பியுள்ளார்கள். திருத்திக் குழப்பத்தைப் போக்கினர்,
தகவலுக்காகவே இட்டேன். சினங்கொள்வதற்காக அல்ல. பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பேரா. கா. பொ. இரத்தினம் இறந்த செய்தியை எழுதியவர்கள் செய்தியுடன் என் படத்தைப் போட்டுக் குழப்பினர் முன்பு கனடா நாட்டில். மகிழ்ச்சியாக அப்பொழுதும் இப்பொழுதும்.
மாவிட்டபுரம் பண்டிதர் சச்சிதானந்தன் திபி 2032 (கிபி 2001)ஆம் ஆண்டில் சென்னை வந்தார். அவருக்கு நான் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தேன். பேரா. நா. சுப்பிரமணியனும் வந்திருந்தார்.
கணிதம், வானியல், தமிழ், இசை எனப் பன்முகப் புலமையாளர். விபுலானந்த அடிகளாரின் யாழ்நூல் நூலாக்க முயற்சியில் உதவியவர். வாக்கிய பஞ்சாங்கக் கணிப்பாளர்.

இலங்கைத் தமிழரின் இடரைப் புரிந்த உலகத் தலைவர்களுள், 30 ஆண்டுகள் சிங்கப்பூர் தலைமை அமைச்சராக இருந்த லீ குவான் யூ முதலிடம் வகிக்கிறார். 
சிங்கப்பூரில் பிறந்த மூன்றாவது தலைமுறைச் சீனரான அவர் சிங்கப்பூர் வாழ் இலங்கைத் தமிழர்களுடன் நல்லுறவுகளைப் பேணியவர். சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியைத் (PAP) தொடங்கிய காலத்தில் அவரது உற்ற நண்பர் மலேசியாவில் பிறந்த இரண்டாவது தலைமுறை யாழ்ப்பாணத்தவர் ச. இராசரத்தினம்.
இலங்கைத் தமிழர், படித்தோர், கடுமையாக உழைப்போர், பெரிதும் ஏமாற்றார், வெளிப்படையாகப் பேசுவோர், அடையாளங்களைக் கைவிடாதோர் என்ற கருத்து மலேசியவிலும் சிங்கப்பூரிலும் வாழும் சீனரின் கருத்து. லீ குவான் யூ சீனர், எனவே விதிவிலக்கானவரல்லர். 
இலங்கைத் தமிழரை எந்தக் கொம்பனாலும் அடக்கி, அழித்துவிட முடியாது என லீ குவான் யூ தன் கடைசிக்காலம் வரை சொல்லிக்கொண்டிருந்தார்.
குடிமகன் ஒருவருக்குத் தேர்தலில் ஒரு வாக்கு என்ற முறை இலங்கையில் இனச்சிக்கலை வளர்த்தது. பெரும்பான்மையான 80 இலட்சம் சிங்களவர் சிறுபான்மையினரான 20 இலட்சம் தமிழரை எப்பொழுதும் இத்தகைய வாக்களிப்பு முறையால் ஓரங்கட்டுவர். சிங்களத்தை ஆட்சிமொழியாக்கித் ஆட்சியில் தமிழரின் பங்களிப்பைத் தடுத்த சிங்களவர், மதச்சார்பற்ற நிலையை மாற்றிப் புத்த மதத்துக்கு அரசில் முன்னுரிமை கொடுத்தனர். இந்துக்களான தமிழர் இந்த நிலையை ஏற்க மறுத்தனர். இந்தக் கொடுமைகள் தமிழர்களைத் தம் நாட்டிலேயே அந்நியர்களாக்கின. வளர்ச்சிக்குரிய நாடாகிய இலங்கை வீழ்ச்சியை நோக்கிப் போவதை நான் பார்த்துக்கொண்டே இருந்து வருகிறேன் என, நினைவலைகள் என்ற தன் நூலில் குறிப்பிட்டுள்ளார் லீ குவான் யூ. Excerpts from: "From Third World To First - The Singapore Story: 1965-2000" "Memoirs of Lee Kuan Yew" (October 2000)
சிங்களத் தலைவர்களோடு ஒப்பிடுகையில், சிங்கப்பூரைப் பிரித்துக் கொடுத்துத் தனிநாடாக்கிய துங்கு அப்துல் இரகுமான் அரசியலில் கில்லாடி எனப் பாராட்டியவர் லீ குவான் யூ.
1956இல் இலங்கைக்கு முதன்முகலாக வந்த லீ குவான் யூ, சிங்கப்பூரை விட இலங்கை பன்மடங்கு வளமாக இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் அரசியல் தலைமையின் சீர்கேட்டால் இலங்கை பாழடைந்ததைக் கண்டு பிற்காலத்தில் வருந்தினார்.
செயவர்த்தானாவிடம் பலமுறை பேசினேன். தமிழருக்குச் சுயாட்சி வழங்குமாறு கேட்டேன். பிரேமதாசாவிடமும் இதைப் பலமுறை கூறியிருக்கிறேன்.
இந்தியப் படையைத் திருப்பி அனுப்பிய தவறைச் செய்த பிரமதாசா, தமிழ்ப் பகுதிகளுக்குச் சுயாட்சி கொடுக்க மறுத்தார். இதனால் தமிழர் விடுதலைக் கூட்டணி வலுவிழந்தது. விடுதலைப் புலிகளை வளர்த்தவர் பிரேமதாசா. அவரே தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிரிழந்தார்.
விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதால் இலங்கையில் தமிழர் சிக்கலைத் தீர்த்துவிட்டதாக இராசபட்சா நம்புகிறார். மற்றவர்களும் அவ்வாறே நம்பவேண்டும் எனக் கருதுகிறார். இலங்கைத் தமிழரை அடக்கி ஒடுக்கமுடியும் என நான் நம்பவில்லை. அவர்களது உரிமைப் போரை அவர்கள் கைவிடவே மாட்டார்கள். இராசபட்சாவின் உரைகளைப் படித்திருக்கிறேன். அவர் சிங்களத் தீவிரவாதி. அவரது அந்த மன நிலையை என்னால் மாற்ற முடியாது என 2010இல் தொம் பிளேடர் என்ற அமெரிக்க ஊடகருக்குக் கூறினார். Conversations with Lee Kuan Yew (2010), by Tom Plate, an American columnist, published by Marshall Cavendish on Giants Of Asia. 
 அவரவர் செயல்களின் விளைவுகளை அவரவரே அநுபவிப்பார். இலங்கைத் தீவு வளமான நிலப்பகுதி. ஆங்கிலேயரின் ஆட்சியில் செல்வந்த நாடாக இருந்த தீவு. சிங்களவர்களின் கொடுமை நோக்கும் தலைமையால் வளம் குன்றி, வலிவு நீங்கி, இழிவும் வறுமையும் மேலோங்கிய நாடாகியுள்ளதே எனப் பலரிடம் வீ குவான் யூ வருத்தப்பட்டிருக்கிறார்.
1950 தொடக்கம் இந்தியாவில் அரசியலமைப்பு அட்டவணை மொழிகளுள் தமிழ் ஒன்று. இலங்கையில் 
1988க்குப் பின்னர் தமிழும் ஆட்சி மொழி. உம் விகுதியை நோக்குக. வேறெந்த நாட்டிலும் தமிழுக்கு அரச ஏற்பு நிலை இல்லை.
ஆனால் சிங்கப்பூரில் 1965 தொடக்கம் நான்கு தேசிய மொழிகளுள் தமிழ் ஒன்று. நடைமுறை மொழி தமிழ். அரசின் செயல் மொழி ஆங்கிலமானாலும் தமிழர் தமிழில் தொடர்பு கொண்டு தமிழிலேயே அரசிடமிருந்து பதிலைப் பெறலாம். கல்வியில் வணிகத்தில் அறிவிப்புகளில், நாடாளுமன்றத்தில் ஏனைய மூன்று மொழிகளுக்குச் (சீனம், மலாய், ஆங்கிலம்) சமமான இடத்தில் தமிழ்.
திறமைக்கே முதலிடம். இனத்துக்கோ, மதத்துக்கோ, மொழிக்கோ முன்னுரிமை இல்லை. திறமையான தமிழர் பலர் சிங்கப்பூர் அமைச்சரவையில் தொடர்ந்து உறுப்பினராக உள்ளனர்.
சின்னத்தம்பி இராசரத்தினம் (1915–2006) துணைப் பிரதமர், வெளிநாட்டமைச்சர், பண்பாட்டமைச்சர், மூத்த அமைச்சர். 1952இல் முதன் முதலாக லீ குவான் யூவைச் சந்திக்கிறார் இராசரத்தினம். இறுதிக் காலம் வரை சிங்கப்பூரைக் கட்டியெழுப்பிவதில் இருவரும் இணைந்து பணி புரிகின்றனர்.
சுப்பையா தனபாலன் (1937– ) வணிக, தொழில்வள, தேசிய வளர்ச்சி அமைச்சர், வெளிநாட்டமைச்சர் அமைச்சர், பிரதமருக்கான தன் வாரிச என லீ குவான் யூ அறிவித்தும் ஏற்க மறுத்த தமிழர்.
சண்முகம் செயக்குமார் (1939– ) தேசியப் பாதுகாப்பு, சட்டம், தொழிலாளர், உள்நாடு, வெளிநாடு அமைச்சர். ஐநா பிரதிநிதி.
தர்மன் சண்முகரத்தினம், துணைப் பிரதமர், கல்வி, நிதி அமைச்சர்.
விவியன் பாலகிருட்டிணன், சமூக வளர்ச்சி, இளைஞர், விளையாட்டு அமைச்சர்
க. சண்முகம், சட்ட மற்றும் வெளிநாடு அமைச்சர்.
ச. ஈசுவரன், பிரதமர் அலுவலகம் மற்றும் உள்நாடு அமைச்சர்.
பாலாசி சதாசிவன், வெளிநாடு இணை அமைச்சர்
பெஞ்சமின் செயரத்தினம், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.
நாதன், குடியரசுத் தலைவர்
குமாரசுவாமி, நாடாளுமன்ற அவைத் தலைவர்.
இவ்வாறாக, லீ குவான் யூ கட்டியெழுப்பிய சிங்கப்பூர், தமிழுக்குத் தேசிய நிலை கொடுத்த முதல் அரசு. திறமையுள்ள தமிழர் பிரதமராகலாம் என வாய்ப்பளித்த நாடு. ஏராளமான தமிழர்களைத் திறமைக்காககப் போற்றிய நாடு. ஈழத் தமிழரின் நிலை உணர்ந்து பேசிய லீ குவான் யூவைத் தந்த நாடு.

02.04.2015
02.04.2015 மாலை 1830 மணி
கொழும்பு தொரிங்ரன் சதுக்கம்
மேனாள் குடியரசுத் தலைவர்
சந்திரிகா குமாரணதுங்கா பண்டாரநாயக்கா
இல்லம்

திருவாசகம் சிங்கள மொழிபெயர்ப்பு நூல்
படி ஒன்று கொடுத்தோம்.

09.04.2015 காலை 0600 மணி
மறவன்புலவில் இருந்து திருக்கேதீச்சரம் புறப்பட்டேன்.
மாலை 2000 மணி
திருக்கேதீச்சரத்தில் இருந்து மறவன்புலவு வந்து சேர்ந்தேன்.

பேரா. அரங்க இராமலிங்கம், பேரா. முருகானந்தம் இருவரையும் திருக்கேதீச்சரத்திலிருந்து மறவன்புலவுக்கு அழைத்து வந்தேன்.
திருப்பனந்தாள் காசி மடம் இளைய பட்டம் தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள் திருக்கேதீச்சரம் வந்திருந்தார்கள். திரு. சிவகுமார் நமசிவாயம் இணையர், அடம்பன் பிரதேசச் செயலர், புலவர் திருநாவுக்கரசு ஆகியோருடனும் இணைந்து கொண்டேன்.
திருக்கேதீச்சரத்தில் பாலாவிக்குள் கழுத்தளவு நீருள் அரை மணி நேரம் நீராடினேன்.

10.04.2015 வெள்ளிக்கிழமை காலை
புங்குடுதீவு குறிகாட்டுவான் துறை காலை 0830 மணி
அருட்சுனைஞர் திரு. தியாகலிங்கம் அழைத்து நெடுந்தீவுக்கு வள்ளத்தில் பயணமானோம்.

தொன்மைப் பெயர் பசுத்தீவு.
மாடுகள் எருமைகள் பால் தந்தன.
படகில் இராமேச்சரம் எடுத்துச் சென்றனர்.
அருள்மிகு பர்வதவத்தனி உடனாய இராமநாதருக்குப் பாலால் முழுக்கினர். நாள்தோறும் சென்றனர், முழுக்கினர்.
இன்றைய பெயர் நெடுந்தீவு. ஒல்லாந்தர் சூட்டிய பெயர் Delft.
ஏறத்தாழ 5000 மக்களுள்
60% கத்தோலிக்கர் 40% சைவ சமயத்தவர்.
சைவப் பெருங் கோயில்கள் ஏழு. சிறு கோயில்கள் பல.
தவத்திரு தனிநாயக அடிகளின் முன்னோரான தனிநாயக முதலிகளின் வாழ்விடம்.
திரைப்பட நடிகர், கவிஞர் வ. ஐ. சு. செயபாலன் இந்த மண்ணின் சொந்தக்காரர். எம்மை அழைத்த அருட்சுனைஞர் திரு. தியாகலிங்கம் அவர்களின் சிற்றப்பா கவிஞர்.
பேராசிரியர் அரங்க இராமலிங்கம், பேராசிரியர் முருகானந்தம், திரு. தியாகலிங்கம், நான் நால்வரும் வள்ளத்தில் பயணமாகித் துணை ஆட்சியர் திரு. சிறீ அவர்கள் விருந்தோம்பலில் தங்கி, அவரது அலுவலகத்தில் பேராசிரியரும் நானும் மாணவர்களிடையே உரையாற்றி, மாலை அருள்மிகு முருகன் கோயிலில் பேராசிரியர் உரையாற்றி இரவு அங்கேயே தங்கி மறுநாள் புலர் காலை வள்ளத்தில் புறப்பட்டோம்.

12.04.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 1500 மணி
யாழ்ப்பாணத்துக்கு வடக்கே 6 கிமீ. தொலைவில் இணுவில்.
வாடா மல்லிகை நூல் வெளியீட்டு விழா.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை மேனாள் தலைவர் பேராசிரியர் அரங்க இராமலிங்கம் சிறப்புரை.

அண்ணா தொழிலகம் உரிமையாளர் 76 வயதினரான திரு. சு. பொ. நடராசா எழுதிய நூல்.
யாழ்ப்பாணமே திரண்டு வாழ்த்திய விழா.

17.04.2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1400 மணி.
மறவன்புலவு அருள்மிகு அண்ணமார் கோயில் விழா முடிந்து வீடு திரும்பினேன்.
மதில் தாண்டிய கறுப்பாடு பயத்தங்கொடியைக் குதறிக் கொண்டிருந்தது.
தோட்டத்தில் உள்ள ஏனைய செடிகளும் அதன் மேயெல்லைக்குள் தெரிந்தன போலும். ஒருவாறு துரத்திப் பிடித்துக் கட்டிவைத்தோம்.

29.04.2015 காலை 0900 மணி.
மறவன்புலவில் தோப்புப் பிள்ளையார் கோயிலடியில் திருமதி பொன்னம்மா அவர்களைப் பார்க்கப் போயிருந்தேன்.
1946-1949 காலப் பகுதியில் பொன்னு என நானும் அக்காவும் அவர்களை அழைப்போம். என்னை விட 3 வயது மூத்தவர். அடுத்தவீட்டு அயலவராக வாழ்ந்தவர்.
கோடை காலத்தில்
வெயிலில் குளித்து,
பனந்தோப்பில் ஒளித்து விளையாடி,
கொண்டலடிப் பேய்க்குப் அஞ்சி நடுங்கி,
வள்ளக்குளக் கரையில் ஆட்டுப் புழுக்கைக்கும் தாமரைக் கொட்டைக்கும் வேறுபாடு தெரியாது பல்லில் கடித்து,
ஈச்சம்பழம் தேடி வைரவர் கோயிலடி சென்றதால் பூவரசந் தடியுடன் காத்திருக்கும் தாத்தாவுக்குத் தப்பி,
அழுக்கேறிய வெள்ளை நிறச் சட்டையை அம்மாவுக்குக் காட்ட அஞ்சி,
பாற் பசுக்கள் ஈன்ற கன்றுக்குட்டிகள் இரண்டை வண்டி மாடுகளாகப் பாவித்து வீட்டைச் சுற்றி ஓட்டி,
மழை காலத்தில்
மழைக்குக் காவோலைக்குள் ஒதுங்கி,
வரப்புத் தவறி வயல் வெள்ளத்துள் விழுந்து
குடலை பிடுங்கிச் சுவைத்து
வள்ளக்குளத்துள் நீச்சலடித்து,
கோயில் வாயிலில் கார்த்திகை மோதகத்துக்காகக் காத்திருந்து
மூக்கில் சளி ஓட, வாழைப்பழத்துள் ஈக்கில் இருப்பதால் சாப்பிடக் கூடாதென அச்சமூட்டி
பொன்னுவும் அக்காவும் நானும் இணைபிரியாது மறவன்புலவில் சிறுவர்களாய்ச் சுற்றித் திரிந்த காலப் பொன்னுவையா பார்க்கிறேன்.
நோயுற்ற மகளுடன் ஒற்றை அறைக் குடிசைக்குள் நோஞ்சானாய்ப் பொன்னுவைக் கண்டதும் கண்களுக்குள் கசிவு, நெஞ்சத்தில் தளர்ச்சி.
இவரது வீட்டைப் போர்க் காலத்தில் படைவீரர் துவம்சம் பண்ணியதால் பின்னர் அவர்கள் கொடுத்த ரூ. 20,000 வைத்து இந்தக் குடிசையைக் கட்டினார்.
உதவியில்லாததால் சுவிசு அரசு கொடுத்த இலவச வீட்டையும் கட்டமுடியாதென்று குடிசைக்குள் முடங்கியிருக்கிறார்.
மாற்று ஏற்பாடு செய்வேனென்றேன், வேண்டாமென்றார்.
ஏதோ ஒரு வைராக்கியம், ஏதோ ஒரு வெறுப்பு.
தடதடத்துப் போனார்.
துறவியைப் போல ஒரு பார்வை.
மென்மையாக இழையோடிய புன்னகை.
கைகளில் நடுக்கம். நடையில் தளர்ச்சி.
எனக்குக் கடமை உள்ளதை நெஞ்சில் நிறுத்தினேன்.

02.05.2015 காலை 0900 மணி
திருகோணமலைக்கு மேற்கே கன்னியா வெந்நீரூற்று.
The TNA leader Mr. R. Sampanthan also referred to Prime Minister Mr. Modi, the developments in the Eastern Province. He alleged that the ‘hot wells’ — or the natural water springs in Kanniya, (near Trincomalee) — which were under the control of Hindu devotees had now been handed to a nearby Buddhist temple. This was despite objections raised by the Pradeshiya Sabha of the area. The TNA leader urged that the Government of India take necessary steps to arrest the deteriorating situation.(http://www.sundaytimes.lk/…/rajapaksa-can-fight-his-foes-go…)

2.5.2015
02.05.2015 பகல் 1000 மணி தொடக்கம் 1300 மணி வரை திருகோணமலையில்
1. தம்பலகாமம் அருள்மிகு அம்சா அமனாம்பிகை உடனுறை ஆதிகோணநாயகர் திருக்கோயில்,
2. திருகோணமலை அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேச்சரப் பெருமான் திருக்கோயில்
3. நிலாவெளி கடற்கரை

4.5.2015
04.05.2015 திங்கள்கிழமை மாலை 1700 மணி
யாழ்ப்பாணம் இணுவில் பொது நூலகம்.
‘படிக்க, பரிசளிக்க, பயன்பெற’ என்ற கொள்கை முழக்கத்துடன் 1975ஆம் ஆண்டு முதலாகச் சென்னையில் பதிப்புத் தொழிலில் ஈடுபட்டுவரும் தேவகோட்டைக்காரர் திரு. சேது சொக்கலிங்கம், துணைவியார் சானகியார், ஒரே மகள் கவிதா, பெயரர் பாரதி, பெயர்த்தி கண்ணம்மா யாவருக்கும் நூல் ஆர்வலர்களின் வரவேற்பு நிகழ்ச்சி.
இணுவிலுக்கும் தமிழகத்துக்கும்
தேவகோட்டைக்கும் யாழ்ப்பாணத்துக்கும்
இலங்கைக்கும் தமிழகத்துக்கும்
உள்ள நீண்ட தொடர்புகளைப் பேசினோம்.

08.05.2015
08.05.2015 மாலை 1600 மணி
மறவன்புலவு, வீட்டு முன் முற்றம்.
நிழலில் நான் வளர்ந்த,
ஊஞ்சல் கட்டி நான் ஆடிப் பின் என் மக்களும் ஆடிய,
இலை நனைத்துக் குளித்து அம்மாள் நோய் போக்கிய,
பூவாய்ந்து வடகமாக்கிய,
விதை எடுத்துத் தணலில் புகைத்துக் கொசு விரட்டிய,
கிளை வெட்டிக் கதவு நிலை இணக்கிய,
வேப்ப மரத்தின் Azadirachta indica கீழிருந்து பூவாய்ந்தேன் வடகமாக்க.
உணவில் சுவை கூட்டுவதற்காக வேப்பம்பூ வடகம் பொரித்துண்போம். சித்திரை, வைகாசி மாதங்களில் தாராளமாகக் கிடைக்கும். வேம்பு பூக்கும் காலத்தில் ஒரு மூடை வேப்பம்பூ (பச்சையான பூ) 1000 ரூபாவுக்கு விற்கலாம்.
பச்சையான வேப்பம்பூவில் செய்யும் வடகம் கசக்கும். காயவைத்த பூக்களில் செய்யும் வடகத்தில் கசப்புக் குறைவு.

11.5.2015
02.05.2015 காலை 0800 மணி.
திருகோணமலை மாவட்டம், மூதூர் வட்டம், கட்டைபறிச்சான் சென்றேன்.
1973இல் கட்டைபறிச்சான் சென்றேன். அங்கு இரு நாள்கள் தங்கினேன். மகாவித்தியாலய வாங்குகளில் தூங்கினேன். இந்து இளைஞர் மன்றம் அமைத்தேன்.
என்னைப் பேணியவர்களுள் திரு. இரத்தினசிங்கம் (இப்பொழுது சென்னைக்கும் கட்டைபறிச்சானுக்கும் இடையே அடிக்கடி பயணிப்பவர்) திரு. கனகசிங்கம் (பள்ளி முதல்வராகப் பணியாற்றியவர், இப்பொழுது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர்).
சனிக்கிழமை காலை அங்கு சென்றதும் அழுகையால் கலங்கினேன். ஏறக்குறைய 1000 குடும்பங்கள். தகரக் கூரைகள், தரப்பால் சுவர்கள், மரநிழல்கள் இவை அவர்கள் வாழ்விடங்கள்.
2006 ஆனி மாதம் தொடக்கம், சம்பூர் கிழக்கு 355 குடும்பங்கள், சம்பூர் மேற்கு 448 குடும்பங்கள், கடற்கரைச்சேனை 113 குடும்பங்கள், சம்புக்கழி 25 குடும்பங்கள் யாலரும் கட்டைபறிச்சான், சேனையூர் ஆகிய இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.
06.05.2015இல் இவர்களுக்கு நல்ல செய்தி. விரைவில் கடற்படை முகாம் குறுங்கும், பெருமளவு காணி விடுவிக்கப்படும். ஆனால் இவர்களால் மனங்கொள்ள முடியாத செய்தி, இவர்கள் காணி உறுதிகள் காட்டும் எல்லைகள் எதுவும் இல்லை, கிணறுகள் இல்லை, கோயில்கள் இல்லை, கட்டடம் எதுவுமே இல்லை.

25.05.2015 பிற்பகல் 1400 மணி.
கொழும்பு, மருதானை - பொறளையை இணைக்கும் பி தி எசு குலரத்தின மாவத்தை.
கொடகே புத்தகக் கடை.
சிறீ சுமண கொடகே அதன் உரிமையாளர். 
1936இல் பிறந்த அவருக்கு 79 வயது.
இலங்கையின் தென்கோடியான மாத்தறைக்கு அருகில் பள்ளத்துவை சிற்றூரில் பிறந்தவர், இவருடன் கூடப்பிறந்தவர்கள் பதின்மர். இவர் ஆறாவது மகவு.
குத்தகைக் காணிகளில் நெல் பயிரிட்ட குடும்பம்.
ஏழை விவசாயக் குடும்பம்.
வருவாயைப் பெருக்க 15 வயதில் வீட்டை விட்டுப் புறப்பட்டவர் சிறீ சுமண. களுத்துறையில் சோற்றுக் கடை, கொழும்பில் பறவைக் கடை எனப் பணி மாறியவர், பிலியந்தலையில் விசயசேகரா அச்சகத்தில் ஈய எழுத்து வணிகம், தொடங்கொடை அச்சகத்தில் புத்தகம் கட்டும் பணி, பின் புத்தகம் கட்டும் தொழிலில் நேரடியாக இறங்கினார்.அடுத்து வித்தியோதயாப் பிரிவேனை அருகே புத்தக விற்பனையாளர்.
மருதானையில் புத்தகக் கடை தொடங்கிய அவர், இதுவரை 16,000 தலைப்புகளில் சிங்கள நூல்கள் பதிப்பித்துள்ளார். இரு மாடிக் கட்டடத்தில் புத்தகக் கடை. இலங்கை முழுவதும் 25க்கும் கூடுதலான புத்தகக் கடைக் கிளைகள்.
அண்மைக் காலத்தில் தமிழ்நூல் பதிப்புத் துறைக்கு வந்துள்ளார். சிங்கள நூல்களைத் தமிழுக்கு மொழிபெயரத்து வெளியிடுகிறார். செயகாந்தன், பிரபஞ்சன், சின்னப்பா பாரதி போன்றோரின் தமிழ் நூல்களச் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்.
உபாலி லீலாரத்தினர் இவரது மொழிபெயர்ப்பாளர். தமிழ் நாட்டில் திசை எட்டும் வழங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றவர்.
ஈழத்தின் சிறந்த தமிழ் நாவலாசிரியருக்கு ஆண்டு தோறும் சிறீ சுமண கொடகே, ஓரிலக்கம் ரூபாய் பரிசு வழங்குகிறார்.சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆண்டு தோறும் 25,000 ரூபாய் பரிசும் வழங்குகிறார்.
பதிப்புத் தொழிலுக்காக இலங்கையில் பல்வேறு விருதுகள் பெற்றவர், தேசிய விருதுகளும் பெற்றவர்.
இணுவிலைச் சேர்ந்த திரு. மோகன் என்னும் சர்வானந்தா என்னை மருதானைக்கு அழைத்துச் சென்றார். சிறீ சுமண கொடகேயை அறிமுகம் செய்தார்.
சைவ சமய நூல்களைச் சிங்களத்தில் வெளியிடச் சிறீ சுமணே ஆர்வம் காட்டினார். எனக்குத் தெரிந்த 6 தலைப்புகள் சிங்களத்தில் பதிப்பிடத் தயாராக உள. திருவாசகம் முழுவதும், ஒன்பதாம் திருமுறை முழுவதும், ஆறுமுகநாவலர் சைவ வினா விடை, இராகு காலப் பூசை, கந்தர் சஷ்டிக் கவசம், திருக்கேதீச்சர, திருக்கோணேச்சர தேவாரப் பதிகங்கள்.
முதல் பணியாகத் திருவாசகம் (முழுவதுமான 658 பாடல்களின்) சிங்கள மொழிபெயர்ப்பு நூலை 500 படிகள் பதிப்பிக்க சிறீ சுமண கொடகே உடன்பட்டார்.
கருப்பட்டியுடன் தேனீர் தந்தார். திரு. மோகன் என்னும் சர்வானந்தா இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கிறார்.

14.05.2015 மறவன்புலவு 1900 மணி.
சென்று வண்டியை விட்டு இறங்கிக் கழிவறைக்குப் போகிறேன்.
வாயில் கதவு நிலைக்கு அருகில் மண்புழுவாகச் சுருண்டு கிடந்த ஒன்றைக் கண்டேன்.
கழிவறையில் இருந்து மீள்கையில் உற்றுப் பார்த்தேன்.
15 செமீ. நீளக் குட்டிப் பாம்பு.
குச்சியால் தட்டினேன்.
தலையை விரித்துப் படம் எடுத்துச் சீறியது.
நல்ல பாம்பு என்ற நாக பாம்பு.
குவளை ஒன்றுள் குச்சியால் தூக்கி உள்ளே விட்டு, மூடி வைத்து மறுநாள் தொலைவில் வயல் வெளிக்குள் ஓட விட்டேன்.

15.05.2015
மனநிலைச் செம்மையற்ற மாது ஒருவரின் கண்ணீர் முறைப்பாடு.
குற்றம் எதுவும் இழைக்காத அப்பாவியை, மாடு திருடினார் எனச் சாவகச்சேரிக் காவல் நிலையத்துக்கு அழைத்தனர்.
அந்த அப்பாவிக்காகக் காவல் நிலையம் சென்று மீண்டேன்.
அடுத்த நாளே (15.5) அந்த அப்பாவியைக் காவலரிடமிருந்து மீட்டேன்

.26.05.2015 காலை 0900 மணி
கொழும்பு பம்பலப்பிட்டி, இந்து சமய விவகாரத் திணைக்களம்.
இயக்குநர் திரு. உமாமகேசுவரனைச் சந்தித்தேன்.
திருக்கோணமலை மாவட்டம் வடஎல்லையில் குச்சவெளி வட்ட ஆட்சியராக முன்பு பணி புரிந்தவர் திரு. உமாமகேசுவரன்.
குச்சவெளி வட்டத்தின் வட எல்லைச் சிற்றூர் தென்னன்மரபடி.
திருக்கோணமலை மாவட்டத்தின் உச்சியூர் அதுவே.
450 குடும்பங்கள், அனைத்தும் சைவத் தமிழ்க் குடும்பங்கள்.
கிழக்கே கொக்கிளாய்க் கடனீரேரி.
மேற்கே வளமான வேளாண் விளை நிலங்களை ஊடறுக்கும் காட்டு யானைப் புதர்வனம். சுற்றிவர அண்மையில் அரசால் குடியேற்றிய, சிங்கபுரம், சனகபுரம் எனச் சிங்களக் குடியிருப்புகள்.
30 ஆண்டு காலப் போர்.
தென்னன் மரபடி முற்றாக அழிந்தது.
சைவத் தமிழ் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் புலம் பெயர்ந்தனர். சிலர் திருக்கோணமலை நகருக்குக் குடிபெயர்ந்தனர்.
01 வெள்ளி, 02.05.2015 சனி, 10.05.2015 ஞாயிறு ஆகிய மூன்று நாள்களும் தென்னன்மரபடிக்குச் சென்றுவந்தேன். அங்கு வாழும் மீள்குடியேறிய 50 சைவத் தமிழ்க் குடும்பங்களோடு உறவாடி வந்தேன். ஊர்த் தலைவர்களோடு உட்கார்ந்து பேசி ஊக்குவித்தேன்.
தென்னன்மரபடி இந்து இளைஞர் மன்றத்தாருடன் உரையாடி, உறவாடி, உணர்வூட்டி, ஊக்குவித்து, உற்சாகித்து மகிழ்ந்தேன்.
1970களில் நான் அடிக்கடி போய் உறவாடி வந்த சைவத் தமிழ்ச் சிற்றூர் தென்னன்மரபடி. அங்கு இந்து இளைஞர் மன்றம் ஒன்றையும் அமைக்க உதவினேன்.
26.05.2015 காலை 0900 மணிக்குத் திரு உமாமகேசுவரனைச் சந்தித்துப் பேசியபொழுது, தென்னன்மரபடிக்கு முழுமையாக 450 சைவத் தமிழ்க் குடும்பங்களின் மீள்குடியேற்றம், திருக்கோயில் திருப்பணி, வீட்டுத் திட்டம் என்பன தலைநின்ற பேசுபொருளானது.
இந்த ஆண்டு ஒரு தொகை, அடுத்த ஆண்டு மேலும் ஒரு தொகை கோயில் திருப்பணிக்குக் கொடுத்து, திருப்பணியை முடிக்க உதவுவோம், அறங்காவலர் தலைவர் திரு. தம்பியையாவிடம் பேசி வருகிறோம் என்றார் திரு. உமாமகேசுவரன்.
கிழக்கு மாகாணத்துக்கு இந்திய அரசு வழங்கும் வீடமைப்புத் திட்டத்தை நீடிக்க முயல்கிறோம். திருக்கோணமலை மாவட்டத்தில் முன்னுரிமை நிலையில் தென்னன்மரபடியும் சம்பூரும் உள்ளன என்றார் திரு. உமாமகேசுவரன். கல்வீட்டில் வளமாக வாழ்ந்தவர்கள் கடந்த 4 ஆண்டுகளாகத் தகரக் கொட்டகை வெம்மைக்குள் வெந்து நொந்து வாழும் வலியைத் திரு. உமாமகேசுவரனிடம் சொன்னேன்.
திருக்கோயில் திருப்பணிக்கு உதவுமாறு உலகெங்கும் பரந்து வாழும் சைவத் தமிழ் அடியார்களை அழைக்கிறேன். திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு. தம்பியையா 0094 77 432 0515, திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவைச் செயலாளர் திரு. விசயசுந்தரம் 0094 77 363 0624 ஆகியோரை நன்கொடையாளர் தொடர்பு கொள்வார்களாக.

31.05.2015 சென்னை, தியாகராய நகர், தருமபுரம் ஆதீனம், சமயப் பிரச்சார நிலையம். காலை 0900 மணி.
தாய்ச் சமயமாகிய சைவ சமயத்துக்குப் பத்து அடியவர்கள் மீள்கிறார்கள். வருக என்று அழைத்தவர் இந்து மக்கள் கட்சியின் திரு. கோவிந்தராசன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்க அபிராமி அந்தாதி நூலின் படிகளுடன் சென்றேன்.
2000ஆம் ஆண்டில் கோயம்புத்தூரின் சைவச் சிற்றூராகிய குள்ளம்பாளையத்தில் மதமாற்ற முயன்ற பாதிரிமாரை விரட்டிய மக்களுக்கு வீடு வீடாகத் தம்பிரான் சுவாமிகளுடன் சென்றேன். திரு. அருச்சுனர் சம்பத்தும் கட்சியினரும் வந்திருந்தனர். திருநீறு கொடுத்தோம். நான் பதிப்பித்த திருவாசகம் நூலின் ஓவ்வாரு படியை ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்தேன். இந்த நிகழ்ச்சியை நினைவூட்டி என்னைச் சென்னை நிகழ்ச்சிக்கு அழைத்தார் கட்சித் தலைவர் திரு. அருச்சுனர் சம்பத்தர்.
31.5.2015 காலையில் தருமபுரம் ஆதீனம் போனேன். காவலர் நீக்கமற நிறைந்திருந்தனர். தாய்ச் சமய்த்துக்கு மீள்வதற்காக நிலையத்துள் வர முயன்றவர்களைத் தடுத்தனர்.
எனினும் சோர்வடையா இந்து மக்கள் கட்சியினர், அடுத்த நிகழ்ச்சியான தமிழகச் சமுதாயத் தலைவர்கள் மாநாட்டுக்காக ஊர்வலமாகப் பக்கதுத் தெருவில் உள்ள தேவர் மண்டபத்துக்குச் செல்ல முயன்றனர். ஊர்வலத்தையும் காவல்துறையினர் தடுத்தனர்.
பின்னர் சிறு சிறு குழுக்களாகவும் வண்டிகளிலும் மண்டபத்துக்குச் சென்றனர்.

31.05.2015
பன்னிரு திருமுறையின் 18,268 பாடல்களும் இப்பொழுது 22 மொழியாளர்களால் அவரவர் வரிவடிவங்களிலேயே கிடைப்பதற்குக் கணிணி மென்பொருளைச் செம்மையாக்கியவர் என் மதிப்புக்குரிய வினோத்ராசன்.
அதற்காக அவர் என்னுடன் வந்து மொழியியலாளரைச் சந்தித்த நாள்களை மகிழ்வுடன் நினைவு கூருகிறேன். சென்னைப் பல்கலைக்கழக அரங்கில் நடந்த விழாவில் அன்னாரை அழைத்துப் பாராட்டும் பேறு எனக்கு.
அவரைப் பற்றிய விவரங்கள் இணைப்பில்

31.05.2015
யாழ்ப்பாண தமிழர்களுக்கு புத்தகங்கள் அளியுங்கள்!
யாழ்ப்பாணம் இணுவில் நூலகத்துக்கு புத்தகங்கள் சேகரிக்கும் பணியை செய்து வருகிறார் ஈழத்து கல்வியாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தம்.
தமிழக அரசு 574 தமிழ் நூல்களை வழங்கியுள்ளது. மற்றும் பலரும் நூல்களை அளித்துவருகிறார்கள்.
அப்படி நூல்கள் அளிக்க விரும்புவோர் சென்னை காந்தளகம் பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்:
எண்: 0091 44 28414505
அல்லது மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களை தொடர்புகொள்ளுங்கள்


31.05.2015 மாலை 1830 மணி, சென்னை நாரத கான சபை.
ரூ. 2000 தொடக்கம் ரூ. 300 வரை அரங்குள் நுழைவுக் கட்டணம். என்னையும் ஒரு பொருட்டாகக் கருதிய என் இனிய நண்பர்கள் திருமதி ரோசா கண்ணன், திருமதி பிரியா முரளி, திரு. சீறீகாந்தர், அவர் துணைவியார் அசுவதி நால்வரும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
சித்திரா மாதவனின் ஓராண்டு வரலாற்று ஆராய்ச்சி. இராச்குமார் பாரதியின் 25 மணி நேர இசைத் தொகுப்பு. 120 மணி நேர இசைப் பதிவு. 120 மணி நேர இசைக் கலவை. சென்னையில் வெயில் கொடுமையில் இடைவிடா நாட்டியப் பயிற்சி.
அரங்கனின் 48 ஆண்டு கால மறைவு வாழ்க்கை. நாட்டிய நாடகமாக, பரதக் கலையின் துல்லிய நுணுக்க அசைவுகளாகத் தந்தனர் 32 கலைஞர்கள் மேடையில். 20 கலைஞர்கள் மேடைக்குப் பின்னே. மேனாள் தேர்தல் ஆணையர் திரு. கோபாலசுவாமி உள்ளிட்ட சென்னையின் புகழ்பூத்தோருடன் 1000த்துக்கும் கூடுதலான சுவைஞர்கள் அரங்கில். அவர்களுள் நானும் ஒருவனாக.
692 ஆண்டுகளுக்கு முன்னர். இதே நாள். காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையே திருவரங்கத்துக்குத் திருவரங்கன் மீண்ட நாள். வைகாசி 17. அதே நாளில் இன்று சென்னை நாரத கான சபை நிகழ்வு.
A 692 year old history, one whole year of research and background work, a highly sensitive topic, 25 hours of composing music, 120 hours of recording and another 120 hours of mixing and mastering , and 29 dancers sweating it out in the Chennai kathiri veyil at the gruelling practice sessions unfolds on the stage this evening at the Narada Gana Sabha..ARANGANIN PATHAYIL---Recreating that long, arduous and anxious journey of Lord Ranganatha.... at Narada Gnana Sabha31.05.2015 ஞாயிறு பிற்பகல் 1430 மணி.

31.05.2015
சென்னை எழும்பூர் எனதில்லம்.
புதிய தலைமுறைத் தொலைக்காட்சி அன்பர்
மேனாள் இந்தியா டுடே உதவி ஆசிரியர் 
மகாலிங்கம் பென்னுசாமி வந்திருந்தார்.
கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில்
நான்கு தமிழ்த் தேசிய உணர்வாளர் வந்திருந்தனர்.
கலாபூசணம் ஆறுமுகம் தங்கவேலாயுதம்
ஒவியர் புகழேந்தி
மேலும் இருவர்.
பச்சி சுட்டுக் கொடுத்தேன்.
கொக்கோ பாலுடன் கொடுத்தேன்.
ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ
அணிபூண் அணிந்த யானை யியல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுஅது பொய்யா காதே
அருந்த ஏமாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்கவன் தாளே.
ஔவையார் அதியமானைப் பற்றிச் சொன்ன வரிகள்
கவிஞர் காசி ஆனந்தனுக்கும் எனக்கும் பொருந்தும்.
1960 ஆனியில் பச்சையப்பன் கல்லூரி வகுப்பறையில்
ஒரே வகுப்பில் நானும் கவிஞர் காசி ஆனந்தனும்.
55 ஆண்டுகளாகத் தொடரும் 
இனிய அரிய எளிய பிசிறற்ற அன்புப் பிணைப்பு..

03.06.2015 வைகாசி மூலம்
திருஞானசம்பந்தர் நயத்தக்க நல்லவர்,
எனவே நாயனார்.
வடமொழி, பாளி, பிராகிருதம் கோலாச்சிய காலம்
சமணம் புத்தம் தத்துவங்கள் மறைந்து புறத்தோற்றத்தில் சமயங்களாகக் கோலோச்சிய காலம்.
வடமொழியே தமிழாகலாம் என வடமொழி ஒலிபெயர்ப்பிற்காகத் தமிழ் வரிவடிவங்களையும் சேர்த்த கிரந்த வரிவடிவங்கள் தோன்றிய காலம்.
சிவன் கோயில்களை மூடிய சமணர்கள் காலம்.
சிவனடியார்களைக் கல்லில் கட்டிக் கடலில் இட்ட காலம்.
புத்தத் துறவிகள் சிவனடியார்களைக் கத்தியால் குற்றிக் கொன்ற காலம்.
அக்காலத்தில் விடிவெள்ளியாக வழிகாட்டியாக,
வந்து பிறந்து வளர்ந்து மூடநம்பிக்கைகளைக் களைந்து
புறத்தோற்றச் சமயிகளை ஒறுத்து
கிரந்தமற்ற தமிழைப் பயன்படுத்தி,
தமிழே மொழியே தொடர்புக்கு இந்த மண் ஈந்தது.
சைவ சமயமே நம்பிக்கைக்கு இந்த மண் சமைத்தது
அரசர்கள் குடிமக்கள் யாவருக்குமாக
என்ற கொள்கையை முன் வைத்த
போரளி திருஞானசம்பந்தர்.
தமிழர் நயந்து போற்றிய போராளி.
அவர் துறவி அல்லர். சித்தர் அல்லர்.
சுவாமி அல்லர். நயத்தக்க நாகரீகர்,
எனவே நாயனார்.
அவரது பிறந்த நாள் குருபூசை நாளன்று.
தமிழ்ப் பயன்பாட்டு நாள்.
கலப்படமற்ற தமிழை வீட்டிலும் வெளியேயும்
தமிழர் பயன்படுத்தவேண்டும் என்பதை நினைவூட்டும் நாள்.
அசைவில் செழுந் தமிழ் வழக்கே உயர்ந்தது.
அத்தமிழ் வழக்கு அயல் வழக்குகளின் துறைவெல்லும்
அதை முன்னெடுக்கவே
திருஞானசம்பந்தர் பிறந்தார் என்பர் சேக்கிழார்.
குரு பூசை செய்து
கோயிலுக்குள் வழிபாட்டுக்குள்
முடக்கும் நாளல்ல
திருஞானசம்பந்தர் நினைவு நாள்.
அதுவே தமிழர் மீட்சித் திருநாள்.
அவர் அருளியன அனைத்தையும் படிக்கலாம்,
பொருள் காணலாம்,
இசையாகக் கேட்கலாம்.
பாடிய கோயில்களின் காணொளி பார்க்கலாம்.
மொழிபெயர்ப்புகளாகப் படிக்கலாம்.
பல்வேறு வரிவடிவங்களில் படிக்கலாம்.
கோயில் வரலாறு
திருஞானசம்பந்தர் வரலாறு
என யாவும் உங்கள் கைப்பேசியில் மடிகணிணியில்
சொடுக்குக
www.thevaaram.org

04 + 05.06.2015 வியாழன், வெள்ளிக்கிழமைகள்
சிதம்பரத்தில்.
அருள்மிகு சிவகாமி உடனுறை ஆடல்வல்லான் திருக்கோயில் திருக்குட நீராட்டுவிழாவுக்கு (1.5.2015) வரமுடியவில்லை. திருக்கோயிலில் வழிபட்டேன்.
நீங்க, மறவன்புலவு சச்சிதானந்தன் தானே
வாங்க, வாங்க என வரவேற்றவர்கள்
சிதம்பரத்திலுள்ள வரணி மடத்துச் செவ்வேள் இல்லத்தவர்.
திருமறைக்காட்டில் 3 குடும்பம், சிதம்பரத்தில் 3 குடும்பம்.
வரணிச் சொத்துகளைக் காக்கும் குடும்பங்கள். முனைவர் பட்டம் பெற்றுத் திருவாரூரில் பேராசிரியராகக் குமரேசமூர்த்தி திருமறைக்காட்டில் வாழ்கிறார். அருள்மிகு திருமறைக்காட்டம்மை உடனுறை திருமறைக்காடர் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் யாழ்ப்பாணம், வரணியைச் சேர்ந்தவர்கள்.
சிதம்பரத்தில் ஞானப்பிரகாசர் குளத்தைச் சுற்றி யாழ்ப்பாணத்தவருக்கு 32 மடங்கள் இருந்தனவாம். ஞானப்பழம் என்ற நூலில் முழு விவரங்களும் கிடைக்குமாம். திரு. செவ்வேள் (0091 99946 53639, 0091 4144 225736) என்னிடம் கூறினார். சிதம்பரம் செல்லும் வழிபடு பயணிகளுக்குத் தேவையானதைச் செய்கிறார்.பயணிப்போர் முன்கூட்டியே சொல்லலாம்.
இப்பொழுது அம் மடங்கள் பலவற்றின் சொத்துகள் வழக்குகளில் சிக்கிப் பாழடைந்து போயுள்ளன. வெள்ளிக்கிழமை மடம், அரச கட்டளை (கல்வியங்காடு) மடம் போன்ற சில அடுக்கு மாடிகளாகியுள.
ஆறுமுகநாவலர் அறநிலைக்கு மேற்குத் தேர் வீதியில் பாடசாலை, மாலைகட்டித் தெருவில் வீடுகள், ஞானப்பிரகாசர் வடக்கு வீதியில் சேக்கிழார் கோயில், சேக்கிழார் மணி மண்டபம், சென்னைத் தங்கசாலையில் அச்சகக் கட்டடமும் நாவலர் தங்கிய வீடும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குத் தென்கிழக்காககச் சிவபுரியில் 48 ஏக்கர் வயல்நிலம் இருந்தது விற்றுவிட்டார்கள்.
யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபைக்கு மாலைகட்டித் தெருவில் தங்கும் அறைகள் கொண்ட மடம், அருகே எரிபொருள் நிர்ப்பு நிலையக் காணி.
கீழச் சன்னதியில் மானிப்பாயைச் சேர்ந்த சோமேசுவரன், தன் சொந்தக் கட்டடத்தில் புத்தகக் கடை, நடனப் பள்ளி, யோகாப் பயிற்சி நிலையம் நடத்துகிறார்.

07.06.2015 ஞாயிறு மாலை 1700 மணி
சென்னை, மயிலாப்பூர், கற்பகாம்பாள் நகர்.
திருஞானசம்பந்தர் விழா.
சனியும் ஞாயிறும் காலை முதல் மாலை வரை.
32 பேச்சாளர்கள்.
விழா நிறைவுரை ஆற்றிய பேராசிரியர் ம வே பசுபதி அவர்களுக்குச் சிவச்செவ்வாடை போர்த்துமாறு என்னைப் பணித்தார்கள்.
தமிழ் ஞானசம்பந்தர் என அவர் ஆற்றிய உரையைக் கேட்கப் பேறுற்றேன்.
பேரா. முனைவர் ம வே பசுபதி அவர் தம்பியார் ம வே மகாதேவன் இருவரும் எனக்கு நெடு நாளைய அன்பர்கள்.
1989இல் திருப்பனந்தாள் காசி மட அதிபரின் மணி விழா மலரை அச்சிட்டுக் கொடுத்தேன். மலராசிரியர் பேரா. ம வே பசுபதி. திருப்பனந்தாள் தமிழ்க் கல்லூரி முதல்வர், தமிழ்த் துறைத் தலைவர். அக்காலம் தொடக்கம் அவரின் பேரன்புக்கு ஆளானேன்.
அதே கல்லூரியில் முதல்வராக இருந்தவர் பேரா வேங்கடராமையா. அன்னார் பெரும் பேராசிரியர், தமிழ்க் கடல். ம வே பசுபதி மற்றும் ம வே மகாதேவனின் அருமைத் தந்தையார்.
இன்று மாலை பேரா. ம வே பசுபதி அவர்களுக்குச் சிவச்செவ்வாடை போர்த்தும் பேறுற்றேன்.

10.06.2015 புதன்கிழமை 1430 மணி.
சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்துக்குத் தெற்கே.
தாய்லாந்துத் தூதர் அலுவலகம்.
தருமபுரம் ஆதீனம் தவத்திரு குருமகாசந்நிதானம் அவர்கள் மற்றும் காஞ்சித் திருமடத்தின் இளைய பட்டம் தவத்திரு விசயேந்திர சரசுவதி சங்கராச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் ஆணைக்கமைய,
தமிழ், கிரந்தம், தாய்லாந்து வரிவடிவங்களிலும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் திருவெம்பாவையின் 20 பாடல்களையும் தாய்லாந்து மன்னரின் அரசகுருவுக்கு அச்சிட்டு வழங்குதல் தொடர்பான பயனுள்ள சந்திப்பு.
காஞ்சித் திருமடத்தின் சார்பில் திரு. சுப்பிரமணியம், காந்தளகம் சசிரேகா பாலசுப்பிரமணியன், ஆகியோருடன் நானும் தாய்லாந்துத் தூதர் மற்றும் உதவித் தூதரைச் சந்தித்தோம்.

11.06.2015 வியாழக்கிழமை மாலை 1830 மணி
சென்னை தியாகராயநகர் திருமண மண்டபம்.
யாழ்ப்பாணத்து கென்சுமன் 1890களில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து, வெள்ளிநாக்கர் சீனிவாச சாத்திரியாரை இந்திய விடுதலைப் போருக்குத் தயாரித்துக் கொடுத்த கல்லூரி கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி.
அக்கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றவர் சிவபுரம் அப்பைய தீட்சிதர் சங்கரநாராயணன் அவர்கள்.
ஈரோடு தமிழன்பன் கவிதைகளை பாரதிதாசன் கவிதைகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பவர்.
என் வேண்டுகோளை ஏற்று ஆங்கிலத்துக்கு இதுவரை மொழிபெயர்ப்பாகாமல் இருந்த 9ஆம் 11ஆம் திருமுறைகளை மொழிபெயர்த்துத் தந்தவர்.
திருமுறைப் பணிகளுக்காகத் தன் முதுகலை மாணவி திருமதி நித்தியா கணேசனைத் தந்தவர்.
அப்பேராசிரியரின் இல்லத் திருமணம்.

12.06.2015 வெள்ளிக்கிழமை காலை 0615 மணி
வானூர்தியில் கோவாவுக்குப் புறப்பட்டேன்.
0815 மணிக்குக் கோவா வந்து சேர்ந்தேன்.
சைவத் தமிழனான என் உணர்வின் பெட்டகம். 
சைவத் தமிழனான என் வரலாற்றின் வீரச் செறிவு.
சைவத் தமிழனான என் முன்னோருக்குக் காவலன்.
கட்டாய மதமாற்றத்தைக் கடுமையாக எதிர்த்த சைவத் தமிழீழ மாமன்னன் சங்கிலியன்.
இடி லிவரா தலைமையில்போர்த்துக்கேயப் படை.
சங்கிலிய மாமன்னன் தலைமையில் சைவத் தமிழ்ப் படை.
யாழ்ப்பாணத்து நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயிலடியில் போர்.
தஞ்சாவூர் நாயக்க மன்னன் அனுப்பிய தளபதி வருணகுலத்தானும் 5,000 படை வீரர்களும் காங்கேயன்துறையில் இறங்கும் நேரம்.
போர்த்துக்கேயருக்குக் கடல் வெளியில் சிம்ம சொப்பனமான மலையாளத்துக் குஞ்சலியின் கடற்படை ஊர்காவற்றுறைக்கு வந்து சேரும் நேரம்.
ஊர்காவற்றுறையிலிருந்து காக்கை வன்னியன் வருகிறான்.
எனக்குத் துணையாக வந்தானே என மகிழ்ந்த சங்கிலி மாமன்னனை,
உனக்குத் துணை நான் எனக் கட்டித் தழுவிக் கொண்டே போர்த்துக்கேயருக்குக் காட்டிக் கொடுகிக்கிறான் காக்கைவன்னியன்.
1619 சூன் 5ஆம் நாள் சங்கிலிய மாமன்னனைப் போர்த்துக்கேயத் தளபதி இடி லிவரா சிறைபிடித்தான்.
சங்கிலிய மாமன்னனையும் தளபதிகளையும் கோவாவுக்கு அனுப்பினான்.
சைவத் தமிழ் ஈழத்தின் சங்கிலிய மாமன்னனையும் தளபதிகளையும் தூக்கிலிட்ட கொங்கணத்தின் மேற்கேல்லையான கோவா.
கண்களைக் கசியவைக்கும் நினைவலைகள்.
நெஞ்சத்தை நோகடிக்கும் நினைவலைகள்.
இறங்கவே விருப்பின்றி வானூர்தியிலிருந்து இறங்குகின்றேன்.
ஈழத்தில் சைவத் தமிழை மீட்போம். சைவத் தமிழருக்கு வாழ்வளிப்போம், உங்களுக்குத் துணையாக உடன்நிற்போம் என்ற முனைப்புடன் கோவாவுக்கு என்னை அழைத்தவர்கள் இந்து மக்கள் விழிப்புணர்வுப் பீடம் Hindu Janajaguthi Samithi அமைப்பினர்.
140 கிறித்தவ நாடுகள். 53 இசுலாமிய நாடுகள், 5 புத்த நாடுகள், 1 யூத நாடு என மதங்களைப் போற்றும் பேணும் நாடுகள். இந்துக்களுக்கான ஒரே நாடான நேபாளமும் தூர்ந்த நிலையில் இமயத்திலிருந்து இந்துமாகடல் வரை இந்து நாடு அமைக்கத் துடிக்கும் விழிப்புணர்வாளர்களுக்கான அமைப்பு அழைத்து வந்தேன்.
இந்தியாவின் 19 மாநிலங்கள், நேபாளம், வங்காளதேசம் யாவற்றிலிருந்து இருந்து அறப் பேராளர்கள் அன்பு நோக்காளர்கள், இந்து அரசு மீட்பாளர்கள். 11.06 தொடக்கம் 17.06 வரை மாபெரும் மாநாடு. இப் பேராளர்களின் மாநாடு. ஈழத்தின் சைவத் தமிழர் சார்பில் நான்.
13.06 இந்தியா முழுவதிலும் இருந்து வந்த அச்சு மற்றும் மின் ஊடகச் செய்தியாளருக்கு ஈழச் சைவத் தமிழர் அவலம் விளக்குகிறேன்.
14.06 இந்தியாவின் 19 மாநிலங்கள், நேபாளம், வங்காளதேசம் யாவற்றிலிருந்து இருந்து வந்திருக்கும் மாநாட்டுப் பேராளர்களுக்கு ஈழச் சைவத் தமிழர் அவலத்தை விளக்கி உரையாற்றுகிறேன்.
18.06 மாலை சென்னைக்குப் புறப்படுவேன்.

13.06.2015 சனிக்கிழமை, பிற்பகல் 1300 மணி, கோவா, பொண்டா
அருள்மிகு இராமாநாதி தேவத்தானம்.
ஈழத்துச் சைவத் தமிழரின் அவலங்கள்.
இந்தியா முழுவதிலும் இருந்து வந்த அச்சு மற்றும் மின் ஊடகங்களுக்கு விளக்கமளித்தேன்.
மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் திரு. சிண்டே நெறியாள்கையில்.

16.06.2016 காலை 1030 மணி.
கோவா, பஞ்சிம், சுவடிகள் காப்பகம்.
என் மொழியை நேசித்தவன்.
என் சமயத்தைக் காத்தவன்.
என் நாட்டு இறைமையின் சின்னம்.
என் மக்கள் சைவத் தமிழராக வாழத் துணைநின்றவன்.
தன் நலம் பேணான். தன் உயிர் பேணான். என் மொழிக்காக, மக்களுக்காக, நிலத்துக்காகத் தன் இன்னுயிரை ஈந்தவன். தன் குடும்பத்தவர் உயிர்களையும் சேர்த்தே ஈந்தவன்.
சங்கிலிய மாமன்னன்.
கோவாவில் தூக்கிலிட்டனர். குடும்பத்தாரும் அங்கே இறந்தனர்.
எங்கே தூக்கிலிட்டனர்?
எங்கே புதைத்தனர்.
என் தேடலின் தொடக்கமாக, கோவா மாநிலச் சுவடிகள் காப்பகத்தின் இயக்குநர் புளொசொம் மெந்திரா, ஆவணக் காப்பகர் சேய்க்கு முகமது இருவரையும் சந்தித்தேன்.
நாள்முழுவதும் என் தேடல் தொடர்ந்தது.
அடுத்தடுத்த பதிவுகளைப் பார்க்க.
I went to the Goan state archives, met the Director Ms. Blossom Mendira and documents in charge, Mr. Sheik Mohamed. I do not know Portuguese language. That was a major impediment. A publication of the list of documents in the archives was made available (Roteiro dos Arquivos da India Portuguesa by Panduronga S S Pissurlencar, 1955). I bought two copies.
I went to the library. Titles on Ceylon were mostly by authors from Sri Lanka. An 1836 publication (Ceylon, Pearl of the East by Harry Williams) related the conquest of Jaffna by Portuguese in 1560.

21.06.2015
18.06.2015 காலை 1100 மணி
கோவா, பொண்டா, இந்து விழிப்புணர்வு மாநாட்டு அமைப்பாளர்களுடனும் அனைத்திந்தியத் தொலைக்காட்சிச் செய்தியாளருடனும் பேசிக்கொண்டு இருந்தேன்.
கோவாவில் சைவத் தமிழனான சங்கிலி மாமன்னனைத் தூக்கிலிட்ட செய்தியைப் பேசிக்கொண்டிருந்தோம். பழைய கோவாவில் மண்டோவி நதிக்கரையில் நான் கண்ட காட்சிகைளை விவரித்துக் கொண்டிருந்தேன். சென்று செய்தியாக்கலாமா எனக் கேட்டவர் ANI தொலைக்காட்சியார்.
செய்தியாக்கலாமே என நான் சொன்னேன். அரங்கு, ஒளி, கருவி என அடுக்கினர். சில மணித்துளிகளில் நான் செய்தி சொல்லத் தொடங்கினேன்.
என் உள்ளத்தில் மேலோங்கி நின்றவர் கொழும்பு மேனாள் அமைச்சர், இராணியின் வழக்குரைஞர் மு. திருச்செல்வம். யாழ்ப்பாண வைபவ மாலை போன்ற வரலாற்று நூல்களில் மாமன்னன் சங்கிலியனின் வரலாறுகளைக் குழப்பி வைத்திருந்தனர். சங்கிலியன் நாடகங்கள் என் கண்முன் வருவதுண்டு. அவை எனக்குத் தெரிந்த செய்திகள்.
ஆனாலும் மு. திருச்செல்வம் சங்கிலிய மாமன்னனின் வரலாற்றின் சட்ட மற்றும் அரசியல் கூறுகளை என்னிடம் சொன்னபொழுது முன்பிருந்த என் குழப்பங்கள் பெருமளவு தீர்ந்தன.
1976இல் Trial at Bar வழக்கில் ஈழத்தமிழர் இறைமை பற்றிய அவரது வாதங்களில் மாமன்னன் சங்கிலியன் சிறப்பிடம் பெற்றிருந்தான். பேரா. முனைவர் பத்மநாதனின் துணையுடன் அவர் தொகுத்த வாதங்களைத் தமிழாக்கும் பணியில் ஈடுபட்டேன்.
"தம்பி, பேரா. முனைவர் பத்மநாதனிடம் மாமன்னன் சங்கிலியன் வரலாற்றைக் கேட்டுப் படித்தபின் தமிழாக்குங்கள்" என என்னிடம் சொன்னார். எனக்குக் கற்பிக்குமாறு பேரா. முனைவர் பத்மநாதனிடமும் கேட்டிருந்தார்.
During 1977, I was initiated by Prof. Dr. Pathmanathan’s (now Chancellor, University of Jaffna) narrations into the Kingdom of Jaffna.
Formerly Minister of Local Government (1965-1968), Mr. M. Tiruchelvam Q. C., had asked Prof. Dr. Pathmanathan to educate me on the fall of the Kingdom of Jaffna and the transfer of Tamil sovereignty to the Portuguese, to facilitate the Tamil translation of his arguments on Tamil sovereignty at the Trial at Bar (1976).
Sitting at the dining table of my newly built house at Edmonton Road, Kiriloppone, Colombo, I was tape-recording his lecture series. Prof. Dr. Pathmanathan was amazed. He told me that it was the first time someone was recording his lectures.
Even though it was a series of lectures, I was experiencing a movie. Scene after scene, event after event (De Livera crossing the lagoon at Poonakary, war at Nallur, departure from Kayts), characters after characters (Kunj Ali, Ragunatha Nayakar, Varunakulathathan, De Livera, Kaakkai Vanniayan) with King Sankili as the hero or the main player, I visualized every scene. These scenes, events and characters got carved into my read only memory to this day.
I was in tears, when Prof. Dr. Pathmanathan told me about the sordid finale, when King Sankili was caught alive, transferred from Nallur to Kayts with his family and retinue, to be taken to Goa by Captain De Livera. Sankili was put to the gallows in Goa, Prof. Dr. Pathmanathan said.

14.06.2016
14.06.2015 கோவா இந்து விழிப்புணர்வு மாநாடு.
பாராட்டும் சான்றிதழ்களும்.

17.06.2015
17.06.2015 செவ்வாய்க்கிழமை மாலை
கோவா, பொண்டா, இந்து விழிப்புணர்வு மாநாட்டு நிறைவு விழா.
நேபாளத்து அரசரின் குரு.
வழிகாட்டி மருத்துவர் பின்னலே
இவர்கள் மேடையில்.

மேடைக்கு என்னை அழைத்தார்கள்.
உருத்திராக்கம் அணிவித்தார் அரச குரு.
வெற்றி வெற்றி என்ற முழக்கம்.
மராத்திய வீரன் சிவாசியைப் பாராட்டி முழக்கம்.
மாநாடு நிறைவடைந்தது.

30.06.2015
21.06.2015 மாலை சென்னை ஆயிரம் விளக்கு உமாபதி அரங்கம்
சிலம்பொலி செல்லப்பனார்
(1986 தொடக்கம் என் மதிப்புக்கும் அன்புக்கும் உரியவர்,
முதலமைச்சர்களான,
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்சியார் 
ஆகியோருடன் தமிழ் வளர்ச்சித்துறையில் பணிபுரிந்தவர்)
கவிஞர் வேழவேந்தன்
(1959 தொடக்கம் பச்சையப்பன் கல்லூரியில் எனக்கு நண்பர்,
பின்னர் அறிஞர் அண்ணா அமைச்சரவையில் உறுப்பினர்)
எழுத்தாளர் கயல் தினகரன்
(அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நெடுநாள் தொண்டர். தமிழ்நாடு நூலக ஆணையத்தின் ஆலோசனைக் குழுத் தலைவராக இருந்தவர், எனக்கு நல்ல அன்பர்)
27.06.2015 எழும்பூர் எனதில்லம்
கவிஞர் வ. ஐ. சு. செயபாலன் + அவரின் அருமைத் திருமகனார்.
(1977 தொடக்கம் கவிஞர் என் அன்பர்.
மாணவராக அவர் யாழ்ப்பாணம் பல்கலையில்,
அங்கே நான் விரிவுரையாளராக.
என்னை நெடுந்தீவு அழைத்ததுச் சென்று உரையாற்ற வைத்தவர்.
அவரின் ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் கவிதை நூலைச் சென்னையில் பதிப்பித்தேன் 1987,
2011இல் ஆடுகளம் திரைப்படத்தில் நடித்து, அந்த ஆண்டுக்கான அனைத்திந்திய சிறந்த நடிகருக்கான சான்றிதழ் விருது பெற்றவர்)
27.06.2015 மாலை சென்னை தியாகராய நகர் ஓபுல் ரெட்டி அரங்கம்
கல்லாறு சதீசர் எனும் அருள்ராசா நாகேசுவரன்.
சுவிற்சர்லாந்தில் கவிஞர், எழுத்தாளர், தொழில் முனைவோர்.
நெடுநாள் முகநூல் அன்பர்.
நேரில் சந்தித்து மகிழ்ந்தமை அன்று.
21.06, 27.06 இரு நிகழ்வுகளிலும்
மேலும் பல தமிழறிஞர்களோடு இருந்தேன்.
மேலும் பல தமிழ்க் கவிஞர்களோடு இருந்தேன்.
மேலும் பல தமிழ் ஆர்வலர்களோடு இருந்தேன்.

02.07.2015
01.07.2015 கடலூர், சிதம்பரம்
02.07.2015 சிதம்பரம்
அதிகைக் கெடில வீரட்டானத்து
உறை அம்மானே என்றார் அப்பர்.
கெடிலம் ஆற்றங்கரையில்
திரு அதிகை வீரட்டானம்.
கெடிலம் ஆறு கடலில் கலக்கும் நகரம்
திருப்பாதிரிப்புலியூர்.இன்றைய கடலூர்.
வெள்ளாற்றைக் கடந்தால் சிதம்பரம்

05.07.2015
4, 5.07.2015 சென்னை மயிலாப்பூர் கற்பாம்பாள் மண்டபம்.
திருவாசக விழா 0800 மணி தொடக்கம் 1900 மணி வரை.
பதிப்பாளனுக்குக் கிடைக்கும் மகிழச்சி, வாசகரின் மகிழ்ச்சியே.
என் தந்தையார் 1992இல் வழங்கிய அறிமுக உரையுடன் சென்னை காந்தளகம் பதிப்பித்த 256 பக்கத் திருவாசகம் கையடக்கப் பதிப்புக்குத் திருவாசக விழாவில் வாசகர் காட்டிய பேராதரவு.
காந்தளகம் விற்பனையாளர் திரு. சசிகுமார் வாசகர்களுடன் திணறியதை நான் நேரில் பார்த்தேன். ஒரு சில மணி நேரங்களில் ஓராயிரம் படிகள் வரை விற்றுத் தீர்ந்தன.மகிழ்ந்தவர் கையடக்கத் திருவாசகத்தின் 2015ஆம் ஆண்டுப் பதிப்பைத் தயாரித்த காந்தளகம் மேலாளர் திருமதி சசிரேகா.

08.07.2015 மாலை 1830 மணி
சென்னை, மயிலாப்பூர்,
மிருதங்க மாமேதை உமையாள்புரம் சிவராமன் அவர்கள் இல்லம்.
யுவகலாபாரதி நடனமாணி பிரியா முரளி, கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன், திருமதி உமையாள்புரத்தார் எனக் கலகலப்பாக உமையாள்புரத்தாருடன் ஒன்றரை மணி நேரம் போனதே எனக்குத் தெரியவில்லை. வாஞ்சையோடு உரையாடினார்.
அன்னார் மாபெரும் கலைஞர்.
80 வயதானாலும் 18 வயான மனோநிலையும் உடல்வாகும் கொண்டிருந்தார். தன் முன்னோருட் பலர் 92 வயது வரை உற்சாகமான மனோநிலையும் நலம் நிறைந்து ஓம்பிய உடல்வாகுடனும் வாழ்ந்ததை உமையாள்புரத்தார் கூறினார்.
காட்சி:
நகைச்சுவைக் காட்சியைப் பார்க்கிறோம். வயிறு குலுங்கச் சிரிக்கிறோம். சோகக் காட்சிகளைப் பார்க்கிறோம், அழுது கண்ணீர் வடிக்கிறோம்.
கேள்வி:
பூபாளம் கேட்கிறோம் உற்சாகமாக விழிக்கிறோம். நீலாம்பரி கேட்கிறோம், தூக்கத்தில் அயர்கிறோம்.
முகர்ச்சி:
மல்லிகை மணக்கும் அந்தப் பொழுது, அனைத்தையும் மறந்து மணத்தோடு ஒன்றிய பொழுது.
உண்சுவை:
தேனை நாக்கில் தடவிய அந்த நேரம், அதன் சுவை தவிர வேறெதுவும் தெரிவதில்லை.
தொடுதல்:
மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம். (குறள் 65). கையில் எடுத்து, மடியில் வைத்துத் தோளில் சுமந்து மெய்யின் சுவையை மழலை தரும் பொழுதில் எம்மை மறக்கிறோம்.
காட்சி, கேள்வி, முகர்ச்சி, உண்சுவை, தொடுசுவை என ஐந்து உள்வாங்கல்கள். தனித்தனியாக, கூட்டாக உள்வாங்கி, உணர்ந்து, உட்புகுந்து ஆழ்மனதில் ஒன்றிய ஒடுங்குகையில் பேரின்பப் பெருவெள்ளம்.
காமம் ஓடும், வெறுப்பு ஒதுங்கும், பேராசை புறமாகும். மோகம் மறைந்துவிடும். ஆணவம் அடங்கும் பொறாமை பதுங்கும். மனத்தைத் திசை திருப்பும் இந்த ஆறு குணங்களும் அடங்கி ஒடுங்கிக் கைகட்டி வாய்பொத்தி, மனத்தின் வழிப்படும். மனம் வழிபடும். பேரின்பம் பெருகும்.
பற்றுக் குறையும். மயக்கமே மயங்கும். தூய்மை ஆட்கொள்ளும். மனத்துக் கண் மாசு இல்லாப் பேரின்பம்.
அடுத்த நிலையில் மனம் ஓயும். முனைப்பு முடங்கும். அறிவு அடங்கும். உணர்வுசார் சிந்தை மேலெழும். சிந்தையில் பேரின்பம் நிறையும்.
பொறி கலங்கி, புலன் ஒடுங்கி, ஆறுபகை நீங்கி, மூன்று குணங்களுள் மென்மையும் தூய்மையும் பெருகி, மனம் ஓய, முனைப்பு அடங்க, தன்னை மறந்து, சிந்தையை எழுப்பித் தலைப்படும் நிலையைத் தருவதே கலை.
மாறிலா மகிழ்ச்சி தரத் தலைப்படும் நிலைக்குச் செல்வதற்காகவே இந்தப் பிறவி. மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் (திருமுறை 12000253) என்றார்சேக்கிழார்.
ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணம் ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார். (திருமுறை 12000106)
சேக்கிழாரின் வரிகள் கூறியவாறு நம்மை ஆட்கொண்டு பேரின்பப் பெருவெளிக்கு அழைத்துச் செல்பவரே படைப்பாற்றல் மிக்க கலைஞர்.
அத்தகைய மாபெரும் கலைஞர் உமையாள்புரத்தார். 18.12.2014 மாலை சென்னை, தியாகராய நகரில் சிந்தையில் நிறைந்து, உள்ளத்தில் புகுந்து, உயிரோடு கலந்து அவ்வுயிரே பேசுவதாக, ஈந்த, 'ஆத்மா பேசுகிறது' என்ற நிகழ்ச்சியில் என் பொறிகள் கலங்கின. புலன்கள் ஒடுங்கின. அறுபகை அகன்றன. மனம் மென்மையாகித் தூய்மையானது. ஒன்றினேன், ஒடுங்கினேன், சிந்தைக்குள் பேரின்பப் பெருவெள்ளம் பெருக்கி மாறிலா மகிழச்சியில் திளைத்தேன்.
என் உணர்வுப் பெருக்கை எழுத்தாக்கி, படங்கள் சேர்த்து, ஓவியக் கலைஞர் நானாவிடம் கொடுத்து அழகிய வண்ணங்களில் வடிவமைத்து மடிப்பாக்கி அச்சிட்டு உமையாள்புரத்தாரிடம் நேரில் கொடுக்க 08.07.2015 மாலை யுவகலாபாரதி நடனமாணி பிரியா முரளி, கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன் இருவருடனும் அவரில்லம் சென்றேன்

11.07.2015
11.07.2015 சனிக்கிழமை நண்பகல்
1. சென்னை எழும்பூர் எனதில்லம்
2. சென்னை அண்ணா சாலை மதுரா உணவகம்
3. சென்னை அண்ணா சாலை காந்தளகம்
4. சென்னை அண்ணா சாலை இந்து நாளிதழ் அலுவலகம்.
2, 3, 4இல் சுட்டிய இடங்கள் யாவும் நடந்து செல்லும் தொலைவில்.
ஆத்திரேலியா சிட்னி எழுத்தாளர், உரைவீச்சார், ஊடகத்தார், வழக்குரைஞர், கொழும்பில், சென்னையில், சிட்னியில் அவர் செல்வாக்கு அளப்பரிது. திருமதி சந்திரிகா சுப்பிரமணியன்.
திருச்சியில் சாரதா புடைவைக்கடைக்கு விடிய விடியத் திருச்சிச் சுவர்களில் விளம்பரம் வரைந்து ஓவியத்தைத் தொழிலாக்கி, இந்தியா டுடே இதழின் கலை இயக்குநராக உயர்ந்த செம்மல் ஓவியர் நாணா. அவர் இயற்பெயர் நாராயணசாமி.
யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் பயின்ற காலம் தொடக்கம் நாவல்கள் சிறுகதைகள், கட்டுரைகள் எனத் தமிழ் எழுத்துலகில் தடம் பதித்தவர், உரும்பராயில் பிறந்து, கொழும்பில் அரசுப் பணியுடன் விசயலட்சுமி புத்தகசாலை, குமரன் அச்சகம் எனத் தொழில் நடத்திவர். சென்னைக்கு வந்து (இன்றைய பாபநாசம் திரைப்படம் புகழ்) கமலகாசனைத் திரைத்துறையில் கதாநாயகனாக்கிய பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த கன்னடப் படமான கோகிலாவின் தயாரிப்பாளர். சென்னையில் குமரன் பதிப்பகம் நிறுவியவர். இந்து நாளிதழ் ஆசிரியர் இராம் இவரது நண்பர், ஆதலால் இந்து நாளிதழின் இலங்கைச் செய்தி ஆலோசகர், அங்கேயே பகல் பொழுது முழுவதும் தன் 86 வயதிலும் பணிபுரிபவர். திரு. செ. கணேசலிங்கம்.
இம் மூவருடன் கலகலப்பான மூன்று மணி நேரங்கள்.


12.07.2015 
ஞாயிற்றுக்கிழமை மாலை 1800 மணி
சென்னை, கோடம்பாக்கம்,
பொன்மணி வைரமுத்து திருமண மண்டபம்.
1959ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரிப் பல்கலைப் புகுமுக வகுப்பு மாணவனாகச் சேர்ந்தேன். தமிழ் கட்டாய பாடம், சிறப்புத் தமிழ் விருப்ப பாடம்.
தமிழ்த் துறையின் தலைவர் பேரா. முனைவர் மு. வரதராசனார்.
மாணவ ஆசிரியராய் (Tutor or Demonstrator) திரு. முருகேசன், திரு. சி பாலசுப்பிரமணியன், திரு. பரமசிவம்.
மாணவர் ஐயம் போக்கல், விடுப்புப் பேராசிரியர்களுக்காக விரிவுரை இடைவெளி நிரப்பல், தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி என்பன அவர்களதாம்.பேராசிரியர்களிடமோ, விரிவுரையாளர்களிடமோ கேட்காததை, இவர்களிடம் மாணவராகிய நாம் வகுப்பறைக்கு அப்பால் மனம் திறந்து ஐயம் தீர்ப்போம்.
மாணவ ஆசிரியராய்ச் (Tutor or Demonstrator) சேர்வோர் சில ஆண்டுகளின் பின்னர் விரிவுரையாளராய், பேராசிரியராய்ப் பதவி உயர்வு பெறுவர்.
கவிப்பேரரசு வைரமுத்து பிறந்தநாள் விழா மேடையில் சிரிப்பு மறா முகம், தன்னடக்கத்தால் தலை வளைவாக இருந்த இளைஞரைப் பார்த்ததும் பேரா. முருகேசன் என் நினைவுக்கு வந்தார். அதே முகம், அதே வளைவு, அதே உயரம், மேனி நிறம் கொஞ்சம் வேறு. பேரா. முருகேசனைவிட வெளுத்த மேனி.
பேரா. முருகேசனுக்கு என்மீது அளவற்ற அன்பு. அவர் வாழ்ந்த செல்லம்மாள் தெருவுக்கு நான் போவேன், அவரில்லம் செல்வேன். மேனாட்டுக் கோட்டுசூட்டுடன் கல்லூரி வரும் அவர் வேட்டியும் பனியனும் அணிந்து வீட்டிலிருப்பார். சைவ உணவுக்காரர், பண்பின் உச்சமான குடும்பம். மெலிந்து பேசுவார். இலக்கண, இலக்கியப் பரப்பில் ஆழங்காற் பட்டவர்.
பேரா. முருகேசன் சாயலில் மேடையில் இருந்த இளைஞனைப் பார்த்ததும் கவிப்பபேரரசுவின் மகனாக இருக்குமோ? என்ற வினா என் உள்ளத்தில். பேரா. முருகேசனின் மகள் பொன்மணியைக் கவிப்பேரரசு காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர். இந்தத் தொடர்பை அறிந்திருந்தேன்.
முன் வரிசையில் எனக்குப் பக்கத்தில் இருந்த பெண்மணியிடம் கேட்டேன். ஆமா ஐயா, அவர் என் கணவர், கவிப்பேரரசுவின் மகன் மதன் கார்க்கி என்றார் அந்தப் பெண்மணி.
பேரா. முருகேசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலமானதைச் சொன்னார். நான் மட்டுன்று, பேரா. முருகேசனைத் தெரிந்தவர் யாவரும் அதே முகச் சாயல் மற்றும் உடல் வாகு தன் கணவரிடம் இருப்பதைச் சொல்வார்கள் என்றார்.

12.07.2015 
ஞாயிற்றுக்கிழமை மாலை 1800 மணி
சென்னை, கோடம்பாக்கம்,
பொன்மணி வைரமுத்து திருமண மண்டபம்.
தெளிந்த நீரோடையாய்த் தெம்மாங்குத் தமிழ்
தென்றலாய்த் தழுவிய மென்மைச் சொற்கள்
கட்டிறுக்க உச்சரிப்பு, கணீரென்ற குரல்வளம்
எட்டுநாடுகள் கவிப்பேரரசுவுடன் சென்று வந்த
கல்லாறு சதீசாரின் உரையில் மயங்கினேன்.
என் உடன்பிறப்பு எனக் கவிப்பேரரசு அழைத்தமை
எங்கள் மண்ணின் கல்லாறு சதீசரை.
கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்த நாள் விழா.
பார்க்குமிடமெங்கும் என் நண்பர்கள்.
ஊடகத்தார் அரசியலார் படைப்பாற்றலார்
தமிழ் உணர்வாளர் என அரங்கமே நிறைந்து வழிந்தது.

14.07.2015
14.07.2015 மாலை 1900 மணி
சேலத்தில் சைவ அடியவர்களுடன் சந்திப்பு.
முதலாவது அக்கிரகாரம் தெருவில் சைவத்திரு சாத்தப்பன், சைவத்திரு. முருகசன், கிச்சிப்பாளையம் சாலையில் சைவத்திரு ஏ எம் செங்குட்டுவன் ஆகியோரைச் சந்தித்தேன்.
தெண்டாற்றுவதில் ஒருவருக்கு மற்றவர் சளைக்காமல் மூவரும் அரும்பணிகள் ஆற்றுபவர்.
என்னை அவர்களிடம் அழைத்துச் சென்றவர் சேலத்தில் காந்தளகம் வணிக உரிமதாரர் திரு. தனகோடி அவர்கள்.

14.07.2015
14.07.2015 இரவு 2100 மணி
சேலம், ஓமலூர், கணவாய்ப்புதூர் சென்று சேர்ந்தேன்.
சிறீ சாரதா நிகேதன் மகளிர் கலை - அறிவியல் கல்லூரித் துணை முதல்வர் பேரா. முனைவர் கலைச்செழியன், அவர் தந்தையாரும் கல்லூரி இயக்குநருமான வழக்குரைஞர் கலைச்செல்வன் இருவரும் காத்திருந்து வரவேற்று விருந்தோம்பினர்.
15.07.2015 காலை 0730 மணிக்குச் சிறீ சாரதா நிகேதன் மகளிர் கலை - அறிவியல் கல்லூரி நிறுவனர் தலைவர் தவத்திரு ஆத்மானந்த அடிகளைக் கண்டு ஆசி பெற்றேன். தேவாரம் தளம், மொழிபெயர்ப்பு முயற்சிகள், கம்போடியாவில் காரைக்காலம்மையார் என என் விளக்கங்கள் அமைந்தன,
காலை 1030 மணி. தன்னம்பிக்கை ஊட்டும் திருமுறைகள் என்ற தலைப்பில் மாணவிகளுக்கு உரையாற்றினேன். கல்லூரி முதல்வர், துணைமுதல்வர், துறைத் தவைவர்கள், பேராசிரியப் பெருந்தகைகள் இயக்குநர் கலைச்செல்வன், 400 மாணவியர் யாவரும் அரங்கில் கூடியிருந்தனர்.

14.07.2015
14, 15, 16.07.2015 செவ்வாய், புதன், வியாழன், மூன்று நாள்கள்.
சேலம், அரிசிப்பாளையம், திரு. முரளி அவர்களின் இல்லம்.
18,268 பாடல்கள், 20,000 பக்கங்கள் 16 பகுதிகள், 20 கிலோ எடை கொண்ட பன்னிரு திருமுறைத் தொகுதியை 1996 தைப்பூசம் தொடக்கம் பதிப்பிக்க இறைவன் எனக்கு அருளினார்.
உலகெங்கும் 40 நாடுகளில் பரந்து வாழும் ஒன்பது கோடி மக்களான சைவத் தமிழருக்கு இத்தகைய பாரிய தொகுதியை அவர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்வது என் கடமை எனக் கருதினேன். 20 கிலோ எடையுள்ள அச்சுப் பதிப்பை எடுத்துச் செல்வதன் சுமையை உணர்ந்தேன்.
பன்னிரு திருமுறையை உலகெங்கும் எடுத்துச் செல்ல மின்னம்பலத்தில் தரவுகளை ஏற்றுவோம் எனத் தருமபுரம் ஆதீனம் தவத்திரு 26ஆவது குருமகாசந்நிதானத்திடம் 2004ஆம் ஆண்டில் எடுத்துக் கூறினேன்.
இணையவெளி தூய்மையானதல்ல. அங்கு பற்பல செய்திகள் உண்டு, அவற்றுடன் தூய்மையான திருமுறைகளைக் கலக்கவேண்டாம் எனக் குருமகாசந்நிதானம் கருத்துரைத்தார்கள்.
நான் ஓயவில்லை. மீட்டும் மீட்டும் தவத்திரு 26ஆவது குருமகாசந்நிதானத்திடம் வலியுறுத்தி வந்தேன். 2005இல் எனக்கு ஆணை தந்தார்கள், செலவுக்காக ரூ. 50,000 காசோலை தந்தார்கள்.
2006 தைப்பொங்கலன்று தேவாரம் மின்னம்பல தளம் இயங்கத் தொடங்கியது. HTML செயலியாக இயங்கியது. சிறீலிப்பி எழுத்துருவைத் தரவிறக்கியே காணலாம். 2005இல் வேங்கடேசர் தளம் அமைக்க உதவ, 2006இல் விசயதீபன் தளத்திற்கு தட்டச்சுத் தேடல் உள்ளிட்ட வசதிகளால் மெருகூட்டினார்.
2007 ஆவணி தொடக்கம் php driven mysql தரவுச் செயலியாகத் தமிழ் ஒருங்குறி unicode எழுத்துருவில் இயங்கத் தொடங்கியது. கணியன் பூங்குன்றன் விருதுபெற்ற நாகராசன் இந்த மாற்றத்தைக் கருத்துரைத்துத் தன் மாணவரான முரளி ஆவன செய்வார் என 2006 மார்கழியில் முரளியை எனக்கு அறிமுகம் செய்தார். முதன் முதலாக மயிலாப்பூரில் அவரைச் சந்தித்த நாள் பசுமையாக என் நினைவில்.
முரளியின் ஈடுபாட்டுடனான தொடர்ச்சியான உழைப்பே, பயனாளர் நண்பனாகத் user friendly தேவாரம் தளம் அமையக் காரணம். வடிவமைப்பு, கட்டமைப்பு, தரவேற்றம் என அவரின் பங்களிப்பே உலகம் முழுவதும் பன்னிரு திருமுறை இத்தளம் வழி பரவக் காரணமாகும். நாகராசன், கார்த்திக்கு, கதிரவன், தினேசுபாபு, சீனிவாசன் என அவ்வப்போது உழைத்தவர்களும் உளர்.
119 நாடுகளில் 2215 நகரங்களில் தேவாரம் தளம் கணிணிகளில், கைப்பேசிகளில், கணிப்பலகைகளில் அண்மைய தொழிநுட்பக் கூறுகளுடன் android மற்றும் apple செயலிகளாகக் காண்கின்றனர்.
இந்த மூன்று நாள்களும் 14, 15, 16 சேலத்தில் முரளியுடன் இருந்து தளத்தின் சிறு குறைகளைப் போக்கி மேலும் மெருகூட்டினேன்.

16.07.2015
16.07.2015 மாலை 1830 மணி
சென்னை, தியாகராய நகர், கிருட்டிண கான சபை.
தீப் பற்றியது என்கிறோம். பற்ற வைத்தல் என்றால் மூட்டுதல்.
பற்ற வைப்பவர் பற்றர், அடிக்கடி சொல்வதால் திரிந்து அவர் பத்தர். பொன்னை உருக்கத் தீயைப் பற்ற வைப்பவர் பத்தர்.
பொன்விளையும் பூமியில் பத்தர்களுக்குக் கொண்டாட்டம்.
பொன்விளையும் பூமி அல்லது சொர்ணபூமி அல்லது சீயம் அதுவே தாய்லாந்து.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழி எழுத்தில் `பெரும் பத்தன் கல்` என எழுதிய கல்வெட்டுத் தாய்லாந்தில் உள்ளது. இன்றும் அங்குள்ள அருங்காட்சியகத்தில் காணலாம். தமிழகப் பத்தர்கள் அன்றே கலைநயம் மிக்க பொன் அணிமணிகளைச் செய்ததால் தாய்லாந்தில் அவர்களுக்குக் கொண்டாட்டம்.
தாய்லாந்துக்கும் தமிழருக்கும் நெடிய தொடர்பு.
பத்தர்கள், வணிகர்களின் கொடுக்கல் வாங்கல், சமய குரவர் காரைக்காலம்மையாருக்குக் கோயில்.
தாய்லாந்தில் அரசரின் கோயிலில் இன்றும் மார்கழியில் 30 நாள்களும் புலர்காலையில் திருவெம்பாவை, திருப்பாவை பாராயணம், ஊஞ்சல் விழாவில் தோடுடைய செவியன் தேவாரம், ஏர்மங்கலத்தில் கூற்றாயினவாறு தேவாரம், முடிசூடலில் திருவெம்பாவை, திருப்பாவை, தேவாரங்கள் என அத் தொடர்பு உடையாமல் நீடிக்கிறது.
பார்க்க
https://youtu.be/ExGjxXY49Gg
தாய்லாந்தின் புகழ்பூத்த வடமொழி அறிஞர் பேரா. சித்திரபதி பிரபந்த வித்தியா அவர்கள் தலைமையில் இரு புத்த பிக்குகள் உள்ளிட்ட வடமொழி அறிஞர்கள் பதின்மர் சென்னை வந்தனர். தமிழகத் தாய்லாந்துத் தொடர்பைப் பேண வந்தனர். அவர்களுக்கு அளித்த வரவேற்பில் கலந்து அவர்களைப் பாராட்டினேன்.

23.07.2015 காலை
திருவாசகம் மலையாள மொழிபெயர்ப்பாளர் திரு. சந்திரசேகரன் நாயர் அவர்களுக்கு மொழிபெயர்ப்புக்கான பரிசு என்ற அறிவிப்பால் புளங்காகிதம் கொண்டேன்.
அந்தச் செய்தி கேட்ட ஒரு மணி நேரத்தில் திருவனந்தபுரத்திலிருந்து திரு. சந்திரசேகரன் நாயர் தொலைப்பேசியில் அழைத்தார். மகிழ்ச்சியைப் பகிர்ந்தோம். வாழ்த்துகளைக் கூறினேன்.
பேரா. முனைவர் வி ஐ சுப்பிரமணியம் அவர்களை வழிகாட்டியாகக் கொண்டவர். முன்பு பாரத இசுறேற் வங்கியில் பணி புரிந்தவர். கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் பொது செயலாளர். அவ்வமைப்புச் சார்பில் மாத இதழை நடாத்துபவர். அவரே முனைவர் பத்மநாதன். எனக்கு நெடுநாளைய நண்பர்.
2010இல் திருமுறைகளை மலையாளத்துக்கு மொழிபெயர்க்க வல்லுநர்களைத் தேடுகிறேன் என முனைவர் பத்மநாதனிடம் தெரிவித்தேன். திருவனந்தபுரத்தில் திரு. சந்திரசேகரன் நாயர், அவர் மகள் இருவரும் தமிழிலிருந்து மலையாளத்துக்கும் மலையாளத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பதில் வல்லுநர்கள் என்றார்.
திரு. சந்திரசேகரன் நாயருடன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டேன். 10ஆம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரத்தைத் தான் மலையாளத்துக்கு மொழிபெயர்த்ததாகவும் நூலாக இடிசி பதிப்பகம் வெளியிட்டதாகவும் என்னிடம் கூறினார்.
2010இல் திருவாசகத்தை மொழிபெயர்க்க விரும்பினார். நூலை அனுப்பிவைத்தேன். மொழிபெயர்த்துத் தட்டச்சாக்கினார். நூலாகப் பக்கமுமாக்கினார். நூலாக அச்சிட்டோம்.
திருவனந்தபுரம் மன்னர் திருவாசக மொழிபெயர்ப்பை 23.07.2012இல் தன் அரண்மனை வளாகத்தில் துணைவேந்தர்கள், தம்பிரான் சுவாமிகள், அறிஞர் நிறைந்த அவையில் வெளியிட்டார்.
பின்னர் 301 பாடல்கள் கொண்ட திருவிசைப்பா திருப்பல்லாண்டு (9ஆம் திருமுறை) முழுவதையும் மொழிபெயர்த்துள்ளார். நூலாக்கி அச்சிடவேண்டும். நிதி ஆதரவுக்காகக் காத்திருக்கிறேன்.
திருவாசகத்தையும் திருமந்திரத்தையும் 9ஆம் திருமுறையையும் மலையாளத்துக்கு மொழிபெயர்த்த திரு. சந்திரசேகரன் நாயருக்கு மொழிபெயர்ப்புக்கான விருது வழங்குவது பொருத்தமே.

23.07.2015 வியாழக்கிழமை மாலை.
சென்னை மேற்கு மாம்பலம்
2008ஆம் ஆண்டின் பிற்காலப்பகுதியில் தேவாரம் www.thevaaram.org தளத்தைப் பார்க்கிறார். நன்றி சொல்லி மின்னஞ்சல் அனுப்புகிறார். தேவநாகரியில் தட்டச்சுப் பணி இருந்தால் உதவுகிறேன் என்கிறார். சந்திக்கவேயில்லை.
05.04. 2009 அன்று சென்னை, பாரிமுனை கிறித்தவ இளைஞர் மன்றத்தில் என் உரை. அவர் வருகிறார். முதல் சந்திப்பு. அன்று தேவாரம் தளத்துக்கு நன்கொடை தருகிறார்.
2010இல் திருமுருகாற்றுப்படையின் வடமொழி மொழிபெயர்ப்புத் தட்டச்சுக்கு உதவக் கேட்கிறேன். மனமுவந்து செய்கிறார்.
2011இல் 9ஆம் திருமுறையை இந்திக்கு மொழிபெயர்க்க நண்பர்களை ஆற்றுப்படுத்துகிரார். சிவஞானபோத இந்தி மொழிபெயர்ப்பபை இந்தியில் தட்டச்சுச் செய்ய உதவுகிறார்.
2012இல் சிங்கப்பூராருக்காகச் சில திருமுறைகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க என் வழியாக உதவுகிறார்.
2011இல் திருவாசகத்தை வடமொழியாக்க முனைந்து திணறிக்கொண்டிருந்த சென்னை அபிராமிபுரத்து அம்மையார் சாவித்திரி இராமகிருட்டிணனின் மொழிபெயர்ப்பைச் செம்மையாக்கித் தருக எனக் கேட்டேன். முயன்று ஆற்றாது, தானே வடமொழிக்குத் திருவாசகத்தை மொழிபெயர்க்கிறார்.
2014இல் அவரது மொழிபெயர்ப்பைச் சுவாமி தயானந்த சரசுவதி அவர்களின் நன்கொடையுடன் நூலாக்குகிறேன். மொழிபெயர்ப்பாளருக்குச் சுவாமி தயானந்த சரசுவதி தந்த தொகையைக் கொடுக்கிறேன், வாங்க மறுக்கிறார். வலிந்து சேர்ப்பிக்கிறேன். கரும்பு தின்னக் கூலி பெற்றேன் எனத் தன்னடக்கத்துடன் கூறுகிறார்.
2015இல் அவரது மொழிபெயர்ப்புக்குப் பரிசு கிடைத்ததைப் பரிசு வழங்கும் நிறுவனத்தார் (எவர் என அறிய அவர்களே பரிசுப் பட்டியல் அறிவிக்கும் வரை காத்திருக்க) எனக்குக் காலையில் தொலைப்பேசியில் சொன்னதும் நேரே போனேன் பாராட்டினேன்.
நான் எங்கிருந்தேன், எங்கு வந்தேன், எவ்வாறு சந்தித்தேன், மொழிபெயர்ப்புப் பணிகளில் அவருடன் இணைந்தேன் என்பதை நினைக்கையில் குறுந்தொகையில் செம்புலப் பெயர்நீரார் யாத்த வரிகள் வந்து என்னுள் விழும்.
காதலருக்குரிய வரிகள் அவை. ஆனாலும் வடமொழிக்கு மொழிபெயர்க்கும் பணியில் என்னுடன் இணைந்த எனக்கும் பெரியவர் திரு. கோதண்டராமனுக்கும் பொருந்தும் வரிகள்.
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே
அன்புடை என்ற சொல்லைப் பணியிடை என மாற்றி வாசித்தால் பொருந்தும் அவ்வரிகள்

26.07.2015 
ஞாயிற்றுக்கிழமை மலை 1730 மணி
சென்னை எழும்பூர் எனதில்லம்.
சைவ சமயத்தவரான தாய்லாந்து அரசகுரு தமிழகம் வருகிறார்.
அவரைத் தமிழகம் வரவேற்கக் குழு ஒன்றை அமைக்க உதவுக,
நீங்களே தலைமை தாங்குக. 24.07.2015 தியாகராய நகரில் நேரில் சந்தித்து திரு. இல. கணேசன் அவர்களைக் கேட்டேன். விவரங்கள் கேட்டறிந்தார்.
தாய்லாந்தில் இசைக்கும் தோடுடைய.. மட்டிட்ட... கூற்றாயின... பித்தாபிறை... எனத் தொடங்கும் நான்கு தேவாரப் பதிகங்களில் 42 பாடல்கள், திருவெம்பாவை 20 பாடல்கள், திருப்பாவை 30 பாடல்கள், ஆக 92 பாடல்கள் தாய்லாந்து வரிவடிவம், கிரந்த வரிவடிவம், தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புடன், பேரா. சிங்காரவேலன், பேரா. தெய்வநாயகம், பேரா. தெ பொ மீ., பேரா. J. J. Boeles பேரா. Wanna Sudjit ஆகியோரின் தாய்லாந்து - தமிழகத் தொடர்புக்குரிய கட்டுரைகள், 2002இல் இந்திய அரசின் விருந்தினராக வந்த அரசகுரு பற்றிய ஊடகச் செய்திகள், யாவும் கொண்ட 150 பக்க நூலின் படி ஒன்றை அவரிடம் கொடுத்து, தருமை ஆதீனமும் காஞ்சித் திருமடமும் கேட்டு நான் தயாரித்த அந்நூலை வெளியிட அரசகுரு வருகிறார்கள் என்றேன்.
26.07 மாலை 1730 மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்றார், கவிஞர் ஏர்வாடி இராதாகிருட்டிணன், தமிழ் அறிஞர் சாமி தியாகராசன் ஆகியோரையும் அழையுங்கள் என்றார். மூவரும் வந்திருந்தனர்.
26.07 மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திரண்ட சில பரிந்துரைகள்.
• தாய்லாந்து – தமிழகத் தொடர்புகளைக் கொண்டாடும், புதுப்பிக்கும் விழாவாக அமைத்தல்.
• இராஜகுருவுக்குக் குடைகள், ஆலவட்டங்கள், மேளதாளங்கள் புடைசூழ யானை முன் வரத் தமிழக மரபுவழி வரவேற்பு வழங்குதல்.
• விழாக் குழுத் தலைவர் திரு. இல. கணேசன்; செயலாளர்கள் திரு. ஏர்வாடி இராதாகிருஷ்ணன், திரு. சாமி தியாகராசன். நான் யாழ்ப்பாணம் செல்வதால், காந்தளம் திருமதி சசிரேகா பாலசுப்பிரமணியன் அலுவலகப் பணிச் செயலாளர்.
மேலும் 30க்கும் கூடுதலான புரவலர்கள், ஆர்வலர்களைச் சேர்த்து ஆலோசனைக் கூட்டம் கூடி விரைவில் ஆவன செய்யவேண்டும் எனவும் கருதினோம்.

5.08.2015
'காந்தளகம்' வெளியீடாக இலக்கியப் பூக்கள் இரண்டு பகுதிகள் கொண்ட ஒரு தொகுதி வெளிவந்துள்ளது. இரு பகுதிகளும் 916 பக்கங்கள்.
இலக்கியப் பூக்கள் தொகுப்பு நூல். இத்தொகுப்பு நூலில் 100 ஈழத்து இலக்கிய ஆளுமைகள் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளன. 
இலண்டன் எழுத்தாளர் முல்லை அமுதனே இரு பகுதிகளினதும் தொகுப்பாசிரியர். 
இரு பகுதிகளிலும் உள்ள இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள், ஊர்கள் உள்ளிட்ட 3127 குறிப்புகள் / பக்க எண்களுடன் இரண்டாம் பகுதியின் இறுதியில் சுட்டியாக இருப்பதால் வாசகர் தேடல் எளிதாகிறது.
அமரர்களான ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் விபரங்களைத் தொகுத்து வழங்கியுள்ள முல்லை அமுதன் பாராட்டுக்குரியவர். 
இவ்விரு பகுதிகளும் ஆவணச்சிறப்பு மிக்கவை. 
இந்நூலில் இடம் பெற்றுள்ள இலக்கிய ஆளுமைகளின் விபரங்களும், அவர்களைப்பற்றி எழுதியுள்ள கட்டுரையாசிரியர்கள் பற்றிய விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளன. 
இந்நூலினை வாங்க விரும்புபவர்கள் காந்தளகம் பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு:
காந்தளகம்
4, முதல் மாடி, இரகிசா கட்டடம், 
68, அண்ணா சாலை, சென்னை - 600 002.
தொ.பே.: 0091 - 44 - 2841 4505
மின்னஞ்சல்: tamilnool@tamilnool.com
மின்னம்பலம்: www.tamilnool.com
இந்நூலில் இடம் பெற்றுள்ள ஆளுமைகளின் பெயர்களும் கட்டுரை ஆசிரியர் பெயர்கள் பின்வருமாறு
1. ஈழத்து முன்னோடித் தமிழ்பெரும் புலவர் ஈழத்துப் பூதன்தேவனார் -மயிலங்கூடலூர் பி. நடராசன் 7
2. உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை -ம. பா. மகாலிங்கசிவம் 16
3. சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரனார் -ம. பா. மகாலிங்கசிவம் 19
4. பண்டிதர் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை -ம. பா. மகாலிங்கசிவம் 25
5. குருகவி ம. வே. மகாலிங்கசிவம் -ம. பா. மகாலிங்கசிவம் 28
6. தமிழ் மூதறிஞர், இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை -கா. சிவபாலன் 33
7. பேரறிஞர், தவத்திரு தனிநாயக அடிகள் -திருமதி ஜெயா நடேசன் 40
8. வித்துவான், கவிமணி, கலைஞானி, புலவர் க. த. ஞானப்பிரகாசம் -திருமதி ஜெயமணி கனகரத்தினம் 46
9. ஈழத்து நாடக இலக்கியப் பெரும் புலவர் தேவசகாயம்பிள்ளை -தமிழ் வேள் இ. க. கந்தசுவாமி 55
10. இரசிகமணி கனக. செந்திநாதன் -வி. கந்தவனம் 58
11. சுரபாரதி, சேவா துரந்தரர், வித்துவ சிரோன்மணி, வித்தியா கலாபமணி, சிவகலா பூஷணம், சமஸ்கிருத பண்டிதர், பிரம்மஸ்ரீ ச. பஞ்சாக்ஷர சர்மா - கோப்பாய் சிவம் 66
12. சிறுவர் இலக்கியவாதி, வ. இராசையா -அநு. வை. நாகராஜன் 70
13. தமிழ்அறிஞர், ஞானசிரோன்மணி, பண்டிதர் வடிவேல் -திருமதி இராதாதேவி சிவசுப்பிரமணியம் 77 14. கிருஷ்ணா வைகுந்தவாசன் - வாழ்வும் பணியும் -திருமதி மகேஸ்வரி வைகுந்தவாசன் 87
15. தமிழ்மணி சிவ. விவேகானந்த முதலியாரின் வாழ்க்கை வரலாறு -அன்புமணி 95
16. நாவற்குழி மண் தமிழீழத்திற்கு அளித்த மாபெரும் சொத்து பண்டிதர் சு. வே. -முல்லை அமுதன் 102
17. அ. செ. முருகானந்தன் -முருகபூபதி 107
18. அறிஞர் அ. ந. கந்தசாமியின் பன்முக ஆளுமை - வ. ந. கிரிதரன் 115
19. வரதரின் நினைவுகளுடன்... -என். செல்வராஜா 133
20. தன் படைப்புகளின் ஊடாகத் தன்னை இனம் காட்டும் எழுத்தாளர் நந்தி -என். செல்வராஜா 140
21. கவிஞர் தில்லைச் சிவன் (தில்லையம்பலம் சிவசாமி)-இ. நடராசா 152
22. ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு வளம் சேர்த்த சொக்க(னார்)ன் -சிவலிங்கம் சிவபாலன் 155
23. புலவர் மிக்கேல்பிள்ளை -மா. கி. கிறிஸ்ரியன் 164
24. பேராசிரியர் கைலாசபதி அவர்களின் எழுத்து, ஒரு மதிப்பீடு -சிவானந்தன் 177
25. யாழ்வாணன் வாழ்வும் பணியும்
-கண்ணதாசன் யாழ்வாணன் 186
26. ஏஜே: சில நினைவுச் சிதறல்கள் -மு. புஷ்பராஜன் 190
27. அப்பச்சி மகாலிங்கம் அவர்களின் அழியாச் சுவடுகள்
-நவாலியூர் நடேசன் 204
28. மு. தளையசிங்கம் அவர்களின் குறுகிய வாழ்வின் சில பக்கங்கள் -என். கே. மகாலிங்கம் 208
29. பிரமிள் -முனைவர் கால. சுப்பிரமணியம் 229
30. எழுத்தாளர் செ. கதிர்காமநாதன் -தம்பு சிவசுப்பிரமணியம் 235
31. படைப்பாற்றல் மிக்க கலைஞர் அங்கையன் கயிலாசநாதன் -தம்பு சிவசுப்பிரமணியம் 241
32. செ. யோகநாதன் -முல்லை அமுதன் 247
33. செம்பியன் செல்வன் பற்றிய நினைவுப் பெருக்கு
-கருணாகரன் 253
34. பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா
-திருமதி நவஜோதி ஜோகரட்னம் 279
35. சிலோன் விஜயேந்திரன் - சில நினைவுகள்
-மறவன்புலவு க. சச்சிதானந்தன் 284
36. நாவண்ணன் -மட்டுவில் ஞானக்குமாரன் 292
37. ராஜ ஸ்ரீகாந்தன் -முருகபூபதி 304
38. காலத்துயர், சு. வி. பற்றிய நினைவுக் குறிப்புகள் -கருணாகரன் 310
39. அநுபவங்களை ஆவணப்படுத்திய படைப்பிலக்கியவாதி சி. புஸ்பராஜா -வண்ணை தெய்வம் 320
40. சிவலங்கம் சிவபாலன் என்னும் இலக்கியவாதி...... -வண்ணை தெய்வம் 325
41. கணபதி கணேசன் -முல்லை அமுதன் 331
42. முல்லை மண்ணுக்கு மகுடமிட்ட கவிமன்னன், புதுமைக் கவிஞர், முல்லையூரான் என்ற முருகேசு சிவராஜா அவர்கள் -வேலணையூர் பொன்னண்ணா 334
43. நினைவில் நீங்காத குமார் மூர்த்தி
-என்.கே.மகாலிங்கம் 334
44. அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள்! எஸ்போஸ் பற்றிய நினைவுகள் -கருணாகரன் 340
45. நாவலர் குரு இருபாலைச் சேனாதிராய முதலியார் - திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் 385
46. வசனநடை வல்லாளார், ஈழத்தின் சைவ எழுஞாயிறு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் - அருண். விஜயராணி 397
47. உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் - பண்டிதை தேவகியம்மாள் 404
48. ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் - இலக்குவனார் திருவள்ளுவன் 432
49. தமிழறிஞர் சபாபதி நாவலர் - திருமதி. இரா. கல்பனா அரவிந்தன் 444
50. செந்திநாதையரின் எழுத்துப்பணி - சித்தாந்த இரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம் 447
51. ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை - சு. சா. அரவிந்தன் 455
52. யானறிந்த யாழ்பாணத்து அறிஞர் சதாவதானம் நா. கதிரவேற்பிள்ளை - சு. சா. அரவிந்தன் 459
53. ஆனந்தக் குமாரசாமி - வரதா சண்முகநாதன் 463
54. புலவர், வைத்தியர் ஆ. வேலுப்பிள்ளை உபாத்தியாயர் - கி. தவபாக்கியம் 468
55. நவாலியூர் தந்த பெரும் புலவர், தங்கத் தாத்தா - பல்மருத்துவக் கலாநிதி இளமுருகனார் பாரதி 471
56. இலங்கையின் தேசியகீதத்தைத் தமிழில் தந்த முதுதமிழ்ப் புலவர் முருகுப்பிள்ளை நல்லதம்பி - ஆய்வாளர் சூ. யோ. பற்றிமாகரன் 484
57. ஈழத்தின் முதற் பெண் புலவர் பண்டிதை இ. பத்மாசனி அம்மாள் - ம. பா. மகாலிங்கசிவம் 492
58. ஒற்றையடிப் பாதையில் பயணித்த சைவப்புலவர் சி. வல்லிபுரம் - புலவர் சீடன் 500
59. தென் மோடிக் கூத்தின் முன்னோடி அண்ணாவியார் பக்கிரி சின்னத்துரை - கவிஞர் மா. கி. கிறிஸ்ரியன் 508
60. தனித்தமிழ் வளர்த்த புலவர்மணி இளமுருகனார் - மருத்துவக் கலாநிதி இளமுருகனார் சோ. பாரதி 519
61. நானறிந்த நற்றவத்தார் நாடறிந்த நமசிவாயத்தார் - மறவன்புலவு க. சச்சிதானந்தன் 533
62. பேராசிரியர் வண. பிதா தனிநாயகம் அடிகள் - முருகேசு பாக்கியநாதன் 547
63. கோவைக்கிழார் க. இ. குமாரசாமி - ம. பா. மகாலிங்கசிவம் 579
64. வாரித் தமிழ் வழங்கிய வள்ளல் ஆறுமுகன் - தமிழரசி 582
65. விளங்கு புகழ்க் கவிஞர் வித்துவான் வேந்தனார் - பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் 607
66. சித்தாண்டி தலபுராணம் பாடிய அமரர் இலக்கியமணி ஆரையூர் நல். அளகேச முதலியார் - அன்புமணி 616
67. சிரஞ்சீவிதமான சிந்தனையாளன் தம்பலகாமம் க. வேலாயுதம் - வே. தங்கராசா 626
68. தமிழுக்குத் தன்னை அடையாளப்படுத்தி நின்ற மாமனிதர் அமுது ஐயா - முல்லை அமுதன் 632
69. தமிழ்ப் பித்தர் அமரர் க. சச்சிதானந்தன் - கமலநாதன் சுதர்சன் 637
70. ஈழமேகம் பக்கீர்தம்பி - வெலிப்பன்னை அத்தாஸ் 643
71. தேவன்- யாழ்ப்பாணம் - வ. ந. கிரிதரன் 650
72. வரதர் - கருணாகரன் 660
73. எனது ஆசான் தமிழருவி சண்முகசுந்தரம் - குரு அரவிந்தன், கனடா 668
74. எழுத்தாளர் அமரர் வ. அ. இராசரத்தினம் பற்றிய சில நினைவுகள் - அ. பாலமனோகரன் 675
75. அருள் செல்வநாயகம் - வசுந்திரா பகீரதன், அவுஸ்திரேலியா 682
76. அகஸ்தியர்! எனது பதிவுகள் - முல்லை அமுதன் 688
77. ஈழத்தமிழ்க் கவிதையுலகில் ஆழத் தடம் பதித்த அமரர் ஆரையூர் அமரன் - அன்புமணி 693
78. எனது நினைவுகளில் கே. டானியல் - வண்ணை தெய்வம் 700
79. நந்தியும் மலையகமும் - ப. ஆப்டீன் 711
80. கலைப்பேரரசு திரு. அ. கூ. பொன்னுத்துரை
- வி. கந்தவனம் 723
81. மூத்த பத்திரிகையாளர் ஐயா சிவநாயகம் - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் 727
82. வாழ்வாங்கு வாழ்ந்தவர்! இளவாலை ஜேசுரத்தினம் - முல்லை அமுதன் 734
83. அமரர் கவிஞர் நீலாவணன் - முகில்வண்ணன் 739
84. கைலாசபதியின் பார்வையில் உலகமயமாக்கல், ஊடுருவல், தேசிய இனப் பிரச்சினை - லெனின் மதிவானம் 752
85. தனிவழியில் ஒரு வெளி: கவிஞர் தா. இராமலிங்கம் நினைவுகள் - கருணாகரன் 769
86. பல்கலைவித்தகர் அநு. வை. நாகராஜன்
- உடுவை எஸ். தில்லை நடராசா 784
87. அண்ணாவியார் சாமிநாதர் - மா. கி. கிறிஸ்டியன் 791
88. 118 நாவல்கள் எழுதிய பவள சுந்தரம்மா - அன்புமணி 800
89. என் இதயத்தில் வாழும் ஏ. ஜே. - நவாலியூர் நடேசன் 806
90. கவிஞர் இ. முருகையன் சில நினைவுத் தடங்கள் - இரவீந்திரன் நடேசன் 812
91. ஈழவாணன் - மேமன்கவி 819
92. கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் அமரர் சண்முகம் சிவலிங்கம் - முகில்வண்ணன் 825
93. கவிஞர் கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை - வி. கந்தவனம் 830
94. கவிஞர் எஸ். எல். ஏ. இலத்தீப் (மருதூர் வாணன்) - முகில்வண்ணன் 834
95. ஆலங்கேணி இரட்டையர் 1. க. தங்கராசா - தாமரைத்தீவான் 840
96. ஆலங்கேணி இரட்டையர் 2. கு. கோணாமலை - தாமரைத்தீவான் 844
97. சிலோன் விஜயேந்திரன் - திருமதி. இரா. கல்பனா அரவிந்தன் 848
98. மாமனிதர் நாவண்ணன் - பூங்கோதை 851
99. தெ. நித்தியகீர்த்தி - மூனா, யேர்மனி 858
100. டானியல் அன்ரனி எனும் என் அன்புத் தோழர் - நந்தினி சேவியர்

09.08.2015
09.08.2015 ஞாயிற்றுக்கிழமை விடியும் பொழுது.
நிலமும் வானமும் கைகுலுக்கும் விளிம்பில்
சூரியன் செம்பிழம்பாய், அரை வட்டமாய்,
முக்கால் வட்டமாய் பெரிய முழு வட்டமாய்
எழுந்த காட்சியைக் கண்கள் கொள்ளவில்லை.

மறவன்புலவில் அப்பொழுதில்
பசுவின் சாணகம் அள்ளினேன்.
ஆட்டுப் புழுக்கை கோதினேன்.
உழவுச் சாலில் சிதறிப் பரவினேன்.
1946, 1947, 1984 ஆண்டு கால நினைவுகளுடன்.
6, 7, 8 வயதுச் சிறுவனாய் ஆச்சியுடன் (பாட்டியுடன்)
கோடை ஒதுங்க மாரி நெருங்கமுன்
கருக்கலில் நிலம் வெளிக்க வயலுக்குப் போனதும்
பட்டி மாடுகளை அவிழ்த்து மேய அனுப்பியதும்
அவை விட்டசாணகம் குவித்ததும்
காய்ந்து எருவான நேற்றைய சாணகத்தை
உடைத்துச் சிதறிப் பரவியதையும்
பசுமையாக நினைவூட்டிய நிகழ்வு.
ஆட்டுப் பட்டி, மாட்டுப் பட்டி வயலுள் அமைக்க
இரவெல்லாம் புழுக்கையும் சாணகமும் மூத்திரமும்
அவை வயல்களை நிரப்ப


13.08.2015 காலை 0500 மணி.
பயணத்தைத் தொடங்கினேன்.
வவுனியாவில் திரு. தேவராசா அவர்களின் விருந்தோம்பலில் திளைத்தேன்.
அநுராதபுரத்தில் விவேகானந்தா மகாவித்தியாலயம் சென்றேன்.
அருள்மிகு கதிரேசன் கோயிலில் வழிபட்டேன்.
புத்தளத்தில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மாணவருடன் இருந்தேன்.
புத்தளம் இந்து மகா சபையின் பொன்விழா (22.10.2015) ஏற்பாடுகள் தொடர்பாக உரையாடினேன்.
கொழும்பு வந்து சேர்ந்தேன்.

16.08.2015 தேர்தலில் வாக்களிக்கவில்லை.
சென்னைக் கம்பன் விழாவில் நோக்கராக வாக்களித்தேன்.
சென்னை, மயிலாப்பூர், ஏவிஎம் இராசேசுவரி மண்டபம்.
அயோத்தி வீரரா?
கிட்கிந்தை வீரரா?
இலங்கை வீரரா?
போர்க்களத்தில் இணையற்ற செயல்களைப் புரிந்தோர்
என்ற தலைப்பில் பட்டி மன்றம்.
கம்பவாரிதி இலங்கைச் செயராசர் பட்டிமன்றத் தலைவர்.
ஒவ்வொரு பிரிவிலும் மூவராக, சௌந்தரவல்லி, மாது, பர்வீன் சுல்தானா உள்ளிட்ட ஒன்பது உரை வீச்சாளரின் சொல்லாடல் நிறைவில் நோக்கராக 49 தமிழ் அறிஞர் வாக்களித்தனர். அவர்களுள் நானும் ஒருவனாக வாக்களித்தேன்.
தேர்தல் ஆணையராகப் பாரதிய சனதாக் கட்சியின் மூத்த தலைவர் திரு. இல. கணேசன்.
நீதியரசர் இராம சுப்பிரமணியம், அறிஞர் கி ஆ பெ விசுவநாதத்தின் மகள் மணிமேகலை கண்ணன், மறைமலை அடிகளார் வழிவந்த சாரதா நம்பி ஆரூரன், பேரா. அ ச ஞா மகள் பங்கயச்செல்வி, இலக்கியவீதி இனியவன், வழக்கறிஞர் இரா காந்தி, பால சீனிவாசன், திரைப்பட இயக்குநர் எசு பி முத்துராமன் என என் நண்பர் குழாம் உள்ளிட்ட சுவைஞர் கூட்டத்தின் நடுவே நான்.

17.08.2015 மறவன்புலவில் இருந்து இலங்கையின் 15ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்றிருக்கவேண்டும்.
சென்னையில் இருந்து அவசர அழைப்பு.
தாய்லாந்து அரசகுரு தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் வரவேற்பு ஏற்பாடுகளைக் கவனிக்க வருக.
17.08.2015 காலை 1100 மணிக்குத் தூதரகத்தில் கலந்தாய்வு. வருக.
அழைத்தவர் இருவர்.
சென்னையில் தாய்லாந்துத் துணைத் தூதர் முதலாமவர்.
பாரதிய சனதாக் கட்சியின் மூத்த தலைவர் திரு. இல. கணேசன் இரண்டாமவர்.
கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
ஏர்வாடி இராதாகிருட்டிணன், அமுதா பாலகிருட்டிணன், காஞ்சித் திருமடம் சார்பில் திரு. சுப்பிரமணியன். காந்தளகம் சார்பில் திருமதி பா. சசிரேகா. இந்த அணிக்குத் தலைமை தாங்கியவர் இல. கணேசன்.
சென்னைக்கான தாய்லாந்து துணைத் தூதரைச் சந்தித்தோம்.

18.08.2015 செவ்வாய்க்கிழமை.
எனக்கு வந்த மகிழ்ச்சியான செய்தி, பகிர்கிறேன்.
நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதுகள் 2015.
மொழிபெயர்ப்பாளருக்கான விருதுகள் ஆறு.
மொழிபெயர்ப்புகளைப் பதிப்பித்தோருக்கான விருதுகள் ஐந்து.
அப் பதினொன்றுள் மூன்று விருதுகள் பின்வருமாறு.
திருமுறைகளை மொழிபெயர்த்தோருக்கு விருதுகள்.
அவர்களைத் தேடிச் சென்றேன்.
மொழிபெயர்க்க ஊக்குவித்தேன்.
மொழிபெயர்த்த நூல்களைப் பதிப்பிக்க வழிசெய்தேன்
என்பதில் எனக்கு மகிழச்சி.
அதனால் பதிப்பாளனாக எனக்கும் (காந்தளகத்துக்கும்) விருது.
திருவாசகத்தை வடமொழிக்கு மொழிபெயர்த்த திரு. கோதண்டராமனுக்கு விருது.
திருவாசகம், திருமந்திரம் ஆகிய திருமுறைகளை மலையாளத்துக்கு மொழிபெயர்த்த திரு. சந்திரசேகரன் நாயருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.
கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம் இராமகிருட்டிணா வித்தியாலயத்தில் விருது வழங்கும் விழா,
25.08.2015 காலை 10 மணி முதலாக.

05.09.2015
05.09.2015 நண்பகல் சிதம்பரம் தெற்குத் தேர் வீதி
சிதம்பரம் தவத்திரு ஆறுமுக நாவலர் அறக்கட்டளை
மேனாள் அறங்காவலர் திரு. க. சுவாமிநாதன்
அவர் மகன் இன்னாள் அறங்காவலர்
மருத்துவர் சா. அருள்மொழிச்செல்வன்
அவர்களது இல்லம் சென்றேன்.
தஞ்சாவூர் பேரா. சாமி தியாகராசன் உடனிருந்தார்.
சொல்லாமல் சென்றோமாயினும் நண்பகல் உணவு விருந்தோம்பியவர் திரு. க. சுவாமிநாதன் மகள் மருத்துவர் பத்மினி கபாலி. 1980ஆம் ஆண்டில் இருந்து அவ்வில்லத்தாருடன் அன்போடு பழகி வருகிறேன். ஈராண்டுகள் ஆறுமுகநாவலர் அறக்கட்டளை ஆலோசனைக் குழுவில் யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையின் சார்பில் உறுப்பினராக இருந்தேன்.
சிதம்பரம் ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை நிறுவிய ஆண்டு 1864. யாழ்ப்பாணத்தில் இருந்து பொருள் கொணர்ந்து தவத்திரு ஆறுமுகநாவலர் கட்டியெழுப்பிய பாடசாலை.
150 ஆண்டுகளாகின்றன.
2015 திசம்பர் 3 கார்த்திகை மகம்.
ஆறுமுக நாவலர் பிறந்த நாள் மங்கலம்.
2015 திசம்பர் 3, 4, 5, 6 நான்கு நாள்கள் சிதம்பரத்தில் விழா.
அனைவரையும் அழைக்கிறார்
அறங்காவலர் மருத்துவர் சா. அருள்மொழிச்செல்வன்.

27.08.2015 சென்னை, தியாகராயநகர், வாணிமகால்,
திருவள்ளுவர் திருநாட்கழக விழா.
1952இல் யாழ்ப்பாணம், காங்கேயன்துறை வீதி, 213ஆம் எண் கட்டடத்தில் சிறீ காந்தா அச்சகம் புத்தகசாலையைத் தொடங்கியவர் என் தந்தையார்.
அக்காலத்தில் சென்னையில் இருந்து நூல்களை இறக்குமதி செய்வார். தொடர்வண்டி வழி (தனுக்கோடி - தலைமன்னார் ஊடாக்) வரும் நூற்பொதிகளை, யாழ்ப்பாணம் தொடர்வண்டி நிலையத்துக்குப் பின் உள்ள சரக்ககத்தில் சுங்கத்தார் பொதியை உடைத்துப் பார்த்துத் தருவர். வங்கியில் பணம் செலுத்திய சீட்டுடன் சென்றால் தொடர்வண்டித் துறையினரும் அஞ்சல்துறையினரும் சுங்கத்துறை வழியாகப் பொதிகளைத் தருவர்.
சென்னையிலிருந்து் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் (கழகம்), பாரி நிலையத்தார் எனப் பல பதிப்பகங்கள் நூற் பொதிகளை அனுப்பின.
கழகத் தமிழ்க் கையகராதி, திருக்குறள் முவ உரை இரண்டும் எனக்குப் பிடித்த நூல்கள். மிகக் கூடுதல் எண்ணிக்கையில் விற்கும் நூல்கள்.
1981இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலேயே கழகம் திரு. முத்துக்குமாரசாமி அவர்களுக்கு முதன்முதலில் அறிமுகமானேன். 1980 தொடக்கம் சென்னையில் விற்பனை தொடக்கிய காந்தளக நிறுவனம். மதுரையில் மாநாட்டுக் காலத்தில் ஈழத்து நூல்களை விற்பனை செய்யக் காட்சி அரங்கு ஒன்றைக் காந்தளகத்துக்கு ஒதுக்கி் உதவியவர் கழகம் திரு. முத்துக்குமாரசாமி.
1986இல் ஓளிஅச்சுக்கோப்பு முயற்சியைச் சென்னையில் தொடங்கினேன். மணிமேகலை தமிழ் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை ஒளி அச்சுக் கோர்ப்பதுடன் மெய்ப்புப் பார்த்து பதிப்பாசிரியர் பணியும் செய்து தரக் கேட்டு என்னிடம் வந்தனர் கழகம் திரு. முத்துக்குமாராசாமியும் மொழிபெயர்ப்பாளர் கவிஞர் பாண்டியனும் (இந்திய ஆட்சிப் பணி ஓய்வு). என் அருமை நண்பர் பங்களூரர், ஆங்கிலப் பேராசிரியர் கு. வேங்கடகிருட்டிணன் பதிப்பாசிரியராகியதால் அந்த நூலைச் செம்மையாகச் செய்து கொடுத்தேன்.
காலப்போக்கில் கழகம் திரு. முத்துக்குமாரசாமி எனக்குப் பதிப்பக அண்ணரானார். அவரின் துணைவியார் காந்தளகம் பதிப்பித்த அபிராமி அந்தாதி நூலையே தம் வழிபாட்டுக்குப் பயன்படுத்துவதாக என்னிடம் மகிழ்ச்சியோடு கூறுவார். கழகம் திரு. முத்துக்குமாரசாமியார், பதிப்பாளர் சங்கத் தலைவரானதும் என் வேண்டுகோளை ஏற்றுச் சங்கப் பதிவுகள் அறிவித்தல் யாவையும் தமிழிலும் கொணர்ந்தவர்.
முன்பு போல அடிக்கடி வெளியே வராதவர், திருவள்ளுவர் திருநாட்கழகத்தைத் தொடக்கியவர் அவரின் மாமனார் வ. சுப்பையாபிள்ளை என்பதால் 27.08.2015 விழாவுக்கு வந்திருந்தார்.

27.08.2015 சென்னை, தியாகராயநகர், வாணிமகால்,
திருவள்ளுவர் திருநாட்கழக விழா.
1995 கார்த்திகையில் மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனம் திருமுறை அச்சிடல் தயாரிக்கும் பணிக்காகச் சென்றிருந்தேன்.
தொடர்வண்டித் துறையில் பணியாற்றி முதிரமுன் ஓய்வுபெற்ற அடியவர் ஒருவரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். திருக்கடவூர் ஓதுவார் சாமிநாதனின் மகன். என் அருமை நண்பர் ஓதுவார் சாமி தண்டபாணியின் அண்ணர். நான் சந்தித்த அடியவர் அவரே.
ஆதீன வளாகத்தில் தங்க எனக்கு ஒதுக்கிய அறைக்கு அடுத்த அறையொன்றில் அவர். வெள்ளை வேட்டியுடன் துறவு நோக்குடன் அங்கிருந்தார்.
சில மாதங்களின் பின்னர் தீக்கை பெற்றுக் காவி உடைக்கு மாறினார். தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் என்ற துறவிப் பெயரரானார். வளாகத்தின் குரு மூர்த்தங்களுக்குப் பூசனை செய்வார்.
ஓராண்டுகள் வரை தருமபுரம் திரு மடத்தில் தங்கித் திருமுறை அச்சிடல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன் என்பதால் தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகளுடன் நெருங்கிப் பழகும் பேறும் பெற்றியும் எனக்கு.
மென்மையானவர். இனிய உள்ளத்தர். பற்றுகளை வெகுவாகக் குறைத்தவர். ஒடுக்க நாட்டத்தினர். துறவொழுக்கங்களைக் கைக்கொள்பவர்.
காலம் செல்லச் செல்ல அவரும் துறவு வாழ்க்கையில் சிறந்தார். திருநெல்வேலிக் கிளைமடத்தில் பொறுப்பாக இருந்தார். அவரோடு சில நாள்கள் தங்கினேன். பின்னர் 2008ஆம் ஆண்டளவில் திருப்பானந்தாள் காசித் திருமடத்தில் இணை அதிபராகப் பொறுப்பேற்றார் என்றதும் வாழ்த்தினேன்.
2011இல் திருவாசக மலையாள மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவுக்கு அழைத்தேன், வந்தார். திருவனந்தபுரம் மன்னரின் விருந்தினராக இருந்தார்.
2013இல் கொழும்புக்கு வந்தார், திருக்கேதீச்சரம் வந்தார். அவர் அருள் மழைக்குள் அகப்பட்டேன்.
28.08.15இல் அன்று சென்னையில் சந்தித்தேன். போர. சாமி தியாகராசனாரும் உடனிருந்தார்.

16, 17, 18 செப்தெம்பர் 2015, இராசபாளையத்தில்.
அருள்மிகு ஆதிப்பிள்ளையார் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா
அருள்மிகு மாப்பிள்ளைப் பிள்ளையார் திருக்கோயில் ஆவணிச் சதுர்த்தி விழா
அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில் வழிபாடு
பொதிகைமலைச் சாரலில் தென்னந்தோப்பில் ஓய்வு
இராசபாளையம் இறைபணித் தொண்டர் இராமராசர். அவருக்குத் தம்பி தில்லி உச்சநீதிமன்ற வழக்குரைஞர் இராம சங்கர் இராசா. இவர்கள் இருவருக்கும் 100க்கும் கூடுதலான சிவதொண்டர்கள். இவர்கள் கேட்காமலே விழாக்கள் சிறக்க வாரி வழங்கி அள்ளிக்கொடுக்கும் வணிகப் பெருமக்கள்.
கோலாலம்பூரில் இருத்து கணேசலிங்கம் இணையர், மதுரையிலிருந்து தவத்திரு ஆதீனம், இருடிகேசத்திலிருந்து ஓம்காரானந்தா ஆச்சிரம யோகிகள் சுவாமி விசுவரூபானந்தா, சுவாமி சோமசேகரி, மட்டக்களப்பில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன், யாழ்ப்பாணத்திலிருந்து நான், சென்னையிலிருந்து நீதியரசர்கள் வள்ளிநாயகம், செகதீசன், மூத்த வழக்கறிஞர் காந்தி, கேரளத்திலிருந்து கோட்டு வாத்தியக் கலைஞர், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அடியார்கள், அன்பர்கள், இராசபாளையப் பெருமக்கள் எனச் செப்தெம்பர் 13ஆம் நாளில் இருந்து பெருகிய திருக்கூட்டம்.

03.10.2015 சனிக்கிழமை மாலை
முழங்காவில் சென்றேன்.
யாழ்ப்பாணம் மருத்துவக் கல்லூரி 2ஆம் ஆண்டு மாணவர்.
படிப்பைத் துறக்கிறார்.
போரட்ட களத்தில் குதிக்கிறார்.
தோழர் பத்மநாபா இவரது தலைவர்.
பின்னர் திரு. செகநாதன் போராட்ட களத்திலிருந்து ஒதுங்குகிரார்.
கொழும்பில் பயண முகவராகிரார்.
வீடு வாங்கி வசதியாகக் கொழும்பில் இருந்தவர்.
முழங்காவிலில் அவருக்குத் தோட்டம்.
அவரும் இல்லத்தவரும் முழங்காவிலில் குடியேறுகின்றனர்.
மண்ணின் மக்களாாகின்றனர்.
விலங்கு வளர்ப்பு அவருக்குக் கைவந்த கலை.
தோட்டப் பயிர்ச் செய்கை அவரின் நாளங்களுடன் கலந்தவை.
விரல் நுனியில் கமத்தொழிலின் இன்றைய தகவல்கள்.
அவரது தோட்டத்தில் என்ன இல்லை.
மேம்படுத்திய அறிவியல் வேளாண் செல்வர். .

07.10.2015
29.09.2015 தொடக்கம் 13.10.2015 வரை
மாணவர்களே, எழுதுகோல், குறிப்பேடு கொணர்க. என் விளக்கத்தைக் கேட்க. குறிப்பெடுக்க என்கிறார் ஒரே நேரத்தில் பல் நிகழ்வுகளை, கவனங்களை உளத்திருத்திப் பணிசெயும் ஆற்றலர் 31 வயதான கவனகர் முனைவர் கலை. செழியன்.
அவரது 16ஆவது வயதில் கவனக நிகழ்ச்சிக்காக 1999ஆம் ஆண்டு கொழும்புக்கு அனுப்பினேன். அவரை அறிமுகம் செய்தவர் கவிஞர் முனைவர் அண்ணா கண்ணன்.
கவனகத் துறையில் ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றுத் தமிழக்தில் சேலம், கணவாய்ப்புதூர் கல்லூரியில் இப்பொழுது தமிழ்ப் பேராசிரியர்.
என் அழைப்பை ஏற்றார். எந்தச் சன்மானமும் கேட்கார். பயணக் களைப்பைப் பொருட்படுத்தார். இலங்கையில் தமிழ் மாணவருக்காக 15 பாடசாலைகளில் 29.09 தொடக்கம் 13.10 வரை கவனக விளக்க நிகழ்ச்சி நடத்துகிறார். அவர் அருமைத் தந்தையார் வழக்கறிஞர் கலைச்செல்வன் உடன் வந்து தமிழ் மாணவர் மீளெழுச்சிக்கு உதவுகிறார்.
நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து உதவியோர்
1. திருகோணமலையில் மல்லிகைத்தீவு அன்பர் திரு. ச க நடேசபிள்ளை
2. அநுராதபுரத்தில் விவேகானந்த சபை அன்பர், திரு. கண்ணண்
3. வட மாகாணம் முழுவதும் அன்பர் திரு. முத்து இராதாகிருட்டிணன், மேலதிகக் கல்விப் பணிப்பாளர், வடமாகாணக் கல்வித் திணைக்களம்.
4. புத்தளம் இந்து மகா சபைச் செயலர் அன்பர் திரு. சுரேசர்.
29.09.2015 இலங்கைத்துறைப் பாடசாலை, திருகோணமலை
30.09.2015 ஈச்சிலம்பற்றைப் பாடசாலை, திருகோணமலை
01.10.2015 அன்புவழிபுரம் பாடசாலை, திருகோணமலை மாவட்டம்
02.10.2015 தம்பலகாமம் பாடசாலை, திருகோணமலை மாவட்டம்
03.10.2015 மல்லிகைத்தீவு மாணவர்கள், திருகோணமலை
04.10.2015 நொச்சிக்கமம் முத்துமாரி கோயில், அநுராதபுரம்
06.10.2015 மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி + அன்னை இல்லம்
07.10.2015 வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் + கனகராயன்குளம் மகா வித்தியாலயம்
08.10.2015 முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த மகாவித்தியாலயம்
09.10.2015 கிளிநொச்சி மகாவித்தியாலயம்
10.10.2015 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
11.10.2015 காரைநகர் பாடசாலைகள் மாணவர், பிரதேச செயலகம்.
12.10.2015 சாவகச்சேரி இந்துக் கல்லூரி + பருத்தித்துறை ஆட்லிக் கல்லூரி
13.10.2015 புத்தளம் இந்துக் கல்லூரி.


10.10.2015
தாய்லாந்து மொழியில் திருவெம்பாவை- திருப்பாவை, இன்னும் சில தேவாரபதிகங்கள் மொழிபெயர்ப்புச் செய்யப்பெற்று, ஆங்கில விளக்கத்துடனும், தாய்லாந்துக்கும் தமிழுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் கட்டுரைகளுடனும்,, நூலாக வெளியிடப்பெற்றுள்ளது..
நம் யாழ்ப்பாணத்து மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களால், தொகுக்கப்பட்டு, காஞ்சி காமகோடி பீட சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் அருளாசியுடன் இந்நூல் பதிப்பிக்கப்பெற்றுள்ளது..
காஞ்சி ஸ்ரீமடமே இந்நூலை பதிப்பித்துள்ளது என்பது வேறு சிறப்பு...
திருமுறைகளை பிறநாட்டவருக்கும் அவர்களுக்குப் புரியும் விதத்தில் அளிக்கும் தனது முயற்சியில் இந்நூல் ஒரு பாச்சல் என்று மறவன்புலவார் என்னிடம் குறிப்பிட்டார்..
இந்த நூலின் அழகும், அதன் வடிவமைப்பும், உட்பொருளும், வியக்க வைக்கின்றன....
யாழ்ப்பாணத்து மறவன்புலவு என்ற பெயரை உலக அரங்கில் பலருக்கும் பரீச்சயமான பெயராக மாற்றி வைத்திருக்கிற நூலின் தொகுப்பாசிரியரை பாராட்டாமல் இருக்கவே முடியாது...

No comments: