11.02.2014
எமதில்லத்துள் ஒருவர் மாமா என்பேன்.
எமதில்ல நல்ல செயல்கள் எவையும் மாமா இல்லாது
நடைபெறுவதில்லை என்பேன்.
என்னவரிடம் இவற்றைச் சொல்லி உங்களை ஏற்கனேவே
அறிமுகம் செய்துவிட்டேன்
என்றார் தேன் அல்லி.
நிறையச் சொன்னார்கள் தேன்,
நீங்களும் எந்தன் தென்மராட்சி அல்லவா
என்றார் கீத்தார்த்தனன்.
கீத்தார்த்தனன் - தேன் அல்லி திருமணம் இன்று
காலை 0900 - 1030 மணிக்குச் சென்னை, கேளம்பாக்கம், தையூர் ஈசுவரன் கோயிலில்.
கவிஞர் காசி. ஆனந்தன் - சரோசினி தேவி இணையரின்
மகள் தேன் அல்லி. திருமணத்தால் மருகர் கீத்தார்த்தனன். மீன்பாடும் தேனாட்டுத் திருமகள்
தென்மராட்சியின் மருமகள்.
நேரில் சென்று வாழ்த்துச் சொன்னோம் நானும்
என் மகள் சிவகாமியும் பெயரன் அரனுமாய்.
வாழ்த்த வந்தவர்கள் உலகெங்கும் இருந்து
வந்த அவர்களின் உற்றவர். மீன்பாடும் தேனாட்டாரும் தெம்மாங்கு பாடும் தென்மராட்சியாரும்.
வைகோ, நெடுமாறன் இணையர், ஓவியர் சந்தானம்,
விடுதலைச் சிறுத்தைகள் வழக்குரைஞர், பதிப்பாளர் இளவழகன் எனத் தமிழகத்தின் தேசிய உணர்வாளர்
திருக்கூட்டமாய் வந்தனர் வாழ்த்தினர்.
நாளை மாலை செம்மண்சேரியில் திருமண வரவேற்பு.
தமிழக அரசியலார் பலர் வருவர்.
இன்றைய நிகழ்வுப் பதிவுகள் பார்க்க.
13.02.2014
கவிஞர் காசி ஆனந்தன் இல்லத் திருமணம்.
13.2.14 மாலை சென்னை செம்மண்சேரி.
மணமக்கள் கீத்தார்த்தனன் - தேன்அல்லி.
தமிழகப் புகழாளர் பலர் திரண்ட நிகழ்ச்சி.
சில பதிவுகள் படங்களாக
Theanalli Kasianandan, Chennai, India
-இல் Sarojini Kasianandan மற்றும் 2 பேர். ஆகியோருடன்.
13 பிப்ரவரி 2014 · Chennai, Tamil
Nadu, India ·
Our Godfather- Satchi mama and family
19.02.2014
104 தமிழ்ப் பள்ளிகள். 6000 மாணவர்கள்.
மழலை வயதினர், சிறுவர், வளரிளம் பருவத்தினர், பல்கலை மாணவர் என்ற வகையினர்.
சுவிற்சர்லாந்தின் 26 மாநிலங்களில் வாழும்
80,000 தமிழர்களின் குழந்தைகள் தமிழராகத் தொடரச் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை,
1995ஆம் ஆண்டு தொடக்கம் தொடரும் தளரா முயற்சிகளே இந்த 104 தமிழப் பள்ளிகள்.
சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்மொழித் துறையினர்
அம்முயற்சியைப் பாராட்டினர். தமிழ் மொழித்துறைத் தலைவர் பேரா. அரங்க ராமலிங்கம் எடுத்துச்
சொல்ல, அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பாராட்டினார். பேராசிரியர்கள் மற்றும் முதுகலை
மாணவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி.
சுவிற்சர்லாந்துத் தமிழ்க் கல்விச் சேவைப்
பொறுப்பாளர் திரு மகேந்திரன்.
சுவிற்சர்லாந்து சைவத் தமிழ்க் கழக உறுப்பினர்
திரு. பாபு என்ற பரணீதரன்.
இருவருக்கும் 19.02.2014 நண்பகல் 1200 மணி
தொடக்கம் பாராட்டுவிழா. சென்னைப் பல்கலைக் கழகப் பவள விழா மண்டபத்தில் விழா.
நானும் கலந்துகோண்டேன்.
படங்கள் பார்க்க.
19.02.2014
சென்னையில் இராயப்பேட்டை தொடக்கம் திருவான்மியூர் வரை நீண்ட பரப்பில், இசை நடன நாட்டியக் கலைஞர் இருப்பிடங்கள்.
ஏராளமான கலை அரங்குகள்.
மார்கழி இசை விழாக் காலத்தில் இந்தப் பரப்பு
எங்கும் கலை வெள்ளம் பெருகும்.
கடந்த நூற்றாண்டின் முற்பாதியில் இந்தக்
கலைப் பரப்பில் பார்க்க, கேட்க, சுவைக்கத் தமிழல்லாத மொழிகளில் கலைகள். துக்கடாவாக,
நிகழச்சியின் இறுதியில் தமிழுக்கு இடம் கொடுத்தால் பேறு.
அதே காலத்தில் இராஜாஜி, கல்கி கிருட்டினமூர்த்தி,
டிகேசி போன்றோரின் முயற்சியால் தமிழிசை, தமிழ் மண்ணில் மீண்டழுந்து மிகுந்து பரவத்
தொடங்கியது. வடக்கே தொலைவில் பாரிமுனையில் தமிழிசைச் சங்கத்தை அமைத்தவர் இராசா அண்ணாமலைச்
செட்டியார்.
அன்றைய அந்தப் பெருமுயற்சியால் இன்று, இந்த
நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழிசை, பண்ணிசை, தமிழ் சார்ந்த கலைகள் இராயப்பேட்டை தொடக்கம்
திருவான்மியூர் வரை நீண்ட கலைப் பரப்பிலும் மிகுந்து பயில்கின்றன.
தமிழிசை இயக்க எழுச்சி தந்த பேறுகளுள் ஒன்று,
மயிலாப்பூர் நாரத கான சபையும் இராமலிங்கர் பணி மன்றமும் இணைந்து ஆண்டு தோறும் வழங்கும்
ஐந்து நாள் நிகழ்ச்சியான தேவார மூவர் இசை விழா. முழுக்க முழுக்கத் தமிழிசை விழா.
நேற்று 19.02.2014 மாலை 1700 மணி தொடக்கம்
நாரத கான சபாவில் இருந்தேன். நாரத கான சபையும் இராமலிங்கர் பணி மன்றமும் இணைந்து வழங்கும்
தேவார மூவர் இசை விழாத் தொடக்க நாள்.
அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களின்
பெருமுயற்சியால் விளைந்த தமிழிசை வேள்வி.
பிரதமர்கள் நேரு, இந்திரா ஆகியோரிடம் பணி
புரிந்து மேற்கு வங்கத் தலைமைச் செயலாளராகி ஓய்வுபெற்ற பி. எஸ். இராகவன் நிகழ்ச்சிக்குத்
தலைமை.
களக்காடு பேரா. சீதாலட்சுமிக்கு இசைக்கலைச்செல்வர்
விருது வழங்கிய விழா.
கலைமாமணி, இசைக்கலைச்செல்வர், திருத்தணி
நா. சுவாமிநாதனின் 2 மணி நேரத் தேவாரப் பண்ணிசைப் பொழிவு.
அருட்செல்வர் நா. மகாலிங்கம் வந்திருந்தார்கள்.
பேரா. செல்வகணபதி, பேரா. சாரதா நம்பியாரூரன், நாராத கான சபைச் செயலர் மூத்த வழக்கறிஞர்
கிருட்டிணசாமி, மூத்த வழக்கறிஞர் காந்தி, நல்லி குப்புசாமி செட்டியார் எனப் புகழாளர்
பலர்வந்திருந்தனர்.
திருத்தணி நா. சுவாமிநாதன் பொழிவு முடிந்ததும்
அவர்களைப் பாராட்டிப் பேசுமாறும் இசைக்குழுவுக்குப் பொன்னாடை அணிவிக்குமாறும் என்னைப்
பணித்தவர் அருட்செல்வர் நா. மகாலிங்கம்.
1968 தொடக்கம் அருட்செல்வரோடு தொடர்பாக
உள்ளேன். 1986 தொடக்கம் அவரது நூல்களின் பதிப்பாளராக இருந்துளேன். 2006 தொடக்கம் தேவாரம்
மின்னம்பல தளத்தை வளர்ப்பதில் அன்னாரின் பங்களிப்பு அளப்பரியது.
1968இல் அவரோடும் பேரா. மு. வ. அவர்களோடும்
நான் இருக்கும் படமும் நேற்றைய 19.2.14 விழாப் படங்களும் பார்க்க.
25.02.2014
புத்தக நண்பர்கள் குழு இன்று 25.2.14 மாலை, மயிலாப்பூரில் முதன்முதலாகக் கூடியது.
அமைப்பைத் தொடக்கி மூத்த எழுத்தாளர் இந்திரா
பார்த்தசாரதி உரையாற்றினார்.
சாரி, இரவி, சாருமதி, இராசன் ஆகிய நால்வரும்
புத்தக நண்பர்கள் குழு அமைப்பாளர்.
அசோகமித்திரன் தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும்
எழுத்தாளர். 1931இல் பிறந்தவர்.
இந்தியா 1948 என்ற நாவல் அவரது அடுத்த வெளியீடு.
விரைவில் வெளிவர உள்ளது. நற்றிணைப் பதிப்பகம் அண்மையில் வெளியிட்ட குறுநாவல் தொகுப்பில்
அசோகமித்திரன் எழுதிய இரு குறு நாவல்கள்.
இதுவரை 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள்
என நூலாக்கிய அசோகமித்திரனுக்கு, 1996 இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதைத் தொகுப்புக்காகச்
சாகித்திய அகாதமி விருது கொடுத்தனர்.
அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன்
மற்றும் எழுத்தாளர் வாதுலன் இருவரும் இன்று மாலை அசோகமித்திரனின் குறுநாவல்களை விமர்சித்தனர்.
அசோகமித்திரன் ஏற்புரை கூறினார். வினாக்களுக்கும்
விடைகூறினார்.
100க்கும் கூடுதலான தமிழ் எழுத்தாளர் நிகழ்ச்சிக்கு
வந்திருந்தனர். நானும் சென்றிருந்தேன். படங்கள் பார்க்க.
மீண்டும் 24.2.14 அன்று திருமுறை இசைப்பொழிவு.
மலேசியத் திருமுறை மாணவர்கள் மூவர்.
ஆதிமூலம் மகன் திருநாவுக்கரசு
மோகன் மகள் தினேசா
பரமசிவம் மகள் விக்கினேசுவரி.
சிலாங்கூர், சுபாங்கு செயா, பன்னிரு திருமுறை
வளர்ச்சி மையத்தில் மூவரும் மாணவர்.
24.02.2014
12.12.13 தொடக்கம் சென்னைக்கு வந்து குரலிசை, மத்தள இசை, வயலினிசை, விசைப்பலகையிசை பயில்கின்றனர்.
என் வீட்டில் தங்கி உள்ளனர்.
நேற்றுச் 24.2.14 மாலை 0600 மணிக்குச் சென்னை,
புரசைவாக்கம், அருள்மிகு கங்காதரேசுவரர் கோயிலில் அவர்களின் இசை நிகழ்ச்சி. பேரா. அரங்க
இராமலிங்கம் அவர்கள் ஒழுங்கு செய்தார்கள்.
மிகச் சிறப்பான இசை நிகழ்ச்சி. மூவரும்
நல்லிசையாகத் திருமுறைகளை வழங்கினர்.
27.2.2014
அடிமைத் தீவு. Slave Island.
கொழும்பில் கோட்டைக்குத் தென்கிழக்காக உள்ள
பகுதி.
தமிழில் கொம்பனித் தெரு. சிங்களத்தில் கொம்பனி
வீதிய. யகரத்தை எடுத்தால் சிங்களமும் தமிழே.
1963இல் கொழும்பில் எழுத்தராக அரசுப் பணி.
1964, 1965 தவிர, 1977 வரை 12 ஆண்டுக் கொழும்பு வாழ்க்கை.
கொம்பனித் தெருவில் அருள்மிகு சிவசுப்பிரமணிய
சுவாமி கோயில். அக்கோயில் வளாகத்தில் சைவ முன்னேற்றச் சங்கம். திரு. பாலசுப்பிரமணியம்
திரு. இராமநாதன் எனச் சைவ இளைஞர் பலரின் ஆக்கப் பணிகள்.
திரு. கதிரவேலு, திரு. தில்லைநாதன் என இரு
இளைஞர்கள். 1963இல் என்னை அழைத்துச் சைவப் பணியில் கொழும்பில் ஈடுபடுத்தினர்.
அக்காலத்தில் கொம்பனித் தெரு சைவ முன்னேற்றச்
சங்கத்தில் தொண்டாற்றிய இளைஞர்களுள் திரு. இராமநாதன் ஒருவர். தொண்டுதான் என்னையும்
அவரையும் அப்பொழுது இணைத்தது.
கொழும்பில் வாழமுடியாத இனக் கசப்புச் சூழ்நிலையால்
இலண்டனுக்குப் புலம்பெயர்கிறார். அங்கும் சைவ முன்னேற்றச் சங்கம் அமைத்து ஈடுபாட்டுடன்
தொண்டாற்றுகிறார்.
நேற்றுச் சென்னையில் சந்தித்தோம்.
1. இலண்டனில் புரட்டாதியில் இரண்டாவது அனைத்துலகத்
திருமுறை மாநாடு.
2. இலங்கையில் சிங்களத்தில் பன்னிரு திருமுறைகளைப்
பரப்புதல்.
இவைபற்றிப் பேசினோம்.
செயலுக்கான, தொண்டுக்கான ஆக்கபூர்வமான கருத்துப்
பரிமாறல்.
சைவத்தொண்டை எங்கிருந்தாலும் ஓயாது எடுத்துச்
செல்லும் தன்னார்வலர், திரு. இராமநாதன்.
நேற்றுத் தன் துணைவியாருடன் வந்திருந்தார்.
1963 தொடக்கம் 1977 வரையான என் கொழும்பு வாழ்க்கையை மலரும் நினைவுகளாக்கினர்.
05.03.2014
மணி மணிவண்ணன் Tamil Virtual University இல் Logasundaram Noombal Dhakshinamurthi மற்றும் மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகியோருடன்.
மணி மணிவண்ணன் Tamil Virtual University இல் Logasundaram Noombal Dhakshinamurthi மற்றும் மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகியோருடன்.
5 மார்ச் 2014 ·
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு நாள்
கருத்தரங்கின் நிறைவுக்குப் பின்னர். பின்னணியில் செங்கை பொதுவன் ஐயா, ‘பழனியப்பா பிரதர்ஸ்’
செல்லப்பன், ஸ்ரீரமணஷர்மா ஆகியோர்
ஒருங்குறியில் தமிழ், தேவைகளும் தீர்வுகளும்
கருத்தரங்கம்
நாள்: 05.03.2014 பதன்கிழமை
இடம்: தமிழ் இணையக் கல்விக் கழகக் கலையங்கம்,
கோட்டூர், கிண்டி, சென்னை
(1) தமிழ்ப் பின்னம், சின்னம், (2) அனைத்து
எழுத்துரு (3) ஓர் இந்தியா ஓர் எழுத்துரு (4) விசைப் பலகைகள் (5) நவீன கருவிகள்
இந்த 5 அமர்வுகளை அடுத்துக் கலந்துரையாடல்.
முனைவர் அண்ணா கண்ணன், கலைமாமணி சசிரேகா,
நான் மூவரும் அரங்குக்குள் சென்ற பொழுது 60க்கு மேலான எண்ணிக்கையில் தமிழ்க் கணிணி
அறிஞர் கூட்டம் நிறைந்திருந்தது.
1. தமிழ்ப் பின்னங்களும் சின்னங்களும் ஒருங்குறிப்
பலகைக்குள் அடங்குதல், ஒருங்குறிக்கான ஒலிபெயர்ப்புத் தரம்.
2. அனைத்து எழுத்துருத் திட்டத்தைத் தமிழக
அரசு செயற்பாடுகளில் விரைந்து உள்வாங்குதல், ஒருங்குறிப் பலகைக்குள் அடங்குதல்,
3. விசைப் பலகைகளைத் தரப்படுத்தல்,
4. நவீன கருவிகளுக்கான தொழிநுட்பம் தமிழருக்காதலாய்த்
தரப்படுத்தல், பயன்பாட்டில் வரத் தமிழக அரசுக் கொள்கை.
கலந்துரையாடலில் தெளிந்தவை இந்த நான்குமே.
தமிழகத்தின் தமிழ்க் கணிணி மூளைகள் திரண்ட
நிகழ்ச்சி. ஒவ்வொருவரும் தத்தம் துறைகளில் மீ வல்லுநர்.
படங்கள் பார்க்க
05.03.2014
நானா சாம்....
காரைக்குடியில் பிறந்தவர்.
தந்தை ஓவிய ஆசிரியர்.
பாட்டனார் சிற்பக் கலைஞர்.
இப்பொழுது இந்தியா டுடே தமிழப் பதிப்பு
வார இதழின் கலை இயக்குநர். நேற்று மாலை அன்னாரைச் சந்திக்கும் பேறுற்றேன்.
தெலுங்கு மொழியில் பன்னிரு திருமுறை.
திருமுறை 1 = 1469 பாடல்கள் முழுவதும்
திருமுறை 2 = 1331 பாடல்கள் முழுவதும்
திருமுறை 3 = 1358 பாடல்கள் முழுவதும்
திருமுறை 7 = 1027 பாடல்கள் முழுவதும்
திருமுறை 8 = 1048 பாடல்கள் முழுவதும்
திருமுறை 9 = 301 பாடல்கள் முழுவதும்
ஆகிய 6 திருமுறைகள் முழுவதுமாக
மொழிபெயர்ப்பாகின.
திருமுறை 4 = 1070இல் 490 பாடசல்கள்
திருமுறை 5 = 1015இல் 0 பாடல்கள்
திருமுறை 6 = 981இல் 0 பாடல்கள்
திருமுறை 10 = 3000இல் 450 பாடல்கள்
திருமுறை 11 = 1385இல் 891 பாடல்கள்
திருமுறை 12 = 4274இல் 996 பாடல்கள்
மொழிபெயர்ப்பாகின.
18268 பாடல்களுள் 9361 பாடல்கள் மொழிபெயர்ப்பாகின.
திருமலை திருப்பதி தேவத்தானத்தின் செயற்றிட்டம்.
இத்திட்ட ஒருங்கிணைப்பாளராக நான்.
2014 மார்ச்சு 7, 8 ஆகிய இரு நாள்களும்
இத்திட்டம் தொடர்பான பணிகள், 18268-9361 = 8907 பாடல்களின் மொழிபெயர்ப்பபை ஊக்குவிக்கும்
பணிகளில் சென்னையிலும் திருப்பதியிலும்.
படங்கள் பார்க்க
10.03.2014
1959 வைகாசி.
சென்னைக்கு மாணவனாக வருகிறேன்.
அங்கு எனக்குப் பாதுகாவலர் பேரா. அ. ச.
ஞானசம்பந்தன்.
அப்பொழுது சரவணனுக்கு 15 வயது.
சச்சி அண்ணன் என வாய் நிறைய அன்பு குழைத்து
அழைக்கத் தொடங்கியவர்.
முந்தையநாள் விசயா மருத்துவமனையில் நினைவு
குறைந்த நிலையிலும் சச்சி அண்ணை எனச் சொன்னதும் தலையை ஆட்டி மகிழ்ந்தவர் சரவணன்.
இன்று புலர்காலை 0330 மணிக்குக் காலமானார்.
ரேவதியின் கணவர்,
அரவிந்தனின் தந்தை
சக்தியின் தந்தை.
அசஞானசம்பந்தன் இராசம்மாளின் இரண்டாவது
மகன்.
மெய்கண்டானின் தம்பி
பங்கயச்செல்வி, சிவகாமசுந்தரி, அன்புச்செல்வி,
மீரா
ஆகியோருக்கு அண்ணன்.
55 ஆண்டுகளாக என் மீது அன்பு மழை பொழிந்த
என் அருமைத் தம்பி.
என் திருமணத்திற்கு மறவன்புலவு வந்த பேரா.
அசஞானசம்பந்தன் படத்தில்.
11.03.2014
சென்னை, தியாகராயநகர், வாணிமகாலில் மலேசிய மாணவரின் திருமுறை இசை மழை 11.03.2014
காணொலி / விழியம்
பார்க்க பகிர்க
பார்க்க பகிர்க
11.03.2014
400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் வானூர்தி
நிறுவனங்கள் சேமிக்க உதவும் தொழினுட்பத்தைக் கண்டறிந்தவர்,
என் மண்ணில், தென்மராட்சியில் பிறந்த இளைஞர்.
முனைவர் சிதம்பரநாதன் சபேசன். அன்னாரை உலகம் வியந்து பாராட்டுகிறது.
1984இல் பிறந்தவர்.
2003 12ஆம் ஆண்டுத் தேர்வுக்கு யாழ்ப்பாணம்
இந்துக் கல்லூரியில் படித்தவர். அதற்குமுன்பு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் படித்தவர்.
மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் பொறியியலாளராக
முதலாண்டு படிக்கையிலேயே புலமைப் பரிசில் பெற்று பிரித்தானியா சென்றார். செபீல்டு பல்கலையில்
மின்னணுப் பொறியியல் பட்டதாரியானார்.
2007இல் பிரித்தானியாவின் மிகச் சிறந்த
அறிவியல் மாணவர்கள் 18 பேரில் ஒருவராகிப் பதக்கம் பெற்றார்.
கேம்பிரிட்சுப் பல்கலையில் முதுநிலை அறிவியல்
பட்டம் பின்னர் முனவர் பட்டம் பெற்றார்.
Dr Sithamparanathan Sabesan, bagged
two awards for his ground breaking finding - the Real Time Location System, a
low cost real time radio tagging system which could be 100% accurate and can
locate passive RFID tags within a metre. According to University of Cambridge
news this system could save around 400 Million Pounds for airlines.
கடந்த ஆண்டு தென்மராட்சியார் சிவநாதனை ஒபாமா
அழைத்துப் பாராட்டினார்.
இந்த ஆண்டு தென்மராட்சியார் சபேசனைப் பிரித்தானியா
பாராட்டுகிறது.
Dr.Sabesan together with another
researcher Dr. Crisp received the Royal Academy of Engineering ERA Foundation
Entrepreneurship Award for this research finding. They will be awarded a
personal cash prize of £10,000 and another £30,000 for further development of
this idea.
Dr.Sabesan also received the UK ICT
Pioneers Award for this invention at the UK ICT Pioneers Competition, which is
an Engineering and Physical Sciences Research Council initiative that
recognises the work of exceptional PhD students and researchers in the
information and communications technologies.
மீண்டும் 11.3.14 அன்று திருமுறை இசைப்பொழிவு.
மலேசியத் திருமுறை மாணவர்கள் மூவர்.
ஆதிமூலம் மகன் திருநாவுக்கரசு
மோகன் மகள் தினேசா
பரமசிவம் மகள் விக்கினேசுவரி.
சிலாங்கூர், சுபாங்கு செயா, பன்னிரு திருமுறை
வளர்ச்சி மையத்தில் மூவரும் மாணவர்.
12.12.13 தொடக்கம் சென்னைக்கு வந்து குரலிசை,
மத்தள இசை, வயலினிசை, விசைப்பலகையிசை பயில்கின்றனர்.
என் வீட்டில் தங்கி உள்ளனர்.
11.3.14 மாலை 0600 மணிக்குச் சென்னை, தி.கராயநகர்,
வாணி மகாலில் அவர்களின் இசை நிகழ்ச்சி.
கலைமாமணி சசிரேகா பாரதியார் பாடல்கள் பாடினார்.
மிகச் சிறப்பான இசை நிகழ்ச்சி. மூவரும்
நல்லிசையாகத் திருமுறைகளை வழங்கினர்.
பாரதியார் சங்கத் தலைவர் மூத்த வழக்கறிஞர்
திரு. காந்தி அவர்கள் ஒழுங்கு செய்தார்கள். சங்கச் செயலாளர் பேரா. உலகநாயகி பழனி அவர்கள்
ஒருங்கிணைத்தார்கள்.
மலேசிய பன்னிரு திருமுறை வளர்ச்சி மையத்
தலைவர் திரு. ஆதிமூலம் வந்திருந்தார்.
பேரா. சாரதா நம்பி ஆரூரன், பேரா. நிர்மலா
மோகன், பேரா. பேரா. வ. வே. சுப்பிரமணியன், திருமதி மைதிலி நரசிம்மன் எனப் பலர் வந்திருந்தனர்.
படங்கள் பார்க்க.
14.03.2014
இலண்டன் சிவன் கோயில் அறங்காவலர்களுள் ஒருவர்
மருத்துவர் இராசசுந்தரம். யாழ்ப்பாணம் மூளாய் ஊரவர்.
சென்னையில் எனதில்லத்துக்கு வந்திருந்தார்கள்.
சென்னை, பாரிமுனை, இராசா அண்ணாமலை மன்றத்தில்
நடந்த பன்னிரு திருமுறை இசைவிழாவில் (12 நாள் நிகழ்ச்சி) 3ஆம் நாள் நிகழ்ச்சிக் காலை
அரங்கிற்குத் தலைமை தாங்கினார்கள். நானும் சென்றிருந்தேன்.
படங்கள் பார்க்க
கைக் கருவிகளில் மின்னூல் படிக்க உதவும் Kindle, Nook, Android Tablets போன்றன இந்திய ரூபாய் 4000 முதல் 6000 ரூபாய் வரையில் விலையாகின்றன.
ஆங்கிலத்தில் மின்னூல்கள் தாராளமாக உள்ளன. PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் உள்ளன. Kindle, Nook, Android Tablets போன்ற கருவிகளைக் கொண்டு எவரும் மின்னூல்களைப் படிக்கலாம்.
தமிழில் மின்னூல்களை projectmadurai.com, noolakam.net வெளியிடுகின்றன. அத்தளங்களில் பெரும்பன்மையான நூல்கள் பண்டையன. அண்மைய பதிப்புகள் மிகக் குறைவு.
அண்மைக்காலத்தில் எழுத்தாளர்களும், பதிவர்களும் பல்வேறு பாட வகைகளில் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர்.
அண்மைக்கால எழுத்துகளை மின்னூலாக்குவதில் ஆர்வம் காட்டுபவர் கணிணி நிரலியாளர் சீனிவாசன். இவரது துணைவியாரும் நிரலியாளரே. இனிமையான இயல்பும் எளிமையான பாங்கும் கொண்டோர்.
காஞ்சிபுரத்தவரான சீனிவாசனின் தந்தையார் நூல்களில் ஆர்வமுடையவர். அவரது இல்லத்தில் நூல்கள் நிரம்பி வழிகின்றன. சீனிவாசனும் இல்லத்தவரும் எனக்கு நல்லன்பர்கள். கடந்த சில ஆண்டுகளாகப் பழக்கமானவர்கள்.
தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் தம் நோக்கம் பற்றிச் சீனிவாசன் 20.03.2014 மாலை மிக விரிவாக எடுத்துரைத்தார். எழுத்தாளர் எவரும் இத்திட்டத்தில் சேரலாம், வாசகர் பரப்பை விரிக்கலாம்.
தமிழ் இணையக் கல்விக் கழக முதன்மை இயக்குநர் பேரா. முனைவர் நக்கீரன் வழிநடத்தினார். பேரா. கிருட்டினமூர்த்தி, முனைவர் அண்ணா கண்ணன், செங்கை புதுவன், அமைதி ஆனந்தர், பேரா. நாகராசன், காம்கேயர் புவனேசுவரி, சிட்னி அன்பு செயா, முரளி கண்ணதாசன், தமிழ்த்தேனீ எனக் கணிணித் தமிழ்த்துறை வல்லுநர் கூடியிருந்தனர். காந்தளகம் சார்பில் நானும் சசிரேகாவும் சென்றிருந்தோம்.
மேலும் தொடர்புகளை வளர்க்க: freetamilebooksteam@gmail.com, tshrinivasan@gmail.com, alagunambiwelkin@fsftn.org, arun@fsftn.org
படங்கள் பார்க்க.
23.03.2014
1963 ஐப்பசி.
கொழும்பு கறுவாக்காடு, றொசுமீடு இடத்தில் 48ஆம் எண் வீட்டுக்குள் செல்கிறேன்.
கொழும்பு கறுவாக்காடு, றொசுமீடு இடத்தில் 48ஆம் எண் வீட்டுக்குள் செல்கிறேன்.
திரு. மு. திருச்செல்வம், திருமதி பு. திருச்செல்வம் இருவரும் என்னை அன்போடு வரவேற்றனர். அங்கே நீலன் திருச்செல்வத்தை முதன்முதலில் சந்தித்தேன்.
சூட்டி என்ற செல்லப் பெயருடன் பல்கலைக் கழக மாணவராக. என்னைவிட 3 வயது இளையவர்.
அவர் விரும்பித் திருமணம் செய்து கொண்டது சித்தி என்ற பெயருடைய சட்டக் கல்லூரி மாணவியை.
சூட்டியைப் போலவே சித்தி என்மீது அளவற்ற அன்பு கொண்டவர். திருமணத்துக்குப் பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் வந்து ஐயனார்கோயிலடியில் உள்ள எமதில்லத்துக்கு வந்தமை எனக்கு இன்றும் பசுமையான நினைவு.
1999இல் சூட்டி மறைந்தார். நேற்று 22.3.2014 சித்தி மறைந்தார்.
திரு. மு. திருச்செல்வம் திருமதி புனிதம் அவர்களிருவரும் அவர்கள் பெற்ற நான்கு மக்களும் அவரவர்கள் இல்லத்தாரும் என்மீது அளவற்ற பாசம் கொண்டவர்கள்.
29.03.2014
எளிய மக்கள் கட்சி (ஆம் ஆத்மிக் கட்சி)யின் ஆலந்தூர் சட்ட சபைத் தொகுதி வேட்பாளர் ஞானி.
இதழாளர், இனியவர், ஆழ்ந்து படிக்கும் வாசகர், நற்சிந்தனையாளர், கருத்துருவாக்கி எனப் பலரும் அறிந்த புகழாளர் ஞானியைக் கடந்த 20 ஆண்டுகளாக அறிவேன்.
25.3.14 அன்று மாலை சென்னை, மயிலாப்பூர், டி டி கிருட்டினமாச்சாரி சாலை, தாகி மையத்தில் ஞானியின் உரை.
சாகித்திய அகதமி, சங்கீத நாடக அகதமி போன்ற அமைப்புகள் பல விருதளித்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் கட்டுரைகளை எடுத்து நோக்கி உரையாற்றினார் ஞானி.
இந்திரா பார்த்தசாரதி ஏற்புரை வழங்கினார்.
இருவரும் உரையாற்ற மெய்ம்மறந்து கேட்டேன். என்னைப்போன்று பலர் அங்கு இலக்கியச் சிந்தனையில் தோய்ந்திருந்தனர். அங்கு வந்திருந்த பலர் படைப்பாளிகள். புகழ்பூத்த படைப்பாளிகள். இந்திரா பார்த்த சாரதியின் கட்டுரைகளைப் பதிப்பித்த கவிதா பதிப்பகம் திரு. சொக்கலிங்கம் வந்திருந்தார்.
திரு. சாரி, திரு. இரவி தமிழ்வாணன், திரு. சாருகேசி, ஆகிய ஆர்வலர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
படம் பார்க்க
31.03.2014
1981இல் சவூதி அரேபியத் துறைமுக நகரம் யெத்தாவில் மேசைக் கணிணி ஒன்றை வாங்கினேன்.
தாய்வானில் இணக்கிய ஆப்பிள் கணிணியின் நகலி.
கணிணியோடுள்ள நேரடித் தொடர்பு அப்பொழுது தொடங்கியது.
சென்னை மாநிலக் கல்லூரியின் புதிய தேர்வரங்க அறையில் நேற்று 30.3.14 காலை 1030 மணி தொடக்கம் கணிணித் தமிழ் வளர்ச்சிப் பேரவையின் இரண்டாம் மாநாட்டில் கலந்து கொள்ளும் வரை தொடர்ச்சியாகக் கணிணி யோடு பழகி வளர்ந்தேன்.
1.பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம்,
2.தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலர் முனைவர் மூ. இராசாராம்,
3.தமிழ்நாடு அரசின் தகவல்தொழில்நுட்பத்துறைச் செயலர் முனைவர் தா.கி. இராமச்சந்திரன்,
4. தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் முனைவர் கா.மு. சேகர்,
5. நடுவண் மொழியியல் நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் ல. இராமமூர்த்தி,
6. சிங்கப்பூர் தமிழ் ஆய்வாளர் திருமிகு இராஜேஸ்வரன்
பூபாலன்,
7. மலேசியாவைச் சேர்ந்த திருமிகு இளந்தமிழ் ,
8. உலகத் தமிழ்ச்சங்கத்தின் தனி அலுவலர் முனைவர் பசும்பொன்,
9. செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் இயக்ககப் பொறுப்பு அலுவலர் திருமிகு மா. பூங்குன்றன்,
10. மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப. மகாலிங்கம்
11. முனைவர் இராம. கிருட்டிணன் ( இராமகி )
12. பேரா. ம. கணேசன் ( அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) ,
13. திருமிகு. நாக. இளங்கோவன் ( தமிழ் அறிதியல் அறிஞர்) ,
14. பேரா. நடராசபிள்ளை ( மைசூர்),
15. பேரா. சாம் மோகன்லால் ( மைசூர்) ,
16. முனைவர் செல்வி காமாட்சி ( மாநிலக் கல்லூரி) ,
17. முனைவர் உமாராசு ( மதுரைப் பல்கலைக்கழகம்) ,
18. முனைவர் தனலட்சுமி ( எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம்),
19. பேரா. வி.நாகராசன் ( சென்னைப் பல்கலைக்கழகம்),
20. முனைவர் அருள்மொழி ( ஐதாராபாத் பல்கலைக்கழகம்) ,
21. திருமிகு தெ.சு. மணி ( ஊடகவியலாளர்) ,
22. முனைவர் அண்ணாகண்ணன் ( மேனாள் பதிப்பாசிரியர் யாஹு இந்தியா),
23. திருமதி ஜேஸ்லின் பிரிசில்லா ( பேராசிரியை),
24. முனைவர் துரை மணிகண்டன் ( திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்)
ஆகியோர் வழங்கிய கருத்துரைகளை மாலை 1600 மணி வரை கேட்டுக்கொண்டிருந்தேன்.

கீழ்க்கண்ட மூன்று தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேறின:
1. கணினித்தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ் மொழித் தொழில்நுட்ப மையம் ஒன்றைத் தமிழகத்தில் நடுவண் அரசின் நிதி நல்கையும் பெற்றுத் தமிழக அரசு நிறுவவேண்டும்.
1. கணினித்தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ் மொழித் தொழில்நுட்ப மையம் ஒன்றைத் தமிழகத்தில் நடுவண் அரசின் நிதி நல்கையும் பெற்றுத் தமிழக அரசு நிறுவவேண்டும்.
2. மேற்கூறிய தமிழ் மொழித் தொழில்நுட்ப மையமானது தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்களில் இயங்கும் தமிழ் மொழித் துறைகள்,
மொழியியல் துறைகள், கணினியியல் துறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கணினித் தமிழ் வளர்ச்சிக்குத்
தேவையான பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
மொழியியல் துறைகள், கணினியியல் துறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கணினித் தமிழ் வளர்ச்சிக்குத்
தேவையான பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
3. மின்-வணிகம், மின்-ஆளுகை, மின்-கல்வி, மின்-நூலகம் போன்ற பல துறைகளை வளர்த்துக் கணினித்தமிழின் பயன்பாட்டு எல்லை விரிவாகவேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும் தகவல் தொழில்நுட்பத் துறையும்
இணைந்து, வகுத்துச் செயலாற்றவேண்டும்,
இணைந்து, வகுத்துச் செயலாற்றவேண்டும்,
13.04.2014
16.04.2014
அம்மா என்று அழைக்கத் தமிழ்
அப்பா என்று அழைக்கத் தமிழ்
அம்மையே அப்பா, அப்பன் நீ அம்மை நீ
என்று அழைக்கத் தமிழ்.
மறவன்புலவு அருள்மிகு வள்ளக்குளப் பிள்ளையார் கோயிலில் சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சிகள்
1. காலை பொங்கல்
2. காலை வழிபாடு
3. காலை கைச்சிறப்பு
4. மாலை அருளுரை தமிழ்நாடு ஈந்த தவத்திரு மு. பெ. சத்தியவேல்முருகனார்
1. காலை பொங்கல்
2. காலை வழிபாடு
3. காலை கைச்சிறப்பு
4. மாலை அருளுரை தமிழ்நாடு ஈந்த தவத்திரு மு. பெ. சத்தியவேல்முருகனார்
படங்கள் பார்க்க பகிர்க
16.04.2014
அம்மா என்று அழைக்கத் தமிழ்
அப்பா என்று அழைக்கத் தமிழ்
அம்மையே அப்பா, அப்பன் நீ அம்மை நீ
என்று அழைக்கத் தமிழ்.
பிறந்து தமிழ் மொழிபயின்றதே
இறைவன் மீது காதல் சிறந்து
அவன் சேவடி தொழுவதற்கன்றோ!
இறைவன் மீது காதல் சிறந்து
அவன் சேவடி தொழுவதற்கன்றோ!
ஈழத்தில் தமிழில் வழிபாடு
நாளாந்த நடைமுறை சிற்றுர்க் கோயில்களில்
பயிற்சி அற்றவர் பலர்.
நாளாந்த நடைமுறை சிற்றுர்க் கோயில்களில்
பயிற்சி அற்றவர் பலர்.
அவர்களுக்கு முறையான பயிற்சி.
தமிழ் வழிபாட்டில் முறைசார் கல்வி.
28.1.14 காலை இணுவிலில் தொடங்கிய முயற்சி.
தமிழ் வழிபாட்டில் முறைசார் கல்வி.
28.1.14 காலை இணுவிலில் தொடங்கிய முயற்சி.
36 சைவப் பூசகர் முறையான சான்றிதழுடன் 20.4.2014 அன்று திகழ்வர்
சைவ நெறிக் கூடத்தின் தளர்விலா முயற்சி.
சுவிசு பேர்ண் நகரம் அருள்மிகு ஞானலிங்கேச்சரர் கோயிலாரின் ஆதரவுடன் பெரு முயற்சி.
சைவ நெறிக் கூடத்தின் தளர்விலா முயற்சி.
சுவிசு பேர்ண் நகரம் அருள்மிகு ஞானலிங்கேச்சரர் கோயிலாரின் ஆதரவுடன் பெரு முயற்சி.
மருத்துவர் நந்தகுமாரின் அயரா உழைப்பு.
தமிழ்நாடு ஈந்த தவத்திரு மு பெ சத்தியவேல்முருகனாரின் வழிகாட்டல், பயிற்சி, இடைவிடா அறிவூட்டல்.
தமிழ்நாடு ஈந்த தவத்திரு மு பெ சத்தியவேல்முருகனாரின் வழிகாட்டல், பயிற்சி, இடைவிடா அறிவூட்டல்.
இதுவே ஈழத்தில் தமிழில் வழிபாட்டிற்கான
முறைசார் கல்வி வழங்கும் முதல் முயற்சி.
முறைசார் கல்வி வழங்கும் முதல் முயற்சி.
மருத்துவர் நந்தகுமார் தவத்திரு சத்தியவேல்முருகனார் அன்னாருடன் வந்த 3 சிவனடியார்
யாவரும் 12.4.14 மாலை
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப்
பேராசிரியர்களைச் சந்தித்தனர்.
யாவரும் 12.4.14 மாலை
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப்
பேராசிரியர்களைச் சந்தித்தனர்.
கைதடி சங்கரன் தங்கராசாவும் நானும் உடனிருந்தோம்.
படங்கள் பார்க்க, பகிர்க.
14.04.2014 மாலை 1800 மணி
பேரா. அரங்க இராமலிங்கம் புத்தாண்டு வாழ்த்துரை
மறவன்புலவு அருள்மிகு வள்ளக்குளப் பிள்ளையார் கோயில்
14.04.2014 மாலை 1800 மணி
பேரா. அரங்க இராமலிங்கம் புத்தாண்டு வாழ்த்துரை
மறவன்புலவு அருள்மிகு வள்ளக்குளப் பிள்ளையார் கோயில்
19.04.2014
தமிழைப் பாடு துயரம் போகும்.
தமிழைப் பாடு இன்பம் பெருகும்.
தமிழைப் பாடு ஒழுக்கம் சிறக்கும்
தமிழைப் பாடு அருள் கொழிக்கும்
என்றனர் நாயன்மார்கள், ஆழ்வார்கள்
தமிழைப் பாடு இன்பம் பெருகும்.
தமிழைப் பாடு ஒழுக்கம் சிறக்கும்
தமிழைப் பாடு அருள் கொழிக்கும்
என்றனர் நாயன்மார்கள், ஆழ்வார்கள்
நேற்று வெள்ளிக்கிழமை,
ஈழத்திழ் பண்டைத் துறை
சம்புகோளப்பட்டினம் (மாதகல்)
ஈழத்திழ் பண்டைத் துறை
சம்புகோளப்பட்டினம் (மாதகல்)
சிங்களப் பெயர் தம்பகொலபடுண
(சம்பு = தம்ப, கோள = கொல, பட்டினம் = படுண)
(சம்பு = தம்ப, கோள = கொல, பட்டினம் = படுண)
21 அடி உயரச் சிவனார் திருவுருவச் சிலை முன்னிலையில்
காலை 0900 மணி தொடக்கம்
36 அருட்சுனைஞர் தீக்கை பெற்றனர்.
தமிழ் வழிபாட்டுப் பயிற்சியில் ஒரு படிநிலை இத்தீக்கை.
காலை 0900 மணி தொடக்கம்
36 அருட்சுனைஞர் தீக்கை பெற்றனர்.
தமிழ் வழிபாட்டுப் பயிற்சியில் ஒரு படிநிலை இத்தீக்கை.
தமிழ்நாடு ஈந்த தவத்திரு மு. பெ. சத்தியவேல்முருகனாரின் திருவருட்பணி.
படங்கள் பார்க்க
21.04.2014
23.04.2104
உலகப் புத்தக நாள் 23.04.2014
மறவன்புலவில் இருந்து 3 கிமீ தொலைவில் தச்சன்தோப்பு நூலகத்தில் புத்தகக் காட்சி.
1948ஆம் ஆண்டு 7 வயதில் தச்சன்தோப்புத் தொடர்வண்டி நிலையத்துக்கு மாட்டு வண்டியில் செல்வேன். தொடர்வண்டி ஏறுவேன். யாழ்ப்பாணம் செல்வேன். 2 கிமீ நடப்பேன். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தமிழ்க் கலவன் பாடசாலையை அடைவேன். நான்காம் வகுப்பு மாணவனாகப் படிக்கச் சென்ற அந்தக் காலைவேளைகளை நினைவில் தாங்கியவாறு புத்தகக் காட்சிக்குள் சென்றேன்.
ஈழத்தில் பதிப்பாகிய தமிழ்த் தலைப்புகளைப் புரட்டியவாறு பதிப்புலகுள்ளும் புத்தகங்களுள்ளும் புகுந்தேன். எத்தனை எழுத்தாளர்! அருமையான தலைப்புகள். வண்ண வண்ண அட்டைகள், நல்ல அச்சுப் பதிப்பு.
என்னோடு 7, 8 வயதுகளிலான மாணவச் செல்வங்கள். நூலகரான அம்மையார் மாணவர்களை ஈர்த்து நூல்களோடு அவர்கள் வளருமாறு ஆற்றும் அரும்பணிகள் கண்டேன்.
படங்கள் பார்க்க
21.04.2014
ஞாயிற்றுகிழமை, சித்திரை 7ஆம் நாள்.
ஈழத்தின் சைவ சமய வரலாற்றில் திருப்புமுனை நாள்.
ஈழத்தின் சைவ சமய வரலாற்றில் திருப்புமுனை நாள்.
பெண்கள், ஆண்கள் என 36 அருட்சுனைஞர்.
கோயிலில் பூசை செய்யும் அர்ச்சகர்.
பிறப்பு முதலாக இறப்பு வரையாக அனைத்து வாழ்வியல் சடங்குகளையும் செய்யும் அருட்சுனைஞர்.
கோயிலில் பூசை செய்யும் அர்ச்சகர்.
பிறப்பு முதலாக இறப்பு வரையாக அனைத்து வாழ்வியல் சடங்குகளையும் செய்யும் அருட்சுனைஞர்.
தமிழிலே பூசை, வழிபாடு, வாழ்வியல் சடங்குகள்.
இயல்பான வாழ்வியல் சடங்குகள்.
இயல்பான வாழ்வியல் சடங்குகள்.
ஈழத்தின் தென்கோடியான அம்பாறையில் இருந்து வந்து பயின்றனர்.
ஈழத்தின் வடபால் நெடுந்தீவில் இருந்து வந்து பயின்றனர்.
ஈழத்தின் வடபால் நெடுந்தீவில் இருந்து வந்து பயின்றனர்.
முறைசார் பயிற்சியை வழங்கியவர் தமிழ்நாடு ஈந்த தவத்திரு மு. பெ. சத்தியவேல்முருகனார் அவர்கள். தமிழ்நாட்டிலிருந்து அவர்களோடு வந்த 4 பயிற்றுநர்கள்.
காரைநகரைச் சேர்ந்த மருத்துவர் நந்தகுமார் சைவசமயப் பேரவை சார்பில் அமைப்புகளை ஒருங்கிணைத்தார். இணுவில் சைவநெறிக் கூடத்தார் ஆதரவு வழங்கினர். சுவிற்சர்லாந்து பேர்ண் நகரம் அருள்மிகு ஞானலிங்கேச்சசரர் கோயிலாரின் நல்லாதரவும் மிகுந்திருந்தது.
முறைசார் பயிற்சி நிறைவில் 36 அருட்சுனைஞருக்கும் சான்றிதழ்கள் வழங்கியநாளே, ஈழத்தின் சைவ சமய வரலாற்றில் திருப்புமுனை நாள்.
படங்கள் பார்க்க
இடுக்கண் களைவதே நட்புக்கு இலக்கணம்.
சென்னையில் எனக்காகப் பல வழக்குகளில் வாதாடியவர் இரா. காந்தி.
கொலை செய்தேன், கொள்ளை அடித்தேன், ஏமாற்றினேன் எனக் குற்றவியல் வழக்குகள் அல்ல அவை.
பொதுநலம் வேண்டித் தன்னலம் துறந்தேன் என்பதால் என்மீது பல வழக்குகள். கட்டணம் எதுவும் வாங்காமல் எனக்காக நீதிமன்றத்தில் எப்பொழுதும் வாதாடியவர் இரா. காந்தி. அந்த வழக்குகளால் நீதிமன்றத்துக்கு வெளியே வந்த அச்சுறுத்தல்களைப் போக்கியவர் இரா. காந்தி.

இரா. காந்தி மூத்த வழக்கறிஞர்.
அவரது சட்ட உதவியாளர் அறுவர் இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள்.
அவரது சட்ட உதவியாளர் அறுவர் இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள்.
திருமணமாகி 50 ஆண்டுகள்.
வழக்கறிஞர் தொழிலில் 50 ஆண்டுகள்.
வழக்கறிஞர் தொழிலில் 50 ஆண்டுகள்.
பொன்விழா நிகழ்வுகள்.
இந்திய அரசின் அஞ்சல் துறை விழாநாள் அஞ்சல்தலை வெளியிட்டது.
இந்திய அரசின் அஞ்சல் துறை விழாநாள் அஞ்சல்தலை வெளியிட்டது.
தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினர்.
ஆளுநர் தன் மாளிகையிலேயே விழாவை நடத்துமாறு கேட்டார்.
விழாவுக்கு வந்தோருக்கு விருந்தும் படைத்தார்.
ஆளுநர் தன் மாளிகையிலேயே விழாவை நடத்துமாறு கேட்டார்.
விழாவுக்கு வந்தோருக்கு விருந்தும் படைத்தார்.
திருமதி விசாலாட்சி காந்தி, ஆண் மக்கள் இருவர், மகள் யாவரும் தத்தம் இணைகளுடனும் மக்களுடனும் வந்திருந்தனர்.
நீதியரசர்கள், சட்டமா அதிபர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், துணை வேந்தர்கள், தமிழ் அறிஞர்கள் எனச் சென்னையின் புலமைத் திலகங்கள் கூடியிருந்த விழா.
முனைவர் அண்ணா கண்ணன், கலைமாமணி சசிரேகா, நித்தியா நான் என நால்வர் விழாவுக்குச் சென்றோம்.
படங்கள் பார்க்க
02.05.2014
நெய் உருண்டை.
எடுக்கலாம் எனத் தொட்டேன்.
உடைந்தது, உடைந்த பகுதியை எடுக்க முயன்றேன்.
மாவாகிச் சொரிந்தது.
எடுக்கலாம் எனத் தொட்டேன்.
உடைந்தது, உடைந்த பகுதியை எடுக்க முயன்றேன்.
மாவாகிச் சொரிந்தது.
வாய்க்குள் வைத்தால் கரைந்து இனித்து, சுவைத்து மீண்டும் ஓர் உருண்டையை நாக்குக் கேட்கும்.
பெரியவர் விடிவி தெய்வநாயகம்பிள்ளை, துணைவியார் சிதம்பரத்தம்மாள் இருவரும் பச்சையப்பன் விடுதிக்கு வந்தார்கள். தம் மகன் ஈசுவரனைப் பார்க்கக் கொழும்பில் இருந்து படகு மகிழுந்தை ஓட்டிக்கொண்டு வந்தார்கள். (1959இல் காரில் கொழும்பில் இருந்து சென்னை வரலாம் போகலாம், கடலைக் கடக்கும் வேளை கப்பலில் மகிழுந்து வரும்)
அந்த மகிழுந்து வழியில் திருநெல்வேலியில் தங்கி வந்ததால் உள்ளே இருந்த பல பொருள்களுள் நெய்யுருண்டையும் இருந்தது.
பெரியவரும் துணைவியாரும் போனபின்பு ஈசுவரனின் அறை வாயிலில் வரிசையாக நிற்போம் நெய்யுருண்டைக்காக.
55 ஆண்டு காலமாகத் தொடரச்சியாகத் தலைநாள் தந்த விருப்புடன் என் நாவிற்கு நெய்யுருண்டை தருபவர்கள் விடிவி தெய்வநாயகம் இல்லத்தார் (மக்கள், மருமக்கள் என யாவரும் நினைவோடு தருவார்கள்).
ஈசுவரனின் தாயார் சிதம்பரத்தம்மாளுக்கு நேற்று 78ஆவது பிறந்த நாள். விழாவுக்கு வந்திருந்த அம்மையாரின் உறவுகளுக்கு நான் அரை மணி நேரம் உரையாற்றினேன்.
தமிழோடும் சைவத்தோடும் ஒன்பது மணிகளாக ஒன்பது மக்களை வளர்த்தெடுத்த, கணவரை இலங்கையின் உயர்விருதான தேசபந்துக்குத் தயாரித்த, பண்பட்ட வாழ்வின் தூண்டாமணி விளக்காக விளங்கும் அம்மையார் மேலும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வழிபடுகிறேன் என்பதே என் பேச்சின் கரு.
பாராட்டுகள் வாழ்த்துகள் பரிமாற்றத்துடன் நல்விருந்தும் பரிமாறினர், படங்கள் பார்க்க.
3.5.2014
3.5.2014
திருவான்மியூர் 03.05.2014 சனிக்கிழமை காலை
இரண்டாவது அனைத்துலகத் சைவத் திருமுறை மாநாடு
இன்றும் நாளையும்
அனைத்துலகச் சைவத் திருமுறைக் கூட்டமைப்பு
இணைப்பாளர் சிவனடியார் சண்முகானந்தனார்.
இன்றும் நாளையும்
அனைத்துலகச் சைவத் திருமுறைக் கூட்டமைப்பு
இணைப்பாளர் சிவனடியார் சண்முகானந்தனார்.
இலண்டனில் இருந்து பேரா. இன்பூரான்
விசாகப்பட்டினத்திலிருந்து பேரா. திவாகர்
குப்பத்திலிருந்து பேரா. சத்தியவாணி
மதுரையில் இருந்து பேரா. காளைராசன்
தேவகோட்டையில் இருந்து பேரா. சந்திரமோகன்
விசாகப்பட்டினத்திலிருந்து பேரா. திவாகர்
குப்பத்திலிருந்து பேரா. சத்தியவாணி
மதுரையில் இருந்து பேரா. காளைராசன்
தேவகோட்டையில் இருந்து பேரா. சந்திரமோகன்
திருமுறைத் தேரைச் சைவ உலகுக்கு உடைமையாக்கித் தமிழில் வழிபட்டேன்.
தெலுங்கு மக்களுக்குத் திருமுறைகளைக் கொண்டு செல்க.
தமிழ் நாடு முழுவதற்கமான திருமுறைப் போட்டி நடத்துக.
இவை என் உரையின் கரு.
தமிழ் நாடு முழுவதற்கமான திருமுறைப் போட்டி நடத்துக.
இவை என் உரையின் கரு.
சில படங்கள் பார்க்க
ஆத்திரேலியாவில் இருந்து நடராசர் சிலை தமிழகத்துக்கு வருகிறது.
ஆத்திரேலிய அரசு திருப்பி அனுப்புகிறது.
நடராசர் சிலையைத் திருடி விற்றவர் சிறையில்.
சிலை பற்றிய துல்லிய தகவல்களை உலகுக்குத் தந்தவர் சிங்கப்பூரில் வாழும் விஜயகுமார். சிலையை மீட்பதற்காக கடுமையாக உழைத்தார்.
ஆத்திரேலிய அரசு திருப்பி அனுப்புகிறது.
நடராசர் சிலையைத் திருடி விற்றவர் சிறையில்.
சிலை பற்றிய துல்லிய தகவல்களை உலகுக்குத் தந்தவர் சிங்கப்பூரில் வாழும் விஜயகுமார். சிலையை மீட்பதற்காக கடுமையாக உழைத்தார்.
தாராசுரத்திலும் தஞ்சாவூரிலும் திருமுறைச் சிற்பங்கள் ஓவியங்கள் பற்றிய விளக்கமான ஒலி ஒளிரக் காட்சியை இன்று காலை திருவான்மியூரில் இரண்டாவது அனைத்துலகத் திருமுறை மாநாட்டில் தந்தவர் விஜயகுமார், அவர் நேரில் வரமுடியவில்லை, அவர் சார்பில் அரவிந்தன் காட்டினார், விளக்கினார்.
விஜயகுமாரின் பெற்றோர் சுந்தரேசன் இணையர் வந்திருந்தனர். projectmadurai.com இணைய அமைப்பாளர் பேரா. கல்யாணசுந்தனாரின் உடன்பிறந்த அண்ணரே சுந்தரேசனார்.
திராவிட பல்கலைக் கழகத்தில் இருந்து தெலுங்குக்குத் திருமுறைகளைக் கொண்டுசெல்லும் பேரா. வேங்கட சத்தியவாணி உரையாற்றினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைப் பேரா. காளைராசன் உரையாற்றினார்.
நேற்றைய நிகழ்ச்சியில் தேவகோட்டையில் இருந்து பேரா. சந்திரமோகன் உரையாற்றினார்.
நேற்றைய நிகழ்ச்சியில் இலண்டனில் இருந்து பேரா. இன்னமபூரான் உரையாற்றினார்.
இவர்கள் யாவரையும் மாநாட்டு அமைப்பாளர் சிவனடியார் சண்முகானந்தம் அறியுமாறு தெரிவித்தவர் விசாகப்பட்டினம் பேரா. வேங்கட திவாகர். பன்னிரு திருமுறைத் தெலுங்கு மொழிபெயர்ப்பின் ஒருங்கிணைப்பாளர்.
கல்வெட்டுகளில் திருமுறைகள் என்ற தலைப்பில் வேங்கட திவாகர் இன்று காலை அரிய உரை ஆற்றினார்.
படங்கள் பார்க்க
11.5.2014
11.5.2014
பேசும் தமிழ் அகராதி
பேசும் தமிழ் - சிங்கள மொழிபெயர்ப்பாளர்
பேசும் தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்பாளர்
மேலும் 16 மொழிகள்
பேசும் தமிழ் - சிங்கள மொழிபெயர்ப்பாளர்
பேசும் தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்பாளர்
மேலும் 16 மொழிகள்
கொரிய நாட்டுத் தயாரிப்பு
விற்பனையில் உள்ளது.
விற்பனையில் உள்ளது.
கொழும்பில் ஏரிக்கரைப் புத்தகசாலையில்
இலங்கை ரூ. 16,000 வரை சொல்கிறார்கள்.
இலங்கை ரூ. 16,000 வரை சொல்கிறார்கள்.
கருவிகளைப் பார்த்தேன்.
இயக்கிப் பார்க்கவில்லை
இயக்கிப் பார்க்கவில்லை
விளம்பரம் படமாக
18.05.2014
கவிஞர்
சிற்றிதழ் எழுத்தாளர்
பல நூல்களின் ஆசிரியர்
மொழிபெயர்ப்பாளர்
இராணி வார இதழ் துணை ஆசிரியர்
அமுதசுரபி ஆசிரியர்
சிபி மின்னிதழ் ஆசிரியர்
யாகூ செய்திகள் தமிழ்ப் பதிப்பு ஆசிரியர்
மின் ஆள்கை தலைப்பில் பன்முக ஆய்வு
அந்த ஆய்வே முனைவர் பட்டம் தந்தது.
கவிஞர்
சிற்றிதழ் எழுத்தாளர்
பல நூல்களின் ஆசிரியர்
மொழிபெயர்ப்பாளர்
இராணி வார இதழ் துணை ஆசிரியர்
அமுதசுரபி ஆசிரியர்
சிபி மின்னிதழ் ஆசிரியர்
யாகூ செய்திகள் தமிழ்ப் பதிப்பு ஆசிரியர்
மின் ஆள்கை தலைப்பில் பன்முக ஆய்வு
அந்த ஆய்வே முனைவர் பட்டம் தந்தது.
தந்தையார் தமிழாசிரியர்.
திருவாரூரில் கலைஞர் கருணாநிதி படித்த பள்ளியில் பிற்காலத்தில் இவரும் மாணவர்.
வணிகப் பட்டதாரி, தமிழில் முதுகலைப் பட்டம்.
திருவாரூரில் கலைஞர் கருணாநிதி படித்த பள்ளியில் பிற்காலத்தில் இவரும் மாணவர்.
வணிகப் பட்டதாரி, தமிழில் முதுகலைப் பட்டம்.
ஏமாவுக்குக் கணவர், நித்திலாவுக்குத் தந்தை.
அவரே அண்ணா கண்ணன்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் வல்லமை மின்னிதழைத் தொடங்குகிறார்.
இடைவிடாத முயற்சி.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் வல்லமை மின்னிதழைத் தொடங்குகிறார்.
இடைவிடாத முயற்சி.
வல்லமை மின்னிதழ் www.vallamai.com
வல்லமை மின் குழுமம் vallamai@googlegroups.com
வல்லமை மின் குழுமம் vallamai@googlegroups.com
எனச் சிறகு விரித்துப் பறக்கும் வல்லமை www.vallamai.com
அடுத்துச் செல்நெறி ??
அடுத்துச் செல்நெறி ??
வல்லமை தொடங்கிய நாளில் அதன் ஆலோசனைக் குழுவில் நானும் ஒருவன்,
நேற்று 17.5.14 காலை எழும்பூரில் எனதில்லத்தில் அடுத்துச் செல்நெறிக்கான ஆலோசனைக் கூட்டம்
நேரே வந்தோர், இணையம் வழி கருத்துரைத்தோர் எனப் பலர் வல்லமையின் வளர்ச்சி ஆலோசகர்கள்.
நேரே வந்தோர், இணையம் வழி கருத்துரைத்தோர் எனப் பலர் வல்லமையின் வளர்ச்சி ஆலோசகர்கள்.
கவிஞர் முனைவர் அண்ணா கண்ணன் வழிகாட்டலில்
2 கார்த்திகேயன்
3 நாகராசன்
4 சுபாசினி
5 பார்த்தசாரதி
6 அரங்கராசன்
7 சச்சிதானந்தன்
நேரிலும்
2 கார்த்திகேயன்
3 நாகராசன்
4 சுபாசினி
5 பார்த்தசாரதி
6 அரங்கராசன்
7 சச்சிதானந்தன்
நேரிலும்
இணையவழி
1. விசாகப்பட்டினத்திலிருந்து திவாகர்
2. நீலாங்கரையிலிருந்து இன்னம்பூரான்
3. பங்களூரிலிருந்து ரஞ்சனி
4. சென்னையிலிருந்து சம்பத்து ராமசாமி
5. ஈரோட்டில் இருந்து பவள சங்கரி
கருத்துரைத்தோம்.
சென்னை அண்ணா சாலை மதுரா உணவகத்தில் மதிய உணவு.

22.05.2014
பேராசிரியர் அரங்க இராமலிங்கனார் எனக்குத் தமிழாசிரியர்.
எனக்கு வயது 73+
அவருக்கு வயது சரியாக 60.
எனக்கு வயது 73+
அவருக்கு வயது சரியாக 60.
ஞாயிறு 18.5, திங்கள் 19.5 இருநாள்களிலும் அவரது மணி விழாவைக் கொண்டாடினோம். சென்னை புரசைவாக்கம் அருள்மிகு தாமரைத் தாயார் உடனுறை கங்காதீச்சரர் கோயிலில் தொடர் விழா.
படங்கள் பார்க்க
படங்கள் பார்க்க
1,000 ஆண்டுகளுக்கு முன்னர் மாணிக்கவாசகர் அருளிய நூல் திருவாசகம்.
திருவாசகத்தின் முழுமையான முதலாவது மொழிபெயர்ப்பு 115 ஆண்டுகளுக்கு முன் 1900இல் வெளியானது. மொழிபெயர்த்தவர் ஜி. யூ. போப்பையர். ஆங்கில மொழிபெயர்ப்பு.
இந்தியில் பேரா. சுந்தரம் மொழிபெயர்த்து கொல்கத்தா சாந்திநிகேதன் வெளியீடாக 1995இல் நூலாயது.
மலையாளத்தில் திருவாசகம் திரு. சந்திரசேகரன் நாயர் மொழிபெயர்த்து திருவனந்தபுரம் மன்னர் வெளியிட்டு 2012இல் நூலாயது. (தருமபுரம் ஆதீனத் திருப்பணிக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்)
தெலுங்கில் திருவாசகம் பேராசிரியர்கள் பரிமளம்+அரம்பை மொழிபெயர்த்து 2013இல் திருமலை திருப்பதி தேவத்தானத்தால் நூலாயது. (தருமபுரம் ஆதீனத் திருப்பணிக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்)
கன்னடத்தில் திருவாசகம் பேரா. ஜெயலலிதா மொழிபெயர்த்து 2014இல் நூலாயது. (தருமபுரம் ஆதீனத் திருப்பணிக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்)
வடமொழியில் திருவாசகம் தெரு. ச. கோதண்டராமன் மொழிபெயர்த்துச் சுவாமி தயானந்த சரசுவதி அவர்கள் அச்சிடுவிக்க 2014இல் நூலாகிறது. (தருமபுரம் ஆதீனத் திருப்பணிக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்)
சிங்களத்தில் திருவாசகம் திரு. வடிவேல் இராமசாமி, திரு. இலிண்டன், திரு. வே. சண்முகநாதன் (மூவரும் கல்முனை) மொழிபெயர்த்துள்ளனர். (தருமபுரம் ஆதீனத் திருப்பணிக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்) வெளியீட்டாளரைத் தேடிக்கொண்டிருந்தேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக் கைலாசபதி அரங்கத்தில் 26.05.2014 அன்று மாண்புமிகு அமைச்சர் வாசுதேவா நாணயக்கார இந்து, புத்த கலாச்சாரப் பேரவையின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார், வருக, திருவாசகச் சிங்கள மொழிபெயர்ப்பபை அவரிடம் காட்டுக என என்னை அழைத்தவர் கலாநிதி மோகன். அமைச்சரின் தமிழ்ப்பிரிவுச் செயலாளர்.
அங்கே நாடாளுமன்ற உறுப்பினர் வண. அதுரலிய இரத்தின தேரர் இருந்தார். தமிழ்ச் சாகித்தியங்கள் சிங்கள மக்களிடையே முழுமையாகப் போய்ச் சேரவில்லை என வண. அதுரலிய இரத்தின தேரர் உரையில் குறிப்பிட்டார். திருக்குறள் சிங்கள மொழிபெயர்ப்புச் சிங்கள மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக உள்ளதாகக் கூறினார்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கராவும் அங்கு இருந்தார். வாசுதேவ நாணயக்காராவும் நானும் ஒரே அரசியல் கொள்கையை மேடைகளில் பேசியவர்கள். இப்பொழுது அவர் அமைச்சர். ஆனாலும் எனக்கு இனிமை மாறாத நண்பர்.
அமைச்சரிடம் திருவாசகம் சிங்கள மெழிபெயர்ப்பைக் காட்டினேன். பக்கங்களைப் புரட்டியபின் வண. அதுரலிய இரத்தின தேரரிடம் அமைச்சர் நூலைக் கொடுத்தார்.
திருவாசகம் சிங்கள நூலின் பக்கங்களைப் புரட்டிய தேரர், நான் எழுதிய முன்னுரையைப் படித்தார். பாராட்டினார். "அருமையான இந்த நூலில் எனக்கு ஒரு படி தருவீர்களா" எனக் கேட்டார். மேடையில் வெளியிட்டு வையுங்கள் படியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றேன். மேலதிகப் படிகள் அச்சிடப் பணமில்லாமல் இருக்கிறேன் என்றேன்.
இந்த அருமையான நூல் சிங்கள மக்களுக்குக் கிடைக்கவேண்டும் எனத் தேரர் கூறினார். அச்சிட்டுத் தரவேண்டிய கடமை அமைச்சருக்கு உள்ளது. "அச்சிட்டுத் தாருங்கள்" என அமைச்சரிடம் தேரர் கேட்டார். அமைச்சரும் மேடையிலேயே அச்சிட ஒப்புக் கொண்டார். செலவு விவரங்களைக் கடிதமாகத் தாருங்கள் என அமைச்சர் என்னிடம் கேட்டார்.
அமைச்சர் எழுந்தார், தேரரும் எழுந்தார், நான் முறையாக அறிவித்தேன். அமைச்சர் நூலை வெளியிட்டார், தேரர் பெற்றுக்கொண்டார்.
விழா நிறைவில் புற்ப்படமுன் நான் இருந்த இடம் தேடித் தேரர் வந்தார். என் முகவரி, தொலைப்பேசி விவரம் பெற்றார். திருமுறை முழுவதும் சிங்களத்துக்கு மொழிபெயர்ப்பாகும் செய்தியை நான் அவரிடம் சொன்னேன். செலவுகளை ஏற்குமாறு அரசிடம் சொல்வேன், பணியைத் தொடருங்கள் எனத் தேரர் ஊக்குவித்தார்.
படங்கள் பார்க்க
09.06.2014
09.06.2014
இன்று 09.06.2014 காலை மறவன்புலவில் காவடி ஊர்வலம்.
ஊர்முழுவதும் தொழுது சென்ற ஊர்வலம்.
ஊர்முழுவதும் தொழுது சென்ற ஊர்வலம்.
அருள்மிகு வள்ளக்குளப் பிள்ளையார் கோயிலில் தொடங்கியது.
அருள்மிகு பெரிய தம்பிரான் கோயிலில் நிறைவுற்றது.
அருள்மிகு பெரிய தம்பிரான் கோயிலில் நிறைவுற்றது.
அருள் பெருக்கும் பரவசம்.
உள்ளங்களில் பெருக்கெடுத்த பத்திப் பரவசம்.
உள்ளங்களில் பெருக்கெடுத்த பத்திப் பரவசம்.
படங்கள் பார்க்க.
12.06.2014
12.06.2014
பேரினவாதம் சார்ந்த கொலைவெறி.
புத்த சமயத்துக்கு இடுக்கண் வரலாம்.
எனவே புத்த சமயத்தினர் தொடங்கிய கொலை வெறி.
அண்மைக்கால இலங்கை வரலாற்றில் 1915இல் தொடங்கியது.
புத்த சமயத்துக்கு இடுக்கண் வரலாம்.
எனவே புத்த சமயத்தினர் தொடங்கிய கொலை வெறி.
அண்மைக்கால இலங்கை வரலாற்றில் 1915இல் தொடங்கியது.
பல்லாண்டுகளாகத் தொடர்ந்தது.
பாதிப்புக்குள்ளானவர் இலங்கையில் வாழ்ந்த ஏனைய சமயத்தவர்.
பாதிப்பைத் தாங்கவொண்ணா உளத்தினர்
எதிர் வன்முறையாகக் கொலைகளைச் செய்தனர்.
பாதிப்புக்குள்ளானவர் இலங்கையில் வாழ்ந்த ஏனைய சமயத்தவர்.
பாதிப்பைத் தாங்கவொண்ணா உளத்தினர்
எதிர் வன்முறையாகக் கொலைகளைச் செய்தனர்.
இந்தக் கொலைவெறி முயற்சிகளைத் தாண்டி,
உயிரோடு வாழ்வோரின் வெளிப்பாட்டைக் காண்போர்,
இத்தைகைய திறமைசாலிகள்
இலட்சக்கணக்கான எண்ணிக்கையில்
உயிரோடு இல்லையே என ஏங்குவர்.
உயிரோடு வாழ்வோரின் வெளிப்பாட்டைக் காண்போர்,
இத்தைகைய திறமைசாலிகள்
இலட்சக்கணக்கான எண்ணிக்கையில்
உயிரோடு இல்லையே என ஏங்குவர்.
பேரினவாதக் கொலைவெறிக்குத் தப்பிய ஒருவர்.
திறமையின் உச்சமான ஒருவர்.
நாற்பது வயதினரான ஒருவர்.
படைத்திருக்கும் சிற்பங்களைப் பார்க்கும் பொழுது,
இத்தகைய சிறந்தவர்கள் திறமைசாலிகள்,
சிற்பிகள், புலமையாளர், பலரைச்
சைவ மக்கள் இழந்து தவிக்கின்ற என் உள்ளம் கொந்தளித்து..

யாழ்ப்பாண நகரத்தில்
நீராவியடியில் பிள்ளையார் கோயிலில்
தேர்கட்டிய 40 வயதினரான சிற்பாசாரியரையும்
அவர் வடித்த சிற்பங்களையும் பார்த்தபோது,
கொலைவெறி இழப்பின் கொடுமை,
கோரம் உள்ளத்தில் கொந்தளித்தது.
நீராவியடியில் பிள்ளையார் கோயிலில்
தேர்கட்டிய 40 வயதினரான சிற்பாசாரியரையும்
அவர் வடித்த சிற்பங்களையும் பார்த்தபோது,
கொலைவெறி இழப்பின் கொடுமை,
கோரம் உள்ளத்தில் கொந்தளித்தது.
11.6.14 காலை வைகாசி முழுநிலா நாள்.
நீராவியடிப் பிள்ளையார் கோயில்
தேர்த்திருவிழா நாள்.
தான் வடித்து ஓராண்டாகிய தேர்.
அழகைப் பார்த்து நின்ற சிற்பியைக் கண்டேன்.
நீராவியடிப் பிள்ளையார் கோயில்
தேர்த்திருவிழா நாள்.
தான் வடித்து ஓராண்டாகிய தேர்.
அழகைப் பார்த்து நின்ற சிற்பியைக் கண்டேன்.
தேரையும் சிற்பங்களையும் கண்டேன்.
நீங்களும் படங்களில் பார்க்க.
20.06.2014
நீங்களும் படங்களில் பார்க்க.
20.06.2014
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
எனத் தொடங்கும் பாடல்
ஈழக் குழந்தைகள் நாவில்
ஆழப் பதிந்த பாடல்.
நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பாடல்.
எனத் தொடங்கும் பாடல்
ஈழக் குழந்தைகள் நாவில்
ஆழப் பதிந்த பாடல்.
நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பாடல்.
வாயில்லாச் சீவன் வதையாதீர் என்றுசொல்ல
வாயுள்ளார் நெஞ்சம் மரமோ கருங்கல்லோ
சைவமு மில்லையோ சான்றோரு மில்லையோ
தெய்வமு மில்லையோ வென்மனது தேற்றிடவே.
வாயுள்ளார் நெஞ்சம் மரமோ கருங்கல்லோ
சைவமு மில்லையோ சான்றோரு மில்லையோ
தெய்வமு மில்லையோ வென்மனது தேற்றிடவே.
என்ற வரிகளைத் தந்தவரும் அப்பெரியாரே.
தன் ஊரான நவாலியில்
தம்பன்னையில்
அருள்மிகு தில்லைக் காளி திருக்கோயிலில்
அன்றைய உயிர்ப்லியைக் கண்டு
ஆற்றாது அழுது பாடிய பாடலின் வரிகளே
மேற்காணும் வரிகள்.
தம்பன்னையில்
அருள்மிகு தில்லைக் காளி திருக்கோயிலில்
அன்றைய உயிர்ப்லியைக் கண்டு
ஆற்றாது அழுது பாடிய பாடலின் வரிகளே
மேற்காணும் வரிகள்.
21.6.2014 சனிக்கிழமை தம்பன்னையில்
அருள்மிகு தில்லைக் காளி திருக்கோயிலில்
உயிர்ப் பலி கொடுக்க உளர்.
அருள்மிகு தில்லைக் காளி திருக்கோயிலில்
உயிர்ப் பலி கொடுக்க உளர்.
சைவ சமயத்தின் சான்றோர் பெருமக்கள்
தம்பன்னை அருள்மிகு தில்லைக் காளி திருக்கோயிலுக்கு
19.6.2014இல் சென்றனர்.
தம்பன்னை அருள்மிகு தில்லைக் காளி திருக்கோயிலுக்கு
19.6.2014இல் சென்றனர்.
சின்மய மிசன் துறவிகள்
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
யோகேசுவரன்
யாழ். பல்கலைக்கழகப்
பேராசிரியர் வேதநாதன்
பண்ணிசைச் செல்வர்
விக்கினேசுவரன்
எனப் பலர் சென்றோம்.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
யோகேசுவரன்
யாழ். பல்கலைக்கழகப்
பேராசிரியர் வேதநாதன்
பண்ணிசைச் செல்வர்
விக்கினேசுவரன்
எனப் பலர் சென்றோம்.
உயிர்ப் பலியைக் கைவிடுமாறு கோரினோம்.
படங்கள் பார்க்க.
படங்கள் பார்க்க.
21.06.2014
25.06.2014
01.07.2014
04.07.2014
06.07.2014
10.07.2014
2006 தொடக்கம் தருமை ஆதீனத்தின் மின்னம்பல தளம்
www.thevaaram.org ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்.
பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலத்துக்கு எனத்
தமிழகத்தில் வெளியாகும் நாளிதழ் ஒன்றில்
வந்த செய்தி படத்தில் பார்க்க
12.07.2014
24.07.2014
26.07.2014
27.07.2014
02.08.2014
11.08.2014
இலங்கையில் கடற் பாசி வளரப்புக்கு உதவ
இராமேச்சரத்தில் இருந்து
முனைவர் சண்முகம் வந்திருந்தார்.
06.08.2014 அன்று மறவன்புலவுக்கு வந்தார்.
அவரோடு ஏலீசு (Hayleys) வணிக நிறுவனத்திரும் வந்திருந்தனர்.
படங்கள் பார்க்க
11.08.2014
திருக்கோயில்களில் உயிர்ப்பலி வேண்டாம்
என்ற கருத்தை முன்வைத்து
அறவழிப் போராட்டக் குழு மற்றும்
சைவ மகா சபை அன்பர்கள்
நல்லூர்த் திருவிழா 9ஆம் நாள் மாலை
09.08.2014 அன்று நல்லூர் மேற்கு வீதி
மூத்ததம்பி அன்னதான மடத்தில் கூடினோம்.
11.08.2014
12.09.2014
27.09.2014
18.12.2014
மறவன்புலவில் பேச்சி அம்மன் கோயில் திருவிழா.
வழிபட்டேன்.
வழிபட்டேன்.
என் நீண்ட கால நண்பர்களைச் சந்தித்தேன்.
என் மாணவச் செல்வங்கள் மகிழ்ந்தார்கள்.
நண்பகல் அவர்கள் அனைவருடனும் உணவருந்தினேன்.
என் மாணவச் செல்வங்கள் மகிழ்ந்தார்கள்.
நண்பகல் அவர்கள் அனைவருடனும் உணவருந்தினேன்.
12 நாள்களுக்கு விழா.
12ஆவது நாள் (20.6.14) விழாவில் எடுத்த படங்கள்.
25.06.2014
12ஆவது நாள் (20.6.14) விழாவில் எடுத்த படங்கள்.
25.06.2014
தமிழ் நூல்கள் சிங்களத்தில்?
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி மூன்றும் சிங்களத்தில் உள.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி மூன்றும் சிங்களத்தில் உள.
மொழிபெயர்த்தவர் சிங்களவர்.
யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாசாபிவிருத்திச் சங்கப் பண்டிதர்.
தவத்திரு தருமரத்தின தேரர்.
யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாசாபிவிருத்திச் சங்கப் பண்டிதர்.
தவத்திரு தருமரத்தின தேரர்.
மகாவமிசத்தைப் பாளி மொழியில் இருந்து
நேரடியாகத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.
நேரடியாகத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.
சிங்கள தமிழ் அகராதி எழுதத் தொடங்கினார்.
வியன்கோட்டை (வியாங்கொடை)க்கு அருகே நெய்வேலி (நைவெலை) என்ற சிற்றூரில்
பல்சாலை (பன்சல) சென்றேன்.
தவத்திரு தருமரத்தின தேரரின் மாணவரை
தவத்திரு இசெல்லை இரத்தினசீக தேரரைப் பார்த்தேன்.
பல்சாலை (பன்சல) சென்றேன்.
தவத்திரு தருமரத்தின தேரரின் மாணவரை
தவத்திரு இசெல்லை இரத்தினசீக தேரரைப் பார்த்தேன்.
பலகல் (பலகல) சரசுவதிப் பிரிவினைத் (பிரிவேன) தலைவர் அவர்.
1972இல் மறைந்த தவத்திரு தருமரத்தின தேரரின் தமிழ்ப் பணியைக் காட்டினார்.
25.06.2014
நான் இனவாதியல்ல என்றார் தவத்திரு அதுரலிய இரத்தின தேரர்.
உண்மையான புத்தர்கள் இனவாதிகளல்ல என்றேன் நான்.
உண்மையான புத்தர்கள் இனவாதிகளல்ல என்றேன் நான்.
அவர் ஜாதிக ஹெல உரிமைய என்ற அமைப்பின் தலைவர்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.
24.6.14 கொழும்பு 07இல் தரும விசய மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுங்கள் என என்னைக் கேட்டார்
22.6.14 அன்று அவரைச் சந்தித்த பொழுது.
22.6.14 அன்று அவரைச் சந்தித்த பொழுது.
என் உரையின் சில வரிகள் மற்றும் படங்கள் கீழே.
...
Has a person become so bankrupt morally
to be lured by gifts,
to be lured by monetary benefits,
to be lured by educational benefits,
to be lured by employment benefits,
to be lured by social status
and other non religious attractions
to covert himself from one religion to the other?

A cleaner tomorrow requires a full stop to religious conversions.
A cleaner tomorrow requires a complete halt to coerced faith changes.
A cleaner tomorrow requires mutual respect of values and life styles......
A cleaner tomorrow requires a complete halt to coerced faith changes.
A cleaner tomorrow requires mutual respect of values and life styles......
....Religion is a tool to promote love, morals and compassion
A tool that promotes hatred, promotes violence and promotes immorality is not a religion. It is a pity, that we are using religion to enlarge irreligious values..........
26.06.2014
A tool that promotes hatred, promotes violence and promotes immorality is not a religion. It is a pity, that we are using religion to enlarge irreligious values..........
26.06.2014
மறவன்புலவில் எனக்கு அன்பர்
திரு. நடேசுவரன் கணபதிப்பிள்ளை.
மிக மென்மையானவர். ஆசிரியர்.
கணிப்பொறிப் பயன்பாட்டில் மேம்பட்டவர்.
மாணவர்களுக்குக் கணிப்பொறி கற்பிப்பவர்.
அஃது அவரது பணியல்ல என்றாலும்.
திரு. நடேசுவரன் கணபதிப்பிள்ளை.
மிக மென்மையானவர். ஆசிரியர்.
கணிப்பொறிப் பயன்பாட்டில் மேம்பட்டவர்.
மாணவர்களுக்குக் கணிப்பொறி கற்பிப்பவர்.
அஃது அவரது பணியல்ல என்றாலும்.
அவரது முகநூல் பக்கத்தில்
இன்று காலை பார்த்த செய்தியும்
காணொலி இணைப்பும் தருகிறேன்.
அதற்குப்பின்னர்
என் பின்னூட்டத்தையும் தருகிறேன்.
இன்று காலை பார்த்த செய்தியும்
காணொலி இணைப்பும் தருகிறேன்.
அதற்குப்பின்னர்
என் பின்னூட்டத்தையும் தருகிறேன்.
அவரது செய்தி.
நண்பர்களே!
பார்ப்பனனையும் பாம்பையும்
ஒன்றாகக் காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டால்
பார்ப்பனனையே முதலில் அடியுங்கள்.
பாம்பைவிட மிகக்கொடியவன் இவன்.
அடியுங்கள் அடியுங்கள் ...........
பார்ப்பனனையும் பாம்பையும்
ஒன்றாகக் காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டால்
பார்ப்பனனையே முதலில் அடியுங்கள்.
பாம்பைவிட மிகக்கொடியவன் இவன்.
அடியுங்கள் அடியுங்கள் ...........
போலியான பார்ப்பனர்களாளேதான்
இந்து மதம் பாழ்படுகின்றது.
இந்து மதம் பாழ்படுகின்றது.
யாழ்ப்பாணத்து ஐயர் ஓருவரின் குதப்பல் விளையாட்டு என்ற காணொலி
http://shar.es/xATYA
http://shar.es/xATYA
என் பின்னூட்டம்.
பேர் கொண்ட பார்ப்பான்
பிரான் தன்னை அரச்சித்தால்..
என்ற வரிகள்
திருமூலரின் திருமந்திரம்
511ஆம் பாடலில் வருவன.
பிரான் தன்னை அரச்சித்தால்..
என்ற வரிகள்
திருமூலரின் திருமந்திரம்
511ஆம் பாடலில் வருவன.
பார்ப்பனர் வேறு சிவாச்சாரியார் வேறு.
படிக்க ஆறுமுகநாவலர்.
படிக்க ஆறுமுகநாவலர்.
இலங்கையில் பார்ப்பனர்
(சிலப்பதிகாரம் கூறும் மறை முது பார்ப்பான்)
மிகக் குறைவு.
மறை = ஸ்மிருதி = ஸ்மார்த்தர் = பார்ப்பனர் = பிராமணர்.
பிராமணர் அல்லது ஸ்மார்த்தர் கையால்
திருநீறு வாங்காதே என்றார் ஆறுமுகநாவலர்.
(சிலப்பதிகாரம் கூறும் மறை முது பார்ப்பான்)
மிகக் குறைவு.
மறை = ஸ்மிருதி = ஸ்மார்த்தர் = பார்ப்பனர் = பிராமணர்.
பிராமணர் அல்லது ஸ்மார்த்தர் கையால்
திருநீறு வாங்காதே என்றார் ஆறுமுகநாவலர்.
யாரும் சிவாச்சாரியார் ஆகலாம்,
பார்க்க திருமந்திரம் 511ஆம் பாடல்,
அருணைவடிவேலு முதலியார் உரை,
தருமபுரம் ஆதீனம் வெளியீடு,
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php…
பார்க்க திருமந்திரம் 511ஆம் பாடல்,
அருணைவடிவேலு முதலியார் உரை,
தருமபுரம் ஆதீனம் வெளியீடு,
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php…
தொண்டு, பூசனை, ஒடுக்கம், தெளிதல்
(என்ற சரியை, கிரியை, யோகம், ஞானம்) ஆகிய வழிகளில்,
கிரியை வழியை மட்டுமே வலியுறுத்தி,
தமக்கு வாழ்வாதாரமாக்கும் சிவாச்சாரியார் பலரால்
மூடநம்பிக்கையில் மூழ்கும்
அடியவர் எண்ணிக்கையைக் குறைக்க
அப்பர், சம்பந்தர் இருவரும் அன்றே வழிகாட்டினர்.

சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்றும்
போதொடு நீர் சுமந்து ஏத்திப்
புகுவார் அவர் பின்பு புகுவேன் என்றும்
அப்பர் கூறிய வரிகள்,
கருவறைக்கு நேரே சென்று
பூசனையை எந்த அடியவரும் செய்யலாம்
என்பதை வலியுறுத்துவன.
போதொடு நீர் சுமந்து ஏத்திப்
புகுவார் அவர் பின்பு புகுவேன் என்றும்
அப்பர் கூறிய வரிகள்,
கருவறைக்கு நேரே சென்று
பூசனையை எந்த அடியவரும் செய்யலாம்
என்பதை வலியுறுத்துவன.
கிரியை மட்டுமே வழிபாடாகாது.
தொண்டு தொடங்கித் தெளிதல் வரை
யாவும் உள்ளத்தைப் பெருங்கோயிலாக்குவன,
ஊனுடம்பை ஆலயமாக்குவன
என்பது திருநெறி.
தொண்டு தொடங்கித் தெளிதல் வரை
யாவும் உள்ளத்தைப் பெருங்கோயிலாக்குவன,
ஊனுடம்பை ஆலயமாக்குவன
என்பது திருநெறி.
தமிழோடு இசை பாடவும்
நன்றாகத் தமிழ் செய்யவும்
கருவறை வரை சென்று பூசனை செய்யவும்
யாவருக்கும் வாய்ப்பு உண்டு என்பதைத்
திருமந்திரம் 511ஆம் பாடலுக்கு
அருணைவடிவேலு முதலியாரின் நீண்ட உரை
வலியுறுத்தி வழிகாட்டும்.
நன்றாகத் தமிழ் செய்யவும்
கருவறை வரை சென்று பூசனை செய்யவும்
யாவருக்கும் வாய்ப்பு உண்டு என்பதைத்
திருமந்திரம் 511ஆம் பாடலுக்கு
அருணைவடிவேலு முதலியாரின் நீண்ட உரை
வலியுறுத்தி வழிகாட்டும்.
01.07.2014
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தனுக்கும்
இலங்கைக்கும் நெருங்கிய தொடர்பு.
இலங்கைக்கும் நெருங்கிய தொடர்பு.
ஆறுமுகநாவலர் பதிப்பித்த பெரிய புரணைம்,
அரசங்குடி சரவண முதலியாரின் கைந்நூல்.
அவரது சொற்பொழிவுகளுக்கு அந்த நூலே பயன்படும்.
தந்தையாரின் பெரியபுராண நுண் மா நுழை புலத்தின் வழிவந்த
அசஞாவுக்கும் அதுவே கைந்நூல்.
அரசங்குடி சரவண முதலியாரின் கைந்நூல்.
அவரது சொற்பொழிவுகளுக்கு அந்த நூலே பயன்படும்.
தந்தையாரின் பெரியபுராண நுண் மா நுழை புலத்தின் வழிவந்த
அசஞாவுக்கும் அதுவே கைந்நூல்.
பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியரான காலத்தில்
சனிக்கிழமை காலை சென்னையில் புறப்பட்டு
விமானத்தில் யாழ்ப்பாணம் வருவார்.
கரவெட்டி தச்சன்தோப்புத் திருக்கோயிலில் மாலைச் சொற்பொழிவு.
ஞாயிறு மாலையும் அங்கே சொற்பொழிவு.
திங்கள் காலை யாழ்ப்பாணத்திலிருந்து விமானத்தில் புறப்பட்டுச்
சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியில் பணிக்குப் போவார்
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்.

1959 தொடக்கம் அவர் 2002இல் மறையும் வரை சென்னையில் எனக்கு ஆசானாய், வழிகாட்டியாய், இருந்தவர் பேராசிரியர் அ. ச. ஞா.
இன்றுவரை அவருடைய மக்களும் என்னைத் தம்முள் ஒருவராகக் கருதி வருகின்றனர்.
அப்பாவின் நூல்களை அந்தந்தத் துறை சார்ந்தவரிடம் கொடுக்கிறோம் என 2013இல் மூத்த மகன் மெய்கண்டான் மற்றும் கடைசி மகள் மீரா என்னிடம் சொன்னபொழுது, நூல்களுக்கான யாழ்ப்பாணப் புலமையாளரின் தவிப்பும் ஏக்கமும் என் கண்ணில் தெரிந்தன.
யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகத்துக்கு எடுத்துச் செல்கிறேன் என்றேன். மகிழ்ச்சி பொங்க, 440 தலைப்புகளைத் தந்தார்கள்.
17 பெட்டிகளில் கட்டுவித்தேன். யாழ்ப்பாணம் கொணர்ந்தேன்.
17 பெட்டிகளில் கட்டுவித்தேன். யாழ்ப்பாணம் கொணர்ந்தேன்.
இணுவில் பொது நூலகக் காப்பாளர் அண்ணா தொழிலகம் திரு. சு. பொ. நடராசா என்னை அழைத்து நூலக வளரச்சிக்கு உதவுமாறு கேட்டது என் நினைவில் இருந்தது. 17 பெட்டிகளையும் அவர்களிடம் கையளித்தேன்.
29.6.2014 மாலை 1630 மணிக்கு முறையாகக் கையளித்தேன். படங்கள் பார்க்க
04.07.2014
இணுவில் அருள்மிகு வள்ளி தெய்வயானை உடனுறை கந்தசுவாமி கோயில் குடமுழுக்கு இன்று 4.7.14.
நேற்று 3.7.14 சென்று வழிபட்டேன்.
ஓதுவார் திருவரங்க யயாதி விருத்தாசலத்தில் இருந்து வந்திருந்தார்.
ஓதுவார் திருவரங்க யயாதி விருத்தாசலத்தில் இருந்து வந்திருந்தார்.
அண்ணா தொழிலக நிறுவனர் அதிபர் திரு. சு. பொ. நடராசா அவர்களுடன் நான்..
படங்கள் பார்க்க.
06.07.2014
06.07.2014
எழுவை தீவு சென்றேன் 11.06.2014
சிலாபம் சென்றேன், 24.06.2014
கிராஞ்சி சென்றேன் 04.07.2014
நாச்சிக்குடா சென்றேன் 04.07.2014
சிலாபம் சென்றேன், 24.06.2014
கிராஞ்சி சென்றேன் 04.07.2014
நாச்சிக்குடா சென்றேன் 04.07.2014
வட மாகாணத்தில் கடலட்டை வளர்ப்பு வாய்ப்புகள் தொடர்பாகத் தகவல் சேர்க்க.
கொழும்பு நீருயிர் வளர்ப்பு அமைப்பு அலுவலர் வந்திருந்தனர்.
கிராஞ்சி நாச்சிக்குடாப் பயணப் படங்கள் பார்க்க
06.07.2014
களப்பு நிலக் கண்டல் வளம்.
வடமாகாணத்துக்கு வளம் சேர்க்குமா?
பொறியியல் துறைப் பேரா. சிவகுமாரன் ஒளிக்காட்சி உரை.
யாழ்ப்பாணப் பல்கைலக் கழகத்தில் 05.07.2014 காலை 0900 மணி.
வடமாகாணத்துக்கு வளம் சேர்க்குமா?
பொறியியல் துறைப் பேரா. சிவகுமாரன் ஒளிக்காட்சி உரை.
யாழ்ப்பாணப் பல்கைலக் கழகத்தில் 05.07.2014 காலை 0900 மணி.
வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் (மேலதிகம்)
முத்து இராதாகிருட்டிணன்.
ஓவியக் கலைஞர், கல்வி ஆட்சியர், சிறுகதை எழுத்தாளர்.
'கற்றலும் கற்றல் சூழலும்' - கல்வி ஆட்சிக் கட்டுரைகள்
'உள்மனச் சித்திரம்' - சிறுகதைத் தொகுப்பு.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில்
05.07.2014 மாலை 1500 மணிக்கு வெளியீட்டுவிழா.
பங்குபற்றினேன்.

பரணீதரன் + விட்டுணுவர்த்தினி இணையர்
பருத்தித்துறை, அல்வாய் வடக்கு
சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி
0094 775991949 jeevanathy@yahoo.com
நடத்தும் கலை இலக்கிய மாத இதழ் ஜீவநதி
பதிப்பகமும் நடத்தி அருமையான நூல்கள் வெளியிடுகிறார்கள்.
ஜீவநதி இதழின் 70ஆவது மாத இதழ் வெளியீடு
வடமராட்சி எழுத்தாளர்களின் நூல்களின் காட்சி.
05.07.2014 மாலை வெளியீட்டு விழா.
நாள்முழுவதும் புத்தகக் காட்சி.
600 தலைப்புகள் காட்சியில். யாவும் வடமராட்சி எழுத்தாளர் படைப்புகள்.
மாலை 1630 மணி தொடக்கம் 1730 வரை விழாவில் காட்சியில் இருந்தேன்.

மூன்று நிகழ்வுகளும் அறிவுசார் நிகழ்வுகள்.
மறவன்புவில் என் மாணவச் செல்வங்கள் பதின்மர்
என்னுடன் காலை முதல் மாலை வரை வந்திருந்து
மூன்று நிகழ்ச்சிகளிலும் கலந்து பயன்பெற்றனரோ?
மறவன்புவில் என் மாணவச் செல்வங்கள் பதின்மர்
என்னுடன் காலை முதல் மாலை வரை வந்திருந்து
மூன்று நிகழ்ச்சிகளிலும் கலந்து பயன்பெற்றனரோ?
படங்கள் பார்க்க
10.07.2014
சென்னையில் இருந்து வெளியாகும்
புகழ் பூத்த வார இதழ் கல்கியில்
வந்த படமும் செய்தியும்
10.07.2014
சென்னையில் இருந்து வெளியாகும்
புகழ் பூத்த வார இதழ் கல்கியில்
வந்த படமும் செய்தியும்
10.07.2014
2006 தொடக்கம் தருமை ஆதீனத்தின் மின்னம்பல தளம்
www.thevaaram.org ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்.
பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலத்துக்கு எனத்
தமிழகத்தில் வெளியாகும் நாளிதழ் ஒன்றில்
வந்த செய்தி படத்தில் பார்க்க
12.07.2014
24.04.2014 காலை மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலையில் மறவன்புலவு வரை படம் ஒட்டுவித்தேன். (முன்பு முகநூலில் பதிவு உண்டு)
11.07.2014 மாலை யாழ்ப்பாண மாவட்டக் கூடுதல் செயலர் (மேலதிக அரசாங்க அதிபர்) திருமதி உரூபிணி வரதலிங்கம் அப்படத்தைத் திறந்து வைத்தார்.
தென்மராட்சிப் பிரதேசச் செயலகக் கூடுதல் துணைச் செயலர் (மேலதிகப் பிரதேசச் செயலர்) செல்வி இரஞ்சனா வந்திருந்தார்.
மாவட்டச் செயலகத்திலிருந்து வரைபட வல்லுநர் இருவரைத் திருமதி வரதலிங்கம் உடன் அழைத்து வந்திருந்தார்.
தென்மராட்சி தெற்குக் கட்டளைத் தளபதி கேணல் அல்விசு வந்திருந்தார்.
ஊரக நிலதாரிகள், ஊரக மக்கள் மன்றங்களின் தலைவர்கள் வந்திருந்தனர்.
8 அடி அகலம் 10 அடி உயரமான மறவன்புலவு நிலதாரிப் பிரிவின் படத்தை வியந்து பார்த்தனர் அனைவரும்.
படங்கள் பார்க்க.
14.07.2014
16.07.2014
13.12.2014
படங்கள் பார்க்க.
14.07.2014
13.7.2014 மாலை 1530 மணி.
யாழ்ப்பாணம், கொக்குவில் சைவ மகா சபை.
சைவ சமய வழிபாட்டிடங்களில் உயிர்ப் பலி நிகழாது தடுப்பது பற்றிய கலந்துரையாடல்.
யாழ்ப்பாணம், கொக்குவில் சைவ மகா சபை.
சைவ சமய வழிபாட்டிடங்களில் உயிர்ப் பலி நிகழாது தடுப்பது பற்றிய கலந்துரையாடல்.
பல்வேறு செயற்றிட்டங்களை எடுத்து நோக்கி,
அவற்றை முன்னெடுக்கச் சைவ அடியார்கள் பொறுப்பேற்ற நிகழ்வு.
அறவழிப் போராட்டக் குழுவினருடன் நானும் கலந்து கொண்டேன்.
அவற்றை முன்னெடுக்கச் சைவ அடியார்கள் பொறுப்பேற்ற நிகழ்வு.
அறவழிப் போராட்டக் குழுவினருடன் நானும் கலந்து கொண்டேன்.
படங்கள் பார்க்க.
16.07.2014
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அமைச்சர் எனக்கு நெடுநாளைய அன்பர் வாசுதேவ நாணயக்கார.
அமைச்சின் செயலாளர் திருமதி விக்கிரமசிங்கா (என் அருமை நண்பரும் அநுராதபுரத்தைச் சேர்ந்த மேனாள் அமைச்சர் மற்றும் அவைத் தலைவர் கே. பி. இரத்தினநாயக்காவின் மகள்)
என் கெழுதகை நண்பர் அமைச்சின் இணைப்பாளர் முனைவர் மோகன்.
நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்கள் தலைவருமான என் அருமை நண்பர் திரு. முருகேசு சந்திரகுமார்,
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அமைச்சு அலுவலர்,
கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி கேதீசுவர்ன்,
எனக்கு அன்பரான கூடுதல் செயலர் திரு. சீனிவாசன் மற்றும்
எனக்கு அன்பர் திரு முகுந்தன் உள்ளிட்ட பிரதேசச் செயலர்கள்.
எனக்கு அன்பரான கூடுதல் செயலர் திரு. சீனிவாசன் மற்றும்
எனக்கு அன்பர் திரு முகுந்தன் உள்ளிட்ட பிரதேசச் செயலர்கள்.
யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரக மூத்த அலுவலர்
என் நண்பரும் ஐநா. வளர்ச்சித் திட்ட உதவிப் பேராளருமான திரு. இராசேந்திரகுமார்.
யாவரையும் நேற்று 15.7.2014 காலை கிளிநொச்சியில் சந்தித்தேன்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அமைச்சின் வடமாகாண அலுவலகத் திறப்பு விழா நிகழ்வுக்கு அழைத்துப் போனேன்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அமைச்சின் வடமாகாண அலுவலகத் திறப்பு விழா நிகழ்வுக்கு அழைத்துப் போனேன்.
காலை 1030க்குத் தொடங்கிய விழா மதிய உணவுடன் நிறைவடைந்தது.
30 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் தொடக்கம் இருந்து வரும் நட்புகளையும் உறவுகளையும் புதுப்பித்து மகிழ்ந்தேன்.
மன்னாரில் அரசியல் ஆட்சியரான அமைச்சர் திரு. கேபி. இரத்தினநாயக்காவுடனான 1974ஆம் ஆண்டுப் படம் பார்க்க.
13.12.2014
நாவற்குழியில் பிரதேச சபையின் கிளை அலுவலகம்.
தச்சன்தோப்புச் சந்தியில்
மன்னார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
தச்சன்தோப்புச் சந்தியில்
மன்னார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
மேற்கே நூலகம்.
அதற்கும் மேற்கே
சிறுவர் விளையாட்டிடம்.
அதற்கும் மேற்கே
சிறுவர் விளையாட்டிடம்.
அலுவலகத்துக்குக் கிழக்காக
கந்தையா கனகம்மா நினைவு மண்டபம்.
அமைத்தவர் அவர்களின் மகன் மயில்வாகனம்.
கந்தையா கனகம்மா நினைவு மண்டபம்.
அமைத்தவர் அவர்களின் மகன் மயில்வாகனம்.
முழுநிலா நாள் தோறும் அங்கே விழா.
மாணவர் விழா.
மயில்வாகனத்தார் எடுக்கும் விழா.
மாணவர் விழா.
மயில்வாகனத்தார் எடுக்கும் விழா.
நேற்று சனிக்கிழமை 12,07,14 காலை 0900 மணிக்கு விழா.
சென்றிருந்தேன்.
மாணவர் பலரின் இயல் இசை நாட்டிய நிகழ்வுகள்.
நெடுங்கேணி பிரதேசச் செயலர் சீவரத்தினம் மனோகரனின் உரை.
மனித வாழ்வின் விழுமியங்கள் - தலைப்பு.
சென்றிருந்தேன்.
மாணவர் பலரின் இயல் இசை நாட்டிய நிகழ்வுகள்.
நெடுங்கேணி பிரதேசச் செயலர் சீவரத்தினம் மனோகரனின் உரை.
மனித வாழ்வின் விழுமியங்கள் - தலைப்பு.
படங்கள் பார்க்க.
23.07.2014
23.07.2014
23.07.2014
நேற்று 23.7.2014
85 வயதில் அமெரிக்காவில்
பேராசிரியர் நயினா முகமது காலமானார்
என்ற செய்தி அறிந்ததும்
நெஞ்சம் கலங்கியது.
85 வயதில் அமெரிக்காவில்
பேராசிரியர் நயினா முகமது காலமானார்
என்ற செய்தி அறிந்ததும்
நெஞ்சம் கலங்கியது.
எனக்கு அன்பர்.
தமிழாராய்ச்சியில் வழிகாட்டி.
திருச்சிக் கல்லூரியில்
ஈழத் தமிழ் மாணவரை ஆதரித்த
முதல்வர்ப் பெருந்தகை.
தமிழாராய்ச்சியில் வழிகாட்டி.
திருச்சிக் கல்லூரியில்
ஈழத் தமிழ் மாணவரை ஆதரித்த
முதல்வர்ப் பெருந்தகை.
1974ஆம் ஆண்டு சனவரி 10ஆம் நாள்
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டப முன்றலில்
பேராசிரியர் நயினா முகமது உரையாற்றுகையில்
அரசின் காவலர் படைத் தாக்குதல் நடந்தது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டப முன்றலில்
பேராசிரியர் நயினா முகமது உரையாற்றுகையில்
அரசின் காவலர் படைத் தாக்குதல் நடந்தது.
9 உயிர்கள் பலியாயின.
1974இல் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த படம் பார்க்க.
தமிழாராய்ச்சி மாநாட்டு விருந்தோம்பல் குழுத் தலைவராக அன்னாரைப் பேணும் பேறு என்னுடையதாயிற்று.
கலகவெறிக் காவலர் படையை வழிநடத்திய
காவல்துறைத் தலைவரின் படமும் காண்க.
காவல்துறைத் தலைவரின் படமும் காண்க.
23.07.2014
யாழ்ப்பாணம் தன் துறவு வாரிசுவை வரவேற்றது.
துறவிகள் கூடினர்.
சிவனடியார் கூடினர்.
பல்கலை அறிஞர் கூடினர்.
வணிகர் கூடினர்.
மகளிர் கூடினர்.
அரசியலார் கூடினர்.
ஆட்சியர் கூடினர்.
சான்றோர் கூடினர்.
சிவதொண்டர் கூடினர்.
துறவிகள் கூடினர்.
சிவனடியார் கூடினர்.
பல்கலை அறிஞர் கூடினர்.
வணிகர் கூடினர்.
மகளிர் கூடினர்.
அரசியலார் கூடினர்.
ஆட்சியர் கூடினர்.
சான்றோர் கூடினர்.
சிவதொண்டர் கூடினர்.
21.7.2014 மாலை 0500 மணிக்கு
யாழ்ப்பாணம் நல்லூர்
திருஞானசம்பந்தர் ஆதீனம்
வளாகத்தில்
என் அழைப்பை ஏற்றுக் கூடினர்.
யாழ்ப்பாணம் நல்லூர்
திருஞானசம்பந்தர் ஆதீனம்
வளாகத்தில்
என் அழைப்பை ஏற்றுக் கூடினர்.
மலேசியா குவலாலம்பூர்
திருமுருகன் திருவாக்குத் திருபீடம்
தவத்திரு பாலயோகி சுவாமிகளை
வரவேற்கக் கூடினர்.
திருமுருகன் திருவாக்குத் திருபீடம்
தவத்திரு பாலயோகி சுவாமிகளை
வரவேற்கக் கூடினர்.
படங்கள் பார்க்க
24.07.2014
ஆங்கிலத்தில் கடிதம், இராஜாஜி எழுதினார், மகாத்மா காந்திக்கு.
நீங்கள் தமிழர், நான் குசராத்தி.
ஏன் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள்.
தமிழில் எழுதுங்கள் அல்லது குசராத்தியில் எழுதுங்கள்.
மகாத்மா காந்தி எழுதினார் இராஜாஜிக்கு.
ஏன் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள்.
தமிழில் எழுதுங்கள் அல்லது குசராத்தியில் எழுதுங்கள்.
மகாத்மா காந்தி எழுதினார் இராஜாஜிக்கு.
தமிழருக்குச் சிங்களவர் தமிழில் கடிதம் எழுதவேண்டும்.
பதில் கடிதத்தைத் தமிழர் சிங்களத்தில் எழுதவேண்டும்.
பதில் கடிதத்தைத் தமிழர் சிங்களத்தில் எழுதவேண்டும்.
இஃது இலக்கு நிலையல்ல.
வாழ்வியலின் களநிலை.
வரலாற்று நிலை.
வாழ்வியலின் களநிலை.
வரலாற்று நிலை.
அன்பைப் பரிமாறுவோர் இவ்வாறு எழுதுவர்.
சிங்களவர்,
புத்த பிக்குவானவர்,
தவத்திரு இசெல்லை இரத்தினசீகத் தேரர்.
பலகல் சரசுவதி பிரிவினை இயக்குநர்.
அங்கே சரசுவதி, தெய்வத்தையல்ல, கல்வியைக் குறிக்கும்.
புத்த பிக்குவானவர்,
தவத்திரு இசெல்லை இரத்தினசீகத் தேரர்.
பலகல் சரசுவதி பிரிவினை இயக்குநர்.
அங்கே சரசுவதி, தெய்வத்தையல்ல, கல்வியைக் குறிக்கும்.
எனக்குத் தமிழில் கடிதம் எழுதினார்.
அன்பைப் பரிமாறுவோர் இவ்வாறு எழுதுவர்.
அவருக்குப் பதில் சிங்களத்தில் எழுத உள்ளேன்.
அன்பைப் பரிமாறுவோர் இவ்வாறு எழுதுவர்.
அவருக்குப் பதில் சிங்களத்தில் எழுத உள்ளேன்.
அக் கடிதத்தை நண்பர்களுடன் பகிரவா எனக் கேட்டேன்.
மகிழ்ச்சியுடன் ஒப்பினார்.
மகிழ்ச்சியுடன் ஒப்பினார்.
அவருடன் நான் உள்ள படம் கல்கி இதழில்..
அவர் கடிதம் படிக்க. படம் பார்க்க
வங்கிகள் முதலிடுவன.
இப்படியும் முதலிடலாம் என
நேற்று 25.7 காலை தச்சன்தோப்புச் சந்தியில்
செய்து காட்டினர் சம்பத்து வங்கியினர்.
நேற்று 25.7 காலை தச்சன்தோப்புச் சந்தியில்
செய்து காட்டினர் சம்பத்து வங்கியினர்.
சிறுவர் பூங்கா, விளையாட்டிடம்
நூலகத்துக்கு 600 தலைப்புகள்
சிறுவருக்குக் கணிணி
பரிசுப் பொருள்கள்
ஏறத்தாழ 15 இலட்சம் ரூபாய் செலவில் இந்த ஏற்பாடு.
வளமான எதிர்காலத்துக்கான முதலீடு.
நூலகத்துக்கு 600 தலைப்புகள்
சிறுவருக்குக் கணிணி
பரிசுப் பொருள்கள்
ஏறத்தாழ 15 இலட்சம் ரூபாய் செலவில் இந்த ஏற்பாடு.
வளமான எதிர்காலத்துக்கான முதலீடு.
சிறுவரைச் சிறுவயதிலிருந்தே சேமிக்கக் கற்பித்தல்.
வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்குதல்.
எனத் தொடரும் பணிகள்.
வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்குதல்.
எனத் தொடரும் பணிகள்.
வங்கியின் இணைப் பொது மேலாளர் தாராக இரன்வெலை தலைமையில்
அபயசிங்க,
சாவகச்சேரி மேலாளர் கிரிதரன்,
நுவான் பத்திரானா,
துசித்தா சோனகா,
நிலாக்கி திசைநாயக்கா,
சுரங்கா ஆனந்தா,
காயசி விசயசுந்தரா,
தரிந்து விசயசேனா
ஆகியோர் சம்பத்து வங்கி சார்பில் வந்தனர்.
அபயசிங்க,
சாவகச்சேரி மேலாளர் கிரிதரன்,
நுவான் பத்திரானா,
துசித்தா சோனகா,
நிலாக்கி திசைநாயக்கா,
சுரங்கா ஆனந்தா,
காயசி விசயசுந்தரா,
தரிந்து விசயசேனா
ஆகியோர் சம்பத்து வங்கி சார்பில் வந்தனர்.
சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் சிற்றம்பலம் துரைராசா தலைமை வகிக்க,
பிரதேச சபையின் நாவற்குழிக் கிளைத் தங்கவேல் ஒருங்கிணைக்க,
கந்தையா கனகம்மா அறக்கட்டளையார் மயில்வாகனம் வாழ்த்துரைக்க,
வாழ்த்துமாறு நான் பேறுற்றேன்.
பிரதேச சபையின் நாவற்குழிக் கிளைத் தங்கவேல் ஒருங்கிணைக்க,
கந்தையா கனகம்மா அறக்கட்டளையார் மயில்வாகனம் வாழ்த்துரைக்க,
வாழ்த்துமாறு நான் பேறுற்றேன்.
படங்கள் பார்க்க
27.07.2014
தொலைக்காட்சியில் மக்களோடு உரையாட வருக
என அழைத்தவர்
தான் தொக்கா தமிழ் ஒளி நிகழ்ச்சித் தொகுப்பாளர் செயச்சந்திரன்.
என அழைத்தவர்
தான் தொக்கா தமிழ் ஒளி நிகழ்ச்சித் தொகுப்பாளர் செயச்சந்திரன்.
26.7.2014 இரவு 2200 மணி தொடக்கம் 2300 மணி வரை நிகழ்ச்சி.
மக்கள் மன்றம் என்ற நிகழ்ச்சி.
மக்கள் மன்றம் என்ற நிகழ்ச்சி.
படங்கள் பார்க்க
01.08.2014
1937ஆம் ஆண்டு.
நாவற்குழி கிறித்தவ தமிழ்க் கலவன் பாடசாலையில்
என் தந்தையார் ஆசிரியராகச் சேர்ந்தார்.
அக்காலத்தில் அவருடன் பணிபுரிந்தோருடன்
உள்ள படம் பார்க்க.
நாவற்குழி கிறித்தவ தமிழ்க் கலவன் பாடசாலையில்
என் தந்தையார் ஆசிரியராகச் சேர்ந்தார்.
அக்காலத்தில் அவருடன் பணிபுரிந்தோருடன்
உள்ள படம் பார்க்க.
என் தந்தையார் நின்ற படம் உள்ள
கூரையும் கட்டடமும் இன்றும் அப்படியே உள.
போர்க் காலத்தில் உடைந்த ஓடுகளுக்குப் பதிலாகத் தகரக் கூரை.
அதே கூரையுடன் நேற்று 31.7.2014 நான் படத்தில் பார்க்க.
கூரையும் கட்டடமும் இன்றும் அப்படியே உள.
போர்க் காலத்தில் உடைந்த ஓடுகளுக்குப் பதிலாகத் தகரக் கூரை.
அதே கூரையுடன் நேற்று 31.7.2014 நான் படத்தில் பார்க்க.
இக்காலம் அந்தப் பாடசாலைக்கு
நாவற்குழி மகா வித்தியாலயம் எனப் பெயர்.
நாவற்குழி மகா வித்தியாலயம் எனப் பெயர்.
அப் பாடசாலை நூலகத்துக்கு
முன்பும் ஒரு தொகுதி நூல்களைக் கொடுத்தேன்.
நேற்றும் 31.7.2014
போர. அ. ச. ஞானசம்பந்தன் அவர்களின் மக்கள்
சென்னையில் என்னிடம் தந்த நூல்களில் சிலவற்றை
நாவற்குழியில் கொடுத்தேன்.
முன்பும் ஒரு தொகுதி நூல்களைக் கொடுத்தேன்.
நேற்றும் 31.7.2014
போர. அ. ச. ஞானசம்பந்தன் அவர்களின் மக்கள்
சென்னையில் என்னிடம் தந்த நூல்களில் சிலவற்றை
நாவற்குழியில் கொடுத்தேன்.
படங்கள் பார்க்க
02.08.2014
பன்னிரு திருறைப் பாடல்கள் முழுவதும்
குரலிசைப் பதிவாக
வரலாற்றில் முன்னெப்பொழுதும் இருந்ததில்லை.
ஒரே இடத்திலும் கிடைத்ததில்லை.
குரலிசைப் பதிவாக
வரலாற்றில் முன்னெப்பொழுதும் இருந்ததில்லை.
ஒரே இடத்திலும் கிடைத்ததில்லை.
வரலாற்றைப் படைக்க நிதி வழங்கியவர்கள்
சிங்கப்பூர்த் திருமுறை அடியவர்கள்.
சிங்கப்பூர்த் திருமுறை அடியவர்கள்.
18,268 திருமுறைப் பாடல்களும் நேற்று 1.8.2014 முதலாக
குரலிசையாகத் தேவாரம் தளத்தில் www.thevaaram.org உள்ளன.
குரலிசையாகத் தேவாரம் தளத்தில் www.thevaaram.org உள்ளன.
எவரும் உலகில் எங்கிருந்தாலும்
பண் சுமந்த 18,268 பாடல்களின் வரிகளை
20 மொழிகளின் வரிவடிவங்களில் ஏதோ ஒன்றில் படித்தவாறே
அருந் தமிழ்ப் பாடலின் பண்ணிசையை மனமுருகக் கேட்கலாம்.
பண் சுமந்த 18,268 பாடல்களின் வரிகளை
20 மொழிகளின் வரிவடிவங்களில் ஏதோ ஒன்றில் படித்தவாறே
அருந் தமிழ்ப் பாடலின் பண்ணிசையை மனமுருகக் கேட்கலாம்.
உள்ளம் பெருங்கோயிலாக,
உள்ளம் கவர் கள்வன்,
உளமே புகுந்த அதனால்
தெளிந்து தேறலாம்.
உள்ளம் கவர் கள்வன்,
உளமே புகுந்த அதனால்
தெளிந்து தேறலாம்.
சிங்கப்பூர் அடியவர்களின் திருப்பணி.
திருமுறைத் திருப்பணி.
திருமுறைத் திருப்பணி.
2007இல் தூத்துக்குடியில் திரு. பிரபாகரன் ரூ. 5000 தந்தார். பாடல்களைத் தளத்தில் ஏற்றுங்கள்,
பண்ணிசையையும் கேட்கவேண்டும் என்றார்.
பண்ணிசையையும் கேட்கவேண்டும் என்றார்.
ஒவ்வொரு பண்ணுக்கும் ஒரு பாடல் எனப்
பதிவு செய்து அனுப்பிய அவரும் அவர் திருமகனும் இத்திருப்பணியின் தொடக்குநர்கள்.
பதிவு செய்து அனுப்பிய அவரும் அவர் திருமகனும் இத்திருப்பணியின் தொடக்குநர்கள்.
2009 தையில் அருள்மிகு உருத்திர காளி அம்மன் கோயிலில்
சிங்கப்பூர் அடியவர்களைச் சந்தித்தேன்,
திருமுறைக்குக் குரலிசை பற்றிய என் கருத்தை முன்வைத்தேன்.
சிங்கப்பூர் அடியவர்களைச் சந்தித்தேன்,
திருமுறைக்குக் குரலிசை பற்றிய என் கருத்தை முன்வைத்தேன்.
2014 ஆடியில் 18,268 பாடல்களும்
தேவாரம் தளத்தில் வருமாறும்
உலகெங்கும் வாழும்
திருமுறை அன்பர்களும் மற்றவர்களும் கேட்குமாறு
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தவர்கள்
சிங்கப்பூர்த் திருமுறை அன்பர்களே.
தேவாரம் தளத்தில் வருமாறும்
உலகெங்கும் வாழும்
திருமுறை அன்பர்களும் மற்றவர்களும் கேட்குமாறு
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தவர்கள்
சிங்கப்பூர்த் திருமுறை அன்பர்களே.
சிங்கப்பூருக்கு 2009இல் என்னை அழைத்தவர்
ஓசைப்படாமல் திருப்பணி செய்யும் அடியவர்
திரு. நாகராசன் சுப்பிரமணியம் அவர்கள்.
இத்திருப்பணியில் ஈடுபட்ட
சிங்கப்பூர்த் திருமுறை அன்பர்களை
2009க்கு முன் நான் அறியாததிருந்தமை
என் தீவினைப் பயனோ?
ஓசைப்படாமல் திருப்பணி செய்யும் அடியவர்
திரு. நாகராசன் சுப்பிரமணியம் அவர்கள்.
இத்திருப்பணியில் ஈடுபட்ட
சிங்கப்பூர்த் திருமுறை அன்பர்களை
2009க்கு முன் நான் அறியாததிருந்தமை
என் தீவினைப் பயனோ?
திருவருள் துணை,
தருமை ஆதீனம் குருமகாசந்நிதானத்தின் வழிகாட்டல்
அன்பர்கள் அனைவரின் நிதிப் பங்களிப்பு,
பொற்றாளம் திரு. துரை ஆறுமுகம் அவர்களின் கடும் உழைப்பு (கைம்மாறு எதுவும் பெறாத உழைப்பு)
ஓதூவார் சற்குருநாதன் பங்களிப்பு
அவரது இசைக்கருவித் துணைவர்கள்,
பதிவுகூடத்தார்,
தவறின்றிப் பாடல்களைத் தேவாரம் தளத்தில் ஏற்றிய திருமதி நித்தியா
யாவரையும் நினைவில் கொண்டு எழுதுகிறேன்.

எனக்கும் இப்பணியில் ஈடுபட வாய்ப்புக் கிடைத்தது திருவருள் துணையே.
நன்கொடை மற்றும் செலவு கணக்கு விவரங்கள் தேவாரம் தளத்தில் www.thevaaram.org உள்ளன.
04.08.2014
நாட்டிய மயில் 2014.
ஈழத்தின் 60க்கும் கூடுதலான
பரத நாட்டியப் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளின் பங்களிப்பு.
வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம். 03.08.2014
ஈழத்தின் 60க்கும் கூடுதலான
பரத நாட்டியப் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளின் பங்களிப்பு.
வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம். 03.08.2014
அவ் ஆசிரிய, ஆசிரியைர்களின் மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப்
பரத நாட்டியத் துறை மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப்
பரத நாட்டியத் துறை மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள்.
தலைமை விருந்தினர் தமிழகத்தில் இருந்து வந்திருந்த
பத்ம பூஷண் பத்மா சுப்பிரமணியம்.
சென்னையில் பேரா. அ ச ஞானசம்பந்தன் இல்லத்தில்
கலைமாமணி பத்மா சுப்பிரமணியத்தைச் சந்திப்பேன்.
பத்ம பூஷண் பத்மா சுப்பிரமணியம்.
சென்னையில் பேரா. அ ச ஞானசம்பந்தன் இல்லத்தில்
கலைமாமணி பத்மா சுப்பிரமணியத்தைச் சந்திப்பேன்.
விழாவை நடத்தியவர் வழக்கறிஞர் எம்ரிஎஸ். இராமச்சந்திரன்.
ஐரோப்பாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களுள் ஒருவர்.
ஐரோப்பாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களுள் ஒருவர்.
விழாத் தலைவர் அதுரலிய இரத்தின தேரர்.
ஜாதிக எல உரிமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்.
ஜாதிக எல உரிமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்.
விழாவுக்கு என்னை அழைத்தவர் அதுரலிய இரத்தின தேரர்.
படங்கள் பார்க்க.
05.08.2014
05.08.2014
ஜாதிக ஹெல உறுமைய கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
வணக்கத்துக்குரிய அதுரலிய இரத்தின தேரர்
26.7.2014 அன்று தொலைப்பேசியில் அழைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
வணக்கத்துக்குரிய அதுரலிய இரத்தின தேரர்
26.7.2014 அன்று தொலைப்பேசியில் அழைத்தார்.
3.8.2014 அன்று யாழ்ப்பாணம் வருகிறேன்.
உங்களைச் சந்திக்க விரும்புகிறேன் என்றார்.
உங்களைச் சந்திக்க விரும்புகிறேன் என்றார்.
03.08.2014 காலை தன் வருகையை உறுதிசெய்தார்.
நண்பகல் 1145க்கு மறவன்புலவுக்கு வந்தார்.
என் இல்லத்துக்கு வந்தார்.
நண்பகல் 1145க்கு மறவன்புலவுக்கு வந்தார்.
என் இல்லத்துக்கு வந்தார்.
கருத்துருவாக்கிகளாக எதிர்த் துருவங்களில் உள்ளோம்.
எனினும் இலங்கைத் தீவிலல்லவா உள்ளோம்.
எனினும் இலங்கைத் தீவிலல்லவா உள்ளோம்.
எங்கள் இருவரின் கருத்துகளை
அவரவர் அப்படியே வைத்துக்கொண்டோம்.
ஒருவரின் கருத்து நிலையை
மற்றவர் மதிக்கும் நிலையில்
பொது நிலைகள் உண்டா எனத் தேடினோம்.
அவரவர் அப்படியே வைத்துக்கொண்டோம்.
ஒருவரின் கருத்து நிலையை
மற்றவர் மதிக்கும் நிலையில்
பொது நிலைகள் உண்டா எனத் தேடினோம்.
என் வீட்டுக்கு வந்ததால் என் விருந்தினரானார்.
மீண்டும் இரவு 0830 மணிக்கு வந்தார்.
பல செய்திகளைப் பரிமாறினோம்.
என் அயலவர் இருவர் என்னுடன் சேர்ந்து கொண்டனர்.
மீண்டும் இரவு 0830 மணிக்கு வந்தார்.
பல செய்திகளைப் பரிமாறினோம்.
என் அயலவர் இருவர் என்னுடன் சேர்ந்து கொண்டனர்.
தொடர்பில் இருப்போம்.
பொது நிலைகளில் இணைந்து செயற்படுவோம்
எனக் கூறி விடைபெற்றார்.
பொது நிலைகளில் இணைந்து செயற்படுவோம்
எனக் கூறி விடைபெற்றார்.
படங்கள் பார்க்க.
இலங்கையில் கடற் பாசி வளரப்புக்கு உதவ
இராமேச்சரத்தில் இருந்து
முனைவர் சண்முகம் வந்திருந்தார்.
06.08.2014 அன்று மறவன்புலவுக்கு வந்தார்.
அவரோடு ஏலீசு (Hayleys) வணிக நிறுவனத்திரும் வந்திருந்தனர்.
படங்கள் பார்க்க
11.08.2014
திருக்கோயில்களில் உயிர்ப்பலி வேண்டாம்
என்ற கருத்தை முன்வைத்து
அறவழிப் போராட்டக் குழு மற்றும்
சைவ மகா சபை அன்பர்கள்
நல்லூர்த் திருவிழா 9ஆம் நாள் மாலை
09.08.2014 அன்று நல்லூர் மேற்கு வீதி
மூத்ததம்பி அன்னதான மடத்தில் கூடினோம்.
படங்கள் பார்க்க
11.08.2014
எல்லாளன்
கிமு 145இல் இருந்து கிமு 101 வரை
அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு
இலங்கைத் தீவு முழுவைதையும் ஆட்சி செய்த
தமிழ் மன்னன்
கிமு 145இல் இருந்து கிமு 101 வரை
அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு
இலங்கைத் தீவு முழுவைதையும் ஆட்சி செய்த
தமிழ் மன்னன்
பரராசசேகரன்
கிபி 1478 முதல் 1520 வரை
நல்லூரைத் தலைநகராகக் கொண்டு
தமிழ் ஈழத்தை ஆண்ட
தமிழ் மன்னன்
கிபி 1478 முதல் 1520 வரை
நல்லூரைத் தலைநகராகக் கொண்டு
தமிழ் ஈழத்தை ஆண்ட
தமிழ் மன்னன்
பண்டார வன்னியன்
கிபி 1775-1803
ஈழத்தின் அடங்காப் பற்று வன்னிமையின்
தமிழ் அரசன்.
கிபி 1775-1803
ஈழத்தின் அடங்காப் பற்று வன்னிமையின்
தமிழ் அரசன்.
10.08.2014 அன்று யாழ்ப்பாணம் மணிக்கூட்டுச் சந்தி
மேற்காணும் மன்னர் மூவரின் சிலை திறப்பு விழாவில்
சிற்பி செல்லையா சிவப்பிரகாசம்
மூத்த படப்பிடிப்பாளர்
இருவரையும் சந்திக்கும் பேறு எனக்கு.
20.08.2014
அருள்மிகு வள்ளக்குளப் பிள்ளையார் கோயில் அன்பர்கள், அடியவர்கள், உறவாளர்கள், யாவருக்கும் தெரிவிக்க, 08.09.2014 கால்கோள் விழா திங்கள்கிழமைஆவணி 23, 2045
மின்னஞ்சல் இல்லாதோருக்குத் தொலைப்பேசியில் தெரிவித்து உதவுக.
Please circulate this information to all our relatives and devotees of Maravanpulavu Arul miku Vallakulap Pillayar Koil.
For those without an email please help me by informing them by phone.
10.09.2014 கோப்பாய் சிவா பிள்ளை இல்லம்
மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா யாழ்ப்பணத்தில் எமது வீட்டிற்கு இன்று வருகை தந்திருந்தார் எமக்கெல்லாம் ரொமப மகிழ்ச்சி, அதுவும் திருக்கையிலாயம் போய்வந்த பெரியார் எமதில்லம் வநதது "என்ன மாதவம் செய்ததோ இக்குடிசை"
அலருக்கு எங்கள் வீட்டு செவ்விளநீர் அருந்தக் கொடுத்தோம். பல விடயங்கள் பற்றிப் பேசினோம்,அத்தோடு அவர் எனது மனைவியின் பக்த்து ஊரவர் என்பதறிந்தும் மண்வாசனையில் மகிழ்ச்சி

பச்சிளம் குழந்தைகளுக்கு நச்சுணவு வழங்கிய பள்ளி
மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலைக்கு மாணவர்களை அனுப்பும் பெற்றோரின் 12.09.2014 காலைப் போராட்டக் கோரிக்கைகள்
கடந்த பல மாதங்களாகவே, பச்சிளம் குழந்தைகளுக்கு நச்சுணவைக் கொடுத்துக் இலங்கைக் குற்றவியல் சட்டங்களை மீறியவர்களான,
Food Act (No. 26 of 1980)
1. Section 18. (1) Every person who contravenes any of the provisions of this Act or any regulations made thereunder or fails to comply with any direction given under this Act shall be guilty of an offence and shall be liable on conviction- where the nature of the offence involves injury to the health of the public, to imprisonment for a term not less than six months and not exceeding three years, and also to a fine not less than one thousand rupees and not exceeding five thousand rupees;
2. Section 19 Person committing offence liable to be arrested without a warrant and to be tried by a Magistrate's Court 19. Every person who commits an offence under this Act or any regulation made thereunder may be arrested without a warrant and every offence under this Act or any regulation thereunder shall be triable by a Magistrate's Court.
1. பச்சிளம் குழந்தைகளுக்குத் தெரிந்தே நச்சுணவு கொடுத்த பள்ளி முதல்வரைச் சிறையிலிடு.
2. பச்சிளம் குழந்தைகளுக்குத் தெரிந்தே நச்சுணவு சமைத்த சமையற்காரர்களைச் சிறையிலிடு
3. பச்சிளம் குழந்தைகளுக்குத் தெரிந்தே அழுகிய பூச்சிபிடித்த நச்சுணவுப் பொருள்களைக் காசுக்கு வழங்கிய பொருள் வழங்குநரைச் சிறையிலிடு.
4. பச்சிளம் குழந்தைகளுக்குத் தெரிந்தே அழுகிய பூச்சிபிடித்த நச்சுணவு வழங்கலைக் கண்காணிக்காது கடமையில் தவறிய மருத்துவ ஆய்வாளர் மற்றும் கல்வித்துறை ஆய்வாளரைச் சிறையிலிடு.
5. பச்சிளம் குழந்தைகளுக்குத் தெரிந்தே நச்சுணவு வழங்க உடந்தையாயிருந்த ஆசிரியர்களைச் சிறையிலிடு.
6. மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலை மாணவர்களான நச்சுணவு ஏறிய பச்சிளம் குழந்தைகள் அனைவருக்கும் முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு ஆணையிடு.
7. கடந்த ஓராண்டுகாலமாக மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலை மாணவருக்கு உணவு வழங்கிய கணக்குகள் தொடர்பாகக் கல்வித் திணைக்களமும் வல்லுநரான தனியார் கணக்காய்வாளரும் முழுமையான தணிக்கை அறிக்கையை 3 மாதத்துள் தயாரித்து பச்சிளம் குழந்தைகளுக்கு நச்சுணவு வழங்கும் நிதி ஊழலை வெளிப்படுத்து.
8. மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலை மாணவருக்குத் தரமான மருத்துவத் தூய்மையான உணவு வழங்கி மாணவரின் ஊட்டச் சத்தைப் பெருக்கி, ஏழைகளுக்கும் கல்வியை வளர்க்க விரும்பும் உலக உணவுத் திட்டம் (UN-WFP) சார்ந்த வட மாகாண மற்றும் இலங்கை அரசின் சிறந்த கொள்கையை முழுமையாகச் செயலாக்கு.
30.12.2014

72 மேளகர்த்தா இராகங்கள் அல்லது தாய் இராகங்கள்.
அவற்றுள் சுத்த மத்திமத்தில் 9ஆவது இராகம் தேனுகா.
அவற்றுள் சுத்த மத்திமத்தில் 9ஆவது இராகம் தேனுகா.
கும்பகோணம் சுவாமிமலை சீனுவாசன் தனக்குத் தானே புனைந்த பெயர் தேனுகா. அவரின் தந்தையார் தேனுகா இராகத்தை மிக அருமையாக நாதசுவரத்தில் வாசிப்பாராம்.
இசைக் கலை, சிற்பக் கலை. ஓவியக் கலை, தத்துவ விசாரணம் இக்கால மேனாட்டு ஓவியம், கட்டடக் கலை எனப் பன்முக அறிஞர் தேனுகா. இவ்வறிவுச்செல்வம் அவரது மரபணுக்களோடு வந்தவை என்றார் பேராசிரியர் முனைவர் பாரதிபுத்திரன்.
30.9.2014 மாலை 0530 மணி, சென்னை ஆள்வார்ப்பேட்டை தாக்கு அரங்கத்தில் நூல் அறிமுக நிகழ்வு.
நூலின் பெயர்: தோற்றம் பின்னுள்ள உண்மைகள்,
நூலாசிரியர் தேனுகா:
416 பக்கங்கள், இந்திய ரூ. 300 விலை.
பதிப்பாளர்: மதி நிலையம் மெய்யப்பன்.
நூலின் பெயர்: தோற்றம் பின்னுள்ள உண்மைகள்,
நூலாசிரியர் தேனுகா:
416 பக்கங்கள், இந்திய ரூ. 300 விலை.
பதிப்பாளர்: மதி நிலையம் மெய்யப்பன்.
அறிஞர் குழாம் குவிந்திருந்தனர்.
கவிஞர் இரவி சுப்பிரமணியம்,
ஆனந்தக் குமாரசாமி ஆய்வாளர் அறிஞர் கி. அ. சச்சிதானந்தன்,
குறி எழுத்து வல்லுநர் பாலசுப்பிரமணியம்,
கவிஞர் பாலநிலவன்,
எனப் பலர் பெண்களும் ஆண்களுமாய்ப் பலர் வந்திருந்தார்.
கவிஞர் இரவி சுப்பிரமணியம்,
ஆனந்தக் குமாரசாமி ஆய்வாளர் அறிஞர் கி. அ. சச்சிதானந்தன்,
குறி எழுத்து வல்லுநர் பாலசுப்பிரமணியம்,
கவிஞர் பாலநிலவன்,
எனப் பலர் பெண்களும் ஆண்களுமாய்ப் பலர் வந்திருந்தார்.
இரவி தமிழ்வாணண், பாரதி புத்திரன், தேனுகா மூவரின் உரைவீச்சுக் கேட்டேன். ஒரு யுகம் வாழ்ந்தது போன்ற உணர்வு.
நூலுக்குள்ளே யாழ்ப்பாணம் தவுல் வித்துவான் தட்சணாமூர்த்திப்பிள்ளையின் படம் மட்டுமல்ல, யாழ்ப்பாண - தஞ்சை மாவட்டத் தவில் நாதசுவர இசைஞர் தொடர்புகள், அவர்களுக்கிடையேயான இசைப் போட்டி மரபுகள் பற்றிய விவரங்களும் இருந்தன.
படங்கள் பார்க்க
27.09.2014
தொடர் வண்டிகள் ஓடவில்லை.
பேருந்துகள் ஓடவில்லை.
தானிகள் ஓடவில்லை.
வாடகை மகிழுந்துகள் ஓடவில்லை.
பேருந்துகள் ஓடவில்லை.
தானிகள் ஓடவில்லை.
வாடகை மகிழுந்துகள் ஓடவில்லை.
சென்னை வானூர்தி நிலையத்தில் 27.9 மாலை 1800 மணிக்கு வந்திறங்கி, நிலையத்துக்கு வெளியே வந்தேன்.
வெறிச்சோடிக் கிடந்தன நிலைய முன்புறும் வெளியே தெருக்களும்.
ஈருருளிகள், உந்துருளிகள் சாரி சாரியகப் பயணித்தன. இடையிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாய் மகிழுந்துகள்.
வெறிச்சோடிக் கிடந்தன நிலைய முன்புறும் வெளியே தெருக்களும்.
ஈருருளிகள், உந்துருளிகள் சாரி சாரியகப் பயணித்தன. இடையிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாய் மகிழுந்துகள்.
பயணி ஒருவரை இறக்க வந்த ஓட்டுநர்
என்னை அன்புடன் அழைத்தார்.
எழும்பூரில் எனதில்லத்தில் சேர்த்தார்.
மாலை 1900 மணிக்கு இல்லம் வந்து சேர்ந்தேன்.
என்னை அன்புடன் அழைத்தார்.
எழும்பூரில் எனதில்லத்தில் சேர்த்தார்.
மாலை 1900 மணிக்கு இல்லம் வந்து சேர்ந்தேன்.
பிற்பகல் 1400 மணிக்குத் தமிழக முதல்வராக இருந்த செயலலிதா, 1415க்குத் தன் பதவியை இழந்தார்.
மாலை 1700 மணிக்குத் தண்டனைக் காலம் 4 ஆண்டுகள் எனத் தீர்ப்புச் சொன்னதும் சிறைக்குப் போனார்கள் போலும்!
மாலை 1700 மணிக்குத் தண்டனைக் காலம் 4 ஆண்டுகள் எனத் தீர்ப்புச் சொன்னதும் சிறைக்குப் போனார்கள் போலும்!
அதனால் தமிழ்நாடு முழுவதும் பிற்பகல் 1400 மணி தொடக்கம் கடையடைப்பும் சாலை மறியலும் சார்ந்த கடுமையற்ற வன்முறையுமாய்த் தொடர, மாலையில் அந்த நிகழ்வுகள் என்னை வரவேற்றன.
1964ஆம் ஆண்டு ஆவணி. சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்குப் பேருந்தில் பயணம். உடன் வந்தவர் அ. ச. ஞா. மெய்கண்டான். போகமுன்பு பயணத்தில் படிக்க பேரா. அ. ச. ஞா. நூற் தட்டிலிருந்து எடுத்த நூல் உலூயி பிசர் Louis Fischer எழுதிய காந்தியின் வாழ்வும் உலகுக்கான அவரது செய்தியும்.பேருந்து புறப்பட்டபொழுது வாசிக்கத் தொடங்கினேன். காஞ்சிபுரம் வந்தாச்சு என மெய்கண்டான் என்னை உலுப்பியபொழுதே நூலில் இருந்து கண்களை எடுத்தேன். பின் காளப்ப முதலியார் இல்லத்தில் இருவரும் ஓரிரவு தங்கினோம். வரிக்கு வரி என்னை ஈர்த்தவர் உலூயி பிசர் Louis Fischer.
அந்தப் புத்தகத்தின் படியை எனக்கு வாங்கி வைத்திருக்கிறேன். பலமுறை படித்திருக்கிறேன். அந்த நூலில் எந்தப் பக்கத்தில் என்ன செய்தி உண்டு என மறக்காமல் கூறுமளவு படித்திருக்கிறேன். ஆங்கில மொழி நடை, நிகழ்ச்சி விவரணம், சொற்றொடர்களே காட்சியாதல் என உலூயி பிசர் Louis Fischer காந்தியை எனக்குப் புரிய வைத்தவர்.
1976 மார்கழியில் வங்காளதேசம் போகும் வழியில் கொல்கத்தா விமான நிலையத்தில் Larry Collins and Dominique Lapierre இருவரும் எழுதிய நள்ளிரவில் விடுதலை Freedom at Midnight என்ற நூலை வாங்கினேன். தாக்கா, சித்தாகங்கை, கொக்சு பசார் என வானூர்திப் பயணம் முழுவதும் அந்நூலின் வரிகளை என் கண்கள் விழுங்கிக்கொண்டிருந்தன. கொச்சு பசாரில் இரு வாரங்கள் தங்கி, ஆத்திரேலிய, வங்கதேச ஆய்வாளருடன் ஆய்வில் ஈடுபட்ட நேரங்கள் போக, எஞ்சிய நேரம் என் விடுதியில் அந்த நூலே எனக்குத் துணை. Dr. Peter Doe from the Tasmania University, Dr. M. Ahmed and Dr. M. Musselmudin from Bangladesh and myself were together experimenting for those two weeks. Food Technology Australia, issue 29 pages 437 to 441 of 1977 carried a paper on our findings at Cox Bazaar.
1983 ஆனியில் இலண்டனில் இறிச்சாடர் அற்றென்பறோவரின் Richard Attenborough காந்தி திரைப்படத்தை நானும் இல்லத்தவருமாகப் பார்த்தோம். அந்த வாரம் முழுவதும் இறிச்சாடர் அற்றென்பறோவரும் Richard Attenborough காந்தியும் என் நெஞ்சை நிறைத்திருந்தார்கள்.
1944 தொடக்கம் என் வீட்டுச் சுவரில் காந்தியாரின் படம் தொங்கிக் கொண்டிருந்தது. என் தந்தையாருக்குக் காந்தியார் மீது அளவற்ற மதிப்பு. 1964இல் உலூயி பிசர் Louis Fischer நூலைப் படித்தபின் என் தந்தையாருக்கு எழுதிய கடிதத்தில், '1927 நவம்பர் 27ஆம் நாள் யாழ்ப்பாணம் வந்திறங்கிய காந்தியடிகளை நேரில் பார்த்தீர்களா' எனக் கேட்டேன். 'உங்கள் தந்தையாரின் ஊராகிய புத்தூர் வந்தார். தாயாரின் ஊராகிய சாவகச்சேரிக்கு வந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, பரமேசுவராக் கல்லூரி என வந்தார். பார்த்தீர்களா' எனக் கேட்டேன். 'கூட்டங்களுக்கு என் ஆச்சி (தாயார்) போக விட மாட்டார்' எனப் பதிலெழுதினார். அப்பொழுது என் தந்தையாருக்கு 17 வயது. 9 வயதில் தந்தையை இழந்தவர். ஆச்சிக்கு ஒரே மகன். எனவே ஆச்சி அவரை எங்கும் அனுப்புவதில்லை.
1978 மார்கழியில் காந்தி வாழ்ந்த இடங்களுக்கு, போர்பந்தர் தொடக்கம் தில்லி ஊடாக நாகபுரிக்கு அருகே சேவாகிராமம் வரை, என்னையும் உலக ஆர்வலர்களையும் சுற்றுலாவாக அழைத்துச் சென்றவர்கள் காந்தி அமைதி நிறுவனத்தார். காந்தியின் அணுக்கச் செயலாளர் மகாதேவ தேசாயின் மகன் நாராயணன் தேசாய் எம்முடன் வந்திருந்தார்.
1979 பெப் 25இல் யாழ்ப்பாணம், கைதடியில் மூன்று நாள்கள் அறவழிப் பயிற்சியும், தொடர்ந்து அறவழிப் போராட்டக் குழு நிறுவியதும் இந்தப் பயணத்தைத் தொடர்ந்தே.
1979 தொடக்கத்தில் காந்தியின் (இராசாசியின்) பேரன் இராச மோகன் காந்தி யாழ்ப்பாணம் வந்தபொழுது அவரின் உரைகளைத் தமிழில் மொழிபெயர்க்குமாறு என்னைப் பணித்தவர் திரு. சி. கதிரவேற்பிள்ளை. 1986 மார்கழியில் இராச மோகன் காந்தியின் புனே - மலபேசுவரத்தில் இருந்த அமைப்புக்கு நானும் மக்களும் போய்த் தங்கி வந்தோம். அந்த அமைப்புச் சார்ந்தவர்களை அழைத்துக் கொண்டு 1987 வைகாசியில் கொழும்பு சென்று சே. ஆர். செயவரத்தனாவைச் சந்தித்துச் சமாதானம் பேசினேன். தில்லி செல்லும்பொழுதெல்லாம் இராச மோகன் காந்தியைச் சந்திக்காமல் திரும்பமாட்டேன்.
இன்று 02.10.2014 காலை, சென்னை, கடற்கரை, காந்தியாரின் சிலைக்கு மலர் தூவியபொழுதும் இராட்டினம் சுற்றுவோருடன் அமர்ந்து காந்தியப் பாடல்கள் இசைத்தபொழுதும் என்னுடன் இருந்தவர்கள் (1) என் கெழுதகை நண்பர், எனக்காகப் பல வழக்குகளில் நீதிமன்றங்களில் வாதாடியவர், ஈரோடு ஈந்த பெருமகன் இரா. காந்தி, (2) என் பணிகளை நேரிலும் மேடைகளிலும் பாராட்டிப் போற்றும் தவத்திரு ஊரன் அடிகள், (3) முனைவர் வாசுகி கண்ணப்பன், (4) இராமலிங்கர் பணி மன்ற அன்பர்கள்.
03.10.2014
மறவன்புலவில் கலைமகள் விழா.
இன்று 3.10.14 காலை 0900 மணிக்கு
ஏடு தொடக்கிய திருவிழா.
இன்று 3.10.14 காலை 0900 மணிக்கு
ஏடு தொடக்கிய திருவிழா.
11 குழந்தைகள்.
மறவன்புலவு வடக்கு, கிழக்கு, மேற்கு, நடு என
நான்கு பிரிவுகளிலும் இருந்து வந்த குழந்தைகள்.
மறவன்புலவு வடக்கு, கிழக்கு, மேற்கு, நடு என
நான்கு பிரிவுகளிலும் இருந்து வந்த குழந்தைகள்.
95 வயதான தவத்திரு சிவசுப்பிரமணிய ஐயர்
11 குழந்தைகளுக்கும் ஏடு தொடக்கினார்.
1944இல் எனக்கும் இதே இடத்தில் ஏடு தொடக்கியவர்,
இவரே, தவத்திரு சிவசுப்பிரமணிய ஐயர் அவர்களே.
11 குழந்தைகளுக்கும் ஏடு தொடக்கினார்.
1944இல் எனக்கும் இதே இடத்தில் ஏடு தொடக்கியவர்,
இவரே, தவத்திரு சிவசுப்பிரமணிய ஐயர் அவர்களே.
திருக்கோயில் சார்பில்
ஏடு கொடுத்தோம்.
எழுது பலகை கொடுத்தோம்.
எழுதுகோல் கொடுத்தோம்.
அரிவரி மட்டை கொடுத்தோம்.
அரிவரிப் படப் புத்தகம் கொடுத்தோம்.
ஏடு கொடுத்தோம்.
எழுது பலகை கொடுத்தோம்.
எழுதுகோல் கொடுத்தோம்.
அரிவரி மட்டை கொடுத்தோம்.
அரிவரிப் படப் புத்தகம் கொடுத்தோம்.
மாணவர்களான,
இ. இரஞ்சித்தர் (11ஆம் வகுப்பு), சி. நிதர்சனார் (9ஆம் வகுப்பு)
இருவரும் எழுத்தறிவு இயக்கம் நடத்தினர்.
வீடு வீடாகச் சென்றனர்.
ஏடு தொடக்கும் திருநாளுக்குக் குழந்தைகளை அழைத்தனர்.
திருக்கோயிலை அலங்கரித்தனர்.
வந்த பெற்றோர்களை வரவேற்றனர்.
குழந்தைகளைக் கல்வி

சென்னை, தியாகராய நகர், கிருட்டிண கான சபை
கலை மேதை உமையாள்புரம் சிவராமன் தந்த நிகழ்ச்சி.
ஆத்மா பேசுகிறது.
கலை மேதை உமையாள்புரம் சிவராமன் தந்த நிகழ்ச்சி.
ஆத்மா பேசுகிறது.
நிகழ்ச்சியை நான் சுவைத்தவாறு ஆங்கிலத்தில் தருகிறேன்.
I was always happy with my two eyes and two ears until I saw Athma speaks at Krishna Gaana Sabhaa on the cool evening of 18th December 2014, where I wished I had twelve of each.
For there were nine on the stage, each one demanding my attentive ophthalmologic nerve centre and the otolaryngologic motor neurons.
Then why the other three sets?
Not to miss the fast changing facial muscular profile of the dancers, their foot work, their ever mobile upper limbs and the story-telling displays of those nimble fragile limb endings.
Not to miss the smile entrenched face of Umayalpuraththaar
Not to miss the miss-not-any beat of Aniruththa’s nattuvaangam. I heard his conch but missed his bell.
Not to miss the playful casual fingers and the palm pressings on the tabla, of Ananthakrishnan, grandson of maestro Palakadu Ragu and disciple of Zakir Hussain.
Not to miss the softy sweet expressions of Vijayaraghavan, a chip of the old block.
Not to miss the melody mixed synchronized enthralling deep voiced outpourings from the untiring vocal chords of Srikanth.
Not to miss and be engrossed in ecstasy with divine sounds emanating from the seasoned leather tights caressed by seasoned finger relaxes supported by the palms of Umayalpuraththaar
Not to miss the dance duo Priya Murle and Roja Kannan, who in tandem, measure-stepped their salangai laden feet, pooled their unfumbled facial abinaya, sensationally manipulated their ball-bearing based phalanges for the stage echoing konnakkoal by Erode Nagarajan and Ananthakrishnan.
Initiating the serial was a Telugu keerthanai on Pillayaar by saint Thyagaraja.
A set of western notes, popular in Tamil Nadu with Tamil lyrical shuttering inaugurated the celestial street procession in pure dance, included praise for the millennium ago saintly quartets, Samabandar, Suntharar, Appar and Manikkavasagar in that order.
Namasivaya embedded sambu sthothram in Sanskrit in kandachchaapu thaalam (only one thaalam outside the continuous Aadi for the whole performance) with subtle voices from Erode Nagarajan, Hariharan, Aniruthahr and Srikanth when the dancers elevated the mesmerized audience to a divinely cosmic bakthi ambience.
Two viruthams from kantharalankaaram (Srikanth could have avoided the word-slip தனி) where the second virutham விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே ending mayoorame, followed by maamayoora meethil eari vaaa keerthanai in bilahari, sentilised murugan per se.
It appeared as though Swathi thirunaarl composed in Hindi, chaliye kunjanmoan for Umayaarlpuratthar, his stage transformed the physical to metaphysical with his rhythmic renderings in miridangam.
The three pieces, the telugu jawali, iddu saahasa, chelinea neaddlu again in telugu, the kulam in kannada feasted the fine art lovers.
Karunaith theivamea in sinthu bairavi, dance-posed with an event in the life of Abiraami Paddar, was an admixture provided imaginative space for the dancers as well as the musicians.
Laalgudi Jayaraaman’s lustrous thillaanaa, hailing Murugan, was performed with meticulous body movements to the tranqulising swarams.
Erode Nagarajan’s Tamilisation of the Maithireem Bajatha would have pleased its creator, Mahaperiyavaarl and its renderer in the UN in 1981, vocal maestro M. S. Subbulaxumi. It provided a grand finale to an artistic event par excellence.
Umayalpuraththaar and his team reoriented stage symbiosis of fine arts presentation. It was similar to an assembly of artistic talents live-exploring traditional art for art sake in a home stage, sans audience.
The stage kept the theeta rays emanating in my brain, with frequent slumber transcending into unconsciousness occasionally to realize my presence in front of a galaxy of orchestral human expressions enthralling my eyes, my ears and tickling every nerve ending in my peripheral body.
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும்
ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
I was blessed.

No comments:
Post a Comment