Sunday, September 19, 2021

மதவெறியின் மாற்றான சமயப் போர்

 இலங்கையின் இயல்பையும் இயற்கையையும் அழிக்க முயல்வோர்


மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

வத்திக்கானில் பாப்பாண்டவர் ஆறாம் அலெக்சாண்டர். தனி மனித ஒழுக்கத்தில் சீர் கெட்டவன். பாப்பாண்டவர் ஆக இருந்து கொண்டே பல பிள்ளைகளைப் பெற்றெடுத்தவன். களவு பொய் காமம் கோபம் கைவரப்பெற்றவன் ஆறாம் அலெக்சாண்டர்.

போர்த்துக்கல் அரசன் முதலாம் இம்மானுவேல் கொடுங்கோலன்.

ஆசியாவைக் கிருத்தவ மயமாக்குக. போர்த்துக்கேய மன்னனுக்கு வத்திக்கான் பாப்பாண்டவர் ஆறாம் அலெக்சாண்டரின் ஆணை.

இதற்கு முன்பும் பாப்பாண்டவர் அரசர்களுக்கு ஆணையிட்டு இருக்கிறார்கள் 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாப்பாண்டவர் இரண்டாம் அர்பன் பிரான்சு சென்றார் 

அங்குள்ள வட்டாரப் படைத் தளபதிகளை பாளையக்காரர்களை அழைத்தார். மக்களை அழைத்தார்.

யெருசலத்தை மீட்க வேண்டும். படைகளுடன் போய் யெருசலேத்தை மீட்டு வருக. முகமதியர் இடம் இருந்து மீட்டு வருக.

பாப்பாண்டவரின் ஆணையைத் தலை மேற்கொண்ட பிரெஞ்சுப் பாளையக்காரர் அல்லது படைத் தலைவர்கள் அல்லது வட்டாரத் தளபதிகள் மூவர் இணைந்து படையெடுத்தனர்.

ஒட்டுமான் பேரரசை மீறினர்
சிரிய துருக்கியப் படைகளை வீழ்த்தினர். 
சிலுவைப் போர் நடத்தினர்
யெருசலேத்தை மீட்டனர்.

பாப்பாண்டவர் இரண்டாம் அர்பனின் ஆணையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுச் சிலுவைப் போரில்  வெற்றியைக் கொண்டு வந்தது போல,

பாப்பாண்டவர் ஆறாம் அலெக்சாண்டரின் ஆணையை ஏற்று ஆசியாவில் கத்தோலிக்கக் கிருத்துவத்தை வலிந்து புகுத்தியது போல,

மீண்டும் இன்றைய பாப்பாண்டவர் அறைகூவல் விடுத்திருக்கிறார். இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்க நாளில் அவரின் செய்தி. ஆசியாவை முழுமையாகக் கிருத்தவ மயமாக்கும் நூற்றாண்டே இருபத்தியோராம் நூற்றாண்டு.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்றாலும் 
ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு என்றாலும் 
இன்றைய சூழ்நிலை என்றாலும்

களத்தில் நின்ற படை வீரனுக்கு உந்துதலைக் கொடுத்தது பாப்பாண்டவரின் ஆணை. 
சமயத் தலைவரின் ஆணை.

போரில் உயிர் துறந்தால் சொர்க்கம் உறுதி எனப் பாப்பாண்டவர்கள் கூறிவருகின்றனர். 

ஐரோப்பாவின் நூற்றுக்கணக்கான மொழிகள் வட்டார வேறுபாடுகள் பண்பாட்டுக் கூறுகளைக் கடந்து கிருத்தவம் என்கின்ற சமய உணர்வின் அடிப்படையில் போர்களை நிகழ்த்தினர். களத்தில் படைவீரருக்கு உந்துதலைக் கொடுத்தனர்.

இன்றைய முகமதியரின் போர்க்கோலமும் சமயத்தை அடிப்படையாகக் கொண்டது.

மொழிகளைக் கடந்து பண்பாட்டு வேறுபாடுகளைக் கடந்து நாடுகளின் எல்லைகளைக் கடந்து அல்லாவின் அரசை பூமிப்பந்து முழுவதும் நிலைநாட்டுவோம் என்ற வெறியைத் தளமாகக் கொண்டது.

பாப்பாண்டவரின் நோக்கத்திற்கும் 
முகமதியரின் நோக்கத்திற்கும் வேறுபாடில்லை

2009 வைகாசியில் இலங்கையில் சிங்கள கத்தோலிக்கம் வெற்றி பெறவில்லை. இலங்கையில் போரில் வெற்றி பெற்றவர்கள் சிங்கள புத்தர்களே.

அத்துரலியே இரத்தன தேரர் போன்ற தேரர்கள் போர்க்களம் சென்று ஒவ்வொரு போர்வீரரின் பின்னால் நின்று சுடு சுடு என்று சொன்னதை நாங்கள் காணொளிகளில் படங்களில் பார்த்திருக்கிறோம்.

தோல்வியுற்றவர்கள் யார்? முகமதிய கிருத்துவ சைவ மதங்களின் இணைப்புத் தளத்தில் தமிழ்மொழியை முன் நிறுத்தியவர்.

கடவுளின் பெயரால் சமயத்தில் பெயரால் நடந்த போர்களே வெற்றி பெற்றிருக்கின்றன.

நேற்றைய தலிபான்களின் வெற்றியும் அந்தத் தளத்தில் அன்றோ.

சைவர்களின் ஆண்மையை மலடாகி 
சைவர்களாக வஞ்சகமாகப் பலிக்கடாக்களாக்கி
சைவத் தமிழர் போரில் தோற்கக் கிறித்தவர்  காரணர்.

போரின் தோல்வியை பயன்படுத்துகிறார்கள். போருக்குப் பின் நடந்த 
மதமாற்றக் கொடுமை 
நில அபகரிப்பு கொடுமை 
கிருத்தவ மேலாதிக்கக் கொடுமை
யாவையும் நோக்குவோர் தோல்வியைக் கிறித்தவர்கள் விரும்பினார்கள் எனவே கருதுவர்.

போர்க் காலத்திலும் பின்னரும் முகமதியர் சைவர்களின் காணியை அபகரித்தனர். சைவப் பெண்களைக் கட்டாயமாக மதம் மாற்றினர்.

இன்றோ அம்பாறை திருகோணமலை முகமதியப் பெரும்பான்மை மாவட்டங்கள். ஒரு காலத்தில் அவை சைவப் பெரும்பான்மை மாவட்டங்கள்.

இலங்கையில் நடப்பது மொழிப்போர் அல்ல. புத்தர்களும் கிருத்துவர்களும் முகமதியர்களும் சைவர்களுக்கு எதிராக நடத்துகின்ற சமயப் போர்.

புத்தர்கள் வெற்றி பெறுமாறு தூண்டியவர்கள் கிருத்துவர்களும் முகமதியர்களும்.

சைவ உணர்வை மலடாக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும்.

சைவ உணர்வை நீர்த்துப்போக்கும் நோக்கத்தைச் சவாலாகக் கொள்ள வேண்டும்.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப்
பாம்பையும் வேம்பையும் கல்லையும் மண்ணையும்  நிலத்தையும் சூரியனையும் இயற்கையையும் வழிபட்டு வாழ்கின்ற 

காலந்தோறும் மனிதநேயத்தை தளமாகக் கொண்டே படிப்படியான நல் மாற்றங்களை உள்வாங்கி பண்பாட்டைக் கூர்மையாக்கி வருகின்ற சைவமரபை உடைத்தெறிந்து அழித்தொழித்து 

புத்த கிருத்தவ முகம்மதிய மரபுகளைத் திணிக்கும் முயற்சியை எதிர் கொள்ளும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் சைவப் பெரு மக்களுக்கு வரவேண்டும்.

கிருத்துவர்களுக்கும் முகமதியர்களுக்கும் 1500 ஆண்டுகால முரண்பாடும் போரும். அந்தப் போர்கள் பாலைவனப் பகுதிகளிலேயே நடந்தன. 

எனினும் முகமதியர்கள் அத்திலாண்டிக் கடல் கரை வரை படையெடுத்துச் சென்ற வரலாறும் உண்டு.

பாலைவனத்தில் போரிட்டு வந்தவர்கள் இலங்கைப் பசுஞ்சோலையைப் போர்க்களமாக மாற்றி வருகின்றனர். 

2050இல் முகமதியர் ஒருவரே இலங்கையின் குடியரசுத் தலைவராவார் எனச் சிங்கள புத்த மேலாதிக்க நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் திரு சம்பிக்க இரணவக்க அவர்கள் விரிவாகப் புள்ளிவிவரக் கணக்கெடுத்து நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

ஓட்டமாவடியில் அமைச்சர் பதவியைத் கொண்டோரின் காளி கோயில் அழிப்பு, 

அளுத்கமவில் தம்புள்ளையில் புத்தர் மீதான தாக்குதல் புத்த கோயில் இடிப்பு 

உயிர்த்த ஞாயிறு கிருத்தவ தேவாலயங்களில் தாக்குதல். 

சிகாதி நோக்குடன் 2050இல் குடியரசுத் தலைவராகும் நோக்குடன் முகமதியரின் முன்னெடுப்புகள்.

தமிழரின் வடமேல் மாகாணத்தில் 1921 சட்டசபைக்கு வேட்பாளராக சேர் பொன்னம்பலம் அருணாசலம் நிறுத்துவதாக வாக்குறுதி கொடுத்தனர் இலங்கைத் தேசிய காங்கிரஸ் தலைவர்கள்.

கத்தோலிக்க மேலாதிக்க அழுத்தத்தின் விளைவாக அருணாசலத்தின் பெயரை நீக்கி கத்தோலிக்கராக டிமெல்லை வேட்பாளர் ஆக்கினர் இலங்கைத் தேசிய காங்கிரசார்.

வாய்க்கால் ஆறு தொடக்கம் முகத்துவாரம் ஆறு வரை நீண்ட வடமேல் மாகாணம் 

தமிழரின் சைவரின் கோட்டையாக இருந்த வடமேல் மாகாணம் 

சிங்கள கத்தோலிக்கமாகப் படிப்படியாக மாறி இன்று சிங்கள புத்தப் பெரும்பான்மை மாகாணமாகவதற்கு 1920களிலேயே இலங்கைத் தேசிய காங்கிரஸ் வித்திட்டது.

அதே நோக்குடன் அதே திட்டமிடலுடன் அதே செயல் வேகத்துடன் வடமேல் மாகாணத்திற்கு வடக்கிலுள்ள, முகத்துவாரம் ஆறு பாலி ஆறு அருவி ஆறு என எல்லைகளைக் கொண்ட மன்னார் மாவட்டத்தை மாற்றி அமைத்து சைவர்களிடம் இருந்து பிடுங்கி எடுப்பதற்கு முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.

முள்ளிக்குளத்தில் அடாத்தான முகமதியர் குடியேற்றம் 

மற்ற இடங்களில் சைவக் காணிகளை அரச காணிகளை அபகரித்துத் தேவாலயங்கள் அமைக்கும் கத்தோலிக்க மேலாதிக்கம் 

மடுவில், கொண்டச்சியில் மற்றும் இடங்களில் புத்தரின் அரச குடியேற்றும்,  முருங்கனில் திருக்கேதீச்சரத்தில் அடாத்தாகப் புத்தர் கோயில்களை அமைக்கும் புத்த மேலாதிக்கம்

இவை மன்னார்ச் சைவர்களை, சைவரின் மன வலிமையை மலடாக்கி சைவர்களை உணர்வற்றவர்கள் ஆக்குவதற்காக

முகமதியமும் கத்தோலிக்கமும் புத்தமும் இணைந்து நடத்தும் புனிதப்போர் - சமயப் போர் 

மொழிப்போர் அல்ல பண்பாட்டுப் போர் அல்ல மதவெறியின் மாற்றான சமயப் போர்.

இந்தக் கொடுமையான சூழ்நிலையில் நான் பல வழிகளில் சைவர்களுக்காக முகமதிய கிருத்துவ புத்த சவால்களைச் சந்தித்து வருகிறேன்.

ஒரே நேரத்தில் பல முகங்களில் பல முனைகளில் பல களங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். 

பாம்பையும் வேம்பையும் வழிபடுவோம் 
கல்லையும் மண்ணையும் வழிபடுவோம் சூரியனையும் சந்திரனையும் வழிபடுவோம் கடலையும் ஆற்றையும் வழிபடுவோம் 
ஐந்து பூதங்களையும் வழிபடுவோம் 
அவற்றைக் கடவுளாகக் கொண்டு வழிபடுவோம் என்ற இயற்கை வழிபாட்டை முன்னெடுக்கும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான சைவத் தமிழ் மரபு இலங்கையில் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதே இன்றைய வினா!

No comments: