Monday, September 20, 2021

பார்ப்பனர் பூசகர் சுட்டது

 முகநூலில் படித்ததில் பிடித்தது!

1.பார்பனர்கள் வேறு, சிவாச்சாரியார்கள் வேறு

.

பார்பனர்கள் என்ன சங்கராச்சாரியார் கூட கருவறைக்குள் செல்ல முடியாது

.

2. சிவ தீக்ஷை பெற்ற சிவாச்சாரியார்கள் தான் செல்ல முடியும்.

.

3. மேல் மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பர்வத ராஜ குலம் என்கிற செம்படவர்கள் தான் அர்ச்சகர்கள்.

.

4. வலங்கைமான் மாரியம்மன் கோவிலில் பார்பனரல்லாதார் தான் அர்ச்சகர்.

.

5. அண்ணாமலையார் தீபம் ஏற்றும் உரிமை சிவாச்சாரியாருக்கு இல்லை, பர்வத ராஜ குல மீனவர்களுக்கு தான் உண்டு.

.

6. சாத்தனூர் சிவகிரியில் கிராம தேவதைக் கோவிலில் பெண்கள் தான் அர்ச்சகர்கள். இந்த கிராம தெய்வத்தை குல தெய்வமாகக் கொண்டவர்களில் பலர் பார்பனர். 

.

7. சிறுவாச்சூர் மதுர காளியம்மன் பார்பனர்களுக்கு குல தெய்வம். அங்கு குருக்கள் கிடையாது.

பிற சாதி பூசாரிதான்.

.

8. தென் தமிழக பார்பனர்கள் பலருக்கு குலதெய்வம் ஐயனார் (தர்ம சாஸ்தா), மாரியம்மன் , தர்ம தேவதை போன்றவை தாம்.

.

9. குலதெய்வம் மறந்த பார்பனர்கள் திருப்பதி வெங்கடேசனைக் குல தெய்வமாகக் கொள்வது உண்டு.இந்தக் கோவில்களில் பிற சாதியினர் தான் அர்ச்சகர்கள்.

பார்பனர்களே உள்ளே செல்ல முடியாது.

.

10. இங்கெல்லாம் போய் அனைவரும் அர்ச்சகர் என்றால் முழுதாக வீடு திரும்ப முடியாது.

.

11. சமயபுரம் கோயிலில் பண்டார சமூகத்தார் தான் அர்ச்சகர்

12. கேரளாவில் பெரும்பாலான கோயில்களில் போற்றி/பொட்டி ஸமுகத்தவர்தான் அர்ச்சகர்

.

13. நம்பூதிரி ப்ராமணர்கள் இல்லை .

.

14. வட தமிழக திரௌபதி தர்மராஜா கோயில்களில் வன்னியர்களே அர்ச்சகர்கள்

.

15. நமது ஊர்களில் அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் பண்டாரங்கள் தான் அர்ச்சகர்கள்

.

16. தஞ்சாவூர் கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் பண்டரிநாதன் ஆலயத்தில் எல்லா சாதியினரும் கருவறைக்குள் சென்று பெருமாளை தொட்டு வழிபடலாம். இன்றும் இந்த நடைமுறை உள்ளது. 

யார் வேண்டுமானாலும் எந்த சாதியினரும் போகலாம்.

.

17. ராமன் பிராமணன் அல்ல, கிருஷ்ணன் ஆயர் குலத்தில் பிறந்தவன்.

.

18. வைணவ மரபில் 'திராவிட வேதம்' மிக முக்கியமானது. வைணவ கோவில்களில் அர்ச்சகர்கள் கூட்டம் கூட்டமாக திராவிட வேதத்தை கூறிக் கொண்டு வருவதை இன்றும் பார்க்கலாம். 

.

19. திராவிட வேதமாகிய 4000 திவ்ய பிரபந்தத்தை எழுதிய 12 ஆழ்வார்களில் எவ்வளவு பார்பானர்கள் என்று கூறுங்கள் பார்க்கலாம். அதிலும் 'திருப்பாணாழ்வார்' தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர். இவ்வொரு பல சாதிகளைச் சார்ந்த ஆழ்வார்கள் அருளிய திவ்ய பிரபாந்ததைத் தான் இன்றைய பார்பன அர்ச்சகர்கள் கோவில்களில் பாடுகின்றார்கள்

.

20. சைவ சமயத்தில் 63 நாயன்மார்களில் 13 பேர்கள் தான் பிராமணர்கள். ஏனையர் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.

.

21. சிவாச்சாரியர்கள் குரு பூஜை எடுத்து வருடா வருடம் கொண்டாடுவதும் இவர்களை தான்.

.

22. மயிலாப்பூர் மற்றும் நமது கொங்கு நாட்டு அவிநாசியில் அறுபத்துமூவர் திருவிழா மிக பிரசித்தம். 

.

23. தேவார , திருவாசகம் சைவ சமயத்தினரால் மிகவும் போற்றப்படுவது. இதிலும் தேவாரம் பாடிய ஞானசம்பந்தர் பார்பனர், சுந்தரர் சிவ பிராமணர்,

திருவாசகம் பாடிய மணிவாசகர் ஒரு பார்ப்பணர் 

ஆனால் திருநாவுக்கரசர் ஒரு வேளாளர்

.

24. இந்த நால்வரும் வேறு வேறு சாதிகள் 

நால்வரையும் சமமாக பாவித்து வணங்குவது சைவ மரபு 

.

25. அனைவரும் சமம் என்று போதித்த சீர்திருத்தவாதி ராமானுஜர் ஒரு பார்பனர்.

.

26. ப்ரஹ்மம் ஒன்றுதாம் பர பிரமம் ஒன்றுதாம்' என்று பாடிய அன்னமாச்சார்யா ஒரு பார்பனர்.

.

27. வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் கோயில் பட்டர்களிடம் இரு பிரிவுகள் உண்டு. வைகானசம், பாஞ்சராத்னம் என்று.

.

 ஒரு சம்பிராதாயத்தவர் இன்னொரு சம்பிரதாயத்தில் தலையிட மாட்டார்கள்.. அதாவது ஸ்ரீரங்கம் கோயில் பாஞ்சராத்னம் அதே கூடல் அழகர் கோயில் வைகானசம்.. இங்கே இருக்கும் பட்டர் அங்கே செல்ல முடியாது..

.

28. அதோடு மட்டுமல்ல, சைவத்தில் தீட்சிதர்கள் பூஜை செய்யும் சிதம்பரத்தில் சிவாச்சாரியர்கள் பூஜை செய்ய முடியாது 

.

அதே போல் சிவாச்சாரியர்கள் பூஜை செய்யும் கோவில்களில் தீட்சிதர்கள் பூஜை செய்ய முடியாது 

.

29. ஒரு கோவிலில் அக்கோவில் ஸ்தானிக அர்ச்சகர் தவிர வேறு யாரும் அனுமதி இன்றி சாமியை தொட முடியாது 

.

30. கொங்கு நாட்டு குல தெய்வ கோவிலில் பண்டார சமூகத்தவர்கள் தான் அர்ச்சகர்களாக உள்ளனர் 

.

வெற்று ஜாதி அரசியல், இனவெறி அரசியல் செய்பவர்களுக்கு இதுவெல்லாம் எதுவும் புரியாது

.

முகநூல் பதிவு ஒன்றில் இருந்து எடுக்கப் பட்டு, சில திருத்தங்களுடன் பதிவு செய்கிறேன்.

சிவாயநம!

No comments: