Sunday, September 19, 2021

மன்னார் ஆயரை

 மன்னார் ஆயரை எச்சரிக்கின்றேன்

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

வன்முறையைத் தூண்டுகிறார் மன்னார் ஆயர்.

தமிழரிடையே பிளவுகளை ஊக்குவிக்கிறார் மன்னார் ஆயர் 

மண்ணின் மரபுகளை அழித்தொழிக்க முயல்கிறார் மன்னார் ஆயர் 

இத்தகைய முயற்சிகளைக் கைவிடுமாறு மன்னார் ஆயரை எச்சரிக்கிறேன்.

வரலாற்றில் மிக மோசமானவராகப் போப்பாண்டவர் ஆறாம் அலெக்சாண்டரைக் கூறுவார்கள். 

அவரைப்போலவே இன்றைய மன்னார் ஆயரும் மிக மோசமான ஆயர் என்ற பெயரை எடுக்க விரும்புகிறாரா?

மன்னாரைக் கைப்பற்றுக என ஆணையிட்டவன் போப்பாண்டவர் ஆறாம் அலெக்சாண்டர். 

அந்த ஆணையை ஏற்றுப் பிரான்சிஸ் சேவியர் என்ற கொடுமையாளரை அனுப்பியவன் போத்துக்கேய மன்னன் முதலாம் இம்மானுவேல்.

Mannar Inquisition சூத்திரதாரி பிரான்சிஸ் சேவியர். அவன் நூற்றுக் கணக்கில் சைவர்களைக் கொலை செய்து புதைத்த மன்னார் நகரத்தின் புதைகுழி 420-480 ஆண்டுகள் வரை பழமையானது எனத் தொல்லியலார் கூறுகின்றனர். அக்காலம் கொடுமையாளன் பிரான்சிஸ் சேவியரின் காலம்.

- பிரான்சிஸ் சேவியரைப் பின்பற்றி 
- போர்த்துக்கேயர் மன்னன் முதலாம் இம்மானுவேலனைப் பின்பற்றி 
- போப்பாண்டவர் ஆறாம் அலெக்சாண்டரைப் பின்பற்றி 
மன்னாரில் சைவர்களை ஒழிக்க முயல்பவர் இன்றைய மன்னார் ஆயர்.

வீறு கொண்டு எழுந்த முதலாம் சங்கிலியன் அக்காலக் கொடுமையாளனான பிரான்சிஸ் சேவியரை ஓட ஓட விரட்டினான் என்பதை இன்றைய மன்னார் ஆயர் மறந்துவிடக்கூடாது.

மடு பிரதேசச் செயலகப் பிரிவு சைவப் பெரும்பான்மைப் பூமி, சிவபூமி. அங்கே பரப்புக்கடந்தான் இல் உள்ள பசுஞ்சோலையின் தலைவரான பிள்ளையார் சிலையை எடுத்து விட்டு, அரேபிய பாலைவனத்துத் துறவி அந்தோனியார் சிலையை வைக்க முயன்ற கொடுங்கோலர்களை அனுப்பியவர் மன்னார் ஆயர். 

சைவர்கள் மறக்கவில்லை. செட்டிகுளத்தில் பிள்ளையார் கோயிலுக்கு முன்பு அந்தோணியார் சிலையை நிறுவிய ஆயரின் அடியாட்களைச் சைவர்கள் மறக்கவில்லை. அந்தச் சிலையை வெற்றிகரமாக அகற்றினோம். அங்கே விவேகானந்தர் சிலையை நிறுவினோம்.

1998இல் சிலாவத்துறை பிள்ளையார் கோயில் வாயிலில் மரியாள் சிலையை நிறுவிய பாதிரியாரையும் அடியாட்களையும் கண்டுபிடித்தனர்.

மரியாள் சிலையை அகற்றினர். இன்றுவரை அந்தப் பாதிரியாரையும் அடியாட்களையும் காணவில்லை என்ற நிலையை உருவாக்கிய வீரமறவர்கள் விடுதலைப் புலிகள்.

பரப்புக்கடந்தானில் சிவ பூமியான மடுப் பிரதேசத்தில் பிள்ளையார் சிலையை அகற்றும் துணிவை அடியாள்களுக்குக் கொடுத்தவர் மன்னார் ஆயர்.

திருக்கேதீச்சர மஹாசிவராத்திரி வளைவை உடைக்கவும் நந்திக் கொடியை காலால் மிதிக்கவும் பாதிரியாருக்கு அடியாள்களுக்கும் துணிவைக் கொடுத்தவர் மன்னார் ஆயர்.

முதலாம் சங்கிலியன் இன்று இல்லை.
விடுதலைப் புலிகள் இன்று இல்லை.

எனவே வேட்டையாடலாம் சேட்டை விடலாம் என மன்னார் ஆயர் துணிந்து நிற்கிறார்.

அவரை எச்சரிக்கிறேன். 

தமிழரைப் பிளவுபடுத்தும் முயற்சியைக் கைவிடுக.

வன்முறையைத் தூண்டி மன்னாரை மீண்டும் குருதி வெள்ளமாக்கும் முயற்சியைக் கைவிடுக.

மண்ணின் மரபை அழிக்கும் முயற்சியைக் கைவிடுக.

சைவ மக்கள் சமயப் பொறை காண்பவர்கள். அதைப் பலவீனம் என மன்னார் ஆயர் கருதி, பிள்ளையார் சிலைகளை உடைத்து அந்தோணியார் சிலைகளை வைக்க ஆணையிடுவாராயின் அவர் சைவர்களைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்.

மடுவில் கண்ணகை அம்மன் கோயிலையும் மாந்தையில் திருக்கேதீச்சரத்தையும் உடைத்தது போன்று தமிழ் மரபு அடையாளங்களை தொடர்ந்து உடைக்கலாம் அழிக்கலாம் என மன்னார் ஆயர் கருதுவார் ஆயின் அதற்காக ஆயர் வருந்த வேண்டிய காலங்கள் விரைவில் வரும். 

மன்னார் ஆயரே, சைவர்கள் உங்களை எச்சரிக்கிறார்கள்.

No comments: