Sunday, September 19, 2021

சைவத் திருக்கோயில்களைக் காப்பாற்றியமை 1973 ஆனி

 புரட்டாதி 2 2052 வெள்ளிக்கிழமை (17 9 2021)

அன்புள்ள எனது அருமை ஞானானந்தன் அவர்களுக்கு
நீங்கள் ஆத்திரேலியாவில் பிரிசுப்பேனில் பொறியியலாளாளராகப் பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள தொடர்வண்டி நிலையங்களை தொடர்வண்டிச் சாலைகளை தொடர்வண்டிப் பெட்டிகளை அமைக்கும் ஆலோசகராக இருந்து வருகிறீர்கள்.
கொழும்பில் வாழ்கின்ற மேதகு ஆளுநராக இறுதியாகப் பதவி வகித்து ஓய்வு பெற்று இருக்கின்ற எனது அருமை நண்பர் திரு லோகேஸ்வரன் அவர்கள் எனக்கு அடிக்கடி நினைவூட்டுவார்.
சைவத் திருக்கோயில்களை வழிபட்டாளர்கள் ஆட்சியில் கொண்டு வருகின்ற முயற்சியை நீங்கள் முளையிலேயே கிள்ளி எறிந்து முறியடித்தீர்கள்.
வடமேற்கு மாகாணத்தில் வட மத்திய மாகாணத்தில் தெற்கு மாகாணத்தில் இன்று வரை சைவக் கோயில்கள் சைவ ஆட்சியிலே இருக்கின்றன. அங்கு பெரும் எண்ணிக்கையில் சைவர் அல்லாதவர்கள் வழிபடுகிறார்கள்.
அந்தச் சட்டம் வந்திருந்தால் இன்று அந்தந்த மாகாணங்களில் உள்ள சைவத் திருக்கோயில்கள் மியன்மாரில் உள்ளதுபோல் புத்தர் சிலைகளையும் கொண்ட கோயில்களாக மாறியிருக்கும். சைவ ஆகம ஆட்சி அற்றுப்போய் இருக்கும்.
மியன்மாரில் உள்ள சைவக் கோயில்களில் பிரகாரத்தில் பல மூர்த்தங்களுடன் புத்தரின் மூர்த்தமும் கட்டாயமாக இருக்கவேண்டும்.
ஓம் சாக்கிய நமகா
ஓம் கௌதமா நமகா
ஓம் சித்தார்த்த நமகா
ஓம் கபிலவஸ்தாய நமகா
ஓம் உலும்பினியாய நமகா
ஓம் புத்தாய நமகா
என்ற சுலோகங்களைச் சொல்லி சைவக் குருக்களே பூசையும் செய்வார். அடியவர்களுக்காக அர்ச்சனையும் செய்வார்.
நீங்களும் 20 மாணவர்களும் சேர்ந்து அன்று சைவத்தைக் காப்பாற்றினீர்கள். சைவத் திருக்கோயில்களைக் காப்பாற்றினீர்கள்.
கரணவாய் சிவா ஞானானந்தன்
கரணவாய் கந்தையா நீலகண்டன்
மட்டுவில் நடராசா கருணாகரன்
யாழ்ப்பாணம் இளங்கோ வேந்தனார்
ஆகிய 4 பெயர்கள் எனக்கு நினைவில் இருக்கின்றன
அனைவரும் அக்காலத்தில் கட்டுபெத்தை பொறியியல் கல்லூரியிலும் சட்டக் கல்லூரியிலும் படித்தவர்கள்.
அந்த நிகழ்ச்சியை யாழ்ப்பாணத்திலிருந்து அண்மைக் காலமாக வெளியாகும் மீளுருப் பெற்ற ஈழநாடு இதழின் இன்றைய பத்தி ஒன்றில் ஊர்க்குருவியார் பாராட்டி எழுதியிருக்கிறார்.
அந்தப் பாராட்டுகள் யாவும் உங்களையும் அந்த மாணவர்களையுமே சேரும்.
நன்றி
அன்புடன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
உரை இன் படமாக இருக்கக்கூடும்
Sivakami Sandrasegaran, Kethis Arumainayakam மற்றும் 18 பேர்
2 கருத்துகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

No comments: