புரட்டாதி 28, 2051, புதன்கிழமை (14.10.2020)
வத்திக்கானின் வல்லூறுகள் வட இலங்கையில்
மன்னார் மாவட்டம் முருங்கன் சிறு நகரம்.
அரசு நடத்தும் தொடக்கப் பள்ளி.
தலைமை ஆசிரியர் இல்லை.
எனவே ஆசிரியர் ஒருவர் அதுவும் அருள் நங்கையானவர் பொறுப்புத் தலைமை ஆசிரியர்.
மிகச்சிறந்த ஆசிரியர்.
மிகச் சிறந்த தலைமை ஆசிரியர் (பொறுப்பு).
ஆசிரியர் அருள் நங்கையை வேறு பள்ளிக்கு இடம் மாற்றுகிறது அரசு.
பெற்றோர் ஒப்பவில்லை.
உடன் கற்பிக்கும் ஆசிரியர் ஒப்பவில்லை.
மாணவர் எவரும் ஒப்பவில்லை.
ஆனாலும் அரசு கேட்கவில்லை.
இடமாற்றம் உறுதி.
பெற்றோரும் சார்ந்த ஊரவரும் குமுறுகிறார்கள் கொந்தளிக்கிறார்கள் கூடுகிறார்கள் குரல் கொடுக்கிறார்கள். மசியவில்லை அரசு.
மன்னார் வலையக் கல்வி அலுவலகத்திலிருந்து மூத்த அலுவலர் மக்களின் குரல் கேட்க வருகிறார். பெற்றோரின் புழுக்கம் அறிய வருகிறார். ஆசிரியரின் ஆதங்கங்களைக் கேட்க வருகிறார். கொதிப்புக் குரல்கள் கிளர்கின்றன.
தாங்கமுடியாத மூத்த கல்வி அலுவலர், குமுறிக் கொதித்தவரிடம் கூறுகிறார், மன்னார் ஆயர் இல்லத்தை கேளுங்கள் அரசு அதிகாரிகளாக நாங்கள் எதையும் செய்ய முடியாது.
மன்னார் கல்வி அலுவலகம்
வட மாகாணக் கல்வி அமைச்சு
கொழும்பின் கல்வி அமைச்சு
இவர்கள் யாவரையும் வினைகொள்ளும் குடியரசுத் தலைவர் கோத்தபாய ராஜபக்சவின் அரசு.
அரசால் செய்ய முடியாது ஆயரால் மட்டுமே செய்ய முடியும் என்கிறார் மூத்த கல்வி அலுவலர்.
அரசின் நீட்டமான ஆட்சியின் நீட்டமான அலுவலர், ஆயரின் ஆளுகைக்குள் அரசு நடப்பதாக வெளிப்படையாகக் குடிமக்களிடம் கூறுகிறார்.
மன்னாரில் நடப்பது அரசின் ஆட்சி அல்ல ஆயரின் ஆட்சி என வெளிப்படையாக அரசின் மூத்த அலுவலரே கூறுகிறார். குடிமக்களிடம் கூறுகிறார்.
குடிமக்களால் குடிமக்களுக்காக குடிமக்கள் அமைத்த குடியரசு ஆட்சியை நடத்துவோர்: வத்திக்கானிலிருந்து ஆளும் போப்பாண்டவர், அவருடைய நீட்டமாக இலங்கையில் கருதினால் மல்கம் இரஞ்சித், அவருடைய நீட்டமாக மன்னார் ஆயர்.
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றம் ஆயினென்
மன்னார் மாவட்ட ஆட்சியர் பதவி ஆயினென்
வடமாகாண ஆளுநர் பதவி ஆயினென்
குடியரசுத் தலைவர் தீர்மானிப்பதில்லையோ?
இலங்கை அரசு தீர்மானிப்பதில்லையோ?
வத்திக்கான் அரசின் முகவர்கள் தீர்மானிக்கிறார்களோ?
இலங்கையில் மக்களாட்சியா? வத்திக்கான் ஆட்சியா?
வடமாகாண ஆளுநர் பதவி
வடமாகாணத் தலைமைச் செயலாளர் பதவி
வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பதவி
இவ்வாறாக வடமாகாணத்திலுள்ள வலிமைமிக்க ஆட்சிப் பதவிகளில் யார் பொறுப்பாக இருப்பது? என்பதைத் தீர்மானிப்பது
இலங்கையில் மக்கள் ஆட்சியா?
குடியரசுத்தலைவர் ஆட்சியா?
வத்திக்கானின் முகவர்களும் தென்னிந்திய திருச்சபை மெதடிஸ்த திருச்சபை ஏனைய கிறிஸ்தவ திருச்சபைகளின் முகவர்களும் இணைந்த ஆட்சியா? வட மாகாணத்தில் நடைபெறுகிறது.
புறாக்களின் இரைகளை வல்லூறுகள் உராஞ்சி உண்கின்றன. சிங்கத்தின் இரையை ஓநாய்களும் நரிகளும் மறைந்திருந்து பறிக்க முயல்கின்றன.
இலங்கைக் குடிமக்களே, நம் சிவ பூமியில் கத்தோலிக்க மேலாதிக்க வத்திக்கான் மேலாட்சியை அகற்றுவோம். உணர்வீர் அணிதிரள்வீர்.
No comments:
Post a Comment