இணைத்துள்ள காணொளிக் காட்சிகளை மேற்கோள்காட்டி வருந்தினார் நண்பர்.
பேராசிரியர் முனைவர் சுப்பிரமணியம் சாமி தனிமனிதனாக, சாதனைகளின் மன்னனாக, இந்தியாவின் செல் நெறிகளை எடுத்து செல்பவராக இருக்கிறார்.
அவரது போக்கை எல்லோரும் விரும்புவதில்லை. அதற்காக யாரும் அவரை தண்டிப்பதும் இல்லை. அவருக்கு எதிராககா கடுமையான நடவடிக்கை எடுப்பதும் இல்லை.
ஏனெனில் அவர்,
வைத்திருக்கும் தகவல்கள்
கொண்டிருக்கும் தொடர்புகள்
பணியாற்றும் உத்வேகம்
இந்தியாவின் தேச நலன் என அவர் கருதுவதை முன்னெடுத்துச் செல்வன.
இலங்கைத் தமிழர் நலன்களை 1980களில் இருந்து அவர் பேண விரும்பினாரா. அதற்காகப் பல நூல்களைப் படித்தார், தகவல்களைத் திரட்டினார்
வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தார். அதற்கும் மேலாக இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாக இலங்கை இந்துக்கள் இருக்கிறார்கள் என்ற கருத்தையும் முன்வைத்தார்.
1980இல் பிற்பகுதிகளில் சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்தனர் விடுதலைப் புலிகள். அவர்களுள் ஒருவர் திரு அன்டன் பாலசிங்கம்.
'பேராசிரியர் முனைவர் சுப்பிரமணியம் சுவாமி அமெரிக்க உளவுத்துறையின் முகவர் சிஐஏ ஏஜென்ட்'
என்ற கருத்தை வெளியிட்டார் அவை நாளிதழ்களில் வெளிவந்தன.
இந்தியாவில் வாழ்ந்து கொண்டு
இந்திய விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டு
இந்தியத் தலைவர்கள் ஒருவரை அவதூறாகப் பேசுவது முறையா?
ஈழத் தமிழருக்கு நன்மை பயக்குமா? என்ற வினாக்களை அறிவு சார்ந்த சிந்தனையாளர்கள் அக்காலத்தில் என்னிடம் கேட்டனர்.
பேராசிரியர் முனைவர் சுப்பிரமணியசாமி எனக்கு நண்பர். அவர் என்னிடம் இந்த செய்தியை கூறி வருந்தினார். ஒரு படி மேலே போய் அன்டன் பாலசிங்கத்தை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்க முடியாதா? என என்னிடமும் கவிஞர் காசிஆனந்தன் இடமும் திருகோணமலை நீதிபதி சிவானந்தன் இடமும் கேட்டார்
ஈழத்தமிழர் சார்பில் இத்தகைய வெளிப்பாடுகளே அறிவு சார்ந்த பலரை ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியாவில் திருப்பின. உணர்வு சார்ந்தவர்கள் பொறுத்துக் கொண்டார்கள், அறிவு சார்ந்தவர்கள் ஓர் அளவுக்கு மேல் பொறுத்துக் கொள்ளவில்லை.
துக்ளக் சோ ராமசாமி
இந்து ராம்
தினமலர் கிருஷ்ணமூர்த்தி
முனைவர் சுப்பிரமணியன் சுவாமி
ஆனந்த விகடன் பாலசுப்பிரமணியம்
பாரதிய ஜனதா கட்சியின் ஜனா கிருஷ்ணமூர்த்தி
கலைஞர் கருணாநிதி
எனபா பலர் என்னிடம்
ஈழ விடுதலை சார்ந்தவர்களின் பொருத்தமற்ற
ஈழத் தமிழர்களின் எதிர்காலத்திற்குதா தீங்கு விளைவிக்கக்கூடிய போக்குப் பற்றி பலமுறை எடுத்துக் கூறியுள்ளார்கள்.
மேற்கூறிய பெயர்களை உடையவர்கள் பெரும்பாலோரைச் சிங்கள புத்த அரசின் தூதர்கள் சந்தித்தார்கள். ஈழவிடுதலை சார்ந்தவர்களை பயங்கரவாதிகள் எனத் திரும்பத் திரும்ப எடுத்துக் கூறினார்கள்
தமிழீழத் தீர்மானம் என்ற கருத்தை ஏற்றவர்கள்
இலங்கையில் உள்ள இந்துக்கள் நுழைவு அனுமதி இன்றிக் கடவுச்சீட்டு இன்றி இலங்கைக்குள் வந்து போகும் நிலையை அடையவேண்டும் வேண்டும் எனக் கூறியவர்கள்
அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகத் தொடங்கினார்கள்.
ஈழ விடுதலை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக இந்தியாவில் நடந்து கொண்ட முறைகள் இந்தியப் படையோடு மோதிய நிலைகள் இந்தப் பிளவைகா கூட்டின, பெருக்கின.
சிங்கள புத்த அரசுகள், ஈழ விடுதலை சார்ந்தவர்களின் இந்தப் வலுவீனத்தை ஊதிப் பெரிதாக்கி இந்தியாவில் ஆதரவைக் குறைத்தனர்.
தில்லியில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இலங்கை அரசு சார்ந்து அவர்களுக்காக பேசுகிற மூத்தவர் ஒருவர் இன்றைக்கும் இருக்கிறார் என்பது ஈழத்தமிழருக்கு துயரம் தரும் செய்தியாகும்
அதேபோன்று பொதுவுடமைக் கட்சி காங்கிரஸ் கட்சி போன்ற பல பெரிய கட்சிகளின் அலுவலகங்களில் உள்ளவர்களுக்கு சிங்கள புத்த அரசு தன் சார்பு நிலை எடுப்பதற்காக தீனி போட்டு வருகிறது என்பதை ஈழத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்
ஈழத் தமிழர்களில் பலர், இந்தியப்படை நடந்துகொண்ட நிலையை நேரில் கண்டு அநுபவித்ததால் இன்று வரைக்கும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இதேபோலவே இந்தியாவிலும் ஈழத் தமிழர் விடுதலை சார்ந்தவர்களால் அடைந்த துன்பங்களை அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் அநுபவித்தவர்கள் ஈழத் தமிழருக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே
இந்தப் பின்னணியில் பேராசிரியர் முனைவர் சுப்பிரமணியன் சுவாமி ஈழத் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை கடுமையாக எடுத்ததும் சிங்கள புத்த அரசு தலைவருடன் நெருக்கமாக இருந்து வருகிறார் என்பதும் ஈழத்தமிழர் தம் கையாலேயே தம் தலையில் கொள்ளி வைத்த கதையாகும்
No comments:
Post a Comment