புரட்டாதி 1, 2051 வியாழக்கிழமை (17 9 2020)
இலங்கை வவுனியா வடக்கு
நெடுங்கேணியிலிருந்து தென் மேற்காக
ஒலிமடு வழியாக
அடர்ந்து நெடு மரங்களாலான
யானைக் காட்டுக்குள்
பல கிலோ மீட்டர் பயணம் செய்து
வெடுக்குநாறி மலை அடிவாரத்தை அடைந்தோம்.
நண்பர்கள் நடுக்காட்டில் எதிர்கொண்டனர்
காவல்துறையினர் நடுக்காட்டில் எதிர்கொண்டனர்
மலையில் கோயில் தொடர்பாகத்
தொல்லியல் துறை கவனத்தில் எடுத்ததால்
நீதிமன்றத்தில் காவல்துறையினர் வழக்குத் தொடுத்த்திருந்தனர்.
பூசையையும் விழாவையும் வழமைபோல் நடத்தலாம் என்ற கருத்துடைய ஆணை, நீதிமன்றம் கொடுத்தது
நாங்கள் போவதற்கு முதல் நாள் நீதிமன்ற ஆணை.
நாங்கள் போன நாள்
10 நாள் விழா தொடங்கும் நாள்
குடி தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்
குளிக்கும் வசதி அங்கு இல்லை
நடுக்காட்டில் நடக்க வேண்டும் உழவுந்திலும் பயணிக்கலாம்
பல கிலோமீட்டர் செல்ல வேண்டும்
வெடுக்குநாறி கருங்கல்லினால் ஆன
குன்றின் உச்சியில் பிள்ளையாரும் சிவலிங்கமும்
கீழே குகைகளுள் பிள்ளையார் அம்மன் முருகன் நாகதம்பிரான்
2000 ஆண்டுக்கு முந்தைய தமிழி எழுத்து வரிகள்
நாக தம்பிரான் போன்ற கல் வளைவு
இலிங்கம் போன்ற பாரிய கல்
நெடுநேரம் வழிபாட்டில் ஈடுபட்டோம்
உச்சிக்கு ஏறுவது எளிதானதல்ல
படங்களைப் பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள்
No comments:
Post a Comment