Sunday, September 29, 2019

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில்


புரட்டாதி 7, 2050 செவ்வாய் (24.09.2019)
வினைப்பயனைக் கண் முன்னே கண்ட பின்புமா?
சைவர்களைப் பகைத்துக்கொண்டு வணக்கத்துக்குரிய தேரர்கள் எனச் சொல்லப்படுவோர் புத்தத்தை கட்டியெழுப்ப முயன்றால் அந்த முயற்சி படுகுழியில் விழும் என்பதை வரலாறு உணர்த்தியது.
புற்றுநோய் படுகுழியில் விழுவார்கள். காசநோய்க் கடுமையில் உழல்வார்கள். வெப்புநோய்க் கொடுமையில் தவிப்பார்கள். புத்த சமயத்தவர் நம்புகின்ற கர்மம் என்ற வினைப்பயன் போலிப் புத்தர்களை விடாது தொடரும். வரலாறு தந்த பாடத்தை மறந்தார்கள். மீண்டும் பாடம் புகட்ட வேண்டுமென்று விரும்புகிறார்களோ?
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு திருக்கேதீச்சரப் பதிகத்தில் ஞானசம்பந்தப் பெருமான் இத்தகைய தேரர்களைப் புனை துகில் அணியும் தேரர் எனக் கூறினார்.
வளர்ச்சியை முடக்குகிறார்கள். இணக்கத்தை உடைக்கிறார்கள். பிணக்குகளை வளர்க்கிறார்கள். நீதியைப் புதைக்கிறார்கள். சட்டங்களை மிதிக்கிறார்கள்.
புத்தத் தேசியத்தை அந்நிய ஊடுருவல்கள் இருந்து காப்பதற்குச் சைவ மக்கள் தயாராக இருக்கிறார்கள். சைவ உணர்வாளர்களேயே மதிக்காமல் மிதித்து நடக்கின்ற புத்தரர்களைப் புத்த உணர்வாளர்கள் புத்த மத நம்பிக்கை உள்ளவர்கள் புத்தரின் ஐந்து வழிகளையும் எட்டு ஒழுக்கங்களையும் நம்புகிறவர்கள் புத்தரின் கருணையை எடுத்துக் கூறுபவர்கள் வழிநடத்த வேண்டும்
பிறழ்ச்சிப் புத்த தேரர்களைக் கட்டுக்கடக்காது விட்டால் இந்த நாடு வன்முறைக் காடாகும். ஆட்சியில் உள்ளவர்களுக்குப் புனை துகில் அணியும் புத்த தேரர்கள் சவாலாக இருக்கிறார்கள்.
சைவர்கள் இடையே அப்பரும் சம்பந்தரும் ஆறுமுக நாவலரும் மீண்டும் எழுவார்கள் இந்த எழுச்சியைப் புனை துகில் அணியும் புத்த தேரர்கள் தடுக்கவே முடியாது.
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயிலைச் சுற்றியுள்ள சிவ பூமி நிலங்களில் பிற சமயத்தவர் எவரும் தம் சின்னங்களை அடையாளங்களை நிறுவவே முடியாது. விடவும் மாட்டோம்

No comments: