புத்த சைவச் சிக்கல் தீயில் குளிர்காயும கிருத்தவப் பாதிரிகள்
மட்டக்களப்பில் காளி கோயில் இருந்த இடத்தில் மசூதியை கட்டியது போலச் செம்மலை நீராவியடியில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் பல்சாலையைக் கட்டவில்லை.
பிள்ளையார் கோவிலை அப்படியே விட்டுவிட்டு அருகே பல்சாலை, எதிர்ப்புறத்தில் மாபெரும் புத்தர் சிலை என அமைத்துள்ளார்கள்.
திருக்கேதீச்சரத்தில் பாலாவியின் கரையில் சிவன் உறைகிறார். தேவாரப் பாடல் சொல்லும் செய்தி இப்பொழுது பாலாவியின் கரைமேல் அடாத்தாக உறைபவர் உலூர்தம்மாள்.
திருக்கேதீச்சரத்தில் தெருவுக்கு எதிரே புத்த கோயில் ஒன்றையும் அமைத்தார்கள். மன்னார்ப் பெருமகன் சிவகரன் சுட்டிக்காட்டிய பின் அவர்களாகவே வேறு இடத்திற்குப் போகிறார்கள்.
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் பகுதியை நேற்றுச் (24.9) சென்று பார்த்தேன்.
தமிழர் மரபுரிமை அமைப்பு என்ற பெயரில் முல்லைத்தீவில் போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள்.
அவர்களுட் பலர் பாதிரியார்கள்.
இந்துக் கோயிலைக் காப்பதற்குப் பாதிரியார்கள் ஏன் வந்தார்கள்? என்ற வினா என் மனதைத் தொடர்ந்து குடைந்து கொண்டே இருந்தது.
அவர்கள் எழுதிக்கொடுத்த முழக்கங்களை ஏதுமறியா மக்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அந்த முழக்கங்கள் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த முழக்கங்களை அன்றிச் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் உரிமை பற்றிய முழக்கங்களாக இருந்தவை ஒருசில.
அரசுக்குரிய விண்ணப்பக் கடிதத்தைப் போராட்டக்காரர்களுக்கு வாசித்துக் காட்டியவர் பாதிரியார். அந்தக் கடிதத்தில் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் சிக்கலையே தனித்துக் கூறாமல் இராணுவத் தளபதியாக யாரை நியமிக்கலாம் நியமிக்க கூடாது என்பது போன்ற அரசியல் கருத்துகளை வலியுறுத்தி இருந்தார்கள்.
பின்பு நடந்த செய்தியாளர் மாநாட்டின் முதன்மைப் பேச்சாளராக இருந்தவர் கிறிஸ்தவ பாதிரியார்.
சைவர்களையும் புத்தர்களையும் சண்டைக்குத் தூண்டிவிடுகின்ற நோக்கத்தில் பாதிரிகள் நீராவியடிப் பிள்ளையார் கோயில் சிக்கலைப் பயன்படுத்துவது எனக்கு மிகவும் வேதனையை தந்தது.
தொண்டீச்சரம் சிவன் கோயில் இருந்த இடத்தில் உலூசியா தேவாலயம்,
நல்லூர் முருகன் கோயில் இருந்த இடத்தில் கிறித்தவ தேவாலயம்,
பாலாவியின் கரைமேல் புதிதாக உலூர்தம்மாள் தேவாலயம்,
மன்னார் தள்ளாடியில் ஆட்காட்டி வெளிச் சந்தியில் பிள்ளையார் கோயில்கள் இடிப்பு.
மன்னார் மாவட்டம் முழுவதும் சைவக் கோயில்கள் இருக்கும் இடங்களில் திடீர் திடீர் மரியாள் சிலைகளும் சிலுவைகளும் அரச நிலங்களில் எழும்புகின்றன.
பண்டத்தரிப்பில் யாழ்ப்பாண நகரத்தில் சிதம்பரம் திருக்கோயிலுக்கு சொந்தமான காணிகளில் கிறித்தவத் தேவாலயங்கள்.
சைவர்களின் நோக்கிய அந்நிய நிதியிலும் அந்நிய நற்செய்தியாளர்களாலும் கடுமையான மதமாற்றக் கிருத்தவ முயற்சிகள்.
சைவர்களை இவ்வாறு அழிக்கவும் ஒழிக்கவும் முயல்கின்ற கிருத்தவ அமைப்புகளைக் கண்டித்துப் பேரணிகள் போராட்டங்கள் நடத்தத் தெரியாதவர்கள் வேதம் ஓதுகிறார்கள் கடவுளர்களகவா சாத்தானகளாகவா?
No comments:
Post a Comment