Wednesday, April 10, 2024

DBS Jeyaraj on Hindu common candidate

 

Scroll down for the English original

You are reading the Tamil version first

குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஓர் இந்து

மற்றும்

இந்துத் தமிழ் ஈழம் எனும் கருத்துரு

ஊடகப் புலமையர் திபிசெ செயராசர்

புதன் 10.04.2024

அறிமுகம்

சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தனும் அவரின் தோழர்களும் கிறித்தவ எதிர்ப்பில் உடன் நோக்கில் வெற்றி பெற்றனர். இந்து - கிறித்தவ மோதலினால் தமிழ்த் தேசிய வலிவைக் குறைப்பதிலும் நெடுநோக்கில் அவர்களின் நடவடிக்கைகள் வெற்றியே. தமிழ் தேசியத்தின் வரலாற்று எதிரிகள், கடந்த காலத்தில் தமிழர்களைப் பிளக்க முயன்றனர், முடியவில்லை. அவர்களால் முடியாததைச் சச்சிதானந்தன் நிறைவேற்றினார்.  இதில் முரண் நகை என்னவெனில், தமிழ்த் தேசியப் பண்ணையில் இளமை தொட்டு வளர்ந்தவரே, தன்னைத் தமிழ்த் தேசியராக இன்றும் கருதிக்கொள்பவரே சச்சிதானந்தன்.

ஊடகத்தார் திபிசெ செயராசராரின் கட்டுரை

இலங்கைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலை அறிவிக்கவில்லை. இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும். எனினும் இக்காலத்திலேயே ஊடகங்கள் முன்னுரிமைச் செய்திகளாக்குகின்றன. குடியரசுத் தலைவர் இரணில் விக்கிரமசிங்கர் முதலாக ஊடக முதலாளி திலித்தர் சயவீரர் ஈறாக, பலரின் பெயர்களை ஊடகங்கள் வேட்பாளராக்கி அலசுகின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தல் களம், தளம்பல் நிலையில் கலங்கி உள்ளது. மெல்லிய இக்கலக்கலைத் தடித்த கூழாக்க இந்துத் தளத்தை விரிவாக்க முயல்வோர் இந்துக் குடியரசுத் தலைவர் வேட்பாளரை முன்மொழிந்துளர். இந்துவே குடியரசுத் தலைவருக்கான பொது வேட்பாளர் என அரசியல் ஆர்வமுள்ளோரும் சிந்திக்கின்றனர். இது போதாதென்று, இந்து அமைப்பின் தலைவர் ஒருவரும் இலங்கை வாழ் இந்துக்களுக்கான பொதுவேட்பாளரை முன்மொழிந்துள்ளார். இந்துக்களே, “பொது வேட்பாளரான மனோ கணேசனுக்கு வாக்களியுங்கள்” எனக் கோருகிறார்.

இலங்கையில் சிவ சேனையின் நிறுவனர் - தலைவர் கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன். 5 ஏப்ரல் 2024, "ஈழநாடு" தமிழ் நாளிதழில் இவரின் அறிக்கை. சச்சிதானந்தன் என்றும் அழைப்பர். மறவன்புலவார் எனவும் அழைப்பர். குடாநாட்டின் தென்மராட்சிப் பிரிவில் உள்ள யாழ்ப்பாணம் - மறவன்புலவு இவரின் ஊர் என்பதால்.

இலங்கையில் இந்துக்கள் பெரும் அச்சுறுத்தலில் உளர். இலங்கையில் இந்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் புத்த தீவிரர், கிறித்தவத் தீவிரர், முகமதியத் தீவிரர் பல்வேறு வழிகளில் முயல்கின்றனர். இந்த மூன்று மதங்களோடு ஒப்பிடும்போது, இலங்கையில் இந்துக்களுக்கு அரசியல் உரிமைகள்  மிகக் மிகக் குறைவே. இவ்வாறு சச்சிதானந்தன் அந்த அறிக்கையில் கூறுகிறார்.

மூன்று பெரிய தேர்தல்கள் வர உள.  இந்தத் தேர்தல்களில் ஆழமா வேரூன்றிய இந்துப் பின்னணியைக் கொண்ட வேட்பாளர்களுக்கே இந்துக்கள் தங்கள் ஆதரவை வாக்காகக் கொடுக்க வேண்டும். இவ்வாறு சச்சிதானந்தன் அந்த அறிக்கையில் அழைக்கிறார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மலையகம் எனப் பரந்து வாழும் 20 இலட்சம் இந்துக்கள், பொது வேட்பாளருக்கே வாக்களிப்பர். மனோ கணேசனைப் பொது இந்து வேட்பாளராக முன்னிறுத்துக. குடியரசுத் தலைவர் தேர்தலில் அவருக்கே வாக்களிக்க. சிவ சேனைத் தலைவர் சச்சிதானந்தன் அந்த அறிக்கையில் இந்துக்களை அழைக்கிறார்.

மனோ கணேசன்

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன். கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன். 2015இல் உருவாகியதே தமிழ் முற்போக்குக் கூட்டணி. 2015 மற்றும் 2020 நாடாளுமன்றத் தேர்தல்களில் 6 நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்ற கூட்டணி. இலங்கையின் மலையகத் தமிழர்களின் மிகப்பெரிய அரசியல் அமைப்பு. இந்தப் பின்னணியில் மனோ கணேசன் குடியரசுத் தலைவருக்கான இந்துக்களின் பொது வேட்பாளராவாரா? எப்படி!

து தொடர்பாக மனோ கணேசனைத் தொடர்பு கொண்டேன். இந்துக்களின் பொது வேட்பாளராக விரும்பவில்லை என மனோ கணேசன் என்னிடம் எதுவும் கூறவில்லை. அவரோடு பேசியபின் அவர் விரும்பவில்லை என நான் ஊகித்தேன். சச்சிதானந்தனின் கூற்றைக் குறிப்பிட்டேன்.  அது அவருடைய (சச்சிதானந்தன்) பார்வை” என்றார். மனோ கணேசன் நாத்திகரல்லவா? இந்து அல்லவே! மனோ கணேசன் கிண்டலடித்தார்.

இந்துக்களின் பொது வேட்பாளராக மனோ கணேசன் இல்லை என்றாலும், சிவ சேனைத் தலைவர் போன்ற இந்துத்துவ ஆதரவாளர்கள் தம் முயற்சிகளை விரைவில் நிறுத்த வாய்ப்பில்லை. அவர்களின் முயற்சிகள் தொடரும். சைவ சமய வழிபாட்டுத் தலங்களைக்  கைப்பற்றி, இந்துப் பெரும்பான்மைப் பகுதிகளில் புத்த விகாரைகளைக் கட்டும் இன்றைய சூழ்நிலையில், இந்துக்களின் வெறுப்பு வளர்ந்தே வருகிறது. எனவே, இந்துப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க இந்துக்களை அணிதிரட்டுவது எளிதானதே.

வேலன் சுவாமிகள்

குடியரசுத் தேர்தலிலுக்கான இந்துத்துவ வேட்பாளருள், யாழ்ப்பாணம் நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகளும் ஒருவர். கட்டுப்பெத்தையில் படித்த பொறியியலாளர், ஆன்மீக நாட்டத்தால் சின்மயா மிசனில் சேர்ந்தார், காவி உடை அணிந்தார். சில காலத்தின் பின்னர் சின்மயா மிசனை விட்டு நீங்கினார். சிவகுரு ஆதீனத்தை நிறுவினார்.

அரசியல் போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்றார். தளையிட்டனர். பிணையில் வெளிவந்தார். எனவே அவர் ஓர் "அரசியல் சுவாமி". அவருக்கு இந்திஇந்துத்துவா அமைப்புகளின் ஆதரவும் இருக்கலாம். இலங்கை இந்துக்களுள் இந்துத்துவாக் கருத்தாளர் அண்மைக் காலங்களில் ஊடுருவியுளர். அறியாமையாலோ தம் நலனுக்காகவோ இவர்கள் இந்துவையும் இந்துத்துவத்தையும் இணைத்துக்கொண்டனர். இந்துவாக இருப்பதும் ந்துத்துவாவைப் பின்பற்றுதும் ஒன்றல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்துத்துவா மற்றும் ஆர்.எஸ்.எஸ்

இந்துத்துவா என்றால் என்ன?

அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான ஆக்சுபோர்டு அகராதி: இந்துத்துவா எனில் இந்து மயமாதல்.  இந்துத் தேசியத்தின் கருத்தியலே இந்துத்துவா. இந்தியத் துணைக் கண்டத்தின் பொதுப் பண்பாடே இந்துத்துவா.

மனிதப் புவியியல் அகராதி: இந்துத் தேசியத்தின் பண்பாட்டு அடையாளம் இந்துத்துவா. அனைத்து இந்துக்களும் தம்முள் பகிரும் பண்பாட்டுக் கூறுகளே இந்துத்துவம்.

தெற்காசியாவுக்கான அரசியல் மற்றும் பொருளாதார அகராதி: இந்து ஒற்றுமைக்கான கூட்டு அடையாளத்தை உருவாக்குவதே இந்துத்துவாவின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று.

இந்துத்துவா என்பது இந்தியாவின் ராட்ரிய சுவயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்), சார்ந்த அமைப்புகளான சங்க பரிவாரின் (சங்க குடும்பம்) முதன்மைக் கொள்கை. சங்பரிவார் என்பது ராட்ரிய சுவயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) தலைமையிலான இந்துத்துவா குழுக்களுக்கான நிழற் குடை. 1925இல் நிறுவிய இராட்ரிய சுவயம்சேவக சங்கம், இந்தியாவைத் தளமாகக் கொண்டது, படைக் கட்டமைப்பை ஒத்த அமைப்பு. சங்க பரிவாரின் நடுவில் ஆர்எஸ்எஸ் உள்ளது. இந்துவை மேம்படுத்துக. இந்துக்கு முன்னுரிமை தருக. இதற்கான வியூகங்களை ஆர்எஸ்எஸ் அமைத்து, தேசியவாத இலட்சியங்களையும் இலக்குகளையும் ஒருங்கிணைத்து, இந்து அரசு, இந்து ஆட்சி, இந்து தேசம் அமைத்தலே பணி.

ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகளாக, விசுந்து பரிசத்து, (விஎச்பி), ட்சரங் தளம், பாரதிய னதாச் கட்சி (பிஜேபி), அகில பாரதிய வித்யார்த்தி பரித்து (ஏபிவிபி) மற்றும் பல அமைப்புகள் உள்ளன. அவற்றில் சில சிறிய அமைப்புகள், வழிபாட்டு முறைகள் அல்லது அரசியல் கட்சிகள்.

தோராயமாக 585,000 உறுப்பினர்களைக் கொண்டதே ஆர்எஸ்எஸ். 57,000 க்கும் மேற்பட்ட கிளைகளும் தோழமை அமைப்புகளும் உள. தொழிற்சங்கப் பிரிவு (பாரதிய மத்தூர் சங்கம்), பெண்கள் பிரிவு (ராட்ரிய சேவிகா சமிதி), மாணவர் பிரிவு (அகில் பாரதிய வித்யார்த்தி பரித்து) மற்றும் பொருளாதாரப் பிரிவு (சுதேசி யாகரன் மஞ்சு) என்பன சில. பாரதிய னதாக் கட்சி, புது தில்லியில் ஆளும் கட்சியாக ஆட்சிக் கட்டிலில் இருக்கலாம். ஆனால் கட்சியை ஆர்எஸ்எஸ் இயக்குகிறது. ஆர்எஸ்எஸ் கண்காணிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஆளும் பாசக அரசில் உள்ள 75% அமைச்சர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களே.

இந்துத்துவ மயமாக்கல்

இலங்கை இந்துத்துவ மயமாகுதல் வருத்தம் தருவதே. இலங்கைத் தமிழ்ச் சமூகம் எனில் இந்துக்களின் சமூகமே. யாழ்ப்பாணத் தமிழ் இந்துக்கள் சைவ சமயத்தினரே. உறுதியான சைவப் பற்றினர் எனினும் தமிழ் இந்து சமூகம் பொறுமையானோரே, நல்லிணக்க ஆர்வலரே. இலங்கை அரசியலில் தமிழர்களாக இருப்பதே சிக்கல். இந்துக்கள் அல்லது கிறித்தவர்களாக அன்றித் தமிழர் என்பதாலேயே பாதிப்புற்றனர்.

மேனாட்டு மேலாதிக்க எதிர்ப்பின் மீட்சி

சிங்களவரும் தமிழரும் மேனாட்டு மேலாதிக்கத்தை எதிர்த்தனர்.  தேசிய மறுமலர்ச்சியை விழைந்தனர். இதில் சிங்களவரும் தமிழரும் சிற்சில வேறுபாடுகளுடன் ஒரே வழியைப் பின்பற்றினர். அவர்களுக்கு மொழியைவிட மதம் முதன்மைத் தேசியமானது.காரிக தர்மபாலரின் புத்த மறுமலர்ச்சி. ஆறுமுக நாவலரின் சைவ மறுமலர்ச்சி. இவர்கள் காட்டிய தேசிய மீளெழுச்சி சமயங்கள் சார்ந்ததே.

விடுதலைக்குப் பின் இந்த மறுமலர்ச்சியின் தொடர்ச்சி பெரிய வேறுபாட்டைக் கண்டது. சிங்கள புத்தத் தேசியமே சிங்கள மக்களின் மறுமலர்ச்சியின் எழுச்சியாகத் தொடர்ந்தது.

சிங்கள புத்தத் தேசிய எழுச்சியின் பலிகடாக்களான தமிழர், மொழி சார்ந்து எழுந்தனர். மதம் சார்ந்ததாகக் கிளரவில்லை. சிங்களத் தேசிய எழுச்சிக் காலத்தில் தமிழ்த் தேசியம் எழுந்தபோது அது மதச்சார்பற்றதாக மாறியது. தமிழ் இந்துத் தேசிய எழுச்சியாக அன்று.

இதற்குப் பல காரணங்கள். இரண்டு சிறப்புக் காரணங்கள். அரசியல் தலைவராக கிறித்தவர் சா. யே. வே. செல்வநாயகம் ஒருவர். மொழிப் பண்பாட்டுத் தலைவராகக் கத்தோலிக்கர் சேவியர் தனிநாயகம் மற்றவர். தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தவர் அருட்தந்தை தனிநாயகம். ம் பெருமைமிகு பாரம்பரியத்தை தமிழர் அறிந்து இறும்பூதெய்த அவரும் காரணர்.

தமிழ்ப் பேசும் மக்கள்

சிங்களத் திணிப்புக்கு எதிரான தமிழ் அரசியல் இயக்கத்திற்கு செல்வநாயகம் தலைமை தாங்கினார். தமிழ்க் கப்பலின் தலைசிறந்த தலைவனாக அவரது இருப்பு. மொழியைத் தளமாகக் கொண்ட மதச்சார்பற்ற தமிழ்த் தேசியத்தின் போக்கே அவரின் வழி. தமிழ் இந்துக்களையும் கிறித்தவர்களையும் அரவணைத்தார். முகமதியர்களையும் "தமிழ்ப் பேசும் மக்கள்" என்ற கருத்துள் இணைத்தார். அவரால் மொழிவழித் தேசியத்துக்கே வெற்றி. அவரது அரவணைப்பை முகமதியர் உதறினர்.  இன - மொழி அடையாளத்திற்கு மாறாக இன - மத அடையாளத்தை முகமதியர் தேர்ந்னர்.

எனினும் இந்து - கிறித்தவ ஒற்றுமை மேலோங்கிது. தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ்ப் போராளி அமைப்புகளும் அடிப்படையில் மதச்சார்பற்றவையே. எவ்வாறாயினும், போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் இந்த ஒற்றுமை சில அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

மதமாற்றம்

முதலாவது காரணம்,

புதிதாக முளைத்த நற்செய்தி மதமாற்றச் சபைகள். அவை உருவாக்கிய உறுத்தல்களும் உளைச்சல்களும். முன்பு உருவான கிறித்தவ தேவாலயங்கள், தமிழ்ப் பகுதி இந்துக்களுடன் நிலையான புரிந்துணர்வைக் கொண்டிருந்தன. வாழுங்கள், வாழ விடுங்கள் என்பதை இரு சாராரும் ஏற்றனர். இந்துக்களைக் கிறித்தவர்களாக மாற்ற முயற்சிக்கவில்லை. புதிய நற்செய்தி மதமாற்றச் சபைகளும் குழுக்களும் தீவிர மதமாற்றத்தில் ஈடுபட்டனர். இந்தப் புதிய கிறித்தவர்களில் பலர் புதிதாக மதம் மாறியவர்களுக்கான வெறியுடன், வைராக்கியத்துடன், ஆர்வத்துடன், இந்துக்களை மிதித்தனர். தமிழ்ப் பகுதிகளில் இந்து -கிறித்தவ உறவுகளை உறுத்தினர், உடைத்தனர்.

அரசியலாரும் ஊடகத்தாரும்

இரண்டாவது காரணம்,

இந்துச் சார்பு அரசியலாரினதும் ஊடகத்தாரிதும் எழுச்சி.

தமிழ் அரசியலில் கத்தோலிக்கர் பலர் உளர். புட்டட்டாந்தியர் பலர் உளர். கடந்த கால, இக்கால நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  கடந்த கால மாகாண சபை உறுப்பினர்கள், கடந்த கால உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் எனக் கிறித்தவர் பலர் அடங்குவர். அண்மைக் காலமாகக் கிறித்தவ அரசியலாருக்கு எதிராக மதக் கூச்சலை எழுப்பி, அரசியல் நன்மையைப் பெறச் சில இந்து அரசியலார், மறைமுகமாகவோ நேரடியாகவோ முயல்கின்றனர். பெரும்பான்மைத் தமிழ் வாக்காளர் இந்துக்கள் என்பதால், கிறித்தவ எதிரப்பு உணர்வுகள் வெற்றி பெறும் என எதிர்பார்ப்பர்.

மேலும் தமிழ் அரசியலின் மதச்சார்பற்ற தன்மையும் சிதையத் தொடங்கியுள்ளது. தமிழ் அரசியல் கூட்டங்களின் தொடக்கத்தில், தமிழ்த் தாய் வாழ்த்து இசைப்பதே முந்தைய வழமை.  இக்காலத்தில் தமிழ் அரசியல் கூட்டங்கள் இந்து மத வழிபாட்டுடன் தொடங்குகின்றன.

இக்கால அரசியலார் ஒருவர், நெற்றியில் திருநீறு பூசுவார். வடமொழி மந்திரங்களை ஓதுவார். அதன் பின்னரே தன் உரையைத் தொடங்குவார். திருநீறு அணிவதோ வடமொழி மந்திரங்களை உச்சரிப்பதோ தவறல்ல. எனினும் கடந்த காலங்களில் அரசியல் கூட்டங்களில் இம்முறைமையைப் பின்பற்றியதில்லை.

அப்பட்டமான கிறித்தவ எதிர்ப்பு உணர்வு காட்டும் அரசியலாரையும் இக்காலத்தில் காண்கிறோம். இது மேலும் வருத்தத்துக்குரியது. உத்தரப் பிரதேசத்தின் பாக முதல்வர் யோகி ஆதித்தியநாதர் போன்று அடிக்கடி காவி உடை அணிபவர் முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். இந்துக்கள் மட்டுமே கூடும் அவையில், நீள் வெண்ணுடை அணிந்த அருட்தந்தையரைக் கண்டால்  காரித் துப்புவார்.  அத்கைய அருவருப்பான பழக்கம் அவருக்கு.

அநீதிகளுக்கு எதிராகத் தமிழ் இந்துக்கள், தமிழர்களாக அல்ல, இந்துக்களாகவே போராட்டம் நடத்த வேண்டும் என்ற கருத்தை அண்மைக் காலமாக மற்றொரு தமிழ் நாளிதழ் பரப்பிவருகிறதே.

ஆர்எஸ்எஸ் - பாசக

மூன்றாவது காரணம்,

இலங்கையில் இந்து - கிறித்தவ ஒற்றுமைக் குலைவுக்கு  ஆர்எஸ்எஸ் – பாவும் காரணமே. 2009இல் இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது. இந்தியாவில் 2014இல் நரேந்திர மோடி தலைமையிலான பாசக அரசு ஆட்சியில். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளுக்கு இந்தியாவிலிருந்து இந்து ஆர்வலர் வரத் தொடங்கினர். குறிப்பாக, வடபகுதிக்குத் தீவிர வலதுசாரி இந்து ஆர்வலர்கள் வருகை தந்தனர். இவர்கள் சங்க பரிவாரத்தின் பல்வேறு சிறிய அமைப்புகளையோ அரசியல் கட்சிகளையோ சேர்ந்தவர்கள். இலங்கைத் தமிழ் இந்துக்களைத் தேடி வந்தனர். இவர்களின் வருகையால் வடக்கில் இந்து - கிறித்தவ உறவுகள் சீர்குலைந்தன.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அருச்சுனர் சம்பத்தர் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு அடிக்கடி வருவார். முகமதியரை வெறுப்பவர். கிறித்தவரை வெறுப்பவர்.  தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். முகமதிய எதிர்ப்பு வன்முறைக்காக இவரைச் சிறையில் அடைத்தனர். பாதிப்புற்ற முகமதியரை மருத்துவமனையில் பார்க்க வந்த இந்து சட்டமன்ற உறுப்பினரைத் தாக்கியதற்காக இவரைச் சிறையில் அடைத்தனர். குடியரசுத் தலைவர் இரணில் விக்கிரமசிங்காவின் தலைமை ஆலோசகர் சாகல ரத்தினநாயக்கவைருச்சுனர் சம்பத்தர் ஒருமுறை சந்தித்தார். கொழும்பு அரசில் தனக்கு மிகவும் செல்வாக்கு இருப்பதாகக் காட்டவே இச்சந்திப்பு.

இந்துத் தேசிய அரசு

இலங்கைத் தமிழ் அரசியலில் பாக - ஆர்எஸ்எஸ் தாக்கமே இந்துத் தமிழீழம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் தமிழர்களுக்கான தனித் தமிழ் நாட்டுக் கனவு முடிவுக்கு வந்து. இருப்பினும், இந்துத் தேசிய அரசாக இருந்தால், தமிழ் மாநிலத்தை உருவாக்குவதற்குப் புதுதில்லி முன்வரும் என்ற பரப்புரை எழுந்துள்ளது. மதச்சார்பற்ற நாடு என்பதே தமிழீழக் கோரிக்கை. ஆனால் இப்போதோ ஆர்எஸ்எஸ் - பாக அரசு, இந்துத் தமிழ் ஈழம் அமைக்க மட்டுமே உதவுமாம்.

இந்தியாவில் பொறுப்புள்ள எவரும் இந்து ஈழம் என்று குறிப்பிடுவதில்லை, ஆனால் சங்க பரிவாரத்தின் கீழ்மட்ட செயற்பாட்டாளர் பலரும், புலம்பெயர் தமிழ் மக்களின் ஏமாற்றுக் குரல் வீரர்களும் இந்துத் தமிழீழம் திட்டத்தை முன்னெடுக்கின்றனர். இவர்களுள் ஒருவர் இலங்கைத் தமிழ்த் தேசியக் கவிஞர் காத்தமுத்து சிவானந்தன் என்ற காசி ஆனந்தன். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்துத் தமிழ் ஈழம் கிறித்தவர்களை விலக்குகிறது. இச் சொல்லே இந்து - கிறித்தவ உரசல்களுக்கு அடித்தளம்.

இந்து - கிறித்தவப் பிளவு

இந்து - கிறித்தவப் பிரிவினையைச் சிவ சேனைத் தலைவர் சச்சிதானந்தன் கையில் எடுக்கிறார். பிளவை மேலும் விரிக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலைக் கழகத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை சோற்றுக் கத்தோலிக்கர் என்றார். உலகெங்கும் சிலர் மதம் மாறிய கிறித்தவர்களை சோற்றுக் கிறித்தவர்கள் என இழிவாக அழைப்பர். அவர்களின் முன்னோர்கள் சோற்றுத் தட்டுக்காக கிறித்தவத்தை ஏற்றார்களாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு இலங்கைக்கு வந்த வெளிநாட்டு அரசியலாரைச் சந்தித்தது. இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த. சித்தார்த்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகிய ஐவர் அக்குழுவில் இடம்பெற்னர்.

சிவ சேனைத் தலைவர் ஓர் அறிக்கையில் தம் எதிர்ப்பைத் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களுள் 84% இந்துக்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்புக் குழுவிலோ 60% இந்துக்களே. 16% கிறித்தவர்களுக்குக் குழுவில் 40% எப்படி? எனக் கேட்டார். அடைக்கலநாதன் கத்தோலிக்கர். சுமந்திரன் புராட்டட்டான்ட்டர். இதையே சச்சிதானந்தன் சுட்டினார்.

சச்சிதானந்தனும் சிவ சேனையும் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படும் கிறித்தவ மறுமலர்ச்சிக் கூட்டங்களை, எழுச்சி நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்திய பெருமையை அடிக்கடி கூறிவருகின்றனர். அவர்களின் வியூகம் எளிமையானது. இத்தகைய கூட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துத் துண்டு அறிக்கைகள் வெளியிடுவர். மக்களிடை பரப்புவர். மறைமுக மிரட்டல் தொடரும். பின்னர் இத் துண்டு அறிக்கைகள் காவல்துறையில். கிறித்தவக் கூட்டங்கள் நடந்தால் சமாதானம் கெடுமாம். காவல் நிலையத்தில் முறையீடு. கூட்டங்களுக்கான உரிமத்தைத் திரும்பப் பெறக் காவல்துறையை வற்புறுத்துவர். அதனால் கூட்டங்களுக்குத் தடை.

சிவ சேனைத் தலைவர் சச்சிதானந்தனும் அவரின் தோழர்களும் கிறித்தவ எதிர்ப்பில் உடன் நோக்கில் வெற்றி பெற்றிருக்கலாம். இந்து - கிறித்தவ உறவுள் முறிந்துள்ளன. தமிழ் தேசியம் வலுவிழந்துள்ளது. தமிழரைப் பிளவிடுவதில் அவர்களின் நடவடிக்கைகள் நெடு நோக்கில் வெற்றி பெற்று வருகின்றன. கடந்த காலத்தில் தமிழ்த் தேசியத்தின் வரலாற்று எதிரிகளால் செய்ய முடியாததை, தமிழரைப் பிளவிடுவதை, சச்சிதானந்தன் நிறைவேற்றுகிறார். இதில் நகை முரண் என்னவெனில், சச்சி அவர்களே தமிழ்த் தேசியத்தின் பண்ணையில் வளர்ந்தவர். ம்மைத் தமிழ்த் தேசியவாதியாகவே இன்றும் கருதிக் கொண்டிருப்பவர்.

மறவன்புலவு சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழ் இந்துக்களின் இந்தத் தற்குறி மீட்பர் யார்? மறவன்புலவார் அல்லது மறவன்புலவு சச்சிதானந்தன் என அழைக்கப்படுவர், கணபதிப்பிள்ளையின் மகன் சச்சிதானந்தன். 1941இல் பிறந்தவர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழக விலங்கியல் இளநிலைப் பட்டதாரி. சென்னைப் பல்கலைக்கழக கடல்உயிரியலில் முதுநிலைப் பட்டதாரி.

கொழும்பில் கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகள் அறிவியல் ய்வாளர். 1977ஆம் ஆண்டு இனக்கலவர வன்முறைக்கு ஆளானார். யாழ்ப்பாணத்திற்கு மீண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார். அக்காலத்தில் அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பங்காளியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நடுவண் குழு உறுப்பினரானார்.

1979இல் சச்சிதானந்தன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பில் ஆலோசகராய் 23 நாடுகளில் பல ஆண்டுகள் பணியாற்றினார். அவரது ஐநா ஆலோசகர் பணிக்குப் பின் சென்னை வந்தார். காந்தளகம் பதிப்பகத்தை நிறுவினார். மிழ்நூல் என்ற இணையதளம் மூலம் புத்தகங்களை விற்பனை செய்தார். மின்னணு வணிகத்திலும் ஈடுபட்டார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதால் சென்னையில் பல மாதங்கள் தடுப்பிலிருந்தார்.

  2009இல் போர் முடிவடைந்த பின்னர் சச்சி இலங்கை சென்றார். யாழ்ப்பாணத்தில் காந்தளகம் பதிப்பகம் அமைத்தார். வடமாகாண முதலமைச்சராகவும் ஆசைப்பட்டார். சி. வி. விக்னேசுவரன் முதலமைச்சரானார். விரக்தியில், சச்சிதானந்தன் தமிழரசுக் கட்சியிலிருந்து ஒதுங்கினார். ஒரு காலத்தில் தீவிர தமிழ்த் தேசியர். பின்னர் இந்துத் தீவிரரானார்.

சிவ சேனை என்ற சிவனின் படை

2016ஆம் ஆண்டு சிவ சேனை அமைப்பைச் சச்சிதானந்தன் உருவாக்கினார். இந்திய மகாராஷ்டிரா மாநிலத்தில் கேலிப்பட ஓவியர் பால் தாக்கரே நிறுவிய "சிவ சேனா" (சிவாசியின் படை) மாதிரியில் உருவானதே இலங்கைச் சிவ சேனை. இப்போது மும்பை என்று அழைக்கப்படும் பம்பாயிலிருந்து தமிழர்கள், மலையாளிகள் மற்றும் தெலுங்கர்களை விரட்டுவதற்காகவே பால் தாக்கரே சிவ சேனாவைத் தொடங்கினார். சச்சியர் இதை எண்ணவில்லைப் போலும்!

வடக்கில் மாடு அறுப்பு மற்றும் மாட்டிறைச்சி விற்பனைக்கு எதிராகச் சிவ சேனையினர் ஆர்ப்பரித்தனர். கிறித்தவர்கள் மற்றும் முகமதியர்களுக்கு எதிராகப் போலியான பெயர்களில் (சட்டத்தில் இருந்து தப்ப) துண்டு அறிக்கைகள் வெளியிட்டனர். முகமதிய வணிகங்களைப் புறக்கணிப்பீர். கிறித்தவ வேட்பாளர்களுக்கு வாக்களிக்காதீர். சிவ பூமி (சிவனின் பூமி) என்ற யாழ்ப்பாணத்திலிருந்து முகமதியர்கள் மற்றும் கிறித்தவர்களை வெளியேறுக. இத்தகைய குரலொலிகளுக்கும் சிவ சேனை உடந்தையே.

சைவத் தமிழ்த் தேசியக் கட்சியைச் சச்சிதானந்தன் தொடங்கினார். 2020 நாடாளுமன்றத் தேர்தலில், சுயேச்சைக் குழுவாக வன்னி மாவட்டத்தில் இக்கட்சியினர் போட்டியிட்டானர். கிறித்தவர்கள் மற்றும் முகமதியர்களைத் தாக்கிப் பேசினர். இந்து வாக்குகளை குறிவைத்தனர். தேர்தலில் படு தோல்வி. மக்கள் இவர்களைத் துரத்தினர்.

குடியரசுத் தலைவர் தேர்தல்

கண் துஞ்சார் சச்சிதானந்தன். தோல்வியைத் தழுவேன் என்பவரே  மறவன்புலவார். இந்துக்களின் பொது வேட்பாளரைக் குடியரசுத் தேர்தலில் முன்னிறுத்தி உள்ளார். மதத்தைக் கலந்த மற்றொரு அரசியல் பணி. அவர் சரியான நேரத்தில் ஓர் இந்து வேட்பாளரைத் தேர்வதில் வென்றால், மிகவும் எதிர்பார்ப்புடன் வரும் 2024 குடியரசுத் தலைவர் தேர்தல் வண்ண மயமாகும். காரம் மணம் குணம் நிறையும். இலங்கைத் தமிழ்த் தேசியமோ மேலும் வலுவிழக்கும்.

A “Hindu” presidential candidate and the “Hindu Tamil Eelam” concept

by D. B. S. Jeyaraj

Wednesday, 10 April 2024 01:29

Siva Senai leader Sachithananthan and those of his ilk are seemingly successful in the short term in their anti-Christian action. But in the long term their actions are succeeding in weakening Tamil nationalism by driving the Hindu-Christian wedge in between. In that sense Sachithananthan is accomplishing what the historic enemies of Tamil nationalism have been unable to do in the past – Divide Tamils! The sad irony in this is that Sachi himself was nurtured in the nursery of Tamil nationalism and regards himself as Tamil nationalist still.

 Current media coverage in Sri Lanka is heavily focused on the forthcoming Presidential elections. Though officially not announced yet, it seems a foregone conclusion that the presidential poll would take place later this year. Several potential candidates ranging from incumbent president Ranil Wickremesinghe to media magnate Dilith Jayaweera are tipped to be in the presidential fray.

Adding to this uncertain state of affairs are recent attempts by vested interests to field a “Hindu” as a common presidential candidate in the 2024 election. Even as people were becoming aware of efforts by interested parties to nominate a Hindu presidential candidate, the head of a Hindu organisation in northern Sri Lanka issued a public statement calling for a common candidate to contest the forthcoming presidential poll on behalf of all Hindus in the island. Furthermore, Hindus were asked to vote for Mano Ganesan MP as the presidential candidate.

Kanapathipillai Sachithananthan the founder-leader of the “Siva Senai” (Army of Siva) movement in Sri Lanka issued a statement that was published in the Tamil newspaper “Eelanaadu” of 5 April 2024. Sachithananthan is known as “Maravanpulavu” Sachithananthan and “Maravanpulavu Sachi” on account of his native village in Jaffna – Maravanpulavu in the Thenmaratchy division of the peninsula.

Sachithananthan in his statement said that the Hindu religion in Sri Lanka was under grave threat. He alleged that extremists belonging to the Buddhist, Christian and Islamic religions were attempting through various means to reduce the number of Hindus in Sri Lanka. Compared to these three religions, Hindus had little political power in the country.

The “Siva Senai” leader pointed out in his statement that three big elections were expected in due course in Sri Lanka. He called upon the Hindus to voice their support strongly for candidates with deep-rooted Hindu backgrounds in these elections.

Sachithananthan also stated that if a common Hindu candidate contested the presidential election, 20 lakhs of Hindus living in the North, East, West, South and Central parts of Sri Lanka would vote for that person. The Siva Senai leader called upon Hindus to nominate Mano Ganesan as the common Hindu candidate and vote for him at the Presidential poll.

Mano Ganesan

As is well known, Colombo district Parliamentarian, Mano Ganesan is the leader of the Tamil Progressive Alliance (TPA). The TPA formed in 2015 obtained six MP seats at both the 2015 and 2020 Parliamentary polls. The TPA is therefore the largest political configuration representing the Hill Country Tamils (Malaiyahath Thamizhar) of Sri Lanka. Against that backdrop it seemed highly improbable that Mano Ganesan would opt to be the common Hindu Presidential candidate.

This writer contacted Mano Ganesan over this matter and found that the TPA leader was unwilling to be the envisaged Hindu presidential candidate. Referring to Sachithananthan’s statement, Mano Ganesan observed, “That is only his (Sachithananthan) view.” Mano Ganesan also quipped that he was not even a Hindu because he was an atheist.

Though Mano Ganesan will not be the Hindu presidential candidate the efforts of “Hindutva” supporters like the Siva Senai leader are not likely to cease soon. Their attempts will persist. Given the current situation where ancient sites of Saivite worship are being culturally appropriated and Buddhist Viharas are being constructed in 100% Hindu areas, there is rising Hindu resentment. As such mobilising Hindus to vote for a Hindu presidential candidate appears to be easily possible.

Velan Swamigal

Among potential Hindu contenders for the presidency is the Hindu Yogi Velan Swamigal the head of the religious institution “Sivaguru Aatheenam” in Nallur Jaffna. Velan Swamigal is a Katubedde educated engineer who turned spiritual and donned saffron. After a stint with the Swamy Chinmaya mission, Velan Swamy set up the Sivaguru Aatheenam on his own.

Velan Swamy has participated in several political protest demonstrations and has even been arrested and released on bail. He is therefore a “political Swamy” and is very likely to be the Hindu presidential candidate. Besides he is said to have the backing of “Hindutva” elements in India. Hindutva types have been infiltrating the Hindus of Sri Lanka in recent times. It must be understood that being a Hindu and being a “Hindutva” adherent are not the same though some conflate both through ignorance or for their own benefit.

Hindutva and RSS

What then is Hindutva?

According to the Concise Oxford Dictionary of Politics and International Relations, “Hindutva” meaning “Hinduness” refers to the ideology of Hindu nationalists, stressing the common culture of the inhabitants of the Indian subcontinent.

The Dictionary of Human Geography, says “Hindutva encapsulates the cultural justification of Hindu nationalism, a ‘Hinduness’ allegedly shared by all Hindus.”

A Political and Economic Dictionary of South Asia notes “One of the main purposes behind the concept of Hindutva was to construct a collective identity to support the cause of ‘Hindu-unity”.

“Hindutva” is the core ideology of India’s Rashtriya Swayamsevak Sangh (RSS) in particular and the “Sangh Parivar” (Sangh family) in general. The Sangh Parivar is an umbrella of Hindutva groups led by the Rashtriya Swayamsevak Sangh (RSS), a paramilitary organisation based in India, It was founded in 1925. RSS is at the centre of the Sangh, which sets the priorities and tactics for promoting Hindu nationalist ideals and goals to consolidate the Hindu society and achieve their goal of a “Hindu Rashtra” (Hindu nation).

The Sangh Parivar includes RSS affiliates like Vishva Hindu Parishad (VHP), Bajrang Dal, Bhartiya Janata Party (BJP), Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) and a host of other entities. Some of them are small organisations, cults, or political parties.

The RSS had almost 585,000 members and over 57,000 branches or sakhas, including a trade union wing (Bharatiya Mazdoor Sangh), women’s wing (Rashtriya Sevika Samiti), student wing (Akhil Bharatiya Vidyarthi Parishad), and economic wing (Swadeshi Jagaran Manch). The Bharatiya Janata Party (BJP) may be in the seat of power as the ruling party in New Delhi, but it is directed and supervised by the RSS. It is estimated that 75% of the ministers in the ruling BJP Government are members of the RSS, including the Prime Minister, Narendra Modi.

“HIndutvaization”

A matter of rising concern is the creeping “Hindutvaization” of Hinduism in Sri Lanka. Sri Lankan Tamil society is pre-dominantly Hindu. Jaffna Tamil Hindus are mainly Saivaite. Though staunchly Saivaite, Tamil Hindu society has been basically tolerant and accommodative. Moreover, political problems in Sri Lanka has made Tamils view themselves as Tamils and not as Hindus or Christians. They were victimised not because they were Hindus or Christians but due to the fact that they were Tamils.

Anti-colonial revivalism

It should be noted that the anti-colonialist nationalist revivals of the Sinhala and Tamil people had certain similarities and differences. A moot point was that of religion. Revivalism initiated by Anagarika Dharmapala, and Arumuga Navalar was religion oriented and revolved around the Buddhist and Hindu religions respectively.

The continuation of this revivalist process in the post-Independence period however saw a major difference. Sinhala political discourse continued in the same vein with Sinhala Buddhist nationalism becoming the dominant ideology among the Sinhala people.

In the case of the Tamil people who saw themselves as the victims of Sinhala Buddhist nationalism the reaction was different. Their response was basically linguistic and not religious. When Tamil nationalism arose in defiance of Sinhala nationalism it became more secular. It was not a Tamil Hindu nationalism.

There are many reasons for this but two significant causes contributing to this were the political leader S.J.V. Chelvanayakam and Rev. Fr. Thaninayakam the Tamil Catholic Scholar. Father Thaninayakam spearheaded a Tamil cultural revival by promoting a worldwide interest in Tamil studies. This made the Tamil proud of his or her glorious heritage.

Tamil speaking people

Chelvanayakam led the Tamil political movement against the imposition of Sinhala. His presence as the great helmsman of the Tamil ship saw him charter a course of secular Tamil nationalism centred on language. The assertion of linguistic nationalism was successful enough not only to embrace Tamil Hindus and Christians but also include the Muslims too at a particular period under the concept of “Tamil Speaking People”. This however did not work out because the Tamil speaking Muslims in Sri Lanka have opted for an ethno-religious identity as opposed to an ethno-linguistic identity.

Hindu-Christian unity under a common Tamil identity however has prevailed. Even the Tamil militant organisations including the Liberation Tigers of Tamil Eelam (LTTE) were essentially secular. However, this unity has come under some strain in the post-war years. There are three main reasons for this.

Proselytization

The first is the irritation and concern caused by the activities of evangelical churches. While the older established mainstream churches have reached a stable “Live and let live” understanding with the Hindus in Tamil areas and do not attempt to convert Hindus to Christianity, the new Evangelical Churches and groups engage in intensive proselytization. Many of these “New” Christians do not merely tread on, but trample “Hindu” toes with the fanatical zeal and fervour of the converted. This is a major irritant affecting Hindu-Christian relations in many Tamil areas.

Politicians and media

The second is the rise of pro-Hindu politicians and media institutions. There are quite a number of Christians both Catholic and Protestant involved in Tamil politics. These include past and present MPs as well as former Provincial council members and ex-Local authority representatives. What is happening now are covert and overt attempts by some Hindu politicians to derive political mileage by raising the religious cry against potential Christian political rivals. Since the majority of Tamil voters are Hindu, such anti-Christian sentiments are expected to succeed.

Moreover, the secular nature of Tamil politics too has begun eroding. There was a time when only the “Thamil Thaai Vaazthu” (Praising the Tamil Mother) was observed at the commencement of Tamil political meetings. Nowadays this is not followed, and some events begin with Hindu religious observances.

A leader of a political party attends political meetings with “Viboodhi” (holy ash) daubed on his forehead and begins his talk by chanting Sanskrit verses. There is nothing wrong in wearing Holy ash or chanting Sanskrit Mantras but what must be noted here is that these practices were not followed at political meetings in the past.

What is more of a concern is the blatant anti-Christian sentiments being displayed openly. A former Tamil Parliamentarian who dresses frequently in Saffron like the BJP Chief Minister of Uttar Pradesh, Yogi Adityanath, is viciously anti-Christian in some of his pronouncements to all-Hindu audiences. He also adopts the disgusting habit of emitting deep spit (Kaarith Thuppu) when he sees a Christian priest in Cassock. Another Tamil newspaper has in recent times been propagating the viewpoint that Tamil Hindus should protest against injustices as Hindus and not as Tamils.

RSS-BJP factor

The third reason for waning Hindu-Christian unity is the RSS-BJP factor. The end of the war in 2009 and the advent of the Narendra Modi-led BJP Government in 2014 has led to a situation where a large number of ultra-right Hindu activists visit the Tamil majority areas of Sri Lanka especially the North. These people belong to various small organisations and political parties of the Sangh Parivar. These frequent visits and interaction with Sri Lankan Tamil Hindus have contributed greatly towards deteriorating Hindu-Christian relations in the North.

Among these frequent Sangh Parivar visitors is the infamous founder leader of the Hindu Makkal Katchi (Hindu people’s Party) of Tamil Nadu Arjun Sampath. This well-known Muslim hater and Christian baiter is a native of Coimbatore in Tamil Nadu and was once detained in prison for anti-Muslim violence and for assaulting a Hindu legislator visiting Muslim victims in hospital. Without realising the implications, President Wickremesinghe’s chief of staff Sagala Ratnayake met with Arjun Sampath once. Sampath used the pix to show off that he was very influential with the Colombo Government.

Hindu nation state

Another aspect of the BJP-RSS impact in Sri Lankan Tamil politics is the bogus propaganda about a “Hindu Tamil Eelam”. The dream of a separate Tamil state for the Tamils has ended with the defeat of the LTTE. However there has been a tendency nowadays to propagate that New Delhi was amenable to the creation of a Tamil state if it was a Hindu nation state. The original Tamil Eelam demand was for a Secular state. But now it is being said that the RSS-BJP government would help establish a “Hindu Tamil Eelam” only.

No responsible person in India has ever mentioned a Hindu Eelam, but many low-level operatives of the Sangh Parivar and several deluded vocal warriors of the Tamil Diaspora subscribe to the “Hindu Tamil Eelam” project. These include Sri Lankan Tamil nationalist poet Kathamuthu Sivanandan alias “Kasi Anandan” who has been resident in Chennai for over three decades. The term “Hindu Tamil Eelam” by definition excludes Christians and is a source of Hindu-Christian friction.

Hindu-Christian divide

People like the Siva Senai leader Sachithananthan are among those who exploit this Hindu-Christian divide and widen the chasm further. Sachithananthan once referred to TNA Wanni district MP and TELO leader Selvam Adaikkalanathan as a “Soathuk Katholikkan” (rice Catholic). Some call Christians rice Christians derogatorily on the basis that their ancestors embraced Christianity for a “plate of rice”

On another occasion, Sachithananthan expressed opposition to the composition of a delegation representing the Tamil national Alliance (TNA) at a meeting with a visiting foreign dignitary. The five-member TNA delegation comprised R. Sampanthan, Maavai Senathirajah, Selvam Adaikkalanathan, D. Siddharthan, and M.A. Sumanthiran.

The Siva Senai leader objected to the composition in a statement. Sachithananthan said that 84% of the Tamils in Sri Lanka were Hindus. Yet the TNA delegation had only 60% Hindus. Sachi objected to 16% Christians being given 40% of the representation. What he was alluding to be that Adaikkalanathan was a Catholic and Sumanthiran a Protestant Christian.

Sachithananthan and his Siva Senai often claim credit for stopping Christian revival meetings being conducted in Jaffna. The tactic employed is simple but crudely effective. Leaflets vehemently protesting against such meetings are published and distributed. Veiled threats are issued. Then these leaflets are taken to the Police. A case is made out that there may be a breach of peace if the Christian meetings are held. The Police is “persuaded” to withdraw permission for the meetings at short notice. So, meetings are cancelled.

Siva Senai leader Sachithananthan and those of his ilk are seemingly successful in the short term in their anti-Christian action. But in the long term their actions are succeeding in weakening Tamil nationalism by driving the Hindu-Christian wedge in between. In that sense Sachithananthan is accomplishing what the historic enemies of Tamil nationalism have been unable to do in the past – Divide Tamils! The sad irony in this is that Sachi himself was nurtured in the nursery of Tamil nationalism and regards himself as Tamil nationalist still.

“Maravanpulavu Sachithananthan”

Who is this self-styled saviour of Sri Lankan Tamil Hindus? Kanapathipillai Sachithananthan known as “Maravanpulavu Sachi” or “Maravanpulavu Sachithananthan” was born in 1941 and educated at Jaffna Hindu College. Sachi obtained a Bachelor’s degree in Zoology and a Master’s degree in Marine Biology from Madras University.

He worked in Colombo as a researcher at the Fisheries Department for several years. After being a victim of racist violence in 1977, he relocated to Jaffna and served as a lecturer at the University of Jaffna. During this time, he got elected to the Central Committee of the Ilankai Tamil Arasuk Katchi (ITAK) then a component of the Tamil United Liberation Front (TULF).

In 1979 Sachithananthan obtained a consultant/adviser post at the Food and Agriculture Organisation (FAO) and worked in 23 countries for many years. After his FAO stint Sachithananthan took up residence in the Tamil Nadu capital of Chennai where he established a publishing enterprise called “Kaanthalakam”. He also engaged in electronic commerce selling books through the website known as “www.tamilnool.com”. While in India he was arrested and detained for several months for allegedly aiding the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

 Sachi moved to Sri Lanka after the war ended in 2009 and set up “Kaanthalakam” in Jaffna. He also aspired to be the chief minister of the Northern Province. After C.V. Wigneswaran was made chief minister, Sachithananthan got estranged from the ITAK. The one-time ardent Tamil nationalist turned into a Hindu chauvinist.

“Siva Senai” (Siva’s Army)

Sachithananthan formed an organisation called the “Siva Senai” (Sivas army) in 2016. It was modelled on the “Shiv Sena” (Sivaji’s army) founded in Maharashtra State by cartoonist Bal Thackeray. Incidentally, Thackeray started the Shiv Sena to drive out Tamils, Malayalees and Telugus from Bombay now known as Mumbai. This did not deter Sachi.

The Siva Senai staged demonstrations against cattle slaughter and selling of beef in the North. It also issued leaflets and pamphlets under counterfeit titles (to avoid being prosecuted) against Christians and Muslims. The call was for Hindus to boycott Muslim businesses and to refrain from voting for Christian candidates. There was also a call for the expulsion of Muslims and Christians from Jaffna described as “Siva Bhoomi” (Lord Shiva’s earth).

At the 2020 Parliamentary elections, Sachithananthan floated a party called the “Saivath Thamizh Thesiyak Katchi” (Saivaite Tamil nationalist party) and contested in the Wanni District as an independent group. The group targeted Hindu votes by attacking Christians and Muslims. The group was trounced at the hustings.

Presidential election

It appears now that the never say die “Maravanpulavu” Sachithananthan is embarking on another political mission of a religious dimension by mooting and promoting the idea of a common Hindu presidential candidate. If he is successful in finding a Hindu candidate on time, it would add colour and spice to the much-anticipated 2024 Presidential election. Sri Lankan Tamil nationalism would be further weakened.

(The writer can be reached at dbsjeyaraj@yahoo.com.)

No comments: