Wednesday, April 10, 2024

சரக்குக் கப்பல் மாவட்ட செயலகக் கூட்டம்

 காங்கேயன் துறை நாகப்பட்டினம் சரக்கு கப்பல் சேவை

மாண்புமிகு அமைச்சர் தேவானந்தா அவர்களின் தொடர்பாளர்:

சிவ தொண்டர் நடராஜா புகன் ஸ்ரீந்திரன்

கோண்டாவில் மேற்கு

அஅ எண்: 613413804V

தொலைப்பேசி: +94 77 960 3001

 

மார்கழி 12 வியாழன் (28 12 2023) மாலை 1630 மணி

மாவட்டச் செயலகரின் அலுவலகம் யாழ்ப்பாணம்

தலைவர் மாண்புமிகு அமைச்சர் தேவானந்தா

மாவட்டச் செயலர் திரு சிவபாலசுந்தரம் 

மாவட்ட மேலதிகச் செயலர் பிரதீபன் 

இந்திய துணை தூதரகம் திருமனோஜ்குமார் 

பாரத இந்தியன் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 

இலங்கை மத்திய வங்கி 

இலங்கை வணிகர் சங்கம் 

திரு இ எஸ் நாகரத்தினம் குழுமத்தார் வடமாகாணக் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தார் 

சிவ சேனை மறவன்புலவு க. சச்சிதானந்தன் 

சிவதொண்டர் சிறீந்திரன் 

சிவ தொண்டர் செயமாறன் 

சிவ தொண்டர் ஸ்ரீ வெங்கடேசன்

மற்றும் ஆர்வலர்கள்


1. வங்கி

Letter of credit, advance full payment இரு வழிகளில் வங்கிகள் இறக்குமதிக்கு உதவும்.

இறக்குமதிப் பொருள்களுக்கு எதிராக கடன் எதுவும் கொடுக்கும் திட்டம் உடனடியாக யாழ்ப்பாண வங்கிகளில் இல்லை. 

இத்திட்டம் கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களில் நடைமுறையில் உள்ளதே. யாழ்ப்பாணத்து வங்கிகளும் இத்திட்டத்தை நோக்கி இறக்குமதியாளருக்கும் கடன் வழங்க வேண்டும் என மறவன்புலவு க. சச்சிதானந்தன் கேட்டுக் கொண்டார்.


2. ஏற்றுமதி

காங்கேயன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பாக்குப் போன்ற மிகச் சில பொருளாகளே ஏற்றுமதியாகலாம் என வணிகர் கூறினர்.


3. இறக்குமதி

3.1 இறக்குமதி செய்யக்கூடிய பொருள்கள் எவை எவை அவற்றுக்கான சுங்கவரி என்ன என்ன தொடர்பான விவரங்கள் யாழ்ப்பாணத்தில் இறக்குமதியில் ஆர்வம் கொண்ட வணிகர் ஒரு சிலருக்கு உண்டு. தவிர பெரும்பாலானவர்களுக்கு தெரியாததால் அவர்கள்

அனைவருக்கும் இந்த தகவல் கிடைக்க வேண்டும்.

3.2 எத்தகைய பொருள்களை இறக்குமதி செய்யலாம் என உதவக்கூடிய விலை கூறும் முகவர் Indenting agents யாழ்ப்பாணத்தில் இல்லை. கொழும்பில் உள்ள தமிழர் ஆன முகவர் சிலர் யாழ்ப்பாணத்தில் அலுவலகங்கள் திறக்க வேண்டும்.

3.3 தவிர்க்க முடியாத தேவைக்குரிய உணவு போன்றன essentials, வளர்ச்சிக்குரியன developmental என இறக்குமதி இருவகை.

3.3 தவிர்க்க முடியாத தேவையானவை பலவுக்கு இந்திய ஏற்றுமதித் தடை உள்ளது.

3.4 வளர்ச்சிக்குரியன இறக்குவதில் இந்தியத் தடைகள் குறைவு. சீமெந்து மற்றும் கட்டுமானப் பொருள்களை இறக்கலாம். அதற்கான முதல் ஆணையை வணிகர் இ எஸ் நாகரத்தினம் குழுமம், வணிகர் பிரகதீச்சரன் போன்றோர் முயல வேண்டும்.

3.5 வட மாகாணத்தில் உள்ள வணிகர்களுக்கு இறக்குமதி தொடர்பான வழிகாட்டலுக்கு முழு நேர அரச ஊழியர் ஒருவர் ஆறு மாதத்திற்குப் பணியமர்த்த வேண்டும். ஆட்சிப் பணியில் மூத்தவராக, உற்சாகமாகப் பணி புரியக்கூடியவராக, வளர்ச்சியை முன்னெடுக்கும் ஆர்வலராக, உடனுக்குடன் பணிகளை முடிப்பவராக ஆற்றல் திறமை உள்ள ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

3.6 தவிர்க்க முடியாத தேவைகளுக்கு ஏற்றுமதித் தடை இந்தியாவில் உண்டு. இலங்கையின் வட மாகாண வறுமைக்கோட்டு மக்களுக்காக அத்தடையில் நெகிழ்ச்சியை இந்தியாவிடம் கேட்கலாம். அவ்வகை இறக்குமதிகள் வறுமைக்கோட்டு நுகர்வோருக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டும். பொது சந்தையைப் போய்ச் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூட்டுறவு அமைப்புகள் வலிமையாக வேண்டும். ஆறுதல் பயனாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்குக் கூட்டுறவு அமைப்புகள் தவிர்க்க முடியாத தேவைகளை வழங்க வேண்டும். அதற்கான திட்டம் ஒன்று அரசிடம் இருக்குமானால் தவிர்க்க முடியாத பொருள்களுக்கான ஏற்றுமதித் தடையில் நெகிழ்ச்சியைக் காட்டுமாறு, சிறப்பாக வடமாகாண மக்களுக்காக நெகிழ்ச்சியைக் காட்டுமாறு, இந்தியாவைக் கேட்கின்ற கடமை உண்டு.


4. துறைமுகம்

4.1 துறைமுகப் பணிகளை கையாளும் முகவர்கள் cargo handling agents காங்கேயன்துறையில் இல்லை.ள் அவர்களை அங்கு பணியில் அமர்த்த வேண்டும். அவ்வாறான கொழும்பிலிருந்து ஒருவரை ஏற்பாடு செய்திருப்பதை வணிகர் சங்கத்தினர் கூறினர். 

4.2 மூடைகளை இறக்கி ஏற்றப் பணியாளர்கள் பருத்தித்துறையில் ஏற்கனவே வேலை செய்தவர்களையும் வணிகர் சங்கத்தினர் அணுகியிருப்பதாகக் கூறினர்.

No comments: