Sunday, April 14, 2024

மாவிட்டபுரத்தில் மடு மரியாள் வளைவுகள்

 සිංහල හින්දි සහ ඉංග්‍රීසි අනුවාද සඳහා පහළට අනුචලනය කරන්න

सिंहली हिंदी और अंग्रेजी संस्करणों के लिए नीचे स्क्रॉल करें
Scroll down for Sinhala Hindi and English (Google) versions

பங்குனி 31 சனிக்கிழமை (13/4/2024)

ஊடகத்தாருக்கு 
மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை 
எழுதுகிறேன்

அருள்மிகு தூய மரியாள் தாயார் மடுவில் இருப்பவர். யாழ்ப்பாணத்துக்கு ஊர்வலமாக வருகிறார்.  மகிழ்ச்சியான செய்தி. அத்தூயரை வழிபடும் கத்தோலிக்கருக்கும் சைவர்களுக்கும் செய்தி எட்டியது.

அவர் ஊர்வலச் சாலையில் தெல்லிப்பளையில் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில், மாவிட்டபுரத்தில் அருள்மிகு கந்தசாமி கோயில்.

இவ் இரு சைவக் கோயில்களிலும் விழாக்கள். சைவ அடியார் கூடும் விழாக்கள். சைவ அடியார் விழாக்களைச் சாத்தானின் விழாக்கள் மூடநம்பிக்கை விழாக்கள் என்பது கடந்த 450 ஆண்டுகாலக் கத்தோலிக்க மரபு. 

அந்த மரபின் விளைவாகவே, மன்னார் மாவட்டம் திருக்கேதீச்சரத்தில் மகா சிவராத்திரிக்குக் கட்டிய அழகான தெரு முன் வளைவை கத்தோலிக்க சிலர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உடைத்தனர்.

தெல்லிப்பளை அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில் மண்டலபிசேகம் தொடர்பாக இரண்டு தெருமுன் வளைவுகள்.

அவ் வளைவுகள் இருப்பதைப் பொறாத தூய மரியாள் ஊர்வலத்தார், மல்லாகத்திலிருந்து மாவிட்டபுரம் வரை மூன்று தெருமுன் வளைவுகளைக் கட்டியிருந்தனர். தெருவை மூடி அலங்காரக் கொடிகளை மல்லாகத்தில் இருந்து மாவிட்டபுரம் வரை கட்டியிருந்தனர்.

அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில் வளைவுகளை உடைக்கக் கூடிய சாத்தியத்தை அங்கு வாழும் சைவ அடியார் என்னிடம் தெரிவித்தனர். 

பிரதேச சபையில் உசாவினோம். தெருமுன் வளைவுகளுக்கோ அலங்காரக் கொடிகளுக்கோ உரிமம் கொடுக்கவில்லை என்றார்கள். நெடுஞ்சாலை ஆட்சி நிறுவனத்தாரிடம் (ஆர்டிஏ) கேட்டோம் அவர்களும் தாங்கள் எந்த உரிமமும் கொடுக்கவில்லை என்றார்கள்.

ஒருவர் கட்டிய தெருமுன் வளைவுகளை உடைப்பது சைவ மரபல்ல. பொறுமையையும் நல்லிணக்கத்தையும் சைவம் எங்களுக்கு ஊட்டி இருந்தது. 

எனினும் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயிலார் கட்டிய தெருமுன் வளைவுகளைக் காப்பது சைவர் கடமை.

எனவே, திருக்கேதீச்சர வளைவை உடைத்தவனே, சிவ பூமியில் தெருமுன் வளைவுகள் கட்டாதே, இலங்கை சிவ பூமி என்ற வரிகளுடன் நாங்களும் வளைவு ஒன்றைத் தயாரித்தோம். மாவிட்டபுரத்தில் கட்டுவதற்குக் கொண்டு சென்றோம்.

இலங்கை அரசின் காவல்துறைப் புலனாய்வினர் மிகவும் திறமைசாலிகள். காவல்துறை வண்டியும் நால்வருமாக அங்கு நின்றனர். 

நாங்கள் சென்று வண்டியை விட்டு இறங்கியதும் எங்களிடம் வந்தனர். உரிமம் இல்லாமல் தெருமுனை வளைவு கட்ட முடியாதே என்றனர். உரிமங்கள் இருக்கா? எனக் கேட்டனர். இல்லை என்றோம். கட்டாதீர்கள் என்றனர். 

சட்டத்தை மீறுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே நாங்கள் கட்ட மாட்டோம். காவல்துறையிடம் சொன்னோம். அவர்களுக்கும் மகிழ்ச்சி. எங்கள் முயற்சியை கைவிட்டு வீடுகள் திரும்பினோம்.

எனினும் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில் வளைவுகள் திருக்கேதீச்சர வளைவு போன்று உடையக் கூடாதே என்ற உணர்வு மேலோங்கியது.

எனவே சுவரொட்டிகளை அச்சிடுவித்தோம். சுவரொட்டியிலும் அதே வரிகள். மல்லாகம் தொடக்கம் மாவிட்டபுரம் வரை ஒட்டினோம்.

அச் சுவரொட்டிகளையும் காவல்துறையினர் கிழித்துவிட்டதாகப் படம் எடுத்துத் தொண்டர்கள் எனக்கு அனுப்பினார்கள்.

சைவப் பெருமக்களுக்கும் காவல்துறை வழியாக அரசுக்கும் திருக்கேதீச்சர வளைவை உடைத்தவர்களுக்கும் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில் வளைவை உடைக்க நாட்டம் கொண்டிருந்தால் அவர்களுக்கும் சொல்ல வேண்டிய செய்தியை முறையாகச் சொல்லி இருக்கிறோம் என்ற மனநிறைவு எங்களுக்கு. 

பொறுமையும் நல்லிணக்கமுமே சைவ மரபு. சைவத் திருக்கோயில்களை உடைப்பவர்களும் தெருமுன் வளைவுகளை உடைப்பவர்களும் சைவ மரபை அறியாதவர்கள். சைவ விழாக் காலத்தில் சைவர்கள் அருவருக்கும் தெருமுன் வளைவுகளை மல்லாகம் தொடக்கம் மாவிட்டபுரம் வரை கட்டியவர்களும் அந்தச் சைவ மரபுகளை அறியாதவர்கள்.

පංගුනි 31 සෙනසුරාදා (13/4/2024)

මාධ්‍ය වෙනුවෙන්
සිට
මරවන්පුලවු කේ.සචිතානන්දන්
ශිව සේනායි

භාග්‍යවත් මරියා මාතාව මන්නාරම දිස්ත්‍රික්කයේ මදුරෙයිහි සිටී. ඇය යාපනයට පෙරහැර එනවා. සතුටුදායක ආරංචියක්. එතුමිය අදහන කතෝලිකයන්ට සහ ශෛවවරුන්ට මේ ආරංචිය ලැබුණා.

තෙල්ලිපලෙයි අරුල්මිකු දුර්ගායි අම්මාන් විහාරස්ථානය. අරුල්මිකු කන්දසාමි පන්සල මාවිටපුරම්හි පිහිටා ඇත. දෙකම පෙරහැර පාරේ.

මෙම ශෛව විහාර දෙකෙහිම උත්සව මනෝභාවය. ශෛව සේවකයෝ රැස්වෙන උත්සව. ශෛව උත්සව යනු සාතනික උත්සව සහ මිථ්‍යාදෘෂ්ටික උත්සව ය. මෙය පසුගිය වසර 450 පුරාවටම කතෝලික සභාව සහ සම්ප්‍රදායයි.

එම චින්තනයේ සහ සම්ප්‍රදායේ ප්‍රතිඵලයක් ලෙස මීට වසර පහකට පෙර මන්නාරම දිස්ත්‍රික්කයේ තිරුක්කේතීචරම් හි මහා ශිවරාත්‍රිය වෙනුවෙන් ඉදිකරන ලද අලංකාර වීදි ඉදිරිපස ආරුක්කුව ඇතැම් කතෝලිකයන් විසින් බිඳ දමන ලදී.

තෙල්ලිපලෙයි අරුල්මිකු දුර්ගායි අම්මාන් විහාරස්ථානයේ මන්දිර පිසේකම් හා සම්බන්ධ වීදි ඉදිරිපස ආරුක්කු දෙකක් ඇත.

එම ආරුක්කු තිබෙන බව හොඳින්ම දන්නා මරිය තුමී පෙරහැර සංවිධායකයන් මල්ලාකම් සිට මාවිත්තපුරම් දක්වා වීදි ඉදිරිපස ආරුක්කු තුනක් ඉදිකර තිබුණි. මල්ලාකම් සිට මාවිත්තපුරම් දක්වා වීදිය පුරා විසිතුරු කොඩි ගසා තිබුණි.

එහි වෙසෙන ශෛව ආදියාර්වරුන් මට දන්වා සිටියේ ශුභවාදී දුර්ගා දේවියගේ දේවාල ආරුක්කු උමතුවාදීන් විසින් බිඳ දැමිය හැකි බවයි.

අපි ප්‍රාදේශිය සභාවට ගියා. වීදි ආරුක්කු හෝ විසිතුරු කොඩි සඳහා අවසර නොදුන් බව ඔවුහු පැවසූහ. අපි මාර්ග සංවර්ධන අධිකාරියෙන් ඇහුවා ඒ අයත් කිව්වා කිසිම බලපත්‍රයක් දෙන්නේ නැහැ කියලා.

තමන් ගොඩනඟා ගත් වීදිය ඉදිරිපිට ආරුක්කු කඩා දැමීම ශෛව සම්ප්‍රදායේ නැත. ශෛවවාදය අපට ඉගැන්වූයේ ඉවසීම සහ සමගියයි.

කෙසේ වෙතත් දුර්ගා අම්මාන් කොයිලර් නැකතින් ඉදිකරන ලද වීදිය ඉදිරිපිට ඇති ආරුක්කු ආරක්ෂා කිරීම ශෛවයේ යුතුකමකි.

ඒ නිසා අපිත් ඉරි දාලා ආරුක්කු හැදුවා අපොයි තිරුක්කෙතෙච්චර ආරුක්කුව කඩපු එකා ශිවභූමියේ වීදි ඉදිරිපස ආරුක්කු හදන්න එපා ශ්‍රී ලංකාව ශිවභූමියයි. අපි එය මාවිත්තපුරම් ප්‍රදේශයේ ඉදිකිරීමට රැගෙන ගියා.

ශ්‍රී ලංකා රජයේ පොලිස් පරීක්ෂකවරු ඉතා දක්ෂයි. පොලිස් කාර් හතරක් එතන හිටගෙන හිටියා.

අපි ගිහින් වාහනෙන් බහිනකොටම එයාලා අපි ගාවට ආවා. බලපත්‍රයක් නැතිව අපට වීදි ආරුක්කුවක් හදන්න බැහැ කිව්වා. බලපත්ර තිබේද? ඔවුන් ඇසුවා. අපි එපා කිව්වා. හදන්න එපා කිව්වා.

අපි නීතිය කඩ කරනවාට එකඟ නැහැ. ඒ නිසා අපි හැදුවේ නැහැ. අපි පොලිසියට කිව්වා. එයාලටත් සතුටුයි. අපි අපේ උත්සාහය අත්හැරලා ගෙදර ආවා.

කෙසේ වෙතත්, අරුල්මිකු දුර්ගයි අම්මාන් කෝවිලේ ආරුක්කු තිරේතීචර ආරුක්කුව මෙන් කඩා දැමිය නොහැකි බවට හැඟීමක් පැතිර ගියේය.

ඒ නිසා අපි පෝස්ටර් මුද්‍රණය කළා. පෝස්ටරයේ එකම පේළි. අපි මල්ලාකම් සිට මාවිත්තපුරම් දක්වා පෝස්ටර් ඇලෙව්වා.

ස්වේච්ඡා සේවකයන් ඉරා දැමූ පෝස්ටර්වල පින්තූර මට එව්වා. තමන්ට දැනෙන පෝස්ටර් ඉරා දැම්මේ පොලිසිය වෙන්න ඇති.

තිර්කීතීචර ආරුක්කුව කැඩුනු අයටත්, අරුල්මිකු දුර්ගයි අම්මාන් කෝවිලේ ආරුක්කු කඩන්නට පෙළඹෙන අයටත් පොලිසිය හරහා සෛවිකයන්ටත්, රජයටත් පණිවිඩය නිසි ලෙස ලබාදීම ගැන අපි සෑහීමකට පත් වෙනවා.

ඉවසීම සහ සමගිය ශෛව සම්ප්‍රදායයි. ශෛව වෙහෙර විහාර කඩන්නන්, වීදි ආරුක්කු කඩන්නන් ශෛව සම්ප්‍රදාය නොදන්නා අයයි. ශෛව උත්සව සමයේ මල්ලාකම් සිට මාවිත්තපුරම් දක්වා කුපිත කරවන වීදි ඉදිරිපස ආරුක්කු ඉදිකළ අය ප්‍රශංසනීය ශෛව සම්ප්‍රදාය නොදැන සිටියහ.

पंगुनी 31 शनिवार (13/4/2024)

मीडिया के लिए
से
मरवनपुलवु के. सचिथानंथन
शिव सेनाई

धन्य माता मरियम मन्नार जिले के मदुरै में हैं। वह जुलूस के रूप में जाफना आ रही हैं. खशी की खबर। यह खबर उनकी पूजा करने वाले कैथोलिकों और शैवों तक पहुंची।

थेल्लीपलाई में अरुलमिकु दुर्गई अम्मन मंदिर। अरुलमिकु कंधासामी मंदिर मावितापुरम में है। दोनों जुलूस मार्ग में हैं।

इन दोनों शैव मंदिरों में उत्सव का माहौल है। त्यौहार जहां शैव सेवक एकत्रित होते हैं। शैव त्यौहार शैतानी त्यौहार और अंधविश्वासी त्यौहार हैं। यह पिछले 450 वर्षों से कैथोलिक परंपरा और परंपरा रही है।

उस मानसिकता और परंपरा के परिणामस्वरूप, कुछ कैथोलिकों ने पांच साल पहले मन्नार जिले के तिरुक्केथीचरम में महा शिवरात्रि के लिए बनाए गए सुंदर सड़क के सामने के मेहराब को तोड़ दिया।

थेलिपलाई अरुलमिकु दुर्गई अम्मन मंदिर में मंडलफिसेकम के संबंध में सड़क के सामने दो मेहराब हैं।

उन मेहराबों की उपस्थिति के बारे में अच्छी तरह से जानते हुए, पवित्र मैरी जुलूस आयोजकों ने मल्लकम से माविट्टापुरम तक सड़क के सामने तीन मेहराब बनाए थे। मल्लकम से मविट्टापुरम तक सड़क पर सजावटी झंडे लपेटे गए थे।

वहां रहने वाले शैवा अडियारों ने मुझे बताया कि देवी दुर्गा मंदिर के शुभ मेहराबों को कट्टरपंथियों द्वारा तोड़ा जा सकता है।

हमने प्रथेसिया सबा का दौरा किया। उन्होंने कहा कि उन्होंने सड़क पर मेहराबों या सजावटी झंडों की अनुमति नहीं दी। हमने सड़क विकास प्राधिकरण से पूछा तो उन्होंने भी कहा कि वे कोई लाइसेंस जारी नहीं करते.

किसी द्वारा बनाई गई सड़क के सामने बने मेहराबों को तोड़ना शैव परंपरा में नहीं है। शैव धर्म ने हमें धैर्य और सद्भाव सिखाया।

हालाँकि, शुभ दुर्गा अम्मन कोइलर द्वारा निर्मित सड़क के सामने मेहराब की रक्षा करना शैव का कर्तव्य है।

इसलिए, हमने पंक्तियों के साथ मेहराब भी तैयार किया, ओह, जिसने थिरुक्केटेच्चरा मेहराब को तोड़ दिया, शिव भूमि में सड़क के सामने मेहराब मत बनाओ, श्रीलंका शिव भूमि है। हम इसे माविट्टापुरम में खड़ा करने के लिए ले गए।

श्रीलंकाई सरकारी पुलिस जांचकर्ता बहुत सक्षम हैं। वहां पुलिस की चार गाड़ियां खड़ी थीं.

जैसे ही हम गए और वाहन से बाहर निकले, वे हमारे पास आए। उन्होंने कहा कि बिना लाइसेंस के हम सड़क का आर्च नहीं बना सकते। क्या लाइसेंस हैं? उन्होंने पूछा। हमने कहा नहीं. उन्होंने कहा कि निर्माण मत करो.

हम कानून तोड़ने से सहमत नहीं हैं. इसलिए हमने निर्माण नहीं किया. हमने पुलिस को बताया. वे भी खुश हैं. हमने अपना प्रयास छोड़ दिया और घर लौट आए।

हालाँकि, यह भावना प्रबल थी कि अरुलमिकु दुर्गई अम्मन मंदिर के मेहराबों को थिरकेथीचारा मेहराब की तरह नहीं तोड़ा जा सकता है।

इसलिए हमने पोस्टर छापे. पोस्टर में वही लाइनें. हमने मल्लकम से माविट्टापुरम तक पोस्टर चिपकाए।

स्वयंसेवकों ने मुझे फटे हुए पोस्टरों की तस्वीरें भेजीं। उन्हें लगा कि पुलिस ने ही पोस्टर फाड़े होंगे।

हम इस बात से संतुष्ट हैं कि हमने पुलिस के माध्यम से शैवों, सरकार और उन लोगों को, जिन्होंने थिरकीथीचारा मेहराब को तोड़ा है और अरुलमिकु दुर्गई अम्मन मंदिर के मेहराब को तोड़ने के इच्छुक लोगों को संदेश ठीक से पहुंचा दिया है।

धैर्य और सद्भाव शैव परंपरा है। जो लोग शैव मंदिरों को तोड़ते हैं और जो लोग सड़क के मेहराबों को तोड़ते हैं वे शैव परंपरा से अनभिज्ञ हैं। शैव त्योहारों की अवधि के दौरान, जिन लोगों ने मल्लकम से मावित्तपुरम तक सड़क के सामने आकर्षक मेहराबों का निर्माण किया, वे प्रशंसनीय शैव परंपरा से अनभिज्ञ थे।

Panguni 31 Saturday (13/4/2024)

For the media
From
Maravanpulavu K. Sachithananthan
Siva senai

Blessed Mother Mary is at the Madurai in Mannar district. She is coming in procession to Jaffna. Happy news. The news reached the Catholics and Saivas who worship Her.

Arulmiku Durgai Amman Temple in at Thellipalai. Arulmiku Kandhasamy Temple is at Mavitapuram. Both are in the procession route.

Festival mood in both these Saiva temples. Festivals where Saiva servants gather. Saiva festivals are Satanic festivals and superstitious festivals. This has been the Catholic minset and tradition for the past 450 years.

As a result of that mindset and tradition, some Catholics broke the beautiful street front arch built for Maha Shivaratri in Mannar district's Tirukketheecharam five years ago.

Thellipalai Arulmiku Durgai Amman Temple has two street front arches in connection with Mandalphisekam.

Knowing very well of the presence of those arches, the Holy Mary procession organisers had built three street front arches from Mallakam to Mavittapuram. Decorative flags were draped across the street from Mallakam to Mavittapuram.

The Saiva Adiyars living there informed me that the auspicious Goddess Durga temple arches could be broken by fanatics.

We visited the Prathesiya Sabaa. They said they did not give permission for street arches or decorative flags. We asked the Road Development Authority and they also said that they do not issue any license.

It is not in Saiva tradition to break the arches in front of the street that one has built. Saivism taught us patience and harmony.

However, it is Saiva's duty to protect the arches in front of the street built by the auspicious Durga Amman Koilar.

Therefore, we also prepared arch with the lines, Oh, one who broke the Thirukkethechchara arch, do not build street front arches in Shiva Bhoomi, Sri Lanka is Shiva Bhoomi. We took it to erect in Mavittapuram.

Sri Lankan government police investigators are very competent. Four police cars were standing there.

As we went and got out of the vehicle, they came to us. They said that we cannot build a street arch without a license. Are there licenses? They asked. We said no. They said do not build.

We do not agree with breaking the law. So we didn't build. We told the police. They are happy too. We gave up our efforts and returned home.

However, the feeling prevailed that the arches of the Arulmiku Durgai Amman temple could not be broken like the Thirketheechara arch.

So we printed posters. Same lines in the poster. We pasted the posters from Mallakam till Mavittapuram.

The volunteers sent me pictures of torn down posters.  It might have been the police who tore the posters they felt.

We are satisfied that we have properly conveyed the message to the Saivites, the government through the police and those who have broken the Thirkeetheechara arch and to those inclined to break the arches of Arulmiku Durgai Amman temple.

Patience and harmony are the Saiva tradition. Those who break Saiva temples and those who break street arches are ignorant of Saiva tradition. During the period of Saiva festivals, those who built irritating street front arches from Mallakam to Mavittapuram were ignorant of the praiseworthy Saiva tradition.

No comments: