Wednesday, April 10, 2024

வெடுக்குநாறி மலை மகா சிவராத்திரி 2024

 கருப்பு நீள் காற் சட்டை

சிவப்பு அரைக்கை மேல் சட்டை

ஒல்லிய மெல்லிதான உருவம்.


காலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிறீதரன் பின்னால் செல்கிறார். வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோயிலுக்கு செல்கிறார். 


முல்லைத்தீவின் போதகர் அனுப்பிச் செல்கிறார். சைவக் கோயிலைச் சாத்தான் கோயில் எனப் போதனைப் பீடத்தில் உரத்துக் கூறும் போதகர் அனுப்பிச் செல்கிறார். 


நாடாளுமன்ற உறுப்பினர் பின்னால் சென்றவர் திரு. பீட்டர் இளஞ்செழியன். சைவ சமயம் சாத்தானின் சமயம். எனவே கிறித்தவ மதத்திற்கு மாறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் பீட்டர் இளஞ்செழியன்.


சைவ சமயத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், தமிழரசுக் கட்சியின் தலைவரானதை எதிர்த்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் திரு. பீட்டர் இளஞ்செழியன். 


இந்த வழக்கின் பின்னணியில், 52 முழு நேர மதமாற்றப் பணியாளர்களைக் கொண்ட, மெதடித்த திருச்சபையின் இணை ஆயராக இருந்த,  தமிழரசுக் கட்சித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆபிரகாம் சுமந்திரன் இருந்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அச்செய்திகளில் உண்மை இல்லை என்று திரு ஆபிரகாம் சுமந்திரன் மறுத்தாரா தெரியவில்லை.


திரு பீட்டர் இளஞ்செழியனும் திரு ஆபிரகாம் சுமந்திரனும் வெடுக்குநாறி மலைக்கு வருகிறார்கள். மகா சிவராத்திரி நாளன்று வருகிறார்கள். நெடுங்கேணியில் பல்சாலை அமைத்து வாழும் வண. சாந்தபோதி கல்கமுவ தேரர் செய்திகளைச் காவல்துறைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.


மகா சிவராத்திரி சைவகளுக்கு உரிய நாள். சைவர்கள் அங்கு வழிபடலாம். புத்தர்களும் வழிபடலாம். சைவ சமயத்தையும் புத்த சமயத்தையும் இழித்தும் பழித்தும் பேசுகிற கிறித்தவர்கள் வரலாமா? அவர்களை உள்ளே விடலாமா?


திரு பீட்டர் இளஞ்செழியன் காலையில் வெடுக்குநாறி மலைக்குள் சென்ற செய்தி புலனாய்வர் வழி மேலே சென்றது. 


வெடுக்குநாறி மலை அருள்மிகு ஆதி சிவனை வழிபடப் பேருந்துகளில் அடியவர்கள் வந்திருந்தார்கள். தாமாக அவர்கள் வரவில்லை. அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அழைத்து வந்திருந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் திரு கயேந்திரன் தலைமையில் அவர்கள் வெடுக்குநாறி மலைக்கு வழிபடச் சென்றார்கள். 


கடந்த பல ஆண்டுகள் காலமாக வெடுக்குநாறி மலையில் வழிபாடு தொடர்பாகப் பூசகர் பல்வேறு தரப்பினரைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். அரசியல் நோக்கம் கொண்டவர்கள் வெடுக்குநாறி மலை வழிபாட்டு உரிமைகள் தொடர்பாக முயற்சிப்பதை அவர் அறிந்திருந்தார். 


அனைவரையும் சமாளித்து முன்னெடுக்க வேண்டுமென ஊரில் உள்ள ஒலிமடுவில் உள்ள பெரியவர்கள் கருதுவார்கள். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கயேந்திரன் சார்ந்தவர்கள் வழிபாடு முதன்மையா? அரசியல் முதன்மையா? எனில் அரசியலை முதன்மையாக்கினார்கள்.


நெடுங்கேணி காவல் நிலையத்தில் உள்ளவர்கள் வழிபாட்டுக்கு ஆதரவாக இருந்தார்கள். நெடுங்கேணிக் காவல் நிலையப் பொறுப்பாளர் ஒருவர், மலையில் ஏறுவதற்குரிய வலிமையான உலோக ஏணிப்படியை ஒன்றை அளவறிந்து உருவாக்கி, தாமே மலையில் பொருத்திக் கொடுத்திருக்கிறார். 


எனினும் வழிபாடா? அரசியலா? என்ற முரண். அரசியல் சார்ந்தவர்கள் முன்னெடுக்கும் பொழுது நெடுங்கேணி காவல் நிலையத்தினர் கடுமையாக நடந்து கொண்டார்கள். இதை ஒலிமடுவில் உள்ள பெரியவர்கள் விவரமாகக் கூறுவார்கள்.


மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு தொல்லியல் பொருள்களுக்கு சேதம் விளைவிக்காதவாறு 04.03.2024 அன்று உரிமை வழங்கியது வவுனியா நீதிமன்றம். 




No comments: