யேர்மன் திருச்சதகம் 1
TITUSATAKA
DIE HEILIGEN HUNDERT
DAS WUNDERBARE DES EIFERS DER HINGEBUNG
Kundgegeben in Tirupperunturai
I. DAS ERKENNEN DES WAHREN
Mein Leib bebt vor Verlangen
Nach deinem schön duftenden Fuß,
Anbetend heb\' ich die Hände,
Und tränen entströmen den Augen.
Es zerschmilzt mir das Herz wie Wachs.
Ich lasse fahren die Lüge,
Die jub\'le ich zu ohn\' Ermüden,
Nir höre ich auf, dich zu preisen.
Blick\', Herr aller Dinge, auf mich!
O, mach\' mich zu deinem Knecht!
Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை
யார்கழற்குஎன்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே. (08105001)
மறவன்புலவு க சச்சிதானந்தன் எழுதுகிறேன்
புரட்டாதி 24, 2051 ஞாயிறு (10.10.2020)
தமிழ்நாடு மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம். 14 ஆண்டுகளுக்கு முன்.
தவத்திரு 26ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள் முன்னிலையில் பணிவும் குனிவுமாக நிற்கிறேன்.
பன்னிரு திருமுறைகளையும் ஒலி பெயர்த்துத் தேவாரம் தளத்தில் www.thevaaram.org ஏற்றலாம்.
பன்னிரு திருமுறைகளையும் மொழிபெயர்த்துத் தளத்தில் ஏற்றலாம்
என் கருத்தைக் கூறி அவர்கள் ஆணைக்காக் காத்திருக்கிறேன்.
ஒலிபெயர்க்கலாம் மொழிபெயர்க்கலாம். யாரப்பா செய்து தருவார்கள்? என்ற அங்கலாய்ப்புடன் எனக்கு ஆணையை வழங்குகிறார்கள்.
பன்னிரு திருமுறைகளில் முதன்முதலில் மொழிபெயர்ப்பான நூல் பெரியபுராணம். சேக்கிழார் சிதம்பரத்தில் அரங்கேற்றிய அறுபதாம் ஆண்டு கன்னடத்தில் மொழிபெயர்ப்பு வெளிவந்தது.
அடுத்துப் பெரியபுராணம் தெலுங்கிலும் வடமொழியிலும் மொழிபெயர்ப்பாயது. கன்னடத்திலும் தெலுங்கிலும் வடமொழியிலும் வந்தவை மொழிபெயர்ப்புகளா? தழுவல்களா? என ஆராய்ச்சியாளர்களே நோக்க வேண்டும்.
120 ஆண்டுகளுக்கு முன்பு போப்பையர் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 94 ஆண்டுகளுக்கு முன்பு யேர்மன் மொழியில் திருவாசகம் மொழிபெயர்ப்பாகியது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் சுந்தரம் திருவாசகத்தை இந்திக்கு மொழிபெயர்த்தார்.
திருமுறைகளைத் தஞ்சாவூரில் சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி ந இராமச்சந்திரன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வந்ததை அறிவேன். அதற்கு முன்பு புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனம் தேவாரம் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் குறுந்தட்டாகவும் இணையதளத்திலும் வெளியிட்டு இருந்ததையும் அறிவேன்.
திருமந்திரம் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கன்னியாகுமரியின் பொருளாதாரப் பேராசிரியர் முனைவர் நடராசன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். திருவாசகம் வேறு பலராலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி இருந்தது. திருவாசகத்தின் சில பாடல்களை தவத்திரு நாராயணகுரு அவர்கள் மலையாளத்தில் மொழிபெயர்த்த படிகளையும் பார்த்திருக்கிறேன்.
தருமபுரம் தவத்திரு 26ஆவது குருமகாசந்நிதானம் ஆணையைப் பெற்ற பின்பு மொழிபெயர்ப்பாளர்களைத் தேடத் தொடங்கினேன்.
1 தெலுங்கு 2 கன்னடம் 3 மலையாளம் 4 இந்தி 5 வடமொழி 6 சிங்களம் 7 மலாய் 8 மியன்மார் 9 அசாம் 10 யேர்மன் ஆகிய மொழிகளுக்குப் பன்னிரு திருமுறைகளை மொழிபெயர்ப்பாக எடுத்துச் செல்லும் ஒருங்கிணைப்பாளர் பணி இறைவன் எனக்கு தந்த அருட்கொடை.
பிரான்சு நாட்டின் பாரிசு நகருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போயிருந்த நாள்களில் எனது அருமை நண்பர் திரு கந்தையா சுப்பிரமணியம் அவர்களின் மகள் திருமதி தணிகா அவர்களின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரது கணவர் இசை வல்லுநர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்.
திருமதி தணிகா யேர்மன் மொழியில் புலமை பெற்றவர். பன்னிருதிருமுறைகள் யேர்மன் மொழிக்குக் கொண்டு செல்லவேண்டும் உதவுவீர்களா? எனக் கேட்டேன்.
ஆகா.. அஃது என் பேறு என்றார். முதலாம் திருமுறையை மொழிபெயர்க்கும் பணியை அவர் ஏற்றார். திருவாசகம் ஏற்கனவே மொழிபெயர்த்து இருப்பதை அவரிடம் சொன்னேன். நூலைத் தேடுவதாகச் சொன்னார்.
முதலாம் திருமுறையில் திருப்பதிகங்கள் பலவற்றை யேர்மன் மொழிக்கு எடுத்துச் சென்றார் திருமணி தணிகா. தேவாரம் தளத்தில் பதிவாக ஏற்றினேன்.
இரு மாதங்களுக்கு முன்பு வியப்பான செய்தி சொன்னார் திருமதி தணிகா. திருவாசகம் யேர்மன் நூலைக் கண்டுபிடித்து உள்ளதாகவும் முழுவதையும் தட்டச்சு செய்துள்ளதாகவும் சரி பார்த்துப் படிப்படியாக அனுப்புவதாகவும் எனக்கு எழுதினார். தொலைப்பேசியிலும் சொன்னார்.
சொன்னவாறே பதிகம் பதிகமாகத் தட்டச்சிட்டு அனுப்பினார். செம்பொனார்கோயில் என இன்று அழைக்கும் திருச்செம்பொன்பள்ளியில் வாழ்பவரும் தேவாரம் தளத்திற்கு உதவியாளராகக் கடந்த 10 ஆண்டுகளாக அரும் பணிபுரிவருமான திருமதி நித்தியா அவர்கள், திருமதி தணிகா அனுப்பிய யேர்மன் மொழிபெயர்ப்பு முழுவதையும் தளத்தில் ஏற்றினார். திருவாசகத்தின் 658 பாடல்களுக்கும் ஆன யேர்மன் மொழிபெயர்ப்பு தேவாரம் தளத்தில் உள்ளது.
விரைவில் அது நூலாக வெளிவரும். திருமதி நித்தியா நூலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். தவத்திரு 27ஆவது குருமகா சன்னிதானம் அவர்களிடம் காட்டி ஆசியுரை பெற்று நூலாக வெளியிடுவோம்.