உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நிறைவு பெறும் நாளில் அடுத்த மாநாடு நிகழ்வதைப் பற்றி அறிவிப்பது வழக்கம்.
அந்த நிலையில் பேராசிரியர் அரங்க.பாரி முன்மொழியப் பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அழகுற நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள்.
பாரியின் அழைப்பு பாரெங்கும் உள்ள தமிழர்களுக்கு உணர்வூட்டியுள்ளது .
சீரோடும் சிறப்போடும் சிந்தை மகிழச் செவி குளிர கலை இலக்கியப் பண்பாட்டுக் கதம்பமாக இப்போது முடிந்திருக்கிறது, என்று என் மகன் ஒளவை அருள் அனுப்பிய செய்தியைக் குறிக்க விரும்புகிறேன்.
ஆர அமர அமைதியாக அலைவில்லாத மனத்தோடு, எவரும் செலவு மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அமைச்சர் காட்டிய வழிகாட்டு விரைவால்தான் அமெரிக்க நுழைவுப் பதிப்பைப் பெற முடிந்தது என்று பலர் பாராட்டினர்.
----- ஔவை நடராசன்
28.06.2019
மேதகு குடியரசுத் தலைவருக்கு நான் அனுப்பிய செய்தி
Rev. Father Thaninayagam, a Sri Lankan born academic, when he was Professor of Tamil at the University of Malaya, Kualalumpur, organised the First International Conference Seminar on Tamil Studies during January 1966. The event was hosted by the Malaysian Government led by Hon Tunku Abdul Rahman, Prime Minister.
Second International Conference Seminar on Tamil Studies was hosted during Jan 1968 by Government of Tamil Nadu led by Hon C. N. Annadurai, Chief Minister.
Third International Conference Seminar on Tamil Studies was held at Paris, France organised by Prof. Jean Filiozat during 1970.
Fourth International Conference Seminar on Tamil Studies was held in Jaffna, Sri Lanka during January 1974.
Fifth International Conference Seminar on Tamil Studies was held in Madurai in January 1981 hosted by Government of Tamil Nadu led by Chief Minister Hon M. G. Ramachandran.
Sixth International Conference Seminar on Tamil Studies was held in Malaysia during 1986.
Seventh International Conference Seminar on Tamil Studies was held in Mauritius in 1989.
Eighth International Conference Seminar on Tamil Studies was held in Thanjavur during January 1994 hosted by the Government of Tamil Nadu led by Chief Minister Hon J. Jayalalitha
Ninth International Conference Seminar on Tamil Studies was held in Kualalumpur Malaysia during early 2015 hosted by the University of Malaysia.
Tenth International Conference Seminar on Tamil Studies will be held at Chicago, USA, during 4th to 7thJuly 2019.
Tamil citizens of Sri Lanka will be very happy if the Government of Sri Lanka will host the Eleventh International Conference Seminar on Tamil Studies in Sri Lanka during January 2021 two years from now.
Sri Lanka Unit of the International Association for Tamil Research will organise the conference. Sri Lankan Government will host it.
His Excellency President of Sri Lanka could write a letter to the President of the International Association for Tamil Research C/o Tenth International Conference Seminar on Tamil Studies, Chicago, USA, inviting the International body to Sri Lanka to conduct the Eleventh International Conference Seminar on Tamil Studies during January 2021, stating that the Sri Lanka Unit of the International Association for Tamil Research will organise the conference.
மேதகு குடியரசுத் தலைவர் அலுவலக முதலாவது தகவல்
President has been informed about the Tamil Conference and he has not nodded yet, but will most likely to be heard this afternoon or early tomorrow morning, after the events in Polonnaruwa. I will confirm that as soon as possible. In the meantime, we are working on your travel arrangements tentatively, to leave SL tomorrow itself. I know that is going to give you a lot of trouble getting your travel arrangements ready.
மேதகு குடியரசுத் தலைவர் அலுவலக இரண்டாவது தகவல்
இவை ஊடகங்களுக்கு அல்ல
உங்களுக்கு மட்டுமே
The idea of the conference has to be dropped, as HE does not want to commitment, Ithaca future government may not want to respect., and put all you in jeopardy.
Tomorrow at 10. 30 am, the preliminary meeting will be held to at the presidential secretariat, chaired by Secretary to President. Please attend. Mindshare your NIC number with me, so that I can clear your entrance.
Thank you
Harindra
வணக்கம் காலம் கடந்த பின்னராவது யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து சர்வேசுவரனாரிடம் இருந்து வந்த செய்தியால் மகிழ்வுற்றேன்.
நான்கு மாதங்களுக்கு முன்பு பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களைச் சந்தித்து அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கை கிளையை மீளமைக்க முயல்வோமா எனக் கேட்டேன் நீங்கள் பொறுப்பெடுத்தால் நான் சேர்ந்து கொள்கிறேன் எனச் சொன்னார்.
ஈழத்தமிழ் சமூகத்தின் இருப்பு கேள்விக்குறியாகி வருகின்ற இந்த நேரத்தில் பதினோராவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதால் இருப்பை உறுதி செய்யவும் அடையாளங்களை நிலை நிறுத்தவும் முன்னெடுக்கலாம் என கருதினேன்.
நான்கு மாதங்களுக்கு முன் பேசியதை மீண்டும் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பும் நினைவூட்டினேன்.
இரு வாரங்களுக்கு முன்பு திரு இலலீசன் அவர்களிடம் தொலைபேசியில் விவரத்தைச் சொல்லி பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களிடம் பேசுமாறு கேட்டுக்கொண்டேன்.
தமிழ் அறிஞர்களிடம் செல்லுபடியாகாத என் கருத்தை மேதகு குடியரசுத் தலைவரிடம் எடுத்துச் சென்றேன்.
அழைப்பிதழ் கடிதம் தருவதாகவும் சிகாகோவுக்கு எடுத்துச் செல்லப் பயணச்சீட்டுகளை வாங்கித் தருவதாகவும் குடியரசுத்தலைவர் தரப்பில் எனக்கு முதலில் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் தரப்பில் அதைச் செய்ய முடியாதற்கான காரணங்களைச் சொல்லிச் செய்தி அனுப்பினர் அவர்கள் தரப்பில் சொல்லிய நியாயம் எனக்கு ஏற்புடையதாக இருந்தது.
இன்னமும் காலம் இருக்கிறது.
இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைத் தலைவர்கள் இணைந்து ஒரு கூட்டத்தை நடத்தி அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவன இலங்கைக் கிளையின் மீளமைப்பை எடுத்து நோக்க வேண்டும்
மன்றத்தில் முன்பு பணியாற்றியவர்களில் பேராசிரியர் சண்முகதாஸ் பேராசிரியர் பத்மநாதன் நான் ஆகிய மூவரும் ஆர்வத்தோடு இருக்கிறோம். பேராசிரியர் பத்மநாதனிடமும் பேசினேன். இலங்கை அரசை ஈடுபடுத்துவதில் அவருக்கு உடன்பாடில்லை.
முழுக்க முழுக்க புலமையாளர்களால் புலமையாளர்களுக்காகவே நடத்த வேண்டிய ஆராய்ச்சி மாநாடு என்பதே அவரது நிலை.
எதுவாக இருந்தாலும் புலமையாளர்களே ஒன்றுகூடித் தீர்மானிக்க வேண்டும் தமிழ் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கு ஓர் அமைப்பை இலங்கையில் உருவாக்க வேண்டும். காலந்தோறும் உலகத்தமிழ் ஆராய்ச்சியாளர்களை உள்வாங்கிக் கொண்டும் கொடுத்தும் தமிழ்ப் புலமைக்கும் புத்துலகுக்கு ஏற்ற மொழி ஆளுமை வளர்ச்சிக்கு ஆவன செய்ய வேண்டும்.
1968 ஆம் ஆண்டு இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடக்கம் கடந்த 50 ஆண்டுகளாக புலமை வளர்ச்சிக்கு முடிந்தளவு என் பங்கை ஆற்றி வந்துள்ளேன் தொடர்ந்தும் உங்களோடு சேர்ந்து பணிபுரிவேன் இளைஞர்களாகிய நீங்கள் முன்னெடுக்க வேண்டும் உங்களுக்குப் பக்கபலமாக நான் இருப்பேன்.
ஈழத்துப் பூதந்தேவனாருக்கு முன்பேயே பல நூற்றாண்டுகளாக தமிழ்மொழி ஈழத்தில் புலமையாளர் மொழியாக இருந்து வந்துள்ளது
தமிழ் புலமையாளர்கள் இந்த வளர்ச்சியைப் பேணி வந்துள்ளனர்.
ஸ்ரீமாவோ அரசின் கடுமையான எதிர்ப்பை மீறி யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தியதில் என் பங்கு கணிசமானது
எனது யாழ்ப்பாணமே என்ற 260 பக்க நூலை நீங்கள் படித்தால் என் பங்களிப்பைத் தெரிந்து கொள்ளலாம்
பதினோராவது தமிழாராய்ச்சி மாநாடு இலங்கையில் நடப்பதால் உலக புலமையாளர்களும் ஈழத்துப் புலமையாளர்களும் கொண்டும் கொடுத்தும் உறவாடி புலமை மேம்பட உதவும்
ஈழத் தமிழர்கள் தம் இருப்பை உறுதி செய்ய, தாமும் பூமிப்பந்தில் தமிழர் தாயகத்தின் சொந்தக்காரர்கள் என்ற இறுமாப்பைப் பெற இத்தகைய மாநாடுகள் பெரிதும் உதவும்.
திருக்குறள் விழா ஒன்றை எடுக்க வேண்டும் என மேதகு குடியரசுத் தலைவர் என்னிடம் கேட்ட பொழுது யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று நான் அவரிடம் சொன்னேன் ஆவணிக் கடைசியில் நடைபெறுவதாக உள்ள திருக்குறள் விழாவில் பங்காற்ற உங்களை அழைப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை
கம்பவாரிதி அவர்களுக்கு விருது வழங்குக இலலீசனும் உள்ளார் எனவும விதந்துரைத்துள்ளேன் தான் தொக்கா திரு குகநாதனும் திரு இலலீசனின் திருக்குறள் பணிகளைப் பெருமையாகக் கூறினார்கள்.
சர்வேசுவரனார் ஆர்வத்துடன் எனக்கு எழுதியதால் இந்தச் செய்திகள் அனைத்தையும் உங்களுக்கு மட்டுமே அல்லது யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே எழுதுகிறேன்
ஊடகங்களுக்கு இந்தச் செய்திகளைத் தெரிவிக்காதீர்கள்
நன்றி
1 comment:
வணக்கம்,
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளை என்பது 1965ம் ஆண்டில் தனிநாயக அடிகளாரின் முன்னிலையில் உருவாக்கப்பட்டதாகும். இக்கிளைக்கெனத் தனியாக ஒரு யாப்பும், நடைமுறை வழிகாட்டுதல்களும் இருந்துள்ளதென அறியமுடிகிறது. இக்கிளையானது கடந்தகாலத்தில் தனது பங்களிப்பைச் செவ்வனே செய்துள்ளது. தேசிய அளவிலான மாநாடுகள், கண்காட்சி, நூல் வெளியீடு என்று பலவும் இதில் உள்ளடக்கப்படும். இலங்கைக் கிளையினால் 2015ம் ஆண்டில் ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது. மற்றைய நாடுகளில் உள்ள தேசியக் கிளைகள் இவ்வாறான வெளியீடுகளையோ நிகழ்வுகளையோ நடத்தியுள்ளதான பதிவுகளைப் பொதுவெளியில் காணமுடியவில்லை. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இந்தியக் கிளை, மலேசியக் கிளை அல்லது மொறீசியஸ் கிளை என்று எதைப் பற்றியும், அவற்றின் உறுப்பினர்கள், செயற்பாடுகள் பற்றியும் எந்தப் பதிவுகளையும் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் உத்தியோகபூர்வ வெளியீடுகளில் காண முடியவில்லை.
இந்நிலையில் http://iatrnew.org/nat-units.html என்ற வலைத்தளத்தில் "உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் யாழ்ப்பாணக் கிளை" என்று சிலரது பெயர்கள் உள்ளன, இந்த யாழ்ப்பாணக் கிளை தோன்றுவதற்குக் காரணமானவர் சண்முகதாஸ் என்பதை இதர பக்கங்களினூடகவும், புறக் காரணிகளூடாகவும் அறிய முடிகிறது.
நீண்ட காலமாக இயங்கிவரும் இலங்கைக் கிளையின் உறுப்பினர்கள் பட்டியலும், "யாழ்ப்பாணக் கிளை"யின் உறுப்பினர்கள் பட்டியலும் வேறுவேறானதாக உள்ளது.
இதில் என்னுடைய கேள்விகள் என்னவென்றால்,
1965ம் ஆண்டு தொடக்கம் இயங்கிவரும் இலங்கைக் கிளையை மறுதலித்து புதிய "யாழ்ப்பாணக் கிளை" என்று ஒன்றை உருவாக்கவேண்டிய தேவை என்ன?
யாருடைய லாபத்திற்காக அல்லது தேவைக்காக இவ்வாறான உடைப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது?
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்துடன் நீண்டகாலத் தொடர்புடையவர் என்ற வகையில் நீங்கள் இதில் எந்தக் கிளையை? என்ன காரணத்திற்காக ஆதரிக்கிறீர்கள் என்பதை இங்கு பதிவுசெய்தால், புதியவர்கள் தெளிவடைய உதவும் என்பதால் இதனை இங்கு பதிகிறேன்.
பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
- விருபா குமரேசன்
Post a Comment