கல்லையும் மணலையும் கழிவுக் குப்பையும் கேணிக்குள் வீசினர்
தொல்லை இல்லைத் துடைக்கலாம் என்றவர் இறங்கி அனைத்தையும்
எல்லைக்கு அப்பால் அகற்றினர் அந்நாள் எனக்குத் துணையான
வல்லவர் இன்றிலை வானவர் ஆயினர் வாடுவன் கண்ணீருடனே.

மெல்லிய பேச்சினர் மேன்மையின் உறைவிடம் மேதகு பண்பாளர்
சொல்லிய செய்பவர் சோர்விலர் சிவப்பிர காசம்வீதி சேர்பவர்
இல்லையே இன்று எம்முடன் என்கோ இருப்பனேன் என்கோ
வல்லவா பத்மநாதா வானவர் ஆயினாய் வாடினேன் கண்ணீருடனே.

சந்துகள் பொந்துகள் கடந்தே சயிக்கிளில் சென்றதை நினைப்பனோ
சிந்துகள் பாடுவாய் செம்மையே பேணிச் சொன்னவை நினைப்பனோ
பந்துகள் வீசினால் துடுப்பெடுத் தாடும்உன் துள்ளலை நினைப்பேனென்
சிந்தையில் நிறைந்தாய் வானவர் ஆயினாய் யாரிடம் நோவேனோ?

அறிவியல் ஆய்வாளர் அண்ணன் சட்டம் படித்துநீதி பதித்தம்பி
நெறியால் நிறைந்த மருத்துவர் மனைவியாம் அக்காள் பத்மநாதா
செறிவுறும் பேராசான் செவ்வேள் முகாமையில் சிவஞானம் இவையீந்த
நிறைமகள் இந்திராணி பேறல்லவா? நீயில்லா வறியவன் நானல்லவா?

மையலே கொள்ளாய் மயக்கமே தெரியாய் மாண்புறு கொள்கையாயே
பையவே செல்வாய் பதட்டமே கொள்ளாய் பசித்தவர் பேணுவாயே
ஐயனார் கோயிலடி அன்பர்கள் நெஞ்சில் நினைவற வாழ்ந்தவாறோ
கையறு நிலையனாய்க் கதறுவேன் ஆரெனை ஆற்றுவார் அன்பனே.

JEREMIAH PATHMANATHAN (Retired Teacher). Beloved son of the late Dr Rajendram Jeremiah and Sivakami amma, beloved husband of Indranee, loving father of Dr Sevvel (Senior Lecturer) and Sivagnanavel (Management Assistant), beloved brother of Dr Sithamparanathan (New Zealand) and Viswanadhan (High Court Commissioner), beloved sister of the late Sithadevi Ganandharan and Sivapakiyam Vaitheeswaran Pasupathy (New Zealand) and Kamaladevi Shanmugarajan, passed away. Remains will lie at 28 (80), Sivapiragasam Road, Vannarponnai, Jaffna. Cortege leaves the residence at 11 am on Thursday 12th July 2012 for cremation at Kombainmanal Cemetery, Jaffna.
No comments:
Post a Comment