சமய மாற்றத்தை ஊக்குவிக்க
மாதம் இரண்டு இலட்சம் ரூபாய்!!
மாதம் இரண்டு இலட்சம் ரூபாய்!!
சைவ சமயத்தின் கொடும் பிடிக்குள் சிக்கித் தவிக்கின்றனர். இவ்வாறு சிக்கித் தவிப்பவர்களை மீட்கவேண்டும்.
ஏசுக் கிறித்துவின் நற்செய்தியை இவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். இயேசு கிறித்து காட்டிய வழியில் கடவுள் நம்பிக்கையை இவர்களுக்கு ஊட்ட வேண்டும். இவர்களைக் கிறித்தவர்களாக மாற்ற வேண்டும்.
இந்தப் பணியைச் செய்வீர்களா? மாதச் சம்பளமாக இலங்கை ரூபாயில் இரண்டு இலட்சம் தருகிறோம் என ஒருவரைக் கேட்டால் அவர் என்ன சொல்வார்? வயிறு முக்கியமானதால், ஒரு வேளை சோற்றுக்காகவேனும் ஒத்துக் கொள்வார்.
மாதச் சம்பளம் இலங்கை ரூபாயில் இரண்டு இலட்சம் ஒரு பகுதியாக. வெளிநாட்டு வங்கிக் கணக்குக்கு மீதிப் பகுதியாக.
எட்டு நாடுகளில் பணி. பயணிக்கப் பயணச்சீட்டு. தங்குவதற்கு ஐந்து நட்சத்திர விடுதி. பயணப் படியாக அமெரிக்க வெள்ளியில் தொகை.
சமய மாற்றமே கொள்கையாக
1 இப்படியும் வாழலாம்.
2 எப்படியும் வாழலாம்.
3 இப்படித்தான் வாழவேண்டும்.
இந்த மூவரில் இரண்டாமவருக்கு இந்தத் தொகைகள், வசதிகள் சகட யோகம். மூன்றாமவருக்குக் கால் தூசி. முதலாமவருக்கு அச்சம் கலந்த நப்பாசை. அஃதோடு அவர் மறப்பார்.
Evangelist என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பொருள், a
person who seeks to convert others to the Christian faith, especially by public
preaching. தமிழில் அவர் நற்செய்தியாளர். நற்செய்திக் கூட்டங்கள் என்றாலே அவை சைவரைக் கிறித்தவராக்கும் சமய மாற்றக் கூட்டங்களே.
சமய மாற்றும் முயற்சிகள் கிறித்தவத்தின் அடித்தளம். 1999 நவம்பர் 8ஆம் நாள் இந்தியாவுக்கு வந்த பாப்பரசர் இரண்டாம் யோன் போல், கத்தோலிக்கர் சமய மாற்றம் செய்வதை உரிமையாகக் கொள்வர் எனக் கூறினார்.
Pope tells India his church has a right to
evangelize. (Nov. 8, 1999) ''Religious freedom constitutes the very heart of
human rights,'' the pope, on a three-day visit to India, said at a
interreligious gathering that included Hindus, Muslims, Sikhs, Jews and
representatives of several other faiths. ''Its inviolability is such that
individuals must be recognized as having the right even to change their
religion, if their conscience so demands.''
Christian conversions are at the heart of a
political and religious dispute that has made the 79-year-old pope's visit a
tense one. Christian proselytizing is fuel for Muslim fundamentalists, but it
is also a source of uneasiness between the pope and some of his more moderate
and like-minded religious peers.
''Conversions are a fundamental right,''
Samdhong Rinpoche, a Buddhist monk who is the speaker of the Tibetan Parliament
in exile, said after leaving the podium he shared with the pope. ''But what we
fear is that between indoctrination and anybody's inner-consciousness to choose
his religion, there is a clean line.''
''Any kind of action to encourage, or to
persuade or to motivate in favor of any particular religion, that is a form of
conversion that we as Buddhists cannot recommend,'' the monk said.
மாணவர்களை இலக்கு வைத்துச் சமய மாற்றம்
மாணவப் பருவத்திலேயே சைவர்்களைக் கிறித்தவராக்கும் நோக்குடன் பிரித்தானியாவைத் தலைமையகமாகக் கொண்ட அறக்கட்டளையின் பெயர், International
Fellowship of Evangelical Students (IFES). தமிழில் அனைத்துலக மாணவர் சமய மாற்றக் கழகம் (அமாசமாகம்).
The objects of IFES are to advance the
Christian faith by promoting, supporting and maintaining an international
fellowship of national Christian student ministries (national movements);
seeking to awaken and deepen personal faith in the Lord Jesus Christ and to
further evangelistic work among students throughout the world; and providing
for fellowship on a worldwide and regional basis.
Students have the opportunity to engage with
their peers, to listen with openness and sensitivity to the conversations of
the academy, and to present a credible Christian perspective on key issues. We
seek to equip students in effective witness, to encourage them to initiate
spiritual conversations with classmates, to hold evangelistic bible studies and
mission events, and to live in ways that demonstrate grace and generosity.
The doctrinal basis of IFES shall be the
fundamental truths of Christianity, including:
1.
The unity of the Father, Son and Holy Spirit in the Godhead.
2.
The sovereignty of God in creation, revelation, redemption and final judgment.
3.
The divine inspiration and entire trustworthiness of Holy Scripture, as
originally given, and its supreme authority in all matters of faith and
conduct.
4.
The universal sinfulness and guilt of all people since the fall, rendering them
subject to God's wrath and condemnation.
5.
Redemption from the guilt, penalty, dominion and pollution of sin, solely
through the sacrificial death (as our representative and substitute) of the
Lord Jesus Christ, the incarnate Son of God.
6.
The bodily resurrection of the Lord Jesus Christ from the dead and His
ascension to the right hand of God the Father.
7.
The presence and power of the Holy Spirit in the work of regeneration.
8.
The justification of the sinner by the grace of God through faith alone.
9.
The indwelling and work of the Holy Spirit in the believer.
10.
The one Holy Universal Church which is the Body of Christ and to which all true
believers belong.
11.
The expectation of the personal return of the Lord Jesus Christ.
உலகின் 160 நாடுகளில் அமாசமாகம் பணி. மாணவர்களைச் சமயமாற்றும் பணி. உலகைப் 11 பிரதேசங்களாக்கி அமாசமாகம் பிரித்துளர். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைமை நிலையம். இவற்றுள் 9 பிரதேசங்களுக்கு அந்தந்த நாடுகளில் தலைமையகம்.
தெற்காசியப் பிரதேசச் செயலாளர் சாவித்திரி
அமாசமாகத்தின் தெற்காசியா, வடக்கு ஆபிரிக்கா ஆகிய இரு பிரதேசங்களுக்கும் இலண்டனில் தலைமையகம்.
தெற்காசியப் பிரதேசத்தின் அமாசமாகம் செயலருக்குத் தலைமையகம் பிரித்தானியாவின் ஆக்சுபோர்டு நகரம். தெற்காசியாவின் ஆப்கானித்தான், இரான், பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம், மியன்மார், இலங்கை, நேபாளம், பூட்டான், மாலைதீவு ஆகிய பத்து நாடுகளில் பணி.
It
encompasses war-torn nations, a Buddhist kingdom, a closed dictator-led state,
and nations gripped by Islam and Hinduism. Already
struggling with much extreme poverty, the region's suffering is often
exacerbated by natural disasters.
Student ministry in South Asia: 5
IFES-affiliated movements; 2 unaffiliated movements; 3 countries remain to be
pioneered; largest movement: UESI India, over 30,000 students.
இவற்றுள் மூன்று நாடுகளுக்குள் அமாசமாகம் நுழைய முடியாதவாறு தடை.
அந்தப் பத்து நாடுகளிலும் நற்செய்திகளைச் சொல்வது. மாணவரை அணிதிரட்டுவது. அணிகள் ஊடாகக் கிறித்தவ மயமாக்குவது திருமதி சாவித்திரி சுமந்திரனின் பணி.
All ten of the countries in the IFES South Asia
region appear in the Open Doors World Watch List. In eight of those countries,
the level of persecution is considered ‘very high’ or ‘extreme’.
Please pray for an opening up of those
countries currently closed to the gospel.
அந்தப் பணிக்கு இலங்கை ரூபாயில் இரண்டு இலட்சம். வெளிநாட்டில் அமெரிக்க வெள்ளியில் மீதிச் சம்பளம்.
இந்தச் சம்பளம், இந்தக் கிம்பளம், இந்த வசதி, இந்த வாழ்க்கை என்றால், எப்படியும் வாழலாம் என வாழ்பவர் ஏற்பாரா? மாட்டாரா?
இலங்கை ரூபாய் இரண்டு லட்சத்தை மாதச் சம்பளமாக பெற்று, வெளிநாட்டில் கிம்பளம் பெற்று, சைவ சமயக் கொடும் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மக்களைக் கிறித்துவ மக்களாகச் சமயம் மாற்றும் முயற்சியாளரே திருமதி சாவித்திரி சுமந்திரன்.
சுமந்திரன் ஒப்புக்கொள்கிறார்
திருமதி சாவித்திரி சுமந்திரனின் மாதச் சம்பளம் இரண்டு லட்சம் ரூபாய் என நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆபிரகாம் சுமந்திரன் சொல்கிறார் (31.03.2018).
தன்னுடைய வருவாய்க் கணக்கை நாடாளுமன்ற வளாகத்தில் வெளியிட்ட பொழுது, திருமதி சாவித்திரி சுமந்திரனுக்கு அமெரிக்க இடாலர் 1,100 சம்பளம் எனக் கூறியிருந்தார். அஃதே இலங்கை ரூபாயின் இன்றைய (ஏப்பிரல் 2019) மதிப்பில் தோராயமாக இரண்டு இலட்சம் ஆகும்.
திருமதி சாவித்திரி சுமந்திரனின் முறையான அலுவலகம் தெற்காசியாவில் இல்லை.
IFES South Asia, Savithri Sumanthiran, Regional
Secretary, c/o IFES International Services, 5 Blue Boar Street, Oxford OX1 4EE,
United Kingdom
அங்கே பணி எனில், மாத வருவாய் இலங்கை ரூபாய் இரண்டு இலட்சத்துள் அங்குள்ள செலவுகளை எப்படிச் சமாளிக்கிறார்? அங்கு அவர் பெறும் மேலதிக வருவாயையும் வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரங்களையும் வெளியிடுவது நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆபிரகாம் சுமந்திரனின் கடமை அல்லவா?
தெற்காசியாவுக்கான நிதி
தெற்காசியாவுக்காக அமாசமாகம் ஒரு கோடியே எழுபத்தைந்து இலட்சம் இலங்கை ரூபாய் 2017இல் ஒதுக்கினர். ஏறத்தாழ ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் ரூபாய் இலங்கை ரூபாய் 2016இல் ஒதுக்கினர்.
ஒதுக்கிய தொகைகள் செலவு செய்த பின்னரும், நிலையான கணக்கில் மூன்று கோடியே இருபத்தைதந்து இலட்சம் ரூபாய் தெற்காசியச் செலவுகளுக்காக (2017) வங்கியில் உள்ளதே.
அமாசமாகம் 2017இல் மொத்த வருவாய் 133 கோடி இலங்கை ரூபாய். 2016இல் மொத்த வருவாய் 100 கோடி இலங்கை ரூபாய். இந்த வருவாய் முழுவதும் உலகம் முழுவதும் கிறித்தவ சமயத்தைப் பரப்பவும் கிறித்தவர்களல்லாதவரைக் கிறித்தவராக்கவுமேயாகும்.
சைவர்களைக் கிறித்்தவர்களாகச் சமயம் மாற்றுவதற்குரிய முயற்சிக்காகத் திருமதி சாவித்திரி சுமந்திரனுக்கு இலண்டனில் உள்ள அவரது தலைமையகம் கொடுக்கின்ற தொகை முழுவதும் அவருடைய பொறுப்பில் செலவாகிறது. மேலிடத்தில் பொதுவான வழிகாட்டல்கள் உண்டு. ஆனாலும் நிதிச் செலவுக் கணக்குகளில் மேலிடம் தலையிடுவதில்லை. தெற்காசியச் செயலர் என்பதால் செலவுகளை அவரே தீர்மானிக்கிறார்.
கிறித்தவ சமயத்தின் கொள்கைகளை ஏற்குமாறும் சைவ சமயத்தைக் கைவிட்டு கிறித்தவத்துக்கு சமயம் மாறுமாறும் மாணவர்களைக் கேட்கவே திருமதி சாவித்திரி சுமந்திரனுக்கு மாதச் சம்பளம் இலங்கை ரூபாயில் இரண்டு இலட்சம்.
சமய மாற்ற வரலாறு
இலங்கை மண்ணில் 5000 ஆண்டுகளுக்கும் கூடுதலாக இந்து சமயத்தவர்களாக வாழ்கிறோம். இலங்கை சிவ பூமி.
400 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தின் சைவத் தமிழ் அரசை வீழ்த்தியோர் கத்தோலிக்கப் போர்த்துக்கேயர்.
அக்காலத்தில் தொடங்கியதே கிறித்தவத்துக்கு சமயம் மாற்றும் முயற்சி.
வாள் முனையில், துப்பாக்கி முனையில் பீரங்கி முனையில் சமயமாற்ற முயற்சிகள் ஒருபுறம். சோறு, உடை, பணம், பதவி ஆகிய ஈர்ப்புகள் வழி சமயமாற்றம் மறு புறம்.
ஒல்லாந்தர் வந்தனர். சமயமாற்றம் தொடர்ந்தது.
ஆங்கிலேயர் வந்தனர் சமயமாற்றம் தொடர்ந்தது.
மேலைத் தேய மேலாட்சி அகன்றது. விடுதலை பெயரளவிலே. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், திருமதி சாவித்திரி சுமந்திரன் எனத் தொடர்கிறது அடிமை கொள்ளும் அணுகுமுறை.
மெதடிசுத்த திருச்சபை - துணைத் தலைவர் சுமந்திரன்
மெதடிசுத்த திருச்சபையின் துணைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்.
1814இல் தொடங்கிய திருச்சபை. மன்னாரில் முருங்கனில் சீவோதயம் என்ற மரக்கறித் தோட்டம் என்ற போர்வையில் சைவ சமயிகளைக் கிறி்த்தவத்துக்கு மாற்ற 40 ஆண்டுகளாக நடத்துகின்றனர். போதகர் காண்டீபன் பொறுப்பாளர்.
போருக்குப் பின் சமயம் மாற்றினர் சுமந்திரன் சார்ந்தோர்
முருங்கன்பிட்டி என்ற அயலூரில் 50 சைவக் குடும்பங்களையும் கடந்த சில ஆண்டுகளில் கிறித்தவராக மாற்றியோர் திரு. மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் துணைத் தலைவரான மெதடிசுத்த திருச்சபையினர்.
கற்கடந்த குளம் அரசுப் பள்ளி. தலைமை ஆசிரியர் அருள்நங்கை ஒருவர். கட்டை அடம்பனில் இருந்து செல்லும் மாணவ மாணவியர் பள்ளிக்குள் திருநீறு அணிய முடியாது. மாணவியர் பொட்டு வைக்க முடியாது. கையில் கட்டிய நேர்த்திக் கயிறு அறுக்கப்படும்.
ஆனாலும் சைவர்கள் விடவில்லை. கல்வி அதிகாரிகளைக் கண்டனர் முறையிட்டனர். அரசுப் பள்ளியல்லவா?
மெதடிசுத்த திருச்சபையின் ஆண்டறிக்கையில் சைவ விழிப்புணர்வைக் கூறினர். சுவரொட்டி ஒட்டுகிறார்கள். சமயமாற்றிகளை விரட்டுகிறார்கள். கடந்த ஆண்டில் (2017) இந்த எதிர்ப்பு வலுத்துள்ளது. மெதடிசுத்த திருச்சபை பின்வருமாறு கூறுகிறது.
OPPOSITION TO EVANGELISTIC WORK - During the
past year we have faced increasing opposition for Evangelistic work in new
areas. New converts have been threatened, their houses have been attacked, they
have forfeited their rights in local death donation societies, where their
family members and their children have been ridiculed and harassed in schools.
Our workers and the team visiting new areas, have also been harassed. Handbills
have been distributed against us and posters put up. Loud speakers have been
used to spread false stories and character assassinations. People have been
sent to abuse us coming almost on the verge of assault and several believers
and some workers have actually been assaulted. Despite all these activities the
Lord has been blessing us to add more and more people to His Kingdom. For this
we solicit your continued prayers.
சாவித்திரியும் சுமந்திரனும்
திருமதி சாவித்திரி சுமந்திரன் பொது வாழ்வில் இல்லையே. அவர் எதைச் செய்தாலும் செய்துவிட்டுப் போகட்டும். திருமணம் செய்ததற்காகத் திரு. சுமந்திரன் பொறுப்பாக இருக்க முடியுமா? என்று கேட்கலாம்.
திரு. சுமந்திரன் மெதடிசுத்த திருச்சபையின் துணைத்தலைவராக இருக்கிறார். மெதடிசுத்்த திருச்சபையின் நோக்கங்களில் ஒன்று சைவர்்களைச் சமயம் மாற்றிக் கிறித்தவர்களாக்குவதே.
2017ம் ஆண்டு சிவசேனை இந்துக்களை சமயமாற்றம் முயற்சிக்கு எதிராகச் சைவர் கொடுத்த நெருக்கத்தை மெதடிசுத்த திருச்சபை தனது ஆண்டறிக்கையில் மிகத் தெளிவாக குறிப்பிட்டது.
சமயமாற்றத்தை முன்னெடுப்பதில் திரு. சுமந்திரனுக்கு எவ்வளவு ஈடுபாடு உண்டோ அதை விட அதிகமான ஈடுபாடு திருமதி சாவித்திரி சுமந்திரனுக்கு உண்டு.
No comments:
Post a Comment