Wednesday, April 24, 2019

வவுனியா மவுலவி


Please scroll down for English text

சித்திரை எட்டாம் நாள் (21.04.2019) இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்கள் கொடுமையானவை. தாக்கியோர் கொடியோர். அக்குழுத் தலைவன் சகரான் என்கிறார் வவுனியா மவுலவி.

கொடியோரைக் குறை கூறும் முகமதிய நடுநிலையாளர்களைச் சாடும் உரையை வவுனியா மவுலவியின் காணொலியில் கண்டேன், கேட்டேன். அக்காணொலியின் 6.26ஆவது நிமிடத்தில் இருந்து வரும் காட்சியால் ஒலியால் நெஞ்சம் பதறுகிறது.

"அன்புக்குரிய இசுலாமியச் சகோதரர்களே, உறவுகளே.." எனத் தொடங்கும் அவரது உரையில், 1.51 நிமிட வரியில், “இப்ப சகரான் என்று சொல்லக்கூடியவர் செய்தது பிழை என்று சொன்னால்,… அதை யார் செய்திருந்தாலும் பிழை என்று சொல்வோம்” என்கிறார்.

தொடர்ந்து பல செய்திகளைச் சொல்கிறார்.

பின்னர் 6.26இவது நிமிடத்தில், “…..எனவே தயவு செய்து சகரானைப் பற்றித் தவறாகச் சொல்லுவதற்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது, எவனும் வாய் திறக்கக் கூடாது” என்கிறார் மவுலவியார்.

உயிர்ப்பலிகளால் அழுகுரல்கள் ஓயவில்லை. உடற் காயங்களுக்குக் குருதி தேடி மாளவில்லை.

மீண்டும் இத்தகைய உயிர்ப் பலிகளைக் கோருகிறார் மவுலவியார். கபீர்கள் எனப் புத்த, சைவ, கிறித்தவ மற்றும் முகமதியரல்லாதவரைப் பெயரிடுகிறார்.

புத்த சமயத்தவர் சைவசமயத்தவர் கிறித்தவ சமயத்தவர் மூவர் மீதும் போர்முரசு கொட்டுகிறார். அவர் முகமதிய நல்லாசான். அன்பைப் போதிக்கும் மவுலவியார்.

மனிதநேயத்தை, அன்பை, அறத்தை, அருளைச் சொல்ல வல்லவர். மாறாகப் போர் தொடுங்கள் என்கிறார். முகமதியர்களே போருக்குத் தயாரராகுங்கள் என்கிறார். வெறுப்பை உமிழ்கிறார். காழ்ப்பைக் கக்குகிறார். கொடுஞ் சொற்களால் தீயாய்ச் சுடுகிறார். அவர் மூச்சில் தீயின் வெந்தழல்கள். அவர் பேச்சில் தீயின் பிழம்புகள். அவர் நாவில் தீப் ொறிகள்.

யாருக்கு எதிரான போர்? புத்தர்களுக்கு சைவர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிரான போர். முகமதியர்கள் அல்லாத கபீர்ளுக்கு எதிரான போர்.

 சைவர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறோம். சைவ வழிபாட்டிடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் என அஞ்சுகிறோம். சைவர்களை எதிரிகளாக முகமதியர்கள் கருதுமாறு சமய வெறியைத் தூண்டுகிற அவரது உரையைக் கண்டிக்கிறோம்.

பரத கண்டமான இந்த மண்ணின் பரப்பில், இந்த மண்ணின் மக்களால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஊடாகச் செதுக்கிச் செதுக்கிப் பண்பட்டு உருவான சமயம் சைவ சமயம்.

முகமதியர்கள் இந்த மண்ணின் உருவான கருத்துருவாக்க வழிவந்தோர் அல்லர். இந்த மண்ணில் அவர்களது கருத்துருவாக்கத் தேவையோ பண்பாட்டு உள்ளீட்டுத் தேவையோ இருக்கவில்லை.

ஆனாலும் வந்தார்கள், வாழ்கிறார்கள் என்பதால் அவர்களை மதிக்கிறோம். அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம். அதே அன்பைச் சைவர்கள் மீது முகமதியர் காட்டவேண்டும். இந்த மண்ணின் பல்லாயிரம் ஆண்டுகால மரபை மதிக்க வேண்டும்.

சைவர்களை அழிக்க, சைவப் பண்பாட்டை மிதிக்க, சைவப் பராம்பரியத்தை வேரறுக்க, மண்ணின் மைந்தர் மீது போருக்கு அறைகூவ அவர்கள் முற்படுவது வேதனைக்குரியது.   

சைவப் பண்பாட்டில் வாழ இந்தப் பரத கண்டத்துக்கு வெளியே எங்களுக்கு வாழ்விடமில்லை. எங்கும் நாம் ஓடி ஒழிய நாடுகளில்லை.

ஆனால் முகமதியர்களுக்குப் பல நாடுகள் உள்ளன. அவர்களின் பண்பாட்டுப் பேழைகளுக்குப் பல நாடுகள் தாயகமாக உள்ளன. அங்கு அவர்கள் செல்லலாம்.

நாம் எங்கு செல்வோம்? இந்த இலங்கை மண் சைவப் பண்பாட்டு மண். வேறெந்தப் பண்பாட்டையும் உருவாக்கி வளர்க்காத மண். மவுலவியாருக்கு இதை நினைவூட்டுவது சைவர்களின் கடமை.

A call for jihad or holy war by a Moulavi at Vauvniya in a video recording is an unwarranted signal at a time Sri Lanka is reeling back from one of its worst chapters of religious terrorism. The leader is said to be Zaharan as told by the Moulavi.

His targeted audience are his Islamic brothers and relatives. He says that what Zaharan (or for that matter anyone) did was wrong (timeline 1.51 min.)

He speaks at length on how Islam deals with Kefirs, meaning non-Mohammedi.   

Then he says that no one has a right to find fault with Zaharan. He wants all Muslims to keep their mouth shut. (timeline 6.26 min.)

Tears have not dried from those bereaved. SOS messages from blood banks have not ceased. Here is a recording calling for jihad. War drums are beaten. War cries echo in the sky. With fire in his breath, sparks in his tongue, the Maulavi cites from holy texts to support his horrendous appeal to fellow Muslims to prepare them for war.

His targets are Buddhists, Hindus and Christians of this country whom he terms as Kefir.

We Hindus have a history of many many thousands of years of continuous habitation in this revered land. We owe our culture to this land. Hinduism evolved in this land through ages. It was shaped through repeated trial and error situations and what we are today is the net result of a philosophical evolution.

We have no other land in this globe to call it our mother. We have no other country to say that it is ours.

Mohammedi’s came into this country to be received by us. Our broadened mind determined their presence here. We had no need for them. However we gave them shelter.

Today the learned Moulavi wants to wage war on us, calling us Kefirs. We Hindus would like to remind them that their culture and tradition were born out of need in a different environment, which we respect. This land is not the land to which Allah sent Prophet Mohamed.

We Hindus feel threated by an alien culture after hearing to the Vauvniya Maulavi. Our places of worship, it appears are the targets, according to the Mauvlavi, who asserts that no one has a right to find fault with Zaharan, the leader who led the horrendous attacks last week on places of worship.

We Hindus value our motherland and culture and shall not allow them to be fritted away by threats and inflammatory voices



சித்திரை 8, 2050 ஞாயிறு (21.04.2019)

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆய நகரங்களில் இன்று காலை நடைபெற்ற வன்முறைத் தாக்குதல்களைச் சைவ சமயத்தோர் ஏற்கார், கண்டிப்பர், புறந்தள்ளுவர். 

வழிபாட்டிடங்களில் அன்பும் அறனும் அருளும் பெருக்கும் நாளில், பெரிய வெள்ளிக்கிழமையைத் தொடர்ந்த குருத்தோலை ஞாயிறன்று 21.04.2019 அன்று எம் அன்புக்கும் பாசத்துக்கும் மதிப்புக்கும் உரிய கிறித்தவ மக்கள் மனமுருகி வழிபாட்டில் ஈடுபட்டிருக்கையில் ஒன்றும் அறியா அப்பாவிகளை நூற்றுக் கணக்கில் காயமாக்கியும் பலரின் உயிர்களைப் பறித்தும் நிகழ்த்திய தாக்குதல்களைச் சைவ மக்கள் ஒரு பொழுதும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

நெஞ்சார்ந்த இரங்கல்கள். துயரத்தில் பங்கு கொள்கிறோம். காயமுற்றோர் விரைந்து நலமுறச் சிவபெருமான் அருள்வாராக. வழிபடுகிறோம், வேண்டுகிறோம். இரங்குகிறோம்.

Violent attacks in Colombo, Negombo and Batticaloa are not acceptable to the Saivaites of Sri Lanka. We condemn these attacks outright.

We Saiva Tamils denounce any attack in any form in places of worship of our Christian brothers to whom we have high respect, regard and unbounded love as fellow citizens of this land. The Easter Friday followed by resurrection Sunday 21.04.2019 are days for prayer worship and meditation. To attack on such pious and holy days to harm hundreds of innocent worshippers and to take the lives of many is condemnable. Saiva Tamil world does not accept such disastrous barbarous acts. 

We Saivites express out heart felt condolences to the bereaved families. We pray for the early recovery of those injured. We pray to Lord Shiva to shower his holiest blessings towards relief at a time of your hour of deep grief.
சிவசேனை மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Siva Senai, Maravanpulavu K. Sachithananthan

Friday, April 12, 2019

அரசியல் அமைப்பில் நுணுக்கமான புரிதல்களில் சிங்களவருக்கு இடையே முரண்பாடுகள்

அரசியல் அமைப்புகளுக்கு மதிக்காத போக்கு தொடர்ச்சியாகச் சிங்களத் தலைமைக்கு இருந்து வந்துள்ளது.

1947 இல் நடைமுறைக்கு வந்த சோல்பரி அரசியல் அமைப்பின் இருபத்தொன்பதாவது பிரிவின் இரண்டாம் பந்தி 29 (2) சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருந்தது.

1948 1949 ஆண்டுகளில் நாடாளுமன்றம் இயற்றிய மலையக மக்களின் குடியுரிமை வாக்குரிமை தொடர்பான சட்டங்கள் சோல்பரி அரசியல் அமைப்புக்கு முற்றிலும் முரணானவை.

இலஞ்ச ஆணையாளர் இரணசிங்கா வழக்கில் பிரிவி கவுன்சிலில் 29 (2) பிரிவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும் மாற்ற முடியாது என 1964இல் அறுதியாகக் கூறியது.

1956 இல் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி சட்டம் அரசியலமைப்பு-29 (2) பிரிவை முழுதாக மீறியது.

சிங்கள ஆட்சி மொழிச் சட்டத்திற்கு எதிராக 1962ல் கோடீஸ்வரன் வழக்காடினார்.

கோடீஸ்வரன் கூறியதை ஏற்ற மாவட்ட நீதிபதி ஓ எல டி கிறெட்சர் 29 (2) பிரிவுக்கு முற்றிலும் முரணானது சிங்கள ஆட்சி மொழி சட்டம் என தீர்ப்புக் கூறினார்.

இலங்கையின் உச்ச நீதிமன்றம் அத்தீர்ப்பை மறுதலித்தது.

கோடீஸ்வரன் லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு விண்ணப்பித்தார்.

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் மறுதலிப்பைப்பிரிவி கவுன்சில் ஏற்க மறுத்தது. மீண்டும் வழக்கை விசாரித்து அரசியல் அமைப்புக்குள் சிங்களம் மட்டும் ஆட்சிமொழிச் சட்டம் செல்லுபடியாகுமா என தீர்க்குமாறு பிரிவி கவுன்சில் 1969இல் இலங்கை உச்ச நீதிமன்றத்துக்கு ஆணையிட்டது.

29 (2) பிரிவை மாற்ற முடியாததால் சிங்களத் தலைமை சோல்பரி அரசியலமைப்பை முற்றுமுழுதாகக் கைவிட நடவடிக்கை எடுத்தது.

கொழும்பில் ரோயல் கல்லூரி நவரங்க அரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபையாக கூடினார்கள்.

சோல்பரி அரசியல் அமைப்பை முழுதாக நீக்கினர். சட்டத் தொடர்ச்சியற்ற அரசியல் அமைப்பாக 1972ல் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினார்கள்.

தமிழர் ஒப்புதலின்றி உருவாக்கினர்.

அதன் பின்னர் அரசியலமைப்பை மீறுவதும் அந்த மீறலை உள்ளடக்கத் திருத்தங்கள் கொண்டு வருவதும் சிங்களத் தலைமைக்கு வழமையாயின.

புகழ் பெற்ற ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சிவநாயகம், அரசியலமைப்பு நாளிதழ் போல வெளிவருகிறது. முதலாவது பதிப்பு இரண்டாவது பதிப்பு என ஏராளமான பதிப்புகளை காண்கிறது என்பார்.

நேற்றைய தினம் இங்கிலாந்தில் நோசிலில் பிரபு கூறியதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

எழுதப்படாத பிரித்தானிய அரசியலமைப்பின் விதிகளை அடிக்கடி மீறிச் செயல்படுவதுதே பிரித்தானிய நாடாளுமன்றம் என அவர் கூறியுள்ளார்.

எல்லா நாடுகளிலும் நாடாளுமன்றங்களும் அரசியல் அமைப்புகளும் ஒருங்கிணைந்து போவதில்லை. மீறல்கள் இயல்பாக நடைபெறுகின்றன.

ஏறத்தாழ 2,200 ஆண்டுகால அநுராதபுரத் தலைமுறை அரசுகள், அரண்மனைக் குத்துவெட்டுகளுக்கு ஆளாகிய அரசுகள். 194 மன்னர்கள் ஆண்டனர். இவர்களுட் பலர் தந்தை மகனைக் கொன்று ஆட்சிக்கு வருவது அரசி அரசனைக் கொன்று ஆட்சிக்கு வருவது மாமன் மச்சான் சேனைத்தலைவன் அமைச்சர் என எவரும் குறைவின்றி மற்றவரைக் கொலை செய்து ஆட்சிக்கு வருவது மகாவம்சம் கூறும் செய்தி.

சிங்கள அரசுகள் என நான் கூறாது அனுராதபுர தலைமுறை அரசு என்று கூறுவதற்கு காரணம் இலங்கையில் சிங்கள மொழியும் இனமும் உருவாகி ஏறத்தாழ 1200 ஆண்டுகளே ஆகின்றன.

1815 வரை சிங்களவரிடை மன்னர் ஆட்சி தொடர்ந்தது.

அரசியல் அமைப்புகளை ஏற்று ஆட்சி அமைக்கும் முறையை சிங்களவருக்கு வழங்கியவர்கள் ஆங்கிலேயர்களே.

ஆங்கிலேயரின் அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளின் வரலாற்றை நோக்குவோர் அவையும் முதலாவது பதிப்பு இரண்டாவது பதிப்பு எனச் சுப்பிரமணியம் சிவநாயகம் சொன்னது போன்று அடிக்கடி மாறிய அரசியல் அமைப்புகள்.

எனவே சோல்பரி அரசியல் அமைப்பைச் சிங்களத் தலைமை மீறுவது ஒன்றும் புதிய செய்தி அல்ல.

1972 குப் பின்னர் அரசியலமைப்புகள் அதற்கான திருத்தங்கள் எத்தனை முறை வந்திருக்கின்றன என்பதை நோக்கும்போது அரசியலமைப்பைச் சிங்களத் தலைமை பெரிதாக கருதுவதில்லை எனத் தெரியவரும்.

சிங்கள மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தேசிய எழுச்சி முதன்மையாக தெரிகிறதே அன்றி அரசியலமைப்பு முதன்மையாகத் தெரிவதில்லை.

மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்க கூட்டாட்சியில் வந்த அரசியலமைப்புத் திருத்தங்கள் சிங்களத் தேசிய எழுச்சிக்கு ஊறாக அமையுமானால் அதை அவர்கள் தெரிந்து கொண்டே மீறுவார்கள். இது புதுமை அல்ல. 

400 ஆண்டுகளாக மன்னராட்சி அற்ற தமிழ் மக்கள் ஆங்கிலேயரின் அரசியல் அமைப்புகள் சிங்கள மேலாதிக்கத்திற்கு வழிவகுக்கும் என முழுமையாக நம்பினார்கள்.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் தேர்தல் புறக்கணிப்பு ஆங்கிலேயர் அரசியலமைப்பை ஏற்கமாட்டோம் என்பதற்கான தொடக்கப் போராட்டம்.

அரசியல் அமைப்புக்கு எதிரான போராட்டங்கள் தமிழர்களுக்கு தொடர்கதை. 

சோல்பரி அரசியலமைப்பை ஏற்காமல் ஐம்பதுக்கு ஐம்பது கோரினர். கூட்டாட்சி கோரினர்.

1972ஆம் அரசியலமைப்பைத் தந்தை செல்வநாயகம் யாழ்ப்பாணத்தில் வைத்து எரித்தார். 

சிங்களவர்களோடு சேர்ந்து ஒரே அரசுக்குள் ஆட்சி அமைக்க முடியாது என 1972 முதலாகக் கூறத் தொடங்கியவர் 1976இல் தீர்மானமாகக் கூறினார்.

தமிழர் இதுவரை அரசியல் அமைப்புகளை ஏற்கவே இல்லை.

ஏற்காத அரசியல் அமைப்புக்குள் நுணுக்கமான சில புரிதல்கள். ஒரு சாரார் புரிந்துகொண்டவாறு இன்னுமொரு சாரார் புரிந்துகொள்ளவில்லை.

 தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்.

அரசியல் அமைப்பை முறையாகச் சிங்களவர் கைக்கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள்.

எந்த அரசியலமைப்பை எந்தக் காலத்தில் சிங்களவர்கள் மீறவில்லை. இப்பொழுது கூறுகிறார்களே என தமிழர்கள் புலம்புவதில் பொருளில்லை.

மதிப்புடன் வாழ வேண்டும்
உரிமையுடன் வாழவேண்டும் 
ஆட்சியில் முழுமையாகப் பங்கு கொள்ள வேண்டும் 
தமிழர் மரபுவழித் தாயகத்தில் தமிழர் ஆட்சி 

சிங்களவரின் மரபு வழித் தாயகத்தில் சிங்களவர் ஆடசி.

இருவரும் இணைந்து நடுவில் கூட்டாட்சி யைக் காணும் அரசியல் அமைப்பு.

 1948ல் இருந்து நாம் கேட்டு வரும் அரசியலமைப்பு இதுவே.

அதற்கேற்ற அரசியலமைப்பு வேண்டும் இதுதானே தமிழர்களின் கோரிக்கை.

ஆங்கிலேயர் காலத்திலிருந்ததே சிங்கள தேசியத்தை இலங்கையின் ஒரே தேசியமாக மாற்றக்கூடிய அரசியலமைப்பை சிங்களத் தலைமைகள் முயன்று வருகின்றன.

அத்தகைய முயற்சியில் இன்றுள்ள அரசியல் அமைப்பில் நுணுக்கமான புரிதல்களில் சிங்களவருக்கு இடையே முரண்பாடுகள் வரும்போது அங்கு என்ன வேலை தமிழர்களுக்கு இந்த புரிதல்களுள் இந்தப் புரிதல் சரியானது என்பதை தீர்மானிப்பது தமிழர்களின் பணியா? தமிழர்களின் எதிர்காலத்தை செம்மையாக்கும் பணியா? தீர்மானிக்கும் பணியா?

புரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு நன்றியுடையேன்.