22.10.2013
சோன் ஒவ் ஆர்க் ( Joan of Arc )அம்மையார் வாழ்ந்த மாளிகை கண்டேன்
ஒளிபெருக்கும் விழிகளுடன்
கூரிய வாள் தாங்கிக்
குதிரைமேலிவர்ந்து
வீரமும் வெற்றியும் விளையும் மண்ணின் மகளாக
அழகு பெருக்கும் சிலையாக அவரைக் கண்டு நானும்
வீரச் செறிவுற்றேன்.
அவர் கடந்த ஆற்றைக் கண்டேன்.
அவர் முற்றுகையிட்ட கோட்டை கண்டேன்.
ஆங்கிலேயரிடம் போரில் தோற்றுவிட்டதால் துவண்டுவிடாமல்
பிரஞ்சுத் தேசியம் விழிப்புற்று மீண்டும் எழுந்தது.
இறைவனின் கொடை 16 வயதில் தேசியம் மீடகப் புறப்பட்ட சோன் ஒவ் ஆர்க் அம்மை.
இரண்டாம் உலகப் போரில் சிதைந்தவை மீண்டும் எழுந்ததைக் கண்டேன்.
அழிப்பதும் அமைப்பதுமான ஐரோப்பிய வரலாறு.
உங்கள் வீட்டுக்கு நடந்து வந்தேன்.
தென்றலை ஓரிலியன்சில் கண்டேன்.
தெவிட்டாத தேனைப் பருகினேன்.
பாசத்தைப் பெருக்கும் பண்பாளரைக் கண்டேன்.
பரிவுடன் பேணிய மாலதி அம்மையாரின் விருந்தோம்பலில் திளைத்தேன்.
காட்சிகளால் கருத்துத் தொகுப்பால் கரிபியனைக் கண்டேன்.
குவாடுலூப்பிலும் மார்த்தினிக்கிலும் தமிழரைக் கண்டேன்.
உங்கள் பணிகளைப் பட்டியலாக்கிப் பார்த்தேன்.
தனிநாயகத்தார் வழி கரிபியனில் உங்கள் பணி.
அங்கு மாநர மேயரின் பதக்கம் தந்த பாராட்டு.
உங்களுக்குப் பரந்த தொடர்புகள்.
பிரஞ்சுத் தமிழர் தொடர்புகள்.
அவர்கள் தமிழராகத் தொடர
திருமுறை பேணும் சைவராகத் தொடர என்ன செய்யலாம்
பேசினோம் பேசினோம் தெவிட்டாத உரையாடல்.
புதுச்சேரி கோபாலகிருட்டனனார்
திருவாசகப் பிரஞ்சு மொழிபெயர்ப்புக்கு உதவ
வழிகாட்டினீர்கள் நன்றி.
காலம் கரைந்ததும் தெரியவில்லை.
உங்களின் கருத்துப் புதையலின் ஆழமும் தெரியவில்லை.
தொடர்வண்டிக்குள் நீங்கள் என்னைக் கடைசி நிமிடத்தில் திணித்திராவிட்டால்
மேலும் ஒரு மணி நேரம் உங்கள் புலமை மழையில் திளைத்திருப்பேன்.
ஓர்லியன்சலிருந்து தொடர் வண்டி புறப்பட்டிருக்கக்கூடாதா என்ற மலைப்புடன்
ஒருமணி நேரத்தில் 150 கிமீ கடந்தேன், பாரிசு நகரம் திரும்பினேன்.
நன்றி
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

No comments:
Post a Comment