Friday, February 21, 2025

சைவக் குருக்களை ல் தாக்கினர்

 ஊடகத்தாருக்கு


மார்கழி 23 செவ்வாய்க்கிழமை (7 12 2024)


மறவன்புலவு க சச்சிதானந்தன்

சிவ சேனை எழுதுகிறேன்.


சைவக் குருக்களைத் தாக்கிய கிறித்தவக் கும்பல்.


கிளிநொச்சி, கனகாம்பிகைக் குளம், 35 வயதான கிறிஸ்தோத்தரம் அகிலநாதன், 


அதே கனகாம்பிகைக் குளத்தைச் சேர்ந்த சைவக் குருக்கள் 40 வயதான சிவஸ்ரீ சிவகுமாரன் குருக்களைத் தன் தலைக்காப்பு மூடியால் தாக்கினார். 


குருக்களின் உருத்திராக்க மாலைகளை அறுத்தார். தங்கச் சங்கிலியை அறுத்தார். புனித அணிகளையும் அடாத்தாக இழுத்துப் பறித்தார். 


கையிலும் தலையிலும் காயம் ஏற்படுத்தினார்.


காயம் அடைந்த சைவக் குருக்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் நாலாவது மருத்துவ மண்டலத்தில் கடும் காயங்களுடன் மருத்துவம் பெற்று வருகிறார்.


கனகாம்பிகைக் குளத்தில் அமைதியாக வாழ்ந்த, மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்த சைவ கிறித்துவ மக்களிடையே தேவையற்ற மோதலையும் எதிர்ப்புணர்வையும் அகிலநாதன் உருவாக்கியுள்ளார்.


ICCPR Act Section 3.1 விதிக்கமைய அகிலநாதன் கனகாம்பிகை குளத்தில் மதவெறுப்பை தூண்டி உள்ளார் வன்முறையைக் கையில் எடுத்துள்ளார். சட்டத்தை மீறியுள்ளார்.


அப்பாவியான எதிர்க்கத் தெரியாத சைவ நெறிகளை பின்பற்றுவதால் திருப்பித் தாக்கத் தெரியாத சைவக் குருக்களைத் தலைக்காப்பு மூடியால் அடித்துத் துன்புறுத்திப் புனித சின்னங்களையும் சங்கிலிகளைகளையும் அறுத்துக் காயங்களை கடுமையாக்கி மருத்துவமனையில் சேருமளவுக்குக் வன்முறையை பயன்படுத்தியதால் உடனடியாக ICCPR Section 3 இரண்டாவது மூன்றாவது நாலாவது விதிகளுக்கு அமையத் தளையிட்டுப் பிணையில் வெளிவரவும் முடியாதவாறு நீதிமன்றத்தில் முன்னிலப் படுத்துமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்.


இந்த நிகழ்ச்சியின் விளைவாகக் கனகாம்பிகைக் குளம் சார் பகுதியில் கலவரச் சூழ்நிலை ஏற்படுகின்ற நிலையில் காவல்துறை போதுமான பாதுகாப்பு அளித்து சைவ சமய மக்களைக் காத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

No comments: