Sunday, January 15, 2023

Rejoinder to Priest Sakthivel

 Scroll down for the English version

ஊடகத்தாருக்கு
மார்கழி 28, (14 1 2023) சனிக்கிழமை

மறவன்புலவு க சச்சிதானந்தன் எழுதுகிறேன்
சிவ சேனை

சிவன் கோயில் நிகழ்ச்சிக்கு 
சைவ நிகழ்ச்சிக்கு 
யார் வரலாம் 
யார் வரக்கூடாது 
என்பதைச் சைவர்களே தீர்மானிப்பார்கள். 
கத்தோலிக்க பாதிரியாரோ கிறித்தவப் பாதிரியாரோ அல்ல.

நல்லூர் சிவன் கோயிலிலும் அடுத்துள்ள சைவ மண்டபத்திலும் நடக்கின்ற சூரியனுக்கு நன்றி சொல்கின்ற பொங்கல் விழாவில் இலங்கைக் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

சூரியனை வழிபடுகின்றவர்கள் சாத்தானை வழிபடுகின்றார்கள் என்கின்ற கத்தோலிக்க மற்றும் கிறித்தவப் பாதிரிமார்கள்  சைவர்களின் பொங்கல் விழாவில் யார் கலந்து கொள்ளலாம் கலந்து கொள்ளக் கூடாது என்று தீர்மானிக்க முடியாது.

சிவன் கோயிலில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் கால் வைக்கக் கூடாது என்று கூறும் உரிமை கத்தோலிக்க மற்றும் கிறித்தவப் பாதிரியார்களுக்குக் கிடையவே கிடையாது.

மடுமாதா கோவிலுக்கு குடியரசுத் தலைவர் வந்த பொழுது சைவர்கள் எதிர்க்கவில்லை.

மன்னார் ஆயர் அண்மையில் குடியரசுத் தலைவரைச் சந்திக்கச் சென்ற பொழுது சைவர்கள் எதிர்க்கவில்லை.

சைவ விழாவிற்கு வருகின்ற குடியரசுத் தலைவரைக் கத்தோலிக்க பாதிரியார் "கால் வைக்கக் கூடாது" என்று கூறுகின்ற கொடுமையை இலங்கையிலேயே பார்க்க முடியும்.

கத்தோலிக்கரும் கிறித்தவரும் குடியரசுத் தலைவரோடு நல்லிணக்கமாக அன்பாக உறவாடி வருகிறார்கள்.

சிவன் கோயிலுக்கு வருகிறார் 
சைவ மண்டபத்திற்கு வருகிறார் 
சைவக் கடவுளான சூரியனைப் போற்றுகின்ற விழாவில் கலந்து கொள்கிறார் 
சூரியனுக்கு நன்றி சொல்கின்ற விழாவில் கலந்து கொள்கின்றார் 
என்றதுமே கத்தோலிக்கப் பாதிரியார் போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் பரங்கிகளின் வழிவழிக் கொள்கையை முன்னெடுக்கிறார். 

போர்த்துக்கேயர் எப்பொழுதோ போய்விட்டார்கள் 
ஒல்லாந்தர் எப்பொழுதோ போய்விட்டார்கள் 
ஆங்கிலேயர் எப்பொழுது போய்விட்டார்கள்.

இலங்கை சிவ பூமி. சைவர்களின் விழாக்களில் யார் கலந்து கொள்ளலாம் கலந்து கொள்ளக் கூடாது என்பதைச் சைவர்களே தீர்மானிக்க வேண்டும்.

சைவ விழாவுக்கு யார் வரலாம் யார் வரக்கூடாது என்பதைச் சூரியன் வழிபாடு சாத்தான் வழிபாடு என்கின்ற கத்தோலிக்கப் பாதிரியாரோ கிறித்துவப் பாதிரியாரோ தீர்மானிக்க முடியாது.

அவ்வாறு தீர்மானிக்க முயன்றால் சைவர்கள் கைகட்டி வாய்பொத்திப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். 

சிவ சேனையில் உள்ள நாம் அவ்வாறு கூறிய கத்தோலிக்கப் பாதிரியாரை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Press release

From
Maravanpulavu K Sachithananthan
Siva Senai

We Saivaite  Hindus condemn the Catholic priest who defies all norms of civility to threaten a devotee wanting to participate in a festival in a Sivan Kovil at Jaffna.

We in the Shiva Senai reject the call by a Catholic priest or a Christian priest. He or she cannot decide, who should participate in a festival at a Shivan Kovil.

Your Bishop Mannar recently visited the President's office and had a very cordial meeting. When the president visited the Madhu church in Mannar district Hindus never objected.

In spite of the 400 years of Portuguese Dutch and British rule where Thai Pongal was imposed as a social taboo among Tamils, we Hindus steadfastly maintained this (more than the 10,000-year-old) tradition of thanking the Sun God on Thai Pongal.

For Abrahamists, the Sun god is Satan. Shiva temple is a temple of Satan. To these Abrahamists, it is a Satanic exercise for anyone to participate in the Thanksgiving Pongal festival.

Following this aggressive Portuguese Dutch and British tradition, you now object to the President's participation in the Hindu festival.

We Hindus shall decide on that matter. You Christian priest - keep your hands off at our holy traditions, hands off our Temple festivals, and hands off at our celebrations.

We will not sit quietly,  keep our hands tied and mouths shut while you from an intruding alien culture, try to decide what is good for Hindus.

No comments: