Wednesday, December 14, 2022

Ship to Chidambaram 2022 Sumanapala

காங்கேயன்துறை-புதுச்சேரிப் பயணிகள் கப்பல்

அனுப்புநர்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை.

பெறுநர்
திரு எச். சுமணபாலா அவர்கள்
மேனாள் மாவட்டச் செயலர், களுத்துறை.
மேனாள் ஒருங்கிணைப்பாளர், வட மாகாண ஆளுநர்.

பேரன்புடையீர்,

வணக்கம்.
வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.

வியாழக்கிழமை (2022 திசம்பர் 01) காலை 11 மணிக்குக் கொழும்பு, கோட்டையில், கப்பல் துறை அமைச்சின் செயலாளர் திரு. உரூவன்சந்திரா அவர்களை நாம் இருவரும் சந்தித்தோம்.

காங்கேயன்துறையில் இருந்து காரைக்காலுக்கு மார்கழித் திருவாதிரையை ஒட்டி இலங்கையின் சைவ சமய வழிபடு பயணிகளுக்குக் கப்பல் விடுமாறு கேட்டோம்.

இக்கப்பல் சேவை தொடர்பாக இலங்கை அமைச்சரவையின் ஒப்புதலை யூன் 15இலேயே பெற்ற செய்தியையும் அவருக்குக் காட்டினோம்.

காங்கேயன்துறைத் துறைமுகத்தில் இறங்கு / ஏறு துறையில் பயணிகளை ஏற்ற / இறக்க அரசு நடைமுறைகளுக்குரிய கட்டடங்கள் இல்லை, உட்கட்டமைப்புகள் இல்லை, எனச் செயலாளர் தெரிவித்தார்.

இவற்றை அமைத்து முடிக்க 8 மாதங்கள் தொடக்கம் ஓராண்டு காலம் வரை நீடிக்கலாம். அதற்குப் பின்பே பயணிக்கக் கப்பல் தொடங்கலாம் எனச் செயலாளர் எம்மிடம் கூறினார்.

வழிபடு பயணிகளுக்காக மார்கழி 2016இல் இக்கப்பல் பயணத்தைத் தொடங்குமாறு வடமாகாண ஆளுநர் மேதகு இரெஜினால்டு கூரே அவர்களிடம் நான் கொடுத்த விண்ணப்பக் கடிதப் படியைச் செயலாளரிடம் காட்டினேன்.

இக்கப்பல் பயணத்தை நடத்துவதற்குரிய கப்பல் தொடர்பான செலவினங்கள், வரவு-செலவுத் திட்டம் என்பன கொண்ட, கொழும்பு ஏலிசு (Hayleys Ltd) நிறுவனத்தார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தந்த கடிதப் படியையும் அவரிடம் காட்டினேன்.

அவர் மனத்தில் மாற்றம் தெரிந்தது. கப்பல் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் முளைவிட்டது. ஏலிசு நிறுவனத்தாருடன் பேசினார். அவர்கள் ஏற்ற பதிலைச் சொல்லவில்லைப் போலும்.

வேறொரு கப்பல் பயண முகவரிடம் பேசினார். இப் பயணம் தொடர்பாக அம்முகவர் ஏற்கனவே பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டோம்.

பேசிக் கொண்டிருக்கையில் கைப்பேசியின் ஒலிபெருக்கியை இயக்கினார். எங்களையும் உரையாடலில் கலந்து கொள்ளச் சொன்னார்.

இலங்கைக் கப்பல் துறை அமைச்சின் ஒப்புதல் பெற்றால் விரைவில் கப்பலை இயக்கலாம் என அம்முகவர் சொன்னார். நாளை வாருங்கள், கப்பல் துறை அமைச்சின் ஒப்புதலைத் தருகிறேன், எனச் செயலாளர் அவரிடம் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

அக்கப்பல் முகவரி பெயர் திரு. இராசன் என்றும் அவருடன் நாம் பேச வேண்டும் என்றும் தொலைபேசித் தொடர்பு எண்ணைச் செயலாளர் நம்மிடம் தந்தார்.

தொடர்ந்து நான் இரண்டு முறை திரு. இராசன் அவர்களைக் கொழும்பில் நேரில் சந்தித்தேன். கப்பல் துறை அமைச்சின் ஒப்புதலைப் பெற்று விட்டதாகத் திரு. இராசன் என்னிடம் தெரிவித்தார்.

மார்கழித் திருவாதிரை நாளுக்கு வழிபடு பயணிகளை ஏற்றி செல்லுங்கள் எனத் திரு. இராசனிடம் கேட்டேன். பயண முகவர் ஒருவரையும் அவருக்கு அறிமுகித்தேன்.

திசம்பர் 28ஆம் தேதி கப்பல் புறப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகத் திரு. இராசன் என்னிடம் தெரிவித்தார். எனினும் கடல் கொந்தளிப்பைக் கருத்தில் கொண்ட கடற்படையினர், சனவரி நடுப்பகுதிவரை பின்போடுமாறு கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கரி இறக்குமதியால் மாசுற்ற காரைக்கால் துறைமுகம், துறைமுகத்திலிருந்து காரைக்கால் நகரத்திற்குப் போவதற்குரிய தொலைவு, இரண்டையும் கருத்தில் கொண்டு புதுச்சேரி துறைமுகத்திற்குக் காங்கேயன்துறையில் இருந்து போகக்கூடிய வாய்ப்புகளே உண்டு எனவும் திரு. இராசன் என்னிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மார்கழித் திருவாதிரைக்குச் சைவ வழிபடு பயணிகள் போகவேண்டுமே என அவரிடம் விண்ணப்பித்தேன்.

நான் யாழ்ப்பாணம் வந்த பின்பும் நீங்கள் திரு. இராசனுடன் தொடர்பாக உள்ளீர்கள். நேற்று (13.12.2022) திரு. இராசன் அவர்கள் மாண்புமிகு கப்பல்துறை அமைச்சரைச் சந்திக்கப் போவதாக என்னிடம் சொன்னீர்கள்.

2023 சனவரி நடுப்பகுதியில் இருந்து காங்கேயன்துறைக்கும் புதுச்சேரிக்கும் இடையே பயணிகள் கப்பலில் பயணிக்கலாம் என மாண்புமிகு கப்பல் துறை அமைச்சர் கூறியதாக இன்று 14.12 காலை நாளிதழ்களில் வந்த செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. மீண்டும் உங்களை வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்.

பயணி ஒருவர் 60 அமெரிக்க வெள்ளி (ரூ. 21,000 இலங்கை ரூபாய்) கொடுத்து, 100 கிலோ பொதிகளுடன் பயணிக்க வாய்ப்புள்ளதாக இன்று கப்பல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வறுமைக்கோட்டை ஒட்டி  வாழும் சைவ வழிபடு பயணிகளின் ஆன்ம ஈடேற்றப் பயணம் நடைமுறைக்கு வரும் வாய்ப்பு மிகமிகப் பெருகியுள்ளமை, சிவபெருமான் திருவருளே.

திருவருள் துணையுடன் 2010இல் இம்முயற்சியைத் தொடங்கினேன். மாண்புமிகு அமைச்சர் தேவானந்தாவை அணுகினேன், மாண்புமிகு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரரை அணுகினேன். பிரதமர் மாண்புமிகு தி எம் செயரத்தினாவுக்குக் கடிதம் எழுதினார்.

மீண்டும் சிவபெருமான் திருவருளால் 2016 மார்கழியில் நான் எடுத்த முயற்சி கைகூடும் நிலைக்கு வரும்போலத் தெரிகிறது.

இலங்கையில் இம்முயற்சிக்கு ஆதரவு தந்தோர்:
1.1 வடமாகாண  ஆளுநர் மேதகு இரெஜினால்டு கூரே
1.2 இலங்கைக் குடியரசுத் தலைவரின் செயலாளர் திரு ஆசுடின் பெர்ணாந்து
1.3 மாண்புமிகு அமைச்சர் வி எம் சுவாமிநாதன்
1.4 யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதர் திரு நடராசன் மற்றும் அலுவலகத்தார்
1.5 வட மாகாண ஆளுநரின் செயலர் திரு. இல. இளங்கோவன், மற்றும் அலுவலகத்தார்
1.6 வட மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பாளர் திரு. எச். சுமணபாலா
1.7 இந்து கலாச்சாரத் திணைக்கள இயக்குநர், திரு. உமா மகேசுவரன், மற்றும் அலுவலகத்தார்
1.8 ஊடகவியலாளர் திரு குகநாதன், தான் தொலைக்காட்சி
1.9 வட மாகாணத்தின் கடற்படை அலுவலகத்தார்
1.10 இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத் தலைவர் மற்றும் அலுவலர்கள்
1.11 யாழ்ப்பாணத்தில் உள்ள சைவ சமய அமைப்புகள்

இந்தியாவில் இம்முயற்சிக்கு ஆதரவு தந்தோர்:
2.1 இந்தியப் பிரதமர் அலுவலகம்
2.2 இந்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு இராசநாதர் சிங்கர்
2.3 இந்திய வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு சுசுமா சுவராசர்
2.4 இந்திய கப்பல் துறை அமைச்சர் மாண்புமிகு நிதின் கட்காரி
2.5 இந்திய கப்பல் துறை இணை அமைச்சர் மாண்புமிகு பொன் இராதாகிருட்டிணன்
2.6 தமிழக அரசின் துணை முதலமைச்சர் மாண்புமிகு ஓ பன்னீர்செல்வம்
2.7 இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திரு இல கணேசன்
2.8 இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஊடகவியலாளர், வங்காளத்துத் திரு
சுவப்பனதாசர் குப்தா
2.9 இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திரு வா மைத்திரேயன்
2.10 இந்தியப் பிரதமரின் ஆலோசகர் திரு குருமூர்த்தி
2.11 இந்திய ஆட்சிப் பணியர் திரு விசய இராம்மோகன்
2.12 இந்து மக்கள் கட்சித் தலைவர் திரு அருச்சுனர் சம்பத்து
2.13 தில்லி ஒரே தேசம் அமைப்பு திரு இராமகிருட்டிணன்
2.14 தில்லி இந்துப் போராட்ட அமைப்பின் தலைவர் திரு அருண் உபாத்தியாயர்
2.15 கொல்கத்தா பாரதிய சனதாக் கட்சி, திரு தேவ தத்தாமாசி
2.16 தில்லி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் திரு. இராம் சங்கர் இராசா
2.17 சென்னை கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன்

வழிபடு பயணிகள் கப்பலாக 2010இல் நான் தொடங்கிய இம்முயற்சி, படிப்படியாக விரிவடைந்து, இந்திய சாகர் (கடல்) மாலைத் திட்டத்துள் ஒன்றாகியது. புதுச்சேரி அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக, இக்கப்பல் பயணப் பணிகளுக்காக ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குகிறது. காரைக்கால் துறைமுக வாரியம் இப்பயணத்துக்காக முகவர்களிடம் ஒப்பந்தம் கோரி உள்ளது. இலங்கைப் பொருளாதார நெருக்கடி தொடர்பாக, இந்தியச் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தல் என இத்திட்டம் பல்முனைப் பரிணாமங்களைக் கொண்டு வளர்கிறது.

காங்கேயன்துறையில் இருந்து புதுச்சேரிக்குப் பயணிகள் கப்பலை இயக்க வேண்டும் என்று மேதகு ஆளுநர் கூரே அவர்களுக்கு இருந்த வற்றாத பற்று, நெஞ்சார்ந்த உணர்வு, ஆழமான ஈடுபாடு யாவற்றையும் அறிவேன்.

அவருடைய உணர்வுக்குச் செயல்வடிவம் கொடுத்த உங்களுக்கு இலங்கைச் சைவச் சமூகம் என்றும் கடப்பாடுடையது.

புத்த பெருமானின் போதனைகளை ஏற்று நடக்கின்ற நீங்கள், ஆன்மீக சாதனைக்காகப் பிள்ளையாரையும் முருகனையும் மாயவனையும் வழிபடுகின்ற பின்புலத்தைச் சேர்ந்தவர். இதை நீங்கள் அடிக்கடி என்னிடம் கூறுவீர்கள்.

பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

நன்றி
அன்புடன்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    

PILGRIMAGE BY SHIP TO INDIA

From
Maravanpulavu K Sachithananthan

To
Mr. Sumanapala
Formerly District Secretary, Kaluthurai
and formerly coordinator, Hon Governor Northern province.

My dear Sir

Congratulations and greetings.

On 1st December 2022 at 11 o'clock, we both met the Secretary, Ministry
of Shipping, Sri Lanka at Fort Colombo.

When we requested him to initiate the shipping service for the benefit of the Hindu pilgrims during December 2022 / January 2023, he placed before us the prevailing obstacles to the shipping program.

Kannkeyanthurai Pier had no facilities for receiving/departing passengers, he said. The process of constructing the facilities is underway, he said. He continued to say that it will take about 8 to 9 months before the work could be completed.

We told him of my request in 2016 to the Honourable Governor of the Northern province Mr. Reginald Cooray. We showed him a copy of the letter I wrote then. We told him about the forthcoming festival at Chidambaram by end of December.

We asked him about the possibility of helping the Hindu pilgrims below the poverty line to reach Chidambaram to fulfill their vows.

After that, I showed him a copy of the (three years older) quotation from M/s Haley's Ltd to operate the shipping service.

He was kind enough to contact Haleys and thereafter he contacted another shipping operator called Mr. Rajan. He was kind enough to allow us to hear the conversation on the speakerphone and allowed us to participate in the discussion.

That was a turning point. The Secretary assured Mr. Rajan of the approval of the Ministry of Shipping for the service. He asked him to call on him the next day. He also suggested that we meet Mr. Rajan.

After that, I had very fruitful and constructive meetings with Mr. Rajan twice. Mr. Rajan assured me that the shipping service could start by the end of December. He collected the approval from the Ministry the next day, he told me.

You were in touch with Mr. Rajan who has been appraising you of the day-to-day progress. It appears that he met the Hon. Minister yesterday 13th December 2022.

Today's (14th December) news from the Honourable Minister of Shipping, Sri Lanka is another step forward in our joint effort towards connecting people across the Palk Straits. 

When the Honourable Governor Mr. Reginald Cooray responded positively in December 2016 to my request to enable Hindu pilgrimages to Chidambaram in Tamil Nādu, you were with him in implementing his decision.

You took me to many officers in Colombo and introduced me to crucial people in the relevant departments and with your kind and courteous approach, facilitated the procedural progress.

You attended meetings on behalf of the Honourable Governor in the Ministry of Internal affairs, the Ministry of External Affairs, the Ministry of Defence, and the Ministry of Shipping.

If the Honourable Governor Reginald Cooray was very sincere and dedicated to providing pilgrimage facilities to the Hindus in Sri Lanka, it was you with a strong faith in Lord Vinayga, Lord Katragama, and Lord Mayan, who made crossing any red tape possible.

We, Hindus in Sri Lanka a grateful for the ground-breaking by the Honourable Governor Reginald Cooray and his able coordinator, yourself, Mr. Sumanapala. Both of you laid a strong foundation.

Today is another day of happiness and celebration for the Hindus in Sri Lanka. A faith-based society, a belief-based community with the singular goal of spiritual emancipation, Sri Lankan Hindus travel to holy temples in India to fulfill their vows. It is my hope that within the next 30 days, the shipping service between Kankeyanthurai and Puducherry will begin as announced by the Honourable Minister of Shipping.

It is my duty to place on record a list of those who encouraged me, helped me and supported me in furthering the progress of this project since 2010.

I approached Honourable Minister Mr. Devanantha in 2010. Thereafter in 2013, I wrote to Honourable Minister Mr. Vasudeva Nanayakkara, who promptly wrote to Honourable Prime Minister Mr. D. M. Jayaratne. 

However, my request of 2016 to the Honourable Governor, Mr. Reginald Cooray in 2016 December at a public meeting in Nallur, Jaffna set the ball rolling.

Those in Sri Lanka:

1.1 Honourable Governor, Northern Province Mr. Reginald Cooray

1.2 Secretary to His Excellency the President Mr. Austin Fernando

1.3 Honourable Minister Mr. V. M. Swaminathan

1.4 Consul General Mr. Natarajan and the officials at the Indian Consulate, Jaffna

1.5 Secretary to Honourable Governor Northern Province Mr. L.Ilangovan and his officials

1.6 Coordinator to Honourable Governor, Northern Province Mr. H. Sumanapala

1.7 Director, Hindu Cultural Department Mr. Uma Maheswaran and his officials

1.8 Mr. S. Kuhanathan and of DAN TV

1.9 Northern Province Naval Headquarters at Kankeyanthurai

1.10 Chairman and officials of the Ceylon Shipping Corporation

1.11 Leaders of Saiva Organisations in Jaffna.

Those in India:

2.1 Honourable Prime Minister's Office Delhi

2.2 Honourable Minister for Home Affairs Mr. Rajnath Singh

2.3 Honourable Minister for External Affairs Mrs. Susuma Swaraj

2.4 Honourable Minister for Shipping Mr. Nithin Gadkari

2.5 Honourable Minister of State for Shipping Mr. Pon. Rathakrishnan

2.6 Honourable Deputy Chief Minister, Tamilnadu Mr. O. Panneerselvam

2.7 Honourable Member of Parliament, Rajya Sabha Mr. L. Ganesan

2.8 Honourable Member of Parliament, Rajya Sabha Mr. Swarna Das Gupta

2.9 Honourable Member of Parliament, Rajya Sabha Dr. V. Maithireyan

2.10 Advisor to Prime Minister of India Mr. Grurumoorthy

2.11 Mr. Vijay Rammohan, I. A. S. Delhi

2.12 Hindu Makkal Kadchi leader Mr. Arjuna Sampath

2.13 Mr. Ramakrishnan, Ore Desam, Delhi

2.14 Hindu Struggle Committee leader Mr. Arun Upathyaya

2.15 Hindu Activist and Barthiya Janantha Party leader, Kolkata, Mr. Dev Dutta Maji

2.16 Supreme Court Advocate, Delhi, Mr. Ram Shankar Raja

2.17 Chennai, Kalaimaamani Sasirekha Balasubramanian

If it was a dream that Sivaperuman gave me, it was you who brought life and steam into its implementation. Hindus remain ever grateful to Hon Governor Mr. Reginald Cooray and his able coordinator Mr. Sumanapala.

Thank you,

Yours sincerely,

Maravanpulavu K. Sachithananthan

No comments: