மறவன்புலவு க சச்சிதானந்தன் எழுதுகிறேன்
இதே வெள்ளிக்கிழமை
இதே கார்த்திகை மிருகசீரிட நட்சத்திரம்
இதே புலர் காலை 4 மணி
29,845 நாள்களுக்கு முன்பு
1020 முழு நிலவுகளுக்கு முன்பு
81 ஆண்டுகளுக்கு முன்பு
நான் பிறந்தேன்.
உடல் ஊனமின்றி
உள்ளம் ஊனமின்றி
நெடுநோய் எதுவும் இன்றி
கடுநோய் எதுவும் இன்றி
அன்புத் தேடலும்
அறன் தேடலும்
அருள் தேடலும்
அறிவுத் தேடலும்
புலமைப் தேடலும்
ஆற்றல் தேடலுமாய்
81 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்.
அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசப் பெருமான் திருவருள்
அருள்மிகு வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் திருவருள்
என் பெற்றோர் எனக்குத் தந்த மரபணுக்கள்
81 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்.
எனக்கு எவ்விதக் குறையும் இல்லை.
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன்
எனக்கு மிக நிறைவான வாழ்க்கை.
சிவபெருமான் திருவருளைப் போற்றுகிறேன்
From Maravanpulavu K Sachithananthan
Today is Friday, 29845 days ago the same Friday.
Today is in the month of Kaarthikai. 29845 days ago, during the very same month of Kaarthikai.
Today is Mirukaseeridam natchthitam. 29845 days ago, on the very same Mirugaseeridam.
1020 full moons ago
81 years ago
I was born.
Without physical mental disabilities
Without serious illnesses
Yearning for love
Yearning for dharma
Yearning for divine grace
Yearning for knowledge
Yearning for intellect
Yearning for efficiency
I lived through 81 years.
By the grace of Arulmiku Sivakami and Natarajar
By the grace of Arulmiku Vallaikkulam Veerakathy Pillaiyaar
Carriying the eternal DNA handed over to me by my parents
I lived through 81 years.
In fullness
Without any regrets
With your eternal blessings
I lived through 81 years.
Hailing the divine grace of Sivaperuman.
A verse flower
To Dr Sacchithananthan
( English translation by Prof. S. A. Sankaranarayanan)
Karthikai born is He
Under the asterism of Mrigasirus is He
Soaring as lambent flame is His Glory
Lit the Lives of several devout
with great delight had He
Far famed Wise Sage is He
in our world of piety
Saivaite Tamil is His relish
In accord with WORD
He leads the flocks
His valiancy is His sole ornament
Any place He goes to is Veerattam
By Miraculous Grace of Aran ,
whatever he touches
turns golden noble
To dispel dark He in rage enlightened
For Supreme Siva Consciousness, He configured SivaSenai!
Hail His Weal,
Hail His Exclusiveness
Word-blossoms I offer Him
Praise Him Bow to Him
Sweet B'day Greets to Sacchi Ayya.
கார்த்திகையில் பிறந்தார் ஒளிப்பிழம்பாய் உயர்ந்தார்
பற்பலரின் வாழ்வில் விளக்கேற்றி மகிழ்ந்தார்
பார் புகழும் அறிஞர் சைவத் தமிழ்ச் சுவைஞர்
நிற்பவர் எந்நாளும் சொற்படியே காணும்
போர்க்குணமே அணியாம் கொள்கைப் பிடிப்பு
பணியாம்
அற்புதன் அரன் அருளால் இவர் தொட்டதெல்லாம் துலங்கும்
காரிருளைப் போக்க வீறு கொண்டு வந்தார்
சிற்பரன் சிவன் பணிக்கே சிவசேனை கொண்டு வந்தார்
சீருடனே வாழ்க சிறப்புடனே வாழ்க
சொற்பலவால் போற்றி வாழ்த்தி வணங்குகின்றேன்.
இன்று, கார்த்திகை மிருகசீரிடத்தில் பிறந்தநாள் காணும் சச்சி ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வணக்கங்கள்.
உ
செந்தண்மை அந்தணனே செய்நல் வினையால்
சீர்மிகுயாழ்ப் பாணத்தில் தேசுடன் வாழ்ந்து
அந்திவண்ணன் திருவருளால் ஆயிரம் பிறைதனை
ஐயநீயும் கண்டுவந்து அறிவுச் சுடராய்
விந்தைமிகு சிவப்பணியும் காலம் போற்ற
வேட்கையொடு தமிழ்பணியும் இயற்றி இன்று
பந்தமெலாம் உனைவாழ்த்த எண்பத் தோராம்
பண்பாளா பிறந்ததினம் கொண்டா டவாழி!
பொங்கிவரும் சிவப்பொலிவை முகத்திற் கண்டேன்!
புன்னகையில் இதயத்துத் தூய்மை கண்டேன்!
எங்குமென்றும் மறத்தமிழன் வீரந் தனைநீ
இயற்றிவரும் செயல்களிலே இலங்கக் கண்டேன்!
பங்கமில்லாப் பணியெனவே தமிழில் நூல்கள்
பதிப்பிக்கும் பெற்றிதனைக் காந்த ளகமும்
சங்கரனின் அருளாலே சாற்றக் கண்டேன்;!
தவச்செல்வா நலமோடு ஊழி வாழி!
மாறா அன்புடன்
பாரதி இளமுருகனார்
உச்சிப் பொழுதாய் ஒளிரும் திருப்பணிகள்
மெச்சிப் புகழும் தமிழ்ப்பணிகள் - இச்சகத்தில்
நச்சி வளர்த்தெடுத்த நற்பணிகள் சொல்லுமே
சச்சி உமது பெயர்.
அண்ணா கண்ணன்
No comments:
Post a Comment