Friday, December 17, 2021

மதமாற்றக் கொடுமைகளின் ஆதரவாளராக இரத்தினசீவன் ஊலர்

 மதமாற்றக் கொடுமைகளின் ஆதரவாளராக

இரத்தினசீவன் ஊலர்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கடந்த ஐப்பசி எட்டாம் நாள் திங்கள் கிழமை (25 10 2021)

Maatram.org/?p=9699

இரத்தினசீவன் ஊலர் எழுதிய கட்டுரை.

அங்கு ஒரு பந்தி பின்வருமாறு

Quote சச்சிதானந்தனின் அடிப்படை கூற்று நாம் பிறந்த சமயத்திலேயே நாம் வாழவேண்டும் என்பதே.

இது கிறிஸ்தவ கோட்பாடுகளுக்கும் தமிழர் பாரம்பரியத்திற்கும் முரணானது.  

இயேசுக் கிறிஸ்து பரத்துக்கு எடுபடுமுதல் அடியார்களுக்குக் கொடுத்த இறுதிக் கட்டளையானது தேவ அன்பின் பயனான மீட்பை எல்லா ஜாதிகளுடனும் பகிரவேண்டும் என்பதாம்.
ஆகவே, ஒரு விலைமதிப்பற்ற பாக்கியம் தம்மிடம் உண்டென்றும், சகல மனிதர்களிலும் அன்புசெய்யும்படி தாம் அந்நற்செய்தியைப் பரப்ப வேண்டும் என்ற ஒரு அடிப்படைக் கூற்று கிறிஸ்தவர் மத்தியிலுண்டு.

இயேசுவின் இக்கட்டளைக்கான வேதவாக்கியங்கள் வருடம் தோறும் எமது ஆராதனைகளில் எடுத்துரைக்கப்படுவது மட்டுமன்றி நற்செய்திக் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.

நற்செய்தியைப் பரப்பி அந்த ச் செய்தியின் மகிழ்ச்சியை அதை அறியாதவர்களுக்கும் கொடுத்து உள்வருபவரை திருச்சபைக்குள் எடுப்பது கிறிஸ்தவ மதத்திலிருந்து பிரித்து எடுக்கமுடியாத பணி.

அத்தெய்வீகப் பகிர்வை நிறுத்துவது கிறிஸ்தவ சமயத்தையே தடைசெய்வதாக அமையும். unquote 

யாவரும் கேளிர். 

2200 ஆண்டுகளுக்கு முன்பு கூறியவர் கணியன் பூங்குன்றன். 

மானுடம் வெல்லும்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கூறியவர் மகாகவி பாரதியார். 

மனிதம் மேம்பட வேண்டும், 

பண்பட்ட வாழ்வு பெருகவேண்டும், 

அல்லன என்ற வரையறை, 

நல்லன என்ற வரையறை, 

அல்லன போக்குதல் நல்லன ஊக்குதலே பண்படுத்தல்.

யாவரையும் கேளிராக மானுடத்தை வெல்விக்கும் நீண்ட நெடிய மரபின் வழித்தோன்றல்களுள் நானும் ஒருவன்.

“சச்சிதானந்தனின் அடிப்படைக் கூற்று” என்றே தொடங்குகிறார் இரத்தினசீவன் கூலர், மேற்காணும் அவரின் பந்தியில்.

எந்த ஒரு இடத்திலும், 

எந்த ஒரு காலத்திலும், 

எந்த நிலையிலும். 

நான் கூறாததைக் கூறியதாக ஊலர் சொல்வதனால் அவர் வாதம் பிறழும்.

மானுடத்தை மேம்படுத்த பிறவி எடுத்த ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்நாளில் ஏதோ ஒரு வகையயில் தவறாமல் முயல்கிறார்.

அவர்களுள் சிலர், அந்த மாற்றத்தின் வேகத்தை முடுக்கி விடுவதால் வரலாற்றில் நிலைக்கிறார்கள்.

மானுடத்தை மேம்படுத்தும் முயற்சியின் வேகத்தை முடுக்கிய மனித மகான்களில் ஒருவர் இயேசுபிரான்.

அவரது மலையுரை வரிகள், 

என் நெஞ்சை உருக்கிய வரிகள், 

நான் கண்ணீர் பெருக்கிய வரிகள், 

என் செயல்களைச் செதுக்கிய வரிகள்.

என் நூல் அடுக்கில்,

நான் எங்கிருந்தாலும், 

திருவள்ளுவரின் பதிப்புகள் அங்கிருக்கும்.

விவிலியத்தின் இரண்டு மூன்று பதிப்புகள் அங்கிருக்கும். 

திருக்குர்ஆனின் பதிப்புகள் அங்கிருக்கும். 

புத்தரின் போதனைகள் அங்கிருக்கும்.

கன்ஃபூசியசின் குறுங்கதை வழிகாட்டல்கள் அங்கிருக்கும். 

குருநானக்கர் கூறிய தொகுப்பு அங்கு இருக்கும்.

காந்தியடிகளின் சத்திய சோதனை அங்கு இருக்கும்.

இவற்றுடன் பன்னிரு திருமுறைகள், பதினான்கு நெறிகள் திரட்டாக வைத்திருப்பேன்.

நானே வியந்து வியந்து படிக்கும் வரிகளை ஏனையோர் படிக்கக் கூடாது எனச் சொல்வது மடமையிலும் மடமை. நான் அதைச் செய்வதில்லை.

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என எனக்குத் தந்தவர் திருமூலர்.

“பற்றுக பற்றற்றான் பற்றினை” என்பார் திருவள்ளுவர். “பிறந்தார் உறுவது பெருகிய துன்பம், அது பற்றினால் வருவது” எனப் புத்தர் சொன்னதாகத் தமிழில் தந்தவர் சாத்தனார்.

“உன் வியர்வை காயும் முன்னே உன் ஊதியத்தை தந்து விடுவேன்” என நான் என்னிடம் பணிபுரிந்த ஓராயிரத்துக்கும் கூடுதலான ஊழியர்களுக்கு சொல்லியிருக்கிறேன். செய்தும் காட்டி இருக்கிறேன் திருக்குர்ஆன் தந்த வரிகள் அல்லவா?

“எனக்குத் தீமை செய்தவரை நான் மன்னிப்பது போல, என் தவறுகளை நீவிர் மன்னிப்பீராக” என்ற வரிகளைத் தேவாலயம் ஒன்றில் கேட்ட நாள் முதலாக அந்த வரிகளை வாழ்வாக்க முயல்பவன் நான்.

எவர் ஒருவர் தன்னுடைய புரிதலின் தளத்தில், தன்னுடைய தேடலின் தெளிவில், அறிவின் நாட்டத்தில், அருளின் ஊட்டத்தில் உள்ளாரோ அவர் தன் நிலை விட்டிறங்கி மதம் மாறார். புரிதலும் தேடலும் நாட்டமும் ஊட்டமும் அவருக்குத் தொடர் கதை.

எனவேயே, எனக்கு விவரம் தெரிந்த காலம் முதலாக அறமற்ற மதமாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து இருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த பலர், என்னைப் போன்றே, கிறித்தவத் தேவாலயம் செல்வர். சீக்கியத் திருக்கோயில் செல்வர். சமணப் பள்ளி செல்வர். புத்தரின் வழியில் மூச்சுப் பயிற்சியும் விபாசனாவும் மேற்கொள்ளப் பன்சாலை செல்வர்.

தாம் மதம் மாறியதாக இவர்கள் சொல்வதே இல்லை.

வத்திக்கானின் தூய பேதுரு தேவாலயத்தில் கிறிஸ்மஸ் நாள் நள்ளிரவு வழிபாடு. அலங்கார பவனியில் முரசங்கள் முழங்க வருவார் பாப்பரசர். வழிபடுவோருள் ஒருவராக நான்.

உரைப் பீடத்தில் பல் மொழிகளில் வேண்டுதல்கள், வத்திக்கானில் கிறிஸ்மஸ் வேண்டுதல்களும், புத்தாண்டு வேண்டுதல்களும் தமிழிலும் நிகழும். காதாரக் கேட்டு மெய்மறந்த நாள்கள் நிளைவில் பசுமையாக.

வழிபாடு முடிந்ததும் ஒவ்வொருவர் நாக்கிலும் வட்ட அப்பத் துண்டு ஊட்டுவர். எனக்கும் ஊட்டுவர். மேலதிக அப்பத் துண்டுகள் கேட்டுப் பெறுவேன். இலங்கையில் உள்ள என் கத்தோலிக்க நண்பர்களுக்கு அஞ்சலில் அனுப்புவேன்.

என் தந்தையாருக்கு அனுப்பி எனக்கு முகவரி தெரியாத அவரின் அன்பர்களுக்குக் கொடுக்கச் சொல்வேன், கொடுப்பார்.

ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கிறிஸ்மஸிலும் புத்தாண்டிலும் நான் வத்திக்கானில். அந்த ஐந்து ஆண்டுகளும் என் கத்தோலிக்க அன்பர்களுடன் அஞ்சலில் அப்பம்  பகிர்ந்துளேன்.

நான் கிறித்தவனாகவில்லை. என் கத்தோலிக் அன்பர்கள் சைவராகவில்லை.

இன்று மாதப் பிறப்பு. தாய் சொல்வார். பதினைந்து நாள்களுக்கு முன்னல்லவா? மகன் கேட்பார். இன்று தமிழ் மாதப் பிறப்பு. 15 நாள்களுக்கு முன் வேதக்காரருக்கு மாதப்பிறப்பு. தாயின் விடை. தமிழோடு கலந்தன மாதங்கள்.

45 நாள் தமிழ் மருந்துப் பத்தியம். தாய் கொடுப்பாள். உந்த இங்கிலீசு மருந்து ஏன்? கசாயம் குடிக்கத் தடிமல் மாறுமடா. தாய் மகனுக்குச் சொல்வார். திருநெல்வேலிச் சந்தைக்கு எதிரில் இன்றும் மருந்துக் கடைப் பெயர்ப் பலகையில் தமிழ் மருந்துக் கடை என்றிருக்கும். தமிழோடு கலந்தன மருந்துகள்.

எமிலி வந்திருக்கிறாள், தாயிடம் மகள் கூறுவாள். தமிழ்ப் பெயர் என்ன? தாய் கேட்பாள். அவை வேதக்காரர், இங்கிலிசுப் பெயரரே வைப்பினம், மகள் சொல்வாள்.

தாய்க்கு வேதக்காரர் வேறு, தமிழர் வேறு. சோனகர் வேறு, தமிழர் வேறு. புத்தர் வேறு, தமிழர் வேறு. ஒவ்வொரு தமிழ்த் தாயும் மகனிடம் கூறுவன இவை.

மொழி மட்டுமன்று; பெயர், உணவு, மருந்து, சமயம், வாழ்வியல் யாவும் தமிழ். எங்கும் தமிழ், எதிலும் தமிழ், அவரே தமிழர். தாய் தன் மக்களுக்கு ஊட்டும் தாய்ப் பாலுடன் வாழ்வியலையும் தமிழாகக் கலந்து ஊட்டுவாள்.

எனக்கு விவரம் தெரிந்த காலம் முதலாக அறமற்ற மதமாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து இருக்கிறேன்.

 மரபு, வழமை, கைக்கொளல், கடைப்பிடித்தல், காலந்தோறும் புதுக்குதல் யாவும் தமிழ்ச் சொற்கள். நிலமும் காலமும் அடித்தளமாயின. இச்சொற்களைச் சமயம் என்ற ஒரே சொல்லுள் அடக்கலாம்.

சைவர்கள் காலந்தோறும் வாழ்வியலைப் புதுப்பிப்பவர்.  

சைவம் என்பதால் சிவன் சார்ந்தது. சமயம் எனில் காலந்தோறும் புதுக்குவது. சிவனிய வாழ்வியலைக் காலந்தோறும் புதுக்குவதே சைவ சமயம். மதம் என்ற சொல் சைவத்துக்கு பொருந்தாது.

சமணமும் புத்தமும் மனித மனத்தைச் செம்மையாக்கும் நெறிகள். மதங்கள் அல்ல. காலந்தோறும் புதுப்பிக்கும் இயல்பால், மனத்தைச் செம்மையாக்கும் சமண புத்த ஒழுங்குகளுள் நல்லனவும் சேர்ந்தே புதுப்பித்தே சைவ சமயமாயின.

கடந்த 500 ஆண்டுகளாக, ஆபிரகாமியக் கொள்கைகள் தமிழருள் மதங்களாகப் புகுந்தன. அரசு ஆதரவுடன் நம்பிக்கையைத் திணிப்பனவே மதங்கள். அவையே ஆபிகாமிய மதங்கள்.

ஆபிரகாமிய மதங்களை நம்பாதவர் சாத்தான் வழியினர் அன்றிக் கபீர்கள்.

சாத்தான் வழியை விட்டுக் கிறித்தவம் சாராதோரைக் கொல்லவும் வதைக்கவும் மிரட்டவும் போர்த்துக்கேய மன்னன் முதலாம் இம்மானுவேலுக்கு ஒப்புதலை வழங்கியவர் பாப்பரசர் ஆறாம் அலெச்சாந்தர்.

முகமதியத்தை ஏற்க மறுக்கும் கபீர்களை இல்லாமலொழிப்பதைத் திருக்குர்ஆன் சொல்வதாகக் கொள்வதாலன்றோ, முகமது காலத்திலிருந்தே  கொலைவெறியும் காதல்போரும் தொடர்கின்றன.

சைவ சமயத்தில் இல்லாதோர் சைவத்துக்குள் புக வேண்டும் என எவரும் கோருவதில்லை. ஆயினும் சைவ சமயத்தைக் கைக்கொள்வோரை வலிந்து மத மாற்றுவோரைச் சைவர் ஒப்புவதில்லை.

சைவர் வேறு வழியின்றிக் கூடி வாழும் பாடசாலைகள், சிறைச்சாலைகள், மருத்துவ மனைகள், தொழிற்சாலைகள் போன்ற இடங்கள் மத மாற்றிகளின் வேட்டைக் காடுகள்.  

ஏற்கனேவே திருமணமான முகமதியரான பாடசாலை ஆசிரியர் தன் வகுப்பு மாணவியை மதமாற்றும் நோக்குடன் காதல் வலை வீசுவார். ஏற்கனவே திருமணமான முகமதியரான தொழிலதிபர் தம் தொழிலகப் பெண் பணியாளருக்குக் காதல் வலை வீசுவார்.

மருத்துவ மனைக்குள் புகும் மதமாற்ற சபையார் கர்த்தர் உன் நோயை நீக்குவார் என நோயுற்றவருக்கு மத மாற்றத் தூண்டில் விடுவார். சிறைச்சாலை புகும் சபையார் உன்னைக் கர்த்தர் சிறையிலிருந்த விடுவிப்பார் என மயக்கு மொழித் தூண்டில் விடுவார்.

இத்தகைய மதமாற்ற முயற்சிகளுக்கு அனைத்து மதக் கூட்டத்தில் தடைத் தீர்மானம். Resolutions of the inter-faith meet (Buddhism, Christianity, Hinduism, Islam, Judaism, and the Yoruba religions) on “Conversion: Assessing the Reality” at Lariano (Italy) on May 12-16, 2006.

என் அடித்தளம் இதுவே. “சச்சிதானந்தனின் அடிப்படை கூற்று நாம் பிறந்த சமயத்திலேயே நாம் வாழவேண்டும் என்பதே” எனத் தவறாகக் கூறிய இரத்தினசீவன் ஊலர் புரிந்து கொள்வாராக.

முன்னர் என் பின்னணியைக் கூறினேன். பின்னர் சைவ சமயத்தவர் கள நிலையைக் கூறினேன். இங்கு என் நோக்கத்தைக் கூறினேன்.

உரோமன் கத்தோலிக்கரும் என் நோக்கம் சார்ந்த கோட்பாடுகளையே வலியுறுத்துவர்.

The Roman Catholic Church stated at Vatican II in ‘Ad Gentes’:

“The Church strictly forbids forcing anyone to embrace the Faith or alluring or enticing people by worrisome wiles.”

What could some of those unethical means be?

1.    Bribe people by money, goods, medical treatment, opportunities or offices, that is, offering people nonspiritual rewards for their conversion.

2.    Threaten people with civil consequences, putting undue psychological pressure on them or press them for decisions they cannot oversee, e.g., because they are too young or mentally ill. – Use the authority of a state function while in office (e.g., as police or state school-teacher).

3.    Give or refuse financial advantages (e.g., through banks or in inheritance laws).

4.    Preach to ‘captive audiences’, who cannot freely leave (e.g., army officers to their soldiers or a prison director to inmates).

கிறித்தவ தேவாயங்களுக்கான உலக அவையும் அந்த அவையைப் பின்பற்றும் இலங்கை அவையும் என் நோக்கம் சார்ந்த கோட்பாடுகளையே வலியுறுத்துவர்.

The World Council of Churches in “The Challenge of Proselytism and the Calling to Common Witness” gave the following examples:

1.    employing any kind of physical violence, moral compulsion and psychological pressure e.g., the use of certain advertising techniques in mass media that might bring undue pressure on readers/viewers;

2.    using political, social and economic power as a means of winning new members for one’s own church;

3.    extending explicit or implicit offers of education, health care or material inducements or using financial resources with the intent of making converts;

4.    manipulative attitudes and practices that exploit people’s needs, weaknesses or lack of education especially in situations of distress,

and fail to respect their freedom and human dignity.”

இந்த வழிகாட்டல்களை மதமாற்றத்தில் ஈடுபடும் ஊழியர்கள் கவனத்தில் கொள்வதில்லை.

பிரான்சிசு சேவியர் தொடக்கம் திருக்கேதீச்சர வளைவை உடைத்து நந்திக் கொடியை மிதித்துச் சைவர் உள்ளத்தை உடைத்துக் குருதியைப் பாயவிட்டவர் வரை, 400 ஆண்டகளாகக் கத்தோலிக்கர் The Roman Catholic Church stated at Vatican II in ‘Ad Gentes’ ஆணையைப் புறந்தள்ளுவோரே.

Gradually make the whole Saiva Tamil race in Sri Lanka and South India, English in language, civilized in habits, and Christian in religion என்ற பாவ நோக்குடன் வந்த அமெரிக்க மிசனரிமார் தொடக்கம், தெல்லிப்பைளை யூனியன் கல்லூரியில் அப்பாவிச் சிறுவரைத் தாக்கிய நேற்றையய பாதிரியர் வரை  The World Council of Churches in “The Challenge of Proselytism and the Calling to Common Witness” கூறிய வழிகாட்டல்களைப் புறந்தள்ளுவோரே.

இரத்தினசீவன் ஊலரே, கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள்.

சாத்தான் என்றும் கபீர் என்றும் ஆபிரகாமியர் கொண்ட கொலைவெறிக் கோலத்தைக் கைவிட்டால் நான் பயனுள்ள பிற பணிகளுக்காகத் என் காலத்தைச் செலவிடலாம்.

அதுவரை சச்சிதானந்தனின் அடித்தளங்கள்,

1.    The Roman Catholic Church: Vatican II in ‘Ad Gentes’ ஆணை,

2.    The World Council of Churches வழிகாட்டல்கள்.

No comments: