மார்கழி 7, புதன் (22.12.21)
பன்முக ஆற்றலர் சண்முகநாதனார்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
முறைக்கத் தெரியாதவர்.
சிரிக்கத் தெரியாதவர்.
மார்கழி 7, புதன் (22.12.21)
பன்முக ஆற்றலர் சண்முகநாதனார்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிரிக்கத் தெரியாதவர்.
மதமாற்றக் கொடுமைகளின் ஆதரவாளராக
இரத்தினசீவன் ஊலர்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
கடந்த ஐப்பசி எட்டாம் நாள் திங்கள் கிழமை (25 10 2021)
Maatram.org/?p=9699
இரத்தினசீவன் ஊலர் எழுதிய கட்டுரை.
அங்கு ஒரு பந்தி பின்வருமாறு
Quote சச்சிதானந்தனின் அடிப்படை கூற்று நாம் பிறந்த சமயத்திலேயே நாம் வாழவேண்டும்
என்பதே.
இது கிறிஸ்தவ கோட்பாடுகளுக்கும் தமிழர் பாரம்பரியத்திற்கும் முரணானது.
இயேசுக் கிறிஸ்து பரத்துக்கு எடுபடுமுதல் அடியார்களுக்குக் கொடுத்த இறுதிக்
கட்டளையானது தேவ அன்பின் பயனான மீட்பை எல்லா ஜாதிகளுடனும் பகிரவேண்டும் என்பதாம்.
ஆகவே, ஒரு விலைமதிப்பற்ற பாக்கியம் தம்மிடம் உண்டென்றும், சகல மனிதர்களிலும் அன்புசெய்யும்படி
தாம் அந்நற்செய்தியைப் பரப்ப வேண்டும் என்ற ஒரு அடிப்படைக் கூற்று கிறிஸ்தவர் மத்தியிலுண்டு.
இயேசுவின் இக்கட்டளைக்கான வேதவாக்கியங்கள் வருடம் தோறும் எமது ஆராதனைகளில் எடுத்துரைக்கப்படுவது
மட்டுமன்றி நற்செய்திக் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.
நற்செய்தியைப் பரப்பி அந்த ச் செய்தியின் மகிழ்ச்சியை அதை அறியாதவர்களுக்கும்
கொடுத்து உள்வருபவரை திருச்சபைக்குள் எடுப்பது கிறிஸ்தவ மதத்திலிருந்து பிரித்து எடுக்கமுடியாத
பணி.
அத்தெய்வீகப் பகிர்வை நிறுத்துவது கிறிஸ்தவ சமயத்தையே தடைசெய்வதாக அமையும். unquote
யாவரும் கேளிர்.
2200 ஆண்டுகளுக்கு முன்பு கூறியவர் கணியன் பூங்குன்றன்.
மானுடம் வெல்லும்
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கூறியவர் மகாகவி பாரதியார்.
மனிதம் மேம்பட வேண்டும்,
பண்பட்ட வாழ்வு பெருகவேண்டும்,
அல்லன என்ற வரையறை,
நல்லன என்ற வரையறை,
அல்லன போக்குதல் நல்லன ஊக்குதலே பண்படுத்தல்.
யாவரையும் கேளிராக மானுடத்தை வெல்விக்கும் நீண்ட நெடிய மரபின் வழித்தோன்றல்களுள்
நானும் ஒருவன்.
“சச்சிதானந்தனின் அடிப்படைக் கூற்று” என்றே தொடங்குகிறார் இரத்தினசீவன் கூலர்,
மேற்காணும் அவரின் பந்தியில்.
எந்த ஒரு இடத்திலும்,
எந்த ஒரு காலத்திலும்,
எந்த நிலையிலும்.
நான் கூறாததைக் கூறியதாக ஊலர் சொல்வதனால் அவர் வாதம் பிறழும்.
மானுடத்தை மேம்படுத்த பிறவி எடுத்த ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்நாளில் ஏதோ ஒரு
வகையயில் தவறாமல் முயல்கிறார்.
அவர்களுள் சிலர், அந்த மாற்றத்தின் வேகத்தை முடுக்கி விடுவதால் வரலாற்றில் நிலைக்கிறார்கள்.
மானுடத்தை மேம்படுத்தும் முயற்சியின் வேகத்தை முடுக்கிய மனித மகான்களில் ஒருவர்
இயேசுபிரான்.
அவரது மலையுரை வரிகள்,
என் நெஞ்சை உருக்கிய வரிகள்,
நான் கண்ணீர் பெருக்கிய வரிகள்,
என் செயல்களைச் செதுக்கிய வரிகள்.
என் நூல் அடுக்கில்,
நான் எங்கிருந்தாலும்,
திருவள்ளுவரின் பதிப்புகள் அங்கிருக்கும்.
விவிலியத்தின் இரண்டு மூன்று பதிப்புகள் அங்கிருக்கும்.
திருக்குர்ஆனின் பதிப்புகள் அங்கிருக்கும்.
புத்தரின் போதனைகள் அங்கிருக்கும்.
கன்ஃபூசியசின் குறுங்கதை வழிகாட்டல்கள் அங்கிருக்கும்.
குருநானக்கர் கூறிய தொகுப்பு அங்கு இருக்கும்.
காந்தியடிகளின் சத்திய சோதனை அங்கு இருக்கும்.
இவற்றுடன் பன்னிரு திருமுறைகள், பதினான்கு நெறிகள் திரட்டாக வைத்திருப்பேன்.
நானே வியந்து வியந்து படிக்கும் வரிகளை ஏனையோர் படிக்கக் கூடாது எனச் சொல்வது
மடமையிலும் மடமை. நான் அதைச் செய்வதில்லை.
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என எனக்குத் தந்தவர் திருமூலர்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை” என்பார் திருவள்ளுவர். “பிறந்தார் உறுவது பெருகிய
துன்பம், அது பற்றினால் வருவது” எனப் புத்தர் சொன்னதாகத் தமிழில் தந்தவர் சாத்தனார்.
“உன் வியர்வை காயும் முன்னே உன் ஊதியத்தை தந்து விடுவேன்” என நான் என்னிடம்
பணிபுரிந்த ஓராயிரத்துக்கும் கூடுதலான ஊழியர்களுக்கு சொல்லியிருக்கிறேன். செய்தும்
காட்டி இருக்கிறேன் திருக்குர்ஆன் தந்த வரிகள் அல்லவா?
“எனக்குத் தீமை செய்தவரை நான் மன்னிப்பது போல, என் தவறுகளை நீவிர் மன்னிப்பீராக”
என்ற வரிகளைத் தேவாலயம் ஒன்றில் கேட்ட நாள் முதலாக அந்த வரிகளை வாழ்வாக்க முயல்பவன்
நான்.
எவர் ஒருவர் தன்னுடைய புரிதலின் தளத்தில், தன்னுடைய தேடலின் தெளிவில், அறிவின்
நாட்டத்தில், அருளின் ஊட்டத்தில் உள்ளாரோ அவர் தன் நிலை விட்டிறங்கி மதம் மாறார். புரிதலும்
தேடலும் நாட்டமும் ஊட்டமும் அவருக்குத் தொடர் கதை.
எனவேயே, எனக்கு விவரம் தெரிந்த காலம் முதலாக அறமற்ற மதமாற்றத்தை ஏற்றுக்கொள்ள
மறுத்து இருக்கிறேன்.
எனக்குத் தெரிந்த பலர், என்னைப் போன்றே, கிறித்தவத் தேவாலயம் செல்வர். சீக்கியத்
திருக்கோயில் செல்வர். சமணப் பள்ளி செல்வர். புத்தரின் வழியில் மூச்சுப் பயிற்சியும்
விபாசனாவும் மேற்கொள்ளப் பன்சாலை செல்வர்.
தாம் மதம் மாறியதாக இவர்கள் சொல்வதே இல்லை.
வத்திக்கானின் தூய பேதுரு தேவாலயத்தில் கிறிஸ்மஸ் நாள் நள்ளிரவு வழிபாடு. அலங்கார
பவனியில் முரசங்கள் முழங்க வருவார் பாப்பரசர். வழிபடுவோருள் ஒருவராக நான்.
உரைப் பீடத்தில் பல் மொழிகளில் வேண்டுதல்கள், வத்திக்கானில் கிறிஸ்மஸ் வேண்டுதல்களும்,
புத்தாண்டு வேண்டுதல்களும் தமிழிலும் நிகழும். காதாரக் கேட்டு மெய்மறந்த நாள்கள் நிளைவில்
பசுமையாக.
வழிபாடு முடிந்ததும் ஒவ்வொருவர் நாக்கிலும் வட்ட அப்பத் துண்டு ஊட்டுவர். எனக்கும்
ஊட்டுவர். மேலதிக அப்பத் துண்டுகள் கேட்டுப் பெறுவேன். இலங்கையில் உள்ள என் கத்தோலிக்க
நண்பர்களுக்கு அஞ்சலில் அனுப்புவேன்.
என் தந்தையாருக்கு அனுப்பி எனக்கு முகவரி தெரியாத அவரின் அன்பர்களுக்குக் கொடுக்கச்
சொல்வேன், கொடுப்பார்.
ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கிறிஸ்மஸிலும் புத்தாண்டிலும் நான் வத்திக்கானில்.
அந்த ஐந்து ஆண்டுகளும் என் கத்தோலிக்க அன்பர்களுடன் அஞ்சலில் அப்பம் பகிர்ந்துளேன்.
நான் கிறித்தவனாகவில்லை. என் கத்தோலிக் அன்பர்கள் சைவராகவில்லை.
இன்று மாதப் பிறப்பு. தாய் சொல்வார். பதினைந்து நாள்களுக்கு முன்னல்லவா? மகன்
கேட்பார். இன்று தமிழ் மாதப் பிறப்பு. 15 நாள்களுக்கு முன் வேதக்காரருக்கு மாதப்பிறப்பு.
தாயின் விடை. தமிழோடு கலந்தன மாதங்கள்.
45 நாள் தமிழ் மருந்துப் பத்தியம். தாய் கொடுப்பாள். உந்த இங்கிலீசு மருந்து
ஏன்? கசாயம் குடிக்கத் தடிமல் மாறுமடா. தாய் மகனுக்குச் சொல்வார். திருநெல்வேலிச் சந்தைக்கு
எதிரில் இன்றும் மருந்துக் கடைப் பெயர்ப் பலகையில் தமிழ் மருந்துக் கடை என்றிருக்கும்.
தமிழோடு கலந்தன மருந்துகள்.
எமிலி வந்திருக்கிறாள், தாயிடம் மகள் கூறுவாள். தமிழ்ப் பெயர் என்ன? தாய் கேட்பாள்.
அவை வேதக்காரர், இங்கிலிசுப் பெயரரே வைப்பினம், மகள் சொல்வாள்.
தாய்க்கு வேதக்காரர் வேறு, தமிழர் வேறு. சோனகர் வேறு, தமிழர் வேறு. புத்தர்
வேறு, தமிழர் வேறு. ஒவ்வொரு தமிழ்த் தாயும் மகனிடம் கூறுவன இவை.
மொழி மட்டுமன்று; பெயர், உணவு, மருந்து, சமயம், வாழ்வியல் யாவும் தமிழ். எங்கும்
தமிழ், எதிலும் தமிழ், அவரே தமிழர். தாய் தன் மக்களுக்கு ஊட்டும் தாய்ப் பாலுடன் வாழ்வியலையும்
தமிழாகக் கலந்து ஊட்டுவாள்.
எனக்கு விவரம் தெரிந்த காலம் முதலாக அறமற்ற மதமாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து
இருக்கிறேன்.
மரபு, வழமை, கைக்கொளல், கடைப்பிடித்தல்,
காலந்தோறும் புதுக்குதல் யாவும் தமிழ்ச் சொற்கள். நிலமும் காலமும் அடித்தளமாயின. இச்சொற்களைச்
சமயம் என்ற ஒரே சொல்லுள் அடக்கலாம்.
சைவர்கள் காலந்தோறும் வாழ்வியலைப் புதுப்பிப்பவர்.
சைவம் என்பதால் சிவன் சார்ந்தது. சமயம் எனில் காலந்தோறும் புதுக்குவது. சிவனிய
வாழ்வியலைக் காலந்தோறும் புதுக்குவதே சைவ சமயம். மதம் என்ற சொல் சைவத்துக்கு பொருந்தாது.
சமணமும் புத்தமும் மனித மனத்தைச் செம்மையாக்கும் நெறிகள். மதங்கள் அல்ல. காலந்தோறும்
புதுப்பிக்கும் இயல்பால், மனத்தைச் செம்மையாக்கும் சமண புத்த ஒழுங்குகளுள் நல்லனவும்
சேர்ந்தே புதுப்பித்தே சைவ சமயமாயின.
கடந்த 500 ஆண்டுகளாக, ஆபிரகாமியக் கொள்கைகள் தமிழருள் மதங்களாகப் புகுந்தன.
அரசு ஆதரவுடன் நம்பிக்கையைத் திணிப்பனவே மதங்கள். அவையே ஆபிகாமிய மதங்கள்.
ஆபிரகாமிய மதங்களை நம்பாதவர் சாத்தான் வழியினர் அன்றிக் கபீர்கள்.
சாத்தான் வழியை விட்டுக் கிறித்தவம் சாராதோரைக் கொல்லவும் வதைக்கவும் மிரட்டவும்
போர்த்துக்கேய மன்னன் முதலாம் இம்மானுவேலுக்கு ஒப்புதலை வழங்கியவர் பாப்பரசர் ஆறாம்
அலெச்சாந்தர்.
முகமதியத்தை ஏற்க மறுக்கும் கபீர்களை இல்லாமலொழிப்பதைத் திருக்குர்ஆன் சொல்வதாகக்
கொள்வதாலன்றோ, முகமது காலத்திலிருந்தே கொலைவெறியும்
காதல்போரும் தொடர்கின்றன.
சைவ சமயத்தில் இல்லாதோர் சைவத்துக்குள் புக வேண்டும் என எவரும் கோருவதில்லை.
ஆயினும் சைவ சமயத்தைக் கைக்கொள்வோரை வலிந்து மத மாற்றுவோரைச் சைவர் ஒப்புவதில்லை.
சைவர் வேறு வழியின்றிக் கூடி வாழும் பாடசாலைகள், சிறைச்சாலைகள், மருத்துவ மனைகள்,
தொழிற்சாலைகள் போன்ற இடங்கள் மத மாற்றிகளின் வேட்டைக் காடுகள்.
ஏற்கனேவே திருமணமான முகமதியரான பாடசாலை ஆசிரியர் தன் வகுப்பு மாணவியை மதமாற்றும்
நோக்குடன் காதல் வலை வீசுவார். ஏற்கனவே திருமணமான முகமதியரான தொழிலதிபர் தம் தொழிலகப்
பெண் பணியாளருக்குக் காதல் வலை வீசுவார்.
மருத்துவ மனைக்குள் புகும் மதமாற்ற சபையார் கர்த்தர் உன் நோயை நீக்குவார் என
நோயுற்றவருக்கு மத மாற்றத் தூண்டில் விடுவார். சிறைச்சாலை புகும் சபையார் உன்னைக் கர்த்தர்
சிறையிலிருந்த விடுவிப்பார் என மயக்கு மொழித் தூண்டில் விடுவார்.
இத்தகைய மதமாற்ற முயற்சிகளுக்கு அனைத்து மதக் கூட்டத்தில் தடைத் தீர்மானம்.
Resolutions of the inter-faith meet (Buddhism, Christianity, Hinduism, Islam, Judaism, and the Yoruba
religions) on “Conversion: Assessing the Reality” at Lariano (Italy) on May
12-16, 2006.
என் அடித்தளம் இதுவே. “சச்சிதானந்தனின் அடிப்படை கூற்று நாம் பிறந்த சமயத்திலேயே
நாம் வாழவேண்டும் என்பதே” எனத் தவறாகக் கூறிய இரத்தினசீவன் ஊலர் புரிந்து கொள்வாராக.
முன்னர் என் பின்னணியைக் கூறினேன். பின்னர் சைவ சமயத்தவர் கள நிலையைக் கூறினேன்.
இங்கு என் நோக்கத்தைக் கூறினேன்.
உரோமன் கத்தோலிக்கரும் என் நோக்கம் சார்ந்த கோட்பாடுகளையே வலியுறுத்துவர்.
The Roman Catholic Church stated at Vatican II in ‘Ad Gentes’:
“The Church strictly forbids forcing anyone to embrace the Faith or
alluring or enticing people by worrisome wiles.”
What could some of those unethical means be?
1. Bribe people by money, goods, medical treatment,
opportunities or offices, that is, offering people nonspiritual rewards for
their conversion.
2. Threaten people with civil consequences, putting
undue psychological pressure on them or press them for decisions they cannot
oversee, e.g., because they are too young or mentally ill. – Use the authority
of a state function while in office (e.g., as police or state school-teacher).
3. Give or refuse financial advantages (e.g., through
banks or in inheritance laws).
4. Preach to ‘captive audiences’, who cannot freely
leave (e.g., army officers to their soldiers or a prison director to inmates).
கிறித்தவ தேவாயங்களுக்கான உலக அவையும் அந்த அவையைப் பின்பற்றும் இலங்கை அவையும்
என் நோக்கம் சார்ந்த கோட்பாடுகளையே
வலியுறுத்துவர்.
The World Council of Churches in “The Challenge of Proselytism and the
Calling to Common Witness” gave the following examples:
1. employing any kind of physical violence, moral
compulsion and psychological pressure e.g., the use of certain advertising
techniques in mass media that might bring undue pressure on
readers/viewers;
2. using political, social and economic power as a
means of winning new members for one’s own church;
3. extending explicit or implicit offers of education,
health care or material inducements or using financial resources with the
intent of making converts;
4. manipulative attitudes and practices that exploit
people’s needs, weaknesses or lack of education especially in situations of
distress,
and fail to respect their freedom and human dignity.”
இந்த வழிகாட்டல்களை மதமாற்றத்தில் ஈடுபடும் ஊழியர்கள் கவனத்தில் கொள்வதில்லை.
பிரான்சிசு சேவியர் தொடக்கம் திருக்கேதீச்சர வளைவை உடைத்து நந்திக் கொடியை மிதித்துச்
சைவர் உள்ளத்தை உடைத்துக் குருதியைப் பாயவிட்டவர் வரை, 400 ஆண்டகளாகக் கத்தோலிக்கர்
The Roman Catholic Church stated at Vatican II in ‘Ad Gentes’ ஆணையைப் புறந்தள்ளுவோரே.
Gradually make the whole
Saiva Tamil race in Sri Lanka and South India, English in language, civilized in
habits, and Christian in religion என்ற பாவ நோக்குடன் வந்த அமெரிக்க மிசனரிமார் தொடக்கம்,
தெல்லிப்பைளை யூனியன் கல்லூரியில்
அப்பாவிச் சிறுவரைத் தாக்கிய நேற்றையய பாதிரியர் வரை The World Council of Churches in “The
Challenge of Proselytism and the Calling to Common Witness” கூறிய வழிகாட்டல்களைப்
புறந்தள்ளுவோரே.
இரத்தினசீவன் ஊலரே, கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள்.
சாத்தான் என்றும் கபீர் என்றும் ஆபிரகாமியர் கொண்ட கொலைவெறிக் கோலத்தைக் கைவிட்டால்
நான் பயனுள்ள பிற பணிகளுக்காகத் என் காலத்தைச் செலவிடலாம்.
அதுவரை சச்சிதானந்தனின் அடித்தளங்கள்,
1. The Roman Catholic Church: Vatican II in ‘Ad Gentes’ ஆணை,
2.
The World
Council of Churches வழிகாட்டல்கள்.
தமிழர் சமயம் – புனைவுகள்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
கடந்த ஐப்பசி எட்டாம் நாள் திங்கள் கிழமை (25 10 2021)
Maatram.org/?p=9699
இரத்தினசீவன் ஊலர் எழுதிய கட்டுரை.
அங்கு ஒரு பந்தி பின்வருமாறு:
quote ….2000 வருடங்களுக்கு முன்பிருந்து இலங்கையிலும் கிறித்தவம் நாட்டப்பட்டிருந்தது…….
…….இவ்வீழ்ச்சி தமிழ் நாட்டில் பரிதோமாவால் முதலாம் நூற்றாண்டில் தமிழர் மத்தியில்
நிலைநாட்டப்பட்ட திருச்சபை 1300 அளவில் எஞ்சிய ஆலயம் ஒரு முஸ்லிம் துறவியிடம் மெழுகுவர்த்தி
எரிக்க ஒப்படைக்கப்பட்டது போல்….. unquote
புலமைச் சோலை ஒருபுறம்.
புலமைப் பாலை மறுபுறம்.
காய்ப்பு, துவர்ப்பு, விருப்பு, வெறுப்பு, பாசம், பற்று அற்றவர் புலமைச் சோலையர்.
பொய், புரட்டு, மயக்கம், மாயை போன்றனவே புலமைப் பாலையரின் பின்புலம்.
எவ்வழியிலாவது சமூக சமய அரசியல் மேம்பாட்டை நாடுவோர், பொய்மைகளை மெய்மையாக்கும்
புலமைப் பாலையரே.
இயேசு பிரானின் 12 சீடர்களுள் தூய தோமர் ஒருவர். “இயேசுபிரானுடன் யூதேயா
செல்வோம். அங்கு அவருக்கு ஏதும் நடந்தால் அவரோடு நாமும் சேர்ந்து மடிவோம்” என்ற
வரிகளின் சொந்தக்காரர் தூய தோமர். (யோவான் 11.16)
தூய தோமர் பெயரில் இரண்டு நூல்கள். விவிலியத்துக்குப் பிந்தையன. 1. தோமரின்
நற்செய்தி (Gospel of Thomas); 2. தோமரின் வினை (Acts of Thomas).
இவை இரண்டையும் கிறித்தவ பீடங்கள் ஏற்பதில்லை. இவை கிறித்தவத்துக்கு உகந்தவை
அல்ல; கிருத்தவ நெறிக்குத் தகாதவை என உரோம கத்தோலிக்க திருச்சபையின் Trent அவை தீர்மானித்தது.
புலமைச் சோலையர் உரோம கத்தோலிக்க திருச்சபையின் கூற்றினை ஒப்புவர்.
புலமைப் பாலையர் உரோம கத்தோலிக்க திருச்சபையின் கூற்றை ஏற்கார். எவ் வழியிலேனும்
தம் சமூக தம் சமய தம் அரசியல் மேம்பாட்டிற்காக இந்த நூல்களின் உள்ளடக்கத்தைத் திரித்தும்
மாற்றியும் எடுத்துச் சொல்வர்.
இயேசுபிரான் மறைவுக்குப் பின்னான முதல் நூற்றாண்டில் கிறித்துவ சமயப் பரம்பலை
எழுதிய தூய உலூக்கர் Act of Apostlesஇல் இந்தியாவிற்குக் கிறித்தவம் பரவியதாக எங்கும்
எழுதவில்லை.
இரட்டை ஆறுகள் பாயும் மெசபத்தோமியா. வடக்கே சிரியப் பேரரசு. கிழக்கே காந்தாரம்.
மேற்கே கிரேக்கம். தெற்கே அரேபியப் பாலைவனம்.
கிறித்துவத்தைச் சிரியப் பேரரசுக்கு எடுத்துச் சென்றவர் தூய தோமர். சிரியப்
பேரரசுக்கு உள்ளிட்ட இரட்டை ஆறுகள் பாயும் இன்றைய ஈராக்கின் மோசுல் நகரில் தூய தோமரின்
கல்லறை இருக்கிறது.
இன்றைய ஈராக்கின் மோசுல் நகரில் தூய தோமர் தேவாலயத்தின் கல்லறை வளாகத்துள் தூய
தோமரின் கல்லறையை 1964ஆம் ஆண்டில் கண்டறிந்தவர் பேராயர் சக்கா. Archbishop Mor
Severious Zakia.
இயேசு பிரானின் இறப்பின் பின்னர் கிறித்தவர்களை யெருசலத்தில் வதைக்கத்
தொடங்கினர். அவரது நேரடிப் சீடர்கள் யெருசலேத்தை விட்டு வெளியேறினர்.
தூய தோமர் வடக்கே சென்றார். சிரியப் பேரரசு எல்லைக்குள் நுழைந்தார். பட்டுப்
பாதையின் வழி கிழக்கே சென்றார். பாரசீகப் பேரரசின் எல்லைக்குள் நுழைந்தார்.
சிரியாவிலும் பாரசீகத்திலும் கிறித்தவத்தைப் பரப்புவதில் தூய தோமர் கடுமையாக
உழைத்தார். கிறித்தவ தேவாலயங்களைக் கட்டினார்.
தூய தோமருக்குச் சீடர் பட்டாளம் குவிந்தது. பாரசீகம் எங்கும் தேவாலயங்களைக்
கட்டினர். கிறித்தவத்தைப் பரப்பினர்.
குண்டோப அரசனின் Gundoferus ஆட்சி. தூய தோமரின் பரப்புதல் நடவடிக்கையால் சினம்
அடைந்தான் அரசன். தூய தோமரை அரசன் வெட்டிக் கொன்றான். அங்கேயே அவரது உடலைப் புதைத்தான்.
தூய தோமருடன் மோசூல் நகரில் இருந்து வந்த சீடர்கள், இரவோடு இரவாக அவரது உடலை
எடுத்துக் கொண்டு சிரியாவுக்குச் சென்றனர். மோசுல் நகரில் புதைத்தனர். அங்கே அவர் நினைவாகத்
தேவாலயம் கட்டினர்.
இயேசு பிரான் இறந்த பின் அடுத்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்தவை இவை.
தூய தோமர் இந்தியா வந்தார். தென்மேற்குக் கரையிலே பரப்புரைத்தார். பின்னர் கிழக்கே
சோழமண்டலக் கரைக்கு வந்தார். மயிலாப்பூரில் இறந்தார் என்பன கட்டுக்கதைகள்.
நான் சொல்லவில்லை. பேராசிரியர் ஆபிரகாம் இயேசுரத்தினம் சொல்கிறார். திருவனந்தபுரம்
பல்கலைக் கல்லூரியில் படித்தவர். கள்ளிக்கோட்டைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்
பெற்றவர். மலபார் கிறித்தவக் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர் பேராசிரியர்
இயேசுரத்தினம்.
பார்க்க Abraham Yesuratnam - Kerala Christianity and Assyrian Church. இணையத்தில்
இத்தலைப்பைத் தேடினால் முழுப் புத்தகமும் கட்டணமின்றிக் கிடைக்கும். படிக்கலாம்.
தூய தோமரும் தூய தாட்டியசும் பாரசீகத்தில் இயேசுபிரான் இறந்து 35 ஆண்டுகளுக்குப்
பின்பு முதலாவது தேவாலயத்தை அமைத்தனர்.
கிறித்தவன் என்ற புதிய பெயர்ச் சொல் அக்காலத்தில் அதே பிரதேசத்தில் தான் முதல்
முதல் முளைத்தது.
இயேசு பிரான் இறந்து 300 ஆண்டுகளின் பின்னரே கிறித்தவம் இந்தியாவுக்குள் நுழைந்தது.
பாரசீகத்திலிருந்து பரப்புனர் மேற்குக் கரையோரம் வந்தனர். சேரமான் பெருமான் (நாயனார்
அல்லர்) எனும் அரசன் அவர்களை ஆதரித்தான் என்ற செய்தியையும் படித்திருக்கிறோம்.
இதற்குச் சில நூற்றாண்டுகளின் பின் அநுராதபுரத்தில் பாரசீகக் கிறித்தவர்களும்
வந்திருக்கலாம். அநுராதபுரத்தில் சிலுவையின் கற் செதுக்க வடிவமே இலங்கையில் மிகப் பழமையான
கிறித்துவ அடையாளம். இவர்கள் Nestorianism வகையறாக்கள் என்பதைச் சிலுவையின் வடிவமைப்பால்
தெரிந்து கொள்ளலாம்.
கிறித்து பிறந்து 400 ஆண்டுகளுக்குப் பின்பே பாரசீகத்தில் எபேசு Epesus சபை
தொடங்கியது. Nestorianism தொடக்கம் அங்கேயே.
இந்தப் பின்னணியில் இரத்தினசீவன் ஊலரின் கருத்துரையைப் பார்க்க. எவ்வழியிலேனும்
தமிழர் தொடக்கத்திலிருந்தே இயேசு பிரானின் கிறித்தவர் என்பதை நிறுவுவதே ஊலரின் நோக்கம்.
தமிழரிடையே கிறித்தவம் நெறியாக, கைக்கொள்ளும் மதமாக, கிபி 500 க்கு முன்பு வரவே இல்லை.
தொல்காப்பியத்தில் சைவர் வணங்கும் கடவுளே ஐந்து நிலத்துக்கும் ஐந்து தெய்வங்கள்.
கிருத்தவக் கடவுளையோ அல்லாவையோ சங்க இலக்கியங்களில் சங்கம் மருவிய இலக்கியங்களில் பக்தி
இலக்கியங்களில் காணவே முடியாது.
இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் தமிழர் கிறித்தவர்களாக இருந்திருந்தால் ஏதாவது
ஒரு பதிவு எங்காவது ஓர் இலக்கியத்தில் ஒரு கல்வெட்டில் ஒரு செப்பேட்டில் ஒரு பானை ஓட்டில்
இருந்து இருக்குமே!
இரத்தினசீவன் ஊலர் இத்தகைய பதிவுகளைக் காட்டுவராக. காட்டியபின் தமிழர்கள் கிறித்துவர்களாக
இருந்தார்கள் என்ற கூற்றுக்கு வருவாராக.
போர்த்துக்கேயர் வந்த பின்பே கிறித்தவ மத மாற்றிகளின் வதை முகாம்களால்
இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள தமிழர்களிடையே பரவியது.
இரத்தினசீவன் ஊலர் இதை உணர்வாராக. எவ்வாறாவது கூறி, எதையாவது சொல்லி, எப்படியும் எழுதித் தம் சமூக சமய அரசியல் மேம்பாட்டை நாடுவோர், பொய்மைகளை மெய்மையாக்கும் புலமைப் பாலையரே.
தமிழரின் சமயம் - புனைவுகள்
கடந்த ஐப்பசி எட்டாம் நாள் திங்கள் கிழமை (25 10 2021)
Maatram.org/?p=9699
இரத்தினசீவன் ஊலர் எழுதிய கட்டுரை.
அங்கு ஒரு பந்தி பின்வருமாறு
Quote “1619இல்
போத்துக்கேயராச்சியம் யாழ்ப்பாணத்தை இணைத்தபோது ஏற்கனவே 12,000 கிறிஸ்தவர் இருந்தனர்.
1624இல் இருந்து 1626 வரை ஃப்ரான்சிஸ்கர் சபையினரால் மட்டுமே 52,000 தமிழர் ஞானஸ்நானம்
பெற்றனர். இவர்களில் யாழ் இராச்சியத்தின் பிரமுகர்கள் யாவரும், இராச்சியத்தின்
மூன்று முதலியார்களும், பிராமணர்களில் பெரும்பான்மையினரும் அவர்களின் மனைவியரும் குடும்பத்தினரும்
அடங்குவர் (வண. பிதா ஃபெர்னான் டி. கேரோஸ் 1688 – வண பிதா எஸ் ஜீ பெரேராவின் மொழி பெயர்ப்பு
1930, ப. 659). டிக்கிரி அபேசிங்க (1986, ப. 54) இதை உறுதிப்படுத்துகின்றார்.” Unquote.
இப் பந்தியில் இரு நூலாசிரியர்களை ஊலர் மேற்கோள் காட்டுகிறார்.
Tikiri Abeyasinghe எழுதிய இரு நூல்கள்:
1966 Portugese rule in Ceylon 1594-1623, Lake
House.
1986 Jaffna under Portugese 1505-1648 Lake House
Queyroz 1687இல் எழுதி 1916இல் பதிப்பு. 1930இல் S. G. Perera மொழிபெயர்ப்பு
Queyroz, Fernão de, 1617-1688 Conquista temporal, e espiritual de
Ceylaõ. (The temporal and spiritual conquest of Ceylon / by Fernaõ de Queyroz
; translated by S. G. Perera) both books by Government Printer Colombo.
இரத்தினசீவன் ஊலரின் கூற்றுக்கான அடித்தள ஆதாரம் Queyroz எழுதியனவே.
Fernao de Queyroz கிருத்தவ மத போதகர்
இயேசுவின் சபையின் (S. J.) ஊழியர்
வரலாற்று ஆசிரியர்
1635இல் கொச்சிக்கு வருகிறார்
1635-1642 கோதாவில் தத்துவம் பயில்கிறார்
1647 கோவா பவுலர் கல்லூரிப் பேராசிரியர்
1659 தொடக்கம் 16 ஆண்டுகள் கோவாவின் மதமாறாதோரை வதைக்கும்
(Goa Inquisition) அமைப்பின் துணைத் தலைவர்.
Fernao de Queyroz இந்தியாவில் வாழ்ந்த காலங்கள், இலங்கையில் ஒல்லாந்தர் ஆண்ட காலங்கள்.
கத்தோலிக்க மதத்துக்கு இலங்கையில் தடை இருந்த காலங்கள்.
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வர முடியாத காலங்கள்.
Queyroz இலங்கைக்கு ஒருபொழுதும் வரவே இல்லை. ஆனாலும் கத்தோலிக்கர்
இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாற்றை எழுதுகிறார்.
போர்த்துக்கேயர் காலத்தில் Pedro de Basto. இலங்கையில் பயணி. தன் பயணங்களில் கண்ட கேட்டவற்றைக் குறிப்புகளாக எழுதினார். இப் பயணக்குறிப்புகள் Queyroz எழுதிய நூலுக்கு அடித்தளம் அல்லது ஆதாரம்.
Paul Peries, S. G. Prerera, Tikiri Abeyasinghe ஆகியோர் Queyroz எழுதியவற்றை ஆதாரமாகக் கொண்டு இலங்கையில் போர்த்துக்கேய வரலாற்றை எழுதினர்.
மதம் மாற மறுத்தவர்களை வதை செய்த கோவா அமைப்பில் (Goa Inquisition) 16 ஆண்டுகள் துணைத் தலைவராக இருந்தவர் எழுதிய இலங்கை வரலாறு. இலங்கைக்கு வராதவர் எழுதிய இலங்கை வரலாறு. இலங்கையைக் கத்தோலிக்கம் கைப்பற்றியதாக எழுதிய வரலாறு.
இந்த நூலையே இரத்தின சீவன் ஊலர் மேற்கோள் காட்டுகிறார்.
இலங்கையைக் கத்தோலிக்கர் கைப்பற்றியதாக Queyroz எழுதினார். போர்த்துக்கேய வாசகரை நோக்கி எழுதினார். வெற்றிக்கான புனைவுகளையே எழுதினார். தமக்கு ஊதியம் தருவோர் மன நிறைவுக்காகவே எழுதினார்.
அவர் எழுதிய நூலில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி மேலை நாட்டுப் பல்கலைக் கழக ஆய்வாளர் பலர் எழுதினர்.
ஒரு சில எடுத்துக்காட்டுகளை இங்கே தருகிறேன்.
இலங்கையில் மண்ணில் எழுந்த அரசுகள் வரலாற்று நூல்கள் யாவும் மிகையான கற்பனைகளைக் கொண்டவை என Queyroz எழுதுகிறார்.
சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாதகல் மயில்வாகனப் புலவர் மண்ணின் மகன்.
தாதுசேனன் அவையின் மகாநாமர் மண்ணின் மகன்.
நான்காம் பராக்கிரமபாகு அவையில் பூசாவழி எழுதிய
பெருமகன் மண்ணின் மகன். அதே காலத்தில் சரசோதி மாலை எழுதிய போசராசர் மண்ணின் மகன்.
ஆறாம் பராக்கிரமபாகு அவையில் கோகில சந்தேசய என்று குயில்
தூது எழுதிய முள்கிரிகல் தேரர் மண்ணின் மகன்.
புவனேகபாகு அவையின் நிக்காய சங்கிரகம் எழுதிய சங்கராசர் தருமகீர்த்தி மண்ணின்
மகன்.
இவர்கள் எழுதிய குறிப்புகளை அண்மைய தொல்லியல் சார்ந்த கல்வெட்டு மற்றும் ஆவணச் சான்றுகள் உறுதியாக்கி வருகின்றன.
திசமகாரமகமத்துத் திரளி முறி தொடக்கம் ஆனைக்கோட்டைப் பானை ஓடு வரை, இலங்கைத்தீவு முழுவதுமான கல்வெட்டுச் சான்றுகள் செப்பேட்டுச் சான்றுகள் ஆவணச் சான்றுகள் இலக்கியச் சான்றுகள் யாவும் Queyroz தவறான வரலாற்றை எழுதியவர் என்பதை நிறுவின.
திருகோணமலையில் உள்ள குளக்கோட்டன் கல்வெட்டு சிங்கள மொழியில் உள்ளதாகத் தவறாக Queyroz எழுதியுள்ளார்.
இலங்கை முழுவதும் போர்த்துக்கேயர் காலத்தில் தமிழர், தமிழையே பேசி வாழ்ந்தனர் என்றும் இவர்களுக்குப் புத்தசமய நூல்கள் அமைந்த பாளி மொழியை வாசிக்கத் தெரியாது என்றும் தவறாக Queyroz எழுதியுள்ளார்.
Queyroz எழுதிய நூலைப் படிக்கும் புலமைசார் தேசியவாதிகள் சினம் கொள்வரே அன்றி மேற்கோளாகக் கொள்ளார்.
Queyroz எழுதிய தவறுகளையும் கற்பனைகளையும் பொருந்தாக் கூற்றுகளையும் மேற்கோளாக்கும் இரத்தின சீவன் ஊலரின் புலமை?
My recent experience with Christian Boards of management has shown me how this embezzlement is done
One common way is to give employment to board members even when the local organization’s constitution insists that a Board member must be service oriented and cannot take a salary
The Rev. Gnanasara Thero and his Hindu counterpart Maruwanpulavu Sachithananthan allege unethical conversions by Christians. As a Christian, knowing many converts to Christianity as sincere and genuine, I have always been dismissive of such claims and still am.
Recent events however make me think that there is another dimension of their accusations that we need to give heed to. It is unethical leadership among Christians who run the new churches and are a blight on Christianity.
The new Christians are trusting of their leaders who are often good people – but not always. However, many leaders are backed from the West by the generous tithing practices of their members. When those whom they support in Sri Lanka misuse the funds given to them to preach the Gospel, those organizations funding these bad leaders find it awkward to blow the whistle. Diverting money to new sources is not easy for the western donors as they balance the need to maintain their charity status from their government with the need not to be seen as helping with conversions. The issue of misused money makes the donor organizations own individual donors ask if their hard-earned money needs to be diverted to be more useful. And then after the donor agencies advertising their local ministers here and their work as stellar, how do the donor churches in the West tell their individual donors that their previous advertisements were wrong? So they continue to support the bad pastors here despite the fact they are unfit to be pastors. They cover-up.
I have seen many new converts to Christianity becoming Christian leaders and rich overnight. Corruption is difficult to prove. Property acquired overnight is explained away as a donation from a sibling overseas. Then there is the unbeatable excuse: Jesus rewards the faithful. Praise the Lord
I have seen many new converts to Christianity becoming Christian leaders and rich overnight. Corruption is difficult to prove. Property acquired overnight is explained away as a donation from a sibling overseas. Then there is the unbeatable excuse: Jesus rewards the faithful. Praise the Lord.” We know there is something amiss. But little can be proved.
My recent experience with Christian Boards of management has shown me how this embezzlement is done. One common way is to give employment to board members even when the local organization’s constitution insists that a Board member must be service oriented and cannot take a salary. Most Board Members are respected leaders who come for meetings, receive an honorarium and agree to these illegal appointments to fellow board members and thereby misuse the authority of their offices outside the organization. I am aware of tsunami funds being used to employ Board Members disallowed from employment. Persons persuaded to give their names to these Boards make an impressive list: Bishops, Accountants, President’s Counsel, Bank Managers, Evangelical Professors et al. Who would dare to cross the Boards on which they serve?
The new Christians are trusting of their leaders who are often good people – but not always. However, many leaders are backed from the West by the generous tithing practices of their members. When those whom they support in Sri Lanka misuse the funds given to them to preach the Gospel, those organizations funding these bad leaders find it awkward to blow the whistle
Another devise is to receive funds from abroad to buy property and then to buy the property not for their organization but in the name of their relations. I know one guy who was a butcher as a youth with the reputation of coming home with stolen pieces of meat in his pockets. Today he is a millionaire Christian minister. Another rich fellow with his own church is known for scouring crows’ nests in his boyhood for eggs.
An example involves Pastor Paul Fountain, a Trustee of Providence Trust, U.K. He worked with Care Sri Lanka of Lanka Evangelistic Fellowship of Churches (LEFC) based in the East. Pastor Fountain’s complaint reads:
“I’m a trustee of a UK charity called the Providence Trust. In December 2016 we gave £33,000 to purchase a large field next to the Children’s Home at 6 Mile Post in Trincomalee. I think it is around 1.5 acres. At one end is the Sunshine Day Care Centre and the other end borders a house and home garden on the road connecting the boys and girl’s homes. The land was owned by Habitat. My trust paid towards the purchase of the land. £33,000 was given to LEFC. I have the receipts.
“Over the next 3 years whenever I asked what was happening about the land [I was given] different reasons why it had not been possible to purchase it yet. Recently I realized the field had almost certainly had not been purchased, particularly as the Children’s Home had closed and I’d not been informed.
“I raised these concerns with one of the Care Sri Lanka trustees who is in Sri Lanka looking at the finances. I told him if the money from the Providence Trust had not been used to purchase the land it must be returned to the trust. He agreed with this. However despite a lot of pressure from myself in the last week, he has not responded to my requests to check if LEFC has any ‘land deeds’ or receipts to prove they purchased the land from Habitat.”
I was asked to see if I could get a letter from Habitat with a simple statement saying either they still own the land or they sold it and when and to whom they sold it.
I was refused. It appears that this kind of alleged fraud is common with some of these Christian organizations and they cover-up for each other in case their own dealings are ever questioned. The trustees of Habitat are real big shots in the Christian world. When they help coverup, it is an impossible wall to breakdown. Being big-shots in the world, I am sure they will give reasons like privacy when the simple letter I requested lets down nobody’s privacy.
My expectation is that they should bend over backwards to ensure probity in all Christian organizations. When they refuse, it shows how all these organizations help cover up the crimes of respected Christian crooks. I am aware of many respected persons from these organizations who were caught with their hands in the till and were “let go” without punishment to move on to embezzle at another Christian charity.
My own daughter was a high-up at World Vision. An Anglican Bishop was on the Board. When my daughter came across US$ 2million claimed to have gone into putting up a plant and she found nothing there, she told her boss and quietly moved on. Her boss got the relevant company to put up the missing plant without any billing. It is one of the few happy stories although no one was punished.
Some friends say I am playing into Gnanasara Thero’s hands when Buddhists are enriched by the state and engaged in unethical conversions, getting state land and appointments on Commissions, free hostels in universities etc. to encourage their conversion. True, but It is time to investigate poor people who became Christian leaders and got rich overnight. That is the way to build the Kingdome of Jesus Christ, keeping it clean.