Wednesday, November 03, 2021

மன்னார் ஞானசாரர்

 https://www.lankanewsweb.net/tamil/107-news/96262-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0

வணக்கத்துக்குரிய ஞானசாரர் சரியான வழியையே சொல்கிறார்



மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை


மன்னார் மாவட்டம் தொடர்பாக ஒரே நாடு ஒரே சட்டம் செயலணித் தலைவர் வணக்கத்துக்குரிய ஞானசார தேரர் சொல்வதில் தவறு ஏதும் இல்லை.

அம்பலவாணர் சிவபாதசுந்தரம் மூத்த ஆட்சிப் பணியர்.

அவரை மன்னார் மாவட்டச் செயலராக அமைச்சரவை ஏற்றுப் பதவி வழங்கல் கடிதம் வழங்கும் நிலை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு.

மன்னார் மாவட்டத்திற்குக் கத்தோலிக்கரே மாவட்டச் செயலாளர் ஆக வேண்டும் என்ற மன்னார் ஆயரின் கட்டளை. கர்தினால் மல்கம் இரஞ்சித்தரின் கட்டளை. ஒரே நாடு ஒரே சட்டம் இல்லாததால் மன்னாரில் கத்தோலிக்க ஆட்சி.

வங்காலையைச் சேர்ந்த இசுடான்லி த மெல் அம்மையார் ஆட்சிப் பணியர். கத்தோலிக்கர். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிந்தைய மன்னார் மாவட்ட செயலாளர்.

மூத்த ஆட்சிப் பணியர் சிவபாதசுந்தரத்தின் பதவி வழங்கலைத் தடுத்து அவரை விட மூப்புக் குறைந்த ஆட்சிப் பணியரான அம்மையாரைக் கத்தோலிக்கர் என்பதற்காகவே மன்னார் மாவட்டச் செயலர் ஆக்க விதந்தவர் மன்னார் ஆயரின் வழிகாட்டலில் வேண்டுகோளில் கர்தினால் மல்கம் இரஞ்சித்தர்.

இலங்கை அரசு ஒரே நாடு ஒரே சட்டம் எனக் கொண்டு வருவதற்கு மன்னாரில் வத்திக்கான் ஆட்சியை ஒழிப்பதும் ஒரு காரணம். 

மன்னார் மாவட்டம் வத்திக்கானின் ஆட்சியில் உள்ளதா? இலங்கை அரசின் ஆட்சியில் உள்ளதா? என்ற வினா எழுகின்றது.

குடியரசுத் தலைவர் கோத்தபாய தனது ஆட்சியை நிலைநிறுத்த 
1. மன்னாரில் வத்திக்கான் அரசு ஆட்சியை ஒழிக்க 
2. 1948 விடுதலையை முழுமையாக உறுதியாக்க  
3. 1619 இல் போர்த்துக்கேயர் ஆட்சியையும் வத்திக்கான் ஆட்சியையும் முழுமையாக அகற்ற 

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையை முன் வைக்கிறார்.

முருங்கன் தொடக்க நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் யார் என்பதை மன்னார் ஆயர் தீர்மானிக்கிறார். அவரிடம் சென்று முறையிடுங்கள் என வெளிப்படையாக அப்பள்ளியின் கிறித்தவப் பெற்றார் ஆசிரியர் சங்கத்திற்குச் சொன்னவர் மன்னார் மாவட்ட கல்வி அலுவலர்.

கல்விப்பணிப்பாளர் கத்தோலிக்கர். 
கமநல உதவி ஆணையர் கத்தோலிக்கர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலர் தன் ஊரில் சைவக் கோயிலைக் கட்டினார் என்பதற்காகவே அவரை இடம் மாற்றி அங்கே கத்தோலிக்கரை மன்னார் ஆயர் விதந்ததால் பணிக்கு அமர்த்தி இருக்கின்றனர்.

கோயில் மோட்டை அரச காணியில் 27 பராம்பரியக் குடும்பங்களிடம் இருந்து காணியை அடாத்தாகப் பெற்று மடு தேவாலயத்துக்குக் கொடுப்பதற்கு வசதியாக மன்னார் மாவட்டச் செயலாளருக்கு உதவியாக 55% சைவர் வாழும் அங்கு கத்தோலிக்கப் பிரதேச செயலர் ஒருவரை அண்மையில் மன்னார் ஆயர் விதந்து பணிக்கு அமர்த்தினர்.

மன்னாரில் வத்திக்கான் ஆட்சி நடப்பதற்கு வேறென்ன சாட்சி?

1619இல் தொடங்கிய போர்த்துக்கேய ஆட்சியை மன்னாரில் இருந்து முற்றுமுழுதாக விடுவிக்க, இலங்கையின் இறையாண்மையை மன்னாரில் நிலைநாட்ட, இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய இராஜபக்ச ஒரே நாடு ஒரே சட்டம் என்று கொள்கையை முன் வைக்கிறார்.

இலங்கை முழுவதும் போர்த்துக்கேயர் வருகைக்கு முன்பு தேசவழமைச் சட்டத்தின் கூறுகள் அனைத்துப் பகுதிகளிலும் இருந்ததைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய இராஜபக்ச ஒத்துக்கொள்கிறார்.

போர்த்துக்கேயர் சென்றனர் ஒல்லாந்தர் சென்றனர் ஆங்கிலேயரும் சென்றனர் ஆனாலும் உரோம ஒல்லாந்தச் சட்டங்களும் முகம்மதியச் சட்டங்களும் எச்சங்களும் மீநிற்பதால் இலங்கையின் வளர்ச்சிக்குத் தடை.

தேசவழமைச் சட்டத்தை இலங்கையின் ஒரே சட்டமாக அமைப்பதற்கு முயற்சிக்கிறார் குடியரசுத் தலைவர் கோத்தபாய இராஜபக்ச.

அடிமைச் சின்னங்களான முகமதிய கிருத்துவச் சட்டங்களை நீக்குவதற்கு முயற்சிக்கிறார் கோத்தபாய இராஜபக்ச.

அடிமை வாழ்வை விரும்புகின்றவர்கள் எதிர்க்கிறார்கள்.
தேசவழமைச் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருவதை எதிர்க்கிறார்கள். 
ஆபிரகாமிய மதங்களைப் புகுத்த விரும்புவோர் இலங்கையை முகமதிய நாடாக்க வேண்டும் இலங்கையைக் கிருத்தவ நாடாக்க வேண்டும் என்ற மதமாற்றப் பரம்பலில் ஆர்வமுள்ளோர் ஒரே நாடு ஒரே சட்டத்தை எதிர்க்கிறார்கள்.

இதே சட்டங்களும் இதே வசதிகளும் தொடர்ந்தால் இன்னமும் 10 15 ஆண்டுகளில் இலங்கையும் முகமதிய நாடே என மேனாள் அமைச்சர் சம்பிக்க இரணவக்க எழுதிய நூலை அனைவரும் படிக்க வேண்டும்.

No comments: