மாசி 26, 2050 சனி (09.03.2019)
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
கரி வகைகள் மூன்று. கரி12, கரி13, கரி14. இவற்றுள் கரி14 கதிர் சார்ந்தது. இயற்கையில் தொடர்ந்து உற்பத்தியாவது.
கரி14 + உயிர்வாயு = ஒற்றைக்கரியமிலம் அல்லது இரட்டைக் கரியமிலம்.
கரியமில வாயுவைத் தாவரங்கள் உள்ளீர்ப்பன, பச்சையத்தை ஊக்கியாக்குவன. சூரியனின் ஒளிக் கதிர் சேர்ப்பன. முதலுணவான சர்க்கரை தருவன. விலங்குகள் தாவரங்களை உண்பன.
உயிர் உள்ளவரை தாவரங்களிலும் விலங்குகளிலும் உள்ளிருக்கும் கரி14, சூழலிருக்கும் கரி14 உடன் சமநிலையில்.
உயிரிழந்ததும் இச்சமநிலை கெடும். உயிரற்ற நிலையில் கரி14 அளவு குறையத் தொடங்கும். படிப்படியாக இற்றுப் போகும்.
இற்றுப் போகும் வேகம் காலத்தோடு தொடர்புடையது என்பதைக் ஆயந்தறித்து கொள்கையாகக் கூறியவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
ஓராண்டில் இவ்வளவுதான் இற்றுப்போகும் என்ற வரையைறை உண்டு.
உயிரிழந்த காலத்தில் சூழலில் கரி14 அளவு இதற்கு அடித்தளம். அச் சூழல் அளவைத் தெரிந்தால் அந்த அளவில் இருந்து இற்றுப் போன கரி14 அளவைக் கணக்கிடலாம்.
இன்றைய சூழலில் கரி14 அளவு, உயிரிழப்புச் சூழலில் கரி14 அளவு, உயிரற்றதில் கரி14 அளவு, இந்த அளவு மாற்றங்கள் காலக் கணக்கீட்டில் உதவுவன.
கடுவேகத் துகள் ஒளிமானி (Accelerator Mass Spectrometry technique) என்ற கருவியே இந்த அளவீட்டைத் தருகிறது.
உலகில் 46 கருவிகள் உள. இந்தியாவில் மும்பையில் 2018 தொடக்கம் ஒரு கருவி உண்டு. ஐரோப்பாவில் 22, அமெரிக்காவில் 9, ஆத்திரேலியாவில், யப்பானில் 8, ஆத்திரேலியா 3, நியுசிலாந்து 3, சீனா 1, கனடா 1, கொரியா 1.
ஒரு மாதிரிப் பொருளின் ஆய்வுக்குக் கட்டணம் இலங்கை ரூ. 150,000 ஆகலாம்.
மருத்துவர் ஒருவரிடம் போகிறோம். நோய் ஈதென்கிறார். மற்றொரு மருத்துவரிடம் போனால் வேறொரு நோய் எனலாம். இரண்டாவது கருத்துக் கேட்டல், அனைத்துத் தொழில் சார் துறைகளிலும் வழமை.
மன்னார் எலும்புக்கூடுகள் தொடர்பாக இரண்டாவது கருத்துக் கேட்டலே பொருத்தமானது. இரண்டாவது ஆய்வுகூடமும் இதையே சொலின், தொல்லியலார், வரலாற்றாய்வாளருக்குப் பணியே அன்றி, ஊகிப்போரின் பணி அன்று.
கற்பனைகள் இன, மத மோதல்களைப் பெருக்கும். சைவ சமயிகளாகிய நாம் இலங்கையில் மதிப்புடனும் மாண்புடனும் வாழ் விழைகிறோம். அனைத்துச் சமயத்தவரின் நெறிகளையும் மதித்து நடப்போம்.
வேற்று மத்ததவர் இதை உணர்ந்து, சைவ சமயத்தை, சைவ சமயத்தவைரை, சைவ வாழ்வியல் நெறிகளை மதித்து வாழ்வாராக.
1 மத மாற்றத்தை ஏற்கோம்.
2 சைவ வழிபாட்டிடங்களில் வேற்று மத ஊடுருவல்கள், ஆக்கிரமிப்புகளை ஏற்கோம்.
3 சைவ வாக்காளர் வாக்களித்துத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சைவ சமயத்துக்கும் சைவர்களுக்கும் சைவ வாழ்வியல் நெறிகளுக்குமே மாற்றாக, எதிராக, இடுக்கண் தருவதை ஏற்கோம்.
4 சைவத்தைப் போற்றுபவர்களுக்கே தேர்தல்களில் வாக்களிக்குமாறும் சைவ வாக்காளரைக் கோருவோம்.
2 சைவ வழிபாட்டிடங்களில் வேற்று மத ஊடுருவல்கள், ஆக்கிரமிப்புகளை ஏற்கோம்.
3 சைவ வாக்காளர் வாக்களித்துத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சைவ சமயத்துக்கும் சைவர்களுக்கும் சைவ வாழ்வியல் நெறிகளுக்குமே மாற்றாக, எதிராக, இடுக்கண் தருவதை ஏற்கோம்.
4 சைவத்தைப் போற்றுபவர்களுக்கே தேர்தல்களில் வாக்களிக்குமாறும் சைவ வாக்காளரைக் கோருவோம்.
No comments:
Post a Comment