Wednesday, March 13, 2024

புத்தர்களின் எல்லை மீறல்கள்

வடக்கு, கிழக்கில் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சைவ ஆலயங்கள். • ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம் • மாந்தைகிழக்கு பத்திரகாளி அம்மன் கோவில் • ஸ்ரீ சித்திரவேலாயுதம் முருகன் கோவில் • குமுழமுனை ஆஞ்சநேயர் கோவில் • பாண்டியன்குளம் சிவன் கோவில் • வவுனிக்குளம் சிவபுரம் சிறீமலை கோவில் • குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோவில் • மன்னார் திருக்கேதீஸ்வரக் கோவில் • மயிலிட்டி போர்த்துக்கேயர் கோவில் • ஒதியமலை வைரவர் கோவில் • முள்ளியவளை குமாரபுரம் முருகன் கோயில் • தென்னமரவடி கந்தசாமிமலை கோயில் • செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் • புல்மோட்டை அரிசி ஆலை மலை கோவில் • வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் • சூடைக்குடா மலைப்பகுதி முருகன் ஆலயம் • திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம் • மூன்றுமுறிப்பு கண்ணகி அம்மன், • சிவபுரம் சிவாலயம், • மாந்தை கிழக்கு ஆதிசிவன் கோயில் • குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் • ஸ்ரீ மலை நீலியம்மன் கோயில் • கல்லுமலை பிள்ளையார் கோவில் • மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயம் • மட்டக்களப்பு கச்சக்கொடி சுவாமிமலை • குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் • மட்டக்களப்பு, சித்தாண்டி முருகன் ஆலயம் • கன்னியா வெந்நீர் ஊற்று • உருத்திரபுரம் சிவன் கோவில் • குசலமலை சைவ குமரன் ஆலயம் • காங்கேசன்துறை சைவ ஆலயம் • கீரிமலை சிவன் ஆலயம், • சடையம்மா மடம், • காங்கேசன்துறை முருகன் ஆலயம் • வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயம் • நெடுங்கேணி நொச்சியடி ஐயனார் ஆலயம் • சுழிபுரம் பறாளை முருகன் கோவில் ...................... ......................... மேற்படி ஆலயங்களில் சில சிதைக்கப்பட்டு இருக்கின்றன . அதே போல சில ஆலய சூழலுக்குள் பௌத்த மத அடையாளங்கள் நிறுவப்பட்டு இருக்கின்றன. இது தவிர, 823/73 ம் இலக்க தொல்லியல் கட்டளைச்சட்டம் (188ம் அத்தியாயம்) 16 ஆம் பிரிவின் கீழ் 2013 ஆம் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம் வடக்கு கிழக்கில் 98 ற்கு மேற்பட்ட இடங்களில் தொல்லியல் சிதைவுகள் இருப்பதாக உரிமை கோரி இருக்கின்றார்கள். அதே போல வடக்கு கிழக்கின் நிலமட்டத்திற்கு உயரமான மட்டக்களப்பு மாவட்ட நிலப்பரப்புக்கு உரிய தொப்பிகல (குடும்பிமலை), தாந்தாமலை மலை, குசலானமலை திருகோணமலையின் ராஜவந்தான் மலை, சூடைக்குடா மலை, அரிசி மலை போன்ற பகுதிகள் எங்கும் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக சொல்லுகின்றார்கள். இது போதாதெதென்று அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 246 இடங்களை பௌத்த மதம் சார்ந்த இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். திருகோணமலை மாவட்டத்தில் மேற்குறித்த இடங்கள் உள்ளடங்கலாக 74 இடங்களை பௌத்தமதம் சார்ந்த இடங்களாக அடையப்படுத்தி இருக்கிறார்கள். அதே போல மட்டக்களப்பில் 28 புத்த விகாரைகள் உட்பட 55 பௌத்த மதத்தோடு தொடர்புடைய இடங்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.


https://www.facebook.com/share/rgCsFDNXxUTg4N8g/?mibextid=oFDknk


கிளி அக்கராயன் பொலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் சிலையை காணவில்லை 


கிளிநொச்சி அக்கராஜன் பொலிஸ் பணிமனை வளாகத்தினுள் உள்ள பிள்ளையாரை இலங்கை பொலிஸ் பிரிவினர் அடைத்து வைத்துள்ளனர் வளாகத்தினுள் இருந்த பிள்ளையார்  சிலையை காணவில்லை 


தற்போது அரசமரம் ஒன்று வளர்ந்து வருவதாகவும் மக்கள் தெரிவித்த கருத்து அடுத்து இன்று அதனை நேரடியாக சென்று பார்த்தேன்


சைவ வழிபாட்டுக்கு எதிராக அக்ராயன் பொலீசாரின் நடவடிக்கை அப்பகுதி இந்து மக்களை மாத்திரமல்ல அனைத்து மக்கள் மனதிலும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 


மக்களின் நண்பர் நாங்கள் என்று சொல்லிக் கொண்டு மக்களின் வணக்க வழிபாட்டு முறைகளுக்கு நெருக்கு வாரத்ததை மேற்கொண்டு வருகிறது. ஸ்ரீலங்கா பொலீஸ்


முன்னாள் கரைச்சி பிரதேசசபை தவிசாளர்

#velamalikithan அவர்களின் பதிவிலிருந்து...


https://www.facebook.com/share/PZxDR26tEEYKihGK/?mibextid=oFDknk


முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் சூழலில்  நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குவின் பூதவுடல் தகனம் செய்தது தொடர்பாக ஞானசார தேரர், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக முன்னாள் பா உ சாந்தி சிறிஸ்கந்தராஜா வழக்கு தாக்கல் செய்து இருந்தார் 


குருந்தூர் மலையில் தமிழ்மக்களின் பொங்கலை தடுத்து அடாவடித்தனங்கள் புரிந்த கல்கமுவ சாந்தபோதி தேரருக்கு எதிராக பா உ கஜேந்திரன் பொலிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்து இருந்தார்


குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த பொதுமக்களை மோசமாக இம்சித்த பொலிஸ் அதிகாரிகள் மீது பா உ சுமந்திரன்  ரணில் விக்ரமசிங்கே அவர்களிடம்  முறைப்பாடு செய்து இருந்தார்


தமிழர்களை வெ...டுவேன், கொ..லுவேன் பேசிய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் மீது சமூக செயல்பாட்டாளர்  ராஜ்குமார் ராஜீவ்காந்த் குற்ற புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்து இருந்தார்


திருகோணமலை பொன்மலைக்குடா மக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்த பிக்கு  பாணமுரே திலகவன்ச தேரர் மீது சிவில் சமூக அமைப்புகள் முறைப்பாடு பொலிசில் முறைப்பாடு செய்து இருந்தனர்


மயிலத்தமடு மாதவனை பகுதிக்கு சென்ற சர்வ சமய தலைவர்கள்18 பேரை பௌத்த தேரர் தலைமையிலான குழுவினர் 6 மணித்தியாலம் தடுத்து வைத்தது தொடர்பாக பா உ கஜேந்திரகுமார் ஜனாதிபதி செயலாளர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம்  முறையிட்டு இருந்தார்


திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து  ஆளுநர் செந்தில் தொண்டைமானை அச்சுறுத்திய பிக்குகள் மீது அரச அதிகாரிகளே முறைப்பாடு செய்து இருந்தனர் 


திருகோணமலையில் குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் அழிக்கப்பட்டு  "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில்  விகாரை ஒன்று கட்டப்பட்டு இருக்கிறது என ஆலய நிர்வாகிகள் முறைப்பாடு செய்து இருந்தனர் 


காங்கேசன்துறை சை  ஆலய சூழலில் கெமுனு விகாரை என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள் என சைவ அமைப்புகள் முறைப்பாடு செய்து இருந்தனர் 

 

மட்டக்களப்பில் குசலமலை சைவ குமரன் ஆலயத்தின் முன் கதவு , மூலஸ்தான விக்கிரம்  என்பன அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன என சிவில் அமைப்புகள் முறைப்பாடு செய்து உள்ளனர் 

  

கீரிமலை சிவன் ஆலயம், சடையம்மா மடம்,  முருகன் ஆலயம் என்பன அழிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டு இருக்கின்றமை குறித்து ஆறு திருமுருகன்  முறைப்பாடு செய்து உள்ளார் 

 

வவுனியா பூவரசங்குளம் மலையிலிருந்த பிள்ளையார் சிலை, சூலம் என்பன சேதப்படுத்தப்பட்டுள்ளன என ஆலய பரிபாலன சபையினர் முறைப்பாடு செய்து உள்ளனர் 

 

குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவிலின்  சூலம் பிடுங்கி வீசப்பட்டு இருக்கின்றது என மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முறைப்பாடு செய்து இருந்தார் 


வெடுக்குநாறி மலை சிவலிங்கம் அடித்து நொறுக்கப்பட்டது  என பூசகர் முறைப்பாடு செய்துள்ளார்  


தென்னவன்மரபடி  மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வினை பொலிஸ் அதிகாரிகளே தடுத்தனர் என முறைப்பாடு உள்ளது 


தையிட்டியில் மக்களது காணிகளை  சட்டவிரோதமாக  சுவீகரித்து கட்டப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்


ஆனால்  சிங்கள பௌத்த அரசியலின் அடிப்படைக் கருத்தியலை கேள்விக்குட்படுத்த மேற்கொள்ளப்பட்ட இந்த முறைப்பாடுகள் மீது இதுவரை குறைந்தபட்ச  நடவடிக்கை கூட இல்லை


Failed State Sri Lanka வில்  சட்டங்களே மோசமாக இருக்கின்றன. 


இதற்கு அப்பால் சட்டத்துக்கு புறம்பான ஆட்சியும் (extra-legal regime) நடைபெறுகின்றது. 


இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான ஆட்சியை நீதிமன்றங்களும் அங்கிகரிக்கின்றன.



தமிழர்களை வெ*ட்டுவேன், கொ*ல்லுவேன் என அச்சுறுத்திய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் மீது ICCPR கீழ் நடவடிக்கை எடுக்க முகாந்திரமிருந்தும் எந்தவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை 


தமிழ் மக்களின் தலைகளை கொய்து களனிக்கு கொண்டு செல்வதாக அச்சுறுத்திய  மேர்வின் சில்வா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 


அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளின் தலை மீது கைத்துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை 


தொல்பொருள் திணைக்களம் ஊடாக இராணுவத்தின் உதவியுடன் அச்சுறுத்தி தமிழர் நிலங்களை அபகரித்த  அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மீது எந்த  நடவடிக்கையும் எடுக்க வில்லை 


திருகோணமலை பொன்மலைக்குடா மக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்த பிக்கு  பாணமுரே திலகவன்ச தேரர் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை 


திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து  ஆளுநர் செந்தில் தொண்டைமானை மோசமாக அச்சுறுத்திய பிக்குகள் மீது  எந்த  நடவடிக்கையும்  எடுக்கவில்லை 


குருந்தூர் மலையில் தமிழ்மக்களின் பொங்கல் நிகழ்வில்  தமிழர்களை அச்சுறுத்திய கல்கமுவ சாந்தபோதி தேரர் மீது  எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை  


நீதிமன்ற உத்தரவுகளை மீறி மாதவனை மயிலத்தமடுவில் குடியேறி கால்நடைகளை மிக மோசமாக அழித்து வரும் கும்பல் அப் பகுதிக்கு பயணம் செய்த சர்வ மத குழுவினரை சட்டவிரோதமாக தடுத்து வைத்து அச்சுறுத்திய போதும் அவர்கள் மீது  எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை  


முல்லைத்தீவு நீதிபதி திரு சரவணராஜா அவர்களை அச்சுறுத்தி நாட்டை விட்டு வெளியேற்றியது  தொடர்பாக எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை 


ஆனால் இப்போது திரு ரணில் விக்ரமசிங்கே சட்டத்தின் ஆட்சி பற்றி பேசுகின்றார் .


தமிழர்களை அவர்கள் மீதான சகல அச்சுறுத்தலிருந்து காப்பாற்ற போவதாக கதை சொல்லுகின்றார் 


ஒருபோதும் தமிழர்கள் மீதான  அச்சுறுத்தல்களுக்கு இடமளிக்கவில்லை எனவும் புதிதாக கதைக்கின்றார் 


எங்கள் மறதி தான் திரு ரணில் விக்ரமசிங்கே போன்ற பலருக்கு  வாய்ப்பாக  இருக்கின்றது

No comments: