தை 22 செவ்வாய்க்கிழமை (06.02.2024)
யாழ்ப்பாண வெறுப்பை வளர்க்காதீர்கள்
பிரதேச வாதத்துக்குப் புத்துயிர் அளிக்காதீர்கள்
மட்டக்களப்பில் திரு சாணக்கியன் திரு பிள்ளையான் இருவரும் யாழ்ப்பாணத்தார் பற்றிய கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள்.
சிறப்பாகத் தவத்திரு வேலவன் சுவாமிகள் தொடர்பாக அவர்கள் கூறியவை கூர்ந்தும் ஆழ்ந்தும் கவனிக்கத்தக்கன.
இந்த நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்குச் செருப்படி.
யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் பலர் தங்களைத் தலைவர்கள் என்றும்
தாங்கள் எங்கு எதை நினைத்தாலும் செய்யலாம் என்றும் நினைக்கின்ற மேலாதிக்க உணர்வு கொண்டவர்கள்.
கூட்டமைப்பு கூட்டணி என்றால் வலிகாமத்தாரும் வடமராட்சியாரும் கூடுகின்ற நிகழ்ச்சியாக இலங்கைத் தமிழர் நகைமுரணுடன் பார்க்கிறார்கள்
சிவ சேனையின் அணுகுமுறை முழுக்க வேறுபடும்.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் மதமாற்றக் கூட்டத்தை நிறுத்தியதை யாழ்ப்பாணத்தில் இருந்தே செய்தோம் வழிகாட்டினோம்.
ஆனால் நிகழ்த்தியவர் அனைவரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கூட அங்கு இல்லை.
திருகோணமலையில் மதமாற்றக் கூட்டத்தை வெற்றிகரமாகத் திருகோணமலையைச் சேர்ந்தவர்களே தடுத்தார்கள்.
மன்னாரில் நடக்கின்ற சிவ சேனை நிகழ்ச்சிகளை மன்னாரில் உள்ளவர்களே நடத்துகிறார்கள்.
வவுனியாவில் பசுக் கொலைக்கு எதிரான இரண்டு கிலோமீட்டர் நீண்ட ஊர்வலத்தை வவுனியாவினரே நடத்தினார்கள்.
கிளிநொச்சியில் முன்னெடுக்கின்ற மதமாற்றத் தடை நிகழ்ச்சிகள் அனைத்தையும் கிளிநொச்சி வாழ் சைவர்களே தீர்மானிக்கிறார்கள்.
கல்முனையில் மதமாற்றிய ஒருவரை நாடகற்றுகின்ற முயற்சியில் வெற்றி பெற்றவர் கல்முனையைச் சேர்ந்தவரே.
சிலாபத்தில் வெளிநாட்டு மதமாற்றி ஒருவரைத் திருப்பி அனுப்புகின்ற முயற்சியில் வெற்றி பெற்றவர் சிலாபத்தைச் சேர்ந்தவரே.
திருகோணமலையில் மன்னாரில் வவுனியாவில் கிளிநொச்சியில் அம்பாறையில் முல்லைத்தீவில் மலையகத்தில் வெற்றிகரமாகப் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். சிவசேனை சார்பில் நடத்தி வருகிறோம்.
எந்தச் சிக்கல்
எங்கு வந்தாலும்
அந்தச் சிக்கலைத் தீர்ப்பவர்கள்
அந்த ஊரின்
அந்த மண்ணின்
அந்தப் பிரதேசத்தின்
அந்த வாழ்வியல் முறையை மாற்றுகின்ற நோக்கம் கொண்டவர்களாக இருப்பதைச் சிவ சேனையினர் பார்த்துக் கொண்டோம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியே
யாழ்ப்பாண எதிர் உணர்வு
அடி மனதில் கடுமை.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் வருகிறார். சிவ சேனையினர் சந்தித்தனர். அமைச்சர் சிவ சேனையினரிடம் சொல்கிறார் ....எங்கள் குடியுரிமையைப் பறித்தவர்கள் யாழ்ப்பாணத்தவரே....
எனவே எந்த இடத்தில் என்ன நிகழ்ச்சியைச்
சிவ சேனை நடத்தினாலும் அந்த ஊர் மக்களே முன்னெடுக்குமாறும் முன்னிற்குமாறு பார்த்துக் கொள்கிறோம். அவர்கள் அழைத்து நாங்கள் சென்றாலும் பின் வரிசையில் இருந்து பார்த்து விட்டு வருவோம். முன் வரிசைக்குப் போக மாட்டோம்.
சிவ சேனையில் எந்த ஒரு போராட்டத்திலும் முயற்சியிலும் பின்னடைவு இல்லாமல் முன்னேற்றங்கள் இருப்பதற்கு அந்த மண்ணின் அந்த ஊரில் அந்தப் பிரதேசத்தின் மக்களே முன்னெடுப்பது அடிப்படைக் காரணம்.
வலிகாமமும் வடமராட்சியும் இலங்கைத் தமிழரின் தலைமையகம் அல்ல.
வடமராட்சியாரும் வலிகாமத்தாரும் அவ்வாறு நினைப்பதால் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறோம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் தீவகத்தாரும் தெனமராட்சியாரும் பச்சிலைப்பள்ளியாரும் வலிகாமத்தாராலும் வடமராட்சியாராலும் தொடர்ச்சியாகப் புறந்தள்ளுவதை அரசியலில் சமூகத்தில் பிற சமூகக் கூறுகளில் தாங்கிக் கொண்டே வந்திருக்கிறோம்.
யாழ்ப்பாண எதிர்ப்புக்கு உங்களை அறியாமலே வழி கோலுகிறீர்கள். பிரதேச வாதத்துக்குப் புத்துயிர் ஊட்டுகிறீர்கள்.
No comments:
Post a Comment