27.11.2011
தேவார திருவாசகமாதி அருட் திருமுறைகள்
நாவார ஓதி நயக்க பல் மொழி வரியிலும்
பாவாணர் உளங்கொள புத்தாக்கம் செய்
கோவாம் சச்சிதானந்த பெரியார் நீடு வாழ்கவே
தருமைக் குருநாதர் தந்த ஆசி பெற்றே
தாய்லாந்தின் அரசகுரு வாமதேவமுனி
அரிதுணர்ந்து போற்ற மணிவாசகர் தந்த
அற்புதத் திருவெம்பாவைத் தேனை
இருளகல ஒளிபரவ கிரந்தத்தில் தந்த
இனியவராம் மறவன்புலவூரார் ஈசன்
கருணை மிகப்பெற்ற சச்சிதானந்தர் நற்
காரியங்கள் பற்பல செய்து வாழ்க நீடு
No comments:
Post a Comment