Saturday, November 04, 2023

தமிழரின் காலக் கணக்கு



6000 அல்லது 7000 ஆண்டுகளுக்கு முந்தைய கணியன் அல்லது கணிப்பாளர் வானத்தின்


1 சூரியன்

2 நிலவு

3 கோள் மீன்கள்

4 நாள் மீன்கள்


பூமியிலிருந்து பார்க்கும் பொழுது இவை எந்த நிலையில் தெரிகின்றன என்பதை வைத்தே காலத்தைக் கணக்கிட்டார்கள்.


(1) சூரியன்


சூரியன் உதிக்கும் நேரத்தில் இருந்து அறுபது நாழிகை ஒரு நாள்.


பகலின் தொடர்ச்சியான இரவும் அதே நாள். 


முற்பகல் 

பிற்பகல் 

முன்னிரவு 

பின்னிரவு.


பூமியானது சூரியனைச் சுற்றிவர 365.25 நாள்கள்.


(2) நிலவு


நிலவைப் பார்த்தார்கள். 

வளர்வது போலவும்

தேய்வது போலவும் தெரிகிறதே. 


நிலவு வளர்வதும் இல்லை. 

நிலவு தேய்வதும் இல்லை.


வளர்பிறை 14 நாள்கள் 

தேய்பிறை 14 நாள்கள்.


மூன்றாம் பிறை பார்க்கலாம் நான்காம் பிறை பார்க்கலாம் என்றெல்லாம் தமிழர் பேச்சு வழக்கு.


அதையே வடமொழியில் திகதி என்றும் பின்னர் சுருக்கித் திதி என்றும் சொன்னார்கள்.


இன்று வளர்பிறை மூன்றாம் நாளா? நான்காம் நாளா? என 14 நாள்கள் வரையும்


அல்லது 


தேய்பிறை ஐந்தாம் நாளா?

ஆறாம் நாளா? என 14 நாள்கள் வரையும்

 

வடமொழியில் திதி என்று சொல்கிறோம்.


வளர்பிறை நாள்கள் 

வடமொழியில்

சுக்கில பட்சம் 


பிறை வடமொழியில் திதி


0 அமாவாசை - மறைமதி

1 பிரதமை - ஒருமை 

2 துதியை - இருமை 

3 திரிதியை - மும்மை 

4 சதுர்த்தி - நான்மை 

5 பஞ்சமி - ஐம்மை 

6 சஷ்டி - அறுமை 

7 சப்தமி - எழுமை 

8 அஷ்டமி - எண்மை 

9 நவமி - தொண்மை 

10 தசமி - பதின்மை 

11 ஏகாதசி - பதிற்றொருமை 

12 துவாதசி - பதிற்றிருமை 

13 திரையோதசி - பதின்மும்மை 

14 சதுர்த்தசி - பதினான்மை 


0 பவுர்ணமி - நிறைமதி 


தேய் பிறை

வடமொழியில் 

கிருஷ்ண பட்சம்


(3) மாதங்கள்


மதி என்றால் நிலவு. நிலவின் அடிப்படையில் எழுவன என்பதால் மாதங்கள்.


(4) நாள் மீன் (வடசொல் நட்சத்திரம்)


1 சூரியனைப் பார்த்தவர்கள் 

2 நிலவைப் பார்த்தவர்கள் 

அதற்கு அப்பாலுள்ள 

3 வானத்தைப் பார்த்தார்கள்.


உருண்டைக்குள் உருண்டையாகப் பூமி தெரிந்தது. 

பூமி சுழல்வதும் தெரிந்தது. 


சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் என்று திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பூமி உருண்டை என்பதையும் தன்னில் தானே சுழல்கிறது என்பதையும் தெளிவாகக் கூறியிருக்கிறார்.


நிலத்திலிருந்து வானத்தைப் பார்த்து நிலவுக்கு அப்பால் தெரியும் நாள் மீனே வடமொழிச் சொல்லான நட்சத்திரம். 


துல்லியமாக அடையாளம் காணக்கூடிய நாள் மீன்களாக 27ஐக் கண்டறிந்தார்கள் 


அவற்றின் வட சொல்லையும் தமிழ்ச் சொல்லையும் கீழே தந்துள்ளேன்.


1. அச்சுவினி தமிழ்ப் பெயர் புரவி

2. பரணி தமிழ்ப் பெயர் அடுப்பு

3. கார்த்திகை தமிழ்ப் பெயர் ஆரல்

4. உரோகிணி தமிழ்ப் பெயர் சகடு

5. மிருகசீரிடம் தமிழ்ப் பெயர் மான்றலை

6. திருவாதிரை தமிழ்ப் பெயர் மூதிரை

7. புனர்பூசம் தமிழ்ப் பெயர் கழை

8. பூசம் தமிழ்ப் பெயர் காற்குளம்

9. ஆயிலியம் தமிழ்ப் பெயர் கட்செவி

10. மகம் தமிழ்ப் பெயர் கொடுநுகம்

11. பூரம் தமிழ்ப் பெயர் கணை

12. உத்தரம் தமிழ்ப் பெயர் உத்தரம்

13. அத்தம் தமிழ்ப் பெயர் கை

14. சித்திரை தமிழ்ப் பெயர் அறுவை

15. சுவாதி தமிழ்ப் பெயர் விளக்கு

16. விசாகம் தமிழ்ப் பெயர் முறம்

17. அனுசம் தமிழ்ப் பெயர் பனை

18. கேட்டை தமிழ்ப் பெயர் துளங்கொளி

19. மூலம் தமிழ்ப் பெயர் குருகு

20. பூராடம் தமிழ்ப் பெயர் உடைகுளம்

21. உத்திராடம் தமிழ்ப் பெயர் கடைக் குளம்

22. திருவோணம் தமிழ்ப் பெயர் முக்கோல்

23. அவிட்டம் தமிழ்ப் பெயர் காக்கை

24. சதயம் தமிழ்ப் பெயர் செக்கு

25. பூரட்டாதி தமிழ்ப் பெயர் நாழி

26. உத்திரட்டாதி தமிழ்ப் பெயர் முரசு

27. ரேவதி தமிழ்ப் பெயர் தோணி


எந்த நட்சத்திரத்தில் பிறந்தாய் என்று கேட்கிறோமே? 27ளுள் ஒன்றான அந்த நட்சத்திரம்


(5) ஓரை (வட சொல்லில் இராசி) மண்டலங்கள் - படம் இணைப்பில்


நீளம் அகலம் உயரம் என்ற அளவுகளில் அல்லது முப்பரிமாணத்தில் உருண்டை.


நீளம் அகலம் இரு பரிமாணத்தில்  வட்டம்.


வட்டத்தின் சுற்றளவு 360 பாகை.


12 ஆகப் பிரித்தார்கள் ஒவ்வொரு பிரிவும் 30 பாகை.


ஒவ்வொரு பிரிவையும் ஓரை என்றார்கள். வானத்தை 12 ஓரைகளாகப் பிரித்தார்கள்.


நிலத்திலிருந்து நிலவைப் பார்த்தார்கள். 


வானத்தில் தெரியும் அந்த 12 ஓரைகளில் 1 ஓரைவை அந்த மாதத்தின் பெயராக்கினார்கள்.


முழு நிலா நாளில் நிலவுக்கு அப்பால் தெரியும் நாள் மீன் கூட்டம் சித்திரை நாள் மீன் கொண்ட பிரிவாகத் தெரிந்தால் அந்த மாதம் சித்திரை மாதம்.


முழு நிலா நாளில் நிலவுக்கு அப்பால் வானத்தில் கார்த்திகை நாள் மீன் கூட்டம் தெரிந்தால் அது கார்த்திகை மாதம்.


இவ்வாறாக 12 மாதங்களுக்கும் 12 ஓரைக் குழுவில் நன்றாகத் தெரியும் நாள் மீன் 


தவறாமல் அதே மாதத்தில் அதே நாள் மீனோடு முழு நிலா அமையும்.


(6) பிறை (வடசொல் திதி)


நிலவின் வளர்பிறை தேய்பிறை நிலையே இறந்த நாளின் வடமொழிச் சொல்லான திதி.


வடமொழிச் சொற்களான பிரதமை எனத் தொடங்கும் 14 சொற்களில் வருவன திதி. என்ற


பிறந்தநாள் நினைவுக்கு நட்சத்திரம் 


இறந்தநாள் நினைவுக்குத் திதி.

No comments: