பங்குனி 8, 2052 ஞாயிறு (21.03.2021)
இலங்கையை அறிந்தவர் சுந்தரர். (காலம் திபி. 831) திருக்கேதீச்சரப் பெருமான் மீது தமிழோடு இசை பாட "நத்தார் படை.." எனத் தொடங்கும் பதிகம் (07080) தந்து மகிழ்ந்தவர்.
வடமொழியைத் தமிழ் வரிவடிவங்களில் எழுதி மந்திரமாக உச்சாடனிப்போர் போன்று, சுந்தரர் காலத்துக்கு 200 ஆண்டுகள் பின்னர், பாளி மொழியைச் சிங்கள வரிவடிவங்களில் எழுதி உச்சாடனித்தனர்.தொடக்கச் சிங்கள வரிவடிவம் எழுத்து மொழியாக உருப்பெற்ற காலம்.
சுந்தரருக்கு 450 ஆண்டுகளின் பின்னர், (திபி 1297) குருணாக்கல் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட நான்காம் பராக்கிரமபாகு காலத்தில் சிங்கள வரிவடிவத்தில் சிங்கள மொழியில் எழுதியதாக இன்றும் கிடைக்கும் மிகப் பழைய நூல் புத்த பெருமானின் வாழ்க்கை நிகழ்வுகளை அழகான, இலக்கிய நயத்துடன் கூறும் "பூசாவழி" என்பர்.
சிங்கள மொழியின் காதல் தூது இலக்கியமாகப் புகழ் பெற்ற நூல், ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் (திபி. 1441) முல்கிரிக்கல் தேரர் இயற்றிய "கோகில சந்தேசய" எனும் குயில் விடு தூது.
700 ஆண்டுகளாகச் சிங்கள மொழியில் நூல்கள் வெளிவருகின்றன. எனினும் 1100 ஆண்டுகளுக்கு முந்தைய அழகு தமிழ்ச் சுந்தரரின் திருக்கேதீச்சரப் பதிகத்தைச் சிங்கள மக்களுக்கு எவரும் கொண்டு செல்லவில்லை.
1. அறிவுப் பரம்பல்,
2. தமிழின் மரபுகளைச் சிங்களவரும் அறிதல்,
3. சைவக் கடவுளர்களை வழிபட்டு வரும் சிங்கள மக்களின் வாழ்வியலுடன் திருமுறைகளையும் இணைத்தல்
இவற்றை நோக்மாகக் கொண்டு திருவாசகம் (658 பாடல்கள்), ஒன்பாதம் திருமுறை (300 பாடல்கள்) ஆகியன சிங்களத்தில் மொழிபெயர்ப்பாயின.
இவற்றை மட்டக்களப்பு, கல்லடி, கல்வியலாளர், மேனாள் துணை முதல்வர் திரு. வடிவேலு அவர்கள் என் வேண்டுகோளை ஏற்றுச் சிங்களத்துக்கு மொழிபெயர்த்தார்கள்.
தொடர்ந்து 7ஆம் திருமுறையைச் சிங்களத்துக்கு மொழிபெயர்த்து வருகிறார்கள். 100 பதிகங்கள் தொண்ட 7ஆம் திருமுறையில் பின்வரும் 38 பதிகங்களையும் மொழிபெயர்த்துள்ளார்கள்.
திருவாசகம், ஒன்பதாம் திருமுறை, சிங்கள மொழிபெயர்ப்புகளை www.thevaaram.org
தளத்தில் படிக்கலாம். இப்பொழுது 7ஆம் திருமுறையின் 38 பதிகங்களின் சிங்கள மொழிபெயர்ப்புகளைம் அதே தளத்தில் படிக்கலாம்.
001. திருவெண்ணெய்நல்லூர்
002. திருப்பரங்குன்றம்
003. திருநெல்வாயில் அரத்துறை
004. திருவஞ்சைக்களம்
005. திருவோணகாந்தன்தளி
006. திருவெண்காடு
007. திருவெதிர்கொள்பாடி
008. திருவாரூர்
009. திருவரிசிற்கரைப்புத்தூர்
010. திருக்கச்சியனேகதங்காவதம்
011. திருப்பூவணம்
012. திருநாட்டுத்தொகை
013. திருத்துறையூர்
015. திருநாட்டியத்தான்குடி
020. திருக்கோளிலி
034. திருப்புகலூர்
037. திருவாரூர்
038. திருவதிகை வீரட்டானம்
058. திருக்கழுமலம்
059. திருவாரூர்
064. திருத்தினைநகர்
066. திருவாவடுதுறை
067. திருவலிவலம்
073. திருவாரூர்
076. திருவாஞ்சியம்
080. திருக்கேதீச்சரம்
083. திருவாரூர்
087. திருப்பனையூர்
088. திருவீழிமிழலை
093. திருநறையூர்ச் சித்தீச்சரம்
094. திருச்சோற்றுத்துறை
095. திருவாரூர்
096. திருவாரூர் பரவையுண்மண்டளி
097. திருநனிபள்ளி
098. திருநன்னிலத்துப் பெருங்கோயில்
099. திருநாகேச்சரம்
100. திருநொடித்தான்மலை
No comments:
Post a Comment