Tuesday, March 23, 2021

அப்பர் பயணித்த தொலைவுகள்

 கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியது இந்த பதிவை முடிக்க. பெரிய புராணத்தின்படி திருநாவுக்கரசர் சென்ற பாதையை ஆராய்ந்து, இன்று அந்த ஊர்களுக்கு என்ன பெயர் என்று அறிந்து, ஒவ்வொரு ஊருக்கும் அடுத்த ஊருக்கும் உள்ள தூரத்தை கணக்கிட்டு பதிந்துள்ளேன். சுமாராக 60 அல்லது 65 வயதில் தொடங்கி 80 வயது வரை அவர் நடந்து கடந்த தூரம் 14422 கிலோமீட்டர் ! ஒரே நாளில் கடக்கவில்லை. சில நாட்கள் ஒரு இடத்தில் தங்க வேண்டிய நிலைமை. பல நாட்கள் உணவின்றி, நீரின்றி நடை. காலுக்கு செருப்பு கிடையாது. ஓய்வு கிடையாது. மிக சில நாட்கள் விருந்து. பல நாட்கள் பட்டினி, தாகம், வெயில், மழை, குளிர். எல்லா இடங்களுக்கும் நடைதான். இறைவன் ஆசியால் பல்லக்கு பெற்ற ஞானசம்பந்தர் அளவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. உழைத்தார். உனக்குக் என்னென்னவோ செய்தேனே, இப்படி என்னை கைவிட்டுட்டியே பகவானே என்று புலம்புகிறோம் . இவரது தவம் என்னவென்று பாருங்கள். அதில் ஒரு 10% வேண்டாம் ஐயா. அவரது கால் தூசு அளவுக்காவது வரவேண்டாமா? அட ஒரு முயற்சியாவது செய்து தோற்கவேண்டாமா? நமது தவம் என்ன? நமது தவம் எங்கே? தவம் செய்கிறோமா?

எண் இந்த ஊர் முதல் அந்த ஊர் வரை தூரம்

திருவாமூர் – பாடலிபுத்திரம் (பாட்னா, இன்றைய பிஹார் மாநில தலைநகரம்) 2308

பாடலிபுத்திரம் – திருவதிகை 2270

திருவதிகை – திருப்பாதிரிப்புலியூர் 22

திருப்பாதிரிப்புலியூர் – திருவதிகை 22

திருவதிகை – திருமாணிக்குழி 15

திருமாணிக்குழி – திருதினைநகர் 23

திருதினைநகர் (தீர்த்தனகிரி) – திருமாணிக்குழி 23

திருமாணிக்குழி – திருவீரட்டானம் 16

திருவீரட்டானம் – திருவெண்ணைநல்லூர் 125

திருவெண்ணைநல்லூர் – திருவாமாத்தூர் 22

திருவாமாத்தூர் – திருக்கோவலூர் 37

திருக்கோவலூர் – திருபெண்ணாடகம் 86

திருபெண்ணாடகம் – திருத்தூங்கானை 0.5

திருநாரையூர் – சீர்காழி 67

திருவரத்துறை – திருமுதுகுன்றம்(விருத்தாச்சலம்) 58

திருமுதுகுன்றம் – சிதம்பரம் 44

சிதம்பரம் – திருப்பாப்புலியூர் 42

திருப்பாப்புலியூர் – சிதம்பரம் 42

சிதம்பரம் – திருவேட்களம் 5

திருவேட்களம் – திருக்கழிப்பாலை 4

திருக்கழிப்பாலை – திருநாரையூர் 84

திருநாரையூர் – சீர்காழி 62

சீர்காழி – திருக்கோலக்கா 166

திருக்கோலக்கா – திருக்கறுப்பறியலூர் 95

திருக்கறுப்பறியலூர் – திருப்புன்கூர் 98

திருப்புன்கூர் – திருநீடூர் (நீடூர்) 18

திருநீடூர் (நீடூர் – குறுக்கைவீரட்டம்(திருநன்றியூர்) 10

திருநன்றியூர் – திருநனிப்பள்ளி 14

திருநனிப்பள்ளி (பொன்செய்) – திருச்செம்பொன்பள்ளி (செம்பனார் கோவில்) நாகப்பட்டினம் 52

(செம்பனார்கோவில்) நாகப்பட்டினம் – மயிலாடுதுறை 55

மயிலாடுதுறை – திருத்துருத்தி 15

திருத்துருத்தி – திருவேள்விக்குடி 3

திருவேள்விக்குடி – எதிர்கொள்பாடி (திருஎதிர்கொள்பாடி) 4

எதிர்கொள்பாடி – திருக்கோடிக்காவல் (திருக்கோடிக்கா) 9

திருக்கோடிக்கா – திருவாவடுதுறை, 3

திருவாவடுதுறை – திருவிடைமருதூர், 10

திருவிடைமருதூர் – திருநாகேஸ்வரம் 5

திருநாகேஸ்வரம் – பழையாறை 14

பழையாறை – திருச்சத்திமுற்றம் (பட்டீஸ்வரம்) 1

திருச்சத்திமுற்றம் (பட்டீஸ்வரம் – திருநல்லூர், 14

திருநல்லூர் – திருக்கருகாவூர், 26

திருக்கருகாவூர் – திருவாவூர் திருவாவூர் – புதிய பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை.

திருவாவூர் – திருப்பாலைத்துறை 7.4 அதனால் திருக்கருகாவூர் முதல் திருப்பலாய்த்துறை தொலைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது

திருப்பாலைத்துறை – திருப்பழனம் 19

திருப்பழனம் – திங்களூர் 2

திங்களூர் – திருச்சோற்றுத்துறை 10

திருச்சோற்றுத்துறை – திருநல்லூர் 35

திருநல்லூர் – திருவாரூர் 49

திருவாரூர் – திருவலஞ்சுழி 47

திருவலஞ்சுழி – திருகுடமுக்கு 13

திருகுடமுக்கு – திருநாவலூர் 108

திருநாவலூர் – திருச்சேறை 122

திருச்சேறை – திருகுடவாயில் (குடவாசல்) 5

திருகுடவாயில் – திருநறையூர் 11

திருநறையூர் – திருவாஞ்சியம் 18

திருவாஞ்சியம் – திருப்பெருவேளூர் 42

திருப்பெருவேளூர் – திருவாரூர் 49

திருவாரூர் – திருவலிவலம் 21

திருவலிவலம் – திருக்கீழ்வேளூர் 16

திருக்கீழ்வேளூர் – திருக்கன்றாப்பூர் 16

திருக்கன்றாப்பூர் – திருவாரூர் 16

திருவாரூர் – திருப்புகலூர் 21

திருப்புகலூர் – திருச்செங்காட்டங்குடி 4

திருச்செங்காட்டங்குடி – திருநள்ளாறு 15

திருநள்ளாறு – திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்) 26

திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்) – திருப்புகலூர் (புகலூர்), 268

திருப்புகலூர் – பூம்புகலூர் (திருப்புகலூர் வேறு பூம்புகலூர் வேறு. இரண்டும் நாகையில் உள்ளதால் அங்குள்ள பிரபலமான மூன்று கோவில்களில் ஒன்றின் பழைய ஊர் பெயராக இருக்கலாம். அதனால் குறைந்த தொலைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.)

பூம்புகலூர் – திருக்கடவூர் 296

திருக்கடவூர் – திருஆக்கூர் ( தான்தோன்ரீஸ்வரர் கோவில்) 24

திருஆக்கூர் ( தான்தோன்ரீஸ்வரர் கோவில் ) – திருவீழிமிழலை 33

திருவீழிமிழலை – திருவாஞ்சியம் 9

திருவாஞ்சியம் – திருமறைக்காடு (திருத்தலையங்காடு, திருப்பெருவேளூர்) 90

திருமறைக்காடு – திருவாய்மூர் 37

திருவாய்மூர் – திருமறைக்காடு 37

திருமறைக்காடு – திருவீழிமிழலை 93

திருவீழிமிழலை – திருநாகைக்காரோணம் ( நாகப்பட்டினம்) 47

திருநாகைக்காரோணம் – திருவாவடுதுறை 62

திருவாவடுதுறை – பழையாறை 25

பழையாறை – திருவானைக்கா 87

திருவானைக்கா – திருவாலம்பொழில் 44

திருவாலம்பொழில் – திருக்கானுர் 184

திருக்கானுர் – திருஅன்பிலாலந்துறை (மான்துறை)176

திருஅன்பிலாலந்துறை (மான்துறை) – திருக்கண்டியூர் 41

திருக்கண்டியூர் – மேலைத்திருக்காட்டுப்பள்ளி 21

மேலைத்திருக்காட்டுப்பள்ளி – திருவானைக்கா 32

திருவானைக்கா – திருவெறும்பியூர் 15

திருவெறும்பியூர் – திருச்சி 11

திருச்சி – திருப்பராய்த்துறை 16

திருப்பராய்த்துறை – திருப்பாதிரிப்புலியூர் 192

திருப்பாதிரிப்புலியூர் – திருப்பைங்ங்கீலி, 178

திருப்பைங்ங்கீலி – அண்ணாமலை 232

அண்ணாமலை – திருவோத்தூர் 484

திருவோத்தூர் – காஞ்சி 30

காஞ்சி – திருமால்பேறு 22

திருமால்பேறு – காஞ்சி 22

காஞ்சி – திருக்கழுக்குன்றம் 52

திருக்கழுக்குன்றம் – திருவான்மியூர் 52

திருவான்மியூர் – மயிலாப்பூர் 8

மயிலாப்பூர் – திருவொற்றியூர் 17

திருவொற்றியூர் – திருப்பாச்சூர் 56

திருப்பாச்சூர் – பழையனூர் 15

பழையனூர் – திருவாலங்காடு 2

திருவாலங்காடு – திருக்காரிக்கரை (ராமகிரி) 370

திருகாரிக்கரை (ராமகிரி ) – திருக்காளாத்தி 338

திருக்காளாத்தி – திருப்பருப்பதம் ( ஸ்ரீசைலம்), 396

திருப்பருப்பதம் – காசி, 1565

காசி- கயிலை (செல்ல முடியாமல் திருவையாறு. லிபு லெக் பாஸ் என்ற இடத்தோடு திரும்பியதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. காரணம் அது ஓரளவுக்கு மேடு. அதன் பின் சிவபெருமான் TELEPORTING எனும் முறையில் அங்கு மறைய வைத்து திருப்பி அனுப்பியுள்ளார்) 843

திருவையாறு – திருநெய்த்தானம் 2

திருநெய்த்தானம் – திருமழபாடி 17

திருமழபாடி – திருப்பூந்துருத்தி 21

திருப்பூந்துருத்தி – சீர்காழி 94

சீர்காழி – திருப்புத்தூர் 210

திருப்புத்தூர் – மதுரை 65

மதுரை – திருப்பூவணம் 20

திருப்பூவணம் – ராமேஸ்வரம் 180

ராமேஸ்வரம் – திருநெல்வேலி 215

திருநெல்வேலி – திருக்கானப்பேர் (காளையார் கோவில்), 221

திருக்கானப்பேர் – பூம்புகலூர் 191

பூம்புகலூர் – திருப்புகலூர் 2

———–

மொத்த தூரம் 14,380

வெறுமனே நாம் எங்கே இருக்கிறோம், இவர்கள் எங்கே இருக்கிறார்கள், எவ்வளவு உழைத்தார்கள் என்று மட்டும் சிந்தித்து குறைந்தது இன்று முதல் தினசரி அருகில் உள்ள கோவிலுக்கு தவறாமல் செல்வது என்ற சங்கல்பம் மட்டுமாவது எடுத்துக்கொண்டால் இந்த பதிவை இட நான் பட்ட பாட்டிற்கு பலன் கண்டதாக எடுத்துக்கொள்வேன்.

அடியேன்

         ஏமாந்த சோணகிரி

Saturday, March 20, 2021

சிங்களத்தில் 7ஆம் திருமுறை

 பங்குனி 8, 2052 ஞாயிறு (21.03.2021)

இலங்கையை அறிந்தவர் சுந்தரர். (காலம் திபி. 831) திருக்கேதீச்சரப் பெருமான் மீது தமிழோடு இசை பாட "நத்தார் படை.." எனத் தொடங்கும் பதிகம் (07080) தந்து மகிழ்ந்தவர்.
வடமொழியைத் தமிழ் வரிவடிவங்களில் எழுதி மந்திரமாக உச்சாடனிப்போர் போன்று, சுந்தரர் காலத்துக்கு 200 ஆண்டுகள் பின்னர், பாளி மொழியைச் சிங்கள வரிவடிவங்களில் எழுதி உச்சாடனித்தனர்.தொடக்கச் சிங்கள வரிவடிவம் எழுத்து மொழியாக உருப்பெற்ற காலம்.
சுந்தரருக்கு 450 ஆண்டுகளின் பின்னர், (திபி 1297) குருணாக்கல் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட நான்காம் பராக்கிரமபாகு காலத்தில் சிங்கள வரிவடிவத்தில் சிங்கள மொழியில் எழுதியதாக இன்றும் கிடைக்கும் மிகப் பழைய நூல் புத்த பெருமானின் வாழ்க்கை நிகழ்வுகளை அழகான, இலக்கிய நயத்துடன் கூறும் "பூசாவழி" என்பர்.
சிங்கள மொழியின் காதல் தூது இலக்கியமாகப் புகழ் பெற்ற நூல், ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் (திபி. 1441) முல்கிரிக்கல் தேரர் இயற்றிய "கோகில சந்தேசய" எனும் குயில் விடு தூது.
700 ஆண்டுகளாகச் சிங்கள மொழியில் நூல்கள் வெளிவருகின்றன. எனினும் 1100 ஆண்டுகளுக்கு முந்தைய அழகு தமிழ்ச் சுந்தரரின் திருக்கேதீச்சரப் பதிகத்தைச் சிங்கள மக்களுக்கு எவரும் கொண்டு செல்லவில்லை.
1. அறிவுப் பரம்பல்,
2. தமிழின் மரபுகளைச் சிங்களவரும் அறிதல்,
3. சைவக் கடவுளர்களை வழிபட்டு வரும் சிங்கள மக்களின் வாழ்வியலுடன் திருமுறைகளையும் இணைத்தல்
இவற்றை நோக்மாகக் கொண்டு திருவாசகம் (658 பாடல்கள்), ஒன்பாதம் திருமுறை (300 பாடல்கள்) ஆகியன சிங்களத்தில் மொழிபெயர்ப்பாயின.
இவற்றை மட்டக்களப்பு, கல்லடி, கல்வியலாளர், மேனாள் துணை முதல்வர் திரு. வடிவேலு அவர்கள் என் வேண்டுகோளை ஏற்றுச் சிங்களத்துக்கு மொழிபெயர்த்தார்கள்.
தொடர்ந்து 7ஆம் திருமுறையைச் சிங்களத்துக்கு மொழிபெயர்த்து வருகிறார்கள். 100 பதிகங்கள் தொண்ட 7ஆம் திருமுறையில் பின்வரும் 38 பதிகங்களையும் மொழிபெயர்த்துள்ளார்கள்.
திருவாசகம், ஒன்பதாம் திருமுறை, சிங்கள மொழிபெயர்ப்புகளை www.thevaaram.org
தளத்தில் படிக்கலாம். இப்பொழுது 7ஆம் திருமுறையின் 38 பதிகங்களின் சிங்கள மொழிபெயர்ப்புகளைம் அதே தளத்தில் படிக்கலாம்.
001. திருவெண்ணெய்நல்லூர்
002. திருப்பரங்குன்றம்
003. திருநெல்வாயில் அரத்துறை
004. திருவஞ்சைக்களம்
005. திருவோணகாந்தன்தளி
006. திருவெண்காடு
007. திருவெதிர்கொள்பாடி
008. திருவாரூர்
009. திருவரிசிற்கரைப்புத்தூர்
010. திருக்கச்சியனேகதங்காவதம்
011. திருப்பூவணம்
012. திருநாட்டுத்தொகை
013. திருத்துறையூர்
015. திருநாட்டியத்தான்குடி
020. திருக்கோளிலி
034. திருப்புகலூர்
037. திருவாரூர்
038. திருவதிகை வீரட்டானம்
058. திருக்கழுமலம்
059. திருவாரூர்
064. திருத்தினைநகர்
066. திருவாவடுதுறை
067. திருவலிவலம்
073. திருவாரூர்
076. திருவாஞ்சியம்
080. திருக்கேதீச்சரம்
083. திருவாரூர்
087. திருப்பனையூர்
088. திருவீழிமிழலை
093. திருநறையூர்ச் சித்தீச்சரம்
094. திருச்சோற்றுத்துறை
095. திருவாரூர்
096. திருவாரூர் பரவையுண்மண்டளி
097. திருநனிபள்ளி
098. திருநன்னிலத்துப் பெருங்கோயில்
099. திருநாகேச்சரம்
100. திருநொடித்தான்மலை

Tuesday, March 09, 2021

கச்சத் தீவு சிவன் கோயில்

 2052 மாசி 20 வியாழன் (04.03.2021)

கச்சத் தீவில் திருக்கச்சேச்சரநாதர் திருக்கோயில் திருப்பணி
மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை
கூகுள் வரை படத்தில் கச்சத் தீவைப் பெரிதாக்கிப் பார்த்தால் அங்கு மேற்குக் கரையில் அண்ணமார் கோயில் இந்துக் கோயில் என இடுகை இருக்கும். (படம் இணைப்பில்)
கய் > கயர் > காய், தமிழின் வேர்ச் சொற்கள். அறு சுவைகளுள் கயர் > கய்ப்புச் சுவை ஒன்று.
உப்புச் சுவை கய்க்கும் சுவை. உப்பு நீர் > உவர்நீர். கய்க்கும் நீர்.
தமிழில் நேயம் > நேசம் ஆகும். பையன்கள் > பசங்கள் ஆவார். வாயில் > வாசல் ஆகும். வயம் > வசம் ஆகும். யகர உச்சரிப்புக் காலப்போக்கில் சகர உச்சரிப்பாக மாறுவது இயல்பு.
கயர் > கசர். கயப்பு > கசப்பு. உப்புக் கயக்கும் அதே உப்புக் கசக்கும். கடல் நீர் > கச்சல் நீர். கடல் நீர் ஊறும் நிலம் கச்சல் நிலம்
ஒரு தீவில் கிணறு தோண்டக் கயர் நீர் வருமாயின் கச்சல் நீர் வரும் தீவு, கச்சல் தீவு > கச்சத் தீவு.
நாகப்பட்டினத்திலிருந்து கடாரம் நோக்கி வணிகக் கப்பல்கள் பயணிக்கின்றன. நக்காவரம் தீவுக் கூட்டங்களைக் கடக்கும் இடத்தில் நன்னீர் கிடைக்குமா? எனத் தமிழ்க் கடலாடிகள் தேடுகின்றனர். கிணறு தோண்டக் கயர் நீர் ஊறுகிறது.
எனவே அத் தீவில் நன்னீர் கிடைக்காது என்பதைத் தெரிவிக்கக் கச்சத் தீவு என்று பெயரிடுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக அத் தீவு கச்சத் தீவு.
நக்காவரம் தீவுக் கூட்டங்களில் தெற்கு எல்லையில் சுமாத்திராவிற்கு வடக்கே இந்திரா முனை என இன்று அழைக்கும் தீவின் பெயர் இன்றும் கச்சத் தீவு. கடலாடித் தமிழர் சூட்டிய பெயர். அட்மிராலிற்றி வரை படங்களில் (கப்பல் ஓட்டிகட்கு உதவும் பிரித்தானியத் தாயாரிப்பான வரை படங்களில்) இப் பெயரே உண்டு (Admirality Charts)
அவ்வாறே நெடுந் தீவுக்கு மேற்காக உள்ள தீவில் கிணறு தோண்டினால் உவர் நீர் அல்லது கயர் நீர் அல்லது கச்சல் நீர் வருவதால் அந்தத் தீவின் பெயர் கச்சத் தீவு.
பசுத் தீவு அல்லது நெடுந் தீவுக்கும் இராமேச்சரத்துக்கும் இடையே பயணிக்கும் வழிபடு பயணிகள், நன்னீர் கொண்டு செல்ல வேண்டும். வழியில் கச்சத் தீவு வரும் தங்கலாம். அங்கே நன்னீர் கிடைக்காது என்பதைச் சுட்டுவதே கச்சத் தீவு என்ற பெயர்.
கச்சத் தீவில் உள்ள சிவன்கோயில் திருக்கச்சேச்சரம். அருள்மிகு கயற்கண்ணி உடன் உறை கச்சேச்சரநாதர் திருக்கோயில் அமைந்த தீவு கச்சத் தீவு.
திருக்கோயில் வாயிலில் அருள்மிகு பிள்ளையார். அவரை வணங்கி உட்சென்று அருள்மிகு கயற்கண்ணி உடனுறை கச்சேச்சரநாதரை வணங்கி, சுற்று மண்டபங்களில் உள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை முருகப் பெருமானை வணங்கி, அருள்மிகு பைரவரை வணங்கி, அருள்மிகு வீரபத்திரரை வணங்கி, வெளியே வந்து நெடுந் தீவில் இருந்தோ இராமேச்சரத்தில் இருந்தோ கொண்டு சென்ற பொங்கலுக்கு உரிய பொருள்கள், நீர் முதலியவற்றால் பொங்கல் பொங்கி வழிபடுவது 10 ஆயிரம் ஆண்டுகளாக நெடுந் தீவு மற்றும் இராமேச்சரச் சைவத் தமிழரின் மரபு.
400 ஆண்டுகளுக்கு முன்பு சங்கிலி மன்னனைத் தோற்கடிக்க மன்னார்த் தீவில் இருந்து இருமுனைத் தாக்குதலை மேற்கொண்டவன் போர்த்துக்கேயத் தளபதி பிலிப்பு டி ஒலிவரா.
முதலில் தனது கடற்படையை அனுப்பினான். நெடுந் தீவுக்குப் போர்த்துக்கேயக் கடற்படை வந்தது. அங்கே சங்கிலிக்கு உதவியாக நிலைகொண்டிருந்த மலையாளத்துக் குஞ்சலியின் கடற்படை, போர்த்துக்கேயக் கடற்படையைத் தாக்கியது.
பின்வாங்கிய போர்த்துகேயக் கடற்படை, கச்சத் தீவில் தங்கியது. அங்கே இருந்த அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயிலை முற்றுமுழுதாக உடைத்தது.
பின்வாங்கிய போர்த்துக்கேயக் கடற்படையைக் குஞ்சலி துரத்தினான். கச்சத் தீவு சென்றான். போர்த்துக்கேயக் கடற்படையை முற்றாக அழித்தான். போர்த்துக்கேய வீரர்களைச் சிறைப் பிடித்தான். நெடுந் தீவுக்குக் கொண்டு வந்தான்.
வைகாசி தேய்பிறை எட்டாம் நாள் யாழ்ப்பாணத்தில் சங்கிலியனைப் பிலிப்பு டி ஒலிவரா சிறைப் பிடித்ததும் நெடுந் தீவில் இருந்த குஞ்சலி வீரர் கடற்படை மலையாளத்துக்குப் புறப்பட்டது.
நெடுந் தீவு போர்த்துக்கேயர் வயமானது. துப்பாக்கி முனையில் நெடுந் தீவில் வாழ்ந்த சைவர் சிலரைப் போர்த்துகேயர் கத்தோலிக்கராக மாற்றினர்.
கத்தோலிக்கத்துக்கு மாறாத சைவர்கள் கச்சத் தீவில் உடைந்து தரைமட்டமாகிய அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயில் இருந்த இடத்தில் அண்ணமார் (சிவனின் சூலம்) திருமேனி வைத்து வழிபட்டு வருகின்றனர். நெடுந்தீவு மீனவருக்கும் தொண்டி தொடக்கம் இராமேச்சரம் வரை வாழும் தமிழக மீனவர்களுக்கும் இடையே திருமண உறவுகள் நெடுங்கால மரபு. எனவே நேர்த்திக் கடன்களை நிறைவேற்றத் தமிழகக் கரைகளில் இருந்தும் கச்சத் தீவுக்கு மீனவர் வருவர்.
கடந்த 100 ஆண்டுகளுக்குள் நெடுந் தீவுக் கத்தோலிக்க மீனவர் அந்தோணியார் சிலையை அமைத்து வழிபடத் தொடங்கினர். சைவ வழிபடு மரபுகள் தொய்வுற, கத்தோலிக்கத் திருவிழா மரபு அண்மையக் காலத்தில் தொடங்கியது.
400 ஆண்டுகளுக்கு முன்பு வரை பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலாகக் கச்சத் தீவில் அமைந்திருந்த அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயிலை மீண்டும் திருப்பணி செய்வித்துக் கட்டிக் குடமுழுக்கு நீராட்டினால் இலங்கையில் வாழ்கின்ற சைவர்களின் துன்பங்கள் துயரங்கள் நீங்கும்.

Monday, March 08, 2021

சாமி தண்டபாணி ஓதுவார்

 வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் போற்றுகிறேன்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

 

திருக்கடவூர், தமிழிசைக்கு உயிர் கொடுத்து உடலாக உலவவிடும் ஊர்.

 

பன்னிரு திருமுறை காட்டும் 23-24 பண்களையும் 1800 ஆண்டுகளுக்கும் கூடுதலாக வழிவழியாக் கொண்டும் கொடுத்தும் இசைந்த; இசைத்த ஊர்.

 

தமிழ் மொழியின் வேர்கள் அறிந்த ஊர். சொற்களின் வேர்களை அறிவோர்வேரின் சார்புகளை அறிவோர்சொல்லின் பொருள் அறிவோர்இடம் காலம் சார் பொருள் அறிவோர்அந்த அறிவுடன் இசையின் நுண்மா நுழைபுல அறிவும் சேரத் தமிழாக வாழ்கின்ற பெருமக்களின் ஊரே திருக்கடவூர்.

 

காலனையே காலால் கடிந்த பெருமானாரும் தளர்வு அறியா மனம் தரும் அபிராமித் தாயாரும் கோலோச்சி அருள் பெருக்கி மண்ணில் நல்ல வண்ணம் வாழ உயிர்களை அழைத்துச் செல்லும் ஊர் திருக்கடவூர்.

 

ஏழு சுரங்களுக்குள் பண்ணிசைப் பாடல்களைத் தொகுத்துத் தந்த தந்தையார் பெற்ற பெருமகனார் ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனார்.

 

தருமபுரம் ஆதீனம் தவத்திரு சந்நிதானம் அவர்களின் முழுமையான வாழ்த்தையும் ஆசியையும் பெற்ற பெருமகனார் ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனார். 

 

திருக்கடவூரில்இரண்டாயிரத்துக்கும் கூடுதலான ஆண்டு கால இசை மரபின்; தமிழ் மரபின் தனிப்பெரும் கொடையே ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனார்.

 

சுரக்கட்டும் சொற்கட்டும் கை வரகற்பனைப் பெருக்கின் வளமும் கைகூடஅரன் அருள் நோக்கு வழிகாட்டதமிழோடு இசை பாடிப் பண்ணினால் நீட்டிப் பதிகங்களைப் பாடிப் பாடித் தானும் உருகுவார்கேட்போர் நெஞ்சத்தையும் உருக்குவார் ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனார்.

 

பனி உறை குளிரில் புலர் எழு காலையில் பாவை பாடி இங்கிலாந்து முழுவதும் பண்ணும் பண்பாடும் பரப்புவார் ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனார்.

 

மருத்துவர் சிறீதரன் என் அருமை நண்பர். என் அயலவராக வாழ்ந்தவர். மருத்துவராகப் படித்து உயர்ந்து இங்கிலாந்தில் வாழ்பவர். இங்கிலாந்தில் வாழ்ந்தாலும் இங்கு நம் சூழலில் வாழ்வது போல் அங்கும் வாழ்பவர்.

 

யாழ்ப்பாணம் திருக்கடவூரை அழைத்தது போலமருத்துவர் சிறீதரனும் ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனாரை அழைக்கிறார்.

 

இசைந்த மருந்து பிணி நீக்கும். இசையே மருந்து ஆனால் பிறவிப் பிணியும் நீங்கும். மருத்துவர் ஸ்ரீதரன் இதை அறிவார். எனவே பண்ணோடு இசைபாடப் பயிற்றுவிக்கபிணி  நீக்க அழைக்கிறார்.

 

பாலூட்ட எழுந்த ஞானத் தமிழையும் கானமிழ்த இசையையும் ஊட்டி விடுக என அழைக்கிறார் மருத்துவர்சிறீதரன். ஒப்புக்கொள்கிறார் ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனார்.

 

பந்தாட்டப் புகழ்பூத்த விம்பிள்டனில்மேற்குலகில் முதல் நிலைத்த அருள்மிகு பிள்ளையார் கோயிலில் கடந்த வாரம் முதலாகப் பண்ணிசை வகுப்புகள் நடத்துகிறார் ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனார்.

 

வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் போற்றுகிறேன்.